ஷாப்பிங்............
அந்தமான் டூர்
பகுதி 1 ,
பகுதி 2,
பகுதி 3 பகுதி 4
|
முதல் நாள் Corbyn's Cove பீச்சில் நாங்கள் பார்த்த கடை. இங்க தான் முத்து மாலை இரண்டு வாங்கினோம். இங்கே பவள மாலைகளும் உள்ளன. பீச்சில் பார்க்கும் எல்லா கடைகளிலும் நீங்கள் முத்து, பவள மாலைகளை வாங்கலாம். ஹேவ்லாக் பீச்சில் நாங்கள் வாங்கத் தவறி விட்டோம், அங்கும் நன்றாக இருந்ததாகச் சொல்கிறார்கள். |
|
முத்து மாலைகள் இரண்டின் விலை 200 ரூபாய்!! |
|
கடைசி நாளன்று ஒரு பெரிய கடைக்கு அழைத்துச் சென்றார்கள். எதுவும் வாங்கவில்லை. எங்க கூட வந்தவங்க வாங்கினாங்க, நான் கருமமே கண்ணாகி பதிவில் போட படம் மட்டும் எடுத்தேன், ஹி ......ஹி ....ஹி........ |
|
இதில ஒன்னை எடுத்துகிட்டா அந்தமான் முழுசும் குடும்பத்தோட சுத்திப் பார்க்கலாம்!! |
|
ஜார்வா ஆதிவாசிகளின் பொம்மைகள். நேரிலும் இப்படியேதான் இருப்பாங்க!! |
|
முத்து, பவள மாலைகள். |
|
வளையல்கள். [நீ சொல்லாமலேயே எங்களுக்கு தெரியாதா.......??] |
|
அந்தமானில் பல இடங்களில் பாக்குத் தோப்புகளைப் பார்க்க முடிகிறது. பாக்கு காய்களை முற்றிலும் பழுக்க வைத்து செக்கச் செவேல் என ஆன பின்னர் பறிக்கின்றனர். தோலுரித்த பின்னர் கொட்டை பாக்கு எலுமிச்சை சைசுக்கு இருக்கு!! |
|
அந்தமானில் செவ்விளநீர், சாதா இளநீர் மற்றும் வெள்ளை நிற இளநீர்க் காய்களும் கிடைக்கின்றன. தண்ணீர் சுவையோ சுவை, நிரப்பினால் ஒரு லிட்டர் வரும்!! |
தங்குமிடம்
|
நாங்கள் தங்கியிருந்த விடுதி. நாள் ஒன்றுக்கு நபருக்கு ரூ.1000/- [தங்குதல், உணவு, சுற்றிப் பார்த்தல், ஆங்காங்கே நுழைவுக் கட்டணங்கள் எல்லாமும் சேர்த்து. Havelock செல்ல கட்டணம் ரூ.800/- தனி, Vegetarian மட்டுமே வழங்கப் படும், உங்களுக்கு வேறு உணவுகள் வேண்டுமென்றால் வெளியில் பார்த்துக் கொள்ள வேண்டும்.] |
|
விடுதியில் எங்கள் அறை, A /c அறைகளுக்கு கட்டணம் கொஞ்சம் அதிகம். |
|
விடுதியின் சாளரம் வழியே எட்டி வெளியே பார்த்தால்....... |
Darrshan Tours & Travels: இங்கே சவுகரியமாக இருக்கிறது, உணவு பரவாயில்லை, பெரும்பாலும் வெளியில் செல்ல வேண்டியிருப்பதால் அங்கேயே உணவு வழங்கினர், அவை சுத்த மோசம். இவர்களின் வண்டியிலும் [பதினைந்து பேர் செல்லும் Mazda மாதிரி வண்டிகள்] ஆயில் நாற்றம். Tata சுமோ/கார் போல தேர்ந்தெடுத்துக் கொள்வது நலம். அந்தமானை ஆசை தீரப் பார்க்க குறைந்த பட்சம் ஐந்து நாட்களாவது தங்க வேண்டும்.
Mr.Raghu
Darrshan Tours & Travels
The contact numbers are: 993208 2266 /2966 /3066 /3166
9933281533, Landline: 03192-235484
நாங்கள் பார்க்கத் தவறிய முக்கிய இடங்களில் சில:
1. Jolly buoy பீச். Scuba Diving சுட்டி.
2. Parrot Islands [Bara Tang]
3. உள்ளூர் அருங்காட்சியகங்கள் [Museums] & மீன் காட்சியகங்கள் [Aquarium] .
அந்தமான் சுற்றுலாவை அழகாக படம் பிடித்து 6 பகுதிகளாக YouTube-ல் பதிவேற்றியுள்ளார்கள், அவசியம் பாருங்கள்.
Part 1 Part 2 Part 3 Part 4 Part 5 Part6
Thanks for sharing. Last photo is really very nice
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி நண்பரே தொடர்ந்து வாருங்கள்!!
Deleteபயண அனுபவங்கள், படங்கள் சுவாரஸ்யம்!
ReplyDeleteRoom rent looks ok. If the hotel is decent, we can try it !
ReplyDeleteMind- la vachikkuren !
Das very nice post and photos
ReplyDeleteஅந்தமானில் நீங்க எடுத்த படங்கள் அருமை.
ReplyDelete@ வேகநரி
Delete@ Avargal Unmaigal
@ Riyas
@ மோகன் குமார்
வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே!!
மாப்ளே,
ReplyDeleteஇப்படி ஃபோட்டோ எடுத்துக் கிட்டே இருந்தால் எப்படி சுத்தி பாக்கரது? குடும்பத்தினர் கேட்பதை வாங்கி கொடுப்பது?. ம்ம்ம்ம் நல்லாவே ஃபோட்டோ [மட்டும்] எடுக்கிறீர்!!.
அந்தமான் போனதே இப்படிப் பதிவு போடத்தானோ!!
அந்தமான் காதலி படம் பற்றி உமது கருத்து என்ன??
மொத்தம் எவ்வளவு செல்வு ஆச்சு பட்ஜெட் சொல்லுங்க முதலில். அதுக்கு ஒரு பதிவு போடுவீரா!!!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நன்றி!!!
போன இடமெல்லாம் பதிவு போடும் ஞாபகம் தான் மாமு. வேண்டியதை வாங்கிக்குங்க, என்னை எந்த டிஸ்டர்பும் பண்ணாதீங்கன்னு பர்சை வீட்டில குடுத்திட்டேன்!! நாலு பேருக்கு விமான டிக்கட் Rs.62,000/- [மூணு மாசம் முன்னாடியே செய்தவங்க ஆறு பேருக்கு Rs50,000/- க்கே முடிச்சிருக்காங்க.] ஹோட்டல் Rs.20,000/- [நான் வெஜ், A /c வேணுமின்னா இன்னமும் கூடுதலாகும்]. இதர செலவு Rs.5,000/-
Deleteகப்பலில் போக வர ஐந்து நாள் தங்க A -Z எல்லாம் சேர்த்து ஒரு ஆளுக்கு Rs .13,500/- நீங்களே கப்பல் டிக்கட் வாங்கிகிட்டா, மேற்சொன்ன முகவரியில் நாளொன்றுக்கு ஆளுக்கு 1000/- தான். நான் ஏஜெண்டு மூலமா போனதால சேர்த்து பிடுங்கிட்டான். வேறென்ன தகவல் வேண்டும்?
\\அந்தமான் காதலி படம் பற்றி உமது கருத்து என்ன??\\ அந்தமானில் இந்த ஒரு படந்தான் எடுத்திருக்காங்கன்னு நினைப்பா? அடுத்த வாரம் சென்னைக்கு வரப் போறேன், அதனால சென்னை-28, சென்னைக் காதல், மதராசப் பட்டினம் ஆகிய படங்கள் பத்தி நான் என்ன நினைக்கிறேன்னு கேட்பீங்களா?
Delete