Monday, January 28, 2013

சட்டத்தின் பார்வையில் ஒழுக்கமான கள்ளச் சாமியார்கள் லிஸ்ட் [காரணத்துடன்]

சென்ற பதிவில் பாலியல் ஒழுக்கம் என்பதைத் தவிர்த்துப் பார்த்தாலும் "ரஞ்சிக் கோட்டை வாலிபன்" ஆன்மீகவாதியாக இருக்கத் தகுதியற்றவர் என்பதைப் பார்த்தோம்.  பதிவின் இறுதியில் பொதுவாக ஆன்மீகவாதிகள் என்ற பெயரில் உலாத்திக் கொண்டிருக்கும் போலிகளை எப்படி கண்டுகொள்வது என்றும் சொல்லியிருந்தோம்.  சில நண்பர்கள், ரஞ்சிதானந்தா மாட்டிக் கொண்டார்  என்பதற்காக எல்லோரும் அவரைப் போட்டு நொங்குகிறோம், மாட்டாதவர்களை பற்றி சொல்லவில்லையே என்று ஆதங்கப் பட்டனர்.  அவர்கள் மனக்குறையைத் தீர்க்கவே இந்தப் பதிவு.  தனிப்பட்ட முறையில் நாமும் ஒரு ஆன்மீகப் பாதையில் செல்வதால் நாம் செல்லும் வழி தான் உயர்ந்தது மற்றவர்கள் எல்லோரும் போலி என்று நாம் திரித்து கூற  முயல்வதாக சில அன்பர்கள் நினைக்கலாம், ஆகையால் ஆத்திக அன்பர்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளத் தக்க சான்றுகள் மூலமாகவே நாம் போலிகளைத் தோலுரித்துக் காட்ட இருக்கிறோம்.

உதாரணத்துக்கு, ஒரு பெண்ணைப் பெற்றவர்கள் மாப்பிள்ளை தேடும்போது வருங்கால மருமகன் நாட்டின் சட்டத்தை மதித்து நடந்தால் மட்டும் போதும் என்பதோடு நில்லாமல் வேறு சில தகுதிகளையும் பார்ப்பார்கள்.  நாட்டின் சட்டத்தை மதித்தால் போதும் என்றால் புகைப் பிடித்தல், மது அருந்துவது கூட தற்போது சட்டப் படி தப்பில்லை என்று ஆகிவிட்டது.  ஒரு ஆணும் பெண்ணும் சம்மதத்தோடு உடல் உறவில் ஈடுபட்டால் அது சட்டப் படி குற்றம் ஆகாது என்று உச்ச நீதிமன்றமே சமீபத்திய தீர்ப்பொன்றில் கூறி விட்டது.  இதையெல்லாம் வைத்து மேற்சொன்ன பழக்கங்களைக் கொண்ட ஒரு பையனை  நாட்டின் சட்டப் படி நல்ல 'குடி'மகன் என்று தங்கள் பெண்ணுக்கு மணமுடிக்க சம்மதிப்பார்களா?  இல்லையே!!  காரணம், நாட்டின் சட்டம் ஒருபுறம் இருந்தாலும் தங்களுக்கென்று ஒரு அளவுகோல் வைத்துள்ளார்கள் அதை தங்கள் வருங்கால மருமகன் பூர்த்தி செய்பவனாக இருக்க வேண்டுமென்று எதிர் பார்க்கிறார்கள்.

அதே மாதிரி, நமக்கு ஆன்மீக வழிகாட்டியாய் இருப்பவர்கள் நாட்டின் சட்டப் படி எந்த தப்பும் செய்யாத ஒரு நல்ல குடிமகனாய்/மகளாய் இருந்தால் மட்டும் போதாது, ஆன்மீக ரீதியாகவும் தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.  அந்தத் தகுதிகள் என்னென்ன என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1.  ஆன்மீகவாதி தான்தோன்றியாக உருவாக இயலாது: இந்தியாவில் எந்த ஆன்மீகவாதியாக இருந்தாலும் சரி, அவர்கள் பகவத் கீதையை ஆதாரப் பூர்வமானது என்பதை  மறுக்க மாட்டார்கள்.  எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.  அவர்களில் பலர் கீதையை தினமும் போதிக்கிறார்கள், சிலர் பொழிப்புரையும் கூட எழுதியிருக்கிறார்கள்.   ஒரு ஆன்மீக இயக்கத்தின் தலைவர், உலகெங்கும் பிரச்சாரம் செய்பவர், லட்சக் கணக்கில் தொண்டர்களை உருவாக்குபவர் என்றால் அவர் குறைந்த பட்சம் பகவத் கீதையின் படியாவது ஒரு தகுதி பெற்ற ஆன்மீகவாதியாக இருக்க வேண்டும்.  அவ்வாறு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்ப்போமா?.

ஆன்மீகப் பாதையில் முதல் படி என்ன என்று கீதையின் கீழ்க்கண்ட பதம் கூறுகிறது.
  
tad viddhi pranipatena
pariprasnena sevaya
upadeksyanti te jnanam
jnaninas tattva-darsinah
                                                             [பகவத் கீதை 4.34]

இந்த அறிவை தன்னையுணர்ந்த ஒரு ஆன்மீக குருவை அணுகி , அவரைச் சரணடைந்து, சேவை செய்து, பணிவுடன் கேள்விகள் கேட்பதன் மூலம் அறிந்து கொள்ளவும்.  தன்னையுணர்ந்த ஆன்மாக்கள் இவ்வுண்மையை உனக்கு போதிக்கத் தக்கவர், ஏனெனில் அவர் உண்மையைக் கண்டவர். 

தன்னையுணர்ந்த ஒரு குருவிடம் சரணடைந்து அவரை வழிகாட்டியாக ஏற்பது தான் ஆன்மீகத்தின் அறிச்சுவடியாகும்.  நாம் இந்த முடிவை பகவத் கீதையின் படி எட்டியுள்ளோம்.  அப்படியானால், நமக்கு குருவாக இருப்பவரும் இதே மாதிரி நடப்பவராக இருந்திருக்க வேண்டும், அதாவது அவரும் ஒரு ஆன்மீக குருவிடம் இருந்து கற்றவராக இருக்க வேண்டும்.  இப்படியே குரு-சீடர் என்று சங்கிலியாக பின்னோக்கிச் சென்றால் அது பகவத் கீதையை முதலில் போதித்த ஸ்ரீ கிருஷ்ணரிடம் சென்று முடியும்.   இதைத்தான் பகவான்,  இன்னொரு பதத்தில் கூறுகிறார்.

evam parampara-praptam
imam rajarsayo viduh
sa kaleneha mahata
yogo nastah parantapa


தலை சிறந்த இவ்விஞ்ஞானம் இவ்வாறாக குரு -சீடர்கள் பரம்பரை சங்கிலி வழியாக வந்தடைகிறது, புனிதப் பண்புகளைப் பெற்ற அரசர்கள் அவ்வண்ணமே இதைப் பெற்றனர்.  காலப் போக்கில் சில சமயம் இச்சங்கிலி அறுந்து போய் இந்த அறிவு தொலைந்தது போல தோற்றம் உண்டாகிறது.

மேற்கண்ட பதங்களை வைத்துப் பார்க்கும்போது பகவத் கீதையை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளும் ஒரு ஆன்மீகவாதிக்கு குரு என்பவர் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு முன்னர் குரு -சீடர் பரம்பரையும் இருக்க வேண்டும்.  இந்த ஒரு சான்றே போதும் தற்போது ஆன்மீகவாதிகள், சாமியார்கள் என்று போலியாகத் திரிபவர்கள் அத்தனை பேரையும் தகுதி இழக்கச் செய்வதற்கு.  பெரும்பாலானவர்கள் தாங்களே ஞானம் பெற்றுவிட்டோம் என்பார்கள், அல்லது அவர்களுக்கு முன்னர் ஒன்று அல்லது இரண்டு தலைமுறைக்குள்  தொடர்பு முடிந்து போய்  யாரவது ஒருத்தர் தான்தோன்றியாக இருப்பார்.

2.  நான்தான் கடவுள் என்று சொல்லுபவன்/பிறர் இவனை கடவுள் சொல்வதை அனுமதிப்பவன் ஆன்மீகவாதியில்லை:  இதையடுத்து போலிகள் என்று பார்த்தால், தான் கடவுளின் அவதாரம் என்று சொல்பவர்கள் வருகிறார்கள்.  சிலர் நேரடியாகவே தான் கடவுள் என்று சொல்கிறார்கள், சிலர் அவ்வாறு பொது மேடைகளில் சொவதில்லை ஆனாலும் அவரது சீடர்கள் என்ற பீடைகள் சொல்லித் திரிகின்றன.  அந்த மாதிரி கடவுள்கள் சிலர் இண்ணமும் சமூகத்தில் உடம்புடனே திரிந்து கொண்டிருக்கின்றனர், சிலர் மண்டையைப் போட்ட பின்னர் ஊர் ருக்கு சிலைகளாக தீராத  தரித்திரமாக சமூகத்தைப் பீடித்திருக்கிறார்கள்.

யார் வேண்டுமானாலும் கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொள்ளலாம்,  ஆதாரம் என்ன?  இறைவன் எப்போது, எங்கே தோன்றுவான், அவன் என்னென்ன பணிகளைச் செய்வான் என்பதை ஸ்ரீமத் பாகவதம் முன்னரே கூறுகிறது.  அதன்படி, பூமியில் 5000 வருடங்களுக்கு முன்னர் துவாபர யுகத்தில்  ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டிய பின்னர் தான் வந்த வேலை முடிந்ததும் தனது லோகமான கோலோக விருந்தாவனத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடைய அடுத்த அவதாரம் புத்தர்.  அவருக்குப் பின்னர் கல்கி கலியுகத்தின் இறுதியில் தோன்றுவார்.  கலியுகம் 4,32,000 வருடங்கள், அதில் 5000 வருடங்கள் முடிந்துள்ளன, இன்னமும் மீதமுள்ள  4,27,000 வருடங்கள் முடிந்த பின்னரே கல்கி தோன்றுவார்.  ஆகையால், இதற்கிடையில் நான்தான் கடவுள் என்று யாரெல்லாம்  சொல்கிறார்களோ  அவர்கள் அனைவருமே போலிகள் தான்.

3.  கடவுளுக்கு வடிவம் கிடையாது, பிரம்மம் என்ற ஒன்று இருக்கு, அதற்க்கு எந்தப் பண்பும் கிடையாது, நாம் முக்தியடைந்தால் அந்த பிரம்மத்துடன் ஐக்கியமாகி, பிரம்மமும் நாமும் ஒன்றோடு ஒன்றாக ஆகிவிடுவோம்என்பவர்கள் போலிகள்:  

na tv evāhaḿ jātu nāsaḿ
na tvaḿ neme janādhipāḥ
Bhagavad-gītā 2.12

நானோ, நீயோ இங்கே கூடியுள்ள அரசர்களோ யாரும் இல்லாமல் இருந்த ஒரு காலம் இதுவரை இல்லை, எதிர்காலத்திலும் ஒருபோதும் நாம் இல்லாமல் போகப் போவதுமில்லை.

ஆங்கிலத்தில் I [நான்-I st Person], You [நீ-அர்ஜுனன் IInd Person], they [அவர்கள்-அரசர்கள் Third Person], என்று மூன்று நிலைகளிலும் கடந்த காலத்திலும் இனி வரும் காலத்திலும் நாம் இருப்போம், ஒருபோதும் இல்லாமல் போக மாட்டோம் என்று பகவான் கூறுகிறார்.  இதை படித்த பின்னர் கூட எந்த முட்டாளாவது கடவுளுடன் ஐக்கியமாய் போவோம் என்று போதிப்பானா?  அவ்வாறு போதிப்பவன் போலி.


4.  போகும் பக்தர்களுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருப்பவன் போலி:  


dehino 'smin yathā dehe
tathā dehāntara-prāptir
dhīras tatra na muhyati


இந்தப் பிறவியிலேயே, சிறுவயது, இளைஞன், வயது முதிர்ந்தவன் என ஆன்மா வெவ்வேறு உடல்களை மாற்றுவதைப் போல இறப்பிற்குப் பின்னால் வேறொரு உடலைப்  பெற்றுக் கொள்ளும், அறிவுத் தெளிவான ஒருவன் இம்மாற்றங்களைக் கண்டு குழம்பிப் போவதில்லை. 

இந்த பதத்தில், இந்த தேகம் நிலையற்றது, ஆடையைப் போன்றது, கிழிந்த ஆடையை விடுத்து வேறு நல்ல ஆடைகளை நாம் உடுத்துவது போல, ஆன்மா இந்த உடல் வசிக்கத் தகுதியற்றது என்னும்போது அதை விட்டு நீங்கி வேறு உடலில் நுழைகிறது என்கிறார்.  ஒரு ஆன்மீக வாதி என்பவன், இதை உணர்ந்து, நீங்கள் இந்த தேகமல்ல, ஆன்மா என்ற உண்மையை உரைப்பவராக இருக்க வேண்டுமேயன்றி,   அங்கே போகிறவர்களுக்கு கையை தூக்கு, காலைத் தூக்கு, நெற்றியில் விரலால் அமுக்கு என்று வைத்தியம் பார்ப்பவராக இருக்கக் கூடாது.  வைத்தியம் பார்ப்பது தவறல்ல, வைத்தியத்தைப் பார்க்க நிறைய மருத்துவ மனைகள் இருக்கின்றன.  ஆன்மீகவாதி ஆன்மாவைக் காப்பாற்றுபவராக இருக்க வேண்டும், அழிந்து போகும் உடலை அல்ல.

5. மேஜிக் வித்தைகளைச் செய்பவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல: வாயில் லிங்கம் எடுத்தல், காற்றில் கையசைத்து சாம்பல், வாட்ச், மோதிரம், தங்கச் செயின்களை எடுத்து பணக்காரர்களுக்கு/வி.ஐ.பி.க்களுக்கு  மட்டும் கொடுத்தல் போன்ற மேஜிக் வேலைகளைச் செய்பவன் ஆன்மீகவாதி அல்ல.  விலையுயர்ந்த தங்கச் செயினை கையை அசைத்து கொண்டுவரும் இவர்களால், விலை மலிவான ஒரு பூசணிக்காயை அவ்வாறு கொண்டு வர முடியுமா என்று கேட்கப் பட்ட கேள்விக்கு ஐம்பது வருடமாக இவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பி.சி.சொர்க்கார் என்னும் மேஜிக் வித்தைக்காரர் இந்த வேலைகளை இவர்களை விட நன்றாகச் செய்வார். அவர் இரயில் எஞ்சினையே மறைத்தாலும் தன்னை கடவுளின் அவதாரம் என்று ஒருபோதும் சொன்னதில்லை.  கடவுள் என்றால், கோவர்த்தன மலையையே இடது கை சுண்டு விரலால் தூக்குவார், இந்த பிரபஞ்சத்தையே படைப்பார்.  

மேற்கண்ட முறைகள் வாயிலாக, சட்டத்தின் பார்வையில் தவறு செய்தவர்களா இல்லையா என்று பாராமல், சாஸ்திரத்தின் பார்வையில் உருப்படாத போலிகள் லிஸ்ட் இங்கே தருகிறோம் அடைவுக்குள் காரணமும் தந்துள்ளோம்: 

மேஜிக் வித்தை செய்த புட்டபர்த்தி காரர்  [தன்னை கடவுள் என்று சொல்ல அனுமதித்தவர், மேஜிக் செய்தவர், குரு பரம்பரை இல்லை ]


தலையில் கர்சீப் கட்டிய ஷிர்டிக் காரன் [தன்னை கடவுள் என்று சொல்ல அனுமதித்தவர், குரு பரம்பரை இல்லை ]

திருவண்ணாமலை 'கு'மணன் [குமனாஷ்ரமம் புகழ்..]- [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு பரம்பரை இல்லை.  செத்த பின்னர் ஆஷ்ரம சொத்துக்கள் தம்பி மகனுக்கே போய்ச் சேர வேண்டும் என்று உயில் எழுதிய பற்றற்றவர். ]

வடலூர் காரர் [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு பரம்பரை இல்லை ]

செக்ஸ் பண்ணிகிட்டே கடவுள்கிட்ட போகச் சொன்ன சீஷோ [ஈனம் மானம் எதுவுமே இல்லாத மோசடிப் பேர்வழி ]

அமெரிக்காவில் ஒரு மீட்டிங்கில் பேசி அதை வச்சே காலத்தை ஒட்டிய தலப்பாக் கட்டு, அவருடைய ஹம்சா குரு  [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு உண்டு, ஆனால் அந்த குருவுக்கு வேறு யாரும் குரு இல்லை, அதாவது குரு பரம்பரை இல்லை ]

பாழுங் கலை "Art of Killing" தாடிக் காரன் [கையைத் தூக்கு காலைத் தூக்கு, மூக்கை அமுக்கு, மூச்சை இழு, விடு  அதுதான் ஆன்மிகம் என்றவர், எல்லோரும் கடவுள் என்னும் போலி, நச்சுப் பாம்பு தற்போது ரஞ்சிதானந்தாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.  இவரோட குரு அமேரிக்கா புண்ணிய பூமின்னு அங்கே போய் செத்து பின்னர் பிணம் 20 நாள் னாராம இருந்ததாக சான்றிதழ் பெற்றவர்.  பயோகிராபி எழுதியவர் ]

இலங்கையில் இருந்து வந்து திருச்சி விராமலையில் மடம் போட்டு
 பெண்களைக் கற்பழித்த நடிகர் செந்திலின் ஜெராக்ஸ் [பயங்கரமான கிரிமினல், பாலியல் ரீதியாக தண்டனை பெற்றவர் ]

ஷங்கர் ராமனைப் போட்டுத் தள்ளியதில் குற்றம் சாட்டப் பட்டுள்ள  காஞ்சிபுரத்தான் [பாலியல் ரீதியாக எழுத்தாளரால் குற்றம் சாட்டப் பட்டவர் ]

நான் பீடி குடித்தால் என் வாயில் வாசனை வராது, நீ குடித்தால் வாசனை வரும் அதனால் நான் தான் கடவுள் என்ற யாகாவா முனி
[கீழ்ப் பாக்கத்துக்கு போக வேண்டிய ஆள் , ஆனா  ஏன் வெளியிலேயே விட்டிருந்தாங்கன்னுதான் புரியலை, செத்துட்டாரு. ]

கமலஹாசனின் வசூல்ராஜா புகழ் கட்டிப் பிடி வைத்தியம் பண்ணும் கேரளாக் காரி  [குருவோ, குரு பரம்பரையோ இல்லாதவர், முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி காணாமல் போய்விடுவோம் என்று போதிகிறார்,  ரஞ்சிதானந்தாவை ஆதரிக்கிறார் ]

யாரும் கல்யாணம் பண்ணாதீங்கோ, புள்ளைகுட்டி பெத்துக்காதீங்கோ என்று சொல்லும் " பிரம்ம கிழவிகள்" இயக்கம் [குருவோ, குரு பரம்பரையோ இல்லாதவரகள், கொஞ்சநாள் முன்னாடி செத்த கிழவனை கடவுள் என்கிறார்கள், 500 கோடிக்கு மேல் கடவுள் கிட்ட ஆன்மாக்கள் ஸ்டாக் தீர்ந்து போயிடும் ஆகையால் யாரும் செக்ஸ் செய்யாதீர்கள், குழந்தை பெறாதீர்கள், ஆன்மா இல்லாத குழந்தையா பொறக்கும் என்று டுபாக்கூர் விட்டவர்கள். எப்போதோ உலக மக்கள் தொகை 500 கோடியைத் தாண்டிவிட்டது, குழந்தைகள் பிறக்கின்றன, ஆனாலும் இவர்கள் இயக்கத்தில் சேரும் ஆடுகள் மட்டும் குறையவில்லை.]  

நம்மை கதவைத் திறந்து ஆனந்தத்தை வரவழைக்கச் சொல்லிவிட்டு, அவன் கதவைப பூட்டிக் கொண்டு ரஞ்சிதானந்தம் பார்த்தவன்[குருவோ, குரு பரம்பரையோ இல்லாதவர், எல்லோரும் கடவுள் என்பவர்.  இவரது பக்தர்கள் இவரை கடவுள் என்று சொன்னாலும் நடவடிக்கை எடுக்காதவர்]

செவ்வாடைத் தொண்டர்களை கொண்ட கீழ்மருவத்தூர்க்காரன் [முழுக்க முழுக்க கற்பனையாக ஒரு கடவுளை உருவாக்கி,  ஆயிரம் கோடிகளில் சொத்து சேர்த்தவர், அதற்க்கு தனது பெண்டாட்டி பிள்ளை குட்டிகளை காவலுக்கு போட்டிருப்பவர் ]

நாலு லட்சம் வருஷத்துக்கப்புறம் வரவேண்டிய கல்கி இப்பவே ஆணும் பெண்ணுமா வந்துட்டோம் என்று சொல்லித் திரியும் புருஷன் பெண்டாட்டி பொறம்போக்குகள் .....[இவர்கள் கல்கி அவரதாரம் என்கிறார்கள்.  கல்கி ஒருத்தார் மட்டுமே அதுவும் ஆண்.  அப்படியானால்  எப்படி புருஷன், பெண்டாட்டி இருவரும் கல்கியாக இருக்க முடியும்? அதுவும் 4,27,000 வருடங்கள் கழிந்த பின்னரே வர முடியும், இப்போதே எப்படி வந்தார்கள்?]

முரளீதரன் [ரொம்ப மோசமானவர் இல்லை, ஆனால் தலப்பாக்கட்டு போன்றவர்களை மேற்கோள் காட்டுவதால் இவருக்கு விஷயம் தெரியவில்லை]

ககி சவம்  [அனுபவத்தை வைத்து புருடா விட்டுக் கொண்டு திரிபவர், குரு , குரு  பரம்பரை எதுவும் இல்லாதவர்]

 வேலூர் தங்கக் கோவில் காரர் [தான்தோன்றி சாமியார், குரு , குரு  பரம்பரை எதுவும் இல்லாதவர், தத்துவ ரீதியாக போலி, போலியோ போலி......]

ஈசா கிழவர் [மொக்கைச் சாமியார், எந்த அடிப்படையும் இல்லாதவர், வேணுமின்னா மரம் நடட்டும், வேறு எதற்கும் பிரயோசனமில்லாதவர்] 

கேரளாவின் ஐயோ..... அப்பா.......... [சாஸ்திரத்தில் சொல்லப் படாத வழிபாட்டு முறை]. 

41 comments:

  1. இந்தப் பட்டியலில் சில பெயர்களை நான் எதிர்பார்க்கவில்லை!

    ReplyDelete
  2. எல்லாரையும் ரவுண்டு கட்டி அடிச்சிட்டீரே!

    ReplyDelete
  3. நீங்கள் பெரிய பட்டியல் போட்டுள்ளீர்கள்...நன்றி...
    உங்கள் வாதப்படி, கீதையை துணைக்கு எடுத்துக் கொண்டு உங்கள் ஆன்மீக வாதிகள் தான் சரி என்ற சொல்லவருகிறீர்கள்; அது தவறு...மூலமே தவறு!

    கீதையே கேள்விக்குரியது கப்சா என்னும் போது..எழுதிய மூலமே தவறு என்னும் போது....எப்படி? உங்கள் குருக்கள் மட்டும்?

    அவர்கள் வாதப் படி, 3+4 = 6 என்று கீதை சொல்கிறது; அப்படியிருக்க, அதை வைத்து 33+44 கூட்டினால் வரும் கூட்டல் என்னவா இருக்கும்? நீங்கள் சொன்ன ஆன்மீக குரு இந்த கணக்கு தான்.

    உங்களுக்கு கீதை எப்படி உசத்தியோ அதுமாதிரி ஒவ்வருக்கும் ஒரு "கீதை" இருக்கும்.

    ஒரே வரியில்....எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்...இந்த குரு சிஷ்யன் புண்ணாக்கு எல்லாம் ஏமாந்தவர்களை வைத்து பிழைக்கும் வழியே தவிர வேறு ஒண்ணுமில்லை..

    பின்குறிப்பு: தாஸ், நீங்க போட்ட பட்டியலைப் பார்த்தா சார்வாகன் சந்தோஷப் படுவார்...!

    ReplyDelete
    Replies
    1. அவர் கீதையை ஒரு ரெஃபெரன்ஸாக எடுத்துக் கொண்டுள்ளார், இதில் என்ன தவறு? குருவுக்கு உள்ள தகுதியை வேறு ஏதாவது நூலில் சொல்லப்பட்டு இருந்தால், தாங்களும் கூறலாமே! அதனை தாங்கள் மேற்கோள் காட்டினால், நன்றியுடையவர் ஆவோம். சேர்ந்த முதல் நாளிலேயே, தங்களால், ஒரு நாட்டின் இராணுவத்தையே வழி நடத்தும் இராணுவ தளபதியாக இயலுமா?? இராணுவத்தில் சேரும் புதியவர்களுக்கு, தன்னடக்கம் வேண்டும் என்பதற்காக, *** முதலில் கீழ்படியக் கற்றுக்கொள், பிறகு கட்டளையிடும் பதவி தானே தேடி வரும் ***, என்று அறிவுரை கூறுவார்கள். அதைப்போல் தான் இந்த குரு-சிஷ்ய பரம்பரையும். குரு-சிஷ்ய பரம்பரையில் வருபவர்களுக்கு, தன்னடக்கம், குரு பக்தி மிகுந்து காணப்படும். மேலும் குருவின் அருளை, ஆற்றலை, அருகில் இருந்து, அறிந்து, உணர்ந்திருப்பதால், தன்னுடன் குரு இருப்பது போன்ற உணர்வும், தன்னை எப்பொழுதும் குரு கண்காணிப்பது போன்ற உணர்வும் இருக்கும். அதனால் தவறு செய்வதற்கான வாய்ப்பும் குறைவு. இறைவனை யாரும் கண்டதில்லை. விண்டவர் கண்டில்லை, கண்டவர் விண்டில்லை, என்ற சொற்றொடரே இதனை விளக்கும். ஆனால், உண்மையான சீடருக்கு, குருவே கண்கண்ட தெய்வமாக காட்சியளிப்பார், மற்றவர்களுக்கு அவர் ஒரு சாதாரண பித்தனாகத்தான் காட்சியளிப்பார்.

      Delete
    2. @நம்பள்கி

      You are correct. This is applicable to those who preach Bhagavad Gita.

      Delete
  4. மாப்ளே தாசு,
    1. பகவத் கீதை என்பதன் அடிப்படையில் நீர் வகுத்ததை வைணவர்கள் ஏற்கலாம், சரி போனால் போகு கொஞ்சம் இதர இந்து பிரிவுகளும் ஏற்கிறார்கள் என்றாலும் பகவத் கீதை கருத்தாக்கம் பல முறை மாறி இருக்கிறது. கீதை மனுதர்மத்தை வழி மொழிகிறது.நீர் பின்பற்றும் பிரபுபாதா மொழியாக்கம் ,ஆதி சங்கரரின் மொழியாக்கத்திற்கே சில இடங்களில் மாறுபடுகிறது. சூழலுக்கு ஏற்ப மத புத்த்க விளக்கம் கொடுத்தல் பிழைக்கும் வழி என்பதை அறியாமல் சொல்கிறீர்.
    சம்ஸ்கிருத மொழி வரலாறு, கீதையில் மூலப் பிரதிகள், பல் மொழி பெயர்ப்புகள் அடிப்படையில் பார்க்கும் பொது இது புரியும்!!


    2. சரி விடும் பகவத் கீதை அடிப்படையில் ஆன்மீகவாதியைக் கண்டுபிடிக்க குரு பரம்பரை வேண்டும். இது சில உயர் சாதியினருக்கு மட்டுமே சாத்தியம்.

    எத்னை ஆன்மீகவாதிகளுக்கு குருபரம்பரை இருப்பதை உறுதி செய முடியும்!!. அந்த குரு பரமபரை வரிசையில் அனைவரும் நல்லவன் என எப்படி சொல்வது?

    பாருங்கள் பிரபுபாத விஷம் வைத்துக் கொல்லப்ப்ட்டதாக இஸ்க்கான் குழுக்கள் மோதலில் நீதிமன்றத்தில் இருப்பது தெரியும்!!

    ஏன் இப்படி பிரபுபாதவால ஒரு சரியான வாரிசு கூட ஏற்படுத்த முடியவில்லை?

    இன்னும் இருக்கு முதலில் இந்த இரு கேள்விகளுக்கு பதில் சொல்லும்!!

    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. சார்வாகனன் ! இஸ்லாம் என்ற மார்க்கத்தில், குரான், ஹதீஸ் என்ற இரண்டு விஷயங்கள் உள்ளன. இதில் எதனை நீங்கள் பின்பற்றுகிறீர்கள்? குரானை தந்தவர் நபிகள் என்றால், ஹதீஸை எழுதியவர்கள் யார்? இந்த இரண்டு கேள்விகளுக்கு தாங்கள் பதில் கூற இயலுமா?

      Delete
    2. சகோ இராம்கரன்
      நான் நாத்திகன் என்றாலும் மதபுத்த்க ஆய்வாளன். அப்புறம் நான் முஸ்லிம் அல்ல!!

      நாம் எழுதும் பின்னூட்டங்கள் அப்படி நினைக்க வைத்தால் ஹி ஹி தன்யன் ஆனேன்!!

      மாப்ளே தாசு நம்ம முஸ்லிம் சகோக்கள் பலர் என்னை முஸ்லிம் என்றே நினைக்கிறார்கள்.

      நிகழ்கால சிவா கேள்விக்கும்,என் கேள்விக்கும் வித்தியாசம் இல்லை.

      1. ஒரு மத புத்தகத்தை எப்படி அடிப்படை வழிகாட்டியாக எடுப்பது?

      2. குரு பரம்பரை என்பதும் எல்லோருக்கும் கிடைக்காது? எப்படி சரியானதை கண்டுபிடிப்பது?

      இறைவன் மிக பெரியவன்

      Delete
    3. \\சரி போனால் போகு கொஞ்சம் இதர இந்து பிரிவுகளும் ஏற்கிறார்கள் என்றாலும் பகவத் கீதை கருத்தாக்கம் பல முறை மாறி இருக்கிறது.\\மாமூல் மாமு, பகவத் கீதையின் பொழிப்புரைகள் தான் ஆளாளுக்கு கொடுக்கிறார்களே தவிர ஒரிஜினல் எந்த புத்தகத்தை எடுத்தாலும் ஒரே மாதிரிதான் இருக்கும் வேறுபாடே கிடையாது.

      Delete
    4. \\மாப்ளே தாசு நம்ம முஸ்லிம் சகோக்கள் பலர் என்னை முஸ்லிம் என்றே நினைக்கிறார்கள்.\\நான் இதுவரைக்கு அப்படி நினைக்கவில்லை. [எதை வச்சு இந்த விபரீதமான முடிவுக்கு வந்தீங்களோ தெரியலை. ] ஆனா இப்போ after reading this லைட்டா சந்தேகம் தட்டுது!!

      Delete
    5. மாப்ளே சொல்ராங்கப்பா,
      ராம்கரன் பாருங்க நம்மிடம் குரான்,ஹதித் பத்தி பேசுகிறார். இதுக்குத்தான் தாவா அதிகம் பண்ணக் கூடாது!! என்றாலும் நீங்களும்!!
      You too brutus!!

      Delete
    6. மாமு, நான் எவ்விதத்திலும் சந்தேகப் படாவிட்டாலும், நீங்களே "நான் முஸ்லீம் இல்ல...........நான் முஸ்லீம் இல்ல..........."அப்படின்னு திரும்பத் திரும்ப சொல்வதனால வந்த விளைவு இது!! கடவுள் இல்லே என்பவருக்கு முமீனா இருந்தா என்ன, சுறா மீனா இருந்தா என்ன!! எல்லாம் ஒன்னே தான்..........

      Delete
  5. குரு பரம்பரை என்பது எப்படி குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை.

    ஆன்மீக மேம்பாடுக்கு குரு ஒரு கைகாட்டி. அது தகரமாகவும் இருக்கலாம். தங்கமாகவும் இருக்கலாம். அதை ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. வழி புரிஞ்சு போனாச் சரிதான்.

    அடுத்த நல்ல சாமியார் லிஸ்ட் போடுங்க.. அதப்பார்த்துட்டு என் அபிப்ராயம் சொல்றேன்

    இந்த கட்டுரை நீங்க என்ன சொல்ல வர்றீங்க ஓரளவிற்குத்தான் புரியுது.பகவத்கீதை மட்டும்தான் குருவிற்கு இலக்கணம் சொல்லுதுங்கிற மாதிரி எழுதி இருக்கீங்க..இப்படி எழுதறதப் பார்த்தா இந்துசமயம் சாராத/சார்ந்த சகோதரர்களுக்கு குழப்பத்தைத் தான் தர்றீங்க.. உங்களின் இந்த தனிப்பட்ட அபிப்ராயம் பொதுவில் பொருந்தாது.

    கட்டுரையின் அடிப்படையை ஆட்சேபிக்கிறேன் :))

    ReplyDelete
  6. ஜெயதேவ் -- ஸ்ரீமத் பாகவதத்தின் சிறப்பைச் சொல்லுங்க.. அது தப்பில்லை. அதுமட்டும்தான் சரின்னு சொல்லாதீங்க

    நீங்க எழுதி இருக்கிற ஸ்டைல் .........சில அமைப்புகள் விசுவரூபம் படத்துக்கு அர்த்தமே இல்லாமல் தடை கோரியது போல் நீங்களும் அர்த்தமே இல்லாமல் இந்துசமயம் என்றால் கீதை ஸ்ரீமத்தும்தான் என்பது போல் மற்றவற்றை எடைபோட்டிருப்பதற்கும் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை.

    சில முஸ்லீம் அமைப்பினர் இப்படி பொங்குவது வழக்கம் என்பது உலக்த்திற்கே தெரியும்.அதனால் அதை பொறுத்துக்கொள்லலாம்.

    ஆனால் சகிப்புத்தன்மை, ஏற்புத்தன்மை, இந்த இரண்டையும் அடிப்படையாகக் கொண்ட பாரதத்தின் இந்துசமய அடிப்படையை இப்படி குடுவையில் அடைக்க நினைப்பது சிரிப்பாக இருக்கிறது.

    நீங்கள் எழுதியது நம்பள்கி சொன்னது போல் அடிப்படையே தவ்று என்பதை பதிவு செய்கிறேன். மற்றபடி நம்ம சமய அமைப்பு இப்படி நிறைய பிதற்றலை பார்த்துக்கொண்டேதான் இருக்கிறது :))

    ReplyDelete
    Replies
    1. @நிகழ்காலத்தில் சிவா

      இங்க கீதையில் இருந்து ஆன்மீகவாதிக்கு இருக்க வேண்டிய சில தகுதிகளைக் கொடுத்துள்ளேன், அந்தத் தகுதி இல்லாதவர்களை போலி என்கிறேன். ஒன்று நான் கீதையில் இருந்து சொன்னது தவறு, கீதையில் அவ்வாறு இல்லை என நிரூபியுங்கள், அல்லது நான் சரியாகத்தான் சொல்லியுள்ளேன் என்றால், அந்தத் தகுதிகள் இந்த ஆன்மீக வாதிகளிடம் உள்ளது என்று காண்பியுங்கள். தனிப்பட்ட முறையில் நீங்க செண்டிமெண்டா யார் மேலாவது அட்டாச் ஆயிருந்தா அதற்க்கு நான் ஒன்னும் செய்ய முடியாது.

      நான் மாற்று மதத்தவர் யாரையும் போலிகள் என்று இங்கு சொல்லவேயில்லை, காரணம் அவர்கள் யாரும் பகவத் கீதையை ஆதாரமாக வைத்துதங்கள் போதனைகளைச் செய்வதில்லை. ஆனால் நான் மேற்சொன்னவர்கள் தங்களுக்கு கூட்டம் சேர வேண்டும் மதிப்பு கிடைக்க வும் வேண்டும் என்பதற்காக கீதையை தங்களது சொற்பொழிவுகளில் ஆற்றி விட்டு, அதற்க்கு நேர்மாறாக செயலில் ஈடுபடுகிறார்கள். இவங்க பிழைப்புக்கு கீதை வேண்டும், ஆனால் அதன் உண்மைகள் இவர்களுக்கு எண்டாம், அதற்க்கு இவர்களின் கற்பனையில் உதித்த விஷத்தை பரப்புவார்கள். அதை ஏற்க இயலாது.

      யோகம், பிராணாயமம், விக்ரக வழிபாடு, பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம் இவை அத்தனையும் வியாச தேவர் வால்மீகி ஆகியோரின் இலக்கியங்களில் இருந்து வந்தவையே. ஆகையால் அதிலிருந்து கருத்தை எடுத்துக் கொண்டு போதிப்பவர்களுக்கு அதே இலக்கியங்கள் மூலம் தகுதி படைத்தவர்களா என்று பார்க்கிறோம். இவர்கள் வேண்டுமானால் சொந்தமாக எதையாவது யோசித்து போதனை செய்யட்டும், நான் அவர்கள் பெயரை நீக்குகிறேன்.

      Delete
    2. //ஒன்று நான் கீதையில் இருந்து சொன்னது தவறு, கீதையில் அவ்வாறு இல்லை என நிரூபியுங்கள், \\ நாளைக்குச் சொல்றேன்.கீதையில் தவறு இருக்காது. நீங்க சொன்னதில :)



      //தனிப்பட்ட முறையில் நீங்க செண்டிமெண்டா யார் மேலாவது அட்டாச் ஆயிருந்தா அதற்க்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. \\

      நான் இல்லை ஜெயதேவ் நீங்கதான் கீதை மேலும், கிருஷ்ணர் மேலும் அட்டாச் மெண்ட் ஆயிட்டீங்க அதனால அந்த ஸ்கேலை வச்சே எல்லோர்த்தையும் அளந்து கிண்டல் அடிக்கிறீங்க. நல்ல குருமார்கள் லிஸ்ட் ரெடியா?

      படிச்சபடி நடந்துக்கிட்டாரான்னு அதவச்சே எடைப் போட்டேன்கிறது தப்பு.. இவங்கெல்லாம் கீதைய மேற்கோள் காட்டுவது தனக்குப்பிடிச்ச புத்தகத்துல இருந்து ஒரு கருத்த சொன்னா அதன்படிதான் அவனும் இருக்கனும்கிறது தவறான எதிர்பார்ப்பு. ஏற்கனவே சொன்னதுதான் இவங்கெல்லாம் கைகாட்டி,.பயணிக்க வேண்டியது நாம்தான்.கைகாட்டியின் தரத்தை ஆராய்வது பயனற்ற வேலை


      //இவர்கள் வேண்டுமானால் சொந்தமாக எதையாவது யோசித்து போதனை செய்யட்டும், நான் அவர்கள் பெயரை நீக்குகிறேன்.//

      இனி என்றுமே சொந்தமாக யாராலும் சொல்லப்படுகிற அளவுக்கு ஆன்மீகத்தில் எதுவும் பாக்கி இல்லை. அதுவும் தமிழில் இல்லவே இல்லை. ஏற்கனவே சொல்லப்பட்டவைகளிலிருந்து தான் யாருமே சொல்ல முடியும்.ஒருசிலரை தவிர்த்து மற்றவர்கள் போலிகள் என்ற கடும்சொல்லுக்கு உரியவர்கள் அல்ல என்பதை வலியுறுத்துகிறேன்.. முடிந்தால் நாளை விபரமாக எழுதுகிறேன்.

      Delete
    3. @நிகழ்காலத்தில் சிவா

      \\நாளைக்குச் சொல்றேன்.கீதையில் தவறு இருக்காது. நீங்க சொன்னதில :)\\ தாராளமாச் சொல்லுங்க நான் காத்திருக்கிறேன்.

      \\நான் இல்லை ஜெயதேவ் நீங்கதான் கீதை மேலும், கிருஷ்ணர் மேலும் அட்டாச் மெண்ட் ஆயிட்டீங்க\\ சிவா,
      "கீதை மேலும், கிருஷ்ணர் மேலும் அட்டாச் ஆயிட்டீங்க"- இது நிஜமாவே நடந்தா எப்படி இருக்கும்னு ஏங்குகிறேன் காரணம் இதுதான் நான் அடைய வேண்டிய நிலை, ஆனால் அந்த நிலையை அடையும் அளவுக்கு தூய பக்தன் நானினல்லை. சொல்லப் போனால்,

      man-manā bhava mad-bhakto
      mad-yājī māṁ namaskuru
      mām evaiṣyasi yuktvaivam
      ātmānaṁ mat-parāyaṇaḥ [Bg 9.34]

      Engage your mind always in thinking of Me, offer obeisances and worship Me. Being completely absorbed in Me, surely you will come to Me.


      man-manā bhava mad-bhakto

      mad-yājī māḿ namaskuru

      mām evaiṣyasi satyaḿ te

      pratijāne priyo 'si me [BG 18.65]

      Always think of Me, become My devotee, worship Me and offer your homage unto Me. Thus you will come to Me without fail. I promise you this because you are My very dear friend.

      என்று பகவானே சொல்கிறார். ஆமாம் அவர் மேல் அளவு கடந்த அன்பைச் செலுத்தி அவர் மேல் அட்டச் ஆகி சதா சர்வ காலமும் அவரையே நினைத்திருக்க வேண்டும். இது தான் Highest perfection!! இதைத்தான் கீதை சொல்கிறது. அதை எப்படி மறுக்க முடியும்?
      \\அதனால அந்த ஸ்கேலை வச்சே எல்லோர்த்தையும் அளந்து கிண்டல் அடிக்கிறீங்க. நல்ல குருமார்கள் லிஸ்ட் ரெடியா?\\ நான் கிண்டல் பண்ணவேயில்லை அவர்கள் போலிகள் என்ற உண்மையைச் சொல்கிறேன், அதற்க்கான காரணத்தையும் சொல்கிறேன்.

      \\படிச்சபடி நடந்துக்கிட்டாரான்னு அதவச்சே எடைப் போட்டேன்கிறது தப்பு.. இவங்கெல்லாம் கீதைய மேற்கோள் காட்டுவது தனக்குப்பிடிச்ச புத்தகத்துல இருந்து ஒரு கருத்த சொன்னா அதன்படிதான் அவனும் இருக்கனும்கிறது தவறான எதிர்பார்ப்பு. \\
      அப்படின்னா கீதை வாழ்க்கைக்கு ஏற்றதல்ல என்று சொல்லுங்களேன் பார்ப்போம். கீதையை ஆதாரமாகவும் காட்ட வேண்டும், ஆனால் அதில் சொல்லப் பட்டுள்ளதை மறுக்கவும் வேண்டும். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. நன்றாக இருக்கிறது!!


      \\ஏற்கனவே சொன்னதுதான் இவங்கெல்லாம் கைகாட்டி,.பயணிக்க வேண்டியது நாம்தான்.கைகாட்டியின் தரத்தை ஆராய்வது பயனற்ற வேலை.\\ கீதையில் உண்மையை உணர்ந்த ஒரு ஆன்மாவிடம் போய் கற்றுக் கொள் என்று பகவான் சொல்கிறார். [tatva Darsinah]. நீங்க சொல்லும்படியாக யாரை வேண்டுமானாலும் அல்ல. இப்படி வர்ர்த்தைக்கு வார்த்தை கீதையை எதிர்ப்பதற்கு பதில் கீதையே அர்த்தமற்றது என்று நீங்கள் சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால், நாங்கள் கீதைதான் அடிப்படை என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்க்கு எதிரான கருத்துக்களையும் வாழ்வியல் முறைகளையும் கொண்ட யாரையும் ஏற்ப்பதர்க்கில்லை.


      \\இனி என்றுமே சொந்தமாக யாராலும் சொல்லப்படுகிற அளவுக்கு ஆன்மீகத்தில் எதுவும் பாக்கி இல்லை. அதுவும் தமிழில் இல்லவே இல்லை. ஏற்கனவே சொல்லப்பட்டவைகளிலிருந்து தான் யாருமே சொல்ல முடியும்.ஒருசிலரை தவிர்த்து மற்றவர்கள் போலிகள் என்ற கடும்சொல்லுக்கு உரியவர்கள் அல்ல என்பதை வலியுறுத்துகிறேன்.. முடிந்தால் நாளை விபரமாக எழுதுகிறேன்.\\ பழசை மறுக்க முடியாது என்றால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆன்மீக குரு அவசியம் அவர் இறைவனை உணர்ந்தவராக இருக்க வேண்டும், குரு பரம்பரையில் வந்தவரே தகுதியாவராக இருக்க முடியும், இதெல்லாம் கீதையில் இருந்து வரும் கருத்துக்கள். அதை ஏன் மறுக்கிறீர்கள்?

      Delete
  7. உங்கள் கோனார் நோட்ஸின்படி, சித்தர்களும் போலிகளோ?

    ReplyDelete
    Replies
    1. @செங்கோவி
      நம் வாழ்க்கைக்குத் தேவையான சித்தர்களின் போதனைகள் இது தான் என்று சுருக்கமாக ஒரு நாலு வரி சொல்லுங்க பாப்போம் செங்கோவி!! அவங்க கிட்ட இருந்து உங்க வாழ்க்கைக்கு மாற்றங்கள் ஏற்ப்படும் படியா எதையாவது எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? பதிலுக்கு காத்திருக்கிறேன்.

      Delete
    2. அண்ணாச்சி, யாருடனும் வாக்குவாதத்திற்கோ சண்டைக்கோ எனக்கு தற்போது நேரம் இல்லை. நான் கேட்டது சித்தர் பற்றிய உங்கள் அபிப்ராயம் தெரிந்துகொள்ளவே. அவர்கள் எழுதியதில் 'நாலு வரி'கூட நமக்கு பிரயோஜனமானது இல்லை என்ற உங்கள் புரிதல் கண்டு, புல்லரித்துப்போனேன்..மற்ற நண்பர்கள் இன்னும் ஆழமான விவாதத்திற்கு உங்களை இழுத்திருக்கிறார்கள்.

      மற்றபடி, நானும் பகவத் கீதையைத் தான் அதிகம் படிப்பவன். ஆனாலும் அதனை மட்டுமே வைத்துப் பார்த்தால், சித்தர்களைக்கூட போலி என்பீரோ என்று நினைத்தேன். நான் நினைத்ததை சரியாக்கிவிட்டீர்.

      ஒரே ஒரு விஷயம், இந்து மதத்தையாவது சகிப்புத்தன்மையுடன் வாழ விடுங்கள். நேரம் இருக்கையில், சித்தர் பற்றி பதிவிடுகிறேன்.

      Delete
    3. \\அண்ணாச்சி, யாருடனும் வாக்குவாதத்திற்கோ சண்டைக்கோ எனக்கு தற்போது நேரம் இல்லை.\\ செங்கோவி, கேட்டதற்கான காரணம் புரியாமல் பதட்டப் படாதீர்கள். நீங்க மட்டும் அமைதியை விரும்புறீங்க, நான் கத்தியை எடுத்திகிட்டு சண்டைக்கு ஆள் கிடைப்பாங்களா என்று சுத்திகிட்டு இருக்கிறேன் என்று அர்த்தமல்ல. எனக்கு சித்தர்களைப் பற்றி எதுவும் தெரியாது. அவங்க சொன்னது என்னன்னவாவது தெரிஞ்சாத்தானே சரியா தவறான்னு விவாதிக்க முடியும்? அதற்காகத்தான் கேட்டேன்.


      \\நான் கேட்டது சித்தர் பற்றிய உங்கள் அபிப்ராயம் தெரிந்துகொள்ளவே. அவர்கள் எழுதியதில் 'நாலு வரி'கூட நமக்கு பிரயோஜனமானது இல்லை என்ற உங்கள் புரிதல் கண்டு, புல்லரித்துப்போனேன்.\\ இந்தப் பின்னூட்டத்துக்கு பதினோரு வரி எழுதியிருக்கீங்க, இதற்குப் பதிலாக அவங்க என்ன போதித்தார்கள், என்று நான்கு வரி நீங்கள் எழுதியிருக்கலாம், ஏன் அதைச் செய்யவில்லை என்று எனக்குப் புரியவில்லை. இதே மாதிரி நீயா நானாவில் வந்த ஒரு விவாதம் இப்போது நினைவுக்கு வருகிறது:

      https://www.youtube.com/watch?v=I9TfdDZFJek

      \\மற்றபடி, நானும் பகவத் கீதையைத் தான் அதிகம் படிப்பவன். ஆனாலும் அதனை மட்டுமே வைத்துப் பார்த்தால், சித்தர்களைக்கூட போலி என்பீரோ என்று நினைத்தேன். நான் நினைத்ததை சரியாக்கிவிட்டீர். \\ பதிவர் வவ்வால் கூட தமிழ் வாத்தியார் திருக்குறளை தினமும் படித்து போதிக்கிறார், ஆனால் கோழி பிரியாணி இல்லாம தூங்கவே மாட்டார். அந்த மாதிரி படிச்சு எதற்கு பிரயோஜனம்?

      கற்க கசடற கற்பவை கற்றபின்
      நிற்க அதற்குத் தக

      என்பது போல பயில வேண்டும். நான் இந்த வகையில் தான் மேற்க்கண்டவர்களை போலிகள் என்கிறேன் அதில் தவறு இருந்தால் நீங்கள் சுட்டிக் காட்டலாம்.

      \\ஒரே ஒரு விஷயம், இந்து மதத்தையாவது சகிப்புத்தன்மையுடன் வாழ விடுங்கள்.\\ கண் முன்னே பெண் மானபங்கப் பட்டாலும் வாழாதிருப்பது தான் சகிப்புத் தன்மை என்று நீங்கள் தவறாக நினைத்தால் நான் பொறுப்பல்ல செங்கோவி. ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனைப் பார்த்து அஹிம்சையை போதிக்கவில்லை தர்மத்திற்கு எதிராக உன் சொந்த பந்தங்களே இருந்தாலும் உன் கடமையைச் செய்வதில் சுணக்கம் வேண்டாம், அவர்களை ஒழித்துக் கட்டு என்று வீரத்தை ஊட்டுவது தான் கீதை. போறவன் வர்றவன் எல்லாம் ஆளாளுக்கு பொய் பித்தலாட்டம் செய்ய கீதையைப் பயன்படுத்துவதை பார்த்து வாழாதிருப்பதற்குப் பெயர் சகிப்புத் தன்மை அல்ல.

      \\நேரம் இருக்கையில், சித்தர் பற்றி பதிவிடுகிறேன்.\\ நன்றி ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

      Delete
    4. நீங்கள் பகவத் கீதையை மட்டும் வைத்தே எடை போடுவேன் என்று சொன்னதாலேயே, சகிப்புத்தன்மையைப் பற்றிச் சொன்னேன். கீதையை மட்டுமே அளவுகோலாகக் கொள்வது உங்கள் தனிப்பட்ட விருப்பம், அதை ஒட்டுமொத்த இந்துக்களின்மேல் போடலாமா என்பதே என் கவலை.

      அப்புறம் நீங்கள் கேட்ட நான்குவரிக்கு சிவவாக்கியரின் 'நட்டகல்லை..' பாடலை வைத்துக்கொள்ளுங்களேன். சித்தர் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதை நான் நம்பவில்லை ஸ்வாமி. அவர்கள் ஆச்சாரங்களை பேணாதவர்கள் என்பதாலேயே, உங்களுக்கு அவர்கள் போலியாகத் தெரியலாம்!
      (கவனிக்க: நீங்கள் போட்ட லிஸ்ட் மேல் நான் விவாதம் செய்யவில்லை, உங்கள் தராசின்மீதே என் கவனம்.)

      Delete
    5. நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே..சுற்றி வந்து முணுமுணென்று சொல்லுமந்திரம் ஏதடா?.....நட்டகல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில்..சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை உணருமோ?..(இதுவே அந்தப் பாடல்..என் ஞாபகக்குறிப்பில் இருந்து எழுதியது, ஏதேனும் சொற்பிழை இருக்கலாம், மன்னிச்சு!)

      Delete
    6. \\நீங்கள் பகவத் கீதையை மட்டும் வைத்தே எடை போடுவேன் என்று சொன்னதாலேயே, சகிப்புத்தன்மையைப் பற்றிச் சொன்னேன். கீதையை மட்டுமே அளவுகோலாகக் கொள்வது உங்கள் தனிப்பட்ட விருப்பம், அதை ஒட்டுமொத்த இந்துக்களின்மேல் போடலாமா என்பதே என் கவலை.\\ செங்கோவி, நீங்க பகவத் கீதை என்பதை நம் வாழ்வில் பின்பற்றத் தக்க நூலாக ஏற்றுக் கொள்வீர்களா, மாட்டீர்களா என்பதை மட்டும் ஆம்/இல்லை என "நறுக்" என்று சொல்லுங்கள். அப்புறம் பேசுவோம்.

      \\அப்புறம் நீங்கள் கேட்ட நான்குவரிக்கு சிவவாக்கியரின் 'நட்டகல்லை..' பாடலை வைத்துக்கொள்ளுங்களேன். \\ இந்தப் பாடல் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.


      \\சித்தர் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதை நான் நம்பவில்லை ஸ்வாமி. \\ அந்த அளவுக்கு கூட ஏன் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் என் கூட விவாதம் பண்ணி பிரயோஜமேயில்லையே!!

      \\அவர்கள் ஆச்சாரங்களை பேணாதவர்கள் என்பதாலேயே, உங்களுக்கு அவர்கள் போலியாகத் தெரியலாம்!\\ அவர்களை நான் எதுவுமே சொல்லாத நிலையில் நீங்கள் இவ்வாறு அபாண்டமாகக் குற்றம் சுமத்துவது சரியில்லை செங்கோவி. இந்த விவரமே நான் இப்போதுதான் கேள்விப் படுகிறேன். சித்த வைத்தியம் என்பார்கள் சித்தர்கள் என்பார்கள். அவர்களின் வாழ்வியல், வழிபாடு, போதனைகள் என்று எதுவும் எனக்குத் தெரியாது. அப்படி ஏதாவது தெரிந்திருந்தால் இந்தப் பதிவிலேயே நான் குறிப்பிட்டிருப்பேனே?


      \\(கவனிக்க: நீங்கள் போட்ட லிஸ்ட் மேல் நான் விவாதம் செய்யவில்லை, உங்கள் தராசின்மீதே என் கவனம்.)\\ அதுதான் சொல்கிறேன், பகவத் கீதையை ஆதாரமாக ஏற்ப்பீர்களா, மாட்டீர்களா? நான் இங்கே போலி என்று சொன்ன அத்தனை பெரும் பகவத் கீதையை மேடைகளில் பேசி கைதட்டல் வாங்கிவிட்டு பின்னர் அதன் மறைவில் தங்களது விஷத்தை மக்களுக்கு ஏற்றியவர்கள். ஆகையால் பகவத் கீதை என்ற தராசை உபயோகப் படுத்தினேன். இந்தத் தராசை மாற்று நம்பிக்கை உள்ளவர்களுக்கு பயன்படுத்தவே இல்லை, அவர்கள் யாரையும் போலி என்று சொல்லவே இல்லை என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். தங்கள் எடுத்துக் கொண்ட கொள்கைக்கே முரணாக இவர்கள் உள்ளார்கள் என்பது தான் பாயிண்ட்.

      Delete
    7. //செங்கோவி, நீங்க பகவத் கீதை என்பதை நம் வாழ்வில் பின்பற்றத் தக்க நூலாக ஏற்றுக் கொள்வீர்களா, மாட்டீர்களா என்பதை மட்டும் ஆம்/இல்லை என "நறுக்" என்று சொல்லுங்கள். //

      ஆம்...ஆம்..ஆம்.

      // அந்த அளவுக்கு கூட ஏன் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் என் கூட விவாதம் பண்ணி பிரயோஜமேயில்லையே!!//

      நீங்கள் ஒரு வைதீகர் என்பதை அறிவேன். ஆனால் வைதீகம் மட்டுமே அறிந்தவர் என்று இப்போது தான் புரிந்து கொண்டேன். அது மட்டுமே அறிந்திருப்பது தவறு அல்ல. நான் கவலைப்பட்டது எதற்கென்றால், வைணவத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு எல்லாவற்றையும் அளவிடலாமா ..அது இந்து மதத்தை குறுக்கும் நோக்கல்லவா என்று தான்.


      ஆனால், // இந்தத் தராசை மாற்று நம்பிக்கை உள்ளவர்களுக்கு பயன்படுத்தவே இல்லை, அவர்கள் யாரையும் போலி என்று சொல்லவே இல்லை என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். தங்கள் எடுத்துக் கொண்ட கொள்கைக்கே முரணாக இவர்கள் உள்ளார்கள் என்பது தான் பாயிண்ட்.//

      இந்த பாயிண்டுடன் ஒத்துப்போகிறேன். மேலும் இந்தப் பாயிண்ட் சித்தர் போன்ற மாற்றுத்தரப்பை கட்டுபடுத்தாது என்றும் புரிந்துகொள்கிறேன்.

      Delete
    8. *******//செங்கோவி, நீங்க பகவத் கீதை என்பதை நம் வாழ்வில் பின்பற்றத் தக்க நூலாக ஏற்றுக் கொள்வீர்களா, மாட்டீர்களா என்பதை மட்டும் ஆம்/இல்லை என "நறுக்" என்று சொல்லுங்கள். //

      ஆம்...ஆம்..ஆம்.***********

      அப்படின்னா பகவத் கீதையில் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டு, மற்ற ஆன்மீகவாதிகள் யாராக இருந்தாலும், அதன் படி நடக்கிறார்களா என்று பாருங்கள், ஆம் என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் ஒதுக்குங்கள். அதே சமயம், பகவத் கீதையும் உண்மை, அதற்க்கு நேர் மாறாக நடப்பவரும் உண்மை, இதையும் அதையும் கலந்துகட்டி என் மனசுக்கு என்ன தோணுதோ அதுதான் இறுதி உண்மை என்று நீங்கள் போனால், அது சரியான வழி அல்ல.

      சூரியன் கிழக்கே உதிக்கிறது என்பது நீங்கள் சரி என நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் உண்மை, எனவே வேதவியாசரின் இலக்கியங்கள் சொல்லவா வருவது அத்தகைய உண்மையையே. இருவேறு கருத்துக்களை அதிலிருந்து எடுக்க முடியாது. சிவன், பிரமா, விஷ்ணு என பலர் இருந்தாலும் இருதியால் யார் கடவுள் என்பதில் வேத வியாசரின் இலக்கியங்கள் அழகாக சொல்லியிருக்கின்றன, அதில் எந்த சந்தேகமுமே இல்லை. கீதையை நன்கு படியுங்கள் புரியும்

      முக்கியமா நீங்க சாதிய ரீதியாக ஆன்மீகத்தை அணுகுகிறீர்கள், அது சரியல்ல. வைணவம், சைவம் என்றெல்லாம் பாகுபாடு இல்லை, வைணவர்களில் தலையாயவர் சிவன்பெருமான்தான்.

      Delete
  8. மாப்ளே தாசு,

    பொதுவாக ஆன்மீகம் பற்றி பேசுவதே உத்தமம்.

    1.வைணவரான உங்களுக்கு பகவத் கீதை,பாகவதம் சரி எனப் படலாம்.அதில் உள்ள‌ கருத்துகள் உங்கள் குரு பிரபுபாத விள்க்கப்படி முழுதும் ஏற்கத் தக்கதாக இருக்கலாம். மாற்று விளக்கங்களும் பகவத் கீதைக்கு உண்டு!!

    ஆகவே பகவத் கீதையின் பிரபுபாத விளக்கம் மாட்டுமே உங்களுக்கு சரி என கொள்ள உரிமை உண்டு என்றாலும், இதனை எப்படி பொதுவில் சொல்ல இயலும்?

    2. குருபரம்பரை என்பது மதக் கோட்பாடுகள், கீதை விளக்கங்கள் பல மாற்றம் கண்டுள்ளன. பிரபுபாதாவுக்கு முந்தையவர்கள் கீதையை எப்படிப் புரிந்து இருபார்கள். அப்போது எது சரி??

    கீதை விளக்கம் அப்போது(?) முதல் இன்றுவரை மாறாமல் இருக்கிறது எனக் காட்ட முடியுமா?

    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. மாமு, மேலே சொன்ன பாய்கள் அத்தனை பெரும், வேதங்கள், புராணங்கள் இவற்றில் இருந்து எதையாவது எடுக்காதவனே இல்லை. [அவன் எடுத்தாலும் சரியாகப் புரிந்து கொண்டிருக்க மாட்டான், மேலும் தப்பான அர்த்தம் தான் கற்ப்பிப்பான் என்பது வேறு விஷயம்]. அவனுங்க எல்லோருமே பகவத் கீதை authentic scripture என்பதை ஒப்புக்குவானுங்க, [பேச்சுசுக்காவது]. ஆனா கீதையின் அடிப்படைத் தத்துவம் அவனுங்களுக்கு தெரியாது.

      இவர்கள் கீதையை ஏற்ப்பதனால், அதைப் போதிப்பதால், அதன் அடிப்படையிலே இவர்கள் தகுதியைப் பார்க்கிறேன். அப்படியில்லா விட்டால் நானும் உங்களைப் போல மூமீனு, விலாங்கு மீனு, காஃபீரு, ஜில்லுடு பீருன்னு போயிருப்பேனே............

      Delete
    2. பாய்கள் அத்தனை பெரும்\\பயல்கள் அத்தனை பேரும்

      Delete
  9. குரு என்பவர் மட்டுமே இறை உபதேசம் பண்ண இயலும். குரு இறைநிலையை உணர்ந்தால் மட்டுமே தன்னுடைய சிஷ்யனுக்கு உண்மையை உபதேசிக்க இயலும். அதனால் தான் திருமூலர்:



    குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்வார்

    குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்

    குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்

    குருடுங் குருடுங் குழிவிழுமாறே – 1680 , திருமந்திரம்



    வேடதாரிகளை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழியினர். குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் வீழ்ந்து அழிவர்." என்கிறார் திருமூலர்.

    கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக

    உள்ள பொருளுடல் ஆவியுடன் ஈக

    எள்ளத் தனையும் இடைவிடாதே நின்று

    தெள்ளி யறியச் சிவபதந்தானே.



    1693 : -திருமந்திரம் 6ம் தந்திரம்

    விளக்கம்:

    குருவாக ஒருவனை அவசரப்பட்டுத் தேர்ந்தெடுக்கலாகாது. மிக நன்றாக யோசித்துத் தெளிந்த பின்னரே ஒருவனைக் குருவாகக் அடைதல் வேண்டும். அப்படிப் பெறப்படும் குருவானவன் நல்லவனாய், நாம் அறியாதவற்றை அறிந்தவனாய், நமக்கு அவற்றை எடுத்துச் சொல்பவனாய், நம்மை நன்னெறிப்படுத்துவனாய், குற்றமில்லாதவனாய், நமக்குப் பிறவிப் பயன் கொடுப்பவனாய் அமைதல் வேண்டும்.

    திருமந்திரத்தின் இந்த இரண்டு பாடல்களும் முகமது நபிக்குப் பொருந்தி வருவதை எண்ணி வியக்கிறோம். ஒரு இறைத்தூதர் எப்படி இருக்க வேண்டும். எப்படி வாழ வேண்டும். என்ன விஷேச சக்திகளை பெற்றிருக்க வேண்டும் என்று திரு மூலர் அழகாக இந்த பாடலில் வர்ணிக்கிறார். நமது தமிழ் மொழிக்கு வந்த இறைத் தூதரின் இலக்கணங்கள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று தமிழில் இறங்கிய இறை வேதம் பட்டியலிட்டிருக்கலாம். அதையே திரு மூலர் தனது பாடலில் எடுத்தாண்டிருக்கிறார் என்று நான் எண்ணுகிறேன்.

    முகமது நபி அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்பொழுது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் 'இந்த ஆட்டை சமையுங்கள்' என்று கூறினார்கள். பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். முகமது நபி அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் முகமது நபி அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி 'என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள் 'இறைவன் என்னை அடக்கு முறை செய்பவனாகவும் மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்.' என்று விடையளித்தார்.

    -ஆதாரம் -அபுதாவுத் 3773, பைஹகீ 14430

    ReplyDelete
    Replies
    1. முகம்மது நபிகள் நாயகம் வேதங்களால் அங்கீகரிக்கப் பட்ட ஆன்மீக குரு ஆவார், ஆனால் அவருடைய போதனைகள் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது, வருகைக்கு நன்றி சுவனம்!!

      Delete
  10. உமக்கு ஒன்றும் புரியவில்லை என்றால் அது எல்லாம் தவறாகிவிடாது . அதே போல் உமக்கு புரிந்தது எல்லோருக்கும் புரியவேண்டும் என்ற அவசியமும் இல்லை. நிறைய பேர் தவறான வழிகாட்டிகளின் பின் போய் கொண்டிருப்பதால் எல்லா வழிகாட்டிகளுமே தவறானவர்களாகி விட மாட்டார்கள். அவரவர் மார்க்கம் அவரவர்க்கு. பரமனை உமக்குள் உணர வேண்டும். குரு அதற்கு உதவலாம். அவ்வளவே. குரு இல்லாமலும் பரமனை அடையலாம். அதற்கு மிக அதிக முயற்சி தேவைபடும். கிருஷ்ணாவதாரத்தின் போது எத்தனை
    பேர் முக்தி அடைந்தார்கள், எத்தனை பேர் அடையவில்லை? உமது கூற்று படி, கல்கி வரும் வரை யாருமே முக்தி அடைய முடியாதா? முதல் குருவின் குரு யார்? tvinayagam@yahoo.com

    ReplyDelete
    Replies
    1. திரு.விநாயகம் அவர்களே,

      \\குரு இல்லாமலும் பரமனை அடையலாம்.\\ என்று நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் கீதையில்


      tad viddhi pranipatena
      pariprasnena sevaya
      upadeksyanti te jnanam
      jnaninas tattva-darsinah
      [பகவத் கீதை 4.34]

      என்று கண்ணன் சொல்கிறார். இதன் மூலம் பகவத் கீதையை விட உமக்கு அதிகம் தெரிந்துவிட்டது என்று சொல்ல வருகிறீரா? நாட்டில் இதே மாதிரி கொள்ளை பேரு ஊரு ஊருக்கு புழுகிக் கொண்டு திரிகிறார்கள்.

      \\நிறைய பேர் தவறான வழிகாட்டிகளின் பின் போய் கொண்டிருப்பதால் எல்லா வழிகாட்டிகளுமே தவறானவர்களாகி விட மாட்டார்கள்.\\ எல்லோரும் தவறானவர்கள் என்று நான் எங்கே சொன்னேன் என்று தெரியவில்லை. அப்படிச் சொல்வதாக இருந்தால் பெயர்களைப் போட்டு இவர்கள் எல்லாம் போலிகள் என்று சொல்லியிருப்பேனா?

      மேற்சொன்னவர்களை பகவத் கீதையின் வாயிலாக எடை போடா வேண்டியிருக்கிறது காரணம் இவர்கள் எல்லோருமே பகவத் கீதையை கையில் எடுத்துக் கொண்டு பித்தலாட்டத்தை விதைப்பவர்கள். அதனால்தான். கீதை என்பது ஏற்கத் தாக்கதல்ல என்று இவர்கள் சொல்லிவிட்டு போகட்டுமே பார்ப்போம். மக்கள் மத்தியில் மதிப்பைப் பெற கீதையும் வேண்டும் அதே சமயம் அதன் போதனைகளை நீக்கிவிட்டு சொந்தக் கருத்து புளுகித் திரிவார்கள். என்ன நியாயம் இது?

      \\உமது கூற்று படி, கல்கி வரும் வரை யாருமே முக்தி அடைய முடியாதா?\\ பகவத் கீதையின் கூற்றுப் படி தகுதியான ஆன்மீக குருவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான் நமது கருத்தேயன்றி கல்கி வரும் வரை காத்திரு என்பதல்ல. மீண்டும் பதிவை ஆழமாகப் படியும் அன்பரே, நான் சொல்லாதவற்றை சொன்னதாக உம இஷ்டத்திற்கும் எதையாது எழுத வேண்டாம்.

      Delete
  11. பகவத்கீதையை விட எனக்கு எப்படி அதிகம் தெரிந்திருக்க நான் முடியும்? ஆனால், அதில் உள்ளது மட்டுமே சரி என்று என்ணைபவனில்லை.எனது சுயபுத்தியையும் கொஞ்சம் உபயோகிக்கிறேன்.இதற்கு முன் ஓரிடத்தில் தாங்கள் // முகம்மது நபிகள் நாயகம் வேதங்களால் அங்கீகரிக்கப் பட்ட ஆன்மீக குரு ஆவார், ஆனால் அவருடைய போதனைகள் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது, வருகைக்கு நன்றி சுவனம்!! // என்று கூறியிருக்கிறீர்கள். அப்படியானால், அவரது குரு யார்? வேதம் அவரை எப்படி அங்கீகரித்தது? உமக்கு தெரியவில்லையென்றால் நான் கூறுகின்றேன். பரமனே அவரது குரு. அதே போல், இராமலிங்க அடிகளாருக்கும், ரமணருக்கும் பரமனே குரு.ஐயப்பன் இறைவனுடய அவதாரம். ஐயப்ப விரத முறைகள் மனிதர்களை பண்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டவை. பரமன் மனித வடிவத்தில் குருவாக வந்துதான் யாருக்கும் அருள் புரிய வேண்டும் என்பதில்லை. சாதகனின் மனோநிலை, சாஸ்திரத்தை பின்பற்றுவதை விட மிக முக்கியம் என்பதை நீங்கள் பகவத்கீதையில் படிக்கவில்லையா? உங்களது போலி சாமியார் வரிசையை திருத்தவும்.
    tvinayagam@yahoo.com

    ReplyDelete
    Replies
    1. திரு விநாயகம் அவர்களே,

      \\பகவத்கீதையை விட எனக்கு எப்படி அதிகம் தெரிந்திருக்க நான் முடியும்? ஆனால், அதில் உள்ளது மட்டுமே சரி என்று என்ணைபவனில்லை.எனது சுயபுத்தியையும் கொஞ்சம் உபயோகிக்கிறேன்.\\ இது தான் வடிகட்டிய அயோக்கியத் தனம் என்பது. அதில் உள்ளது மட்டுமே சரி என்று நீங்கள் எண்ணவில்லை என்பதன் பொருள் என்ன? கீதையில் தவறுகளும் இருக்கலாம் என்கிறீரா? சுயபுத்தியில் எது பட்டாலும் அது சரியா தவறா என்பதை கீதை தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர உமது புத்தி அல்ல. அப்படி உமது புத்தியில் வருவது தான் சரி என்றால் கீதை என்பது பின்பற்றத் தக்க நூலே அல்ல. உங்களுடைய சுயபுத்தியை உபயோகிப்பதைப் போல ஆளாளுக்கு அவரவர் சுயபுத்தியை பயன்படுத்துவதற்கு கீதை எதற்கு?


      \\இதற்கு முன் ஓரிடத்தில் தாங்கள் // முகம்மது நபிகள் நாயகம் வேதங்களால் அங்கீகரிக்கப் பட்ட ஆன்மீக குரு ஆவார், ஆனால் அவருடைய போதனைகள் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது, வருகைக்கு நன்றி சுவனம்!! // என்று கூறியிருக்கிறீர்கள். அப்படியானால், அவரது குரு யார்? வேதம் அவரை எப்படி அங்கீகரித்தது? \\ காலம், இடம், சூழ்நிலை இவற்றைப் பொறுத்து இறைத் தூதுவர்கள் தோன்றுவார்கள். சில சமயம் இறைவன் தனது வேலையாட்களை அனுப்புவார் தனது மகனை அனுப்புவார், அவரே வரவும் செய்வார். அந்த வகையில் காலம், இடம், சூழ்நிலைக்கு எற்றவாறு வந்த தூதுவர்களில் ஒருவர் நபிகள் நாயகம்.

      \\அதே போல், இராமலிங்க அடிகளாருக்கும், ரமணருக்கும் பரமனே குரு.\\ இந்த மாதிரி நேரடியாக சொல்வேன் என்று கீதையில் சொல்லவில்லை evam parampara praptam என்று தான் சொல்லப் பட்டுள்ளது. ஒன்று கீதை சரியாக இருக்க வேண்டும், அல்லது, தம்பி மகனுக்கு சொத்தை எழுதிவிட்டு செத்தவன் சொன்னது சரியாக இருக்க வேண்டும்?

      \\ஐயப்பன் இறைவனுடய அவதாரம். ஐயப்ப விரத முறைகள் மனிதர்களை பண்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டவை. \\ உம்மா இஷ்டத்துக்கும் புருடா விட முடியாது அப்பனே, வியாச தேவரின் இலக்கியங்களின் படி இந்த மாதிரி கடவுள் இருந்ததாக காட்ட முடியுமா? அவர் எழுதிய நான்கு வேதங்கள், 18 புராணங்கள் எதிலாவது இப்படி ஒருத்தர் பிறந்ததாக தகவல் உள்ளதா? இருந்தால் ஆதாரத்தோடு காட்டுங்கள்.

      \\உண்டு இது மாதிரி ஆயிரம் கட்டுக் கதைகளை பரமன் மனித வடிவத்தில் குருவாக வந்துதான் யாருக்கும் அருள் புரிய வேண்டும் என்பதில்லை.\\ நீர் என்னத்தை படித்தீரோ தெரியவில்லை, என்கிட்ட வந்து கத்துக்கோ என்று அவர் சொல்லவில்லை, குரு கிட்ட போய் கத்துக்கோ என்று தான் சொல்கிறார். அப்படி வேண்டாம் என்று நீர் கதையளக்க வேண்டாம். உம்முடைய கற்பனையில் உதித்தவற்றை எல்லோரும் ஏற்க வேண்டியதில்லை


      \\சாதகனின் மனோநிலை, சாஸ்திரத்தை பின்பற்றுவதை விட மிக முக்கியம் என்பதை நீங்கள் பகவத்கீதையில் படிக்கவில்லையா? \\ இதே பித்தலாட்டத்தைத் தான் மேற்சொன்ன அத்தனை பேரும் செய்கிறார்கள். இதை எங்கே கீதையில் சொல்லியுள்ளார் என்று காட்டுமே பார்ப்போம்.


      \\உங்களது போலி சாமியார் வரிசையை திருத்தவும்.\\ திருத்துகிறேன், உமது பேரை இறுதியில் சேர்க்க வேண்டும் அந்த ஒரு திருத்தம் தான் பாக்கி.

      Delete
    2. இதில் அயோக்கியத்தனம் எங்கு உள்ளது என்று எனக்கு புரியவில்லை. மற்றும், உமக்கு ஏன் இத்தனை கோபம்? ஒரு நூலை பின்பற்றுவது என்றால் அதனை புரிந்து கொள்ளாமல், கேள்வி கேட்காமல் முட்டாள் தனமாக பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நீர் வியாசர் சொன்னதை நான் எதிர் கேள்வி கேட்காமல் பின்பற்ற வேண்டும் என்கிறீர்.ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் கீதையை பின்பற்றினாலும் சரி, குருவை பின்பற்றினாலும் சரி, கடைசியாக மிக சரியாக பரமனை நீங்களே புரிந்து அறிந்து கொண்ட பின்தான் முக்தி கிட்டும். என்னுடைய நோக்கம், என்னுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுதல். அது நூறு சதவீதம் சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மற்றும் எல்லோரும் ஒப்புகொள்ள வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அது தேவையில்லை என நீங்கள் நினைக்கிறீர்கள். நான் இன்னும் சாமியாராகவே ஆகவில்லை. அதற்குள் என்னை போலி சாமியார் பட்டியலில் சேர்க்க இருப்பதற்கு மிக்க நன்றி. tvinayagam@yahoo.com

      Delete
    3. திரு விநாயகம் அவர்களே,

      நீங்க என்ன நினைக்கிறீங்க,என்ன சாப்பிடுறீங்க, எங்கே போறீங்க இதெல்லாம் யாருக்கையா வேண்டும்? எங்களுக்கு பகவத் கீதை ஆதாரம், அதை மீறுபவன் போலி. அங்கேயே முடிந்தது. மத்தபடி உம்மைப் போல சந்துக்கு சந்து ஊருபட்டவர்கள் திர்யறாங்க, எவன் அவனுங்களைப் பத்தி கவலைப் பட்டான்? விரும்பினால் பகவத் கீதையின் அடிப்படையில் வாதங்களை வைக்கவும், தவிர உமக்கு கொள்கை, பிண்ணாக்கு இருக்கிறதென்றால் நீரே வைத்துக் கொள்ளும். எமக்குத் தேவையில்லை.

      Delete
    4. மாப்ளே தாசு,
      நமக்கு எதை செய்தாலும் தெளிவா செய்யனும். நீங்க பரவாயில்லை.இந்த பதிவில் இரண்டு விடயம் சொல்ரீங்க அத்வாது .

      1. கீதை வாழ்வின் வழிகாட்டி 2. கீதையின் விள்க்கும் நல்ல குரு பரிசோதித்து ஏற்க வேண்டும்!!

      நான் இதை ஏற்கிறேனா இல்லையா என்பதை விட தெளிவாக சொல்ரீங்க பாருங்க அது நம்க்கு பிடிக்கிறது. படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்றால் அது நான்தான்,ஆன்மீகம் பத்தி படிச்சு அப்புறம் புடிப்பேன் ஹிஹி

      நீர் நடத்தும் . உம்ம பதிவில் கண்டது ஆத்திகன் நாத்திகனை விட, ஆத்திக குழுக்களிடையே அதிக கருத்து மோதல் என்பதுதான்.

      எனினும் உமக்கு கீதை நம்ம சகோ சு.பி.க்கு குரான், ராபின்க்கு பைபிள்,சைவ ஆட்களுக்கு திருவாசகம் ஐயப்ப சாமிகளுக்கு சபரிமலை என சொல்லி விடலாமே!!
      யார் எப்படி வணங்கினாலும் என்னையே வந்து சேருகிறது என்ன ரொமான்ஸ் பையன் கிஷ்னன் சொல்லலையா!!

      "Those who are devotees of other gods and who worship them with faith actually worship only Me, O son of Kunti, but they do so in a wrong way. I am the only enjoyer and master of all sacrifices. Therefore, those who do not recognize my true transcendental nature fall down." (Bhagavad Gita 9:23-24)

      அது உம இஷ்டம் அப்புறம் சார்பியலை கணிதரீதியாக சொல்லலாம் என கொஞ்சம் முயற்சி!!. நீர் தூண்டி விட்டதுதான். வந்து கருத்து சொல்லுங்க!
      http://aatralarasau.blogspot.com/2013/01/lorrenz-transformation.html


      வாழ்க வளமுடன்!!


      Thank you

      Delete
  12. இன்னா மாமே நீ கொஞ்ச நாளா குன்சாதன்கீரே, சாமியார் மாமியார்னு சுத்திகினுகிரே.இன்னா ஆச்சு உனிக்கு.டாடா சுமோ அனுப்பட்டுமா இல்ல ஆட்டோ அனுப்பட்டுமா. ஆமா கம்முன்னு கிட.

    ReplyDelete
  13. According to the author all are bad, fair enough. Let us know what is the parameters for the good guru??? does he know?

    Moreover only hindu's having guru? what about other religion? you don't know or you scared to comment?

    Crap....

    ReplyDelete
    Replies
    1. @ karthi kayan.v

      முதல் வருகைக்கு நன்றி நண்பரே. நான் பின்பற்றும் வழிமுறையில் யார் யார் ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறேன். இவர்களை ஏன் போலி என்று சொல்கிறேன் என்றால், தாங்கள் எதைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லிக் கொள்கிறார்களோ அதை அவர்கள் பின்பற்றவில்லை, அந்த வகையில் இவர்கள் போலிகள். இதே போல கிருத்துவம், இஸ்லாம் போன்றவற்றிலும் போலிகள் இருக்கலாம் ஆனால் அவர்கள் போலிகள் என்று ஐயம் திரிபற நிரூபிக்கும் அளவுக்கு எனக்கு பைபிளிலோ, குரானிலோ Knowledge இல்லை. எனவே தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைக்க விரும்பவில்லை.

      இவர்கள் பகவத் கீதையைக் கூட பின்பற்றுவதில்லை இவர்கள் பின்பற்றத் தக்கவர்கள் அல்ல. இந்த பதிவை எழுதக் காரணம் ஒரு சாமியார் மாட்டிக் கொண்டார் என்று அவரைப் போலி என்கிறோமே, மாட்டாத வரை எல்லோரும் நல்லவர்களா என கேள்வி எழுந்தது. எனவே சட்டத்தின் பார்வையில் இவர்கள் குற்றமற்றவர்கள் என்றாலும் சாஸ்திரத்தின் பார்வையில் இவர்கள் பின்பற்றத் தக்கவர்கள் அல்லர் என இந்தப் பதிவில் கூறியுள்ளோம். இவர்கள் பின்பற்றும் சாஸ்திரங்களின் படியே இவர்கள் தகுதியற்றவர்கள் என்பதை நிரூபித்துள்ளோம். இதில் தவறு இருந்தால் நீங்கள் சுட்டிக் காட்டலாம், வருகைக்கு நன்றி.

      Delete