Tuesday, August 6, 2013

கொஞ்சம் ஓவராப் போனா என்னவெல்லாம் ஆகும்?

1. தமிழன் ஃ பாஷன் மோகம் புடிச்சா என்ன பண்ணுவான்?
 
வேட்டிக்கு ஜிப்பு வைப்பான்.
 
 
2. சீக்ரெட் ஏஜென்ட் தன்னைப் பத்திய இரகசியத்தை எப்படியெல்லாம் மறைச்சு வைப்பான்?
 
விசிடிங் கார்டைக் கூட Blank-காத்தான் குடுப்பான்.

3. உரிச்ச வாழைப் பழ சோம்பேறி என்பவன் யார்?
 
காலை வாக்கிங் போறேன்னு கிளம்பி போயிட்டு திரும்ப வர்றதுக்கு லிப்ட் கேட்டுகிட்டு நிப்பான்.
 
4. யார் கரார் மேனேஜர்?
 
டாக்குமெண்ட் எதைக் குடுத்தாலும் அதோட ஜெராக்சில் நம்மை கையெழுத்து போடச் சொல்லி வாங்கி வச்சிகிறவர் அப்படின்னு நீங்க நினைக்கலாம், அதான் இல்லை. வெள்ளை பேப்பர் ஓசி குடுத்தாலும்
கூட அதை ஜெராக்ஸ் எடுத்து அதில் நம்மை கையெழுத்து போடச் சொல்லி வாங்கி வச்சிகிறவர் தான் ரார் மேனேஜர்!!

5. தி மாணிக்கம் யார்?
 
கண்ணாடி முன்னாள் நின்னுகிட்டு இந்த மூஞ்சியை இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கிறேன்னு அரை மணி நேரமா முழிக்கிறவர்!!

6. வடிகட்டின கூமுட்டை ராமசாமி யார்?
 
கண்ணாடி கதவுகிட்ட போனாலும் சாவித் துவாரம் வழியா பார்ப்பவர்.

7. நேர்மையின் உச்சகட்டம் எது?
 
கர்ப்பிணியாக இருப்பதால் ஒன்னரை டிக்கெட்டை கேட்டு வாங்குவது!!

8. கொடூரமான தற்கொலை முறை எது?
 
அபூர்வ சகோதரர்கள் கமலஹாசன் நண்பர்கள் பிளாட்பாரத்தில் இருந்து ரோட்டில் விழுவது.

9. தண்ணீர் பஞ்சம் ரொம்ப மோசமானதை எப்போது தெரிந்து கொள்ளலாம்

மாடு பால் பவுடராகவே கறந்தால்........ அது உண்மையிலேயே கொடூரமான பஞ்சம் தான்!!
 
10.  "மாந்தோப்பு கிளியே" சுருளிராஜனையும் மிஞ்சும் கஞ்சன் யார்?
வீடு எரியும்போது தீயணைப்பு படைக்கு மிஸ்டு கால் குடுத்து விட்டு உட்கார்ந்திருப்பவன்!!
 

10 comments:

  1. கொஞ்சம் ஓவராப் போனா என்னவெல்லாம் ஆகும்?

    த.ம 1 ' ன்னு நமக்கு நாமலே ஓட்டு போட்டுக்க வேண்டியதுதான். (just for joke ! )

    ReplyDelete
  2. ஹாஹா சூப்பர் படித்தேன் சிரித்தேன்

    ReplyDelete
  3. ரசித்தேன் படித்தேன் சிரித்தேன் சிரித்தேன் சிரித்தேன் சிரித்தேன் சிரித்தேன்

    ReplyDelete
  4. அட இதுவும் நல்லாயிருக்கே/

    ReplyDelete
  5. மறதி மாணிக்கம் ... ஹா.ஹா...

    ReplyDelete
  6. ஹா..ஹா.. எல்லாமே சிரிக்க வைச்சது.. கறார் மேனேஜர் ரொம்ப ஓவர்தான்..!

    ReplyDelete
  7. படித்து படித்து சிறிது மகிழ்ந்தேன்..... இடை இடையே டாடா பொன்மொழிகள் என்பது வாழை பலத்தில் ஊசி ஏற்றுவது போல இருந்தது.... நன்றி நண்பரே !

    ReplyDelete
  8. ஹா..ஹா..ரொம்ப ஓவராத்தான் போய்ட்டீங்க..சிரிச்சு முடியலை!

    ReplyDelete