Thursday, August 15, 2013

தலைவா: ஆத்தா உனக்கு ஆப்பு வச்சிடுவேன்டா...........!!



முன்னாடி விஸ்வரூபம்னு ஒரு பாடாவதி படம்.  விட்டிருந்தா அதுவே ஊத்தி  மூடியிருக்கும்.  எல்லோரும் சேர்ந்து உசுப்பேத்தி ஓட வச்சிட்டாங்க.  அப்போ உலகநாயகன் வீட்டு முன்னாடி நின்னுகிட்டு, படம் வெளியாகலைன்னா இந்த வீடு முழுகிடும், நான் ஊரை [நாட்டை] விட்டே போகலாம்னு இருக்கேன்....... அது இதுன்னு சீனைப் போட்டு, படத்தை ரிலீஸ் பண்ணி நல்ல காசும் பாத்திட்டாரு!!  இப்போ அதே வரிசையில இன்னொரு படம்.  ரிலீஸ் ஆகாம மாட்டிகிட்டு முழிக்கிது.  தாமதமாகும் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படலாம், காரணம் திருட்டு சி.டி.க்கள்.  இந்த சமயத்தில் படத்தின் நாயகன் ஒரு வீடியோவில் தோன்றி, படம் ரிலீஸ் ஆகாத பிரச்சினையால் தங்கள் பட யூனிட்டே ஆடிப் போயிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.  இதில நிறையவே ஆங்கில வார்த்தைகளை கலந்துகட்டி பேசியிருக்கார், காரணம் சரியான தமிழ் வார்த்தைகள் அவருக்கு கிடைக்கல போல!!  [உதாரணத்துக்கு: சின்ன request, சில Unidentified persons-(தயவு பண்ணி இதுக்கு தமிழில் என்னன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க!!), morally also it is wrong, one or two days ]  இந்தச் செய்தியை சொல்லும் போது கைகட்டி இருக்கும் அவரது பவ்யம், ஆங்காங்கே அவரது குரல் உடைவது, பரிதாபமாக முகத்தை வைத்திருப்பது........  எல்லாத்துக்கும் மேல தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக்கத்தான் ஆத்தா கொட நாட்டில் அடிக்கடி போய் கேம்ப் போட்டு உழைக்கிறாங்கன்னு சொன்னது......  [சிரிக்காதீங்க மக்கள்ஸ்!!] இது எல்லாம்  எதற்காக ?  சந்திக்கவே மறுத்து திருப்பியனுப்பிய ஆத்தாவின் காதுகளுக்கு இது குறித்த செய்தி போனால் கொஞ்சம் ஈவு இரக்கம் காண்பிக்க மாட்டாரா என்ற ஏக்கம் தான்.  ஆனால் இதையெல்லாம் பார்த்து நம்மால் தான் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.  காரணம் படங்களில் அவர் பேசிய பொறி பறக்கும் பன்ச் டயலாக்குகள்.  உதாரணத்துக்கு சில......


உன்கிட்ட ஆளு,  அதிகாரம்,பதவின்னு சகலமும் இருக்கலாம்.......என்கிட்ட நேர்மை இருக்கு. நெஞ்சில தில் இருக்கு..........எல்லாத்துக்கும் மேல எனக்கு ஒண்ணுன்னா உயிரைக் குடுக்க ஒரு [இளிச்சவா] கூட்டமே இருக்கு!! மோதனும்னு முடிவு பண்ணினதுக்கப்புறம் மந்திரின்னும் பாக்கமாட்டேன், மன்னருன்னும் பாக்கமாட்டேன்.........  மோதிப் பாத்துடுவேன்..........   [இந்த சமயத்துக்கு இது ஏடா கூடமா இருக்குமே]

நீ அடிச்சா அடி விழும்...........  நான் அடிச்சா இடி விழும்............

கில்லிடா....................


அணைய கட்டி தடுக்கறதுக்கு நான் ஒன்னும் கால்வாய் இல்லடா..........காட்டாறு.........

உனக்கெல்லாம் போலீஸ்காரன் பத்தாதுடா......... வேற.........    வேற.........   வேற.........    வேட்டைக்காரன் தாண்டா வேணும்.......

நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்டா.............


ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்..............

நீ சொல்லுவ..........  நான் செய்வேன்.......... நான் அடுத்தவன் பிரச்சினைய தொடறது கூட இல்ல...........  ஆனா ஆட்டம், கோதா, போட்டி, பந்தயம்னு வந்துட்டா சும்மா சொல்லி அடிப்பேன்..........கில்லி.......கில்லி மாதிரி.......  முடிவு பண்ணி இறங்கிட்டேன்........ஃபீல் பண்ண மாட்டேன் back-கும் அடிக்க மாட்டேன்........ once பிக் அப் ஆனா......... ஆனது தான் போய்கிட்டே இருப்பேன்...........  ஜாக்கிரதை.........

பூமிக்குள்ள போனவன் புழுதிக்குள்ள இருந்து வர்றானேன்னு  பாக்கிறியா?!  புயல்........  எப்பவுமே புழுதியோடத்தாண்டா வரும். டிஷ்யூம்..........!! [ஒரு அடியாள் பறந்து போய் விழுகிறார்].

ஆம்பிளைன்னா அர்த்தம் தெரியுமாடா உனக்கு ?  இப்படி அஞ்சடி கேப்ல ஆறடி அல்லக்கைங்களோட வர்றது இல்லடா......... ஹூம் டிஷ்யூம்..........!!  [ஒரு தடியன் பத்தடி பறந்து போய் விழுகிறார்...!!!] எங்கயும் எப்போதும் எது நடந்தாலும் கண்ணுல நெருப்போட, கையில முறுக்கோட, நெஞ்சில தில்லோட ஒத்தையா நின்னே சமாளிக்கிறான் பாரு......... [கையால் தன்னையே காட்டியபடி.........]  அவன் ஆம்பிளை..........!!




ஏய்.........  நம்ம பேச்சு மட்டும்தான்டி சைலண்டா[?!] இருக்கும் ...  ஆனா அடி........சர்ர்ர்ர்ர்ர்ர்ர  வெடி.........  [அதுசரி சைலண்டா எப்படி பேசுறது.......  யாராச்சும் சொல்லுங்கப்பா!!]

டேய்.......  நாங்க அப்பன் பேச்சை கேக்க மாட்டோம்........ அது வய்ய்ய்யசு.......... ஆனா அதே அப்பனுக்கு எதாச்சும் பிரச்சினைன்னு வய்யி......எவன் பேச்சையும் கேக்க மாட்டோம்.......டிஷ்யூம்..........!!  [தீர்ந்தான் இன்னொருத்தன்!!].  பிரிச்சு மேஞ்சிடுவோம்.......... [நிஜத்துல அப்பன் பேச்சை கேக்காம இருந்திருந்தா தான் பிரச்சினையே இல்லியே!!]



நான் யார் தெரியுமா ?

வில்லன்: நீ ACP [SAC ?!] யோட புள்ளையா ?   

புள்ளை  இல்லடா.......  புலி.......புலி.......புலி.......

காடுன்னா நான் சிங்கம்........  வானம்னா இடி.........  கடல்னா சுறா.........  காத்துன்னா....... சூசூசூசூசூசூசூசூறாவளி......... சும்மா.........சுத்தீதீதீ .......சுத்தி ...அடிக்கும்.......!!


தொடமாட்டேன்.......தொட்டா விட மாட்டேன்........  உண்டு.....உண்டு.....உண்டு..... இல்லைன்னு ஆக்கிடுவேன்.......!!

இப்படியெல்லாம் பேசிய பஞ்ச் வீரன், பஞ்ச வீரனாகலாமா?  சென்னை ரவுடிங்க அத்தனை பேரையும் ஒத்த கையாள ஒழித்துக் கட்டி தங்கையை வாழ வைத்து, காதலியின் உள்ளத்தையும் கவர்ந்த கள்வன் இன்னைக்கு தப்பு பண்ணிட்டு டீச்சர் முன்னாடி பேந்த பேந்த  முழிச்சிகிட்டு நிற்கும் பையனைப் போல  அப்பாவியா மூஞ்சிய வச்சிக்கிட்டு நிற்கலாமா?  எனக்கென்னவோ இராதா மோகனின் "பயணம்" படத்தில் ப்ரித்விராஜை பார்த்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருப்பவர் கலாய்க்கும் காட்சிகள் தான் மனக்கண் முன்னே ஓடுகிறது.  நிழல் வேறு........நிஜம் வேறு!!  தலைவா...........  எங்கே போச்சு இத்தனை வீர வசனங்களும்?  

ஒன்று மட்டும் நிச்சயம், படம் ரிலீஸ் ஆவது நிரந்தரமாக தடுக்கப் படப் போவதில்லை, "என்னை பகைத்துக்கொண்டால் என்ன ஆகும் தெரியுமா?" என்ற பாடம் சிலருக்கு கற்ப்பிக்கப் படும், அவர்கள் கற்றவுடன் படம் ரிலீசாகும், அவ்வளவுதான்!!  

ஆனா, இந்த நேரத்துக்கு ஒரு வசனம் மிகப் பொருத்தமா இருக்கும்:

"ஆத்தா மனசுல அத இதன்னு நினைக்க வச்சு....... நாளைக்கு என்ன ஏமாத்துன..........  ஆத்தா உனக்கு ஆப்பு வச்சிடுவேன்!!"

"ஆத்தா...........  ஆப்பு வைக்குதா..??!!"

எந்த ஆத்தா? இந்த காணொளியைப் பாருங்க!!



17 comments:

  1. மிக மிக நன்றாக எழுதுகிறீர்கள்! தமாசாவும் கீது நைனா?

    ReplyDelete
  2. மாமா டவுசர் கிழிஞ்சுச்சே......!

    ReplyDelete
  3. வடிவேலுகூட இந்தளவுக்கு இறங்கவில்லையே...அதை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. @ செங்கோவி

      வடிவேலு ஒரு ஆச்சரியம் தான்!! வேறோருத்தனா இருந்திருந்தா நேரா பொய் சந்திச்சு, கையில கால்ல விழுந்து திரும்ப வியாபாரத்தை ஆரம்பிச்சிருப்பான், ஆனால் இவர் அதைச் செய்யவில்லை. அதே சமயம், இவர் விஜயகாந்தை தக்கோ தாக்குன்னு தாக்கினாலும் ஒருபோதும் ஆத்தாவைப் பத்தி மட்டும் மூச்.......... விடவில்லை!!

      Delete
  4. sema sema. super pathivu sir...

    ReplyDelete
    Replies
    1. ஆதரவுக்கு நன்றி மகேஷ்!!

      Delete
  5. சுவாரஸ்யம்.
    Nice.

    ReplyDelete
  6. பாடாவதி என்று இன்னொரு பெங்களூருக்காரர் அடிக்கடி சொல்லுவதை நான் கேட்டிருக்கிறேன்.
    பாடாவதி -ன்னா என்ன meaning பாஸ்?

    ReplyDelete
    Replies
    1. பாடாவதி என்ற வார்த்தை தமிழ் வார இதழ்கள், நாளிதழ்களில் நான் அவ்வப்போது படித்த வார்த்தை. அதன் உண்மையான அர்த்தம் எனக்கும் தெரியாது, ஆனாலும் அதைப் பயன்படுத்தும் சூழலை வைத்து புரிந்து கொள்ளலாம். உதாரணத்துக்கு ஸ்டார்ட்டே ஆவது ஸ்கூட்டரை பாடாவதி ஸ்கூட்டர் எனலாம். etc .,

      Delete
  7. தன்மானம் அப்ப்டின்ன கிலோ எவ்வளவுன்னு கேப்பா போல நம்ம கில்லி, இளைய தளபதி.

    ReplyDelete
    Replies
    1. தன்மானம் எனபதை விடல் 50 கோடி நூறு கோடி என்று போட்ட முதலுக்கு மோசமாகிவிடும்!! யாராக இருந்தாலும் இந்தப் போக்கைத் தான் கடைபிடிக்க வேண்டியிருக்கும். நம்ம சூப்பர் ஸ்டார் முன்னாடி ஆத்தா வந்தா தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாதுன்னு சொன்னவர்தானே. பின்னாடி அவரது போக்கை மாற்றிக் கொன்று ஆத்தா புகழ் பாட ஆரம்பித்து விட்டாரே!!

      Delete
  8. குடும்பத்தோட படிச்சு உருண்டு உருண்டு சிரிச்சோம்..!!

    ReplyDelete
    Replies
    1. @மலரின் நினைவுகள்

      மிகவும் மகிழ்ச்சி நண்பரே, தொடர்ந்து வருகை புரிந்து ஆதரவு தாருங்கள்!!

      Delete
  9. அது வந்துங்ண்ணா...சொல்றதுக்கு ஒன்னுமில்லீங்ணா !

    ReplyDelete
  10. [[ஒன்று மட்டும் நிச்சயம், படம் ரிலீஸ் ஆவது நிரந்தரமாக தடுக்கப் படப் போவதில்லை, "என்னை பகைத்துக்கொண்டால் என்ன ஆகும் தெரியுமா?" என்ற பாடம் சிலருக்கு கற்ப்பிக்கப் படும், அவர்கள் கற்றவுடன் படம் ரிலீசாகும், அவ்வளவுதான்!!]]

    என்ன இதுல மாட்டிக்கிட்டது நம்ம சொந்தக்காரன்! பாவம் பாஸ் நம்பள்கி நிம்பள்கி!

    பாடாவதி - இது சென்னைத் தமிழ் சௌகார்பேட் தமிழ். வட சென்னை தமிழ் என்று சொல்லலாம். இப்படி சொன்னா புரியும்..

    எது? அந்தப் பொண்ணா? அது பேஜாரு!அது ஒரு பாடாவதி! அது ஒரு திராபை
    எது அந்த தியேட்டரா? அது ஒரு குப்பை; அது டப்பா தியேட்டர்; அது ஒரு பாடாவதி தியேட்டர்.

    இது என்னுடைய (11-திருவள்ளுவர்) கண்டுபிடிப்பு! My Brainchild.

    பலானா பலான விஷயத்திற்கு ஒரு யுவதியை...பாடும் யுவதியை....அதாவது பாட்டு-ம் பாடக் கூடியவள் என்று நினைத்து கூட்டிக்கொண்டு போய்..இரண்டுமே சரியில்லை என்றால்...பாடும் யுவதி..பாடாவாதி-யாகி விடுவாள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நம்பள்கி டாக்டர்.
      உங்கள் comment-ஐ வாசித்தால், சென்னைக்கு போய்ட்டு வந்த ஒரு impact.

      Delete