வணக்கம் மக்கள்ஸ்!!
நாட்டில் சில Mr .கிளீன் எனப்படும் "ரொம்ப நல்லவங்க" இருக்காங்க. ஊர் உலகத்துல ஆயிரத்தெட்டு பிரச்சினை இருந்தாலும், இறைநம்பிக்கை என்ற ஒன்று மக்கள் மத்தியில் இருப்பது இவர்கள் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கும், அதில் ஓட்டைகள் உள்ளதாகச் சொல்லி அவற்றை எண்ணுவதையே தொடர்ந்து குல தொழிலாக செய்து வருவார்கள். உதாரணத்துக்கு உலகில் பல மத நம்பிக்கைகள் இருப்பதால் தான் சண்டை சச்சரவுகள் வருகிறது அது இல்லாவிட்டால் எல்லோரும் அண்ணன் தம்பிகளாகி ஒற்றுமையாகி விடுவார்கள் ஆகையால் இறைநம்பிக்கை இருக்கக் கூடாது என்பது இவர்களது இவர்களுடைய நோபல் பரிசுக்கான கண்டுபிடிப்பு. அப்படியே ஒருவேளை இறை நம்பிக்கை இருந்தாலும், அதைப்பற்றி வெளியில் எந்த விதத்திலும் வாயைத் திறக்கக் கூடாது, நாலு சுவத்துக்குள்ள வச்சு கமுக்கமா முடிச்சிடனும்.
இந்த மாதிரி கூறுகெட்ட குக்கர்கள் நாத்தீகர்களா என்றால் அதுவும் இல்லை. இறைவன் இருப்பதையும் ஒப்புக் கொள்வார்கள், ஆனால் இறைவனைப் பற்றி எதுவும் பேசக்கூடாது. ஏன் பேசக்கூடாது? அப்படி பேசினால் உன் கடவுள், என் கடவுள் என சண்டை வந்துவிடும். ஆகையால் பேசக்கூடாது. சரி, எதைப் பத்திதான் பேசுவது? சூதாடி கிரிக்கெட் ஆட்டத்தைப் பத்தியும், எந்த நடிகை யார் கூட இப்போ இருக்கிறாள் என்பது பத்தியும் எவ்வளவு வேண்டுமானாலும் பொதுவில் பேசி மகிழலாம். இந்த மாதிரி முற்போக்கு சிந்தனையாளர்கள்[?] இப்போ சந்துக்கு சந்து பெருகி சமுதாயத்தைக் காக்கக் கிளம்பிவிட்டார்கள், என்பது தான் துரதிர்ஷ்டம்.
கடவுளைப் பற்றி யாரும் பேசக் கூடாது. அப்போ எனக்கு அவரைப் பத்தி தெரிஞ்சுக்க என்னதான் செய்வது? இறைவனை அடைய யார் உதவியும் உனக்குத் தேவையில்லை. ஞானம் எல்லாம் உனக்குள்ளேயே இருக்கிறது. உள்ளேயே தேடு. ரூம் போட்டு யோசி, சீக்கிறமே ஞானியாகி விடுவாய். எந்த புத்தகத்தையோ மனிதரையோ பின்பற்ற வேண்டியதில்லை. [அதுசரி, அதுதான் அவனுக்குள்ளேயே எல்லாமே இருக்கே, அப்புறம் உங்க பிரச்சாரம் எதுக்கு? ]
அறிவுஜீவிகளே, யார் அறிவுரையும் கேட்க கூடாது என்பதே உங்கள் கொள்கை, ஆனால் உங்களின் இந்த அறிவுரையை எல்லோரும் ஏற்று நடக்க வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள், இது முரண் அல்லவா? உங்க அறிவுரைப் படி பார்த்தால், முதலில் நீங்க சொல்வதைத்தான் நிராகரிக்க வேண்டும்!! யார் பேச்சையும் கேட்க வேண்டியதில்லை என்பதைக் கூட இன்னொருத்தர் எடுத்துச் சொல்லித் தானே புரிய வைக்க வேண்டியிருக்கிறது? ஆக, அடிப்படையிலேயே இது கூமுட்டைத் தனமான வாதம்.
இந்த மாதிரி அரைவேக்காடுகள் பிரசாரத்தை கேட்டால் புதைகுழியில் விழுவது தவிர்க்க இயலாததாகிவிடும். நமக்கு வழிகாட்டி பகவத் கீதை. அதில் பகவான் என்ன சொல்கிறார்? குருவிடம் சரணடைந்து, பணிவிடை செய்து, கேள்விகள் கேட்டு கீதையின் ஞானத்தை கற்றுக் கொள்ளச் சொல்கிறார்.
அதுமட்டுமல்ல, கீதையைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்பவரே தனக்கு மிகவும் பிரியமானவர் என்றும், அவரை விட பிரியமானவர் வேறொவர் ஒருபோதும் இல்லை என்றும் பகவான் கூடுகிறார்.
உனக்குள் எல்லாம் இருக்கிறது, ஆனால் அதை நீ உணர ஒரு ஆசானின் உதவி நிச்சயம் தேவை. நாம் உண்மையான குருவைப் பின்பற்ற வேண்டும், ஏன்? பகவான் கீதையில் சொல்வதால். அதைப் போலவே இறைவனைப் பற்றி மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும், ஏன்? நிறைய சுவையான உணவு கிடைத்தால் நாம் மட்டுமா உன்ன வேண்டும்? பசியோடு இருக்கும் பிறருக்கும் கொடுக்க வேண்டாமா? எல்லோருக்கும் தெரியும் என்றால் ஏன் பகவான் கீதையை எடுத்துச் சொல்பவனே எனக்குப் பிரியமானவன் என்று சொல்ல வேண்டும்? நாம் இறைவனைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்கிறோம், ஏனெனில் அதுவே இறைவனுக்கு பிரியமான செயல்.
மேலும் சொல்வோம்..................
நாட்டில் சில Mr .கிளீன் எனப்படும் "ரொம்ப நல்லவங்க" இருக்காங்க. ஊர் உலகத்துல ஆயிரத்தெட்டு பிரச்சினை இருந்தாலும், இறைநம்பிக்கை என்ற ஒன்று மக்கள் மத்தியில் இருப்பது இவர்கள் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கும், அதில் ஓட்டைகள் உள்ளதாகச் சொல்லி அவற்றை எண்ணுவதையே தொடர்ந்து குல தொழிலாக செய்து வருவார்கள். உதாரணத்துக்கு உலகில் பல மத நம்பிக்கைகள் இருப்பதால் தான் சண்டை சச்சரவுகள் வருகிறது அது இல்லாவிட்டால் எல்லோரும் அண்ணன் தம்பிகளாகி ஒற்றுமையாகி விடுவார்கள் ஆகையால் இறைநம்பிக்கை இருக்கக் கூடாது என்பது இவர்களது இவர்களுடைய நோபல் பரிசுக்கான கண்டுபிடிப்பு. அப்படியே ஒருவேளை இறை நம்பிக்கை இருந்தாலும், அதைப்பற்றி வெளியில் எந்த விதத்திலும் வாயைத் திறக்கக் கூடாது, நாலு சுவத்துக்குள்ள வச்சு கமுக்கமா முடிச்சிடனும்.
இந்த மாதிரி கூறுகெட்ட குக்கர்கள் நாத்தீகர்களா என்றால் அதுவும் இல்லை. இறைவன் இருப்பதையும் ஒப்புக் கொள்வார்கள், ஆனால் இறைவனைப் பற்றி எதுவும் பேசக்கூடாது. ஏன் பேசக்கூடாது? அப்படி பேசினால் உன் கடவுள், என் கடவுள் என சண்டை வந்துவிடும். ஆகையால் பேசக்கூடாது. சரி, எதைப் பத்திதான் பேசுவது? சூதாடி கிரிக்கெட் ஆட்டத்தைப் பத்தியும், எந்த நடிகை யார் கூட இப்போ இருக்கிறாள் என்பது பத்தியும் எவ்வளவு வேண்டுமானாலும் பொதுவில் பேசி மகிழலாம். இந்த மாதிரி முற்போக்கு சிந்தனையாளர்கள்[?] இப்போ சந்துக்கு சந்து பெருகி சமுதாயத்தைக் காக்கக் கிளம்பிவிட்டார்கள், என்பது தான் துரதிர்ஷ்டம்.
கடவுளைப் பற்றி யாரும் பேசக் கூடாது. அப்போ எனக்கு அவரைப் பத்தி தெரிஞ்சுக்க என்னதான் செய்வது? இறைவனை அடைய யார் உதவியும் உனக்குத் தேவையில்லை. ஞானம் எல்லாம் உனக்குள்ளேயே இருக்கிறது. உள்ளேயே தேடு. ரூம் போட்டு யோசி, சீக்கிறமே ஞானியாகி விடுவாய். எந்த புத்தகத்தையோ மனிதரையோ பின்பற்ற வேண்டியதில்லை. [அதுசரி, அதுதான் அவனுக்குள்ளேயே எல்லாமே இருக்கே, அப்புறம் உங்க பிரச்சாரம் எதுக்கு? ]
அறிவுஜீவிகளே, யார் அறிவுரையும் கேட்க கூடாது என்பதே உங்கள் கொள்கை, ஆனால் உங்களின் இந்த அறிவுரையை எல்லோரும் ஏற்று நடக்க வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள், இது முரண் அல்லவா? உங்க அறிவுரைப் படி பார்த்தால், முதலில் நீங்க சொல்வதைத்தான் நிராகரிக்க வேண்டும்!! யார் பேச்சையும் கேட்க வேண்டியதில்லை என்பதைக் கூட இன்னொருத்தர் எடுத்துச் சொல்லித் தானே புரிய வைக்க வேண்டியிருக்கிறது? ஆக, அடிப்படையிலேயே இது கூமுட்டைத் தனமான வாதம்.
இந்த மாதிரி அரைவேக்காடுகள் பிரசாரத்தை கேட்டால் புதைகுழியில் விழுவது தவிர்க்க இயலாததாகிவிடும். நமக்கு வழிகாட்டி பகவத் கீதை. அதில் பகவான் என்ன சொல்கிறார்? குருவிடம் சரணடைந்து, பணிவிடை செய்து, கேள்விகள் கேட்டு கீதையின் ஞானத்தை கற்றுக் கொள்ளச் சொல்கிறார்.
tad viddhi pranipatena
pariprasnena sevaya
upadeksyanti te jnanam
jnaninas tattva-darsinah
[B.G: 4:34]
pariprasnena sevaya
upadeksyanti te jnanam
jnaninas tattva-darsinah
[B.G: 4:34]
அதுமட்டுமல்ல, கீதையைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்பவரே தனக்கு மிகவும் பிரியமானவர் என்றும், அவரை விட பிரியமானவர் வேறொவர் ஒருபோதும் இல்லை என்றும் பகவான் கூடுகிறார்.
na ca tasman manusyesu
kascin me priya-krttamah
bhavita na ca me tasmad
anyah priyataro bhuvi [B.G: 18:69]
kascin me priya-krttamah
bhavita na ca me tasmad
anyah priyataro bhuvi [B.G: 18:69]
உனக்குள் எல்லாம் இருக்கிறது, ஆனால் அதை நீ உணர ஒரு ஆசானின் உதவி நிச்சயம் தேவை. நாம் உண்மையான குருவைப் பின்பற்ற வேண்டும், ஏன்? பகவான் கீதையில் சொல்வதால். அதைப் போலவே இறைவனைப் பற்றி மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும், ஏன்? நிறைய சுவையான உணவு கிடைத்தால் நாம் மட்டுமா உன்ன வேண்டும்? பசியோடு இருக்கும் பிறருக்கும் கொடுக்க வேண்டாமா? எல்லோருக்கும் தெரியும் என்றால் ஏன் பகவான் கீதையை எடுத்துச் சொல்பவனே எனக்குப் பிரியமானவன் என்று சொல்ல வேண்டும்? நாம் இறைவனைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்கிறோம், ஏனெனில் அதுவே இறைவனுக்கு பிரியமான செயல்.
மேலும் சொல்வோம்..................
//உனக்குள் எல்லாம் இருக்கிறது, ஆனால் அதை நீ உணர ஒரு ஆசானின் உதவி நிச்சயம் தேவை.// அந்த ஆசானை கண்டுபிடிபதுதான் மைக் கடினம்
ReplyDelete***உனக்குள் எல்லாம் இருக்கிறது, ஆனால் அதை நீ உணர ஒரு ஆசானின் உதவி நிச்சயம் தேவை. ***
ReplyDeleteஉங்களோட ஒரே காமெடிதான் போங்கோ! நீங்க சொல்ற கீதை உபச்சாரம் பண்ணுற பகவானுக்கோ இல்லை பண்டாரத்துக்கோ எவன் ஆசான்? அவன் மட்டும் ஆசான் இல்லாமலே கிழி கிழினு கிழிக்கிறான்? எதைப்படி படிச்சு இவன் கீதை எழுதினான்? அதை உபதேசம் பண்ணிண்டு அலைகிறான்? யோசிக்கவே மாட்டேளா? :)))
ரைட்டு... மேலும் சொல்லுங்கோ...
ReplyDeleteபாகவதரே,
ReplyDeleteநாத்திகரெல்லாம் நீர் சொன்னாப்போல கூறுகெட்ட குக்கர்களாகவே இருந்துட்டுப்போறோம், நீர் கூறுள்ள குக்கர் எனவே ,அடியேனுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி, ,
// நமக்கு வழிகாட்டி பகவத் கீதை. //
இந்த" நமக்கு" என்று சொல்லப்படுவதில் குறிப்பிடப்படும் மக்கள் யார்? வடகலை அய்யங்கரா, தென்கலை அய்யங்காரா, மத்வா, ஶ்ரீ வைஷ்ணவா, ஆதி சைவமா, இல்லை நூல் கயிறு போட்டவங்களா, போடாதவங்களா? மாமிசம் சாப்பிடுறவங்களா, சாப்பிடாதவங்களா?
யாரை எல்லாம் நம்மவானு சேர்த்துக்கிட்டு சொல்லுறீர்னு விளக்கினால் தன்யனாவேன் :-))
அப்புறம் ஒரு ஆன்மீக "ஸ்குருவை" சரணடைந்து ,கீதா உபதேசேம் பெற்றுவிட்டால் சிரிரெங்கம் கோயில் உள்ள போயி மணியாட்ட முடியுமா?
# உம்ம காம பக்தி கலாச்சேபங்களை நாத்திகர்கள் போட்டு தாக்குவதால் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளீர் எனத்தெரிகிறது,எனவே உம்ம நொந்த மனசை இப்படிலாம் பதிவுப்போட்டு தேத்திக்கிறேல்,நடத்தும் நடத்தும் :-))
சுவர் முழுக்க சாமிப்படங்களை ஒட்டிவைத்துக்கொண்டு பயபக்தியோடு வசதியாக வாழ்ந்துவிட்டால் இங்கு பிரச்சனைகள் இல்லை....
ReplyDeleteஇந்த நான்கு சுவற்றையும் தாண்டி இந்த சமூகத்தை படித்துக்கொண்டிருப்பதால்தான் ஆன்மீகத்தை அல்ல ஆன்மீக பைத்தியங்களை வெறியர்களை வெறுக்கவேண்டியிருக்கிறது...
கடவுள் என்பது தமக்கும் மேலே இருக்கும் ஒரு சக்தி அவ்வளவுதான்...
அதற்காக அதன் எந்தவடிவத்தையும் எந்த வழிமுறைகளையும் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை...!
@ கவிதை வீதி... // சௌந்தர் //
Delete\\சுவர் முழுக்க சாமிப்படங்களை ஒட்டிவைத்துக்கொண்டு பயபக்தியோடு வசதியாக வாழ்ந்துவிட்டால் இங்கு பிரச்சனைகள் இல்லை....\\ சுவர் முழுக்க சாமி படத்தை ஓட்டுபவந்தான் பக்தன், இது தான் உங்க விளக்கமா? நாம் மட்டும் வசதியாக வாழ்ந்தால் போதும் என்று நான் சொன்னேனா?
\\இந்த நான்கு சுவற்றையும் தாண்டி இந்த சமூகத்தை படித்துக்கொண்டிருப்பதால்தான் ஆன்மீகத்தை அல்ல ஆன்மீக பைத்தியங்களை வெறியர்களை வெறுக்கவேண்டியிருக்கிறது...\\ மற்றவர்களுக்கு தொண்டு புரிவதற்காகவே உங்கள் வருமானம் முழுவதையும் செலவழிக்கும் ரொம்ப நல்லவரா நீங்கள்? பக்தி செய்பவர்கள் தவறு செய்கிறார்கள் என்றால், மற்றவர்களும் கூட தவறு செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்? தவறு செய்பவர்கள் எல்ல இடங்களிலும் இருக்கவே செய்கிறார்கள், யாரும் விதிவிலக்கல்ல.
\\கடவுள் என்பது தமக்கும் மேலே இருக்கும் ஒரு சக்தி அவ்வளவுதான்...
அதற்காக அதன் எந்தவடிவத்தையும் எந்த வழிமுறைகளையும் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை...!\\ அது உங்க சுதந்திரம்,அதே சமயம் நீங்க நினைப்பது மட்டுமே சரியான வழி என்றோ, அதை ஏற்காதவர்கள் எல்லாம் குற்றவாளிகள் என்றோ பொய்ப் பிரச்சாரம் செய்வது சரியல்ல.
தமிழ்மணம் 4 வது ஓட்டு...
ReplyDeleteஎந்தமாதிரியான கருத்துக்கும் நான் மைனஸ் ஓட்டு போடுவதில்லை....
அன்பே சிவம்...
முதல் கணினி அனுபவம் தொடர் பதிவை நீங்களும் தொடர என் பதிவில் கேட்டிருந்தேன்.. பார்த்தீர்களா? விரும்பினால் நேரம் கிடைக்கும் போது சுவாரஸ்யமாக பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி! ( என்னுடைய கமெண்ட் பாக்ஸ் இத்தனை நாட்களாக எதோ பிரச்சினையால் வேலை செய்யவில்லை அதனால்தான் தாமதம்..! இப்போது சரி செய்து விட்டேன்)
ReplyDeleteமாப்ளே தாசு,
ReplyDeleteவணக்கம், மீண்டும் முதலில் இருந்தா ஹி ஹி.
உமது இறை நம்பிக்கை என்பது மத(புத்தக்) நம்பிக்கை மட்டுமே. அதிலும் கீதை,பாகவதம் உள்ளிட்ட சில வைணவ புத்த்கங்களின் இஸ்கான் சார்பு விளக்கம் மட்டுமே.
இது பற்றி எந்த பிரச்சாரம் செய்யும். ஆனாலும் எதிர் விம்ர்சனங்களையும் சமாளிக்க வேண்டும்.
1. உம்ம கீதை 4.34 ல் பகவான் கிஷ்னன் என்ன சொல்ரார்?
ஒரு ஆன்மீக குருவுக்கு கீழ்ப்படிந்து பணிவிடை செய்து ஞானம் பெறச் சொல்கிறார்.அந்த குருவானவர் தன்னை உணர்ந்த புனிதன்,இறை வெளிப்பாடு பெற்றவர் ஞானத்தை அளிக்கிறார் என்கிறார்.
இப்படிப் பட்ட உமது ஆன்மீக குரு யார் பிரபுபாதாவா? என நானும் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.பதில் சொல்லவே மாட்டேன் என்கிறார்.
2.அப்புறம் 18:69ல் கீதையை பிரச்சாரம் பண்ணுபவனை ரொம்ப கிஷ்னன் லவ்
பண்ராரு.
ஆகவே கிஷ்னனால் லவ் செய்யப்பட கீதையை கெட்டியாப் புடிச்சுக்கோ என்கிறீர் சரியா?
கீதை[இஸ்கான் விளக்கம்],கிஷ்னன் நம்பிக்கையை பொதுவாக இறை நம்பிக்கை என ஏன் சொல்ல வேண்டும்?
கீதைக்கு விளக்கம் சொல்லும் கிளுகிளு கீதானந்த ஸ்வாமிகள் யாரு என்பதை முதலில்சொல்லும்!!
நன்றி!!
@ வருண்
Delete@ வவ்வால்
@ சார்வாகன்
வருகைக்கு நன்றி நாத்திக நண்பர்களே. நாம் பலமுறை நாத்தீகர்களின் முட்டாள் தனத்தை இங்கே தோலுரித்துக் காட்டியுள்ளோம், அப்போதெல்லாம் நீங்கள் வந்து நாத்தீகர்கள் என்று பொதுவாகச் சொல்லக் கூடாது, தி.க. நாத்தீகர்கள் என்று சொல்லிவிட்டுப் போ, நாங்கள் அந்த மாதிரி முட்டாள் நாத்தீகர்கள் இல்லை, நாங்கள் எல்லாம் ஒரிஜினல் அக்மார்க் நாத்தீகர்கள் என்று உங்கள் தரத்தை பறைச்சற்றிச் சென்றிருக்கிறீர்கள். உங்க கிட்ட நான் பலமுறை கேட்டுப் பார்த்திட்டேன், அப்போ உங்க அக்மார்க் நாத்தீகக் கொள்கை விளக்கம் தான் என்னன்னு, ஆனா உங்க பதிவுகளிலோ, பதில்களிலோ அதைப் பத்தி நீங்க ஒரு போதும் வாயைத் திறந்ததேயில்லை. ஆனால் நாதீகத்தின் டவுசர் கிழிக்கப் படும்போது, அந்த டவுசர் எங்களது இல்லை என்பதை மட்டும் கூவிக் கொண்டிருக்கிறீர்கள்.
முதலில் உங்களது கொள்கையைப் பட்டியலிடுங்கள் அங்கேயே நாறிப் போகும் உங்க யோக்யதை, உங்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஓடும். அதன் பின்னர் என்னிடம் வந்து உங்கள் கேள்விகளை அடுக்கலாம். நீ வசிக்கும் வீடு கூரை வீடு மழையில் ஒழுகும் என்று பிளாட்பாரத்தில் வானமே கூரை என்று படுத்திருப்பவன் கொக்கரிக்கக் கூடாது.
அடுத்தவனிடம் நீங்கள் எதை எதிர் பார்க்கிறீர்களோ, அதை முதலில் செய்து காண்பிக்க வேண்டும். நான் பின்பற்றும் புத்தகம், நபர், கொள்கை என்று கேள்வி மேல் கேள்வியை அடுக்கும், உங்கள் கொள்கை என்ன, நீங்கள் யாரைப் பின்பற்றுகிறீர்கள் என்பது பற்றி முதலில் எடுத்து வையுங்கள், மற்றதை பின்னர் பார்ப்போம்.
Deleteமாப்ளே தாசு,
உமக்கு மட்டும் அல்ல எந்த ஆன்மீக பிரச்சாரகர்களுக்கும் கேள்வி கேட்டால் பிடிக்காது.
நாத்திகம் என்னும் இறைமறுப்பு என்பது சான்றுகளின் அடிப்டையில் மட்டுமே ஒரு விடயத்தை அணுகுதல்,ஏற்றல்.
யார் சொன்னாலும் அது உண்மையாக இருக்குமா என சரி பார்த்தல். ஆகவே இறை மறுப்பாளர்கள் யாரையும் அடி பணிந்து வழிகாட்டியாக ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.
படியுங்கள்!!
ஆத்திகம்,நாத்திகம் ஒரு எளிய விளக்கம்
http://aatralarasau.blogspot.com/2012/11/blog-post_21.html
உமது கேள்விகளுக்கு பெரும்பாலும் பதில் அளித்தே வந்து இருக்கிறோம்.அப்படி பதில் அளிக்காத கேள்வி இருந்தால் கொடும் ,பதில் அளிக்கிறோம்.
பெரியார் சொன்னார்,டார்வின் சொன்னார் என்று கீதை 4.34 போல் அடிபணிந்து பின்பற்றுவது கிடையாது.
சான்றுகளின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்த்தே கருத்துகளை ஏற்கிறோம்.
இப்பதிவில் ஆன்மீக குருவைப் பணிந்து, ஞானம் பெறு என்கிறீர். அப்படிப்பட்டவர் யார் என் கேள்வி கேட்டால், வேறு ஏதோ மழுப்புகிறீர்.
இப்படி ஆன்மீக குரு என தேடிப்போய்த்தான் பிரேமானந்தா,நித்தி... வலையில் வீழ்ந்தோர் அனேகம்.
பகவத் கீதையிலும் இக்காலத்திற்கு ஒவ்வாத விடயம் உண்டு. கீதை 9.32 ல்
கிருஷ்னன் சொல்ரார்.
பாவப்பட்ட யோனியில் [ papa-yonayah] பிறந்த சத்திரிய ,வைசிய,சூத்திரன் கூட எனது அருளைப் பெற முடியும் என்கிறார். அப்போது பிறப்பின் அடிப்படையில் சாதியை கீதை வழிமொழிகிறது !!! இதை ஏற்கிறீரா??
mam hi partha vyapasritya
ye ’pi syuh papa-yonayah
''striyo'' ''vaishyas'' tatha ''shudras''
te ’pi yanti param gatim
Translation
O son of Pritha, those who take shelter in Me, though they be of lower birth—women, vaishyas [merchants] and shudras [workers]—can attain the supreme destination.
கிருஷ்னன் சொல்ரார்னு ,குரு சொல்வதை ஏற்று வாழ்வினைத் தொலைக்க வேண்டாம் எனவே வலியுறுத்துகிறோம்.
நன்றி!!!
மாமு நீங்க விடுற உடான்ஸ் எல்லாம் பதில்ன்னும் எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டதாகவும் நீங்களாவே சொல்லிக்க வேண்டியதுதான். முக்கா வாசி நேரம் நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னே புரிய மாட்டேங்குது, நீங்க எழுதும் தமிழ் தமிழ்நாட்டில் இருக்கிறவங்க எழுதுவது போலவே இல்லை. அது ஏதோ மாதிரி இருக்கு. இந்த லட்சணத்துல உங்களுக்கு முதுகு சொரிய நாலு செம்பு தூக்கிங்க, ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுரானுங்க.
Deleteநீங்களும் நேரம் கிடைக்கிறப்போ அவனுங்க முதுகை சொரியரீங்க. இது தான் நடக்குது.
பக்திமானுங்க என்னாத்த கிழிச்சானுங்கன்னு கேட்டீங்க, பத்து லட்சத்துக்கும் மேலான குழந்தைகளுக்கு உணவு குடுக்குறாங்கன்னு சொன்னேன், உங்களை ரெண்டு குழந்தைகளுக்கு ஸ்பான்சர் செய்யச் சொன்னேன், இந்தா வர்றேன்னு சொல்லி துண்டை உதறி தோளில் போட்டுக்கிட்டு சைக்கிளை மெதிச்ச ஆள் தான், அட்ரசே இல்லை. இப்பத்தான் வந்து வியாக்கியானம் குடுக்குறீங்க. ஐயோ.........ஐயோ............
அப்புறம் வர்ணம் பத்தி தனிப்பதிவு வரும். பொறும் ...........
\\நாத்திகம் என்னும் இறைமறுப்பு என்பது சான்றுகளின் அடிப்டையில் மட்டுமே ஒரு விடயத்தை அணுகுதல்,ஏற்றல்.
Deleteயார் சொன்னாலும் அது உண்மையாக இருக்குமா என சரி பார்த்தல். ஆகவே இறை மறுப்பாளர்கள் யாரையும் அடி பணிந்து வழிகாட்டியாக ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.\\ மாமு, உங்களுக்கு அறிவு இருக்கு, அதக்கு லிமிட்டும் இருக்கு. இன்னொருத்தர் தேவையில்லை என்கிறீர்கள், ஏன் ? அவர் தவறிழைக்கக் கூடும் என்பதால் தானே? அப்போ நீர் மட்டும் எப்போதும் 100% correct ஆகவே இருந்திருக்கிறீர்களா ஒருபோதும் சிந்தனைத் தவறானதில்லையா ? நீர் செய்வதிலும் கேணத்தனம் இருக்கக் கூடும் அல்லவா? இது எனக்கும் பொருந்தும். நானும் Mr .perfect கிடையாது. இப்படிப் பார்த்தால் எவனும் perfect கிடையாது. சரி பார்க்கும் யோக்யதை இது தான் 100% சரி என்னும் சொல்லும் யோக்யதை யாருக்கும் கிடையாது. ஆகையால் உங்கள் நாத்தீகம் என்பது நாத்தம் புடிச்சது என்பதை முதலில் நீங்கள் உணரனும்.
\\சான்றுகளின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்த்தே கருத்துகளை ஏற்கிறோம்.\\
முட்டாள் சீர்தூக்கிப் பார்த்து எதற்கு பிரயோஜனம்? எல்லோரும் முட்டாள்கள் தானே ?
\\இப்பதிவில் ஆன்மீக குருவைப் பணிந்து, ஞானம் பெறு என்கிறீர். அப்படிப்பட்டவர் யார் என் கேள்வி கேட்டால், வேறு ஏதோ மழுப்புகிறீர்.\\ இது கீதையை பின்பற்றுபவர்கள் செய்வது. உமக்கு குரு வேண்டுமானால் நீர் தான் தேடிக் கண்டு பிடித்து சேரனும். என்னை ஏன் கேட்கவேண்டும் ?
\\இப்படி ஆன்மீக குரு என தேடிப்போய்த்தான் பிரேமானந்தா,நித்தி... வலையில் வீழ்ந்தோர் அனேகம்.\\ யோக்கியமா உட்கார்ந்த நீங்க மட்டும் என்ன யோக்கியம் ? கருணாநிதி, ஜெயலலிதா, ப சிதம்பரம் சோனியா காந்தி அவ்வளவுதானே ?
வணக்கம் மாப்ளே,
Deleteவிவாதத்தை தொடர்வதற்கு நன்றிகள் பல.
1./ நீங்க எழுதும் தமிழ் தமிழ்நாட்டில் இருக்கிறவங்க எழுதுவது போலவே இல்லை. அது ஏதோ மாதிரி இருக்கு. இந்த லட்சணத்துல உங்களுக்கு முதுகு சொரிய நாலு செம்பு தூக்கிங்க, ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுரானுங்க.
நீங்களும் நேரம் கிடைக்கிறப்போ அவனுங்க முதுகை சொரியரீங்க. இது தான் நடக்குது.//
உங்களின் நகைச்சுவை உணர்வை பாராட்டுகிறேன்.
2./பக்திமானுங்க என்னாத்த கிழிச்சானுங்கன்னு கேட்டீங்க, பத்து லட்சத்துக்கும் மேலான குழந்தைகளுக்கு உணவு குடுக்குறாங்கன்னு சொன்னேன், உங்களை ரெண்டு குழந்தைகளுக்கு ஸ்பான்சர் செய்யச் சொன்னேன், இந்தா வர்றேன்னு சொல்லி துண்டை உதறி தோளில் போட்டுக்கிட்டு சைக்கிளை மெதிச்ச ஆள் தான், அட்ரசே இல்லை. இப்பத்தான் வந்து வியாக்கியானம் குடுக்குறீங்க. ஐயோ.........ஐயோ............/
ஊனவு கொடுத்தல் நல்ல விடயமே. நானும் சில உதவிகள் செய்கிறேன் என வைத்துக் கொண்டாலும் அதனை பெருமையாக சொல்வதற்கு ஏதும் இல்லை.இப்படிக் கொடுப்பது தற்காலிக தீர்வு மட்டுமே!!!
உதவி செய்யும் நிலையில் சிலர் ,உதவி பெறும் நிலையில் பலர் என்னும் சூழல் உருவாக்கியது இப்போதைய இலாப நோக்கு கொண்ட பொருளாதார அமைப்பே
அனைவருக்கும் உணவு,கல்வி சுகாதாரம் கொடுக்கக் கூடிய ,ஒரு இயற்கை சார் பொருளாதார அமைப்பு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.அப்படி அமைப்பு உருவாதலே பிரச்சினைகளுக்கு தீர்வு.
வறுமையின் முக்கிய காரணம் மக்கள் தொகை அதிகரிப்பே!!!.
உலகில் தற்போது குடுமபக்கட்டுப்பாடு தேவை என்பதை எதிர்ப்பது மதவாதிகளே!!!
ஆத்திக அமைப்புகள் பெறும் சுரண்டி பெறும் நன்கொடைகளில் ஒரு சிறு பங்கை தானம் செய்வதும் மத பிரச்சாரத்திற்காக மட்டுமே.
பால்பவுடர்,கோதுமை கொடுத்து மதம் மாற்றிய கதை அறிவீரா??
3./அப்புறம் வர்ணம் பத்தி தனிப்பதிவு வரும். பொறும் .........../
வரும் ஆனால் வராது போல் பண்ணி விடாதீர்!!கீதை 9.32 குறிப்பிடும் பாவ யோனியில் பிறந்த சத்திரிய,வைசிய,சூத்திர மக்களுக்கு விளக்கம் சொல்லும்.
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
(தொடரும்)
4.//மாமு, உங்களுக்கு அறிவு இருக்கு, அதக்கு லிமிட்டும் இருக்கு. இன்னொருத்தர் தேவையில்லை என்கிறீர்கள், ஏன் ? அவர் தவறிழைக்கக் கூடும் என்பதால் தானே? அப்போ நீர் மட்டும் எப்போதும் 100% correct ஆகவே இருந்திருக்கிறீர்களா ஒருபோதும் சிந்தனைத் தவறானதில்லையா ? நீர் செய்வதிலும் கேணத்தனம் இருக்கக் கூடும் அல்லவா? இது எனக்கும் பொருந்தும். நானும் Mr .perfect கிடையாது. இப்படிப் பார்த்தால் எவனும் perfect கிடையாது. சரி பார்க்கும் யோக்யதை இது தான் 100% சரி என்னும் சொல்லும் யோக்யதை யாருக்கும் கிடையாது.//
Deleteஇதைத்தான் நானும் சொல்கிறேன்.நான் குற்றம் குறை உள்ளவன்தான்.யாருக்கும் வழிகாட்டியும் இல்லை.
மத புத்தகங்கள் அக்காலத்தில் குறிப்பிட்ட இனக்குழுவை மேன்மைப் படுத்தி அரசியல், பொருளாதார இலாபங்களுக்காக எழுதப்பட்டவை. ஆகவே அவையும் 100% சரி கிடையாது.இக்காலத்திற்கு ஒவ்வாத விடயம் உண்டு.
மொழி பெயர்ப்பில்,மாற்று விளக்கத்தில் அக்கால கருத்தில் உள்ள தவறுகளை சப்பைக் கட்டு கட்டுகிறார்கள்.
கீதையும் 100% சரியானது கிடையாது. கீதையில் சரியாகப் படுவதை, குரு என்றாலும் அறிவுக்கு பொருந்துவதை செய்வேன் சொன்னால் ஏற்பேன் என் மட்டுமே சொல்லும்.
5.// ஆகையால் உங்கள் நாத்தீகம் என்பது நாத்தம் புடிச்சது என்பதை முதலில் நீங்கள் உணரனும்.//
அப்படி ஒன்னும் தெரியலையே!!. நோ ஸ்மெல்,உம்ம மூக்கை பரிசோதிக்க வேண்டும்.
இதை செய்து பாரும் பலன் கிட்டும்.
யோகா செய்யும் முன்பு மூக்கை தண்ணீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இஸ்லாமிலும் தூங்கி எழுந்தவுடன் மூக்கை தண்ணீர் விட்டு சுத்தம் செய்யாவிட்டால் சைத்தான் உள்ளே செல்வான் என சொல்லும் ஹதிது உண்டு.
3295. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளூச் செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி தூய்மைப்படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கிறான்.
6/முட்டாள் சீர்தூக்கிப் பார்த்து எதற்கு பிரயோஜனம்? எல்லோரும் முட்டாள்கள் தானே ?//
ஆமாம் கிருஷ்னர்,பிரபுபாத உள்ளிட்டு!!!!!!
7./இது கீதையை பின்பற்றுபவர்கள் செய்வது. உமக்கு குரு வேண்டுமானால் நீர் தான் தேடிக் கண்டு பிடித்து சேரனும். என்னை ஏன் கேட்கவேண்டும் ?/
உம்ம குரு யாருன்னேன்!!!
8.//யோக்கியமா உட்கார்ந்த நீங்க மட்டும் என்ன யோக்கியம் ? கருணாநிதி, ஜெயலலிதா, ப சிதம்பரம் சோனியா காந்தி அவ்வளவுதானே ?//
நான் மஞ்சள் துண்டு பேரானா,இல்லை சசிகலா வகையறவா இல்லை, வெள்ளையனின் ஏஜென்ட் காங்கிரஸ் கட்சியா!!!
அப்படி இருந்தால் சினிமா எடுக்க,ரியல் எஸ்டேன்,ஐ.பி.எல் டீம் வாங்க விற்க என ஜாலியாக இருக்க மாட்டேனா
ஏதோ ஒரு சாதாரண நடுத்தர வர்க்க குடிமகன் புலம்பறேன்!!
நன்றி!!
\\ஊனவு கொடுத்தல் நல்ல விடயமே. நானும் சில உதவிகள் செய்கிறேன் என வைத்துக் கொண்டாலும் அதனை பெருமையாக சொல்வதற்கு ஏதும் இல்லை.\\
Deleteபெருமைப் பட்டுக்கொள்ள இதைச் சொல்லவில்லை, நல்ல விசயன், நீங்களும் ஒரு கை கொடுங்கள் என்பதே. மேலும் ஓரிரு குழந்தைகள் பசியாறும், கல்வி பெரும்.
\\இப்படிக் கொடுப்பது தற்காலிக தீர்வு மட்டுமே!!!\\ மாமு, அமர்தியா சென்-னையும்மிஞ்சிட்டீங்க!! இதெல்லாம் எங்களுக்கும் தெரியும். நிரந்தரத் தீர்வு என்னைக்கு வருவது, அதுவரைக்கும் பட்டினி கிடந்தது சாவச் சொல்றீங்களா? விபத்தே நடக்காமல் காப்பது தான் நிரந்தரத் தீர்வு, ஆனால் தற்போது அடி பட்டு கிடப்பவருக்கு முதலுதவி செய்வது தான் இந்த சமயத்தில் செய்ய வேண்டிய காரியம். [நீங்க என்னத்த சிந்திச்சி சீர் தூக்கிப் பாத்தீங்களோ தெரியலை. :(( ]
\\உதவி செய்யும் நிலையில் சிலர் ,உதவி பெறும் நிலையில் பலர் என்னும் சூழல் உருவாக்கியது இப்போதைய இலாப நோக்கு கொண்ட பொருளாதார அமைப்பே
அனைவருக்கும் உணவு,கல்வி சுகாதாரம் கொடுக்கக் கூடிய ,ஒரு இயற்கை சார் பொருளாதார அமைப்பு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.அப்படி அமைப்பு உருவாதலே பிரச்சினைகளுக்கு தீர்வு.\\ ஆமாம், இருக்கிற நிலத்தையெல்லாம் பிளாட்டு போட்டு இது வேறயா? ஒன்னும் தேவையில்லை, பாக்கு, புகையிலை, தேயிலை இந்த நிலங்களை உணவு தயாரிக்க பயன்படுத்தினாலே போதும். இன்றைய நிலையிளுன் விவசாயிக்கு உலக்கு படி கூட மிஞ்சுவதில்லை.
\\ஆத்திக அமைப்புகள் பெறும் சுரண்டி பெறும் நன்கொடைகளில் ஒரு சிறு பங்கை தானம் செய்வதும் மத பிரச்சாரத்திற்காக மட்டுமே.\\ நான் சொன்ன குழந்தைகள் மதிய உணவு திட்டம், KPMG யால் தணிக்கை செய்யப் படுகிறது. [கையில் இருந்து இதுக்கு ஒரு பைசா கூட பெயராதுங்கறதுக்கு என்னென்ன சப்பட்டு கட்டுறீங்க மாமு???!!!]
\\இதைத்தான் நானும் சொல்கிறேன்.நான் குற்றம் குறை உள்ளவன்தான்.யாருக்கும் வழிகாட்டியும் இல்லை.\\ அப்புறம் எதுக்கு மாமு பிளாக்குல எழுதுறீங்க ? படிச்சிட்டு நாசமா போகவா?
Delete\\மத புத்தகங்கள் அக்காலத்தில் குறிப்பிட்ட இனக்குழுவை மேன்மைப் படுத்தி அரசியல், பொருளாதார இலாபங்களுக்காக எழுதப்பட்டவை. ஆகவே அவையும் 100% சரி கிடையாது.இக்காலத்திற்கு ஒவ்வாத விடயம் உண்டு.\\ அறிவியல் கண்டுபிடிப்புகளில் சுற்று புறச் சூழலுக்கு ஆப்பு வைக்காத ஒன்று உள்ளதா ? அணுகுண்டு என்ன காதலர் தினத்துக்கு வேடிக்கவா வெடிச்சதும் குழு குளுன்னு இருக்குமா ? இத்தனை இருத்தும் அறிவியளுக்குத்தானே பல்லக்கு தூக்குகிறீர்கள் ?
\\கீதையும் 100% சரியானது கிடையாது. கீதையில் சரியாகப் படுவதை, குரு என்றாலும் அறிவுக்கு பொருந்துவதை செய்வேன் சொன்னால் ஏற்பேன் என் மட்டுமே சொல்லும்.\\ மனிதன் அறிவே டுபாக்கூர் என்று ஆனா பின்னர் அதில் பொருந்துவதை ஏற்பதா ? கோணலா ஸ்கேலை வைத்து நேர்கோடு போடுவேன் என்பது போல இருக்கு.
\\உம்ம குரு யாருன்னேன்!!! \\ உங்களுக்குத்தான் அறிவு இருக்கே ?!! அதை வச்சு கீதையை படிங்க, குருவை எப்படி அடையணும்னு சொல்லியிருக்கு. அந்த முறையில் தகுதியானவரை தேடுங்க, கண்டுபிடிங்க. என் குரு யார்னு நான் ஏன் உங்களுக்குச் சொல்லனும் ?
\\ஏதோ ஒரு சாதாரண நடுத்தர வர்க்க குடிமகன் புலம்பறேன்!!\\ சிந்தனை சீர் தூக்கிப் பார்க்கும் அறிவாளி ஏன் புலம்பணும் தீர்வு கண்டுபுடிங்க !!!
பாகவதரே,
Deleteஉமக்கு பதிவுலக வியாபாரம் டல்லடிக்கும் போதெல்லாம் ,இப்படி பதிவு போட்டு சூடுப்பிடிக்க வைக்க பாக்குறீர், எங்களுக்கும் காமெடியா கலாய்க்க ஆள் கிடைக்கலைனு தான் ,இந்த கருமத்தை எல்லாம் சகிச்சுக்கிட்டு போறோம்!
// நாம் பலமுறை நாத்தீகர்களின் முட்டாள் தனத்தை இங்கே தோலுரித்துக் காட்டியுள்ளோம்,//
ம்க்கும் வாழப்பழ தோலு கூட உரிக்க துப்பில்லனாலும் பெருசா வெட்டி முறிச்சாப்போல என்னா ஒரு பில்டப்பு :-))
# //அப்போ உங்க அக்மார்க் நாத்தீகக் கொள்கை விளக்கம் தான் என்னன்னு,//
சப்ளாக்கட்டை சத்தத்துல நாங்க சொன்னதுலாம் காதுல உயுந்து இருக்காது ,மறுக்க ஒருக்கா சொல்லிடுறோம் ,கேட்டுக்கிடும்,
# கடவுள் என்ற படைப்பு மனித சிந்தனையில் விளைந்த ஒன்று!
ஆதாரம் நீர் நம்பும் வேதத்திலேயே உள்ளது.
# கடவுளை நம்புவதை விட மனிதனை நம்பு, மனித நேயத்துடன் வாழ், பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை.
# நடைமுறையில் சாத்தியமில்லாத ,இயல்புக்கு மாறான கூற்றுகளை நம்ப வேண்டாம். மூட நம்பிக்கை கூடாது.
# பொய்ப்புரட்டுகளை நம்பாமல்,உண்மை யாதென பகுத்தறிதல் வேண்டும்.
எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு!
புலால் உண்ணாமைக்கு திருக்குறளை உதவிக்கு கூட்டி வந்தீரே ,அப்போ இதை ஏற்க வேண்டாமோ?
# நாத்திகத்துக்கு இன்னார் அத்தாரிட்டி,அவரு சொல்வதை கேளுன்னுலாம் நாங்க சொல்வதே இல்லை, உனக்கு நீயே நீதிபதி, சுயமாக முடிவெடு ,அம்புட்டுத்தான் நாம சொல்வதெல்லாம்.
உன்னை அறிந்தால் ,நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்!
# நீர் புராண கீதை பிடித்து தொங்குவதால் , உமக்கு சாண்டோக்ய உபநிட உதாரணம் கொடுக்கிறேன்,
அஹம் பிரம்மாஸ்மி!
அப்போ எதுக்கு அப்படி சொல்லி இருக்கு, சரியான விளக்கம் கொடுக்கவும்!
# முதலில் ஒன்றை தெளிவுப்படுத்தவும் நீர் மெய்யான இறை நம்பிக்கையாளரா?
நீர் செய்வதெல்லாம் "காம லீலை" கிருஸ்னாவின் துதி பாடுவது மட்டுமே, கிருஸ்ணா ஒரு கடவுளா? அல்ல!
கிருஸ்ணா ஒரு பழங்கால மன்னன்,ஏகப்பட்ட காம லீலை புரிந்து சக்தியெல்லாம் விரயம்ம் செய்துவிட்டு தரையில் விழுந்து கிடந்தப்போ எவனோ வேடன் ,காட்டுப்பன்னினு நினைச்சு அம்புவிட்டு கொன்னுப்புட்டான், பிற்காலத்தில் ஒரு கட்டுக்தை கட்டி அவதாரம் ஆகிட்டாங்க, அதனை நீர் நம்பினால் அது உமது விருப்பம்,ஆனால் உலகத்தில இருக்கவங்கலாம் நம்பணும்னு நினைப்பது அறிவீனம்.
பிட்டுப்பட ஹீரோவுக்கு ரசிகர் மன்றம் வைப்பது போல "பாவாடை தூக்கி" கிருஸ்ணாவுக்கு ஒரு ரசிகர் மன்றம் வச்சுக்கிட்டு, பஜனைப்பாடிக்கிட்டு ஒரு கும்பல் அலையுது,அதில் நீரும் ஒருவர் அம்புட்டுத்தான் :-))
# குரான் படிச்சுட்டு, பீப் பிரியாணி துண்ணுட்டு,குல்லாப்போட்டு அல்லாவை கும்பிடுறாங்க,
பைபிள் படிச்சிட்டு, பன்னிக்கறி வறுவல் துண்ணுட்டு, கர்த்தருக்கு தோத்திரம்னு கும்புடுறாங்க,
எதையுமே படிக்காம கிடா வெட்டிப்பொங்கல் வச்சுட்டு ,சாராயம் குடிச்சுட்டு சுடலை மாடனை கும்புடுறாங்க,
இதல்லாம் இறை நம்பிக்கைனும் சொல்லுறாங்க, அவற்றை எல்லாம் நீர் ஏற்க தயாரா?
அப்போ மட்டும் அதெல்லாம் இறை நம்பிக்கை இல்லைனு சொல்லுவீர், லோகத்தில இருக்க 99% கடவுளை இல்லைனு சொல்லும் நீர் எப்படி இறை நம்பிக்கையாளர் ஆவீர், நாங்க கூட கிருஸ்ணாவை சேர்த்து இல்லைனு சொல்லுறோம், உமக்கும் எமக்கும் ஜஸ்ட் 1% தான் இறை நம்பிக்கையில் வித்தியாசம்,எனவே நீரும் நாத்தம் புடிச்ச நாத்திந்தேன் :-))
நீர் உண்மையான இறை நம்பிக்கையாளர் என்றால் , பீப் பிரியாணி, போர்க் ஃப்ரை, ஆட்டுக்குடல் வறுவல் எல்லாம் சாப்பிட்டு,சரக்கடிச்சு சாமி கும்பிட வாரும், நாங்களும் வாரோம், ஒன்னு மண்ணா கும்புட்டுக்கலாம்,ஆனால் அதை விட்டுப்புட்டு கிருஸ்ணா, புளியோதரை ,அக்கார அடிசல்னு வழிஞ்சீர் ,கெடாவுக்கு பதில உம்மை தான் போடுவோம் :-))
\\# கடவுள் என்ற படைப்பு மனித சிந்தனையில் விளைந்த ஒன்று!
Deleteஆதாரம் நீர் நம்பும் வேதத்திலேயே உள்ளது.\\ வவ்வால் நீர் கூமுட்டை மாதிரி நடிக்கிறீரா, இல்லை நெஜமாவே கூமுட்டையான்னு தெரியலை. வேதம் என்பதை நான் நம்பினாலும் நீர் நம்பவில்லை, அதை ஏன் ஆதாரமாக நீர் கொடுக்க வேண்டும் ?!!
\\# கடவுளை நம்புவதை விட மனிதனை நம்பு, மனித நேயத்துடன் வாழ், பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை.\\ சுவாமி வவ்வாலந்தாவின் போதனைகள் நல்லாயிருக்கு, சீக்கிரமே நீர் ஒரு மடம் ஆரம்பிக்கலாம் !!
\\புலால் உண்ணாமைக்கு திருக்குறளை உதவிக்கு கூட்டி வந்தீரே ,அப்போ இதை ஏற்க வேண்டாமோ? \\ வாயில் நாயின் லெக் பீசை கவ்விக் கொண்டு இதை சொல்லக் கூடாது. கொல்லாமை பத்தியும் வள்ளுவர் சொல்லியிருக்கார், அதையும் ஏற்க வேண்டும்.
\\# நாத்திகத்துக்கு இன்னார் அத்தாரிட்டி,அவரு சொல்வதை கேளுன்னுலாம் நாங்க சொல்வதே இல்லை, உனக்கு நீயே நீதிபதி, சுயமாக முடிவெடு ,அம்புட்டுத்தான் நாம சொல்வதெல்லாம்.\\ உம்மைப் போல அறிவாளியா இருந்தா பரவாயில்லை, கேனையா இருந்தா அவன் எப்படி சரியான முடிவை எடுக்க முடியும் ? எனவே இந்த அறிவுரை எல்லோருக்கும் பொருந்தாது. உமது கொள்கை இங்கேயே புட்டுகிச்சு.
\\
அஹம் பிரம்மாஸ்மி!
அப்போ எதுக்கு அப்படி சொல்லி இருக்கு, சரியான விளக்கம் கொடுக்கவும்!\\ நீர் அரைகுறையாய் படித்திருக்கீர், இதான் விளக்கம்.!!
\\இதல்லாம் இறை நம்பிக்கைனும் சொல்லுறாங்க, அவற்றை எல்லாம் நீர் ஏற்க தயாரா? \\ எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்.......... திருக்குறளை நீர் தானே சொன்னீரு ??
பாகவதரே,
Delete//எனவே இந்த அறிவுரை எல்லோருக்கும் பொருந்தாது.//
மெய்யாலுமே நீர் ரொம்ப்ப நல்லவன்யா, கிருஸ்ணா ,மற்றும் பாகவதமும் எல்லாருக்கும் பொருந்தாது எனவே இங்கேயே நான் அவுட்டுனு சொல்லாமல் சொல்லிட்டீரே :-))
இந்தியாவில் இருக்கும் இந்து மதத்தினரில் 80% மக்கள், கறிச்சோறு தான் துண்ணுறாங்கோ,எனவே உம்ம கதை புட்டுக்கிச்சு :-))
# //வாயில் நாயின் லெக் பீசை கவ்விக் கொண்டு இதை சொல்லக் கூடாது//
ஓ அப்போ கிருஸ்ணா, கீதைனு சொல்லும் போதெல்லாம் யாரோட உள்பாவாடையாவது வாயில கவ்விண்டு சொல்வீரா :-))
கிருஸ்ணா திருடின உள்பாவாடைகள் எல்லாம் உம்ம கிட்டே தான் கொடுத்து வச்சிருக்கார் போல தெரியுதே :-))
# நான் அஹம்பிரம்மாஸ்மி அரைகுறையா படிச்சேன்னே வச்சிக்கும், முழுசா படிச்ச நீரே சொல்லேன் :-))
ஒன்னியுமே சொல்லாம நழுவினா எப்பூடி?
# புதுசா கார் வாங்கினால் ,பாடிகார்ட் முனிஸ்பரன் கோயிலுக்கு போயி தேங்கா ஒடைச்சு,சூடம் கொளுத்தி, கார் சக்கரத்தில எமிச்சம் பயம் வச்சு நசுக்க வேண்டியது, ஆனால் இங்கே வந்து கிருஸ்ணா, கீதை ,உள்பாவாடைனு பினாத்த வேண்டியது :-))
\\இந்தியாவில் இருக்கும் இந்து மதத்தினரில் 80% மக்கள், கறிச்சோறு தான் துண்ணுறாங்கோ,எனவே உம்ம கதை புட்டுக்கிச்சு :-)) \\ பலர் செய்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு செயல் சரி என்றாகிவிடாது. இராத்திரி பகலா தலைகீழா தொங்கியும், இது உமக்குப் புரியாது போனது துரதிர்ஷ்டம் :((
Delete\\ஓ அப்போ கிருஸ்ணா, கீதைனு சொல்லும் போதெல்லாம் யாரோட உள்பாவாடையாவது வாயில கவ்விண்டு சொல்வீரா :-)) \\ வவ்வால் உம்மோட டெஸ்டு அப்படி இருந்தா அதற்க்கு என்ன பண்ண முடியும் ? அதுசரி இந்த பாவாடை மேட்டர் எங்கே போட்டிருக்கு கொஞ்சம் reference தர முடியுமா ? நாங்க படிச்சவரைக்கும் இல்லை. நீர் ரூம் நிறைய சரோஜாதேவி புத்தகங்களை வாங்கிபோட்டு அது மேலேயே படுத்து தூங்கும் ஆள். கன்பியூஸ் பண்ணிகிட்டீறு போல.............
\\கிருஸ்ணா திருடின உள்பாவாடைகள் எல்லாம் உம்ம கிட்டே தான் கொடுத்து வச்சிருக்கார் போல தெரியுதே :-))\\ எதையுமே முறைப்படி செய்யாவிட்டால் இப்படி தறுதலையாய் ஆகி தப்பு தப்பாய் புரிந்து கொண்டு குட்டிச் சுவராய் போக வேண்டியதுதான்..............
\\# நான் அஹம்பிரம்மாஸ்மி அரைகுறையா படிச்சேன்னே வச்சிக்கும், முழுசா படிச்ச நீரே சொல்லேன் :-))
ஒன்னியுமே சொல்லாம நழுவினா எப்பூடி?\\ பாதி கிணறு தாண்டப் படாது வவ்வால்.................
\\# புதுசா கார் வாங்கினால் ,பாடிகார்ட் முனிஸ்பரன் கோயிலுக்கு போயி தேங்கா ஒடைச்சு,சூடம் கொளுத்தி, கார் சக்கரத்தில எமிச்சம் பயம் வச்சு நசுக்க வேண்டியது, ஆனால் இங்கே வந்து கிருஸ்ணா, கீதை ,உள்பாவாடைனு பினாத்த வேண்டியது :-)) \\ கார் வாங்கிடலாம், அதுக்கு பெட்ரோல் வாங்க முடியாது ஒய் .............. எனக்கு காரே வேணாம்................
எந்த ஒரு வியாபாரத்துக்கும் விளம்பரங்கள் இன்றியமையாதது, விளம்பரம் பண்ணினால் தான் மட்டமான பொருளைக் கூட நல்ல விலைக்கு விற்கலாம். பேப்பர், றேடியோ, தொலைக்காட்சி, இணையம், வீடு வீடாய் சென்று, கூட்டம் சேர்த்து, இலவசங்கள் கொடுத்து, கவர்ச்சி வாக்குறுதிகள் கொடுத்து விளம்பரம் செய்தால் மட்டுமே வியாபாரம் நடக்கும், கல்லா கட்டும். என்ன மக்கள் யாரும் வாங்கும் பொருட்களின் தரத்தை, பக்க விளைவுகளை, மான்வல்களை வாசித்து சரி பார்ப்பதில்லை. கவர்ச்சியாக ஈர்க்கும் வண்ணம் பேசுவோரின் விளம்பரங்களை கண்டு ஏமாந்து போகின்றார்கள்.
ReplyDelete@ நிரஞ்சன் தம்பி
Deleteநீங்கள் சொல்வது உண்மைதான். பக்திக்கும், பொருளாதாய வாழ்க்கைக்கும் அதிக வேறுபாடு ஒன்றுமில்லை. நமது செயலின் முடிவு இறைவனைத் திருப்தி படுத்துவதாக இருக்க வேண்டும் என்பது பக்தி, அதைவிடுத்து நமக்கு எது சுகம் தருமோ அதைச் செய்வது பொருளாதாயம்.
இங்கே மற்றவர்கள் செய்வது போல மார்க்கெட்டிங் டேட்க்னிக் எல்லாத்தையும் நாமும் செய்வோம்,ஆனால் மற்றவர்கள் அதில் வரும் ஆதாயத்தை தனக்காகப் பயன்படுத்துவார்கள், நமது நோக்கம் இறைவனை திருப்தி படுத்த. நல்ல பேச்சுத் திறமை இருந்தால் அதை வைத்து பகவத் கீதையை விளக்கலாம், தப்பேயில்லை. பேசி நம்ப வைக்கும் திறமை இருந்தால் கீதையை வாங்கும் படிஎடுத்துச் சொல்ல பயன் படுத்தலாம் தப்பேயில்லை.
முதலில் தலைப்பை படித்தவுடன், உங்களது வழக்கமான நக்கலுடன் படத்தை கிழித்து இருப்பீர்கள் என்று நினைத்தேன் ! கண்டிப்பாக பார்க்க செல்கிறேன்.....
ReplyDelete//அறிவுஜீவிகளே, யார் அறிவுரையும் கேட்க கூடாது என்பதே உங்கள் கொள்கை,//
ReplyDeleteஇதெல்லாம் நாத்திகர்களின் கொள்கை அல்ல. யார் கூறியது இப்படி? அல்லது எங்கே படித்தீர்கள்? Reference கொடுங்கள். நீங்களே எதோ கற்பனை செய்து கொண்டு நாத்திகர்கள் கூறியதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
//ஆனால் உங்களின் இந்த அறிவுரையை எல்லோரும் ஏற்று நடக்க வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள், இது முரண் அல்லவா? //
நாங்கள் யாருக்கும் அறிவுரை கூறுவதே கிடையாது. அதெல்லாம் முட்டாள் ஆத்திகர்களின் வேலை.
@ Alien A
Deleteயார் சொல்வதையும் நம்பாதே,நீயாகவே யோசி என்று சொல்பவர்கள் நாத்தீகர்கள் மட்டுமல்ல எல்லா தரப்பிலும் இருக்கிறார்கள். சான்று: பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் நம்ம சார்வாகன் மாமுவையே கூட எடுத்துக்கலாம்.
Freedom to practice to any religion...தாராளமாக இறை நம்பிக்கையை பிரச்சாரம் செய்யலாம்!
ReplyDeleteநாய் வித்த காசு குறைக்குமா என்ன?
ஆன்மீகப் பிரச்சாரம் செய்ய காசு வாங்கக் கூடாது அது இலவசம். மனமுவந்து நிதி கொடுத்தால் வாங்கி நேர்மையாக இறை வழியில் செலவழிக்க வேண்டும். திருப்பதி உண்டியல் மாதிரி பங்கு பிரிச்சு போட்டு தின்னக் கூடாது.
Deleteமனமுவந்து நிதி கொடுக்கம் போது IT-exemption இல்லாம கொடுக்க சொல்லுங்கள். அதிலேயும் பொய்க்கணக்கு.
Deleteகாசு இல்லாவிட்டால் சாமி இல்லேங்கோ! முக்கியமா குரு இல்லேங்கோ!
அதான் நாய் வித்த காசு குறைக்குமா என்ன? என்று எழுதியிருந்தேன்!
பிறப்பில் ஏற்ற தாழ்வு கற்பித்த நூல் எவ்வளவு மோசமானத...
ReplyDeleteதாங்கள் உயர் பிறப்பு என்ற மிதப்பில் இருப்பவர்கள், கீழ் பிறப்பில் இருந்து வருவதாக நினைத்து பார்த்தாலே இந்த தத்துவம் எவ்வளவு மோசமானது என்று புரியும்