Friday, August 16, 2013

சூர்யா, சிவகுமார் பங்கேற்ற பதிவர் அமுதவன் இல்லத் திருமணம்!!


இரண்டு வாரங்களுக்கு முன்னர் பதிவர் அமுதவன் சாரிடமிருந்து ஒரு மெயில்- பெங்களூரில் நடக்கவிருக்கும் அவரது மகள் திருமணத்திற்கு வருகை தரும்படி அழைப்பு!!  இது ஒரு கௌரவம் என்பதால் நிச்சயம் வருகிறோம் என உறுதி செய்து பதில் அனுப்பினேன்.  பின்னர் தான் நடிகர் சிவகுமார் குடும்பத்தினரும் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவலை அமுதவன் சார் தெரிவித்தார். மாலை 7 மணி முதல் அரை மணி நேரம் இருப்பார்கள் என்றும் அதற்கு தகுந்தவாறு பிளான் செய்து வாருங்கள் என்றும் சொல்லியிருந்தார். [அவர்கள் வருகை திருமணத்திற்கு வந்தவர்களில் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை என்பதை பின்னர் அறிந்துகொண்டோம்!!]

சிவகுமார் குடும்பத்தினர் என்றால் சூர்யாவும் வரக்கூடும் என நினைத்தோம், ஆனால் உறுதியாகத் தெரியவில்லை.  தங்கமணி சூர்யாவின் தீவிர ரசிகை, அவர் இந்தச் செய்தியைக் கேட்டதும் பயங்கர குஷியானார்.  எனது குழந்தைகள் இரண்டும் சூர்யா அங்கிளைப் பார்க்கப் போகிறோம் என்று நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருந்தனர். [அதுங்களுக்கு எப்படி தெரிஞ்சதோ, அதுங்க சொன்ன மாதிரியே சூர்யாவும் வந்து கலந்து கொண்டார்!!] திருமண நாள் வரவேற்புக்கு ஒரு மணி நேரம் முன்னர் கிளம்பி மாலை 6:30-க்கு மண்டபத்தை அடைந்தோம்.  அங்கே யாரையும் தெரியாததால் கொஞ்ச நேரம் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தோம்.

திடீரென தங்கமணி, "என்னங்க, இவங்க தாங்க சிவகுமாரோட மிஸஸ்" என உற்சாகமான குரலில் கூறவும், சட்டென திரும்பிப் பார்த்தேன்,  திருமதி லக்ஷ்மி சிவகுமார், மணமக்களை சந்தித்து விட்டு கீழே சென்று கொண்டிருந்தார்.  [அவரை நான் அதற்க்கு முன் பார்த்ததில்லை!!]  "வாங்க நாமும் கீழே போகலாம்" என தர தரவென தங்கமணி நம்மை இழுத்துக் கொண்டு கீழ்த் தளத்திற்க்குச் சென்றார்.  அங்கே திருமதி லக்ஷ்மி சிவகுமார் மற்றும் சிலர் நின்று கொண்டிருக்க, தங்கமணி நேராக  அவரிடம் சென்று "நீங்க சூர்யாவோட அம்மாதானே" என்று கேட்க, அவரும் ஆமாம் என்று ஆமோதிக்க, தங்கமணி தன்னையும் குழந்தைகளையும் அறிமுகப் படுத்திக் கொண்டார்!!  நான் சற்று எட்டவே நின்று கொண்டிருந்தேன்.  தங்கமணி கிட்ட ஓடி வந்து,

"என்னங்க அமுதவன் சார் உங்களுக்குத் தானே ஃ பிரண்டு, யார்னு கண்டுபுடிச்சு ஹலோ சொல்லுங்க" என்றார்.

நான் அவரது படத்தை அவரது வலைப்பூவில் பார்த்திருக்கிறேன், தற்போது லக்ஷ்மி சிவகுமார் முன்னர்  நின்று பேசிக் கொண்டிருந்தார்.  வி.ஐ.பி யுடன் பேச வேறு யாரால் முடியும் !!  இதுதான் அமுதவன் சாராக இருக்க வேண்டும் என 90% உறுதி செய்துகொண்டு நெருங்கிச் சென்று கையை நீட்டி,

"ஹெலோ சார் என்றேன்", அவரும் கை குலுக்க, "நான் ஜெயதேவ்"- என்றேன்.

முகத்தில் மகிழ்ச்சியுடன் "ஓ ........  அப்படியா!!  ரொம்ப சந்தோசம் சார் !!"  என்றவர் உடனே திருமதி லக்ஷ்மி சிவகுமார் அவர்களிடம்,

"இவர் ஜெயதேவ், ஐ.ஐ.டி யில் பயின்றவர், 'இணையத்தில் பாப்புலர் எழுத்தாளர்.பயங்கரமா வாதமெல்லாம் பண்ணுவார்'" என அறிமுகப் படுத்தியதும்,நமக்கு லேசாக உதறல் எடுக்க ஆரம்பித்தது!!  அதைக் கேட்ட அவரும், " அப்படியா!" என புன்னகைத்தார்.  உடனே தங்கமணி கொண்டு வந்திருந்த கேமராவை என்னிடம் தந்து புகைப் படம் எடுக்கச் சொன்னார், ஒன்றிரண்டை கிளிக்கினேன்.  பின்னால் மின்விளக்கு இருந்ததால் படம் சரியாக வரவில்லை, எனவே எதிர் திசையில் நின்றால் பரவாயில்லை எனவும், மறுப்பேதும் சொல்லாமல் எங்களுடன் புகைப் படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தார் !!

திருமதி லஷ்மி சிவகுமார், பக்கத்தில் இருப்பவர் அவரது மகள், சூர்யாவின் தங்கை பிருந்தா சிவகுமார் என தங்கமணி  சொன்னார்,   பின்னூட்டத்தில் ஒரு நண்பரும் இதை உறுதி படுத்தியிருக்கிறார்.  [ இணையத்தில் கிடைக்கும் அவரது திருமண படத்திற்கும் இதற்கும் நிறைய வேறுபாடு!!]  

அவர் கிளம்பிச் சென்ற பின்னர், அவ்வளவு பிசியான நேரத்திலும், அமுதவன் சார் நான் எழுதியவற்றில் சிலதை நினைவு கூர்ந்து அவற்றைப் பாராட்டிய போது, நம்மை இவ்வளவு ஞாபகம் வைத்திருக்கிறாரே என்று வியப்பாய்  இருந்தது!  தங்கமணியின் சமையல் குறித்த பதிவு நன்றாக இருந்ததாக பதிவை பெயருடன் சொல்லி அசத்தினார்!!  பலரது பதிவுகளை படிப்பதோடு, என்னைப் போல சாதாரண பதிவர்களுக்கும் அவர் தரும் முக்கியத்துவம் இவற்றை பார்க்கும்போது, "அமுதவன் சார், யு ஆர் ரியலி கிரேட் உங்களுக்கு சல்யூட்".



சிவகுமாருடன் அமுதவன் சார்!!
சற்று நேரத்துக்கெல்லாம் சிவகுமார், பாடலாசிரியர் அறிவுமதி, ராமராஜன் காட்டன் அதிபர் என பல முக்கிய புள்ளிகள் வந்து சேர்ந்தனர். அமுதவன் சார் அனைவரையும் வரவேற்று மணமக்களை அறிமுகப் படுத்தி பேசினார்.  மணமகள் எலிசபெத் மில்கியோ TCS -ல் பணிபுரிவதாகவும், திருமணம் முடிந்தது பணி நிமித்தமாக அமரிக்காவில் ஹியூஸ்டன் நகரில் குடியேறப் போவதாகவும் சொன்னார்.  மணமகன் திரு.ஜான்கிளாட்ஸன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர், முன்னர் NDTV யில் கேமராமேன் ஆகப் பணி புரிந்து வந்ததாகவும், தற்போது  Bloomberg TV என்னும் அமரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பணி புரிவதாகவும் தெரிவித்தார். அவரை அடுத்து சிவகுமார் பேசினார்.

சிவக்குமார் மணமக்களை வாழ்த்தி பேசுகிறார், பின்னால் அமுதவன் சார்.

சிவகுமார் பேசும்போது, 31 ஆண்டுகளுக்கு முன்னர் அமுதவன் சார் திருமணத்துக்கு இதே பெங்களூருக்கு கோயம்பத்தூரில் இருந்து பல வி.ஐ .பி களுடன் வந்து கலந்து கொண்டதாகச் சொன்னார்.  கண்ணதாசனின் பாடல், "உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல............... எனத் தொடங்கி, நீ இல்லாமல் நானும் நானல்ல........ என முடித்து, "நீங்கள் தலை முடி முழுதும் நரைத்து கிழமானாலும் இந்த பாடலுக்கேற்றவாறு வாழுங்கள்" என வாழ்த்தி, "இன்னும் சில நிமிடங்களில் சூர்யா வந்துவிடுவார், தள்ளு முள்ளு செய்யாமல் ஓரிரு படங்களை எடுத்துக் கொண்டு எங்களை விட்டால் நாங்கள் சரியான நேரத்துக்கு விமான நிலையத்தை அடைவோம்" என்ற வேண்டுகோளுடன் கீழே இறங்கினார்.



அடுத்த சில நிமிடங்களுக்கு நுழைவு வாயிலில் அனைவரும் விழி வைத்துக் காத்திருக்க, பரிவாரங்களோடு வந்து சேர்த்தார் சூர்யா!!  தங்கமணிக்கு குதூகலம் தாங்கவில்லை.  மேடைக்கு மற்றவர்கள் வரவேண்டாம் என தடை இருந்தாலும் தங்கமணி எதையும் கண்டுகொள்ளவில்லை, எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு மேடைக்கே போய் மணமக்கள், திருமண வீட்டார் பலர் என சூழ்ந்திருந்த கூட்டத்தில் நுழைந்து, " ஹெலோ சார், நான் உங்க ரசிகை" எனச் சொல்லி கை குலுக்கினார், உங்களுடன் படமெடுத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்க, அதற்க்கு சிரித்துக் கொண்டே "சற்று பொறுத்துக் கொள்ளுங்கள், முதலில் திருமண வீட்டார் படமெடுத்துக் கொள்ளட்டும், பின்னர் நீங்களும் எடுத்துக் கொள்ளலாம்" என அவர் சொல்ல, நடுவில் ஒரு கருப்பு பூனை பாய்ந்து நீங்க யார் எனக் கேட்க, அவரை சமாதானப் படுத்தி பின்னர் வாய்ப்பு கிடைக்கும் என தங்கமணி எதிர்பார்க்க................  ஹி ..........ஹி ..........ஹி ..........  சூர்யா கிளம்பிச் சென்று விட்டார்!! 

இருந்தாலும், சில படங்களை நான் கீழேயே நின்று எடுத்திருந்தேன்.  தன்னுடைய நட்சத்திரத்தின் பக்கத்தில் நின்று படமெடுத்துக் கொள்ளா விட்டாலும், அதே பிரேமில் தோன்றுவதே போதும் என தங்கமணிக்கு மகிழ்ச்சி.  சுவையான திருமண விருந்தை உண்டு வீடு திரும்பினோம்.



தினமும், "புத்திகெட்ட மனுஷா தண்டத்துக்கு மணிக்கணக்கா உட்கார்ந்துகிட்டு பதிவு ...பதிவுன்னு போட்டு நேரத்தை வீனடிக்கிரியே,  இதனால பைசாவுக்கு பிரயோஜனம் உண்டா? நீ சாதிச்சது என்ன?" அப்படின்னு கரிச்சுக் கொட்டிக் கொண்டிருந்த தங்கமணி இனிமே அப்படி ஒருபோதும் கேட்க மாட்டார் என்பது மட்டும் நிச்சயம்!!  ஏன்னா சென்னையில் பிறந்திருதும் நிறைவேறாத அவரது வாழ்நாள் லட்சியம் பதிவுலகம் மூலம் நிறைவேறிடிச்சே!!  பதிவர்களுக்கு அமுதவன் சார் தரும் முக்கியத்துவம் குறித்து என்னால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது!!  நாம் எல்லோரும் இந்த விஷயத்தில் அவரைப் பின் பற்றலாம்!!   புதுமணத் தம்பதிகள் சீரோடும் சிறப்போடும் வாழ்க பல்லாண்டு............!!

39 comments:

  1. நீங்க ஐ ஐ டி ஸ்டுடெண்ட என்று அறிவித்ததை கண்டு கொண்டோம்...


    சிவக்குமார் மனைவியுடன் இருக்கு உங்கள் தங்கமணி போட்டோவையும் போட்டு விட்டு அது தங்க மணி இல்லேன்னு நீங்க சொன்னதை நாங்க நம்பிவிட்டோம்


    நாங்க திருஷ்டி எல்லாம் போடலைங்க...

    ReplyDelete
    Replies
    1. @ Avargal Unmaigal

      நான் எதை தவிர்க்க நினைத்தேனோ அதே நடக்குதே!! படத்தில் இருப்பவர் சிவகுமாரின் மகள், பிருந்தா என தங்கமணி சொன்னார். சரின்னு net-ல்,தேடினேன். அவரது திருமண கிடைத்தன. அவற்றையும் இதையும் வச்சு வேற வேற ஆங்கிளில் பார்த்து பார்த்து இது அவர்தானா, வேறயா என்று குழம்பிப் போய் அப்படியே விட்டுட்டேன். பின்னூட்டத்தில் ஒரு நண்பர் அது பிருந்தா சிவகுமார் தான் என உறுதி படுத்தியுள்ளார். நன்றி............

      Delete
  2. அமுதவன் சார் வலைப் பூ URL கொடுத்தால் , அந்த வலைப்பூ ப்டிக்க ஏதுவாயிருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. @ rajalakshmi paramasivam

      அமுதவன் சார் வலைப்பூ:

      http://amudhavan.blogspot.in/

      Delete
  3. வணக்கம் மாப்ளே,

    நமக்கு திரைப்பட கலைஞர்கள் மீது அதீத பற்றோ, வெறுப்போ கிடையாது. நம் போன்ற மனிதர்கள்தான் என்னும் எண்ணம் உண்டு.

    திரு சிவகுமார் ,நீண்ட நாட்களாக பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில முதல் மாணவனுக்கு பரிசு வழங்கி வருவதை பாராட்டுவேன்.அதற்கு விளம்பரமும் தேட மாட்டார்.திரை உலகில் இருந்தாலும் விமர்சனம் செய்யப்பட முடியாத அளவு ஆளுமை,நல்ல குணம். அவரை சந்தித்தது நன்று.

    சூரயா பிதாமகன்,காக்க காக்க கஜினி நல்ல படம்தான்.

    சிங்கம் 2 கொடுமை போதும் தய‌வு செய்து சிங்கம் 3 என்றால் அசிங்கம் ஆகிவிடும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,அடுத்தமுறை பார்த்தால் சொல்லிவிடும்!!!
    ***
    நீர் நல்லா ஃபோட்டோ எடுக்கிறீர்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!

    /"இவர் ஜெயதேவ், ஐ.ஐ.டி யில் பயின்றவர், பதிவுலகில் பயங்கரமான எழுத்தாளர்"/

    ஓய் ஐ.ஐ.டி'னா இந்தர்ஜித் இன்ஸ்டியுட் ஒஃப் டெய்லரிங்கா ஹி ஹி!!!

    நீர் அப்பாவிப் புள்ளை 'னு தெரியாம பயங்கர பதிவர்னு சொல்ராங்களே!!

    எந்தப் பதிவும் அப்படி இல்லையே!!!

    சரி பேரைக் காப்பத்தும் வண்ணம் அடுத்து ஒரு பயங்கரமான பதிவை எதிர்பார்க்கிறேன்!!!.

    **
    குடும்பத்துடன் மகிழ்வாக சுற்றம்,நண்பர் இல்ல விழாவில் கலந்து கொள்வது
    நன்று!!!

    வாழ்க வளமுடன்!!!

    ReplyDelete
    Replies
    1. மாமு, நாம ஒரு டுபாக்கூர் என்பது ஊரறிந்த ரகசியம், நீங்க என்னமோ தங்கமலை ரகயத்தை கஷ்டப்பட்டு கண்டுபுடிச்ச மாதிரி உதார் உட்டுகிட்டு இருக்கீங்க!!

      IIT -Indian Ilichchava Tamilan ---போதுமா?

      திரை நட்சத்திரங்களைப் பார்க்க முக்கியத்துவம் தரவேண்டியதில்லைதான், ஆனால் மற்றவர்களிடம் நாங்கள் சூர்யாவை பார்த்தோம்,கை குலுக்கினோம், படமெடுத்துக் கொண்டோம் என்று காண்பிப்பதில் ஒரு மகிழ்ச்சி இருக்கவே செய்கிறது. அமுதவன் சார் இல்லத் திருமணம் இல்லாது, வேறு நிகழ்ச்சிக்கு அவர்கள் வருவதாக இருந்திருந்தால் நாங்கள் சென்றிப்போமா என்பது சந்தேகம்தான்.

      Delete
    2. சர்வராகன் நீங்க சிங்கம் 2 ஐ கொடுமை என்று சொல்லுறீங்க ஆனா அமுதவன் சார் சிறுத்தையை சூப்ப்பர் படம் என்றும் சூப்பர் ஹிட் படம் என்று பதிவு வேற போட்டாரு

      Delete
    3. கூச்சல்....காட்டு கூச்சல் ......சிங்கம் 2

      Delete
  4. //சிவக்குமார் மனைவியுடன் இருக்கு உங்கள் தங்கமணி போட்டோவையும் போட்டு விட்டு அது தங்க மணி இல்லேன்னு நீங்க சொன்னதை நாங்க நம்பிவிட்டோம்//

    திருமதி லஷ்மி சிவகுமார் அவர்களுடன் இருப்பது சூர்யாவின் தங்கை பிருந்தா.

    சிவகுமார் குடும்பத்துக்கும், அமுதவனின் குடும்பத்துக்கும் பல வருடப் பழக்கம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. @ AnonymousAugust 17, 2013 at 6:48 AM

      தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே. அவரது திருமண படத்துக்கும், இந்தப் படத்துக்கும் அவர்தானா என்று உறுதியாக சொல்ல முடியாத அளவுக்கு நிறையவே மாறுபட்டிருக்கிறார், தங்கள் உறுதி படுத்தியமைக்கு நன்றி.

      Delete
  5. அமுதவன் கூவிய கூவலுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது

    ReplyDelete
  6. சிவகுமாரையும் மைக்கேல் ஆஞ்சலோவையும் ஒப்பிட்டு எழுதியவர் நம்ம அமுதவன்.
    அந்த விசுவாசத்துக்காவது சிவகுமார் கட்டாயம் குடும்பத்துடன் வர வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. @ வருண்

      முப்பது வருடங்களுக்கு மேலான அவர்களது நட்பை குறைத்து மதிப்பிட வேண்டாம் அன்பரே.

      Delete
  7. "இவர் ஜெயதேவ், ஐ.ஐ.டி யில் பயின்றவர், பதிவுலகில் பயங்கரமான எழுத்தாளர்" என்றார்./// oh ninga i.i.t la padichingala... athu sari

    ReplyDelete
    Replies
    1. @ mahesh

      oh ninga i.i.t la padichingala... athu sari \\ அதை நீங்களும் நம்பிட்டீங்களா, அதுசரி!!

      Delete
  8. ////வருண்August 17, 2013 at 7:18 AM

    சிவகுமாரையும் மைக்கேல் ஆஞ்சலோவையும் ஒப்பிட்டு எழுதியவர் நம்ம அமுதவன்.
    அந்த விசுவாசத்துக்காவது சிவகுமார் கட்டாயம் குடும்பத்துடன் வர வேண்டும்
    Reply///

    This is NOT ME. Someone SICK started a fake ID in my name!!!

    ReplyDelete
    Replies
    1. @ வருண்

      இந்த Fake பெயர்களை ஒழிக்க வழியே இல்லையா!!!!

      Delete
    2. ****Jayadev DasAugust 17, 2013 at 11:51 AM

      @ வருண்

      முப்பது வருடங்களுக்கு மேலான அவர்களது நட்பை குறைத்து மதிப்பிட வேண்டாம் அன்பரே.****

      ஜெயவேள்: அவரைத்தான் உங்க அன்பராக்கிக்கிட்டீங்க இல்ல? அப்புறம் எதுக்கு இந்தமாரி ஐ டி க்காரனை எல்லாம் பார்த்து ரொம்ப கவலைப்படுறீங்க? அன்பு பாராட்டுங்க!! :)

      Delete

  9. சார் IIT ல படிச்சவங்களா...வணக்கங்ண்ணா

    அமுதவர் சார் உங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விட நீங்க அவருக்கு நல்ல மரியாதை செய்திருக்கிறீர்கள் இந்தப் பதிவின் மூலம்.

    ReplyDelete
    Replies
    1. @ Manimaran

      \\அமுதவர் சார் உங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விட நீங்க அவருக்கு நல்ல மரியாதை செய்திருக்கிறீர்கள் இந்தப் பதிவின் மூலம்.\\ அமுதவன் சாருக்கு நன்றியை வேண்டுமானால் தெரிவிக்க முடியும், அவரை மிஞ்ச முடியாது!!

      Delete
  10. கருங்கால் நண்டுAugust 17, 2013 at 11:39 AM

    "சிவகுமாரையும் மைக்கேல் ஆஞ்சலோவையும் ஒப்பிட்டு எழுதியவர் நம்ம அமுதவன்.
    அந்த விசுவாசத்துக்காவது சிவகுமார் கட்டாயம் குடும்பத்துடன் வர வேண்டும்"

    இந்த அசிங்கங்களை வேற அமுதவன் செய்திருக்காரா ?

    நான் கோபுலுவுடன் சிவகுமாரை ஒப்பிட்ட கததான் கேள்விபட்டிருக்கின்றேன்.
    இது புது கத தான்

    ReplyDelete
  11. தங்களின் வருகைக்கு மிகவும் நன்றி. பதிவில் மணமக்கள் படத்தையோ அவர்களைப் பற்றி ஒரு வார்த்தையோ எழுதியிருக்கலாம். முழுக்க முழுக்க என்னைப் பார்த்ததையும் பேசியதையும் எழுதியிருக்கிறீர்கள்....... உங்கள் உள்ளத்தில் என்ன தோன்றியதோ அதனை எழுதியிருக்கிறீர்கள் என்பதால் அந்த வகையில் இதனைப் பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
    நான் சிவகுமாரை மைக்கேல் ஆஞ்சலாவுடன் ஒப்பிட்டதாக ஒருவரும், கோபுலுவுடன் ஒப்பிட்டதாக இன்னொருவரும் சேர்ந்து அவர்களாகவே சொல்லிக்கொண்டு அவர்களாகவே என்னைத் திட்டுவதில் சந்தோஷமும் கொண்டிருக்கிறார்கள். கோபுலு சிவகுமாரைப் பாராட்டியிருக்கிறார் என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர கோபுலுவுடன் ஒப்பிடவோ வேறு யாருடன் ஒப்பிடவோ இல்லை. இத்தகைய நண்பர்களுக்கு என்ன சொல்லுவதென்றும் தெரியவில்லை. அவர்களாக இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டு அதைவைத்து திட்டிக்கொண்டு சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான்.
    ஜெயதேவைத் திருமதி சிவகுமாருடன் அறிமுகப்படுத்தியபோது 'இணையத்தில் பாப்புலர் எழுத்தாளர்.பயங்கரமா வாதமெல்லாம் பண்ணுவார்' என்றுதான் சொன்னேன். பயங்கர எழுத்தாளர் என்று சொல்லவில்லை. அவருக்கு அப்படிக் கேட்டிருக்கிறது போலும்.

    திரு சிவகுமார் அவர்கள் மேடையில் சொன்னதுபோல இது முப்பது , முப்பத்தோறு வருடங்களுக்கான இயல்பானதொரு நிகழ்வு. எங்கள் வீட்டு நிகழ்வுகளுக்கு சிவகுமார் குடும்பம் வாழ்த்துவதும், அவர் மற்றும் அவரது துணைவியாரின் குடும்ப நிகழ்வுகள் எல்லாவற்றுக்கும் நாங்கள் குடும்பத்துடன் கலந்துகொள்வதும் இயல்பான ஒன்று. இதற்கும் இணையத்திற்கும் சம்பந்தமில்லை. 'அமுதவன் கூவிய கூவலுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது' என்று யாரோ ஒரு நண்பர் இங்கே கருத்து வழங்கியிருக்கிறார். இன்னமும் கொஞ்சம் மெச்சூரிடியுடன் இம்மாதிரி நண்பர்கள் சிந்திக்கப் பழகினால் நல்லது.
    என்னுடைய அழைப்பை ஏற்று துணைவியார் மற்றும் குழந்தைகளுடன் பங்கேற்று அது பற்றிய ஒரு பதிவையும் போட்டிருக்கும் திரு ஜெயதேவ் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றி.

    ReplyDelete
    Replies
    1. \\'இணையத்தில் பாப்புலர் எழுத்தாளர்.பயங்கரமா வாதமெல்லாம் பண்ணுவார்'\\ தற்போது பதிவில் திருத்தி இருக்கிறேன் சார்.

      தங்கள் குடும்பத்தினர் படத்தை போடலாமா என்று தயக்கமாக இருந்தது, தற்போது நீங்கள் அனுமதித்து விட்டதால் நிச்சயம் அவற்றையும் வெளியிடுகிறேன், நன்றி சார்......!!

      Delete
  12. மேலே விடுபட்டுப்போன ஒரு விஷயம். சிவகுமார் குடும்பத்தினர் வரும் செய்தியைக் கடைசி நிமிடம்வரை ரகசியமாகத்தான் வைத்திருந்தோம். உறவினர்களுக்குக்கூடத் தெரிவிக்கவில்லை. மொத்தமே ஒரு நான்கைந்து பேர்களுக்கு மட்டுமே சிவகுமார், அவரது துணைவியார், மகள் வரும் விஷயத்தை மட்டும் சொல்லியிருந்தோம். சூர்யா வரும் விஷயம் அவர் மேடையில் வருவதற்கு இரண்டொரு நிமிடங்களுக்கு முன்னர் மட்டுமே தெரிவித்தோம்.

    ReplyDelete
    Replies
    1. திருமணத்திற்கு வந்த பலருக்கும் இது சர்பிரைஸ் ஆக இருந்தது என்பதை அவர்கள் பேச்சில் இருந்தே புரிந்துகொண்டோம் சார்.

      Delete
  13. எல்லாம் வல்ல முருகன் ஆசியுடன், மணமக்கள் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன். அமுதவன் சாரின் எளிமையை அறிவேன். உறுதிப்படித்திய பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  14. சர்வராகன் நீங்க சிங்கம் 2 ஐ கொடுமை என்று சொல்லுறீங்க ஆனா அமுதவன் சார் சிறுத்தையை சூப்ப்பர் படம் என்றும் சூப்பர் ஹிட் படம் என்று பதிவு வேற போட்டாரு

    ReplyDelete
  15. வாழ்க்கையில் சில தருணங்கள், ரசித்து சிரிக்கும் அனுபவமாக இருக்கும். அதில், இதுவும் ஒரு தருணம்தான், குடும்பத்தாரை மகிழ்ச்சியடைய வைக்கும் தருணம். அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  16. வேட்டைக்காரன்August 17, 2013 at 7:33 PM

    என்ன சித்தப்பு சவுக்கியமா? அடுத்த இடுகை எப்போ வரும்?

    ReplyDelete
  17. அமுதவன்:
    மணமக்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. To: வருண் / ஜெயதேவ்,

    ஜெயதேவ், உங்கள் comment box கீழே comment as drop-down box-இல் LiveJournal, WordPress, TypePad, AIM, OpenId, Name/URL, Anonymous ஆகிய லிஸ்ட் இருக்கிறது.

    இதில் second last, "Name/URL"-ஐ select செய்தால், பெயர் மற்றும் website address கேட்கும். In this Text Box, we can fill up any name and any website address. இதைப்பயன் படுத்தி, எவனோ ஒரு மொள்ளமாரி வருண் பெயரையும் வருணின் website address-ஐயும் போட்டிருக்கிறான். வேண்டுமென்றால் இதை நீங்கள் நீக்கிக்கொள்ளலாம்.

    Normally, if you click anybody's name, the explorer will open the blogger profile's page. But Click at this Idiot's name, It will go directly to Varun's website. We cannot say that it is a Hack. But an option provided by google. But our people are misusing this.

    ReplyDelete
    Replies
    1. தெளிவான விளக்கத்திற்கு நன்றி நண்பரே, அந்த option ஐ நீக்கி விடுகிறேன்.

      Delete
    2. விளக்கத்திற்கு நன்றி, ஏலியன். நம்ம தமிழர்களில்தான் எத்தனை வகை.. தன் கருத்தை இன்னொருத்தன் சொல்வதுபோல் சொல்லி அதில்கூட ஒரு "இன்பம்" அடைகிறார்கள்.. இதையெல்லாம் குறிப்பிட்டு கண்டனம் தெரிவிக்காமல் அசட்டையாக நாம் இதை விடுவதும் தவறு என்பதால் அதை சொல்ல வேண்டியதாகிவிட்டது...

      Delete
  19. I am Alien A.

    This is how the Idiot Varun has posted on behalf of Original Varun.

    Look at this example, as explained in my preceding comment, I have posted on behalf of Jayadev

    ReplyDelete
  20. @அமுதவன்:
    மணமக்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. எங்கள் இல்லத்து மணமக்களை இந்தப் பதிவின் மூலம் வாழ்த்தியுள்ள நண்பர்களுக்கு என்னுடைய நன்றி.

    ReplyDelete
  22. ஓசை தளத்தில் நீக்கப்பட்ட உங்க பின்னூட்டத்தை ஒரு பதிவாக ஜெயதேவ தாஸ் போடலாமே

    ReplyDelete
  23. பாகவதரே,

    கல்யாண சாப்பாட தவற விடாம கவ்வீட்டீர் போல, குடும்பத்துடன் கலந்துக்கொண்டு அசத்தியமைக்கு வாழ்த்துக்கள்!

    நான் தான் கொஞ்சம் அலர்ட்டா இல்லாம போயிட்டேன்,இல்லைனா அனானியாவாது வந்து அமுதவன் சார் இல்ல திருமண விழாவில் கல்யாண சாப்பாடை ஒரு கட்டு கட்டிட்டு வந்திருப்பேன்,வட போச்சே அவ்வ்!
    ---------------

    அமுதவன் சார்,

    திருமணம் சிறப்பாக நடைப்பெற்றதை அறிந்தோம், மணமக்களுக்கு இனிய வாழ்த்துகள்!

    நடிகர் சிவக்குமார் அவர்கள் நட்புக்கு கொடுக்கும் மரியாதை உண்மையில் சிறப்பான ஒன்று,இத்தனி பிரபலமாக தாங்கள் இருந்தும், வலையுலக நட்பாக இருந்தாலும் உயரிய மரியாதை அளிப்பதை நினைக்கையில் மிகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது, பாராட்ட வார்த்தைகள் இல்லை.நன்றி!

    சமிபகாலமாக எனக்கு இணையம் அதிகம் வர இயலாத சூழல் என்பதல் மிகத்தாமதமாகவே அறிந்தேன், மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. வவ்வால்,

      பறக்கறது, நடக்கிறது நீந்துவதுன்னு ஒரு பக்கம் எல்லாம் உம்ம அயிட்டங்கள். நீர் மட்டும் வந்திருந்தா ஐயோ சாமி ஆளை விடுங்கடான்னு சொல்லி அதுங்க இறக்கை முளைச்சு பறந்து எஸ்கேப் ஆயிருக்கும். ஹா.......ஹா.........ஹா........

      Delete