Thursday, March 7, 2013

"சபாஷ்........ சரியான போட்டி!! " பாடல் படமாக்கப் பட்டது எப்படி?

அன்புள்ள மக்காஸ்!!

வெள்ளைக்காரன் நேனோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி அப்படின்னு ஆராய்ச்சி பண்றதைப் பார்த்து நம்மால சும்மா இருக்க முடியல.  அதனால், நம்ம அறிவுத் திறனை வெளிப்படுத்தும் ஒரு ஆராய்ச்சியில் மீண்டும் இறங்கி  விட்டோம்.  1958-ல் வஞ்சி கோட்டை வாலிபன் என்ற படம் வெளியானது பலருக்கும் தெரிந்திருக்கும்.  அந்தப் படத்தில் பத்மினிக்கும், வைஜயந்திமாலாவுக்குமிடையே நடக்கும் நடனப் போட்டி பாடலைப் பத்தி ஆராய்ச்சி பண்ணலாம்னு இன்னைக்கு நினைச்சிருக்கோம்.  இதற்க்கு மதிப்பு குடுத்து நம்ம கடைக்கு வந்திருக்கும் உங்களை நன்றியுடன் வரவேற்கிறோம்.





இந்தப் பாடலில் பத்மினி,  வைஜயந்திமாலா இருவரும் ஒரே இடத்தில், ஒரே சமயத்தில் நடனமாடி ஒருவரை ஒருவர் கோபத்துடன் முறைத்துப் பார்த்து, நேருக்கு நேர்   நாட்டிய நளினங்களை விதம் விதமாக காண்பித்து தங்களது திறமைகளை வெளிப் படுத்தியிருப்பார்கள்  - இப்படியெல்லாம் இத்தனை நாளும் நீங்க நினைச்சிகிட்டு இருந்திருப்பீங்க தானே??!!  அது தான் இல்லை.  உண்மையில் இந்தப் பாடல் வெளிவந்த சமயத்தில் இருவரும் உச்சத்தில்  இருந்த நட்சத்திரங்கள்.  மேலும் நாட்டியத்திலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காத நம்பர் 1 ஆக இருந்தவர்கள்.  எனவே இருபெரும்  கலைஞர்களுக்கிடையேயான ஈகோவால் இருவருமே இந்த போட்டிக்கு ஒரே இடத்தில் ஆட மறுத்து விட்டனர்.

அப்போ,  அந்த பாட்டு?  அவசரப் படாதீங்க!!  அதுக்குத் தானே வரேன்!!  முதலில் பத்மினி ஆடுவதை படமெடுத்து அதை பிரிண்ட் போட்டு கொண்டுபோய் அன்று மாலையே வைஜயந்திமாலாவுக்கு போட்டு காண்பிப்பார்கள்.  அதைப் பார்த்து வைஜயந்தி மாலா பதிலுக்கு நடமாடுவார்.  அது படமாக்கப் பட்டு பத்மினிக்கு போட்டுக் காண்பிக்கப் படும்.  இப்படியே மாத்தி மாத்தி இருவரும் தனித் தனியாக ஆடியதை இறுதியில் இணைத்து இருவரும் ஒன்றாக ஆடியதைப் போல நமக்கு படம் காண்பித்து விட்டனர்.  சில சமயம் இவர்களுடைய நடன ஆசிரியரிடமும் கலந்தாலோசித்து நடன அசைவுகளை முடிவு செய்ததாகவும் மேலும் நடனத்தைப் பற்றி படப் பிடிப்பில் பார்த்தவர்கள் கண்ணை எப்படி அசைத்தார் கையை எப்படி அபிநயம் காட்டினார் என சொன்னதை வைத்தும் பதில் நடனம் ஆடினார்கள் என்றும் கூறுவதுண்டு.  எது எப்படியோ தமிழுக்கு "சபாஷ் ......... சரியான போட்டி" என்ற மறக்க முடியாத புகழ் பெற்ற பஞ்ச் டயலாக்கை இந்த பாடல் கொடுத்துவிட்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துக் கொண்டது!!

இந்தப் படம் "ராஜ் திலக்" என்ற பெயரில் ஹிந்தியிலும் எடுக்கப் பட்டது.   அந்தப் படத்திலும் இந்தப் பாடல் இடம் பெறுகிறது.  நம்மை விட பெரிய ஆராய்ச்சியாளர் ஒருத்தர் இந்த இருபாடல்களும் ஒன்றேவா, இல்லை ஹிந்திக்காக மறு படப் படிப்பு நடத்தப் பட்டதா என்ற நாட்டுக்கு முக்கியமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, இரண்டும் ஒன்றல்ல என்று ஆதாரப் பூர்வமாக நிரூபித்துள்ளார். பாருங்கள் சுவராஸ்யமாக இருக்கிறது.  [பதிவு சுட்டி]


















5 comments:

  1. சபாஷ்...! சரியான போட்டி (உங்களுக்கும் சுட்டிற்கும்)

    ReplyDelete
  2. படமாக்கிய விதம் அருமை... சபாஷ்...!

    ReplyDelete
  3. சுவாரஸ்யமான ஆராய்ச்சிதான். தொடருங்க.
    தமிழ், ஹிந்தி சுட்டி சூப்பர்.

    ReplyDelete
  4. சுவாரஸ்யமான பதிவு.
    பாராட்டுக்கள்.
    தொடருங்கள்.

    ReplyDelete
  5. Amazing job! I am so grateful for your article. Your location is valuable for me. Thanks!
    http://cinemaaz.com/

    ReplyDelete