Thursday, August 23, 2012

ஹிக்ஸ் போஸான்: கடவுளுக்கும் கடவுள் துகளுக்கும் என்ன சம்பந்தம்?


கடவுளுக்கும் கடவுள் துகள் என்று தற்போது சொல்லப் படும் ஹிக்ஸ் போஸானுக்கும் என்ன சம்பந்தம்?  

 

மைசூருக்கும் மைசூர் பாகுக்கும் இடையே என்ன சம்பந்தம் உள்ளதோ  அதே சம்பந்தம்தான் ஹிக்ஸ் போஸானுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ளது!!  எப்படி, எல்லா ஊரிலும் மைசூர் பாகு செய்வது போலவேதான் மைசூரிலும் செய்வார்கள் என்பதைத் தவிர்த்து வேறு எந்த சம்பந்தமும் மைசூருக்கும் மைசூர் பாகுக்கும் கிடையாதோ, அதே மாதிரி பிரபஞ்சத்தில் உள்ள படைப்பு அத்தனைக்கும் கடவுள் காரணமாக இருந்தது போலவே, ஹிக்ஸ் போஸானின் படைப்புக்கும் காரணமாக இருந்தார் என்பதைத் தவிர தனிப்பட்ட வேறெந்த தொடர்பும் இல்லை!!  அதே சமயம், இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதலில் முன்னணியில் இருக்கும் ஒரு மிக முக்கியமான கோட்பாடான ஸ்டாண்டர்ட் மாடல் [Standard Model ] படி,  ஹிக்ஸ் போஸான் இல்லையென்றால், அடிப்படைத் துகள்கள் [Fundamental Particles] எதற்கும் நிறை [Mass] என்ற ஒன்றே இருந்திருக்காது,  நிறை இல்லாத துகள் நிலையாக நிற்காது, ஒளியின் வேகத்தில் [மணிக்கு மூன்று லட்சம் கி.மீ வேகம்] போய்க் கொண்டே இருந்திருக்கும்.  இந்தப் பிரஞ்சத்தில் எந்த ஒரு பொருளும் உருவாகியிருக்காது.  இந்தச் சூரியனோ, பூமியோ, அணுக்களோ, நீங்களோ, நானோ  தோன்றியே இருக்க மாட்டோம். அந்த வகையில்  "ராகங்களை உருவாக்குவதால் நானும் பிரம்மனே"  என்று ஒரு கவிஞன் பாடியதைப் போல, "எல்லா அடிப்படைத்  துகள்களும் நிறை [Mass] பெறுவதற்கு காரணமாக இருப்பதால் நீ கடவுள் துகளே " என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.


http://thebrowser.com/files/imagecache/448x296_reports/higgs.jpg

 

அப்படியானால் இதை ஏன் கடவுள் துகள் என்று சொல்ல வேண்டும்?

 

1988 ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் ஒருவரான, லியன் லெடர்மன்  [Leon Lederman]  என்ற விஞ்ஞானி ஹிக்ஸ் போஸான் பற்றி "The Goddamn Particle  If the Universe Is the Answer, What is the Question?" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை 1993 ஆம் ஆண்டு வெளியிட நினைத்தார்.  இதில், Goddamn Particle என்ற வார்த்தைக்கு  தமிழில் நேரடியான  பொருள் இல்லை எனினும், அதற்க்கு இணையாக  "என்ன இழவு எடுத்த துகள்", "பாழாய்ப் போன துகள்", "பாடாவதி துகள்" என்று எரிச்சல் வரும் போது சொல்லும்  ஏதாவது  ஒரு  வார்த்தையைப் போட்டு சொல்லிக் கொள்ளலாம்.  இந்த அர்த்தத்தில் தான் அவர் ஹிக்ஸ் போஸானுக்கு பெயரிட நினைத்தார். அதுசரி, ஏன் இந்த எரிச்சல்? ஸ்டாண்டர்ட் மாடல் கோட்பாடு அடிப்படைத் துகள்களில்  குறிப்பிட்ட பண்புகளுடன் 12 துகள்கள் இருக்கவேண்டும் என்று கணித்தது, ஒவ்வொன்றாக அவை பரிசோதனைகள் மூலம் கண்டறியப் பட்டன, மொத்தம் 11 துகள்கள் இருப்பது உறுதியானது, ஆனாலும் 12-வதான ஹிக்ஸ் போஸான்  மட்டும் கடந்த அரை  நூற்றாண்டாக எல்லோருக்கும் அல்வா கொடுத்துக் கொண்டிருக்கிறது!!  அதனால் எல்லோருக்கும் மனதளவில் பெரிய இம்சை, அத்தோடு இதைக் கண்டறிய ஆகும் செலவு, அதை ஏற்க அமெரிக்கா போன்ற நாடுகளே முன் வராது கை கழுவியது என்று ஏகப்பட்ட வயித்தெரிச்சல், ஆகையால் The Goddamn Particle என்ற பெயரை அதற்க்கு வைத்தார்.  ஆனால், பதிப்பதகத்தார், "சார் இப்படிப் பெயர் வைத்தால் புத்தகம் ஓடாது, நாங்கள் போண்டியாகி விடுவோம்'' என்று மறுத்துவிட்டனர். "அதற்குப் பதிலாக God Particle என்று பெயர் வைத்து விடுங்கள், பிரமாதமாக விற்கும்" என்று  கேட்டுக் கொண்டதால் வேறு வழி இல்லாமல் அந்தப் பெயரே வைக்கப் பட்டு நிலைத்து விட்டது.  தவறான அர்த்தத்தைத் தரும் இந்த பெயரில், பல விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, இதன் கோட்பாட்டை உருவாக்கிய ஆறு பேர்களில் ஒருவரான  பீட்டர் ஹிக்ஸ் அவர்களுக்கும் கூட சிறிதளவும் உடன்பாடில்லை, ஏனெனில் அவரும் ஒரு ஒன்னாம் நம்பர் நாத்தீகர்.

1993 ஆம் ஆண்டு வெளியான The  God Particle புத்தகம்

இந்தத் துகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்ன? 

 

ஸ்டாண்டர்ட் மாடல் படி உருவாக்கப் பட்ட ஆயிரக் கணக்கான மற்ற கோட்பாடுகள்  வெற்றியடைந்தன ,  மேலும் அதன்படி நடத்தப் பட்ட ஆயிரக் கணக்கான  பரிசோதனை முடிவுகளும் கணிப்பு படியே கச்சிதமாக வந்தன.  இதுவரை அதற்குத் தோல்வியே இல்லை. ஆனால் ஒரு பிரச்சினை, இந்த மாடலின் படி அடிப்படைத் துகள்கள் எதற்கும் நிறை [Mass] இருக்க முடியாது.  நிறை இருப்பதாக எடுத்துக் கொண்டால் இந்த மாடல் வேலை செய்யவில்லை.  [Fundamental Particles: அடிப்படைத் துகள்கள்-பகுக்க முடியாத துகள்கள், மற்ற அனைத்து துகள்களும் இவற்றின் கூட்டாக இருக்கும். உ.ம் . எலக்டிரான்கள், குவார்க்குகள் முதலானவை.]   ஆயிரமாயிரம் வெற்றிகளைக் குவித்த இந்த மாடலை புறக்கணிக்கவும் அறிவியலாளர்களுக்கு மனமில்லை.  இம்மாதிரியான சூழ்நிலையில், இந்தப் பிரச்சினையை சமாளிக்க பீட்டர் ஹிக்ஸ் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி ஒரு கோட்பாட்டை முன்வைத்தார்.   இக்கோட்பாட்டின் படி இந்த பிரபஞ்சம் முழுவதும் ஹிக்ஸ் புலம்  [Higgs  Field]  என்ற ஒரு புலம் நீக்கமற நிறைந்திருக்கிறது, இப்புலத்தை  உருவாக்க எந்த மூலமும் [Source] தேவையில்லை.  ஆகையால்,  பிரபஞ்சத்தில் உள்ள பூமி, சூரியன், கேளக்சிகள், என எல்லாவற்றையும் நீக்கிவிட்டாலும் ஹிக்ஸ் புலம் மட்டும் இருக்கும்.  [அடிப்படையில், எந்த ஒரு புலத்தையும் உருவாக்க வேண்டுமெனில் அதற்க்கு ஒரு மூலம்  [Source] வேண்டும். உதாரணத்திற்கு காந்தப் புலத்தை உருவாக்க வேண்டுமெனில் காந்தம் வேண்டும், ஆனால் ஹிக்ஸ் புலம் உருவாக மூலம் (Source) எதுவும்  தேவையில்லை.] அடிப்படைத் துகள்கள் ஹிக்ஸ் புலத்துடன் ஈடுபடுவதால்   [Interact]  அவற்றின் வேகம் தடைபடுகிறது,  [நாம் தரையில் நடப்பது போல வேகமாக சேற்றில் நடக்க முடியாதல்லாவா?]   அதுவே நிறை [Mass] எனப்படுகிறது.   ஹிக்ஸ் புலத்துடன் அதிகமாக ஈடுபடுகின்ற துகள்கள் நிறை அதிகமாகவும் [உ.ம் குவார்க்குகள்-இவையே கூட்டு சேர்ந்து புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் உருவாக்குகின்றன], குறைவாக ஈடுபடும் துகள்கள் நிறை குறைவாகவும் [உ.ம். எலக்ட்ரான்கள்], ஈடுபடாமலேயே செல்லும் துகள்கள் நிறை பூஜ்ஜியமாகவும் இருக்கும் [உ.ம். ஃ போட்டான்கள்].


ஹிக்ஸ் புலத்தினை அலைவுரச் செய்யும்போது உருவாகும் துகள் தான் ஹிக்ஸ் போஸான் ஆகும்.  அடிப்படைத் துகள்கள் ஹிக்ஸ் போஸானுடன் முட்டி மோதுவதால் ஏற்ப்படும் வேக இழப்பைத்தான் மேலே சொன்ன நிறை என்கிறோம்.  அதாவது ஹிக்ஸ் புலத்துடன் அவை ஈடுபடுவது ஹிக்ஸ் போஸான்கள் மூலம் நடைபெறுகிறது. எப்படி  தண்ணீரின் மேற்ப் பரப்பில் ஒரு கல்லைப் போட்டால் நீரலைகள் உருவாகிறதோ அதைப் போல, ஹிக்ஸ் புலத்தை உலுக்கினால் ஹிக்ஸ் போஸான் உருவாகும்.   அவ்வாறு ஹிக்ஸ் போஸான்கள்   உருவாவதை பரிசோதனைகள் மூலம் கண்டறியப் பட்டால் மட்டுமே  ஸ்டாண்டர்ட் மாடலை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியும்,  இல்லாவிட்டால் அதைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, இதுவரை ஸ்டாண்டர்ட் மாடலைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ள அத்தனை கோட்பாடுகளையும் வேறுவகையில் புதிதாக உருவாக்க வேண்டும்.   எனவே, ஹிக்ஸ் போஸான் இருப்பதை உறுதி செய்வது பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதலில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

Large Hadron Collider (LHC), Geneva, Switzerland இல் என்ன பரிசோதனை நடக்கிறது? அங்கே Big Bang பெருவெடிப்பையே நிகழ்த்துவார்களா? அதனால் கருந்துளைகள் [Black Holes] உருவாகி அது பூமியையே விழுங்கிவிடவும்  வாய்ப்பு உள்ளதாமே, உண்மையா?


CERN துகள் முடுக்கி, சுற்றளவு 27 கி.மீ . பூமிக்கடியில் 100 மீட்டார் ஆழத்தில் அமைக்கப் பட்டுள்ளது.  இதில் புரோட்டான்கள் ஒளியின் வேகத்தில் 99.99%  அளவுக்கு முடுக்கப் பட்டு எதிரெதிரே மோத விடப்படும்.  இதன் விளைவாக 7.2 டிரில்லியன் [7,20,000 கோடி] டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மோதல் ஏற்படும் புள்ளியில்  உருவாகும். ஆனால், அங்கே வாழ்பவர்களுக்கு தரைக்கடியில் என்ன நடக்கிறதென்றே தெரியாது!    



கேட்கிறவன் கேனையனாக இருந்தால் எருமை எரோபிளேன் ஓட்டும் என்றும் சொல்வார்கள் போல!!  உதாரணத்துக்கு சென்னையில் உள்ள சில தீம் பார்க்குகளில் ஐஸை பெரிய அளவில் உருவாக்கி, இமயமலையையே இங்கே உருவாக்கியுள்ளோம் என்று விளம்பரம் செய்வதாக வைத்துக் கொள்வோம், அதன் பொருள் என்ன?  இமயமலையைப் பெயர்த்து இங்கே கொண்டு வந்து வைத்து விட்டார்கள் என்று அர்த்தமா?  அங்கே உள்ளது போலவே ஒரு சூழ்நிலையை இங்கே உருவாக்கி விட்டார்கள், அதில் நீங்கள் ஸ்கேட்டிங் போகலாம், ஐஸை அள்ளி வீசி நண்பர்களுடன் விளையாடலாம் என்று தான் அர்த்தம். அதற்காக, இமய மலையில் உருவாகும் நதிகள் வெள்ளப் பெருக்கெடுத்து பல நகரங்களை மூழ்கடித்து விடுவது போல, அந்த தீம் பார்க்கில் உள்ள  ஐஸ் உருகி சென்னையே மூழ்கடித்து விடுமா என்று கேட்பது நகைப்புக்குரியது.  LHC யில் புரோட்டான்களை   ஒளியின் வேகத்தில் 99.99% அளவுக்கு முடுக்கமடையைச் செய்து எதிரெதிர் திசையில் மோதவிட்டு அதன் விளைவுகளைப் பதிவு செய்து ஆராய்ச்சி செய்வார்கள்.  அவ்வாறு மோதல்கள் நடக்கும்போது வெப்பநிலை பெருவெடிப்பு [Big Bang] நடந்தபோது இருந்த அளவுக்கே செல்லும், அதாவது 7.2 டிரில்லியன் [7,20,000 கோடி] டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உருவாகும். [சூரியனின் மையப் பகுதியில் உள்ளது போல இரண்டரை லட்சம் மடங்கு அதிகம்!!].  ஆனால் இந்த வெப்பம் மோதும் புள்ளியில் மட்டுமே நிலவும்,  வெளியில் கசியாத வண்ணம் குளிரூட்டம் செய்யப் பட்டிருக்கும்.  [தங்கத்தின் உருகுநிலை ஆயிரம் டிகிரி செல்சியஸ் என்றாலும், அங்கேயே நெருப்பின் முன் உட்கார்ந்து வேலை செய்யும் பொற்க்கொல்லரை அது எதுவும் செய்வதில்லை என்பதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும்!!].  இந்தப் பிரபஞ்சம் தோன்றக் காரணமான பெருவெடிப்பு [Big Bang] நடந்தபோது இந்த வெப்பநிலையே நிலவியது, அப்போது ஹிக்ஸ் புலம் இருக்கவில்லை, ஆகையால் அடிப்படைத் துகள்கள் [குவார்க்குகள், குளுவான்கள் எலக்ட்ரான்கள்] ஒளியின் வேகத்தில் பயணித்த வண்ணம் இருந்தன.  பெருவெடிப்பு நிகழ்ந்து 10^-12 வினாடிகள் ஆன பிறகு  [1 வினாடியில் ஒரு லட்சம் கோடியில் ஒரு பங்கு நேரம் கடந்த பிறகு] இந்த வெப்பநிலை சற்று தணிந்ததும் ஹிக்ஸ் புலம் தோன்றி எங்கும் நீக்கமற நிறைந்தது. ஒளியின் வேகத்தில் சென்று கொண்டிருந்த அடிப்படைத் துகள்களின் வேகம் ஹிக்ஸ் புலத்துடனான் ஈடுபாட்டால் [Interaction] விளக்கெண்ணையில் விழுந்த கோலிக் குண்டுகளின்  வேகம் மட்டுப் படுவது போல குறைந்து போனது.  அதையே நிறை என்று மேலே விளக்கியுள்ளோம். இவ்வாறு  பெருவெடிப்பின் போது இருந்த வெப்ப நிலையை மீண்டும் உருவாக்கும் போது, எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும் நம் கருவிகளுக்கு புலப்படாத ஹிக்ஸ் போஸான், "கையில்" சிக்கும் வகையில் தோன்றலாம் என்பது எதிர்பார்ப்பு.  

ஹிக்ஸ் போஸான் என்ற பெயரில் உள்ள போஸான் என்ற பெயர் இந்திய இயற்பியல் விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் அவர்களுக்குச் சொந்தம் என்கிறார்களே?  அவரும் இதில் சம்பந்தப் பட்டவரா? 

 

Satyendranath Bose
இந்திய இயற்பியல் விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ், ஐன்ஸ்டீனுடன் இணைத்து Bose-Einstein Statistics யை உருவாக்கியவர். 

 

அடிப்படைத் துகள்கள்  ஸ்பின் [Intrinsic Spin] என்னும் பண்பைப் பெற்றுள்ளன, அவற்றின் மதிப்பு 0,1,2 .... etc என முழு எண்களாக கொண்டுள்ள துகள்களுக்கான புள்ளியியலை  இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் அவர்களும் ஆல்பர்ட்  ஐன்ஸ்டீன் அவர்களும் சேர்ந்து [Bose-Einstein Statistics] உருவாக்கினார்கள்.  எனவே ஸ்பின் மதிப்பை  முழு எண்களாகக் கொண்ட துகள்கள் அனைத்தும் போஸான்கள் எனப்படும்.  அந்த வகையில் சுழற்சி [spin] 0 கொண்ட ஹிக்ஸ் துகள் ஒரு போஸானாகும், ஆகையால் ஹிக்ஸ் போஸான் என்றழைக்கப் படுகிறது.   சத்யேந்திரநாத் போஸ் அவர்களின் பணி ஓரளவுக்கு இங்கே பயன்படிருக்கக் கூடும், அதற்காக ஹிக்ஸும், போஸும்  கூட்டாஞ்சோறு சாப்பிட்டுக் கொண்டே இந்த தியரியை உருவாக்கினார்கள் என்பதெல்லாம் கட்டுக் கதை, கற்பனை.


பீட்டர் ஹிக்ஸ்


ஹிக்ஸ் போஸான் கண்டறியப் பட்டதாக 99.999% உறுதி செய்து விட்டதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்களே, ஏன் 100% என்று அவர்களால் உறுதியாகச்  சொல்ல முடியவில்லை?


இருபுறமும் சமமாகச் செய்யப் பட்ட ஒரு சீரான நாணயம் இருபதாக வைத்துக் கொள்வோம்.  அதைச் சுண்டி விட்டால் 50% பூ விழவும், 50% தலை விழவும் சம வாய்ப்பு உள்ளது.   இதை பல முறை சுண்டினால் தலை, பூ இரண்டின் எண்ணிக்கையும் கிட்டத் தட்ட சமமாக வருவதை வைத்து கண்டு கொள்ளலாம்.  ஒரு வேலை இவற்றில் ஏதாவது ஒன்று அதிகமாக வரும் வகையில் சமமாக இல்லாத நாணயமாக இருந்தால், அதையும்  பல முறை சுண்டினால் கண்டு பிடித்துவிட முடியும்.  ஆனால் எத்தனை முறை சுண்டுவது?  வெறும் பத்து முறை என்று வைத்துக் கொள்வோம்.  அதில், வாய்ப்பு குறைவாக உள்ள பக்கம் ஐந்து முறைக்கு மேல் வருவதற்கும் சான்ஸ் இருக்கிறது, ஏனெனில் நீங்கள் குறைந்த எண்ணிக்கையில் சுண்டியிருக்கிரீர்கள்.  அது தவறான முடிவுகளைத் தரக்கூடும்.  அதே பிரச்சினைதான் இங்கும்.  தற்போது கண்டு பிடிக்கப் பட்ட துகள் ஹிக்ஸ் போஸான்தான் என்பதை 5 சிக்மா நம்பிக்கைக்கு உறுதி செய்துள்ளார்கள், அதாவது அது வேறு துகளாக இருப்பதற்கான வாய்ப்பு முப்பைந்தைந்து  லட்சத்தில் ஒன்றாகும்.  அதுசரி, 100% எப்போது உறுதியாகும்? புரோட்டான்களை  கிட்டத் தட்ட ஒளியின் வேகத்திற்கு முடுக்கி, அவற்றை எதிரெதிர் திசையில் பயணிக்க வைத்து  மோதவிட்டு, ஒரு வினாடிக்கு 20கோடி -60 கோடி மோதல்கள் நடக்க வைத்து,  தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு இரவு பகலாக அதே அளவில் மோதல்கள் நடந்த பின்னர் அதன் தகவல்களைச் சேகரித்து ஆராய்ந்த பின்னரே,    தற்போது கண்டறியப் பட்ட துகள் உண்மையில் ஹிக்ஸ் போஸான்தனா இல்லையா என்று 100% உறுதியாகச் சொல்ல முடியும்.  எனவே காத்திருங்கள்.


ஹிக்ஸ் போஸான் இருப்பதை உறுதி செய்யும் LHC, 80 நாடுகள் கூட்டு சேர்ந்து  ஐம்பதாயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப் பட்டு, பத்தாயிரம் இயற்பியல் விஞ்ஞானிகளும், எஞ்ஜினீயர்களும் இராப் பகலா உழைக்கிறார்களாமே?  இதப் பத்தி சொல்றதெல்லாம் ஒன்னும் மண்டையில ஏற மாட்டேங்குது, நீங்க என்னமோ பண்ணிக்கிட்டு போங்க, ஆனா ஒரு கேள்வி: இவ்வளவு கஷ்டப் பட்டு இதைக் கண்டு பிடிச்சதுக்கப்புறம், மனித இனத்துக்கு இதனால எதாவது பிரயோஜனம் உண்டா?  


நெஞ்சு மேல கை வச்சு சொல்லனும்னா, இதனால என்ன பிரயோஜம்னு  தெரியாது.  ஆனால் ஒரு வரலாற்று நிகழ்வு மட்டும் நினைவுக்கு வருகிறது.  இருநூறு வருடங்களுக்கு முன்னர், மைக்கேல் ஃபாரடேவின் ஆய்வுக் கூடத்துக்கு அந்நாட்டு [இங்கிலாந்து] பிரதமர் கிளாட்ஸ்டோன் வருகை புரிந்தார்.  அங்கே இருந்த லேடன் ஜார், கசமுசாவென்று கிடந்த வயர்கள் எல்லாம் பார்த்தார்.   மைக்கேல் ஃபாரடே, மின்சாரம் செல்லும் வயர்கள் இயக்கம், காந்தப் புலத்தால் என்ன மாற்றமடைகிறது என்பதை விளக்கினார்.  அதையெல்லாம் கவனமாக கேட்ட பிரதமர், "நீங்க சொல்றதெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா என்றைக்காவது ஒருநாள் இதால மனுஷனுக்கு எதாச்சும் பிரயோஜனம்  இருக்குமான்னு தெரியலையே" என்றாராம்.  கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், மின்சார மோட்டார்,  எல்லா மின் உற்பத்தி நிலையங்களிலும் [நீர், நிலக்கரி, அணு மின் நிலையங்கள்] இயங்கும் ஜெனரேட்டர்கள், எலக்டிரானிக்ஸ், ரேடியோ அலைகள்- இவை இல்லாத உலகம் இன்றைக்கு எப்படி இருந்திருக்கும் என்று!!  ஹிக்ஸ் போசானைப் பிடிப்பது இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த சாதனை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

சரி இப்போ ஹிக்ஸ் போஸான் பத்தி எளிமையான, அருமையான காமிக் படம் ஒன்னு பாருங்க!!





91 comments:

  1. நாந்தான் முதல் பின்னூட்டம்ங்க ஜெய்வேல்!!! :)

    ReplyDelete
  2. Jeyvel: Please remove the "word verification"! Thanks!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி வருண், சரி செய்து விட்டேன் என்று நினைக்கிறேன்.

      Delete
  3. ***விஞ்ஞானிகள் ஹிக்ஸ் போஸான் கண்டறியப் பட்டதாக 99.99% உறுதி செய்து விட்டதாகச் சொல்கிறார்களே, ஏன் 100% உறுதியாகச் என்று சொல்ல முடியவில்லை?***

    நான் இந்த ஹிக்ஸ் போஸான் பத்தி படிக்கனும். 100% உறுதியா என்றுமே சொல்ல முடியாது. அதனால கவலையை விடுங்க! :)))

    ReplyDelete
  4. பதிவுலகத்துக்கு வருக வருக !!! தொடர்க !!!

    ReplyDelete
  5. pls remove word verification. word verification will reduce the pinnoottam

    ReplyDelete
    Replies
    1. Thanks for visiting, I turned off word verification now, don't know how to check.

      Delete
    2. I am testing..It is fine now! Congrats, Jeyavel! :)

      Delete
  6. Testing Word verification.

    ReplyDelete
  7. வலையுலகிற்கு உங்களின் வரவு நல்வரவாகட்டும் :))

    வாழ்த்துகள் ஜெயதேவ் :)

    கட்டுரையை கொஞ்ச நேரம் கழித்து படித்துவிடுகிறேன் ....

    ReplyDelete
  8. நாங்களும் வந்துட்டம்ல.........

    ReplyDelete
    Replies
    1. "ஐயா பாருங்க........ அம்மா பாருங்க.......... நானும் பதிவு போட்டுட்டேன்............. அதுக்கு Pig Rams அண்ணனும் பின்னூட்டம் போட்டிருக்கார்....... நம்புங்க.........நானும் ரவுடிதான் .. சீ.......... நானும் பதிவர்தான்............ நானும் பதிவர்தான்............ நானும் பதிவர்தான்............!!"

      Delete
    2. யோவ் சைலன்ட்டா என்னைய அண்ணன்னு சொல்லி யூத்தாகிடலாம்னு பாக்குறீங்களா, அப்படிலாம் சும்மா விட்ருவமா நாங்க?

      Delete
    3. உங்களை அண்ணன் என்பதை வயதை வச்சு சொல்லவில்லை, பதிவுலகை எழுத்தால் கலக்கி, பதிவு போட்ட அடுத்த பத்து நிமிஷத்தில் நூறு கமண்டுகள் வரவைக்கும் திறமையை வச்சிருக்கீங்களே, அதுக்காக அண்ணன்னு சொன்னேன், சரிதானே!!

      Delete
    4. அது மட்டுமல்ல, நீங்க எடுத்துக் கொண்ட கேரக்டர் ராம்சாமி அண்ணன் தானே, அவரை அப்படித்தானே அழைக்க வேண்டும்!! சரி போகட்டும், இப்ப பாருங்க, பதிவின் இறுதியில் ஒரு Comic-கை சேர்த்திருக்கேன், நல்லாயிருக்க பாருங்க.

      Delete
    5. இது எனக்குத்தேவையா?சரி, வீடியோ அப்புறம் பார்க்கிறேன்

      Delete
  9. நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. @ Robin

      நன்றி நண்பரே, முதல் வருகைக்கு நன்றி. பதிவைப் பத்தி ஏதாவது ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா நான் சந்தோஷப் படுவேன், Anyway, thanks for coming!!

      Delete
  10. தாஸ்: எனக்கு உங்க மேலே செம கோபம். கடை திறந்தா சொல்றதில்லையா? வருண் பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்துட்டு வந்தேன் இல்லாட்டி தெரிஞ்சிருக்காது

    வாழ்த்துக்கள். நிச்சயம் கலக்குவீங்கன்னு நம்புறேன் இன்னும் ரெண்டு மூணு பதிவு நீங்க எழுதிய பின் நம் ப்ளாகில் உங்கள் பதிவை அறிமுக படுத்துறேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி சார், நான் தங்கள் பக்கத்துக்கு வருகை தருவதற்கு கைமாறாக நீங்கள் என் பக்கங்களுக்கு வந்து கமண்டு போட வேண்டும் என்ற கட்டாயத்தை தங்களுக்கு ஏற்ப்படுத்த மனம் இடம் தரவில்லை, அதான், மன்னிக்கவும்!!

      Delete
  11. அறிவியல் கண்டுபிடிப்புகள் என்றும் வீண்போகாது. பயன்படுத்துகிற மனிதனிடத்தில்தான் பிரச்சினை., :)

    முதல் கட்டுரையே அறிவியல்ரீதியானதாக அமைந்துவிட்டது., பாராட்டுங்கள்.,

    கலக்குங்க ஜெய் :))))

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சிவா........

      Delete
  12. Replies
    1. முதல் வருகைக்கு நன்றி பாஸ். புதிய பதிவர் நான். ஏதாவது பதிவில் மாற்றங்கள், திருத்தங்கள் தேவையா என்று தங்களைப் போன்ற அனுபவமிக்க பதிவர்கள் சொன்னால் உதவியாக இருக்கும்!!

      Delete
  13. இதுதான் உங்கள் முதல் பதிவா? அப்படியானால் கீழ்ப்பாக்கம் போகிறதுக்கு மூன்றாவது வழியைக் கண்டுபிடித்து விட்டேன். (மற்ற இரண்டு வழிகளுக்கு என்னுடைய பதிவைப் பார்க்கவும்)

    தொடர்ந்து எழுதுங்கள். கீழ்ப்பாக்கத்தில் சந்திப்போம்.

    இந்த ஹிக்ஸ் போசான்ல ஒண்ணு ரெண்டு சேம்பிளுக்கு வேணுமே, எங்க கிடைக்குமுங்க.

    atomic physics is a subject which dwells in the clouds.

    ReplyDelete
    Replies
    1. நான் இங்கு கொடுத்துள்ள தகவல்கள் யாவும், ஊடகங்களில் வந்த செய்திதான், அறிவியல் பற்றி எதுவுமே தெரியாதவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் தான் சொல்லியிருக்கிறேன், ஆகையால் இந்த வழியில் நீங்கள் சொன்ன ஊருக்குப் போக முடியாது. மற்ற இரண்டு வழிகளை மட்டும் ஆராயலாம். [அது சரி சார், இந்த கீழ்ப்பாக்கத்த இந்த வெளு வெளுக்கிரீங்களே, கீழ்ப்பாக்கத்துல வாசிக்கிறவங்க தமிழ்நாட்டுல வேற எந்த ஊருக்காச்சும் போயி அங்க யாராச்சும், "நீங்க சென்னையில எங்க இருந்து வரீங்கன்னு" கேட்டா அவங்க, அத எப்படி சமாளிப்பாங்கன்னு நினைச்சாலே பரிதாபமா இருக்கு. "நாங்க கீழ்ப்பாக்கத்துல இருந்து வரோம்னு" சொல்ல முடியுமா?

      ஹிக்ஸ் போஸான் இந்தப் பேரண்டம் முழுவது வியாபித்திருக்கிறது சார். இல்லாத இடமே இல்லை. [ஒரு வேலை கடவுள் துகள் என்னும் பெயர் இந்த காரணத்தால் கூட பொருந்துமோ!!]. உங்க உடலில் இருக்கும் ஒவ்வொரு அணுவில் உள்ள அடிப்படைத் துகள்களும், ஹிக்ஸ் போஸானால் சிக்கித் தவிப்பதால் தான் அது உங்கள் உடலில் இருக்கிறது, இல்லாவிட்டால் பறந்து போயிருக்கும், அதுவும் மணிக்கு மூணு லட்சம் கி.மீ. வேகத்தில்.

      Delete
    2. \\atomic physics is a subject which dwells in the clouds.\\ எனக்குப் புரியலே, இதோட அர்த்தத்தையும் சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்!!

      Delete
  14. ஹிக்ஸ் போசான் சேம்பிள் எதுக்குன்னு கேக்கறீங்களா? இதுக்குத்தானே கடவுள் துகள்னு பேரு. எங்கூட்டு சாமி ரூம்ல வைக்கறதுக்குத்தானுங்க. வச்சா நெனக்கறது எல்லாம் நடக்குமாமே?

    சரி, இதெல்லாம் போகட்டும், உங்க பிளாக்குல comment moderation வையுங்க. ஆபத்துக்கு உதவும்.

    ReplyDelete
    Replies
    1. \\comment moderation வையுங்க\\ நீங்க அனுபவசாலி, சொன்னா சரியாத்தான் இருக்கும். ஆனால் சில சமயம் பின்னூட்டங்கள் வெளியாவதில்லை, தங்கள் பதிவிலேயே எனக்கு இது நடந்திருக்கிறது. இப்பொது உடனே வெளியாவதால் அந்தப் பிரச்சினை இருக்காது. மேலும், பதிவிற்கு எதிரான கருத்துக்களை இருட்டடிப்பு செய்யவில்லை என்பதற்கும் இது சான்று. மோகன் குமார், பன்னிகுட்டி ராம்சாமி அண்ணன் எல்லோரும் மாடரே ஷன் வைக்காமல் தான் உள்ளார்கள், தேவைப் பட்டால் அதைச் செயல்படுத்துகிறேன்.

      ஒரே ஒரு சந்தேகம் சார், இப்படி எச்சரிக்கையா இருக்கும் நீங்க, பேங்குல வாங்கின லோனைக் கட்ட வேண்டியதில்லைன்னு எல்லாம் பயப்படாம பதிவு போட்டு தாக்குறீங்களே, எப்படி சார்?! கருத்துக்கு நன்றி.

      Delete
  15. சூப்பரா இருக்குங்க கட்டுரை. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை மகிழ்ச்சியாக இருக்கிறது பாஸ், தொடர்ந்து நம்ம கடைக்கு வாங்க!!

      Delete
  16. நல்ல பதிவு கடவுள்துகள்பற்றி நானும் ஆராய்வதாக இருந்தேன்... நீங்களே ஆரம்பித்துவிட்டீர்கள்...வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நான் மட்டுமே எல்லாவற்றையும் எழுதி முடியுமா என்ன? நீங்களும் எழுதுங்கள், மேலும் நான் கற்றுக் கொள்வேன்!! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா!!

      Delete
  17. பதிவுலகிற்கு உங்களை வருக வருகவென வரவேற்கிறேன்...!

    முதல் பந்திலேயே சிக்ஸர் அடிச்சிட்டீங்க...! வாழ்த்"துகள்"...

    அப்படியே அந்த கடவுள் துகள்ள ஒரு ஸ்பூன் அள்ளிக்கொடுங்க வாயில போட்டுக்குறேன்... அப்படியாவது இறையருள் எனக்குள் இறங்குகிறதா என்று பார்ப்போம் :)

    பின்னூட்டப்பெட்டி ஸ்டைலை மாற்றவும்... பார்க்க, என்னுடைய வலைப்பூவின் பின்னூட்டப்பெட்டி...

    ReplyDelete
  18. மிக நன்றாக தெளிவாக உள்ளது உங்களின் கட்டுரை.நான் கடவுள் துகள் பற்றி முன்பே கேள்விப்பட்டிருந்தேன் தற்போது தான் அறிந்து கொண்டேன்.எனக்கு ஒரு சந்தேகம்.அனைத்து பொருட்களுக்கும் புரோட்டான்,நியூட்ரான்,எலக்டரான் இவை இருப்பதாக சொல்கிறார்கள்.நியூற்றான் தவிர மற்ற இரண்டுக்கும் எடை உண்டு என்று படித்திருக்கிறேன்.அனைத்து பொருட்களின் எடைக்கும் இந்த கடவுள் துகள் தான் காரணம் என்று சொல்கிறார்களே,இவை Atomic particls சா?,இல்லை sub atomic particles சா?,அணுவில் இவை எங்கே இருக்கும்?.மறக்காமல் விடை சொல்லவும்.அண்ணா நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த புத்தகம் மின்புத்தக(pdf)வடிவில் கிடைக்குமா?

    ReplyDelete
  19. வலைப்பூக்களில் அறிவியல் சார்ந்த பதிவுகள் எழுதுபவர்கள் குறைவாகவே உள்ளனர்.தொடருங்கள்...தங்கள் தளத்தில் Follwer ஆக இணைவதில் மகிழ்கிறேன்.

    ReplyDelete
  20. @ Vijayan

    எலக்டிரான்கள் பகுக்க முடியாதவை, அதாவது அவை வேறெந்த துகள்களாலும் ஆனவை அல்ல. ஆனால், புரோட்டான்கள், நியூட்ரான்கள் அப்படியல்ல. அவை குவார்க்குகள் என்னும் அடிப்படைத் துகள்களால் ஆனவை. குவார்க்குகளும், எலக்டிரான்களும் அடிப்படைத் துகள்கள், இவற்றைக் கொண்டு எல்லா அணுக்களையும் உருவாக்க முடியும். இந்த பிரபஞ்சம் பெருவெடிப்பில் [Big Bang] தோன்றியபோது எல்லா துகள்களும் அடிப்படைத் துகல்கலாகத்தான் இருந்தன, புரோட்டான்கள், நியூட்ரான்கள் கூட உருவாகியிருக்கவில்லை. அப்போது குவார்க்குகளும் மற்ற அடிப்படைத் துகள்களும் ஒளியின் வேகத்தில் சென்றுகொண்டிருந்தன. Big Bang நடந்த பின்னர் ஒரு வினாடியில் கோடான கோடியில் ஒரு பங்கு நேரம் ஆன பிறகு ஹிக்ஸ் புலம் தோன்றியது. அதில் உள்ள ஹிக்ஸ் போஸான்களுடன் மோதல் நடக்க ஆரம்பித்து அடிப்படைத் துகள்களின் வேகம் குறைய ஆரம்பித்தது, அந்த வகையில் அடிப்படைத் துகள்கள் நிறை பெற்றன. அதன் பின்னரே புரோட்டான்கள், நியூட்ரான்கள், அணுக்கள், நட்சத்திரங்கள், பூமி நீங்கள் நான் எல்லோரும் தோன்றினோம். ஹிக்ஸ் புலம் தோன்றாதிருந்திருந்தால் இந்நேரம் எல்லாம் மணிக்கு மூன்று லட்சம் கி.மீ. வேகத்தில் பறந்துகொண்டுதான் இருந்திருக்கும்.

    ReplyDelete
  21. எவ்வாறு துகள்கள் நிறை பெறுகின்றன என்பதை சொல்லும் புதிதாக வீடியோ இணைத்துள்ளேன், சர்க்கரை, பந்துகள் மூலம் விளக்கியுள்ளார்கள், பாருங்கள், அந்த மின் புத்தகம் தேடுகிறேன், கிடைத்தால் தகவல் தெரிவிக்கிறேன், தொடர்ந்து பின்னூட்ட இணைப்பில் இருங்கள்.

    ReplyDelete
  22. வாங்க வாங்க; ஹிட்ஸ் என்னும் மாயைக்குள்ளும் டெம்ளேட் கமன்ட் என்னும் மாயைக்குள்ளும் அகப்படாமல், சிறந்த பதிவெழுதி, எழுத்துலக நடப்பை வழர்க்க அன்புடன் தங்களை அழைக்கின்றேன்!! டெம்லேட்டாக இல்லாமல் என்னுடன் அதிக தடவைகள் கருத்துக்களுடன் மோதிய மற்றும் அனுசரித்த நண்பர் நீங்கள்தான் :-)

    ReplyDelete
    Replies
    1. @ ஜீவதர்ஷன்

      நீங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி. எல்லா பதிவுகளுக்கும் நீங்க வந்து படிச்சிட்டு கருத்து சொல்லனும்கிறது எனது விருப்பம், இது மொய்க்கு மொய் அல்ல, ஆனாலும், நீங்க கண்டிப்பா வந்து கருத்துரையிடனும், வருகைக்கு நன்றி!!

      Delete
  23. ஜெய்தேவ் இதுவரை வாசிப்பவராகவே இருந்த நீங்கள் இப்போது பதிவுலகிற்கு அடி எடுத்து வைத்து பதிவராகிய மாறிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

    ஜெய்தேவ் நீங்கள் எங்கள் பதிவிற்கு இடும் பின்னுட்டங்கள் பதிவைவிட மிக நன்றாக இருக்கும். இப்போ நீங்களும் கடையை திறந்துட்டீங்க...ஹூம் இனி யாரு எங்கள் பதிவிற்கு பின்னுட்டம் இடுவார்கள்

    ReplyDelete
    Replies
    1. @ Avargal Unmaigal

      தங்கள் கடையில் உள்ள சரக்கு என் கடையில் இருக்கப் போவதில்லையே, ஆகையால் உங்கள் கடைக்கு நான் போட்டியாக இருக்கப் போவதில்லை. மேலும், நான் உங்கள் கடையின் முக்கிய வாடிக்கையாளனாக இப்போதும் இருக்கிறேன் என்பதை மறக்க வேண்டாம்!!

      Delete
  24. வீடியோ இணைப்பு பார்த்தேன்.என் புரிதலை பகிர்ந்து கொள்கிறேன் சரியா? தவறா? என சொல்லவும்,ஹிக்ஸ் புலத்தில் இருக்கும் துகள்கள் தான் ஹிக்ஸ்போசானா? இன்னொரு விசயம் ஒன்று படித்தேன் ஹிக்ஸ் புலத்தில் உள்ள ஹிக்ஸ்போசான்களின் இருப்பை ஊர்ஜிதமாக சொல்லவில்லையாமே? இவை இருக்கலாம் என்று குத்துமதிப்பாக தான் சொல்கிறார்களாமே உண்மையா?

    ReplyDelete
    Replies
    1. @ Vijayan

      God Particle புத்தகம் pdf வடிவில் இல்லை. புத்தகமாகக் கிடைத்தால் தங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன். ஹிக்ஸ் போஸான் பற்றி அறிந்துகொள்ள இன்னும் சில அடிப்படை விவரங்களைத் தர வேண்டியிருக்கிறது, அவற்றை ஒரே பதிவில் தந்தால் மிக நீளமாக இருக்குமாகையால், சில பகுதிகளாகத் தர இருக்கிறேன், தொடர்ந்து படித்து வாருங்கள்.

      Delete
  25. நீங்கள் சென்ற முறை கேட்ட கேள்விகளுக்குத் தகுத்த மாதிரி பதிவை மாற்றியிருக்கிறேன், மீண்டும் ஒரு முறை பதிவை முழுதுமாகப் படிக்கவும், உங்கள் சந்தேகங்கள் தீரும். மேலும் சந்தேகங்கள்இருந்தால் கேட்கலாம்.

    அடுத்து, ஹிக்ஸ் புலம், ஹிக்ஸ் போஸான் குழப்பம் ஏற்படுத்துகிறது என நினைக்கிறேன். ஒரு உதாரணம், மின்னூட்டம் இருக்கிறது [Electrical Charge] என வையுங்கள், அதைச் சுற்றி மின்புலம் ஏற்படுகிறது, [Electric Field], இன்னொரு மின்னூட்டமுள்ள ஒரு துகளை அந்த மின்புலத்தில் வைக்கும் போது அது ஈர்க்கப் படவோ விளக்கப் படவோ செய்கிறது. ஒரு மின்னூட்டத்தை அலைவுரச் [Oscillate , Vibrate ] , செய்தால் ஃபோட்டான்கள் உருவாகின்றன. [ஒளியும் ஃபோட்டான்களே.] ஆனால், மின்புலத்தை உருவாக்க மின்னூட்டம் தேவைப் படுகிறது, காந்தப் புலத்தை உருவாக்க காந்தம் தேவைப் படுகிறது, இந்த ஹிக்ஸ் புலத்தை உருவாக்க எதுவும் தேவையில்லை. பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதில் தோன்றி மறையும் துகள்களே ஹிக்க்ஸ் போஸான்களாகும். அடிப்படைத் துகள்கள் இவற்றுடன் முட்டி மொதுவதால்தான் அவை நிறை என்ற ஒன்றைப் பெறுகின்றன. பதிவை மீண்டும் ஒரு முறை முழுமையாகப் படிக்கவும்.

    ReplyDelete
  26. முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள். முதல் பதிவே அருமையாக வந்துள்ளது. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. @ சுவனப் பிரியன்

      தங்களின் முதல் வருகைக்கு நன்றி நண்பரே. தொடர்ந்து வாருங்கள், ஆதரவு தாருங்கள்!!

      Delete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    இந்த செய்தி வந்தநாளிலிருந்து இதுபற்றிய நிறைய பதிவுகள் படித்திருந்தாலும் தங்களுடைய பதிவைப் படித்ததில் மகிழ்ச்சியே..
    Gods particle, higgs bosan, bing bang theory பற்றி தெளிவான தகவல்கள்.. நன்றி.

    மேலும் உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துகிறேன் ஜெயதேவ் சார்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மேடம், அப்பப்போ நம்ம பதிவுகளைப் படிச்சு கருத்துகளைத் தெரிவிச்சு என்னையும் ஊக்கப் படுத்துங்க!!

      Delete
  29. பதிவுலகிற்கு உங்களை வரவேற்கிறேன். முதல் பதிவே சிறப்பான பதிவு தொடருங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. @ARIVU KADAL

      என்னைத் தேடிவந்து வாழ்த்தியமைக்கு நன்றி, பதிவு நன்றாக இருக்கிறது என்று நீங்க சொல்லியிருப்பது சந்தோஷமா இருக்கு, தொடர்ந்து வாங்க!!

      Delete
  30. ***அதே மாதிரி பிரபஞ்சத்தில் உள்ள படைப்பு அத்தனைக்கும் கடவுள் காரணமாக இருந்தது போலவே, ஹிக்ஸ் போஸானின் படைப்புக்கும் காரணமாக இருந்தார் என்பதைத் தவிர தனிப்பட்ட வேறெந்த தொடர்பும் இல்லை!! ****

    ஆத்தாடி, இதென்னங்க ரொம்ப ரொம்ப அநியாயமா இருக்கு!

    * டி என் எ கண்டுபிடிச்சா, கடவுள்தான் கண்டு பிடிச்சாரு இல்லை கண்டுபிடிக்க வச்சாரு!னு சொல்றீக

    அப்புறம், கம்ப்யூட்டர் கண்டுபிடிச்சா அதையும் கடவுள்தான் கண்டு பிடிச்சாரு இல்லை கண்டுபிடிக்க வச்சாரு!னு சொல்றீக

    இப்போ புதுசா ஒரு "கடவுள் துகள்" கண்டுபிடிச்சா அதுவும் கடவுள்தான் கண்டுபிடிச்சாரு/கண்டுபிடிக்க வச்சாரு னு சொல்றீக!

    அடுத்து கடவுள் என்ன கண்டுபிடிப்பாரு/கண்டுபிடிக்க வைப்பாருனு சொல்ல மாட்டீக. ஆனா புதுசா எதையாவது கண்டுபிடிச்சா "அதுவும் கடவுள்தான் கண்டுபிடிச்சிருப்பாக"னு சொல்லுவீக போல!

    சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும்..

    * ஒரு பச்சைகுழந்தை பஸ்ஸுல இருந்து விழுந்து இறந்து போச்சு. அதைக் கொன்னது யாரு? எல்லாம் செய்ற கடவுளா?

    * ஒரு 10 வயது பெண் குழந்தையை ஒரு மனுஷ மிருகம் "கெடுக்குது". இதில் கடவுள் பங்கு என்ன?

    விளக்கம் தேவை, ஜெயவேல்! :)

    ReplyDelete
    Replies
    1. \\* டி என் எ கண்டுபிடிச்சா, கடவுள்தான் கண்டு பிடிச்சாரு இல்லை கண்டுபிடிக்க வச்சாரு!னு சொல்றீக\\

      \\இப்போ புதுசா ஒரு "கடவுள் துகள்" கண்டுபிடிச்சா அதுவும் கடவுள்தான் கண்டுபிடிச்சாரு/கண்டுபிடிக்க வச்சாரு னு சொல்றீக!\\

      வருண், நீங்க அமெரிக்கா போய் முதல் தடவையாக பிளேனை விட்டு இறங்கியதும், யுரேகா.....யுரேகா......... நான் அமெரிக்காவைக் கண்டுபிடிச்சிட்டேன்னு நியூ யார்க் வீதிகளில் ஓடியிருப்பீங்க போல!! விட்டா, நியூட்டன் மட்டும் இல்லைன்னா ஆப்பிள் எல்லாம் கீழேயே விழாம அந்தரத்தில் தொங்கிகிட்டு இருந்திருக்கும்னு சொல்லுவீங்க போலிருக்கே!! நான் இந்தப் பதிவு முழுவதும் கண்டறிதல் என்ற வார்த்தையைத்தான் கையாடிருக்கேன், கண்டுபிடிச்சான்கிற வார்த்தையைப் போடவில்லை!! ஹிக்ஸ் போஸான்கள் 1370 ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சம் தோன்றிய நேரத்திலிருந்து இந்த நொடி வரை பிரபஞ்சம் எங்கும் நிறைந்திருக்கிறது, நீங்க இப்பத்தான் அதை "பார்க்கப்" [இந்த வாரத்தின் அர்த்தமேன்னணு சொல்றதுக்கே ஒரு பதிவு போடணும்!!] போறீங்க.

      இந்த வீடியோவைப் பாருங்க, முதல் 15 வினாடிகளுக்குள் உங்களுக்கான பதில்கள் இருக்கிறது.
      http://www.youtube.com/watch?v=6guXMfg88Z8

      Delete
    2. \\அடுத்து கடவுள் என்ன கண்டுபிடிப்பாரு/கண்டுபிடிக்க வைப்பாருனு சொல்ல மாட்டீக. ஆனா புதுசா எதையாவது கண்டுபிடிச்சா "அதுவும் கடவுள்தான் கண்டுபிடிச்சிருப்பாக"னு சொல்லுவீக போல!\\ God Particle என்ற பெயரில் சும்மா இருந்த கடவுளை இழுத்தாந்து உட்டது நாங்க இல்லீங்கோவ்!! உங்க விஞ்ஞானிங்க தானுங்கோவ். அவங்க God என்ற வார்த்தையை எந்த அர்த்தத்தில் கையாண்டார்களோ அதே அர்த்தத்தில்தான் நான் பதிவிலும் கையாண்டிருக்கிறேன். வேணுமின்னா, ஏன்டா இந்த மாதிரி அர்த்தமில்லாத வார்த்தையைப் பயன் படுத்துனீங்கன்னு அவங்களைப் பொய்க் கேளுங்கோவ்!!

      Delete
    3. \\* ஒரு பச்சைகுழந்தை பஸ்ஸுல இருந்து விழுந்து இறந்து போச்சு. அதைக் கொன்னது யாரு? எல்லாம் செய்ற கடவுளா?
      * ஒரு 10 வயது பெண் குழந்தையை ஒரு மனுஷ மிருகம் "கெடுக்குது". இதில் கடவுள் பங்கு என்ன?\\
      வருணுக்கு நாக்கில் எச்சில் ஊரும்போதேல்லாம் ஒரு ஆட்டைப் போட்டுத் தள்ளுறாரு, மீன் வறுவலை உள்ளே தள்ளுறாரு, அந்த மாதிரி சமயத்துல கடவுளே, இந்த வருண் இப்படி எங்களைப் பண்ணும்போது நீ என்ன பண்ணிக்கிட்டு இருகீன்னு அழுமே, அதுக்கு வருண் என்ன சொல்லப் போறாரு? அப்படியே இதையெல்லாம் பாத்துகிட்டு சும்மா இருக்காருன்னா, அதனால் கடவுள் இல்லைன்னு நிரூபணமாகுமா? இயலாத கடவுள் இருக்காரு, கருணையே இல்லாத கடவுள் இருக்காரு என்றுதான் ஆகும்.

      வருண், பதிவு போட்டதுக்கப்புறம் இரண்டு வீடியோக்களை சேர்த்திருக்கிறேன், வாசகர்கள் கேட்ட கேள்விகளை வைத்து படிக்கும்போதே தெளிவாகும்படி வாக்கியங்களைச் சேர்த்தும் இருக்கிறேன், படித்துவிட்டு இவற்றில் தவறுகள் இருக்கிறதா, மாற்றம் தேவையா என்று சொன்னால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

      Delete
    4. \\1370 ஆண்டுகளுக்கு \\ Correction: 13.7 Billion years or 1370 Crore years.

      Delete
    5. கடவுள் துகள் என்பது சரியானதல்ல. நாசமாய்ப் போன துகள் என்பதுதான் சரி. --புதிய தலைமுறை இதழ்--

      புத்தகம் விற்பனை ஆகாது என்று மாற்றப்பட்ட பெயர் தான் 'God Particle'. உண்மையாகவே வைத்த பெயர் 'நாசமாய்ப் போன துகள்'.

      பொருள்முதல் வாதம் தான் உண்மை. கருத்து முதல்வாதம் என்ற கடவுள் வாதமெல்லாம் உண்மையில்லை. அறிவு நாணயத்தோடு எழுதுங்கள் ஜெயதேவ்.

      Delete
  31. ***வருணுக்கு நாக்கில் எச்சில் ஊரும்போதேல்லாம் ஒரு ஆட்டைப் போட்டுத் தள்ளுறாரு, மீன் வறுவலை உள்ளே தள்ளுறாரு, அந்த மாதிரி சமயத்துல கடவுளே, இந்த வருண் இப்படி எங்களைப் பண்ணும்போது நீ என்ன பண்ணிக்கிட்டு இருகீன்னு அழுமே, அதுக்கு வருண் என்ன சொல்லப் போறாரு?***

    நான் ஒரு "அனிமல் ஆக்டிவிஸ்ட்" ங்க. என்னைவிட மனிதன் மிருகங்களுக்கு செய்ற கொடுமையை சுட்டிக்காட்டும் ஆள் உலகில் இல்லை!

    நீங்க நான் கொடுத்த உதாரணங்களுடன் இதையும் சேர்த்தே பதில் சொல்லலாம்!

    அதாவது..


    * ஒரு பச்சைகுழந்தை பஸ்ஸுல இருந்து விழுந்து இறந்து போச்சு. அதைக் கொன்னது யாரு? எல்லாம் செய்ற கடவுளா?

    * ஒரு 10 வயது பெண் குழந்தையை ஒரு மனுஷ மிருகம் "கெடுக்குது". இதில் கடவுள் பங்கு என்ன?

    * வருணுக்கு நாக்கில் எச்சில் ஊரும்போதேல்லாம் ஒரு ஆட்டைப் போட்டுத் தள்ளுறாரு, மீன் வறுவலை உள்ளே தள்ளுறாரு, அந்த மாதிரி சமயத்துல கடவுளே, இந்த வருண் இப்படி எங்களைப் பண்ணும்போது நீ என்ன பண்ணிக்கிட்டு இருகீன்னு அழுமே, அதுக்கு வருண் என்ன சொல்லப் போறாரு?

    இப்போ சொல்லுங்க, இந்த மூனு கேஸ்லயும், கடவுளின் பங்கு ஏதாவது இருக்கா? இல்லைனா கடவுள் நல்லவைகள்/கண்டுபிடிப்புகள் இவைகளுக்கு மட்டும்தான் "க்ரிடிட்" எடுத்துக்குவரா?? அப்படினா கடவுள் செய்றது முழு அயோக்கியத்தனம் இல்லையா? :)

    ReplyDelete
    Replies
    1. அப்போ அயோக்கியத் தனம் பண்ற கடவுள் இருக்காருன்னு தானே அர்த்தம், இல்லைன்னு ஆகாதே!!

      Delete
  32. ***அப்போ அயோக்கியத் தனம் பண்ற கடவுள் இருக்காருன்னு தானே அர்த்தம், இல்லைன்னு ஆகாதே!!***


    உங்க லாஜிக் படியே அயோக்கியத்தனம் செய்ற கடவுள் இருக்கார்னு நான் ஒத்துக்கிறேன்னு வச்சுக்குவோம்.

    அப்படியே தொடருகிறேன்..

    அப்படிப் பட்ட அயோக்கிய கடவுளை நான் எதுக்கு வணங்கனும்? நான் எதுக்கு பெருசா நெனைக்கனும்? என்பதுதான் இதில் பிரச்சினை! :-)

    ReplyDelete
    Replies
    1. \\அப்படிப் பட்ட அயோக்கிய கடவுளை நான் எதுக்கு வணங்கனும்? நான் எதுக்கு பெருசா நெனைக்கனும்? என்பதுதான் இதில் பிரச்சினை! :-)\\ ஒருத்தரை குற்றவாளின்னு தீர்மானிக்கிறதுக்கு முன்னாடி அவரோட பக்கம் இருக்கும் நியாயத்தையும் கேட்பதுதானே நியாயம்? நாமலே தீர்ப்பை சொல்லிட்டா எப்படி?

      குஷ்புகிட்ட இருந்து என்ன கிடைச்சதுன்னு ஒருத்தன் கோவில் கட்ட நினைச்சான்? டெண்டுல்கர் மேல எதுக்கு சனம் பைத்தியமா இருக்கு? நடிகர்கள் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் எதற்கு? இவங்க மேல் ஈர்க்கப் பட்டு, இவங்களிடம் உள்ள திறமையைப் பார்த்து, இவங்ககிட்ட இருக்கும் ஏதோ ஒன்னு மனசுக்கு பிடிச்சதாலத்தானே? வெறும் பந்தை கட்டையால் மைதானத்துக்கு வெளியே அடிச்ச ஒருத்தன் மேல் தீராத பிரியம் வரும்போது, இந்த பிரபஞ்சத்தைப் படைச்ச ஒருத்தன் மேல பக்தனுக்கு பிரியன் வருவதி ஆச்சரியமே இல்லை.

      Delete
  33. அப்புறம் "கடவுள் துகள்" என்பது சும்மா ஒரு பேரு வச்சிருக்காங்க. அதை விஞ்ஞானிகள் ஏற்றுக்கவில்லை!

    ////Noting the elusive search for the Higgs boson, the term "God particle" was coined by Nobel Laureate Leon Lederman, Director Emeritus of Fermi National Accelerator Laboratory. However, the scientific community generally disapproves of this nickname. The existence of this particle neither supports nor doesn't support the existence of God.///

    மேலே யாரோ சொல்லியிருப்பது போல, "கடவுள் துகள்" கடவுள் இல்லைனு நிரூபிக்கும்னு நான் நம்பவில்லை! இதுதான் என் நிலைப்பாடு! அதனால, கடவுள் இருக்கார்னு ஏற்றுக்கொண்டேன்னு தவறா புரிஞ்சுக்காதீங்க! :)

    ReplyDelete
    Replies
    1. இந்த துகளுக்கு, கடவுள் இருக்காரா இல்லியா என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நானும் ஏற்கிறேன்.

      Delete
  34. ***\\அப்படிப் பட்ட அயோக்கிய கடவுளை நான் எதுக்கு வணங்கனும் ? நான் எதுக்கு பெருசா நெனைக்கனும்? என்பதுதான் இதில் பிரச்சினை! :-)\\

    ஒருத்தரை குற்றவாளின்னு தீர்மானிக்கிறதுக்கு முன்னாடி அவரோட பக்கம் இருக்கும் நியாயத்தையும் கேட்பதுதானே நியாயம்? நாமலே தீர்ப்பை சொல்லிட்டா எப்படி? ***

    இங்கு தீர்ப்பு வழங்கவில்லைங்க. கேள்விக்குறிகள் ஒவ்வொரு வாக்கியத்திலும் இருக்கே! :)

    ReplyDelete
    Replies
    1. \\கேள்விக்குறிகள் ஒவ்வொரு வாக்கியத்திலும் இருக்கே!\\ அயோக்கியன் என்று முடிவு செய்வதற்கு முன்னர் , சம்பந்தப் பட்டவரின் நியாயத்தையும் கேட்பது தானே முறை?

      Delete
    2. நீங்க நியாயத்தை சொல்லுங்க! கடவுள் வந்து சொல்லப் போவதில்லை! நீங்கதான் சொல்லனும், ஜெயவேல்! இல்லைனா நியாயத்தை சொல்லீட்டீங்களா??? :)

      Delete
  35. ***குஷ்புகிட்ட இருந்து என்ன கிடைச்சதுன்னு ஒருத்தன் கோவில் கட்ட நினைச்சான்? டெண்டுல்கர் மேல எதுக்கு சனம் பைத்தியமா இருக்கு? நடிகர்கள் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் எதற்கு? இவங்க மேல் ஈர்க்கப் பட்டு, இவங்களிடம் உள்ள திறமையைப் பார்த்து, இவங்ககிட்ட இருக்கும் ஏதோ ஒன்னு மனசுக்கு பிடிச்சதாலத்தானே? வெறும் பந்தை கட்டையால் மைதானத்துக்கு வெளியே அடிச்ச ஒருத்தன் மேல் தீராத பிரியம் வரும்போது, இந்த பிரபஞ்சத்தைப் படைச்ச ஒருத்தன் மேல பக்தனுக்கு பிரியன் வருவதி ஆச்சரியமே இல்லை.***

    குஷ்பு நடிச்சாரு. அவரை சுந்தர் சி அனுமதியுடன் கிள்ளிக்கூடப் பார்க்கலாம். கற்பு பத்தியெல்லாம் பேசி வாங்கிக்கட்டிக்கிட்டாரு. அதனால அவரை பலருக்கும் தெரியும்

    டெண்டுலகர், க்ரிக்கட் மட்டையை வச்சு நெறையா சாதிச்சு இருக்காரு..

    இந்த பிரப்ஞ்சத்தை படைச்சவரு யாருனு சொல்றீங்க? கடவுளா? படச்சு ஆட்டையும் கோழியையும் வருண் வெட்டி திண்ணுடானு சொல்லிட்டு போயிட்டாரா? ஆடும் கோழியும் ஆவியா அலைஞ்சு அவரை பழி வாங்க தேடிக்கிட்டு இருக்குக. அதுகளுக்கு கொஞ்சம் வழிகாட்டுங்களேன்? :)

    ReplyDelete
    Replies
    1. \\குஷ்பு நடிச்சாரு. அவரை சுந்தர் சி அனுமதியுடன் கிள்ளிக்கூடப் பார்க்கலாம். \\ எலக்ட்ரானை கிள்ளிப் பார்த்த ஆளையும், அள்ளிப் பார்த்த ஆளையும் தெரிஞ்சா சொல்லியனுப்புங்க வருண்!! அப்புறம் Dark matter, Dark Energy இதெல்லாம் என்னன்னு யாருக்காச்சும் தெரிஞ்சா கேட்டு சொல்லுங்க.

      Delete
    2. \\டெண்டுலகர், க்ரிக்கட் மட்டையை வச்சு நெறையா சாதிச்சு இருக்காரு.\\ அவரு பார்த்தது சில நூறு கோடிகள், இவரு இந்த மொத்த பூமி உட்பட மொத்த பிரபஞ்சத்தையுமே சாதிச்சிருக்காரே!!

      Delete
    3. \\ஆடும் கோழியும் ஆவியா அலைஞ்சு அவரை பழி வாங்க தேடிக்கிட்டு இருக்குக. அதுகளுக்கு கொஞ்சம் வழிகாட்டுங்களேன்? :)\\ இனிமே வெறும் பழங்களை மட்டும் அதுக்குள்ளே இருக்கும் கொட்டை டேமேஜ் ஆகாத மாதிரி சாப்பிட்டுவிட்டு காலத்தை கடத்துங்க வரும், வேற என்ன பண்றது!!

      Delete
  36. திரு. ஜெயதேவ்,

    இன்று தான் உங்கள் பதிவையும் மறுமொழிகளையும் பார்த்தேன். அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் . தொடருங்கள் பின் தொடருகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி பிரபு. தங்களது பின்னூட்டம் எனக்கு ஒரு அவார்ட் போல மகிழ்ச்சியாக உள்ளது, என் வலைப்பூ தங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் தங்களது நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்தினால் மேலும் மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள்.

      Delete
    2. நண்பரே !

      கண்டிப்பாக, நல்ல பதிவுகளை பகிர்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை .
      என் முதல் வேலையாக உங்கள் வலைபூவை எனது வலைப்பூவில் சேர்த்துவிட்டேன்.
      என் நண்பர்களுடன் கண்டிப்பாக பகிர்வேன். தொடருங்கள் ..
      என் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு.

      நன்றி

      Delete
  37. அருமையாக எளிதில் புரியும் படி விளக்கியுள்ளீர்கள்!!

    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. @ ஆளுங்க அருண்

      கடைக்கு விசிட் செய்து பாராட்டியதற்கு நன்றி அருண், தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!!

      Delete
  38. முழுமையான செய்திகளுடனான பதிவு.

    இன்னும் எளிதாக, பத்தி பிரித்து எழுதி இருக்கலாம் என்று படுகிறது...பத்ரி ஒன்று மிக நன்றாக, இந்தத் தலைப்பில் எழுதியிருந்தார்(நானும் இதே பொருளில் எழுதலாம் என்று நினைத்து பின் கைவிட்டேன்;ஒரே பொருளில் எத்தனை பேர்தான் எழுதுவது!)

    (குற்றம் கண்டு பிடிப்பதே தொழிலாகப் போய்விட்டால் இப்படித்தானோ?)

    :))


    ReplyDelete
    Replies
    1. @ அறிவன்


      \\இன்னும் எளிதாக, பத்தி பிரித்து எழுதி இருக்கலாம் என்று படுகிறது.\\ போகப் போக கற்றுக் கொள்வேன் என நினைக்கிறேன் சார் !!

      \\ஒரே பொருளில் எத்தனை பேர்தான் எழுதுவது!\\ Thermodynamics பற்றி ஒருத்தர் தான் எழுதியிருக்கிறாரா என்ன? நல்ல நூலகத்துக்குப் போனா ஆயிரம் புத்தகங்களைப் பார்க்க முடியும். மேலும் கற்கும் போதும் ஒருத்தர் எழுதியதை மட்டும் படித்தால் முழுமையாக விளங்காது என்பது ஏன் அனுபவம். ஒருத்தர் சொல்லாத aspect -ஐ இன்னொருத்தர் சொல்லியிருப்பார், எனவே பலர் எழுதியதைப் படிக்கும் போது தான் முழுமையாக விளங்கும், இல்லாவிட்டால் ஐந்து குருடர்கள் யானையைப் பார்த்த கதைதான். எனவே, எத்தனை பேர் எழுதினாலும், அவர்கள் விட்டு விட்டதை நீங்கள் எழுதுங்களேன்!!

      \\குற்றம் கண்டு பிடிப்பதே தொழிலாகப் போய்விட்டால் இப்படித்தானோ?\\ குற்றம் கண்டுபித்தால் அது நான் இன்னமும் சிறப்பாக எழுத உதவும், நீங்கள் பின்னூட்டமிட்டதே எனக்குப் பெரிய பரிசு, பரிசு கிடைத்த பின்னர் எத்தனை குற்றம் கண்டுபிடித்தாலும் கவலையில்லை!!

      இந்தப் பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் என் வலைப்பூவை அறிமுகம் செய்யுங்கள், தொடர்ந்து வாருங்கள்!!

      Delete
  39. //நாத்தீகம் நல்லதல்ல, ஆனால் போலி ஆன்மீகம் ஆபத்தானது.//

    நச்.

    ReplyDelete
    Replies
    1. @ மென்பொருள் பிரபு

      நன்றி தலைவா!!

      Delete
  40. @ இரா.கதிர்வேல்
    \\பொருள்முதல் வாதம் தான் உண்மை. கருத்து முதல்வாதம் என்ற கடவுள் வாதமெல்லாம் உண்மையில்லை. அறிவு நாணயத்தோடு எழுதுங்கள் ஜெயதேவ். \\ நீங்கள் சொன்னது அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டதா எனத் தெரியவில்லை, நான் நானயத்தொடுதான் எழுதுகிறேன் என நினைக்கிறேன், கருத்துக்கு, வருகைக்கு நன்றி கதிர்வேல், தொடர்ந்து வாங்க!!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக தொடர்ந்து வருவேன்.

      Delete
    2. போலி ஆன்மிகம் ஆபத்தானதென்றால்... கடவுள் பெயரைச் செல்லி ஏமாற்றுவது என்றுதானே அர்த்தம் . அப்படியிருக்கையில் தன் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களை கடவுள் தண்டிக்குமா? தண்டித்திருக்கிறதா? நித்தியானந்த, ஜக்கி, கல்கி பகவான் போன்றோர்கள் ஏன் கடவுளால் தண்டிக்கப்படவில்லை.

      Delete
    3. ////கடவுள் துகள் என்பது சரியானதல்ல. நாசமாய்ப் போன துகள் என்பதுதான் சரி. --புதிய தலைமுறை இதழ்--

      புத்தகம் விற்பனை ஆகாது என்று மாற்றப்பட்ட பெயர் தான் 'God Particle'. உண்மையாகவே வைத்த பெயர் 'நாசமாய்ப் போன துகள்'.///

      இந்தக் கருத்துக்கு உங்கள் பதிலென்ன.

      Delete
    4. \\இதில், Goddamn Particle என்ற வார்த்தைக்கு தமிழில் நேரடியான பொருள் இல்லை எனினும், அதற்க்கு இணையாக "என்ன இழவு எடுத்த துகள்", "பாழாய்ப் போன துகள்", "பாடாவதி துகள்" என்று எரிச்சல் வரும் போது சொல்லும் ஏதாவது ஒரு வார்த்தையைப் போட்டு சொல்லிக் கொள்ளலாம். இந்த அர்த்தத்தில் தான் அவர் ஹிக்ஸ் போஸானுக்கு பெயரிட நினைத்தார். \\ இவ்வாறு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன் , அதுசரி , கட்டுரையைப் படித்தீர்களா , இல்லை............. ???????

      Delete
    5. \\ஆனால், பதிப்பதகத்தார், "சார் இப்படிப் பெயர் வைத்தால் புத்தகம் ஓடாது, நாங்கள் போண்டியாகி விடுவோம்'' என்று மறுத்துவிட்டனர். "அதற்குப் பதிலாக God Particle என்று பெயர் வைத்து விடுங்கள், பிரமாதமாக விற்கும்" என்று கேட்டுக் கொண்டதால் வேறு வழி இல்லாமல் அந்தப் பெயரே வைக்கப் பட்டு நிலைத்து விட்டது. தவறான அர்த்தத்தைத் தரும் இந்த பெயரில், பல விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, இதன் கோட்பாட்டை உருவாக்கிய ஆறு பேர்களில் ஒருவரான பீட்டர் ஹிக்ஸ் அவர்களுக்கும் கூட சிறிதளவும் உடன்பாடில்லை, ஏனெனில் அவரும் ஒரு ஒன்னாம் நம்பர் நாத்தீகர்.\\ This is the same view you have quoted?????

      Delete
    6. \\அப்படியிருக்கையில் தன் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களை கடவுள் தண்டிக்குமா? தண்டித்திருக்கிறதா?\\ ஏமாற்றுபவர்களும், ஏமாறுபவர்களும் இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள், அதை ஏன் கடவுள் அனுமதிக்கிறார் என்பது தனியான தலைப்பில் விவாதிக்க வேண்டியாதாகும், முடிந்தால் தனிப்பதிவாக வெளியிடுகிறேன், அப்போது இந்தக் கேள்வியை நீங்கள் வைக்கலாம்.

      Delete
  41. @ இரா.கதிர்வேல்
    //போலி ஆன்மிகம் ஆபத்தானதென்றால்... கடவுள் பெயரைச் செல்லி ஏமாற்றுவது என்றுதானே அர்த்தம் . அப்படியிருக்கையில் தன் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களை கடவுள் தண்டிக்குமா? தண்டித்திருக்கிறதா? நித்தியானந்த, ஜக்கி, கல்கி பகவான் போன்றோர்கள் ஏன் கடவுளால் தண்டிக்கப்படவில்லை.//



    நீங்கள் சொல்வது ஆத்திகம், நண்பர் இங்கு சொல்லி இருப்பது ஆன்மிகம். உங்கள் கருத்துப்படி போலி ஆத்திகம் கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுவது, கடவுள் தண்டிக்குமா?? கடவுள் இல்லை என்று பேசும் நாத்தீகர்கலயே ஒன்றும் செய்வது இல்லை. கடவுளுக்கு வேற வேலை இல்லையா ?? நீங்கள் சொல்வது 7 வானத்திற்கு அப்பால் உட்காந்து கொண்டு இங்க மனிதன் என்ன என்ன தப்பு எல்லாம் பண்றாங்க என்று accounts பாத்து தீர்ப்பு நாள் வந்ததும் சொர்க்கம் நரகம் இதுக்கு டிக்கெட் கிழிக்கற கடவுள் மாதிரி தான் கடவுள் இருப்பார் என்று எண்ணமா?

    அப்படி ஒருத்தர் இருப்பார் என்றால் எந்த வடிவில் இருப்பார் ? இந்த பாரத தேசத்தில் தான் எல்லா வடிவிலும் கடவுள் உண்டே? அப்படி என்றால் கடவுள் எப்படி இருப்பார் கொஞ்சம் யூகியுங்கள் பார்க்கலாம். பிறகு எது சரி எது தவறு என்று அளவுகோல் செய்யலாம். பிறகு யார் யார்க்கு எப்படி எப்படி தண்டனை கிடைக்கும்/ கிடைக்காது என்பதை பற்றி ஒரு முடிவுக்கு வரலாம் .


    நண்பர் ஜெயதேவ் அவர்களே!

    //முடிந்தால் தனிப்பதிவாக வெளியிடுகிறேன், அப்போது இந்தக் கேள்வியை நீங்கள் வைக்கலாம்//



    நண்பர்கள் கேட்கும் போதே கொஞ்சம் ஸ்நாக்ஸ் ஆவது கொடுத்து விடுங்கள். பிறகு சிறப்பான ஒரு விருந்து கொடுக்கலாம்.



    தவறு எனில் மன்னிக்கவும்.



    நன்றி

    ReplyDelete
    Replies
    1. @ பிரபு

      நிச்சயம் இவ்விஷயங்களை விவாதிக்கத்தான் போகிறோம், ஆனால் இந்தப் பதிவில் அல்ல, கருத்துக்கு நன்றி!!

      Delete
  42. நண்பரே !

    உங்கள் மின்னசல் முகவரி கிடைக்குமா ? உங்களுடன் சில தகவல்களை பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்.

    நன்றி

    ReplyDelete