அன்பு மக்காஸ்,
நேற்று பெங்களூரு பன்னாரகட்டா தேசிய உயிரியல் பூங்காவிற்குச் சென்றிருந்தோம். [வேறென்ன உறவினர்கள் வந்திருந்தார்கள், நாமாகப் போவோமா!!]. அங்கேயெல்லாம் உங்களையும் அழைத்துச் சென்று காட்ட வேண்டும் என்று அவா, அது முடியாட்டாலும் நான் பார்த்தைதை எல்லாம் நீங்களும் பார்க்க வேண்டாமா? அதைத்தான் என் காமிராவில் படம்பிடித்து இங்கே போட்டுள்ளேன். பார்த்து மகிழுங்கள். பெங்களூரு வந்தால் கண்டிப்பாக நீங்களும் ஒரு முறை இங்கே சென்று வாருங்கள். ஒரு நாள் முழுவதும் இருந்தால் தான் பார்த்த திருப்தி இருக்கும். பூங்கா நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, வெள்ளி விடுமுறை. நுழைவுக் கட்டணம்: பெரியவர்களுக்கு ரூ. 60 பூங்காவிற்கு, உள்ளே வண்டியில் சென்று சிங்கம், புலி, மான், மற்றும் பல தலைவர்கள் சுதந்திரமாக உலாத்துவதைப் பார்க்க நபர் ஒருவருக்கு 150 ரூபாய் தனிக் கட்டணம். மொத்தம் ரூ.210. சிறுவர்களுக்கும்[40+60= ரூ.100] முதியோருக்கும் [60+80= ரூ.140] கட்டணத்தில் சலுகைகள் உண்டு, மேலும் "பட்டாம் பூச்சி பூங்கா" [ரூ.25] என்று தனியாகவும் உள்ளது, நாங்கள் போகவில்லை!!
சரி வாங்க பூங்காவுக்குள் நுழையலாம். முதலில் பொது பூங்கா. கிளிகள் விதம் விதமாய்!!
|
இதுங்க ரெண்டும் பயங்கரமான சப்தம் போட்டுக் கொண்டிருந்தன. நாங்கள் ஏதோ குரங்குகள் தான் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு கத்துகின்றன என நினைத்தோம், பார்த்தால் கிளிகள் ஒன்றை ஒன்று கொத்திக் கொண்டு இருந்தன. புருஷன் பெண்டாட்டி சண்டையோ என்னவோ தெரியவில்லை!! அல்லது ஏன்டா எங்களை அடைச்சு வச்சு கொடுமைப் படுத்துறீங்கன்னு சப்தம் போட்டுச்சான்னும் விளங்கவில்லை. |
|
தலைவரு ஆடாம அசையாம மணிக்கணக்கா அப்படியே படுத்திருந்தாரு!! இவர் இயல்பும் அப்படித்தானாம், ஏதாவது இரை அதுவா போய் மாட்டினால்தான் உண்டு, இல்லாவிட்டால் அப்படியே பாத்துகிட்டு இருப்பாராம். முழு ஆட்டையும்/பறவைகளையும் அப்படியே விழுங்கிடுவாரு, இறுதியில் முடி, நகம் இறகுகளை மட்டும் அப்படியே வெளியே தள்ளிடுவாரு!! கில்லாடிதான். |
|
இவரு நம்ம கேமராவைப் பார்த்ததும் நேரா ஓடி வந்தாரு ............கர் ..........கர் ......... அப்படின்னாரு..... |
|
ஒழுங்கா இருன்னு மிரட்டிட்டுப் போனாரு!! |
|
ஆந்தையார். |
|
கரடியார்......ஜோடியா.......... |
|
தனியாக......... |
|
வரிக்குதிரையார்......... |
|
விதம் விதமான மான் கூட்டம். |
|
யானை தன்னுடைய கியூட் குட்டியுடன்!! |
|
கொஞ்சம் வளர்ந்த பொடிப் பசங்க!! |
|
அப்பப்போ குட்டிகளின் காதைப் பிடித்து பாகன் இழுத்துக் கொண்டு வருகிறார், குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் தரச்சொல்லுகிறார். வேற எதுக்கு ஐஞ்சோ, பத்தோ கொடுப்போமான்னுதான்.. அதைப் பார்க்க மனதுக்கு சற்று கஷ்டமாகத்தான் இருந்தது. |
|
ஹார்ன்பில் படுத்துகிட்டு இருக்காரு!! |
விதம் விதமான ஆமைகள்:
|
இவர்களுக்கு சூடான பல்பு வெளிச்சம் தேவைப் படுகிறது போல!! |
|
நட்சத்திர ஆமைகள்: எதிரெதிரே இரண்டு வண்டிகள், ம்ம்......... கிராஸ் ஆயிடுச்சு!! |
|
இவையும் நட்சத்திர ஆமைகள்தான், ஆனால் உருவத்தில் சிறிதாக இருக்கின்றன. |
|
முதலியார்.......... சாரி, முதலையார்!! |
|
சிங்கமுகக் குரங்கு......... |
|
பெரிய முதலையார்.......... |
|
நீர் யானை, புல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாங்க.......... |
|
பெலிகன் வகை மற்றும் பல வகை வெளிநாட்டு நாரைகள்....... |
|
கலர்புல் வாத்து......... இது ஒரு டைப்பாக இருந்தது!! |
|
நம்மூர் மயில்கள், அசந்து போய் படுத்துட்டாங்க |
|
நீங்கள் போட்டிங் வேண்டுமானாலும் செல்லலாம். இதைப் பார்த்ததும், என் மகள், " டேய் அண்ணா, நான் இப்போ கண்டுபுடிச்சிட்டேன்டா, அது அங்க நடுவில் இருந்து கொட்டுதே
அந்த தண்ணிதான் இந்த குளம் புல்லா நிரம்பிடிச்சுடா.........!!" என்று
வியப்பாகச் சொன்னாள். ஆஹா...... நிச்சயம் பெரிய விஞ்ஞானியா வருவேடி என்று
மனதுக்கு நினைத்துக் கொண்டேன்!! [கட்டணம்:நபருக்கு ரூ.50, குழந்தைகளுக்கு கட்டணமில்லை]. |
இதைத் தொடர்ந்து வரும் படங்கள், வேனில் SAFARI அழைத்துச் சென்றபோது எடுக்கப் பட்டவை.
|
பெண் சிங்கங்கள் உருவத்தில் சற்றே சிறியவை. |
|
இதில் மொத்தம் மூன்று சிங்கங்கள் உள்ளன!! ரெண்டு தெரியும், ஒன்று ஆண் சிங்கத்தின் அப்பால் உள்ள உள்ள பாறையின் பின்னால் உட்கார்ந்திருக்கிறது, தாடைப் பகுதி மட்டும் தெரியும், ஆண் சிங்கம், அதனுடன் பொய் சண்டை போட்டுவிட்டு வந்தது, [சும்மா வாய்த் தகராறுதான்!!] அதைப் படம் பிடிக்க முடியவில்லை!! |
|
தலைவரு வெயிளுக்கு தண்ணீரில் குளிச்சிக்கிட்டு இருந்தார்........... |
|
அப்படியே எழுந்து .............. |
|
...........போயிட்டாரு. சில சமயம் இவர்கள் SAFARI வேனின் முன்னால் நிமிடக் கணக்கில் உட்கார்ந்து விடுவதும் உண்டாம்!! |
|
வெள்ளைப் புலி. |
படங்கள் அருமை... (பின் கருத்துக்களும்)
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன், என்னுடைய தமிழ்மணம் வாக்குப் பட்டை இயங்கவில்லை சரி செய்வதெப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?
ReplyDeleteதமிழ்மணம் submit செய்து பார்த்தேன், ஆகவில்லை... தற்சமயம் அண்ணன் வீட்டில் உள்ளதால் பிறகு அதைப்பற்றி சொல்கிறேன்...
Delete1. யானை தன்னுடைய கியூட் குட்டியுடன்!!
ReplyDelete2. கொஞ்சம் வளர்ந்த பொடிப் பசங்க!!
3. அப்பப்போ குட்டிகளின் காதலி பிடித்து பாகன் இழுத்துக் கொன்று வருகிறார், குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் தரச்சொல்லுகிறார். வேற எதுக்கு ஐஞ்சோ, பத்தோ கொடுப்போமான்னுதான்.. அதைப் பார்க்க மனதுக்கு சற்று கஷ்டமாகத்தான் இருந்தது.
4. இவையும் நட்சத்திர ஆமைகள்தான், ஆனால் உருவத்தில் சிறிதாக இருக்கின்றன.
5. பெரிய முதலையார்..........
6. பெலிகன் வகை மற்றும் பல வகை வெளிநாட்டு நாரைகள்.......
இவைகளும் இன்னும் கடைசி நாலைந்து படங்களும் வரவில்லை... சரி பார்க்கவும்...
இப்போது எல்லா படங்களும் வந்து விட்டது...
Deleteநான் பெங்களூரிலேயே இருந்தாலும் பன்னரகட்டாவுக்குப்போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆர் விகுதியுடன் நீங்கள் மிருகனார்களை விளித்திருப்பது நன்றாக இருந்தது. தவிர உங்கள் மகளின் கண்டுபிடிப்பும் அற்புதம்.
ReplyDeleteதவிர தமிழ்மணத்தின் என்னுடைய ஓட்டுப்பட்டையும்தான் வேலை செய்யவில்லை. நான் எனக்குத்தான் இணையம்பற்றிய அத்தகைய சமாச்சாரங்களெல்லாம் தெரியாது என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். அதே துறையில் இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்குமா? ஆச்சரியமாய் இருக்கிறது.
ஆஹா, உங்க பின்னூட்டம் எனக்கு சூப்பர் டானிக் ஆக இருக்கு நன்றி அமுதவன்!! ஆனாலும் தமிழ்மணம் வாக்குப் பட்டிக்கு தடுமாரிக்கிட்டுத்தான் இருக்கேன் என்ன பண்றதுன்னுதான் தெரியலை!!
Deleteசமீபத்தில்தான் பெங்களூர் வந்திருந்தேன். இந்தப் பூங்காவைப் பார்க்காமல் விட்டுவிட்டேனே!
ReplyDelete@T.N.MURALIDHARAN
DeleteNext time, don't miss it!!
ஓய் பாகவதரே,
ReplyDeleteநீர் எதுக்கு விலங்கியல் பூங்காவிற்கு போனிர்னு எனக்கு புரியுது , பரிணாமத்தில் இடைப்பட்ட உயிரினம் எதுவும் அங்கே இருக்கானு பார்க்கா தானே :-))
மூதாதையர் குரங்கார் எல்லாம் பார்த்திருப்பீரே, என்ன இருந்தாலும் உமக்கு உள்ளுக்குள் பரிணாமத்தின் மீது நம்பிக்கை இருப்பது ,விலங்குகளை எல்லாம் "ஆர்" என விகுதி சேர்த்து மரியாதையாக உயர்திணையில் அழைத்ததில் இருந்தே ,தெரிகிறது :-))
நாம நினைச்சிகிறது நாம எல்லாம் போய் விலங்குகளை வேடிக்கைப்பார்க்கிறோம்னு ,ஆனால் உண்மையில் விலங்குகள் தான் நம்மை வேடிக்கை பார்த்திருக்கும் :-))
படமெல்லாம் நல்லா வந்திருக்கு, உண்மையில் இதெல்லாம் நீர் எடுத்த படமா இல்லை சுட்டதா?
அப்படியே பந்திப்பூர் காட்டுப்பக்கமும் போய் பார்த்து வாரும்,அனுமாரே சிக்கினாலும் சிக்குவார் :-))
@ வவ்வால்
Delete\\நீர் எதுக்கு விலங்கியல் பூங்காவிற்கு போனிர்னு எனக்கு புரியுது , பரிணாமத்தில் இடைப்பட்ட உயிரினம் எதுவும் அங்கே இருக்கானு பார்க்கா தானே :-)) \\ அட, இந்த யோசனை நல்லாயிருக்கே!! நான் சும்மா வேடிக்கை பார்க்கப் போனேனுன்னு உளறிக் கொட்டிட்டேனே.....!!
\\மூதாதையர் குரங்கார் எல்லாம் பார்த்திருப்பீரே, என்ன இருந்தாலும் உமக்கு உள்ளுக்குள் பரிணாமத்தின் மீது நம்பிக்கை இருப்பது ,விலங்குகளை எல்லாம் "ஆர்" என விகுதி சேர்த்து மரியாதையாக உயர்திணையில் அழைத்ததில் இருந்தே ,தெரிகிறது :-)) \\ நம் உயிரைப் போல அவற்றின் உயிரையும் மதிக்க வேண்டும், அவை கீழ்நிலையில் உள்ளனர் என்பதற்காக கண்ணா பின்னா வென்று கொள்ளக் கூடாது .......... இது தான் உயர்திணையில் அழைக்கக் காரணம்.
\\படமெல்லாம் நல்லா வந்திருக்கு, உண்மையில் இதெல்லாம் நீர் எடுத்த படமா இல்லை சுட்டதா?\\ சரியாச் சொன்னீங்க இவை நானே என் கேமராவில் சுட்டது!! [I mean shot!!]. படங்களில் தெரியும் கம்பிவலைகளே இதற்க்கு சாட்சி. [கடைசியில, திருவிளையாடல் நாகேஷ் மாதிரி என்னை பேச வச்சிடீரே!!
\\அப்படியே பந்திப்பூர் காட்டுப்பக்கமும் போய் பார்த்து வாரும்,அனுமாரே சிக்கினாலும் சிக்குவார் :-)) \\ வாத்தி, விஸ்வரூபம் படத்தைப் பத்தி "விஷ்வரூபம்- விளங்காத ரூபம் ஆனக்கதை!" என்று அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து ஒரு பதிவு போட்ட நீரு பொது அறிவிலா இவ்வளவு வீக்கா இருக்கலாமா? வேடிக்கை பார்க்க போறவனுங்க அங்கே இருக்கும் புலிகளுக்கு தொந்தரவா இருக்கனுங்க என்று இப்போதெல்லாம் பந்திப்பூர் மற்றும் பல தேசிய புலிகள் சரணாலயங்களில் யாரையும் அனுமதிப்பதில்லை.
பாகவதரே,
Deleteஉளறுவது புதுசா என்ன :-))
ஹி...ஹி மூதாதையர் பாசம்னு சொல்லிக்காம இப்படி மரியாதைக்கொடுக்கனும்னு ஒரு சப்பைக்கட்டா :-))
#கேமிராவில் சுட்டதா ,ஓ.கே.ஓ.கே.நீர் இணையத்தில் சுட்டு,அந்த இடத்துக்கு போகாமலே கதை சொல்வதில் கில்லாடி ஆச்சேனு தான் முன் ஜாக்கிரதையா கேட்க்கிட்டேன் :-))
#விளங்காத ரூபம் எல்லாம் தெரிஞ்சு வச்சு இருக்கீர் பலே.
ஆனால் நாட்டு நடப்பு தான் தெரியலை,இன்னும் பந்திப்பூர் எல்லாம் போய்ப்பார்த்துக்கிட்டு தான் இருக்காங்க.ஆங்கில பிலாக்குகள் எல்லாம் அவ்வப்போது படிச்சா தெரியும் :-))
NH-67-Mysore-Ooty road பந்திப்பூர் வழியே செல்வதால் தடை எல்லாம் செய்ய முடியாது,இரவில் செல்ல மட்டுமே தடை.
போட்டோகிராபி,வைல்ட் லைஃப் பத்தி ஆங்கிலத்தில் நிறையப்பேரு எழுதுகிறார்கள்,நமக்கு பிடித்த ஒன்று.
\\
ReplyDeleteபோட்டோகிராபி,வைல்ட் லைஃப் பத்தி ஆங்கிலத்தில் நிறையப்பேரு எழுதுகிறார்கள்,நமக்கு பிடித்த ஒன்று.\\ அப்படியா....!! படமெடுப்பது மற்றும் தரமான படங்கள் பகிரப்படும் நல்ல சுட்டிகள் நாலஞ்சு நமக்கும் தள்ளுமைய்யா!! படித்துப் பார்க்கிறேன்!!
உயிரோட்டமான க்ளிக்ஸ். நேரம் கிடைக்கும் போது ஒரு விசிட் உண்டு.!
ReplyDelete