Monday, March 25, 2013

நோய்களில் இருந்து நம்மை காக்க இயற்கை வழி விவசாய விலை பொருட்கள்-வழி கட்டும் இளைஞர்.

அன்புள்ள மக்கள்ஸ்,

இன்று Facebook கில் உலாவிய போது மன நிறைவைத் தரும் ஒரு செய்தி கண்ணில் பட்டது. சுட்டி.  கைநிறைய சம்பளம் வாங்கும் இளைஞர் ஒருவர் மன நிறைவு கிடைக்காமல் விவசாயத்திற்கு திரும்பிய கதை.  அதுவும், பூச்சி மருந்துகள், ரசாயன உரங்கள் போடாத விவசாயம்!! நிலங்களை பிளாட்டு போட்டு விற்கும் இக்காலத்தில் இப்படி ஒருவர்.  இவர் மாதிரி ஊருக்கு ஒருத்தர் இருந்தா எப்படி இருக்கும்!!  நம்ம நாடே சொர்க்கமாயிடும். அவர் பெயர் ரூசோ.  ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை உதறித் தள்ளியவர் இன்றைக்கு மாதம் 15 லட்சம் சம்பாதிக்கிறார், 40 பேருக்கு வேலை தருகிறார், மக்களுக்கு விஷமற்ற உணவுப் பொருட்களையும் தருகிறார்!


லட்சம் டன்களில் கொட்டப் படும் பூச்சி மருந்துகளும், ரசாயன உரங்களும் தான் இன்றைக்கு திரும்பிய பக்கமெல்லாம்  பரவியிருக்கும் சர்க்கரை, கேன்சர், உயர் இரத்த அழுத்தம் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கான காரணமாகும்.  இதை எந்த டாக்டரும் வெளியில் சொல்ல மாட்டான், சொன்னா அவன் பிழைப்பில் மண் விழும்.   பல கொடிய நோய்கள் வருவதற்கு நாம் உண்ணும் விஷ உணவே காரணம். இவற்றுக்கு மாற்று வழி இயற்க்கை வழியில் விளைவிக்கப் பட்ட உணவுகளை வாங்கிப் பயன்படுத்துவது தான்.  அந்த புனித பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மாதிரி நல்ல ஆத்மாக்க்களை ஆதரிக்க வேண்டும், அதன் மூலம், நம்மையும் நாட்டையும் காத்துக் கொள்ள முடியும்.  


இவரைப் பற்றி படித்தவுடன் இவரது வலைத்தளம் இருக்கிறதா எனத் தேடித் பார்த்தேன், இருக்கிறது:  சுட்டி.




" Raasi Eco Organic Pvt Ltd "
Rousseau

1275 6th main road, thiruvalluvar nagar,
thiruvanmiyur,Chennai - 41.

Phone : 0454 - 45018540
Mobile : +91 8939915767

Email : thairuso@gmail.com
Website : www.thenaturalstore.org

சென்னையில் உள்ளவர்கள் திருவான்மியூரில் உள்ள இவரது கடைக்கு நேரில் சென்றோ, வீட்டு டெலிவரி கேட்டோ பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.  தமிழகத்தின் பிற பகுதிகளில் இவரைத் தொடர்பு கொள்ள: சுட்டி.
 
ரூசோவின் தோட்டத்தில் இயற்க்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

கீழே இந்தியா டுடேயில் வந்த கட்டுரை.

 







மேலே உள்ளது ரூசோவின் விவசாயப் பண்ணைகள், ரூசோக்கு நமது சல்யூட்!!


27 comments:

  1. சுட்டி சரியா...?

    http://www.thenaturalstore.org சொடுக்கினால் கிடைக்கவில்லை...

    http://www.thenaturalstore.co.in/ என்று இருக்கிறது... அதில்

    http://www.thenaturalstore.co.in/contactus.php :

    The Natural Store,
    F11, Lakshmi Plaza,
    Avinashi Road,
    Coimbatore – 641037

    Mobile : 91 9843544833

    E-Mail : customerservices@thenaturalstore.co.in என்று
    உள்ளது...

    நண்பருக்கு, அவரின் சேவைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தனபாலன்,

      http://www.thenaturalstore.org/

      என்ற தளம் இருக்கிறதே!! தங்களுக்கு ஏன் போகவில்லை என்று தெரியவில்லை., நீங்கள் சொன்ன அன்பர் வேறொருவர். மேலும் பதிவில் உள்ள சுட்டிகளைப் பாருங்கள்.

      http://www.thenaturalstore.org/contact.html
      http://www.thenaturalstore.org/thenaturalstore.html

      Delete
    2. My Browser : Google Chrome

      Oops! Google Chrome could not find www.thenaturalstore.org - இப்படி தான் வருகிறது... ஒரு வாரம் முன்பு தான் (1. Firefox, 2. Epic) இவைகளை கணினியிலிருந்து எடுத்தேன்... ..ம்.. Ccleaner ஒரு முறை பயன்படுத்தி விட்டு பிறகு பார்க்கிறேன் வருகிறதா என்று... இருந்தாலும் நல்லதொரு தளத்தை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள் பல...

      Delete
  2. வசித்த பின் எனக்கு ஞாபகம் வந்தவர் எனது நண்பர் நல்லமுத்து... அவரும் நன்றாக படித்தவர்... அவரை மனதில் வைத்து எழுதிய பதிவல்ல கீழே கொடுத்துள்ளது... பலமுறை என் நண்பரின் தோட்டத்திற்கு சென்றுள்ளேன்... அந்த இனிமையான வாழ்க்கையே தனி...

    http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_16.html

    தலைப்பு : நீங்க மரமாக போறீங்க...

    நேரம் கிடைப்பின் வாசிக்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. திரு திண்டுக்கல் தனபாலன்

      உண்மையில் நீங்கள் சொல்வது போல் 'அந்த இனிமையான வாழ்க்கையே தனி தான் '.

      நன்றி..

      Delete
    2. நிச்சயம் பார்க்கிறேன் தனபாலன்!!

      Delete
  3. வணக்கம் நண்பரே,

    மிகவும் தேவையான ஒரு பதிவு. இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம். அப்படியே இயற்கை விஞ்ஞானி திரு நம்மாழ்வார் பற்றியும் எழுதி இருந்தால் அவரை பற்றியும் இயற்கை விவசாயத்தின் அவசியம் பற்றியும் மற்றவர்கள் அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    தாடி வச்சுக்கிட்டு அழுக்கு சட்டை அல்லது ஒரு துண்டை மேல போட்டுக்கிட்டு இந்த வயதிலும் ஊர் ஊரா சுத்தி இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு அளித்துவரும் இயற்க்கை விஞ்ஞானி திரு நம்மாழ்வார்.

    http://ta-in.facebook.com/pages/Dr-G-Nammalvar-Organic-Agriculturist/197789246939878

    http://siragu.com/?p=4047

    திரு ரூசோ வை போல் இன்னும் நிறைய பேர். நீங்கள் பெங்களூரில் இருப்பதால் உங்கள் அருகிலேயே திரு நாராயண ரெட்டி அவர்களின் பண்ணை இருக்கிறது முடிந்தால் சென்று பார்த்து வரவும்.

    அலுவல் அதிகமாக இருப்பதால் இன்னும் எனக்கு தெரிந்தவற்றை நேரம் கிடைக்கும் பொழுது பகிர்கிறேன்.


    நன்றி

    ReplyDelete
    Replies
    1. Long time no see, why? Thanks Prabhu!!

      Delete
    2. Everyday I am visiting your blog. Because of busy schedule I cannot able to post my comments.Sorry.

      Delete
  4. ஜெயதேவ் தாஸ் மற்றும் தனபாலன்.
    நம்மாழ்வார் மீது எனக்கு அதிக நம்பிக்கை உண்டு. எனக்கு விவசாயம் ஓரளவிற்கு தெரியும்; கட்டாயம் நான் அவரைப் பார்த்து இந்த முறைகளை அறிந்து கொள்வேன்...அவர் ஒரு திறந்த புத்தகம்...

    கூடுதல் செய்தி...என் அப்பா உயர்ந்த இஞ்சினீயர் பதிவியில் இருந்து ஒய்வு பெற்ற பின் விவசாயத்தில் 20 வருடங்கள் நிறையவெ சம்பாதித்தார்...இப்போ அப்படி சம்பாதிக்க முடியாது எனபது என் அப்பாவின் அறிவுரை.

    நாங்கள் (என அப்பா என்று படிக்கவும்) எங்கள் எல்லா நிலங்களையும் வித்தற்க்கு விவாசயம் ஒரு தொல்லை எனபது ஒரு முக்கிய காரணம்.

    ஒருவர் ஒரு லட்சம் சம்பாத்தியத்தை விட்டு வந்து இயற்கை விவசாயம் செய்து சம்பாதிக்கிறார் என்று சொல்லும் போது...நாம் அதை ஆய்வு செய்யவேண்டும்...அமெரிக்காவில் organic farming என்று சொல்லி புளுகி வித்தால் அவனுக்கு களி தான். எவனும் அப்படி செய்யமாட்டான்; செய்யவும் முடியாது. நிற்க.

    அவர் அவரது விளை பொருள்களை சோதனைக்கு உட்படுத்த தயாரா??
    எந்த மாதிரி இயற்க்கை விவசாயம் செய்தார்; எப்படி இப்போ இருக்கும் விலைவாசியில் கூலி கொடுத்தார். எப்படி லாபம் பார்த்தார் என்பதை document பண்ணனும்.

    தமிழில் எழுதுவது கடினமாக இருப்பதால்..
    Is he prepared nto document his methods as how he achieved this profit...else it is another ஈமூ கோழி தான்...!

    ReplyDelete
    Replies
    1. Hi Nambalki,

      If you are not comfortable with Tamil typing, you can post your comments in English also, that is not an issue.

      You should not blindly accept everybody/everything they say, nor should you doubt everything. As far as this gentleman is concerned, you can talk to him, his contact numbers, e-mail are given, his website is available, and if you wish you can visit his farm with his permission, stay there and learn everything for yourself and get convinced!!

      Delete
    2. நம்பள்கி,

      எனக்கு தனிபட்ட முறையில் இயற்கை விவசாயம் செய்யும் சில நண்பர்களை தெரியும். பணம் மட்டுமே குறிக்கோள் எனில். கண்டிப்பாக நான் பார்த்தவரையில் கண்டிப்பாக இயற்கை விவசாயம் இலாபகரமான ஒன்றுதான்.
      // 20 வருடங்கள் நிறையவெ சம்பாதித்தார்...இப்போ அப்படி சம்பாதிக்க முடியாது எனபது என் அப்பாவின் அறிவுரை.// அப்பொழுது முடிந்த விஷயம் ஏன் இப்பொழுது முடியவில்லை ? காரணம் நிறைய உண்டு. நமது பாரம்பரிய விவசாய முறையை மறந்தது, நமது பாரம் பாரிய விதைகளை விட்டு,நமது உழவு முறையை மறந்து . மண்ணை மலடாக்கி விட்டபின் எப்படி அதில் இருந்து விளைச்சல் பெறுவது? உழவர்களின் நண்பன் - மண் புழு கேள்விப்பட்டதுண்டா ? உங்கள் நிலத்தில் இன்னும் முன்னை போல் மண் புழு கண்டதுண்டா? இருந்தவை எல்லாம் இப்பொழுது எங்கே ? பின் எப்படி விளைச்சல் பெறுவது ? இருந்த நிலத்தை எல்லாம் புச்சி கொல்லி, மற்றும் நச்சு கலந்த மருந்துகளால் மலடாக்கி விட்டபின் முன்னை போல் எப்படி விளைச்சல் பெறுவது, சம்பாதிப்பது ? பிளாட் போட்டு வீட்டு மனை விற்பனைக்கு போடத்தான் முடியும்.

      மற்ற விவசாய முறைகளை விட இயற்க்கை விவசாயம் முலம் கண்டிப்பாக செலவுகள் குறைவு தான். .
      //நாம் அதை ஆய்வு செய்யவேண்டும்...
      அவர் அவரது விளை பொருள்களை சோதனைக்கு உட்படுத்த தயாரா??
      எந்த மாதிரி இயற்க்கை விவசாயம் செய்தார்; எப்படி இப்போ இருக்கும் விலைவாசியில் கூலி கொடுத்தார். எப்படி லாபம் பார்த்தார் என்பதை document பண்ணனும்.// இதற்கு அவரை டாகுமென்ட் செய்ய சொல்லவெண்டியது இல்லை. கொஞ்சம் நீங்களே கணக்கு போட்டு பார்த்தல் அது எப்படி லாபம் பார்க்க முடியும் என்பது தெளிவாக தெரியும்.

      எந்த பயிர் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு இயற்க்கை விவசாயம் முலம் ஒப்பிட்டு பாருங்கள் கண்டிப்பாக நிறைய பணம் உங்களுக்கு மிச்சம் மட்டும்மன்றி விளைச்சல் அதிகம் தான். நிறைய பேர் தினம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

      யானை கட்டி போர் அடித்து, விவசாயம் செய்த பூமி. இன்று நமக்கு தொலை காட்சியில் விவசாயம் கற்று கொடுக்கும் நிலை என்ன கொடுமை சார் இது.

      Delete
    3. நம்பள்கி,

      //ஒருவர் ஒரு லட்சம் சம்பாத்தியத்தை விட்டு வந்து இயற்கை விவசாயம் செய்து சம்பாதிக்கிறார் என்று சொல்லும் போது...நாம் அதை ஆய்வு செய்யவேண்டும்...அமெரிக்காவில் organic farming என்று சொல்லி புளுகி வித்தால் அவனுக்கு களி தான். எவனும் அப்படி செய்யமாட்டான்; செய்யவும் முடியாது. நிற்க.

      அவர் அவரது விளை பொருள்களை சோதனைக்கு உட்படுத்த தயாரா??
      எந்த மாதிரி இயற்க்கை விவசாயம் செய்தார்; எப்படி இப்போ இருக்கும் விலைவாசியில் கூலி கொடுத்தார். எப்படி லாபம் பார்த்தார் என்பதை document பண்ணனும்.
      //

      புளுகி விற்றால் இந்தியாவிலும் வழக்கு போடலாம்.

      ஆர்கானிக் என சான்று பெற வேண்டும், இந்தியாவில் ஆர்கானிக் சான்று பெறாமல் தான் பெரும்பாலும் விற்கிறார்கள். அதாவது இயற்கைவிவசாயம் என்று தான் சொல்வார்கள், அப்பொருள் வரையறுக்கப்ப்ட்ட இயற்கை விவசாய தரத்தில் இருக்கு என உறுதிக்கூற மாட்டார்கள்.

      எனவே இந்திய இயற்கை விவசாய உற்பத்திப்பொருட்களை பெரிய அளவில் ஏற்றுமதி செய்ய முடிவதில்லை.

      ஆர்கானிக் விளைச்சல் என சான்று வாங்குவது கடினம், வயலில் உள்ள மண்ணை சோதனை செய்து அதில் ரசாயனம் எந்த அளவுக்கு இருக்கிறது என சான்று வாங்க வேணும், பின்னர் விளைச்சலில் ரெசிடுயல் கெமிக்கல் சோதனை செய்து சான்று வாங்கினால் தான் ஆர்கானிக் எனப்பெயரிட்டு விற்கலாம், ஏற்றுமதி செய்யலாம்.

      அப்படி சான்றுப்பெற்ற ஆர்கானிக் விவசாயிகள் இந்தியாவில் வெகு குறைவே.

      இப்பொழுது பெரும்பாலும் விற்பதெல்லாம் ஆர்கானிக் தரத்தில் அல்ல,ஆர்கானிக் விவசாயம் அவ்வளவே.

      நம் இந்திய நிலங்கள் பல காலமாக உரம் போட்டதால் ,இப்பொழுது உரமே போடாமல் விவசாயம் செய்தாலும் விளைச்சலில் ஆர்கானிக் தர நிர்ணயத்தின் படி இருக்காது என்பதே உண்மை. குறைந்தது 10 ஆண்டுகளாவது இயற்கை விவசாயம் செய்து வந்தால் மட்டுமே நிலத்தில் முன்னரே போட்ட ரசாயனங்கள் நீங்கும்.

      உரங்கள்,பூச்சி மருந்து அற்ற விவசாயம் என்ற திசையில் செல்ல துவங்கி இருப்பதே ஒரு நல்ல மாற்றம் தான், விரைவில் தரமான ஆர்கானிக் உற்பத்தியும் சாத்தியமாகும்.

      Delete
    4. நம்பள்கி,

      For your reference...

      http://nagalpoonai.blogspot.in/2012/09/thanks-vikatan.html

      Delete
  5. பகிர்வுக்கு நன்றி லிங்கு கொடுத்தற்கும் நன்றி
    இளைஞ்சர்களின் விழிபுணர்வு மகிழ்ச்சியை தருகிறது அனைவரும் ஒற்றுமையுடன் கூடி வாழும் இயல்பினர் ஆகட்டும் இனி ஒரு புது விதி படைக்கபடட்டும்

    ReplyDelete
    Replies
    1. @ poovizi

      முதல் வருகைக்கு நன்றி!!

      Delete
  6. இந்த மாதிரி விஷமற்ற உணவு பொருட்கள் எல்லா ஊர்லயும் கிடைச்சா நல்லாருக்கும்.

    ReplyDelete
  7. ரூசோவின் கடையின் விலைப்பட்டியலைப் பார்த்தேன். மாதம் 6000 ரூபாய் வாங்குபவர்களுக்கு சரிப்படாது.
    இவர்கள் கடையில் உணவுகள், தானியங்களை வாங்க, மாதம் 50,000 ஆயிரம் சம்பாதிக்க வேண்டும்.
    அனைத்தும் ஆனைவிலை குதிரை விலை.

    அது சரி, தக்காளி சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்று எந்த மடையன் சொன்னான்? தவறான செய்திகளைக் கொடுக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. அனானி,

      இந்தியா டுடே கட்டுரையை நீங்கள் சரியாக வாசிக்கவில்லை. கிட்னியில் பிரச்சினை என்று ஆங்கில மருத்துவரிடம் சென்றால் அவன்த மாங்கா மடையன் தக்காளி சாப்பிட்டீர்களா என்று கேட்டு பழியை தக்காளி மேல் போடுவான் அவன் ஒருபோதும் உணவு உற்பத்தியில் பயன்படுத்தப் படும் ரசாயன உரங்களும் பூச்சிக் கொள்ளிளும் தான் காரணம் என்று சொல்ல மாட்டான். இயற்க்கை விவசாயத்தில் விளைவிக்கப் பட்ட விலை பொருட்களை உண்டால் இந்த பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். விலை கொஞ்சம் கூடுதல் உண்மைதான், உங்கள் உடல் உறுப்புகள் பழுதடைந்த பின்னால் நீங்கள் என்னதான் பணத்தைக் கொட்டினாலும் அவற்றை மீட்க முடியுமா? இயற்க்கை விவசாயம் எல்லோரும் செய்ய ஆரம்பித்தால் நிச்சயம் விளையும் குறையும். விலை நிலங்களை பிளாட்டு போட்டு விற்றால் விளைச்சல் எங்கேயிருந்து வரும்?

      Delete
  8. என் திருமணம் நிச்சயம் ஆனதும் அம்மம்மாவிடம்தான் சமையல் கற்றுக்கொண்டேன். முதன் முதலில் அம்மா (நான் அப்படித்தான் அழைப்பேன்) தந்த சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக.


    1.அடுக்களையில் நுழையும் முன் உன் கோபதாபங்களை மூட்டை கட்டி வைத்து விடு.


    2. மனது அமைதியாக இருந்தால் தான் சமையலில் மனம் லயிக்கும்.


    3. ரசித்து சமை ! ருசியாக இருக்கும்.


    4. தேநீர் கலந்தாலும் பால், சர்க்கரை, டீத்தூளுடன் 2 spoon அன்பையும் கலந்து பரிமாறு.


    5. அன்பான, இனிமையான மனத்துடன் தயாரிக்கப்படும் எந்த உணவும் அமிர்தத்திற்கு சமானம். இல்லையேல் அது விஷமாகி விடும்.


    இந்த சமையற்குறிப்பை நான் இன்று வரை கடை பிடிக்கிறேன்.

    பால கவிதா

    ReplyDelete
  9. நல்ல தகவல் ஜெயதேவ்!

    ReplyDelete
  10. எல்லையற்ற உழைப்பு, நேரம் காலம் பார்க்காத உழைப்பு, மழை, வெயில், பூச்சி, உரம், நிலத்தை பண் படுத்த ஏற்படும் இழப்புகள், மின்சாரம்இல்லாமை, மின்சார கருவி பழுது, இன்னும் என்ன என்னவோ உள்ளது. விவசாயம் செய்து லாபம் பெற்று வாழ்வது ஒரு கனவு.
    அப்படி லாபம் பெற்று வாழ்பவர் பெரும்பாலும் ஏழைகளின் உழைப்பை சுரண்டி வாழ்பவராக இருக்க வாய்ப்புள்ளது. என்னுடைய சிறிதளவு அனுபவம்.

    ReplyDelete
  11. ரூசோ எங்க விவசாயம் பார்கிறார்? அவர் ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி வச்சி ஆச்சி மசாலவும் சக்தி மசாலாவும் செய்கிற வேலையைத்தான் செய்கிறார். என்ன அவர் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் இயற்க்கை விவசாயத்தில் விலைந்தவை அவ்வளவுதான். 5 நட்சத்திர ஓட்டலில் தோசை சுட்டு விறாலும் அது விவசாயம் என்பது போல் உள்ளது உங்கள் பதிவு, ரூசோ அவர்கள் விற்ப்பனை வரி செலுத்தவில்லை என்று சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். அவர் ஒரு புதிய மார்கெட்டிங்க் டிரெண்டை கற்றுக்கொண்டு அதிகம் சம்பாதிக்கலாம் என்று பனியை விட்டு சென்றிருக்கிறார். எந்த ஒரு விவசாயியும் அரிசியைக்கூட விற்ப்பதில்லை நெல்லாகத்தான் மண்டியிலோ அல்லது ஒழுங்குமுறை விற்ப்பனைகூடத்திலோ அரசு கொழுதல் நிலையங்களிலோ விற்ப்பார். சில்லரை வியாபாரம் செய்தாலே அவர் வியாபாரி ஆகிவிடுகிறார் பிறகு எப்படி அவரை விவ்சாயி என்று சொல்லமுடியும். மேலும் அவர் முதலீடு செய்துள்ள தொகை எவ்வளவு என்று குறிப்பிட முடியுமா? அவருடைய தற்போதைய நிறுவனத்தின் மதிப்பு பலகோடி ரூபாய் இருக்கும் முதலில் நம் நாட்டில் விவசாயி என்பவர் யார் என்று தெறிந்து கொள்ளுங்கள் . இதுவரை பேஸ் புக்கும் வெப்சைட்டும் வைத்திருக்கும் விவசாயியை யாராவது பார்த்திருக்கிறீர்களா? உங்கள் பதிவு விவசாயிகள் மீதான ஒரு தப்பான அபிப்ராயத்தை மற்றவர்களிடம் ஏற்படுத்துகிறது. முதலில் இயற்க்கை விவசாயத்தை சாதாரண விவசாயிகள் செய்யவேண்டுமானால் அரசு இயற்க்கை விவசாய கொள்முதல் நிலையங்களை அமைக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. விவசாயி விற்பனை செய்வது தவறா? இடைதரகர்களிடம் ஏமாறுபவன்தான் உண்மையான விவசாயியா?

      Delete
    2. விவசாயி விற்ப்பனை செய்வது தவறு இல்லை இன்றைய நிலையில் விவசாயிகளின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும்போது தனியாக கடைவத்து விற்ப்பனை செய்ய விளம்பரம் செய்ய வாடிக்கையாளர்களை கவர்வது பனியாளர்கள் நியமிப்பது என்று எவ்வளவு இருக்கின்றது இதையும் மீறி ஒரு விவசாயி தனது ஆர்கானிக் விளைபொருட்க்களை சிறு மற்றும் குறு நகரங்ககளில் விற்ப்பனை செய்தால் வாங்குவதற்கு வாடிக்கையாளர் இல்லாமல் இலட்ச இலட்சமாக இல்லை மாதம் கோடி கோடியாக சம்பாதிக்கலாம், அந்த வளைத்தளத்தில் பாருங்கள் காய்க்காத செடிகளுக்கு கிராப்பு வெட்டி வைத்திருக்கிறார் இந்த வேலைய எந்த விவசாயியாவது செய்வாரா? ஊருக்கே உணவளிப்பது விவசாயின் குணம் ஊரை அடித்து உலையில் போடுவது இல்லை. ஒரு நேர்மையான அரசு ஊழியரின் மாத வருமானம்கூட அந்த ஆர்கானின் பொருட்க்களை வாங்குவதற்க்கு போதுமானதாக இருக்காது.

      Delete
    3. @ புரட்சி தமிழன்

      நீங்க சொல்வது போல இவர் பிராடாக இருந்தால் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எதற்காக இவருடைய தோட்டத்திற்க்குச் செல்லவேண்டும்? நாட்டில் ஒரு நல்ல மனிதர் நம்மாழ்வார் அவரையும் சந்தேகப் பட வைக்கிறீங்களே!! இன்றைக்கு ஆர்கானிக் பொருட்கள் விலை அதிகம் தான் தற்போதைக்கு பணக்காரர்களாவது ஆதரிக்கட்டுமே என்ன தப்பு? அது பிரபலமடைந்தால், நிறைய விவசாயிகள் அதற்க்கு மாறினால் நிச்சயம் விலை குறையுமல்லாவா? இப்போதைக்கு நமக்குத் தேவையான தேன் போன்ற பொருட்களையாவது இங்கு வாங்கலாமல்லவா? இப்போதைக்கு ஆர்கானிக் விவசாயம் என்பது எதிர்நீச்சல் போன்றது அவ்வளவு சுலபமல்ல, அத்தனை கஷ்டத்தையும் தாங்கி விலை பொருட்களை நீங்கள் வாழும் இடத்திற்கே கொண்டு வரும் ஒருத்தருக்கு கொஞ்சம் பணத்தை சேர்த்து செலவழித்தால் தான் என்ன?

      விவசாயி இன்டர்நெட் என்றெல்லாம் வர எப்படி சாத்தியம்? இவர் ஒரு லட்சம் சம்பளத்தில் இருந்துவிட்டு விவசாயத்திற்குத் திரும்பியவர். எனவே எல்லா தொழில் நுட்பத்தையும் தெரிந்து வைத்திருப்பது ஆச்சரியமில்லை, விவசாயி என்றால் பாமரனாகவே இருக்க வேணும் என்று எதிர்பார்ப்பது வேதனை, மேலும் பலர் விபரம் தெரிந்தவர்களாக ஆக வேண்டும் என்று ஏன் நீங்கள் நினைக்கக் கூடாது?!!

      வருகைக்கு நன்றி!!

      Delete
  12. ஜெயதேவ்:
    புரட்சி தமிழன் என்ன சொல்கிறார் என்று முதலில் புரிந்துகொள்ளுங்கள்....

    ராஜீவ் காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தில்....ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் வேலை செய்தால் (அது வேலையா??), கூலி நூறு ரூபாய். அதிகாரிகள் மற்றும் அரிசியல வாதிகள் எடுத்துக் கொள்ளும் கமிஷன் முப்பது ரூபாய்...

    வேலை செய்யாமலேயே, எழுபது ரூபாய் சம்பாதிக்கும் ஆட்களை வைத்து எந்த புடன்லங்கா விவசாயமும் பண்ண முடியாது....

    இந்தியா முழுவதும் ஊழலில் புழுத்து....இருக்கு...இதுலே இவரு வந்து organic விவசாயம்...

    தேவ்....நான் அடிப்படையில் விவாசாயி..விவசாயம் நல்லா தெரியும். இவர்கள் சொல்வது எல்லாமே டுபாகூர் தான்...

    I am prepar3ed to go on debate with any organic farmer in India!
    organic farming is nothing but B.S. Bull Shit..!

    ReplyDelete