Thursday, March 28, 2013

பரிணாமம்: நாரத்தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணனும்டா..........


அன்புள்ள மக்கள்ஸ்!!

இன்னைக்கு இரண்டு முக்கிய [அவங்க ஏன் முக்கணும்? Constipation ஆ? அப்படின்னுல்லாம் கேட்கப் படாது!!] தமிழ்ப் பதிவர்களைப் பத்தியும், அவர்கள் நம் அறிவுக் கண்களைத் திறக்க செய்துவரும் மொள்ளமாறித் தனங்களைப் பத்தியும் பார்க்கப் போகிறோம். இவங்க தமிழ்ப் பதிவர்கள் என்றாலும் International லெவலில் எழுதுவதால் தங்கள் பெயர்களை கொஞ்சம் மாத்திகிட்டாங்க, ஆனாலும் நாம் விட்டுவிடுவோமா?  அதை திரும்பவும் தமிழ்படுத்தி விட்டோம்!!

பதிவர் 1:  Mac Paul Kelvin [நம்ம மொழி பெயர்ப்பு : மக்குபால் கள்வன்], Go Donkey அப்படின்னு ஒரு வலைப்பூவை ஆரம்பிச்சு அழகு தமிழில் பித்தாலாட்டத்தை விதைத்து வருகிறார். [Go Donkey -அப்படின்னா, கோ டாங்கி அதாவது "போ ....... கழுதை" அப்படின்னு அர்த்தம்.  இதற்க்கு காரணம், "கழுதை கெட்டா குட்டிச் சுவரு"-ன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி இவரோட பதிவுக்கு கெட்டு போன கழுதைங்க  நாலு போய் விழுந்து கிடக்கும், அந்த கழுதைகளைப் பார்த்து சொல்வது போல  சிம்பாலிக்கா இப்படி பேர் வச்சிருக்காரு.]

பதிவர் 2: Charcoal Wagon [சார்கோல் வேகன், சுருக்காமா சார்வாகன் அப்படின்னு வச்சுக்கலாம்.  நம்ம தமிழாக்கம் கரி வண்டி.]  இவரு எங்க மாமு தான்.  சாதாரண மாமு இல்லை மாமூல் மாமு!! மீன் பிடிக்கிற தொழிலை பரம்பரை பரம்பரையா செய்துகிட்டு வர்றாரு.  கடலுக்கோ ஏரிக்கோ போய்த்தான் மீன் புடிக்கணுமா என்ன?  இருந்த இடத்திலேயே குட்டையை குழப்பி எல்லோரையும் கன்ஃபியூஸ் பண்ணிவிட்டு மீன் பிடிப்பாரு!!  இவரு "பிதற்றல் அரசு"-என்கிற பேர்ல வலைப்பூவை நடத்திகிட்டு வர்றாரு.

இது மக்குபால் கள்வனின் தளத்தில் உள்ள தமிழ்மண வாக்குப் பட்டை.  அது இருக்கு ஆனா இல்லை!!  இதுல டுவிட்டர் பட்டனுக்குகீழே நீல நிறத்தில் தெரிவது தமிழ்மண வாக்குப் பட்டை, கொஞ்சம் பார்க்க முடியும், ஆனாலும் ஓட்டு போட முடியாது.  இப்படி வச்சிருப்பதற்க்கான காரணம் என்னன்னு எனக்கு இன்னமும் விளங்க வில்லை!!மாமுவின் வலைப்பூவில் தமிழ்மண ஒட்டு பட்டை வேலை செய்யாது.   மக்குபால் கள்வனின் வலைப்பூவில் அது இருக்கும், ஆனா இருக்காது.  யாரும் ஓ ட்டு போட முடியாது.  ஆனாலும் இதுங்க பதிவுகள் ஒவ்வொன்னுக்கும்  இருபதுக்கும் குறையாம ஓட்டு விழுது.  இரகசியம் வேற எதுவும் இல்லை, கிராமங்களில் சில இழவு வீடுகளில் செத்தவருக்காக அழ ஆள் இருக்க மாட்டார்கள், அழாமல் இருந்தால் நன்றாக இருக்காது, அக்குறையை நீக்க கூலிக்கு ஆட்களை அழைத்து வந்து மாரடிக்க வைப்பார்கள்.  இவங்களுதும் அதே டெக்னிக் தான்.  கள்ள ஒட்டு போட தனி டீமையே  வைத்திருக்கிறார்கள்.  ஜகஜ்ஜால கில்லாடிங்க தான் போங்க!!இந்த ரெண்டு பேரும் சேர்ந்து பரிணாமம் என்னும் பட்டை நாமத்தை......... ஸாரி ....... பித்தலாட்டத்தை கண்ணும் கருத்துமா இளிச்சவாயர்கள் நெத்தியில்........ மறுபடியும் ஸாரி ......... மத்தியில் பரப்பிக்கிட்டு வராங்க.  அதென்ன பரிணாமம் டார்வின் புளுகிவிட்டு போனதா?  அது தான் இல்லை.  இது வேற!!  ரோட்டில் ஓடும் ஆட்டோ ரிக்ஷாக்களின் பரிணாமம்.  அது  ஒரு  நிறுவனத்தின்  தொழிச்சாலையில் தயாரிக்கப் பட்டது என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  அது தான் இல்லை, அது வந்த விதமே வேறு என்று ஆதாரப் பூர்வமாக நிறுவிக் கொண்டிருக்கிறார்கள்.


இவங்களோட கொள்கைப் படி, முதலில் மிதிவண்டி எனப்படும் சைக்கிள் தான் உருவாச்சு.  எப்படி அது உருவாச்சு?  யாராச்சும் செய்தார்களா?  அதுதான் இல்லை!!  ஒரு பழைய இரும்புக்கு பேரிச்சம்பழம் விற்ப்பவன் வீட்டில் அவன் வியாபாரம் செய்து சேகரித்த இரும்பு, இரப்பர் சாமான்கள் எல்லாம் ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்திருந்தான்.  ஒரு நாள் சூறாவளிக் காத்து வந்து அவன் வீட்டைத் தாக்கியது, அந்த சாமான்கள் எல்லாம் காற்றில் பறந்து போயின, அவை கசாமுசா வென்று ஒன்றோடொன்று கலந்து கீழே விழும் போது சைக்கிளாக மாறிவிட்டது.  இதுதான் சைக்கிளின் பரிணாமம்.


அது அப்படியே இருந்துச்சா?  அதுதான் இல்லை, Natural Selection நடக்க ஆரம்பித்தது.  மனுஷன் சைக்கிளை கஷ்டப்பட்டு மிதிப்பதையும், அடிக்கடி வழியில் டயர் பஞ்சர் ஆவதையும் பார்த்து அந்த சைக்கிளுக்கே பேஜார் ஆகிப் போச்சு.  பழைய இரும்பு பக்கம் சைக்கிளை கொண்டுபோகும்போதேல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக இரும்பை தன்னோடு சேகரிக்க ஆரம்பித்தது, அப்படியே என்ஜினானது, பின்னாடி ஒரு வீலையும் ஏற்றிக் கொண்டது. இது  Natural Selection என்பது ஒருத்தருக்கும் விளங்க வில்லை, அப்படியே ஒரு நாள் ரேஷன் கடைப் பக்கம் போனபோது அங்கே  மண்ணெண்ணெய் வாங்கிய ஒருத்தர் இந்த பரிணாம வளர்ச்சி அடைந்த சைக்கிளின் மேல் தவறிப் போய் கொட்டி விட்டார், அதே சமயம் அங்கே நின்று பீடி குடித்துக் கொண்டிருதவர் தீக்குச்சியை தவறி வீச நின்று கொண்டிருந்த வண்டி தானாக ஓட முதல் ஸ்கூட்டர் பரிணாமம் அடைந்தது. 

 ஸ்கூட்டரை நம்மாளு சும்மா விட்டானா?  ரெண்டு பேரு போயிருந்தா பரவாயில்லை, ரெண்டு பேரை ஏற்றும் வண்டியில் நம்மாளுங்க ஒரு ஊரையே ஏத்த ஆரம்பிச்சாங்க.  
Natural Selection  என்பது தேவைக்கேற்ப வடிவமைப்பில் மாறுவது என்பதை நீங்கள் உணரவேண்டும்.  இப்போது அதிகம் பேர் பயணிக்க வேண்டிய தேவையை உணர்ந்த ஸ்கூட்டர் பரிணாமம் அடைய ஆரம்பித்தது, பின்னால் வைத்திருந்த ஸ்டெப்னி வீல் கழண்டு கீழே வந்து மூன்று சக்கரங்களாகியது. உதைக்கும் ஸ்டார்ட்டர் லிவராக மாறி கையால் மேலே இழுத்தால் ஸ்டார்ட் ஆகும் ஷேப்புக்கு மாறியது, ஹெட்லைட் கீழே போனது, rear view கண்ணாடிகள் அப்படியே ஓரம் போயின, நீங்கள் இன்றைக்கு பார்க்கும் ஆட்டோ ரிக்ஷா உருவானது!!

இன்றைக்கும் பாருங்க ஸ்கூட்டருக்கும் ஆட்டோ ரிக்ஷாவுக்கும் எஞ்சின் சப்தம், சக்கரங்களின் வடிவமைப்பு என நிறைய தொடர்புகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். இதுமட்டுமல்ல, பைக்குகளும் ஸ்கூட்டரில் இருந்து கிளைத்து வந்தவைதான் என்பதையும் இவர்கள் இருவரும் ஆணித்தரமாக அடித்து உதைத்து கூறுகின்றனர்.  எனவே இன்றைக்கு நீங்கள் பார்க்கும் ஆட்டோ, பைக்குகள் இரண்டுக்கும் பொது மூதாதையர் ஸ்கூட்டரே, அவை தானாகவே உருவானவை, யாரும் செய்யவில்லை என்பதே இவர்களின் வாதம்.  

இதையடுத்து, இவர்கள் உயிர்களின் பரிணாமத்திற்கும்  தொண்டு செய்து டார்வினுக்கு நன்றிக் கடன் செலுத்த இருக்கின்றனர்.  இவர்களின் ஆராய்ச்சியில் 200 ரூபாய் மதிப்புள்ள ஒரு மூட்டை இராசாயனப் பொருட்கள் இருந்தால் போதும், [தற்போது மனித உடலில் உள்ள அதே இராசாயன மதிப்பு!!] அதிலிருந்து ஒரு ஆளையே உருவாக்கி விடலாம்.   ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு code நம்பரை உருவாக்குவார்கள், அதை இவர்கள் இயந்திரத்தில் கொடுத்தால் போதும், அந்த 200 ரூபாய் இரசாயனப் பொருட்களும் உங்களுக்கு வேண்டிய நபராக மாறிவிடும்.  வேண்டாத போது மீண்டும் கெமிக்கல்களாகப் பிரித்து போட்டு விடலாம். ரொம்ப சுளுவு.எதை எடுத்தாலும் 200 ரூபாய்.....
உங்களுக்கு எந்த ஃபிகர் வேண்டும், அல்லது எந்த நட்சத்திரம் வேண்டும்?  இனி நீங்கள் ஏங்கி ஏங்கி வாழ் நாள் முழுவதும் நொந்து சாக வேண்டியதில்லை வெறும் 200 ரூபாய் போதும்.  இரவில் உருவாக்கிக்கலாம், விடிஞ்சதும், பிரிச்சு போட்டு விடலாம், கல்யாணம் கருமாதி, பிள்ளை குட்டி என எந்தவித சுமையுமில்லை, விவாகரத்து, ஜீவனாம்சம் என பிரச்சினையும் இல்லை.  வெறும் மஜா......மஜா..... மஜாதான்.  இந்த ஆராய்ச்சி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.  ஹி ...........ஹி ...........ஹி ...........

அடுத்து சமுதாயத்திற்கு சில அறிவுரைகளை இவர்கள் வழங்க இருக்கிறார்கள்: 

மனுஷனுக்கு மட்டும்தான் வலிக்கும், மத்த ஜீவன் எதுக்கும் வலி என்பதே கிடையாது.  அதனால மனுஷனுக்கு எதாச்சும் ஒன்னு என்றால் கூவோ கூவுன்னு கூவனும், நாய் மாதிரி ஊளையிடனும், மத்ததெல்லாத்தையும் அடிச்சு திண்ணனும். 

ஆண், பெண் இவர்கள் தான் இணையனுமா?   ஏன்யா இப்படி பழைமை வாதின்களா இருக்கீங்க?  ஒரு ஆம்பளைக்கு இன்னொரு ஆம்பளையை பிடிச்சிருந்தா ரெண்டு பேரும்  சேர்ந்து வாழலாம், அதனால என்ன தப்பு?  ஒரு பொம்பளைக்கு இன்னொரு பொம்பளையோட குடும்பம் நடத்தினா என்ன தப்பு?  கொஞ்சம் விசாலமா சிந்திங்கையா.........

கல்யாணம் பண்ணாமலேயே குடும்பமும் நடத்தலாம், முடிஞ்சவரைக்கும் சந்தோஷமாய் இருக்கலாம், முடியாட்டி கலட்டிகிட்டு போய்கிட்டே இருக்கலாம்.  இண்டர்நேஷனல் லெவலுக்கு வாங்கையா....... 

உங்க பொண்ணு பையன் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே டேஸ்டு பண்ணப் போவாங்க, இதெல்லாம் தப்புன்னுகிட்டு பழைய காலத்திலேயே இருக்காதீங்க, கம்பியூட்டர் காலத்துக்கு வாங்க.  கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு ரிகர்சல் பார்க்கிறதை நீங்க ஏத்துக்கணும், அதனால என்ன தப்பு? அதற்க்கேற்ப நீங்க மன முதிர்ச்சியடையனும். 

இப்படி அறிவியல் கண்டுபிடிப்புகளையும் சமூக சீர் திருத்தங்களையும் சமுதாயத்தில் ஏற்ப்படுத்தும் இவர்களுக்கு நோபல் பரிசு குடுக்கணும்  அதாவது ஒரு கொரடாவை எடுத்து இவங்க பல்லை புடுங்கனும்.  அது தான் நோ -பல்.  

இன்னொரு மொக்கை பதிவில் சந்திப்போம், வணக்கம் மக்கள்ஸ்!!

46 comments :

 1. பயங்கர கோபத்தில் இருக்கிறீர்கள் போல.... அவர்கள் இன்னும் எத்தனை காலம் முயன்றாலும் பரிணாமவியலை நிரூபிக்கப் போவதில்லை. எனவே கவலையை விடுங்கள். அவர்களும் ஆன்மீக பாதையில் கலக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  ReplyDelete
 2. கண்ணாம்பா... வசனம் கேட்க வேண்டும்...

  பிடித்த நட்சத்திரம்... ஹிஹி...

  ReplyDelete
 3. நீங்கள் மூவரும் நண்பர்களானதால் எப்பவாவது அடித்துக்கொள்வதில் தப்பில்லை...-:)

  ReplyDelete
 4. Why this thani manitha thakuthal?
  Why dont you people fight for your principles, instead of attacking people?

  This is not fair, JayaDev.
  You do not have to ridicule people or even their principles to put your point across. I started reading and then came to the comment section after the first para.

  Do not loose your respect by going so low.
  Even if the other party stoops low, you dont have to. Have a value and follow it. Its just not God belief that makes you a complete man.

  P.S 1 : I have not seen Iqbal Selvan or Sarwagon going down to such low levels.
  P.S 2 : I dont have an account and that is the reason I am not able to tell them.
  P.S 3 : I am an atheist, even if it does not matter here. But we can be friends even if we dont agree.

  ReplyDelete
 5. பரிணாமத்தை கிண்டல் பண்ணியதை மிக ரசித்தேன்...
  பரிணாமத்துடன் நிறுத்தி இருக்கலாம்....
  தனி நபர் கிண்டல் தேவையற்றது....

  ReplyDelete
  Replies
  1. நபர் சிராஜ், Anony,

   தனி மனிதத் தாக்குதல் -இந்த ரூட்டை நாம் பெரும்பாலும் தவிர்த்து விடுவோம், ஆனாலும் வாசகர்களை திட்டம் போட்டு ஏமாற்றுகிறார்களே என்ற ஆதங்கம் நம்மை இதில் போக வைத்து விட்டது, இனி தவிர்ப்போம்.

   Delete
  2. மாப்ளே தாசு,

   நீர் வெளிப்படையாக திட்டுகிறீர்,வேஷம் போடுவது இல்லை,நமக்கு கோபம் வராது. ஆனால் வஹாபிகள் அமைதி,அன்பு என வேஷ‌ம் போடுவது தாங்க முடியாத நகைச்சுவை!!.

   திட்ட உமக்கு உரிமை உண்டு. பொது வாழ்வுக்கு வந்து விட்டால் இதெல்லாம சகஜம்தானே!!

   பரிணாமம் என்பது இப்போதைய உயிரின தோற்ற ,பரவல் கொள்கை,இதற்கு சான்றுகள் உண்டு. வளரும் துறை என்பதால் இதில் ஈடுபடும் ஆய்வு மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

   பரிணாமம் குறித்து வஹாபிகள் தங்களின் மதம் சார்ந்த பரப்புரைகளில், தவறான கருத்துகளை கடந்து இரு வருடங்களாக செய்து வருகின்றனர். அதற்கு மறுப்பு தேடி கற்ற விடயங்களை மட்டுமே பதிவிடுகிறோம்.

   மூமின்களோடு வாதிடும் போது குரான் அடிப்படையில் எனது வாதங்களை வைக்கிறேன், உம்மோடு இஸ்கான் கீதை,பாகவதம் விவாதம் போது
   பிறரின் மொழியாக்கங்களை வாதமாக‌ வைக்கிறேன்.

   அதுபோல் பரிணாமத்தை விமர்சிக்க அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளின் மீது வாதம் வைத்தால், பயனுள்ள வகையில் மறுத்து பதிவிட வசதியாக இருக்கும்.

   ஏன் வஹாபிகள் பரிணாமத்தை எதிர்தாலும், வழிநடத்தப் பட்ட பரிணாமம் என்பது குரானுக்கு முரண் ஆனது என்பதை ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள்
   என்பதை சிந்திக்க மாட்டீர்களா!!!

   நன்றி!!

   Delete
 6. வணக்கம் மாப்ளே அருமையான பதிவு,
  haa haa haa
  என்னை திட்ட ,விமர்சிக்க உங்களுக்கு உள்ள உரிமையை ஆதரிக்கிறேன்.

  நம் தமிழ்மணம் ஓட்டு விரும்புவது இல்லை!!. ப்ளாக்ஸ்பாட்.இன், அல்லது ப்ளாக்ஸ்பட்.காம் பிரச்சினை நாம் கண்டு கொள்வது இல்லை!!.

  பரிணாமக் கொள்கை உயிரிகளுக்கு மட்டும் அல்ல ,மாறும் உயிரற்ற பொருள்களுக்கும் பொருந்தும் என்றாலும் சரியான ஆய்வுக் கட்டுரை கொண்டு விமர்சிக்க வேண்டுகிறேன்.

  எப்படி மாறும் உயிரற்ற பொருள்களுக்கு பொருந்தும் என்றால், பேரண்டத்தின் பரிணாம வளர்ச்சியே பெரு விரிவாக்கம்.

  மொழிகளின் பரிணாம வளர்ச்சியே , பல மொழிகளின் தோற்றம்.

  இருந்தாலும் பரிணாமத்தை அறிவியல் கொண்டு விமர்சித்தால் மறுப்பு சொல்ல ஏதுவாக இருக்கும்.

  மூமின்கள் மட்டும் ஸ்கூட்டரில் அதிகப்பேர் செல்வது போல் காட்ட வருவது ஏன் என‌ என்க்கு தெளிவாக புரிகிறது,

  சகோ சு.பி புரிந்தாலும் எப்படியோ நாத்திகனைத் திட்டினால் போதும் என மார்க்கரீதியான பொறுமை காட்டுவதும் அழகு!!

  **
  மூன்றாம் பாலினத்தவர் உண்டு என்பதும்,அவர்களின் உரிமையை ஆதரித்தலும் தொடர்வோம்.

  விஷ்னு மோகினி அவதாரம் எடுத்தார், கிருஷ்னர் பெண்ணாகி அரவானை திருமணம் செய்ததை ஆதரிக்கும் நீங்கள் மூன்றாம் பாலினத்தவரை ஆதரிப்பதுதானே சரி??
  மிக்க நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. \\நம் தமிழ்மணம் ஓட்டு விரும்புவது இல்லை!!\\ அப்புறம் எதுக்கு மாமு 20 ஓட்டு போடுறீங்க? ஓட்டு பட்டையை வச்சாலே ஓட்டு விழுவது கஷ்டம், தமிழ் மணத்துக்குப் போயி உங்க பதிவு ஐ.டி யை கண்டுபுடிச்சு வேற மெதாடில் ஒட்டு போடணும். அத்தனை இம்சையும் மீறி 20 ஓட்டா!! மாமு அந்த 20 பேரும் உங்களுக்காக உசிரையும் விடுவாங்க போலிருக்கே!!

   Delete
  2. அந்த 20 பேரும் வேற வேற ஆட்கள் அல்ல.. ஒரே நபர் தான் என்று தோன்றுகிறது.... வஹாபிகளின் ஓட்டுக்களை எதிர்க்க ஆரம்பிக்கப்பட்டது... ஹி..ஹி..ஹி ஆனால் வஹாபிகளின் ஓட்டுக்கள் அனைத்தும் வேறு வேறு சிஸ்டங்களில் இருந்து வருபவை என்ற பேருண்மையை மறந்து விடுகிறார்கள்.. பாவம்

   Delete
  3. மாப்ளே,

   இரு முறை மட்டுமே நமது பதிவுகளுக்கு 20 ஓட்டு விழுந்தது. யார் போட்டார் எந்த் தெரியாது!!.

   நமக்கு ஓட்டு வேண்டும் எனில் எதற்கு இரு பதிவுகளுக்கு மட்டுமே போட வேண்டும்!!

   நாமே நம் பதிவுகளுக்கு பெரும்பாலும் ஓட்டு போடுவது இல்லை!!!

   நமக்கு ஓட்டு போடாதே எனவே சொல்கிறோம். நமக்கு தேவை கேள்விகள்,விமர்சனங்கள் கொண்ட பின்னூட்டமே!!

   நன்றி!!!

   Delete
 7. Dear brother Anony....

  // P.S 1 : I have not seen Iqbal Selvan or Sarwagon going down to such low levels. //

  You are wrong... Yes they did comment on wrong and such a idiotic posts..... keep watching them.... but I do agree with you... It does not mean we can do the same...

  so brother Dev.. please avoid individual attacks as much as you can... :)

  ReplyDelete
  Replies
  1. சகோ சிராஜ்,
   மறவர்களுக்கு அறிவுரை வழங்க மூமின்கள் துடிப்பது நாம் அறிவோம். அப்படி அறிவுரை சொல்லும் போது ஏக இறைவனின் குரானை மீறுவதுதான் நம்மால் தாங்க முடிவது இல்லை.

   ஒருவன் உன்னை வரம்பு மீறித் தாக்கினால், அதே அளவு வரம்பு மீறவே மூமின்களுக்கு அல்லாஹ் கூறுகிறான்.பழிக்கும் பழி என ஷரியாவின் படி ஆசிட் ஊற்ற பதிவு போட்ட ஆள் என்பதை மறக்கலாமா !!!!
   //2:194. (போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்; இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்பு மீறுங்கள்; அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.//
   ஆகவே [எதிர்பாராமல்] காஃபிர்களை தாக்கலாம் என்பது நபி(சல்) காட்டிய வழி ஆகும்.

   //610. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
   நபி(ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தினரோடாவது போரிடுவதாக இருந்தால் களத்தில் ஸுபுஹ் நேரம் வரும் வரை எங்களைப் போரில் ஈடுபடுத்த மாட்டார்கள். ஸுபுஹ் நேரம் வந்ததும் கவனிப்பார்கள். எதிர் தரப்பிலிருந்து பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் தாக்காமலிருப்பதும் கேட்கவில்லையானால் திடீர்த் தாக்குதல் நடத்துவதும் நபி(ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. இந்நிலையில் நாங்கள் கைபரை நோக்கிப் புறப்பட்டோம். இரவு நேரத்தில் அந்த இடத்தைச் சென்றடைந்தோம். ஸுபுஹ் நேரம் வந்ததும் பாங்கு சப்தம் கேட்காததால் நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறினார்கள். நான் அபூ தல்ஹாவுக்குப் பின்னால் அவரின் வாகனத்தில் ஏறிக் கொண்டேன். என்னுடைய பாதம் நபி(ஸல்) அவர்களின் பாதத்தில் (அடிக்கடி) படும் (அளவுக்கு நெருக்கமாகச் சென்றோம்), அப்போது கைபர் வாசிகள் தங்களின் மண் வெட்டிகளையும் தானியம் அளக்கும் (மரக்கால் போன்ற) அளவைகளையும் எடுத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும் (கிலியுடன்) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக அதோ முஹம்மத்! அவரின் படை!' என்றனர். நபி(ஸல்) அவர்கள், அம்மக்களைக் கண்டதும் 'அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! கைபர் வீழ்ந்தது! நாம் ஒரு கூட்டத்தினரைத் தாக்கினால், அவர்களின் காலைப்போது கெட்டதாயிருக்கும்" என்றார்கள்.
   Volume :1 Book :10//
   [ஸுபு=அதிகாலை 5_6 மணி] hi hi

   ஆகவே குரானை,நபி(சல்) ஐ வெளிப்படையாக பின்பற்றவும்!!தாக்கியா பண்ண வேண்டாம்!!

   நன்றி!!

   Delete
 8. சகோ அனானி....

  பின்வரும் லிங்கில் இருக்கும் இக்பாலின் கமெண்டை பாருங்கள்....

  http://www.amsenthil.com/2013/02/blog-post_5.html

  // //மூஞ்சூர், ச்ச்சா சாரி வாஞ்சூர் சுற்றுப் பயணம் அருமை அருமை ..இந்தக் கடைக்கு இரவில் ஒருவர் 8 மணிக்கே மேல முக்காடு போட்டுக் கொண்டு ரகசியமாக சில பல தீர்த்தங்களை வாங்கிக் கொண்டு செல்வதாக, இடியப்ப பூதனாரின் திருவிசிறிகள் சிலரிடம் இருந்து வந்த உளவறிக்கைக் கூறுகின்றது.. எல்லாம் வல்ல இடியப்ப பூதனார் அவர்களுக்கு வாந்தியும் ச்சா சாந்தியும் சமாதானமாக போகும் படி அருள் பாலிக்கட்டும் ! அவ்வ்வ்வ் //

  This is what Iqbal's quality....

  hi..hi..hi..hi...

  ReplyDelete
 9. பரிணாம இயலா, பக்தி இயலா என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்க உங்களின் ஒப்பீட்டுக் கதைகளை மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
 10. இப்படி ஒரு சண்டைபோட்டு மூனு பேரும் பிரபலமாக என் வாழ்த்துக்கள், ஜெயதேவ்! :-)

  ReplyDelete
 11. ***ஆண், பெண் இவர்கள் தான் இணையனுமா? ஏன்யா இப்படி பழைமை வாதின்களா இருக்கீங்க? ஒரு ஆம்பளைக்கு இன்னொரு ஆம்பளையை பிடிச்சிருந்தா ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம், அதனால என்ன தப்பு? ஒரு பொம்பளைக்கு இன்னொரு பொம்பளையோட குடும்பம் நடத்தினா என்ன தப்பு? ***

  இன்னும் 50 ஆண்டுகள் சென்று இந்தப்பதிவை வசிக்கிறவா எல்லாம், ஆச்சர்யபடுவா, ஜெயதேவ்! :))

  ReplyDelete
  Replies
  1. \\இன்னும் 50 ஆண்டுகள் சென்று இந்தப்பதிவை வசிக்கிறவா எல்லாம், ஆச்சர்யபடுவா, ஜெயதேவ்! :)) \\அதை நினைக்கும் போதே நெஞ்சில் கிலி பிடிக்குது வருண்........:((

   Delete
 12. பாகவதரே,

  ஹி...ஹி இந்த வாரம் லாங்க் வீக் எண்ட் என்பதால் இஸ்கோனில் எக்ஸ்ட்ராவா கஞ்சா பொட்டலம் கொடுத்துட்டாங்களா கெக்கேபிக்கேனு பதிவ போட்டுக்கிறீர்?

  நாரத்தனம் செய்தாலும் நாசுக்கா செய்யனும்னு சொல்லிட்டு ஏன்யா இப்படி கப்பித்தனமா ஒரு நாரப்பதிவு :-))

  சொல்வதை செய்யனும்,செய்வதை சொல்லணும் ,இப்படி சொல்வேறு ,செயல் வேற இருக்கலாமோ?

  எமது ஆஸ்தான மற்றும் அபிபான நட்சத்திரம் மலபார் படத்தை முதலில் சின்னப்படமா போட்டுவிட்டு,அப்புறம் எனக்கு பயந்துக்கிட்டு ,பெரிய படமா போட்டதால் போனாப்போவுதுனு மன்னிச்சு வுடுறேன்(இனிமே என் பெர்மிஷன் இல்லாமல் இப்படிலாம் படம் போடப்படாது சொல்லிப்புட்டேன்), அது ஏன் ஓய் மொதலில் ஒத்தையா போட்டுவிட்டு பின்னர் ஜோடி சேர்த்து இன்னும் ரெண்டு பேரு படம்,அவாள் எல்லாம் உம்மோட ஆஸ்தான ,அபிமான நட்சத்திரமா?

  ReplyDelete
  Replies
  1. \\இனிமே என் பெர்மிஷன் இல்லாமல் இப்படிலாம் படம் போடப்படாது சொல்லிப்புட்டேன்\\ எவனுக்கோ சொந்தமாகப் போகும் ஆயிட்டத்து மேல இப்படி மயங்கிப் போயி கிடக்கீரு.........அசின் கல்யாணத் தேதி வந்தாத்தான் தெரியும், வௌவாலுக்கு ஹார்ட் அட்டாக்தான்.............. ஹா.........ஹா......ஹா.......

   \\அது ஏன் ஓய் மொதலில் ஒத்தையா போட்டுவிட்டு பின்னர் ஜோடி சேர்த்து இன்னும் ரெண்டு பேரு படம்,அவாள் எல்லாம் உம்மோட ஆஸ்தான ,அபிமான நட்சத்திரமா?\\ இணையத்தை வைரஸ் தாக்கி உலகம் முழுசுமே வேகம் டவுன் ஆயிடுச்சாமே? நீறு தொழில்நுட்ப புலியாச்சே, தெரியாதா? இல்லை புலி தூங்கிடுச்சா? மத்தியானம் மூணு படத்தையும் போட்டா UPLOAD ஆகலே, அதான்.............

   Delete
  2. மாப்ளே தாசு,

   செய்வதை திருந்த செய்!!

   பதிவுதான் அரைகுறை என்றால், நடிகைகளின் படமாவது முழுதும் போடலாமே, முகத்தை மட்டும் காட்டும் படம் வேண்டாம்!!

   சகோ வவ்வாலு எப்படி படம் போடுகிறார்!!

   ஃபோட்டோவை மாத்தி போடுங்க!!

   டிஸ்கி: இனி ஒவ்வொரு பதிவிலும் படம் போடவும்!!. ஹி ஹி எனக்கும் பிடிக்கும்!!

   நன்றி!!!

   Delete
  3. மாமு, மாமி கிட்ட சொல்லி உங்க பெண்டை நிமிர்த்தச் சொல்லனும். நாக்கை தொங்க போட்டுக்கிட்டு அலையுறீங்க.

   மாமு, உங்க கண்டுபிடிப்பை முடிச்சா, தினமும் ஒரு ஆளையே நேரில் கொண்டாந்துடலாமே, முடிங்க மாமு!!

   Delete
 13. சிரிச்சு ரொம்ப நாளாச்சே என்ற குறையை களைந்துள்ளீர்கள். இன்னம் முயன்றால் நீங்கள் நல்லதொரு ஹாஸ்ய எழுத்தாளராக வரலாம். மணிமேகலை பிரசுரத்தில் இவ்வாறான புத்தகங்கள் எழுத ஆள் தேவைப்படுதாம், ஒரு கருப்பு கண்ணாடி போட்டுகிட்டு போனால் வேலைக்கு எடுப்பாங்க.

  உங்கள் மக்குபால் கள்வன் திரித்தல் சூப்பராக இருந்துச்சு ( என்னவோ கள்வனின் காதலி கதையை நியாபகப் படுத்தி விட்டது, மனம் கவர் கள்வன் அல்லவா அப்படித் தான் ).

  நானும் ரொம்ப நாலா கோடங்கிக்கு ஒரு சின்னம் தேடி வந்தேன். இந்த GO DONKEY விளக்கம் அருமை. நான் கூட யோசிக்கவில்லை.

  அடுத்து ஓட்டுப் பட்டை வாசகர் அனைவருக்கும் ஒழுங்காகவே தெரியுது சகோ. வேண்டும் . ஒன்னு உங்க கணனி டுபாக்கூராக இருந்திருக்க வேண்டும், அல்லது உங்கள் கண் டொக்காகி இருக்க வேண்டும். அல்லது இஸ்கானில் கொடுத்த பிரசாதத்தில் அதிக கஞ்சா கலந்து கொடுத்துவிட்டார்கள் போல, கிக்கு உத்தரத்தை தாண்டி விட்டது போல. அவ்வ்வ்வ் !

  http://1.bp.blogspot.com/-IjGA8bCWiPo/UVSA23OWF-I/AAAAAAAAF68/a8VF5T3uRjY/s1600/save.png

  பரிணாமம் குறித்து கொஞ்ச நாளாக எழுதாமல் விட்டதால் வந்த காண்டு போல உங்களுக்கு, அடுத்த பதிவு ரெடியாகிடுச்சு சீக்கிரம் கிடா வெட்ட வேண்டியது தான்.

  பரிணாமவியல் உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட ஒரு கோட்பாடு, மண்ணில் தலையை புதைத்து உலகம் இருண்டது என சொல்லுவோருக்கு நாம் எத்தனை முறை சொன்னாலும் புரியாது. அமெரிக்காவில் இன்னமும் உலகம் தட்டை, உலகம் உருவாகி 6000 வருஷம் தான் ஆச்சு, என பல சதிக் கோட்பாடுகளை நம்பி வருகின்றார்கள். அங்கேயே அப்புடினா நம்ம சவுதி, இந்தியா எல்லாம் கேட்கவா வேண்டும். அவ்வ்வ்

  To argue with a person who has renounced the use of reason is like administering medicine to the dead. Thomas Paine

  உங்கள் கூட்டத்தை நினைக்கும் போது... என்ற பொன்மொழியைத் தான் அவ்வப்போது நினைப்பதுண்டு ..

  அப்புறம் அந்த மேற்கண்ட மூன்று படங்களில் எதோ உள்குத்து இருக்கு என தெரிந்துவிட்டது. முதல் படம் முஸ்லிம், இரண்டாம் படம் சீக்கியர். மூன்றாம் படம் கொடுமை முஸ்லிம்கள் தான் மக்கள் பெருக்கத்துக்கு காரணம் என்ற வழக்கமான இந்துத்வா பிரச்சாரம். அவ்வ்வ்.. நல்லா படங்காட்டுறீங்க பாஸ் !

  மேல இருப்பவங்க எல்லாம் பிகரா, எல்லாம் ஆண்டிஸ், அது சரி உங்க வயதுக்கு அதுங்க தான் கிடைக்கும் ..

  போடுறது தான் போடுறீங்க. நல்ல ஜில்பான்ஸா போடக் கூடாது, அப்படியாவது உங்கள் பதிவுக்கு இளைய வட்டக் கூட்டத்தை கூட்டலாமுல்ல ..

  ரசிக்கும் படியான ஒருவரின் ( வயிற்றெரிச்சல் ) பதிவு.. ஹிஹி ...

  என்ன இருந்தால் உங்க அப்ரோச் பிடிச்சிருக்கு வெளிப்படையா திட்டுறது. ஐ லைக் இட். பட் ஐ வாண்ட் மோர் எமோசன்ஸ் ... அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
  Replies
  1. \\நானும் ரொம்ப நாலா கோடங்கிக்கு ஒரு சின்னம் தேடி வந்தேன். இந்த GO DONKEY விளக்கம் அருமை. நான் கூட யோசிக்கவில்லை. \\ பாவம் கழுதை, அதை உங்க சின்னமாக்கி கேவலப் படுத்திபுடாதீங்க, அதுக்குன்னு ஒரு Dignity இருக்கு.

   \\ ஒன்னு உங்க கணனி டுபாக்கூராக இருந்திருக்க வேண்டும், \\ உபுண்டு லினக்சை டுபாக்கூருன்னு சொன்ன முதல் டுபாக்கூரு நீர்தான்யா!!

   \\அல்லது உங்கள் கண் டொக்காகி இருக்க வேண்டும். \\ நீர்தான் கண்ணாடியை மாட்டிக் கொண்டு எங்கேயோ ஞே .......... என்று பார்த்துக் கொண்டிருக்கிறீர்.

   \\அல்லது இஸ்கானில் கொடுத்த பிரசாதத்தில் அதிக கஞ்சா கலந்து கொடுத்துவிட்டார்கள் போல, கிக்கு உத்தரத்தை தாண்டி விட்டது போல. அவ்வ்வ்வ் !\\ கனடாவில் அரசாங்கமே கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு கஞ்சா கடத்தல் கும்பல் செயல் படுவதாகக் கேள்வி, ஒரு வேலை நீரும் அதற்க்கு அடிமையாகி விட்டீர் போலும், அது தான் வார்த்தைகளில் வருகிறது.

   \\பரிணாமவியல் உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட ஒரு கோட்பாடு, \\ உலக ரீதியாக குடிப்பது, பெண்களைப் பொறுக்குவது கூடத்தான் ஏற்கப் பட்டுள்ளது, அதை நாங்கள் ஏன் ஏற்க வேண்டும்? அறிவியல் இதை ஏற்றுக் கொண்டதா? இல்லையே!! அறிவியல் ஏற்காத குறி சொல்லும் வித்தையை நாங்கள் எதற்கு ஏற்க வேண்டும்?


   \\To argue with a person who has renounced the use of reason is like administering medicine to the dead. Thomas Paine.\\ அவரு உம்மைப் போன்றவர்களைப் பார்த்து இதை சொல்லியிருப்பாரு போல...........

   \\முதல் படம் முஸ்லிம், \\ உமக்கு எக்ஸ்-ரே கண்ணுய்யா........... அதுசரி எத வச்சு முதல் படம் முஸ்லிம்ன்னு கண்டுபுடிசீரு?

   \\மேல இருப்பவங்க எல்லாம் பிகரா, எல்லாம் ஆண்டிஸ், அது சரி உங்க வயதுக்கு அதுங்க தான் கிடைக்கும் ..\\ உமக்கு காஜல் அகர்வாலும், அமலா பாலும் உம்ம ரூமுக்கே வந்துடுவாங்கலாக்கும். கண்ணா நீ காலத்துக்கும் கம்பியூட்டரில் பார்த்து பார்த்து தானே ஏங்கி ஏங்கி நொந்து போகப் போரீரு, அப்புறம் என்ன வாய்ச் சவடால்?

   \\ஐ லைக் இட். பட் ஐ வாண்ட் மோர் எமோசன்ஸ் ... அவ்வ்வ்வ்வ்வ் \\ பாரதிராஜா வாய்சய் இமிடேட் செய்வது மாதிரி இருக்கு.

   Delete
 14. தாஸ், நல்ல காமெடி பதிவு. பரிணாவியலை நன்றாக கிண்டலடித்துள்ளீர்கள்.பரிணாவியலுக்கு சகோ சார்வாகனோ அல்லது இசெவோ ஓனர்கள் அல்ல. ஆனால் அதை நம்புவதும் பரப்புவதும் அவர்கள் உரிமை. அதை எதிர்ப்பது உமது உரிமை. ஆகவே பரிணாமவியல் கிண்டல் வரவேற்கிறேன். நான் பரிணாமத்தை நம்புபவன். ஆனாலும் உமது நகைச்சுவையை ரசித்தேன்.

  ஆனால் முதலிருபத்திகளில் உள்ள தனி மனித பகடி தேவையா? அதில் உங்களது குரோதமே தெரிகிறது. அவர்களின் கருத்து தவறாகப்பட்டால் கருத்தினை எதிர்க்க உமக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அக்கருத்தினை நம்புபவரை தாக்கலாமா?

  ReplyDelete
  Replies
  1. @நந்தவனத்தான்

   \\ஆனால் அக்கருத்தினை நம்புபவரை தாக்கலாமா? \\ தப்புதான் என்ன செய்வது குடிக்கும் தண்ணீரில் விஷத்தைக் கலப்பவர்களைக் கண்டால் ஆத்திரம் வருவது போல மக்கள் மனதில் நஞ்சைக் கலப்பவர்களைக் கண்டால் வருகிறது. I will try to avoid it as much as possible, Thank you !

   Delete
 15. நந்தவனம்,

  //ஆனால் முதலிருபத்திகளில் உள்ள தனி மனித பகடி தேவையா? அதில் உங்களது குரோதமே தெரிகிறது. அவர்களின் கருத்து தவறாகப்பட்டால் கருத்தினை எதிர்க்க உமக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அக்கருத்தினை நம்புபவரை தாக்கலாமா?
  //

  பாகவதரின் தொழில் ரகசியம் தெரியாம பேசிட்டு இருக்கீறே, அவர் இப்படிலாம் எதாவது எழுதுனா தான் ஒரு கோஷ்டி அவருக்கு மாலை,மருவாதி செய்யும்,அதை வச்சு பொழப்பை(பதிவை) டெவெலப் செய்துப்பார், கொஞ்ச நாள் என்னை சீண்டிப்பதிவுப்போட்டுப்பார்த்தார் ,எனக்கு புள்ளைப்பூச்சிகளை அடிக்கும் வழக்கம் இல்லை என்பதால் , ஹெ..ஹே.. இன்னும் நல்லாபதிவை போடும்னு சொல்லி கலாய்ச்சுட்டு விட்டேன்.

  அவருக்கு இப்படி யாரையாவது தாக்கி பதிவைப்போட்டால் தான் ஹிட்ஸ் கிடைக்கும், த.ம.வில் ரேங்க் கிடைக்கும், சில சாம்பார் சட்டிகள் இதுக்குனே உசுப்பிவிட்டு ,ஓட்டுப்போட்டு ஏத்திவிடும்.

  அவருக்கு வேண்டியெதெல்லாம் பப்ளிக்குட்டி ச்சே சிட்டி :-))

  நீர் ரொம்ப கேள்விக்கேட்டால் நந்தவனமும் நாறியப்பொணமும்னு ஒரு பதிவைப்போட்டு விளம்பரம் தேடிப்பார் சாக்கிரதை :-))

  ReplyDelete
 16. @வவ்வால்
  //நீர் ரொம்ப கேள்விக்கேட்டால் நந்தவனமும் நாறியப்பொணமும்னு ஒரு பதிவைப்போட்டு விளம்பரம் தேடிப்பார் சாக்கிரதை :-))//

  அவரு சும்மா இருத்தாலும் நீர் எடுத்துக் குடுப்பீர் போலயே!

  ReplyDelete
  Replies
  1. நந்தவனம்,

   //அவரு சும்மா இருத்தாலும் நீர் எடுத்துக் குடுப்பீர் போலயே!//

   ஹி...ஹி ஏதோ நம்மாள ஆன சின்ன உபகாரம், பாகவதர் ரொம்ப நாளா நானும் ரவுடி தான் நல்லாப்பார்த்துக்கோங்கன்னு சொல்லிக்கிட்டு என்னென்னமோ செய்துப்பார்க்கிறார், ஆனாலும் அவரோட சாம்பார் சட்டி இமேஜ் மாறக்காணோம்,அதான் இப்படி உம்மையும் போட்டுக்கொடுத்து ,உம்ம புண்ணியத்துல அவருக்கும் ரவுடி பட்டம் கிடைக்கட்டுமேனு :-))

   வடிவேல் காமெடிலாம்ம் பார்ப்பதில்லையா, எங்கண்ணண் மேல கைய வைக்க முடியுமானு சொல்லி வாங்கிக்கொடுப்பது தான் :-))

   Delete
  2. @ நந்தவனத்தான்

   எல்லோரும் வவ்வாலை தமிழ்ப புலவர் அப்படின்னு நினைசுகிட்டு இருக்காங்க, உண்மையில் அவர் புலவர் இல்லை தமிழ்ப் புளுகர். நீங்களே இப்ப இதைப் பார்த்துக்கலாம்.

   \\பாகவதரின் தொழில் ரகசியம் தெரியாம பேசிட்டு இருக்கீறே, அவர் இப்படிலாம் எதாவது எழுதுனா தான் ஒரு கோஷ்டி அவருக்கு மாலை,மருவாதி செய்யும்,அதை வச்சு பொழப்பை(பதிவை) டெவெலப் செய்துப்பார், \\ அப்படி யாரு மருவாதி செய்யுறாங்கன்னும் சொல்லணும். எனக்குத் தெரிஞ்சு யாரும் இல்லை. இது புளுகு நம்பர் 1.


   \\கொஞ்ச நாள் என்னை சீண்டிப்பதிவுப்போட்டுப்பார்த்தார் ,எனக்கு புள்ளைப்பூச்சிகளை அடிக்கும் வழக்கம் இல்லை என்பதால் , ஹெ..ஹே.. இன்னும் நல்லாபதிவை போடும்னு சொல்லி கலாய்ச்சுட்டு விட்டேன்.\\ கீழே விழுந்தேன், மண்ணை தின்னேன் ஆனாலும் மீசையில மட்டும் மண்ணு ஒட்டவில்லை. வெற்றி........ வெற்றி..........!! இப்படி இருக்கு இவர் பேசுவது. பதில் சொல்ல தெரியலை, முடியலை வாயைப் பொத்திகிட்டு போனீரு. இதிலென்ன வீராப்பு? இது புளுகு நம்பர் 2.

   \\அவருக்கு இப்படி யாரையாவது தாக்கி பதிவைப்போட்டால் தான் ஹிட்ஸ் கிடைக்கும், த.ம.வில் ரேங்க் கிடைக்கும், சில சாம்பார் சட்டிகள் இதுக்குனே உசுப்பிவிட்டு ,ஓட்டுப்போட்டு ஏத்திவிடும்.\\ தா.ம.வில் என் ரேன்க் எப்பவாச்சும்தான் 20-க்கு உள்ளே வருது, என் பதிவுகளுக்கு ஓட்டு இரண்டு மூணுதான் விழுது, இதை இப்பவும் கூட உண்மைதானா என்று பார்க்க முடியும். எந்த ஆதாரமும் இல்லாமல் புளுகுவதில் நம்ம தமிழ் புளுகருக்கு இணை யாரும் இல்லை என்பதற்கு இதுவே நிரூபணம். இது புளுகு நம்பர் 3.

   \\நீர் ரொம்ப கேள்விக்கேட்டால் நந்தவனமும் நாறியப்பொணமும்னு ஒரு பதிவைப்போட்டு விளம்பரம் தேடிப்பார் சாக்கிரதை :-))\\ இது சாதாரணமா இருக்கும் இருவருடன் சிண்டு முடிந்து விடும் குள்ளநரித் தனம். இதுமட்டுமல்ல, என்னையும், மார்க்க பந்துக்களையும் சிண்டு முடிய இவரும் தலைகீழாய் நின்னு பார்க்கிறார், ஒன்னும் வேலைக்காகவில்லை.

   நந்தவனத்தான் நான் வவ்வாலுக்கு சொல்ல விரும்புவது ஒன்னே ஒண்ணுதான். இன்னைக்கு எங்க கோவிலுக்கு வரும் பெண்களைப் பத்தி இவர் அசிங்கமா எழுதினார், ஆனா நீங்க அது தனி மனித தாக்குதல் என்று தடுத்தீர்களா? அவங்க வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்து, நம்ம கலாசாரப் படி ஆடைகள் அணிந்து கோவிலுக்கு வருகிறார்கள். அவர்களை அப்படிப் பேசலாமா? ஒரு பெண்ணை தனிப்பட்ட முறையில் ஆபாசமாக விமர்சிக்க இவர் யார் ? இவரை மனிஷன் லிஸ்டிலேயே சேர்க்க முடியாது, ரெண்டு கால் நாய், ஏன்னா அதுதான் வீதியில் எந்த பெட்டை நாயைப் பார்த்தாலும் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு தாவும் இதுவும் அதையே செய்கிறது. இப்படி ஒப்பிடுவது பெருத்த அவமரியாதைதான். யாருக்கு? அந்த நாய்க்கு. வருகைக்கு நன்றி.

   Delete
  3. பாகவதரே,

   ஹி...ஹி இப்போ இரத்தம் சூடேறிக்கொதிக்குமே, கண்ணுலாம் சிவப்பா ஆகுமே, கையில நரெம்பெல்லாம் முறுக்கேறி துடிக்குமே :-))

   # உமக்கு யாரு மாலை மருவாதி செய்றானு உமக்கே தெரியலைனா எனக்கு எப்புடிய்யா தெரியும்?

   நீர் செய்யிற நாதாறி தனத்துக்கு வேற யார் கண்டுப்பாங்க எல்லாம் எதாவது சாம்பார் சட்டி குருப்பா தான் இருக்கும்.

   உம்மை சொன்னதும் புழுகுனு சொல்லுறீரே, சார்வாகன் பதிவு என்ன எப்பொழுதுமே முன்னிலையிலா நிக்குது, என்னிக்கோ ஒரு நாள் சூடான இடுகையில் வந்துடுச்சு,அதுக்கே பெரிய கான்ஸ்பைரசி தியரி சொல்லிக்கிட்டு அலையிறீர் ,அப்போ நீர் சொன்னது மட்டும் புழுகில்லையா?

   # நானெல்லாம் பதில் சொல்வதில் எப்படினு உலகத்துக்கே தெரியும், உமக்கெல்லாம் சொல்லி டைம் வேஸ்ட் செய்யனுமான்னு தான் சும்மா விடுறதே.

   நீர் சொல்லும் அபத்தக்கருத்துக்களுக்கும், நன்னாறி,நாதாறி தனத்துக்கும் மட்டுமே அவ்வப்போது சமூக நலன் கருதி பதில் சொல்கிறோம்.

   # //இவரை மனிஷன் லிஸ்டிலேயே சேர்க்க முடியாது, ரெண்டு கால் நாய், ஏன்னா அதுதான் வீதியில் எந்த பெட்டை நாயைப் பார்த்தாலும் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு தாவும் இதுவும் அதையே செய்கிறது. இப்படி ஒப்பிடுவது பெருத்த அவமரியாதைதான். யாருக்கு? அந்த நாய்க்கு. வருகைக்கு நன்றி.//

   ஒரு வர்ணாசிரம வெறியர் என்னை மனிதன்னு சொல்லாமல் இருப்பதே சந்தோஷம், ஏன்னா மனுஷன்னு சொன்னா அதோட நிக்காம ,என்ன வர்ணம்னு வேற ஆராய்ச்சி செய்து வைக்கும்.

   இராமயணம்,மஹாபாரத்தில் இல்லாத ஆபாசமா, நியோக திருமணம்னா என்னனு தெரியுமா ஓய்,வியாசர் தான் அதில எக்ஸ்பெர்ட் :-))

   அதைவிடவா நான் சொன்னது உமக்கு ஆபாசாம தெரிஞ்சு போச்சு,அய்யோ பாவமே :-))

   ஆமா நீர் எதுக்கு இப்போ சொறிநாய் போல ஊளையிடுறீர், நீர் தான் காட்டுப்பன்னி வகையாச்சே, அதாவது வராக அவதார பக்தர் ஆச்சே ஊளையிடாம ,காட்டுப்பன்னி போல ஊர்...உர்னு உறும வேண்டாமோ :-))
   -------------

   பின் குறிப்பு:

   அப்புறம் இந்த கமெண்டையும் டெலிட் செய்து உமது தொடை நடுங்கி தனத்தை நிறுபிக்க வேண்டாம் :-))

   Delete
  4. \\ஹி...ஹி இப்போ இரத்தம் சூடேறிக்கொதிக்குமே, கண்ணுலாம் சிவப்பா ஆகுமே, கையில நரெம்பெல்லாம் முறுக்கேறி துடிக்குமே :-))\\ இப்படியெல்லாம் நாக்கை தொங்க போட்டுக்கிட்டு நீர் கனவு காணலாம். கடல் எப்ப வைத்தும் கருவாடு தின்னலாம் என்கிற ஆசையை விடும்.

   \\# உமக்கு யாரு மாலை மருவாதி செய்றானு உமக்கே தெரியலைனா எனக்கு எப்புடிய்யா தெரியும்?\\ இல்லாததை ஏன் புளுகனும், தமிழ்ப் புளுகரே?

   \\சார்வாகன் பதிவு என்ன எப்பொழுதுமே முன்னிலையிலா நிக்குது, என்னிக்கோ ஒரு நாள் சூடான இடுகையில் வந்துடுச்சு,அதுக்கே பெரிய கான்ஸ்பைரசி தியரி சொல்லிக்கிட்டு அலையிறீர் ,அப்போ நீர் சொன்னது மட்டும் புழுகில்லையா?\\ ஓட்டுப் பட்டை இல்லாம 20 ஒட்டு தேடி வந்து போடுவாங்கலாக்கும். போங்கைய்யா...........

   \\# நானெல்லாம் பதில் சொல்வதில் எப்படினு உலகத்துக்கே தெரியும், உமக்கெல்லாம் சொல்லி டைம் வேஸ்ட் செய்யனுமான்னு தான் சும்மா விடுறதே.\\ சைக்கிள் கேப்பில ஆட்டோ, லாரி ஓட்டும் ஆள் நீரு போனா போகுதுன்னு விட்டீராக்கும்.

   \\நீர் சொல்லும் அபத்தக்கருத்துக்களுக்கும், நன்னாறி,நாதாறி தனத்துக்கும் மட்டுமே அவ்வப்போது சமூக நலன் கருதி பதில் சொல்கிறோம்.\\ உம்மா மூஞ்சியைப் பார்த்தா சமூக நலன் கருதும் மூஞ்சி மாதிரி தெரியலை.

   \\ஒரு வர்ணாசிரம வெறியர் என்னை மனிதன்னு சொல்லாமல் இருப்பதே சந்தோஷம், ஏன்னா மனுஷன்னு சொன்னா அதோட நிக்காம ,என்ன வர்ணம்னு வேற ஆராய்ச்சி செய்து வைக்கும்.

   இராமயணம்,மஹாபாரத்தில் இல்லாத ஆபாசமா, நியோக திருமணம்னா என்னனு தெரியுமா ஓய்,வியாசர் தான் அதில எக்ஸ்பெர்ட் :-))

   அதைவிடவா நான் சொன்னது உமக்கு ஆபாசாம தெரிஞ்சு போச்சு,அய்யோ பாவமே :-))\\ இதற்க்கு உமக்கு சரியான புரிதல் இல்லை. அப்படியே இருந்தாலும் நீர் செய்யும் அயோக்கியத் தனத்துக்கு இது பதிலாகாது.

   \\அப்புறம் இந்த கமெண்டையும் டெலிட் செய்து உமது தொடை நடுங்கி தனத்தை நிறுபிக்க வேண்டாம் :-)) \\ முட்டப் பையன் கிட்ட சரண்டர் ஆன தொடை நடுங்கி நீர், நானல்ல.

   Delete
 17. If at all Evolution is true, that is also part of God's Game. Please don't separate God from your Modern Scientific Analysis. God is in your thought, making you to think and analyse. It is the almighty. Whatever your science says today may be disproved tomorrow. But, the presence of "Supreme Power" or "God" always exists whether one realizes or not. Evolutionary theory is just an observation applicable only to living beings known to mankind. Again it is confined to man's knowledge and wisdom or genius as you call it. And, man's knowledge itself is continuously changing and is never perfect. I'm not advocating that you should not do any scientific analysis. But, keep in mind that the base of all our/universe's activities is "God" or "Supreme Sense".

  ReplyDelete
 18. Please dont combine God and supremesense. These two are different. People give different definition as their whim and fancy. Some god come with lungi,playing cricket etc. Also they write what they desire for their group and say that that is given by god to suppress the others. These people do every bad thing in the name of that so called GOD's scripture created by them. So please please do not equate both.

  ReplyDelete
  Replies
  1. Please don't compare God with Humans. When I said God, I meant the Immortal Supreme and not the human samiyars whether they are real or not. Also, I never mentioned about any scripture of any religion. I meant the real Supreme Almighty. I have a very deep faith in God through my own realizations and I respect everybody's feeling in respect of spirituality. There are many ways of attaining enlightenment and realizing God is not limited to any particular belief. The "Supreme Sense", I mentioned encompasses and pervades the entire universe known to us and beyond. That is what is God. If you think that God is like Ganesha, Krishna, Allah, Jesus, forget it. They are all incarnations ( avatars ) or names given to the "Supreme Most" by humans.

   Delete
 19. Who is this anonymous guy?!!

  He sounds like God himself/herself! LOL

  ReplyDelete
  Replies
  1. Thats why I am "Anonymous". Name or ID is not important to tell the "Only Truth". Don't attach importance to the physical person like me. Rather listen to the "Supreme Sense" which is inside you.

   Delete
  2. Of course, that is what (supreme sense) speaking now from "inside of me"! That is what wondering whether the anonymous guy is God himself/herself or WHAT?! lol

   Delete
 20. சிரித்து சிரித்து அலுவலகத்தில் இருக்கிறவங்கள் எல்லாம் வந்து எட்டிப்பார்த்துவிட்டு போகிறார்கள். மருபடியும் வின்னர் படம் பார்த்த மாதிரி ஒரு திருப்தி.

  ReplyDelete
  Replies
  1. @ புரட்சி தமிழன்

   ரொம்ப நன்றி நண்பரே, எனக்கு டானிக் சாப்பிட்ட மாதிரி இருக்கு!!

   Delete
 21. "எமது ஆஸ்தான மற்றும் அபிபான நட்சத்திரம் மலபார் படத்தை முதலில் சின்னப்படமா போட்டுவிட்டு,அப்புறம் எனக்கு பயந்துக்கிட்டு ,பெரிய படமா போட்டதால் போனாப்போவுதுனு மன்னிச்சு வுடுறேன்(இனிமே என் பெர்மிஷன் இல்லாமல் இப்படிலாம் படம் போடப்படாது சொல்லிப்புட்டேன்),"
  இந்த கருத்தை ஆமோதிக்கிறேன் . என் கனவுலக கன்னி மலபார் திராவிட பியுட்டி குயின்காவ்யா மாதவனின் படத்தையும் வெளியிடுமாறு தாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்மையுடன் வேண்டிகொள்கிறேன் .

  ReplyDelete
 22. விவாதம் எல்லாம் வேண்டாம். இத்தோட எல்லோரும். நிறுத்திக்கோங்க ப்ளீஸ்

  ReplyDelete
 23. வலைச்சரத்தில் தங்கள் பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...
  கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...
  வாழ்த்துகள் நண்பா...

  http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_6.html

  ReplyDelete
 24. @ இரவின் புன்னகை

  அறிமுகப் படுத்தியதை தெரிவித்ததற்கு நன்றி நண்பரே!!

  ReplyDelete
 25. வலைச்சரம் வாழ்த்துகள்.

  ReplyDelete