Saturday, January 26, 2013

படுக்கையறையில் காமிரா வைக்காமல் கள்ளச் சாமியாரை கண்டுபிடிப்பது எப்படி?

கள்ளச் சாமியார்கள் மக்களை ஏய்த்து வருவது எப்போ ஆரம்பித்தது என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாத அளவுக்கு ரொம்ப காலமாக நடந்து வருகிறது, தற்போதும் நடக்கிறது, இனி வரும் காலங்களிலும் நடக்கும்.  இவர்களிடம் ஏமாறுபவர்கள் வெறும் அப்பாவிகளா என்று பார்த்தால் அதுவும் இல்லை.  அதிபுத்திசாலித்தனம் கொண்ட,  நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் பயின்றவர்களும், பெரிய பணக்காரர்களும் இவர்களிடம் எளிதில் ஏமாந்து கற்பையும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும், வாழ்க்கையையும் தொலைக்கிறார்கள். இவ்வளவு படித்த நீங்கள் எப்படி எமாந்தீர்கள் என்று கேட்டால், "எங்களை விடுங்கள், அமரிக்காவில் மக்கள் மனங்களை படிக்கத் தெரிந்த மனோதத்துவ நிபுணரே [சைக்காலஜிஸ்ட்] இந்த சாமியார் பேச்சைக் கேட்டு தான் சேர்த்து வைத்திருந்த ஒன்று முதல் இரண்டு கோடி ரூபாய் வரையிலான சொத்துக்களை இவருக்கு தானமாக வழங்கியிருக்கிறார், நாங்கள் எம்மாத்திரம்?" என்று அவரது சாமர்த்தியத்தை பறை சாற்றுகிறார்கள். வெறும் பேச்சை வைத்தே ஆயிரம் கோடிகளில் சொத்து சேர்க்கத் தெரிந்த இந்த மாதிரியான சாமியார்களிடம் இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனத்தை உருவாக்கி நடத்தும் சாமர்த்தியம் இருக்கிறது,  ஆனால் அவர்கள் பிராடு வேலை செய்யப் போய்விட்டது தான் துரதிர்ஷ்டவசமாகும். 


சமீபத்தில் பிரபலமான கள்ளச் சாமியார் தன்னை நடிகையோடு இருப்பதாக காட்டிய காட்சி உண்மையல்ல, கணினியால் சித்தரிக்கப் பட்டது என்று சாதிக்கிறார்.  அந்த காட்சி படமாக்கப் பட்ட நேரமும், தேதியும் ஒவ்வொரு காட்சியிலும் தோன்றுகிறது.  அதே சமயம் இவர் கலந்துகொள்ளும் ஒவ்வொரு பொது நிகழ்ச்சியும் ஊரறிய படமாக்கப் படுகிறது, அந்த நடிகையும் அவ்வப்போது விமானத்தில் பறப்பவர்.  வீடியோவில் காட்டப் படும் தேதி, நேரங்களில் ஏதாவது ஒன்றை எடுத்து அந்த நேரத்தில் நாங்கள் வேறு இடத்தில் இருந்தோம், அந்த காட்சியில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று காட்ட இவர்கள் இதுவரை ஏன் முயற்சிக்கவில்லை என்பது விந்தையாக இருக்கிறது.  ஏதோ நம்ம அதிர்ஷ்டம் ஒரு புண்ணியவதி  இவர் படுக்கையறையில் கேமராவை வைத்து நம்மைக் காப்பாற்றி விட்டார், கேமாரவில் பெண்ணுடன் சிக்கியதால், இவர் ஒருத்தர் மட்டும் போலி ஆன்மீக வாதி மற்றவர்கள் யோக்யர்கள் என்று அர்த்தமல்ல. "மாட்டாத வரை எல்லோரும் யோக்கியர்களே" என்ற தத்துவத்தின் அடிப்படையில் வெளியில் கொல்லை பேரு இன்னமும் சிக்காமல் உலாத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் பலர் கடைசி வரை எல்லா அயோக்கியத்தனமும் செய்து வாழ்ந்து, மாண்ட பின்னர் தலைமுறை தலைமுறைக்கும் கடவுளாக்கப் படுகின்றனர் என்பது தான் ஜீரணிக்க முடியாத உண்மை. இந்த மாதிரி படுக்கையறையில் வைக்கப் படும் கேமராக்களை நம்பாமல் போலி ஆன்மீகவாதிகளை அடையாளங்கண்டு நம்மை காத்துக் கொள்ள வழி இருக்கிறதா என்று பார்ப்பதே இந்தப் பதிவின் நோக்கம்.




பொதுவாக கள்ளச் சாமியார் என்றால் பெண்களுடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருப்பவர், அவ்வாறு அல்லாதவர் நல்ல சாமியார்  என்று நம்மில் பலரும் தவறாக நினைக்கிறோம்.  உண்மை அதுவல்ல.  பாலியல் ரீதியான ஒழுக்கம் என்பது ஆன்மீக வாதிக்கு உண்டான தகுதிகளில் ஒன்றுதானே தவிர அதுவே முழுத் தகுதியும் ஆகிவிடாது.   சொல்லப் போனால் திருமணம் செய்து குழந்தைகளோடு இருப்பவர்களும் நல்ல ஆன்மீக வாதிகளாக இருக்க முடியும்.  உண்மையில் தகுதியான சாமியாரால்  கள்ளத் தனம் செய்யவே முடியாது, எனவே கள்ளச் சாமியார் என்ற சொற்றொடரே முரணாகும். "கருணையான கொலைகாரன்", "நேர்மையான திருடன்" என்பது போல !!  நாம் இவர்களை போலி ஆன்மீகவாதிகள் எனலாம், இதன் பொருள் இறைவனை அடைய நமக்கு வழிகாட்ட தகுதியற்றவர்கள் என்பதாகும்.

முதலில் எல்லோருக்கும் தெரிந்த திருவண்ணாமலை ராஜசேகரனை எடுத்துக் கொள்வோம். பாலியல் ரீதியாக அல்லாமல், மற்ற விஷயங்களை வைத்து இவர் ஒரு நல்ல ஆன்மீகவாதிதானா என பார்ப்போம். பின்னர் இதையே மற்றவர்களுக்கு எவ்வாறு விரிவுபடுத்துவது என்றும் பார்ப்போம்.


1. இவருடைய குரு யார்?:  உலகெங்கிலும் லட்சக் கணக்கான சீடர்களுக்கு தான் குரு என்கிறார்.  முதலில் சீடனாகவேண்டும், குருவின் போதனையைப் பின்பற்றி பூரணத்துவம் பெற வேண்டும் அதற்க்கப்புறம் தான் குருவாக முடியும்.  இவர் முதலில் ஊரைச் சுற்றி எக்கச் சக்கமான சீடர்களை உண்டு பண்ணிவிட்டு அவர்களில் பலரை சந்நியாசம் என்ற நிலை வரை உயர்த்தியதாகச் சொல்லிவிட்டு, அதற்க்கப்புறம் தான் இவரே சீடராகியிருக்கிறார்?  இந்த கூத்து எங்கே நடக்கும்?  சமீபத்தில் தான் மதுரை ஆதீனத்தை தன்னுடைய குரு என்று சொல்லிக் கொண்டார்.   அப்படியானால் இத்தனை நாட்கள் இவருக்கு குருவாக இருந்தது யார், அவர் தற்போது இவருடைய குருவா இல்லையா?  அந்த மாதிரி குருவை மாற்றுவது ஏற்கத் தக்கதா?   தற்போது மதுரை ஆதீனத்தால் கலட்டி விடப் பட்டு பாதியாகிப் போன பின்னர் இவருடைய குரு யார்?  குருவே தேவை இல்லை என்று அர்த்தமா?  

இவர் 120 நாடுகளில் தனது இயக்கத்தை விரிவு படுத்தி லட்சக்கணக்கான தொண்டர் படையைச் சேர்த்ததோ,  நூற்றுக் கணக்கான கோடி சொத்து செர்த்ததோ, பள்ளியில் படிக்கும் போது தனது பையில் படத்தை வைத்து அழகு பார்த்த நடிகையையே பின்னொரு நாளில் தனக்கு  "பணிவிடை" செய்ய வைத்ததோ [காணொளி சுட்டி1] [காணொளி சுட்டி2], வெறுமனே டிப்ளமோ படித்த இவர் BITS பிலானியில் பயின்றவரை சிஷ்யை ஆக்கியதோ எதுவும் ஆச்சரியமாகத் தோன்றவில்லை.  தான் அள்ளி முடியுமளவுக்கு தலை நிறைய முடியை வளர்த்து வைத்துக் கொண்டு டஜன் கணக்கான வெளிநாட்டவர்களுக்கு மொட்டையடித்து அவர்கள் கையில் ஒரு தண்டத்தைக் கொடுத்து (மூங்கில் கம்பு)  நிற்க வைத்தாரே, [சுட்டி] அது தான் வியப்பாக இருக்கிறது!!  ஒருத்தர்  கூட, "ஏன் ஸ்வாமி, நீங்க மட்டும் பொம்பளைங்களை விட நீளமா முடியை வச்சிக்கிட்டு, எங்களையெல்லாம்  மொட்டை அடிக்கச் சொல்வது ஏன்?"  என்ற கேள்வியே கேட்டிருக்க மாட்டாரா?!   

2. பெண்கள் சந்நியாசம் ஏற்பது தகுமா?:  இவர் சந்நியாசம் வழங்குவதை ஆண்களோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை, பெண்களையும் சேர்த்துக் கொள்கிறார். [சுட்டி] அவர்களுக்கு மொட்டையடிப்பதில்லை என்பது மட்டுமே வேறுபாடு.  திருமணத்திற்கு முன்னர் பிரமச்சாரியம், திருமணமானதும் கிரகஸ்தன், ஐம்பது வயதில் மனைவியுடன் புனிதத் தளங்களுக்கு செல்லும் வானபிரஸ்தான், இறுதியாக எல்லாவற்றையும் துறந்த நிலையை அடைந்த சந்நியாசி போன்ற நான்கு நிலைகளில், முதல் மூன்றில் பெண்கள் இருப்பினும் நான்காவதான சந்நியாசம் என்பது ஆண்களுக்கு மட்டும்தான்.  இது தான் வேத கலாச்சாரம்.  பெண்கள் துறவு நிலைக்கு ஏற்றவர்கள் அல்ல, வாழ்வில் எந்த ஒரு காலகட்டத்திலும் அவர்கள் தங்கள் பெற்றோர்கள், கணவர், சகோதரர்கள் அல்லது தங்களது வயது வந்த மகன்களுடனோ மாத்திரமே இருக்க வேண்டும்.  தனியான வாழ்வு அவர்களுக்கு வேத கலாசாரம் தரவில்லை.  சந்நியாசம் அவர்களுக்கு இல்லை.   முக்கியமாக கலி யுகத்தில் ஆண்களாயினும் சந்நியாசம் என்பதே தவிர்க்கப் படவேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.  பருவடைந்த இளம்பெண் ஒரு போதும் திருமணம் முடிக்காமல் இருக்கலாது என்ற வேதங்களின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு  இவர் இளம்பெண்கள் கையில் கமண்டலம், தண்டத்தைக் கொடுத்து சந்நியாசினி என்று பெயரும் கொடுத்து அனுப்புகிறார்,  இந்த அட்டூழியம் எங்கே நடக்கும்? எந்த வகையில் இவர் வேத கலாசாரத்தைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார் என்று புரியவில்லை.




3. இவர் பற்று  இல்லாதவரா? உங்களுக்கு சொந்த பந்தங்கள் மேல் பற்று இல்லையா என்ற கேள்விக்கு இவர் சொல்கிறார், "எனக்குள் வாழ்க்கையைப் பற்றி ஏற்ப்பட்ட கருத்துக்களின் முதிர்ச்சியினால் ஆசாபாசங்கள் முழுக்க முழுக்க என்னிடமிருந்து உதிர்ந்து விட்டன.  அவ்வாறு ஆசாபாசங்கள் தானாகவே உதிர்ந்தத பின்னர் தான் நான் சந்நியாச வாழ்க்கையையே ஏற்றேன்".  [சுட்டி] இவர் தேனொழுகப் பேசுவது எல்லாம் மயிர் கூச்செறியச் செய்யும் வண்ணம் தான் இருக்கும் ஆனால் அத்தனையும் பேத்தல் என்பது கொஞ்சம் உற்று நோக்கினால் விளங்கும். உதாரணத்துக்கு   இவரது மடத்தில் அதிகப் படியான வருமானம் வரும் துறை,  சிலைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகும்.  இதை இவரது உடன்பிறந்த தம்பி கோபி என்பவருக்கும், அண்ணன்  செந்தில்குமார் என்பவருக்கும் தான் ஒப்படைத்திருக்கிறார்.  மேலும் பணம் கொழிக்கும் முக்கிய வேலைகள் அத்தனையும் இவர்கள் கைவசமே இருக்கக் கூடும். ஆக இவர் தலையில்  இருந்த முடியைக் கூட இழக்க மனமில்லை, அப்புறம் சொந்த பந்தம் எங்கே உதிர்வதற்கு!!

4.  சந்நியாசி வண்ண உடைகள் உடுத்தலாமா?  சந்நியாசம் ஏற்ற பின்னர் காவி உடை மட்டுமே உடுத்த வேண்டும்.  சங்கர மடத்திலோ, வைணவ சம்பிரதாயங்களிலோ  சந்நியாசிகள் எங்கும் வண்ண உடைகள் உடுத்த இயலாது.  அனால் இவரது படத்தை கூகிளில் ஒரு தமாசுக்கு தேடினால் இவர் அணியாத வண்ணமே இல்லை என்னும் அளவுக்கு எல்லா வண்ணத்திலும் உடை உடுத்துகிறார்.  இது எதில் சேர்த்தி என்றே தெரியவில்லை. 


5.  சாதுவுக்கு களங்கம் ஏற்படுமா?  இவர் பாலியல் குற்றச்சாட்டால் சிறைக்குச் சென்று விசாரணை முடிந்து வெளிய வந்த சமயம்.  தான் சிறைக்குச் சென்றதால் களங்கப் பட்டதாகவும் அதைப் போக்க தன்னைச் சுற்றி தீ வைத்து ஏதேதோ சடங்குகளைச் செய்து அவற்றை நிவர்த்தி செய்யப் போவதாகவும் சொல்லிக் கொண்டார்.  ஒருத்தர் உண்மையில் ஆன்மீகத்தில் பூரணத்துவம் அடைந்தவர் என்றால் அவரை யாராலும் களங்கப் படுத்த முடியாது.  சொல்லப் போனால் அவர் செல்லுமிடங்கள் எல்லாம், அவரது  பாதம் பட்டவுடன் தங்களது களங்கத்தை போக்கிக் கொள்ளும்.  மற்றவர்கள் புனித நதிகளில் நீராடும்போது அவர்கள் பாவங்களை நதிகள் ஏற்கும், அதே நதியில் ஒரு தூய ஆன்மீகவாதி இறங்கும் போது மற்றவர்களால் சேர்ந்த பாவங்கள் நீங்கி அந்த நதிகளுக்கே விமோசனம் கிடைக்கும்.  ஆக நான் ஜெயிலுக்குள் போனதால் களங்கமடைந்தேன் என்பதே பித்தலாட்டம், அதுக்கு முன்னாடியே களங்களாகத்தான் இருந்தார் என்பதுதான் நிஜம்.   போகாத களங்கத்தை  போக்க சாமான்ய மக்களுக்கு விநியோகிக்கப் படும் ரேஷன் கடை மண்ணெண்ணையை  வீணடித்தது மகா அயோக்கியத் தனம்.  [சுட்டி].



 6.  மேலே உள்ள தகவல் விக்கி பீடியாவில் இருந்து எடுத்தது.  இதையே இவரது தளங்களிலும் புத்தகங்களிலும் பார்க்கலாம்.  இவர் பிறந்த தேதி -ஜனவரி 1, 1978 என்று கொடுக்கப் பட்டுள்ளது,  ஆனால் இவரது பாஸ்போர்ட்டில் மார்ச் 13, 1977 என கொடுக்கப் பட்டுள்ளது.  எது உண்மை?  மேலும், இவர் ஞானமடைந்த தேதி ஜனவரி 1, 2000 என்கிறார்.  தமிழ்நாட்டில் பிறந்த இவருக்கு ஏன் எல்லாமே ஆங்கில நாட்காட்டியைப் பொறுத்தே நகர்கிறது என்பது மட்டும் விளங்கவில்லை   மேலே கடைசியில் உள்ள தகவல் இவரே பலமுறை தொலைக்காட்சிகளில் சொல்லியிருக்கிறார், "நான் கடவுள் என்று சொல்லவில்லை, நீங்கள் எல்லோரும் கடவுள் என்று சொல்ல வந்திருக்கிறேன்".  இது தான் இருப்பதிலேயே மிகப் பெரிய பித்தலாட்டம். அதெப்படி எல்லோரும் கடவுள் ஆக முடியும்?  மனுஷன் மனுஷன் தான், கடவுள் கடவுள் தான்.  மனுஷன் இப்போதும் வீடு பேரு அடைந்த பின்னரும் கூட இறைவனுக்கு சேவை செய்யும் நிலைதான், அதில் தான் அவனுடைய உண்மை நிலை, மாறாத நிலை.  [சுட்டி ]

7.  பத்திரிகையாளர்களின் சந்திப்பின் போது இவர் காறித் தூ.....  என்று எல்லோர் முன்னிலும் துப்பியிருக்கிறார், [சுட்டி 8:00 வது நிமிடத்தில்] இதை ஒரு சாது செய்வாரா என்பதை முடிவு செய்ய உங்களுக்கே விட்டு விடுகிறேன்.  இவர் வாயிலிருந்து சில சாபங்கள் வெளி வந்திருக்கின்றன:

"அழிக்கப் பட்ட சிவாலயங்கள் உங்கள் வம்சத்தை நாசமாக்கும்".  [சுட்டி] 
"120 நாடுகளில் உங்கள் சிலைகளை வைத்து செருப்பால் அடிப்பார்கள்"   [சுட்டி 8:00 வது நிமிடத்தில்]

இந்த வார்த்தையெல்லாம்  தான் சாது, ஜீவன் முக்தி [அப்படின்னா என்ன கருமமோ தெரியல] அடைந்தவர் என்று சொல்லிக் கொள்பவர் வாயிலிருந்து வரலாமா?  புராணங்களில் முனிவர்கள் சாபம் கொடுப்பார்கள் ஆனால் உண்மையில் அது வரம்.  அகலிகை "கல்லாய் போகக் கடவது" என்று சாபம் பெற்றது போலத் தோன்றும். ஆனால் இராமனின் பாதம் அவள் மீது பின்னால் படப் போவதற்கான வரம் அது.   தனக்கு கெடுதியே வந்தாலும் ஒரு சாது பதிலுக்கு கெடுதி செய்ய மாட்டார், நன்மையையே செய்வார்.  ஆனால், வம்சம் நாசமாகப் போகட்டும் செருப்பால் அடிப்போம் என்பதெல்லாம் அத்தகைய வகையைச் சார்ந்ததல்ல.  மூன்றாம் தர மனிதர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், சாதுக்கள் வாயில் இருந்து வராது.

8.  இவர் ஒரு கதை சொல்கிறார். [சுட்டி] ஒரு ஜென் மாஸ்டர் புகைப் பிடிக்காதே, குடிக்காதே  என்று எல்லோருக்கும் சொல்லிவிட்டு அவர் எப்போ பார்த்தாலும் புகை பிடிப்பாராம்.  இதைப் பார்த்த ஒருத்தர் என்ன மாஸ்டர் எங்களை "புகைப் பிடிக்காதே, குடிக்காதே" என்று சொல்லிவிட்டு நீங்க மட்டும் பார்க்கும் போதெல்லாம் புகைக்கிறீர்களே என்று கேட்டாராம். அதற்க்கு அவர், என்னோட லெவலே வேற, அதனால உன் லெவலுக்கு பொருந்தும் அறிவுரை எனக்குப் பொருந்த வேண்டியதில்லை, "Don't do what Masters do, do what they say" என்றாராம்!! .  இவர் வீடியோவில் நடிகையோடு மாட்டியபோது இதைச் சொல்லித் தப்பித்திருக்கலாம், ஏனோ விட்டுவிட்டார்!!  அது போகட்டும், உண்மையில் ஒரு சாதுவுக்கு இப்படிப் பட்ட நியமங்கள் எதையும் பின்பற்றத் தேவையில்லையா?  நிச்சயம் தேவை.  அவர்கள் தன்னை உணர்ந்த ஆன்மாக்கள் அவர்களுக்கு எந்தக் கட்டுப் பாடும் தேவையில்லை என்றாலும், அவர்கள் எதைப் போதிக்கிறார்களோ அதை பின்பற்றவும் செய்வார்கள் காரணம் அவர்களைப் பார்த்து மற்றவர்களும் பின்பற்ற வேண்டுமென்பதற்காக!!  

9.  இவரு அப்பப்போ சிவன் [சுட்டி], கிருஷ்ணன் வேஷம் போடுறாரு [சுட்டி].   அதற்க்கு என்ன அர்த்தம்னு இன்னமும் விளங்கவில்லை.  இவரும் அவர்களைப் போல படைத்தல், காத்தல் அழித்தல் செய்யத் தகுதியாவரா?  [வருஷத்துக்கு ஒரு தடவை சீக்ரெட்டா அம்மன் வேஷமும் போடுவாராம், அதைப் பார்க்க காசு கொஞ்சம் ஜாஸ்தியாம், அதற்காகத்தான் தலையை மொட்டையடிக்காம வச்சிக்கிட்டு திரியறாராம்!!].  எந்த தூய பக்தரும் நான் சிவன், நான் கிருஷ்ணன் என்று சொன்னதாகச் சரித்திரமே இல்லை.  எல்லோரும் நான் அவர்களின் திருவடி சேவகன் என்றே சொல்லியிருக்கிறார்கள் அதுவே உண்மையும் கூட. 

இது போல இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம்.  இவரைப் பற்றி வெளியிடப்பட்ட  நடிகையுடனான படம் பொய் என்றே நிரூபிக்கப் பட்டாலும், இவர் ஒரு நல்ல ஆன்மீகவாதி இல்லை என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.  

பொதுவாக போலி ஆன்மீக வாதிகளை எப்படி கண்டுபிடிப்பது?

  • நான் கடவுளேதான் என்று சொல்வான், அல்லது அவனது சீடர்கள் அவனை கடவுள் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

  • ஆன்மீக குருவே தேவை இல்லை, என்று இவர்கள் குருவாக இருந்து உங்களிடமிருந்து பணத்தை பிடுங்கிக் கொண்டிருப்பார்கள்.  அவர்களுக்கென்று ஆன்மீக குரு யாரும் இருக்க மாட்டார்கள், அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு முன்னர் ஒன்றிரண்டு தலைமுறைக்கு மேல் யாராவது ஒருத்தர் குரு இல்லாமல் தான்தோன்றியாக இருப்பான்.

  • வாயில் இருந்து லிங்கம் எடுப்பது, கையில் இருந்து திருநீறு வாட்ச், தங்க மோதிரம் தங்கச் சங்கிலி எடுத்தல் போன்ற வேலைகளைச் செய்வான்.  தங்கம் வி.ஐ.பி க்களுக்கு மட்டும் தான் கிடைக்கும், ஏழைகள் லிங்கம் எடுக்கும் மேஜிக் வித்தையை எல்லோருடனும் உட்கார்ந்து பார்க்கலாம். அவன் கொடுக்கும் வாட்ச் எங்கே எப்போது வாங்கியது என்பதையும் கண்டுபிடிக்கலாம். 

  •   மடத்துக்கு போகும் பக்தர்களுக்கு குரு வைத்தியம் பார்ப்பார், நோய்கள் பலவற்றை குணப் படுத்துவார்.  [வைத்தியம் பார்ப்பது தப்பில்லை, ஆனால் அது ஆன்மீக வாதியின் வேலையும் இல்லை.  வைத்தியம் மருத்துவர்தான் பார்க்கணும், அதற்க்கு மருத்துவ மனைக்குத்தான் செல்ல வேண்டும்.  ஆன்மீகவாதி, ஆன்மாவை உணரவும், இறைவனை உணரவும் வழி சொல்ல வேண்டும். ]

  • முக்தி அடைந்தால் நீங்க கடவுளோடு ஒன்னாயிடுவீங்க, அதற்க்கப்புறம் கடவுள் நீங்க என்ற பேதம் மறைந்து போயிடும் என்று போதிப்பவர்கள். 
  • கடவுளுக்கு உருவமே இல்லை என்பவர்கள்.   கண் இல்லாதவன் குருடன், காது இல்லாதவன் செவிடன், கால் இல்லாதவன் நொண்டி, தலை இல்லாதவன் முண்டம், இப்படி எது எதெல்லாம் இல்லைன்னு திட்டுகிறோமோ  அத்தனையும் ஒண்ணாச் சேர்த்து ஒரே வார்த்தையில் திட்டனுமா?   உருவம் இல்லாதவனேன்னு சொன்னாப் போதும், அதைத்தான் இவர்கள் செய்கிறார்கள்,

 எது போலி என்று சொல்லிவிட்டோம், இனி எது நல்லது என்பதையும் சொல்ல வேண்டும்.  நல்ல ஆன்மீக வாதியை கண்டுபிடிப்பது எப்படி?  அடுத்த பதிவில் பார்ப்போம்.


15 comments:

  1. நல்ல கருத்துக்கள்.

    ReplyDelete
  2. ஒரு அலசு அலசிட்டீங்க. நிஜமான சாமியாரா இருந்தாலும் சந்தேகக் கண்ணோட பாக்கறதே நல்லது.நம்மாளுங்கதான் யோசிக்க மாடாங்கன்னா வெளி நாட்டுக்காரனும் அப்படித்தான் இருக்கான்.
    -T.N.MURALIDHARAN

    ReplyDelete
  3. பாகவதரே,

    உம்ம ஸ்குரு யாருனு கேட்டும் பதிலே சொன்னதில்லை, அப்போ நீரும் போலி சாமியாரா :-))

    // சங்கர மடத்திலோ, வைணவ சம்பிரதாயங்களிலோ சந்நியாசிகள் எங்கும் வண்ண உடைகள் உடுத்த இயலாது.//

    ஆனால் சங்கரமடத்தில சொர்ணாக்கா கூட "பஜனை செய்யலாம்" :-))

    காவி என்பதும் ஒரு வண்ணமே :-))

    ராஜசேகரன் ஜகஜோதியா வாழ்வது பார்ப்பண சாமியார்களின் கண்ணை உறுத்துது போல, நீரும் மாஜி நடிகைகளின் சேவையை பெற முயற்சிப்பது தானே :-))

    கேமிரா வைக்காமல் போலி சாமியாரை கண்டுப்பிடிக்க எளிய வழி கூடவே இருந்து ஒரு பெடோமாக்ஸ் லைட்டை பிடிக்கலாம், இப்போ பவர் கட் நேரத்தில் பெட்ரோமாக்ஸ் லைட்டுக்கு நல்ல டிமாண்ட் :-))

    // நான்காவதான சந்நியாசம் என்பது ஆண்களுக்கு மட்டும்தான். இது தான் வேத கலாச்சாரம். பெண்கள் துறவு நிலைக்கு ஏற்றவர்கள் அல்ல, வாழ்வில் எந்த ஒரு காலகட்டத்திலும் அவர்கள் தங்கள் பெற்றோர்கள், கணவர், சகோதரர்கள் அல்லது தங்களது வயது வந்த மகன்களுடனோ மாத்திரமே இருக்க வேண்டும். தனியான வாழ்வு அவர்களுக்கு வேத கலாசாரம் தரவில்லை//

    உமா பாரதியை சந்நியாசினினு சொல்லிட்டு காவிக்கோஷ்டி அலையுதே ஏன்? அவங்க கூட கோவிந்தாச்சர்யா கூட லீலை செய்தாங்கன்னு செய்தியில் அடிப்பாட்டங்கோ, பிரபல காவி அரசியல்வாதிகளே சாமியாரிணிக்கிட்டே ஆசிர்வாதம் வாங்குறாங்க, எல்லாம் வேதக்கலாச்சாரம் தெரியாதவங்களா இருக்காங்கலே :-))

    ReplyDelete
    Replies
    1. \\உம்ம ஸ்குரு யாருனு கேட்டும் பதிலே சொன்னதில்லை, அப்போ நீரும் போலி சாமியாரா :-))\\ நான் யாரைப் பற்றியாவது புகழ்ந்தோ அல்லது அவர்கள் சொன்னதைப் பற்றி எழுதினாலோ அவர்களை அவதூறு செய்யும் விதமாக பின்னூட்டமிடுகிறார்கள் அல்லது பதிவுகளைப் போடுகிறார்கள். அவர்கள் அவ்வாறு தாக்கப் படுவது ஒருபுறம் மனவேதனையாக இருந்தாலும், இறைச் சேவையில் இருப்பவர்களை அவதூறு செய்பவர்கள் பின்னால் கடும் துயர்களைச் சந்திப்பதை நேரடியாக நான் பலமுறை பார்த்திருப்பதால், இணையத்தில் உள்ள நமது அன்பர்களுக்கு அந்த மாதிரி எதுவும் ஆகக் கூடாது என்ற பயம் ஒரு புறம் இருப்பதால் என்னுடைய ஆன்மீக குரு யார் என்பதை வெளிப்படுத்தாமல் உள்ளேன்.

      \\ஆனால் சங்கரமடத்தில சொர்ணாக்கா கூட "பஜனை செய்யலாம்" :-))\\ சங்கர மடம் என்பது நீங்கள் நினைப்பது போல காஞ்சீபுரத்தில் இருப்பது மட்டுமல்ல, சிரிங்கேரி , பத்ரிநாத், ஜகன்னாத பூரி, துவாரகை என மேலும் நான்கு இடங்களில் அமைந்துள்ளன, அவர்கள் எல்லோரும் உம்ம ஊர் காரங்க மாதிரியே இருப்பாங்க என்று அர்த்தமல்ல. மேலும் இன்றைக்கு தறிகெட்ட நிலையில் இருந்தாலும் அவர்களுக்கென்று இருக்கும் மரபையே இங்கே கூறியுள்ளேன். ஒரு வேலை இம்மரபைப் பின்பற்றுவதாக இருந்தாலும் வண்ண வண்ண உடைகளை சன்னியாச வாழ்வில் இருப்பவர் உடுத்தலாகாது.

      \\காவி என்பதும் ஒரு வண்ணமே :-))\\ சர் சி.வி. இராமன் மறைவுக்கு அப்புறம் நடந்த மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பு இதுவாத்தான் இருக்கும்.

      \\ராஜசேகரன் ஜகஜோதியா வாழ்வது பார்ப்பண சாமியார்களின் கண்ணை உறுத்துது போல, நீரும் மாஜி நடிகைகளின் சேவையை பெற முயற்சிப்பது தானே :-))\\ நீரும், இராமதாஸ் கட்சி அருள் என்பவனும் ஒரே இனமய்யா........ அயோக்கியன் என்று வந்ததுக்கப்புறம் ஜாதி என்ன மதம் என்ன? ரெண்டு பேரும் சட்டப் படி தண்டிக்கப் படனும்னு நினைப்பீங்களா, அதை விட்டுட்டு ஜாதி வாரியா Quota பிரிச்சு ஐயர் கள்ளச்சாமி என்ஜாய் பண்ணினான் இப்ப நம்ம சாதிக்காரன் என்ஜாய் பண்றான்ன்னு சந்தோஷப் பட்டுக்கிட்டுகிட்டு இருக்கீங்களே......... உங்களை எப்படி எல்லாம் காறித் துப்பனும்னுதான் தெரியலை........ நாறப் பசங்களா..........

      \\கேமிரா வைக்காமல் போலி சாமியாரை கண்டுப்பிடிக்க எளிய வழி கூடவே இருந்து ஒரு பெடோமாக்ஸ் லைட்டை பிடிக்கலாம், இப்போ பவர் கட் நேரத்தில் பெட்ரோமாக்ஸ் லைட்டுக்கு நல்ல டிமாண்ட் :-))\\ பெட்ரோமாக்ஸ் லைட்டுக்கு நல்ல டிமாண்ட் எல்லாம் finger tips ல தெரிஞ்சு வச்சிருக்கீரு....... பகலில் வாத்தியாரு, வரும்படி போதாம இரவில் பெட்ரோமாக்ஸ் லைட்டு பிடிக்கப் போறீரு... தமிழக அரசே தமிழ் வாத்திகள் சம்பளத்தை உயர்த்து.

      \\உமா பாரதியை சந்நியாசினினு சொல்லிட்டு காவிக்கோஷ்டி அலையுதே ஏன்? அவங்க கூட கோவிந்தாச்சர்யா கூட லீலை செய்தாங்கன்னு செய்தியில் அடிப்பாட்டங்கோ, பிரபல காவி அரசியல்வாதிகளே சாமியாரிணிக்கிட்டே ஆசிர்வாதம் வாங்குறாங்க, எல்லாம் வேதக்கலாச்சாரம் தெரியாதவங்களா இருக்காங்கலே :-))\\ யாரு இதுங்க எல்லாம்? எனக்கு ஒன்னும் தெரியாது. சாரி.

      Delete
  4. மாப்ளே தாசு,

    வேடதாரி சாமியார்களை அம்பலப் படுத்தும் உமது முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.
    எனினும் நித்தி மாட்டிக் கொண்டதால் எல்லாரும் கும்முகிறோம்.
    போலி சாமி கண்ண்டுபிடிக்கும் உமது செயல்முறை மீதே நம்து விமர்சனம்.

    1./நான் கடவுளேதான் என்று சொல்வான், அல்லது அவனது சீடர்கள் அவனை கடவுள் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்./
    இது இப்போது மட்டுமா, ஆதி முதல் அவதாரம் இறைத்தூதர் என்று பினாத்தியவர்களுக்கும் பொருந்துமா? அனைவருக்கும் என்றால் ஹி ஹி நாம உம் கட்சி.

    *
    2.//ஆன்மீக குருவே தேவை இல்லை, என்று இவர்கள் குருவாக இருந்து உங்களிடமிருந்து பணத்தை பிடுங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கென்று ஆன்மீக குரு யாரும் இருக்க மாட்டார்கள், அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு முன்னர் ஒன்றிரண்டு தலைமுறைக்கு மேல் யாராவது ஒருத்தர் குரு இல்லாமல் தான்தோன்றியாக இருப்பான்.//

    ஹி ஹி இதுக்கு நீர் பதில் சொல்ல மாட்டீர். இதே மாதிரி ஆளு என் காதில் மட்டும் சாமி குசு குசுன்னு பேசி சொல்லச் சொல்லுதுன்னு சொன்னா!!

    *
    அற்புதம்,குணம் அளிப்பென் என்பது டுபாக்கூர் வேலையே!! சூப்பரு!!

    3.//முக்தி அடைந்தால் நீங்க கடவுளோடு ஒன்னாயிடுவீங்க, அதற்க்கப்புறம் கடவுள் நீங்க என்ற பேதம் மறைந்து போயிடும் என்று போதிப்பவர்கள். //

    இப்போதைய வாழ்வில் முக்தியா!!. இப்படியும் சொல்ரானுங்களா அயோக்கியப் பயலுவ!!. இவனுகளை பத்தியே தெளிவா ஒரு பதிவு போடுங்க மாப்ளே!!

    4.//கடவுளுக்கு உருவமே இல்லை என்பவர்கள்//

    சூப்பரு. நான் கூட கடவுள் என்பதன் சான்று இல்லை என மட்டுமே சொல்கிறேன். சான்றுகளுக்கு விரோதமில்லா கடவுளுக்கு நாம் எதிரி அல்ல!!
    கடவுள் எப்படி இருக்க்லாம்?!!

    நம் புலனுக்கு புலப்படும்/புலப்படா உருவம் கொண்ட , உயிரின் விதைகளையும், அனைத்து பொருள்களையும் ஒரு புள்ளி விதையில் உருவாக்கி அதில் இருந்து விரித்து பிரப்ஞ்சம் உருவாக்கி, அதில் சில கோள்களில் பரிணாமம் மூலம் உயிர்களைத் தோன்ற வைத்து அதில் மனிதனுக்கு மட்டும் சிந்த்னையை கொடுத்த சக்திகள்தான் கடவுள் என்றால் என்னால் மறுக்க இயலாது!!

    நான் தசாவதாரம் கமல் போல் கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் எனவே சொல்கிறோம்!! கடவுள் இருந்தால் உருவ[ங்கள்]ம் உண்டு!

    உருவ வழிபாடு பற்றி உமது கருத்து?

    *
    //நல்ல ஆன்மீக வாதியை கண்டுபிடிப்பது எப்படி? அடுத்த பதிவில் பார்ப்போம்.//
    இதில் நம்க்கு வேலை வரும்!! அதில இரத்தம் வர அடிக்கிறேன். இதில் சமாதானம்!!

    உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்[விட முடியல்லை!!]

    நல்லது யார் செய்தாலும் நன்றே!!

    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. \\எனினும் நித்தி மாட்டிக் கொண்டதால் எல்லாரும் கும்முகிறோம்.\\மாமு இந்தப் பிரச்சினை வரும் என்று முன்னரே தெரியும். செத்த பாம்பைத்தான் எல்லோரும் போட்டு அடிப்பார்கள். ஆனால் நாம் அவ்வாறு இல்லை. அவர் பாலியல் ரீதியாத்தான் மாட்டியிருக்கார், ஆனால் பாலியலைத் தவிர்த்து வேறு எப்படியெல்லாம் அவர் தகுதியற்றவர் என்பதை நாம் இங்கே பார்த்திருக்கிறோம்.

      \\இதில் நம்க்கு வேலை வரும்!! அதில இரத்தம் வர அடிக்கிறேன். இதில் சமாதானம்!!\\ Going to be tough for me!!

      Thanks for coming Mamool mamu!!

      Delete
  5. நீங்க சொன்னதையே தான், இந்த ஒரிஜினல் நாலு, சிரிங்கேரி , பத்ரிநாத், ஜகன்னாத பூரி, துவாரகை சங்கரமடங்களும் சொல்கின்றன:: காஞ்சி சங்கரமடம் சங்கர மடமே அல்ல என்று; அதாவது, ஆதி சங்கரர் அனுக்கிரகம் பெற்ற மடம் அல்ல அல்லவே அல்ல என்று...!

    உண்மையில் காஞ்சி மடம் குமபகோணம் மடம் தான்...வயது என்ன ஒரு 150 இருக்கும்; காஞ்சி மடத்தை காஞ்சிபுரத்தில் பதிவு பண்ணினதே குமபகோணம் மடம் என்ற பெயரில் தான்....அப்புறம் நம்ம ஆட்கள் இடை செருகல்கள் மூலம்...சங்கரமடம் என்றார்கள்...உண்மையில் அது சங்கரமடம் அல்ல!

    மறுபடியும் படியுங்கள்: அதானால் தான், இந்த ஒரிஜினல் நாலு...சிரிங்கேரி , பத்ரிநாத், ஜகன்னாத பூரி, துவாரகை சங்கரமடங்களும் சொல்கின்றன:: காஞ்சி சங்கரமடம் சங்கர மடமே அல்ல என்று...

    இவற்றுக்கு ஆதாரம்...கைபுண்ணுக்கு கண்ணாடி எதற்கு...விக்கிபீடியாவில் உண்மைகள் கொட்டிக் கிடக்கிறது...!

    வவ்வால், அதனால், கலர் உடை காஞ்சியில் உடுக்கலாம்...ஏனென்றால், காஞ்சி மடம் தான் ஒரிஜினல் சங்கரமடம் இல்லையே?
    ---------------

    \\ஆனால் சங்கரமடத்தில சொர்ணாக்கா கூட "பஜனை செய்யலாம்" :-))\\ சங்கர மடம் என்பது நீங்கள் நினைப்பது போல காஞ்சீபுரத்தில் இருப்பது மட்டுமல்ல, சிரிங்கேரி , பத்ரிநாத், ஜகன்னாத பூரி, துவாரகை என மேலும் நான்கு இடங்களில் அமைந்துள்ளன, அவர்கள் எல்லோரும் உம்ம ஊர் காரங்க மாதிரியே இருப்பாங்க என்று அர்த்தமல்ல. மேலும் இன்றைக்கு தறிகெட்ட நிலையில் இருந்தாலும் அவர்களுக்கென்று இருக்கும் மரபையே இங்கே கூறியுள்ளேன். ஒரு வேலை இம்மரபைப் பின்பற்றுவதாக இருந்தாலும் வண்ண வண்ண உடைகளை சன்னியாச வாழ்வில் இருப்பவர் உடுத்தலாகாது.

    ReplyDelete
  6. @ நம்பள்கி

    மற்ற நான்கும் ஆதிசங்கரரால் நிறுவப் பட்டது. காஞ்சி மடம் பற்றி அறிந்திருக்கவில்லை. தவலுக்கு நன்றி நம்பள்கி.

    ReplyDelete
  7. ஓய் பாகவதரே,

    தமிழில்,தமிழர்களுக்காக எழுதினது தானே,சங்கர மடம்னு சொன்னால் காஞ்சிபுரத்தை தான் நினைச்சுப்பாங்க, அதனை சுட்டிக்காட்டினால் அதை சொல்லவில்லைனு நழுவ வேண்டியது, நீ ர்சொல்லும் கதையும் எனக்கு தெரியும், ஆனால் சங்கரமடம் என்பது தமிழ்நாட்டில் காஞ்சிக்கு தான் அடையாளமாக உள்ளது.

    சரி காஞ்சி சுப்புண்ணி பத்தியும் இப்படி ஆய்வு செய்யலாமே ,ஏற்கனவே செய்திருந்தால் சுட்டிக்கொடுக்கவும். எழுதவே இல்லை எனில், நீரும் ,காஞ்சி சுப்புண்ணியும் ஒரே மாதிரி நாறப்பசங்கன்னு மக்கள் நினைச்சிடுவாங்க :-))

    //முக்தி அடைந்தால் நீங்க கடவுளோடு ஒன்னாயிடுவீங்க, அதற்க்கப்புறம் கடவுள் நீங்க என்ற பேதம் மறைந்து போயிடும் என்று போதிப்பவர்கள். //

    நீர் ஒரு போலி சாமியாரே தான் ,

    சங்கர மடம்னா ,சிருங்கேரி, பத்ரிநாத்,பூரி,துவாரகைனு சொல்லும் நீர் இப்படி சொல்வதேன்,

    ஆதி சங்கரர் நிறுவிய கொள்கை தான் அத்வைதம்,முக்தி அடைந்தால் ,இறைவனை அடையலாம், இறைவனும் ஆன்மாவும் ஒன்றாகிவிடும் என்பது.

    //"Advaita" means "Not Two". The advaitins say that Jivatma and paramatma are not two (i.e., different) but they are One, i.e., identical. Hence this system of philosophy is called Advaita. The founder of Advaita philosophy is Adi Sankara//

    ஆக மொத்தம் சந்தடி சாக்கில் சைவ மறபினை போலி சாமியார்களிம் பட்டியலில் சேர்த்து உமது வைணவ அரிப்பை காட்டீக்கொள்கிறீர் :-))
    -----------

    நம்பள்கி,

    காஞ்சி மடமே சிருங்கேரி வழி வந்தது தான்.

    கும்பகோணத்தில் இருந்த சிருங்கேரி மடத்தின் கிளையாக திறக்கப்பட்டது காஞ்சி மடம், ஆனால் பின்னாளில் கும்பகோணத்தை விட காஞ்சிக்கு செல்வாக்கு கூடிப்போனது,கிளை மடத்தின் நிர்வாகி சங்கராச்சாரியார் ஆகமுடியாது என்பதால் ,தில்லுமுல்லாக இது தனி மடம்னு சொல்லி தனக்கு தானே சங்கராச்சாரியார் பட்டம் போட்டுக்கிட்டாங்க. இதான் காஞ்சி மடத்தின் உண்மை கதை.



    ReplyDelete
    Replies
    1. @வவ்வால்

      பெண்கள் தொடர்பு என்று அல்லாது தத்துவ ரீதியாக போலிகளை அடையாளம் காண்பது பற்றித்தான் இந்த பதிவு. எனவே, காஞ்சி சங்கர மடத்தின் பெண் தொடர்புகள், கிரிமினல் வழக்குகள் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. ஆதிசங்கரர் போதனைகள் பற்றி சொல்லும் நீங்கள் ஸ்ரீ ராமானுஜர் போதனைகளையும் சொல்லி இரண்டும் முரண் பட்டதா இல்லையா என்றும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். முடிந்தால் செய்யுங்கள்.

      ஆதி சங்கரர் அவதாரம் & Teachings குறித்து தனிப்பதிவு எழுத இருக்கிறேன், கொஞ்சம் பொறுத்திருங்கள்.

      மற்ற நான்கு மடங்களும் ஆதி சங்கரரால் நிறுவப் பட்டது, காஞ்சி பற்றிய தகவல்கள் எனக்குத் தெரியாது, காஞ்சி மடத்தின் தோற்றம் பற்றிய தகவல்களுக்கு நன்றி.

      Delete
  8. பாகவதரே,

    // நான் யாரைப் பற்றியாவது புகழ்ந்தோ அல்லது அவர்கள் சொன்னதைப் பற்றி எழுதினாலோ அவர்களை அவதூறு செய்யும் விதமாக பின்னூட்டமிடுகிறார்கள் அல்லது பதிவுகளைப் போடுகிறார்கள். அவர்கள் அவ்வாறு தாக்கப் படுவது ஒருபுறம் மனவேதனையாக இருந்தாலும், இறைச் சேவையில் இருப்பவர்களை அவதூறு செய்பவர்கள் பின்னால் கடும் துயர்களைச் சந்திப்பதை நேரடியாக நான் பலமுறை பார்த்திருப்பதால், இணையத்தில் உள்ள நமது அன்பர்களுக்கு அந்த மாதிரி எதுவும் ஆகக் கூடாது என்ற பயம் ஒரு புறம் இருப்பதால் என்னுடைய ஆன்மீக குரு யார் என்பதை வெளிப்படுத்தாமல் உள்ளேன். //

    கதை சூப்பர் :-))

    அப்புறம் என்னாத்துக்கு அடுத்தவங்கள் குருவை பற்றி பேசனும்,அவங்களும் வெளியில் சொல்லக்கூடாதுன்னு உம்மை போல பாலிசி வச்சிருக்கலாம் :-))

    இல்லாத ஸ்குருக்கு எத்தினி சால்ஜாப்பு :-))

    இவரு குருவை நிந்தனை செய்தால் ,உடனே தண்டனை கிடைக்குமாம் ,எனவே அப்படி கஷ்டப்படக்கூடாதுன்னு சொல்ல மாட்டாராம் :-))

    அவனன் கோயிலில் இருக்கும் சாமி சிலையே அலேக்கா தூக்கிட்டு போய் வெள்நாட்டில் விக்குறான்,அவனுக்கே சோ கால்ட் சாமி தண்டனை குடுக்கலை :-))

    தீவிரவாதிகளை அழிக்க ஒரு ஐடியா, உம்ம ஸ்குரு பேர தீவிரவாதிங்க கிட்டே சொல்லி ,இவரை வணங்கனும்னு சொன்னா எலாரும் திட்டுவாங்க,அதனால் அவங்க எல்லாம் சாபம் வாங்கி அழிஞ்சிடுவாங்க :-))

    சரியான ஜோக்கர் இந்த பாகவதர்!

    ReplyDelete
    Replies
    1. \\அப்புறம் என்னாத்துக்கு அடுத்தவங்கள் குருவை பற்றி பேசனும்,அவங்களும் வெளியில் சொல்லக்கூடாதுன்னு உம்மை போல பாலிசி வச்சிருக்கலாம் :-))\\
      நான் குருவை தெரிவிக்க வேண்டும் என்று போலியைக் கேட்க வில்லை, குருவை தேர்ந்தெடுக்கப் போகிறார்களே அவர்களுக்குச் சொன்னேன். ஏமாறக் கூடாது என்ற எண்ணம் இருந்தால் கேட்கலாம்.

      \\இல்லாத ஸ்குருக்கு எத்தினி சால்ஜாப்பு :-))

      இவரு குருவை நிந்தனை செய்தால் ,உடனே தண்டனை கிடைக்குமாம் ,எனவே அப்படி கஷ்டப்படக்கூடாதுன்னு சொல்ல மாட்டாராம் :-))\\

      உங்ககிட்ட வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது என்பதற்காக இணையத்தில் வெளியிடு என்று நான் சொன்னால் வெளியிடுவீர்களா? அதே சமயம் ஓட்டுப் போடப் போகும் போது கண்டிப்பாய் காட்டுவீர்கள், அங்கே வவ்வால் படத்தை காட்டி ஓட்டுப் போட முடியாது. அதே மாதிரி, நான் தீக்சை வாங்கியிருக்கேன் பக்தி செய்கிறேன், நான் இன்னொருவருக்கு என்னுடைய குரு யார் என்று சொல்ல வேண்டிய கட்டாயமில்லை. அதே சமயம் நான் தனியாக மடம் ஆரமித்து சிஷ்யர்களை ஏற்கும் போது என் குரு யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும். அவர் வெளிப் படுத்தா விட்டாலும் அவரை குருவாக அடைய நினைப்பவர் கேட்க வேண்டும். நான் சொன்ன வழி முறைகள் போலியை கண்டுபிடிக்கத் தானே தவிர ஏமாற்றுபவனுக்கு அல்ல. அவனை கட்டாயப் படுத்தவும் முடியாது.

      \\அவனன் கோயிலில் இருக்கும் சாமி சிலையே அலேக்கா தூக்கிட்டு போய் வெள்நாட்டில் விக்குறான்,அவனுக்கே சோ கால்ட் சாமி தண்டனை குடுக்கலை :-))\\ அதை நினைச்சு பாதிக்கப் பட்ட சாமி தானே வருத்தப் படனும்??!!

      \\தீவிரவாதிகளை அழிக்க ஒரு ஐடியா, உம்ம ஸ்குரு பேர தீவிரவாதிங்க கிட்டே சொல்லி ,இவரை வணங்கனும்னு சொன்னா எலாரும் திட்டுவாங்க,அதனால் அவங்க எல்லாம் சாபம் வாங்கி அழிஞ்சிடுவாங்க :-))\\ இப்படியெல்லாம் யோசிச்சு யோசிச்சு வவ்வால் தலையில செடி மரம் எல்லாம் முளைக்குது!!

      Delete
  9. தாசய்யா ! எங்க பணியின் பாதியினை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றிகள் .. இன்னம் நிறைய பேரைப் பற்றி எழுதவும் ( உங்களின் நடை அருமை ).. காஞ்சி மடம் சங்கர மடமே அல்ல, கும்பகோண மடமே கிளை, அக்கிளையின் கிளை தான் இக் காஞ்சி, காஞ்சி சமண மடத்தை முடக்கவும், வெள்ளைக்காரர் உருவாக்கிய சென்னைக்கு அருகே வந்தால் பணம் பண்ணலாம் என்ற எண்ணமுமே காஞ்சி மடம் .. ஆகவே காஞ்சியின் கப்சாக்களையும் கொஞ்சம் காய்ச்சும் படி வேண்டுகின்றேன். மிச்ச 4 மடத்தை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்(பத்திரமாக)..

    ReplyDelete
  10. எது போலி என்று சொல்லிவிட்டோம், இனி எது நல்லது என்பதையும் சொல்ல வேண்டும். நல்ல ஆன்மீக வாதியை கண்டுபிடிப்பது எப்படி? அடுத்த பதிவில் பார்ப்போம்.////

    சூப்பரு...
    இது போல ஒரு பதிவுக்காகத்தான் எதிர்பார்த்துகிட்டு இருந்தேன்!

    eagerly i am waiting for your post sir!

    ReplyDelete