ஊர்களில் பொங்கலின் போது வெவ்வேறு விளையாட்டுப் போட்டிகளை சனங்களுக்கு
வைப்பது வழக்கம். அதே மாதிரி நாமும் வைத்தால் தான் என்ன என்று ரூம் போட்டு
யோசித்ததின் விளைவு தான் இந்த போட்டி. இங்கே ஒரு பதிவரின் பயோ
டேட்டா கொடுக்கப் பட்டிருக்கும், இடையில் உங்களை குழப்புவதற்க்கென்றே சம்பந்தமே இல்லாமல் சில படங்கள் கொடுக்கப் பட்டிருக்கும்,
குழம்பாமல் அவர் யாருன்னு கண்டுபிடிக்கணும் அது தான் போட்டி. சரி இப்போ
கேமை ஸ்டார்ட் பண்ணலாமா? ரெடி.......... ஸ்டார்ட் மியூசிக்.........
தொழில்:
இதெல்லாம் வெறும் சேம்பிள் தான், இன்னும் இது வளர்ந்துகிட்டே இருக்கு,
மேலும் பல பதிவர்கள் இவருக்கு இதுபோல வரவேற்ப்பு கொடுப்பாங்கன்னு
நம்புகிறோம்.
இதையெல்லாம் இவர் எப்படி சமாளிக்கிறார்?: வயித்துக் கடுப்பு வந்தவன் என்ன பண்ணுவான்? நேரா வீட்டு டாய்லெட்டுக்கு ஓடுவான், கதவை சாத்திகிட்டு கடுப்பை தீர்த்துகிட்டு வெளியே வருவான். இவரும் அதையேதான் பண்ணுவாரு. நேரா அவரோட பிளாக்குக்கு ஓடி ஒரு பதிவை காட்டமா போட்டு கடுப்பைத் தீர்த்துக்குவார்.
இவர் பெற்றுள்ள அவார்டுகள்:
1. ரொம்ப நல்லவன்டா அவார்ட்: இவரு பண்ணும் அட்டூழியம் தாங்க மாட்டாம "டபக்கு டுபுக்கு" வலைப்பூவில் இருந்து நாலஞ்சு முரட்டு பசங்க ஒருநாள் இவரைப் போட்டு நொங்கு நொங்கென்று நொங்க, இவர் கடைசி வரைக்கும் வலிக்காத மாதிரியே ஆக்டு குடுத்துகிட்டு இருந்தார். அவங்க எல்லோரும் கைநோக அடிச்சும் இவரு தாங்கியதால், எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான், இவன் "ரொம்ப நல்லவன்டா" அவார்டு கொடுத்து விட்டுப் போய் விட்டனர். அவங்க வலைப்பூவை மூனே நிமிஷத்தில் ஹேக் பண்ணிடுவேன்னு இவர் விட்ட சவால் தான் சென்ற ஆண்டின் மிகப் பெரிய காமடி என்று கருதப் படுகிறது.
2. தமிழ் இலக்கியத்துக்கான தமிழ் மாமா அவார்ட்: காணமல் போன பல சங்க இலக்கிய நூல்களைத் தேடிப் பிடித்து திரட்டி தமிழ்த் தாத்தா என்று இவர் பெயர் வாங்க நினைத்து அதை வேறு யாரோ ஏற்கனவே வாங்கிவிட, அது போனால் போகட்டும் என்று அயராமல் பிளாட் ஃ பார்ம்களில் விற்கப் படும் சரோஜா தேவி புத்தகங்கள், முதல் புத்தகத்தில் இருந்து லேட்டஸ்டு வரை எல்லா பிளாட்ஃ பாமும் முப்பது ஆண்டுகள் சுற்றியலைந்து சேகரித்து வருங்கால தலைமுறைக்கு சேர்த்து வைத்திருப்பதால் இவருக்கு பிளாட்ஃ பார்ம் புத்தகங்கள் படிபோர் சங்கத்தில் இருந்து தமிழ் மாமா விருது வழங்கப் பட்டது.
3. எல்லா மறை நூல்களும் தெரிஞ்சவர் விருது [போட்டியின் இறுதிக் கட்டம் வரை சென்றவர்]: இந்தியாவில் பார்ப்பனியர்களின் வேத மதம், இஸ்லாம், யூதம், கிருத்துவம் என எல்லாம் இவருக்குத் தெரிந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்ததால் "எல்லாம் மறை நூல்களும் தெரிஞ்சவர்" விருது வழங்க இவரை அழைத்தனர், நேர்காணலின் போது முதல் கேள்வியாக "திருக்குறள் தெரியுமா?" என்று கேட்ட போது இவர் திருடன் மாதிரி முழிக்க அதற்குப் பதிலா மறை கலண்டவர் என்ற பட்டம் குடுத்து திருப்பி அனுப்பி விட்டனர்.
4. புள்ளி ராஜா விருது: பதிவுகளில் புள்ளி விவரங்களை கண்ணா பின்னாவென்று அள்ளி வீசி விஜயகாந்தையே ஆட்டம் காண வைத்ததால் புள்ளி விவர ராஜா என்பதைச் சுருக்கமாக காட்டும் "புள்ளி ராஜா" விருதை புள்ளி ராஜாக்கள் கழகம் வழங்கியுள்ளது. எழுத்தாளர்களுக்கு வழங்கப் படும் புலிட்சர் விருது கிடைக்காட்டியும் இந்த புள்ளி ராஜா விருதாவது கிடைச்சதேன்னு இவர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போயிட்டார்.
பிடித்த உணவுகள்: ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா என எல்லா வித பழங்களும்.
தனித் திறமை: கும்மிருட்டில் விட்டாலும், ஒலியை [sound] எழுப்பி அது பொருட்கள் மீது பட்டு வரும் எதிரொலியைக் கேட்டு ஆயிரம் அடி தூரம் வரை என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்கும் திறமை பெற்றவர். இதற்க்கு Echolocation என்று பெயர். "இதை எப்படி மனிதர்களால் செய்ய முடியும்?" என்று கேட்பவர்கள் தாண்டவம் படத்தைப் பார்க்கவும்.
இவரிடமுள்ள இன்னொரு சிறப்புத் தன்மை: இவரது புன்னகை!!
இவரோட குடும்பப் படத்தை பார்ப்பதற்கும் கண்கொள்ளா காட்சியாத்தான் இருக்கும்!!
சரி. தற்போது அந்த பதிவர் யாரென்று கண்டுபிடித்து விட்டீர்களா? ஆம் என்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு பரிசு வேண்டுமா? அதுதான் கிடையாது. இவரைத் தெரியாதவங்க யாராச்சும் இருந்தாத்தான் பரிசு கொடுக்கப் படும். சொல்லப் போனா இவரைத் தெரியாது சொல்றவங்க படத்தை எக்சிபிஷனில் தான் வைக்கணும். ஜாலியா பொங்கலைக் கொண்டாடுங்க, வரட்டுமா!! ஹா.........ஹா.........ஹா.......
பயோ டேட்டா
பதிவரின் பெயர்: அதைத்தான் நீங்க கண்டுபிடிக்கப் போறீங்க!! ஒரு சின்ன Clue அவரு மரக்கிளைகளில் தலைகீழாய் தொங்கிகிட்டு இருப்பார்.
படமெல்லாம் சம்பந்தமே இல்லாம போடுவேன்னு சொல்லிட்டேன்........ ஞாபகம் வச்சுக்குங்க!! |
தொழில்:
மெயின்: பின்னூட்டங்களைப் போடுதல்
எப்பவாச்சும்: பதிவுகளைப் போடுதல்.
பொழுது போக்கு: தமிழ் வாத்தியார். [இவருகிட்ட படிக்கிற பசங்க
எல்லோரும் சாவர வரைக்கும் கல்வி என்பதை கலவி -அப்படின்னேதான் எழுதுவாங்க
சுட்டுப் போட்டாலும் கல்வின்னு அவங்களாலே எழுதவே முடியாது என்பதுதான்
விசேஷம்.]
தெரிந்த மொழிகள்: பன்மொழி வித்தகராகனும்னு தான் மரக்கிளைகளில் தலைகீழா நின்னு பார்த்தாரு, ஆனா பன்னு வித்தவரா கூட ஆக முடியலை. தமிழ், இங்கிலீஷ் ரெண்டு மொழிதான் இவருக்கு கற்க முடிந்தது. அதிலும் ஒரு சின்ன பிரச்சினை, இவருக்கு இங்கிலீஷையே தமிழில் பேசினாத்தான் விளங்கும்!!
சமீப காலமாய் அசினை நினைச்சு பிசினை.....[எதுகை மோனையா சொன்னேன் !! சாரி ..... ] தூக்கத்தை தொலைச்சவர்!! |
தெரிந்த மொழிகள்: பன்மொழி வித்தகராகனும்னு தான் மரக்கிளைகளில் தலைகீழா நின்னு பார்த்தாரு, ஆனா பன்னு வித்தவரா கூட ஆக முடியலை. தமிழ், இங்கிலீஷ் ரெண்டு மொழிதான் இவருக்கு கற்க முடிந்தது. அதிலும் ஒரு சின்ன பிரச்சினை, இவருக்கு இங்கிலீஷையே தமிழில் பேசினாத்தான் விளங்கும்!!
எதைப் பத்தி எழுதுவாரு?: இவரு போடும் பதிவுகளை விட, இவரோட
பின்னூட்டத்துக்குத்தான் ஏகப்பட்ட மவுசு. மூவாயிரம் பின்னூட்டத்துக்கு ஒரு
பதிவு வீதம் போடுவாரு. பின்னூட்டங்களில் ஃபுல் ஸ்டாப் எங்கேயும் வைக்க
மாட்டாரு, அதற்குப் பதில் :-)) தான் போடுவாரு. இதனாலேயே இவரு போற
பிரவுசிங் சென்டரில் எல்லாம் : , - , ) இந்த மூணு கீயும் தேயோ
தேயின்னு தேஞ்சு போயிருக்கும். இவரு குடுக்கும் காசு எல்லாம் அந்த கீகளை மாத்துவதற்க்கே சரியாப் போவுதுன்னு அவர்கள் தினமும் புலம்பிகிட்டே இருக்காங்கலாம்.
பின்னூட்டங்களில் அதிகம் தாக்குவது: கவனப் பிரியன்.
அவரைத் தாக்கும் இவர் நாத்திகரும் அல்ல, சுடலை மாடனை மனதார வணங்குபவர்.
அப்படின்னா ஏன் இன்னொரு இறை நம்பிக்கையாளரைத் தாக்க வேண்டும்? அதற்க்கு "ஏன்னா அவர் ஒரு மார்க்க பந்து, அந்த பந்தை எனக்குப் பிடிக்காது" என்பதே இவரது பதில்.
இவரது பின்னூட்டங்களின் விளைவு? :
சில முன்னணி பதிவர்களில் ரியாக்ஷன்:
#1. "மவனே இந்தப் பக்கம் உன்னைப் பார்த்தேன், துணி காயப் போடும் கேபிளில் உன்னை தலை கீழா தொங்கவிட்டு "கொத்து பரோட்டா" போட்டுவிடுவேன்.
#2. ஐயா ராசா, என்னோடு வீடு பக்கம் இனிமே திரும்பிடாதேப்பா, உன்னை கையெடுத்து கும்பிடறேன் போயிட்டு வாப்பா.
#3. இந்தப் பக்கம் வந்தே, ரிலாக்ஸ் பிளீஸ் ன்னு சொல்லுவேன்னு நினைக்காதே, மவனே கொலாப்ஸ் ஆயிடுவே, உனக்கு சங்குதான் ஓடிப்போ.
இதையெல்லாம் இவர் எப்படி சமாளிக்கிறார்?: வயித்துக் கடுப்பு வந்தவன் என்ன பண்ணுவான்? நேரா வீட்டு டாய்லெட்டுக்கு ஓடுவான், கதவை சாத்திகிட்டு கடுப்பை தீர்த்துகிட்டு வெளியே வருவான். இவரும் அதையேதான் பண்ணுவாரு. நேரா அவரோட பிளாக்குக்கு ஓடி ஒரு பதிவை காட்டமா போட்டு கடுப்பைத் தீர்த்துக்குவார்.
இவர் பெற்றுள்ள அவார்டுகள்:
1. ரொம்ப நல்லவன்டா அவார்ட்: இவரு பண்ணும் அட்டூழியம் தாங்க மாட்டாம "டபக்கு டுபுக்கு" வலைப்பூவில் இருந்து நாலஞ்சு முரட்டு பசங்க ஒருநாள் இவரைப் போட்டு நொங்கு நொங்கென்று நொங்க, இவர் கடைசி வரைக்கும் வலிக்காத மாதிரியே ஆக்டு குடுத்துகிட்டு இருந்தார். அவங்க எல்லோரும் கைநோக அடிச்சும் இவரு தாங்கியதால், எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான், இவன் "ரொம்ப நல்லவன்டா" அவார்டு கொடுத்து விட்டுப் போய் விட்டனர். அவங்க வலைப்பூவை மூனே நிமிஷத்தில் ஹேக் பண்ணிடுவேன்னு இவர் விட்ட சவால் தான் சென்ற ஆண்டின் மிகப் பெரிய காமடி என்று கருதப் படுகிறது.
2. தமிழ் இலக்கியத்துக்கான தமிழ் மாமா அவார்ட்: காணமல் போன பல சங்க இலக்கிய நூல்களைத் தேடிப் பிடித்து திரட்டி தமிழ்த் தாத்தா என்று இவர் பெயர் வாங்க நினைத்து அதை வேறு யாரோ ஏற்கனவே வாங்கிவிட, அது போனால் போகட்டும் என்று அயராமல் பிளாட் ஃ பார்ம்களில் விற்கப் படும் சரோஜா தேவி புத்தகங்கள், முதல் புத்தகத்தில் இருந்து லேட்டஸ்டு வரை எல்லா பிளாட்ஃ பாமும் முப்பது ஆண்டுகள் சுற்றியலைந்து சேகரித்து வருங்கால தலைமுறைக்கு சேர்த்து வைத்திருப்பதால் இவருக்கு பிளாட்ஃ பார்ம் புத்தகங்கள் படிபோர் சங்கத்தில் இருந்து தமிழ் மாமா விருது வழங்கப் பட்டது.
3. எல்லா மறை நூல்களும் தெரிஞ்சவர் விருது [போட்டியின் இறுதிக் கட்டம் வரை சென்றவர்]: இந்தியாவில் பார்ப்பனியர்களின் வேத மதம், இஸ்லாம், யூதம், கிருத்துவம் என எல்லாம் இவருக்குத் தெரிந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்ததால் "எல்லாம் மறை நூல்களும் தெரிஞ்சவர்" விருது வழங்க இவரை அழைத்தனர், நேர்காணலின் போது முதல் கேள்வியாக "திருக்குறள் தெரியுமா?" என்று கேட்ட போது இவர் திருடன் மாதிரி முழிக்க அதற்குப் பதிலா மறை கலண்டவர் என்ற பட்டம் குடுத்து திருப்பி அனுப்பி விட்டனர்.
4. புள்ளி ராஜா விருது: பதிவுகளில் புள்ளி விவரங்களை கண்ணா பின்னாவென்று அள்ளி வீசி விஜயகாந்தையே ஆட்டம் காண வைத்ததால் புள்ளி விவர ராஜா என்பதைச் சுருக்கமாக காட்டும் "புள்ளி ராஜா" விருதை புள்ளி ராஜாக்கள் கழகம் வழங்கியுள்ளது. எழுத்தாளர்களுக்கு வழங்கப் படும் புலிட்சர் விருது கிடைக்காட்டியும் இந்த புள்ளி ராஜா விருதாவது கிடைச்சதேன்னு இவர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போயிட்டார்.
பிடித்த உணவுகள்: ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா என எல்லா வித பழங்களும்.
தனித் திறமை: கும்மிருட்டில் விட்டாலும், ஒலியை [sound] எழுப்பி அது பொருட்கள் மீது பட்டு வரும் எதிரொலியைக் கேட்டு ஆயிரம் அடி தூரம் வரை என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்கும் திறமை பெற்றவர். இதற்க்கு Echolocation என்று பெயர். "இதை எப்படி மனிதர்களால் செய்ய முடியும்?" என்று கேட்பவர்கள் தாண்டவம் படத்தைப் பார்க்கவும்.
இவரிடமுள்ள இன்னொரு சிறப்புத் தன்மை: இவரது புன்னகை!!
இவரோட குடும்பப் படத்தை பார்ப்பதற்கும் கண்கொள்ளா காட்சியாத்தான் இருக்கும்!!
சரி. தற்போது அந்த பதிவர் யாரென்று கண்டுபிடித்து விட்டீர்களா? ஆம் என்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு பரிசு வேண்டுமா? அதுதான் கிடையாது. இவரைத் தெரியாதவங்க யாராச்சும் இருந்தாத்தான் பரிசு கொடுக்கப் படும். சொல்லப் போனா இவரைத் தெரியாது சொல்றவங்க படத்தை எக்சிபிஷனில் தான் வைக்கணும். ஜாலியா பொங்கலைக் கொண்டாடுங்க, வரட்டுமா!! ஹா.........ஹா.........ஹா.......
சிண்டு முடிஞ்சு விட்டாச்சா ! குமுதம் கிசு கிசு எபக்ட் இருக்கு ! அவருக்கு பகலில் கண்ணு தெரியுமோ தெரியாதோ ! இரவில் உங்களை அட்டாக் பண்ண போறாரு ஜாக்கிரதை . ஹி ஹி !
ReplyDeleteஇந்த ஃபோட்டாவெல்லாம் நீங்களே சுட்டதா??? சுட்டதுக்கு ரொம்ப பொறுமைதான்.பொங்கலும் அதுவுமா நல்ல மாடு ஃபோட்டா போட்டிருக்க படதா??
ReplyDelete\\இந்த ஃபோட்டாவெல்லாம் நீங்களே சுட்டதா??? சுட்டதுக்கு ரொம்ப பொறுமைதான்.\\ ஆமாம் மேடம், இது எல்லாமே இணையத்தில் இருந்து கூகுளார் உதவியோட நானே 'சுட்டது' தான். நீங்க shoot=சுடுதல் அப்படின்னு போட்டிருந்தா, ஐயம் சாரி, நான் சுடவில்லை!! இந்த அளவுக்கு நாம படமெடுக்கும் திறனிருந்தால் நாம எங்கேயோ போயிருப்போமே மேடம்!!
ReplyDelete\\பொங்கலும் அதுவுமா நல்ல மாடு ஃபோட்டா போட்டிருக்க படதா??\\
மாடு பேரை வச்சிக்கிட்டு எனக்குத் தெரிஞ்சு பதிவர் யாரும் இல்லையே மேடம்!!
வருகைக்கு நன்றி!!
விரைவில் வவ்வாலும் ஜெயதேவ்தாசும் நெருங்கிய நண்பர்களாகி விடுவார்கள் என்று நம்புகிறேன் :)
ReplyDeleteஜெயதேவ்: பதிவு எழுதுறதுல "அடுத்த லெவெலுக்கு"ப் போயிட்டீங்க, போல! பதிவர்களை அறிமுகப்படுத்தும் "வலைச்சரம்" நடத்தும் ஐயா சீனாவுக்குப் போட்டியா இப்படி ஒரு "கொலைச்சரம்" ஆரம்பிச்சுட்டேள் போலயிருக்கு!
ReplyDeleteஉங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! :)
இதுவும் நல்லாருக்கே, ஏற்கனவே என்னையும் நையாண்டி பண்ணி ஒரு மார்க்கமான சகோ சிறுகதை எழுதியதை ரசித்தேன். இப்போ நம் சகா, வவ்வாலை வைத்து நீங்கள் எழுதிய இப்பதிவு இன்னம் நல்லாருக்கு, ஜெய் சார், உங்களுக்கு நகைச்சுவை நல்லா வருது, தொடர்க.. பல பதிவர்களின் பயங்கர டேட்டாவை எதிர்பார்க்கின்றோம்.
ReplyDelete@இக்பால் செல்வன்
Deleteஎவ்வளவு கஷ்டப்பட்டு உண்மையை சேகரிச்சு எழுதியிருக்கேன், அதை காமடின்னு சொல்லிட்டீங்களே பாஸ்!! இதெல்லாமே Factu ..........Factu ..........Factu ...........!!
பாகவதரே,
ReplyDeleteதசவதாரம் எடுத்த ஸ்ரி கிருஸ்ணாவைப்பற்றி புது விதமாக எழுதியிருக்கீரே, ஆனால் படமெல்லாம் ஏன் இப்படி இருளோனு இருக்கு, நல்ல கலரான படமா போடுறது, கிருஸ்ணா என்றால் கருமைன்னு கருப்பு கலர் படமா போட்டுடீரா :-))
இதெல்லாம் கூட ஸிரிமத்து பாகவதம்ல இருக்கா , இஸ்கோன் பதிப்பில் மட்டும் இருக்குன்னு நினைக்கிறேன் , பல அரிய தகவல்கள், இனிமேல் ஸ்ரி கிருஸ்ணாவின் புகழ் கன்னா பின்னானு பரவிடும் :-))
ஸம்பா மாமி யுகே ...யுகே :-))
ஸ்ரீ கிருஷ்ணாவும் பதிவுகள் எழுதுகிறாரா என்ன? :)
Deleteராபின்,
Deleteஇம்மாம் நாளா அது தெரியாதா, பாகவதருக்கு அது தெரியும் அதான் இப்படி பதிவு போட்டு இருக்காரு ..
"ப்ரஹ்லாத ஸ் சாஸ்மி தை த்யாநாம் கால: கலயதாமஹம் |
ம்ருகா ணாம் ச ம்ருகேந்த் ரோऽஹம் வைநதேயஸ் ச பக்ஷிணாம் "
அப்படினா ,
அசுரர்களில் பிரகலாதன், இயக்கத்தில் காலம், மிருகங்களில் சிங்கம், பறவைகளில் கருடன், பதிவர்களில் வவ்வால் :-))
அப்படினு ஸ்ரி கிருஸ்ணா பாகவதர் காதில போய் ஓதியிருப்பார் போல :-))
எனவே ஸ்ரிகிருஸ்ணாவின் புகழை பரப்ப இப்படி ஒரு அற்புதமான பதிவையிட்டு பாகவதர் போற வழிக்கு புண்ணியம் தேடிக்கொள்ளப்பார்க்கிறார் :-))
ஸம்பா மாமி யுகே..யுகே!
superappu
Delete\\ஆனால் படமெல்லாம் ஏன் இப்படி இருளோனு இருக்கு, நல்ல கலரான படமா போடுறது.\\ உங்களுக்கு கண்ணில் பிரச்சினைன்னு தெரியும், ஆனா இவ்வளவு சீரியஸ்னு இப்பத்தான் தெரியுது. Bright- ஆன படமெல்லாம் இருட்டா தெரியுது, கூடவே நிறக்குருடு வேற!! சீக்கிரம் சங்கர நேத்ராலாயா போங்க!! அது சரி என்னது இங்கே சொன்ன பதிவரை கிண்டல் பண்ணி நீங்களும் :-)) போடுறீங்களா?
ReplyDeleteவவ்வாலை உறித்து தலைகீழாக புரட்டி போட்டிருக்கிறீர்களே,,,அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))--செழியன்
ReplyDelete