Sunday, January 13, 2013

இந்த பூனைக் கதையை படிச்சிட்டு போகியை கொண்டாடுங்க.

ஒரு ஊரில் செல்வாக்கு மிக்க குடும்பம் வசித்து வந்தனர்.  அவர்கள் வீட்டில் ஒரு பூனையை செல்லமாக வளர்த்து வந்தனர், எல்லோருக்கும் அது பிரியமான பூனை.  அவர்கள் வீட்டில் ஒரு திருமணம்.  திருமண நாள் அன்று எல்லோரும் மும்முரமாக அங்குமிங்கும் திருமண வேலை நிமித்தமாக போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கும் போது இந்த பூனை குறுக்கும் நெடுமாக ஓடிக் கொண்டு இருந்தது, அது திருமண வேலைகளுக்குத் தடையாக இருந்தது.  பூனை தொந்தரவைத் தவிர்க்க, அதனை பிடித்து கல்யாணப் பந்தலிலே ஒரு தூணில் கட்டிப் போட்டனர், அதற்க்கப்புறம் அவர்கள் வேலைகளை தடையின்றி விரைவாகச் செய்ய முடிந்தது.இதைப் போல பூனையைக் கட்டிப் போடுவது அடுத்தடுத்த திருமணங்களிலும் தொடர்ந்தது. அந்தப் பூனை குட்டிகளைப் போட்டது, அப்புறம் பூனைக்கும் அந்த குடும்பத்துக்கும்  சில தலைமுறைகள் கடந்தன.

தொடர்ந்து வந்தவர்களும் அந்த பூனைகளை  பிடித்து தூணில் கட்டுவதை தவறாமல் செய்து வந்தனர்.  ஒரு கட்டத்தில் அவர்கள் வீட்டில் பூனைகளே இல்லாத ஒரு நிலை எப்படியோ வந்து விட்டது.  அப்போது ஒரு திருமணம் ஏற்பாடாகியது.  திருமண நாள் வந்தது.  தாலி கட்டும் சமயம்.

அந்த வீட்டின் அப்போதைய குடும்பத் தலைவி வந்தார், "கொஞ்சம் பொறுங்கள்,  சம்பிரதாயத்தை மீறி இந்தத் திருமணத்தை நடத்த நான் விடமாட்டேன்" என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.

வந்தவகளுக்கு அதிர்ச்சி, என்னடா இது திருமண நேரத்தில் கலாட்டா என்று.  "அப்படி என்னம்மா சம்பிரதாயம்" என்று கேட்டனர்.

"நாங்கள் தலைமுறை தலைமுறையாக இந்தத் தூணில் பூனை ஒன்றைக் கட்டிப் போட்டு விட்டுத் தான் தாலியே கட்டுவோம், தற்போது அந்த சம்பிரதாயத்தை விட முடியாது.  எங்கேயாவது தேடித் பிடித்து ஒரு பூனையைக் கொன்டு வாருங்கள், அதை இந்த தூணில் கட்டிவிட்டு பின்னர் தாலி காட்டுங்கள்" என்றாராம்!!

மக்காஸ்,  போகியின் போது வீட்டில் பழைய துணிகள் போன்றவற்றை நம் முன்னோர்கள் தீயில் போட்டு எரித்தது என்னவோ உண்மைதான், அதற்காக நாம் தற்போது வீணாய் போகும் கார், லாரி டயர்களை தேடித் பிடித்து சாலைகளில் போட்டு எரித்து ஊரையே நாரடிக்கலாமா?  தவிர்க்கலாமே!!

பூனைகள் பற்றி அழகிய தளம்:

Top 10 Most Popular Cat Breeds of all time

6 comments :

 1. பூனை என்றதும் ஓடோடி வந்தேன்.

  இதே கதை சாமியார் ஆஸ்ரமத்தில் நடப்பதாக ஒரு வெர்ஷன் உண்டு. சாமியார் பூஜையை ஆரம்பிக்குமுன் பூனையைக் கட்டிப்போடுவார்:-)

  நம்ம பூனை இங்கே

  http://thulasidhalam.blogspot.co.nz/2010/01/blog-post_23.html

  கட்டாயம் எரிக்கணுமுன்னா... கெட்ட பழக்கங்களை எரிக்கலாம்.

  ReplyDelete
 2. கதை நல்லா இருக்கு. இப்படித்தான் வசதிக்கு சில விஷயங்கள் செய்ய அது சம்ப்ரதாயமாகி விடுகிறது.

  ReplyDelete
 3. உதவாத பழங்குப்பைகளான பக்கவாத்திய கீதை,பாக்குவதம் போன்வற்றை எரிச்சு போகி கொண்டாடலாம்னு சொல்லி இருந்தா நல்லா இருக்கும்,ஆனாலும் கேட்கவா போறாங்க, டயர், தார் டின்னுனு கொளுத்துவாங்க :-))

  ReplyDelete
 4. நல்ல காலம் கதைமுடிவில்
  மோரல்=பூனை குறுக்கால் சென்றால் கெட்ட சகுனம் என்று போட்டுவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன்

  ReplyDelete
 5. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. மாப்ளே தாசு,
  ம்ம்ம்ம்ம்ம் பூனைக் கதை கூட மதபிரச்சாரம் செய்கிறீரே!!
  மகாகவி படுகிறார் கேளும்!!

  வெள்ளை நிறத்தொரு பூனை-எங்கள்
  வீட்டில் வளருதுகண்டீர்;
  பிள்ளைகள் பெற்றதப் பூனை;-அவை
  பேருக் கொருநிற மாகும்.

  சாம்பல் நிறமொரு குட்டி;-கருஞ்
  சாந்து நிறமொரு குட்டி,
  பாம்பு நிறமொரு குட்டி,-வெள்ளைப்
  பாலின் நிறமொரு குட்டி.

  எந்த நிறமிருந் தாலும்-அவை
  யாவும் ஒரேதர மன்றோ?
  இந்த நிறம்சிறி தென்றும்-இஃது
  ஏற்ற மென்றும் சொல்லலாமோ?

  ***
  பூனைக் குட்டிகள் ஒரே நிறத்தில் இருக்கும் வண்ணம் படம் போட்ட உமது
  ஆதிக்க சாதி மனம் நமக்கு நன்கு புரிகிறது.
  **
  எப்படி நம்ம உள் குத்து!! சும்மா தமாசு ஹி ஹி

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!  நன்றி!!!

  ReplyDelete