Wednesday, January 16, 2013

ஆண்களை விட பெண்கள் தான் புத்திசாலிகள் !!

ஆணாதிக்கம் என்பதை ஆங்கிலத்தில் Male Chauvinism என்று சொல்வார்கள்.  அதாகப் பட்டது மனித இனத்தில் ஆண் தான் எல்லா விதத்திலும் மேம்பட்டவன் என்பது ஆணாதிக்க வாதிகளின் கொள்கை.   புத்திசாலித் தனத்திலும் ஆண்களே உயர்ந்தவர்கள் என்பதும் இதில் அடக்கம் என்று  சொல்லவே தேவையில்லை. அதற்க்கு அவர்கள் சில உதாரணங்களைக் கூறுவது உண்டு.

  • அரிஸ்டாட்டில், பிளாட்டோ, இம்மானுவேல் கான்ட், கார்ல் மார்க்ஸ், சாக்ரடிஸ் என்று வரலாற்றில் தோன்றிய தத்துவ ஞானிகள் போல பெண்களில் யாரும் தோன்றவில்லை.  [தலையில மசாலா இருந்தாத் தானே தோன்றுவதற்கு....... அப்படின்னு நான் சொல்லவில்லை, இவங்க சொல்றாங்க!!]
  • இசைத் துறையில் பீத்தோவன், மொசார்ட் மாதிரி பெண்கள் யாரும் பேர் வாங்கினா மாதிரி தெரியலை.
  • விஞ்ஞானத்தில் எடுத்துக் கொண்டால் கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாகிங்  மாதிரி கோட்பாட்டு விஞ்ஞானிகள் சொல்லிக் கொள்ளும்படியா பெண்களில் யாருமே இல்லை.
  • கணிதத்தில் ஆர்க்கிமிடிஸ், பாஸ்கல், லெபனீஸ், ஆய்லர், ஸ்ரீனிவாச ராமனுஜம் மாதிரி யாரையும் காணோம்.
  • நம்மூரில் கூட கேவி. மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ரஹ்மான் மாதிரி ஒருத்தர் கூட பெண் இசையமைப்பாளர் இல்லையே?  ஸ்ரீதர், பந்துலு, பாலசந்தர் மாதிரி ஒரு பெண் சினிமா டைரக்டர் ஆக வில்லையே?  ஸ்ரீபிரியா, சுஹாசினி மாதிரி இருக்கிறவங்க எடுக்கும் படத்தைப் பார்க்க காசுகுடுத்து ஆளை கூடிவந்து சேரில் கட்டிப் போட்டுவிட்டு படத்தை ஓட்ட வேண்டியிருக்கே?  
 இப்படியெல்லாம் பல இல்லாத பொல்லாத காரங்களைக் கூறி பெண்களை மட்டம் தட்டுவதில் ஆணாதிக்க வாதிகள் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.  ஆனாலும், ஆண்களை விட பெண்கள் தான் இறுதியில் புத்திசாலிகள் என்பதே நமது கணிப்பு.  எப்படி?


 உதாரணத்துக்கு நிறைய பரிசுப் பொருட்கள் பல வண்ணப் பெட்டிகளில் போடப்பட்டு பேக்கிங் செய்து வைக்கப் பட்டுள்ளன.

1. ஒரு பெட்டி பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் அழகான வண்ணத்தில் எழிலாகப் பேக்கிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் உள்ளே இருப்பது களிமண்.

2. இன்னொரு பெட்டி பார்க்க அவ்வளவு  நன்றாக இல்லை, ஆனால் உள்ளே விலையுயர்ந்த வைர மோதிரம் வைக்கப் பட்டுள்ளது.

உங்களுக்கு வேண்டியதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று வாய்ப்பளிக்கப் பட்டால்  நீங்கள் என்ன செய்வீர்கள்?  2 ஐத் தேர்ந்தெடுத்தால் நீங்கள் புத்திசாலி இல்லாவிட்டால் கேனை என்று அர்த்தம் என நான் சொல்லவே தேவையில்லை.





அந்த விதத்தில் பெண்கள் புத்திசாலிகள், ஆண்கள் கேனைகள்.  வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது, ஒரு பெண் வெளிப்புறத் தோற்றத்தை ஒருபோதும் பார்ப்பதில்லை, ஆணிடமுள்ள திறமையைத் தான் பார்க்கிறாள்.  அவன்  தார் ரோட்டில் மழை பெய்த நிறத்தில் இருந்தாலும் சரி, வழுக்கை மண்டையனாக இருந்தாலும் சரி அவை அவளைப் பொறுத்த வரை இரண்டாம் பட்சமே.  ஒரு நல்ல உத்தியோகத்தில் இருக்கிறனா, அல்லது வேறு திறமைகள் என்ற வைரம் இருந்தால் போதும் அவனால் கவரப் பட்டு விடுவாள்.


ஆனால் ஒரு ஆண் பெண்ணை பார்க்கும் போது முதலில் அவன் பார்ப்பது தோல் நிறத்தைத்தான், இரண்டாவது வசீகரமான தோற்றத்தைத்தான், அவள் தலையில் களிமண்ணே இருந்தாலும் இவனுக்கு கவலையில்லை, தேர்ந்தெடுத்து விடுவான்.  நிறைய கப்பல்கள் இந்த மாதிரி தோற்றத்தில் கவிழ்த்து கிடப்பதை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்!!

எனவே பேக்கேஜிங்கைப் பார்த்து களிமண்ணை வாங்கும் ஆணை விட, பேக்கேஜிங் எப்படி இருந்தாலும் சரி என்று உள்ளே இருக்கும் வைரத்தைப் பார்த்து தேர்வு செய்யும் பெண் புத்திசாலி தான்!! எப்பூடி..............!!

படித்து விட்டீர்களா?
முந்தைய பதிவு:  நண்பர் இராச நடராஜனுக்கு சமர்ப்பணம்
மரக்கிளைகளில் தலை கீழாக தொங்கும் பதிவர் பயோ டேட்டா.

16 comments:

  1. உண்மைதான் . 86 வயசு ப்ளே பாய் பத்திரிக்கை ஆசிரியரை கல்யாணம் பண்ணிக்கிட்ட புத்திசாலியோட படம் ஒன்னே உங்க பதிவு முழுதையும் விளக்கிடிச்சு
    கூடிய சீக்கிரம் கோடீஸ்வரி ஆயிடுவாங்க இல்ல

    ReplyDelete
    Replies
    1. சல்மான் ருஸ்டி ப்ளேபாய் பத்திரிக்கை ஆசிரியரா? இதென்ன புதுக்கதை, பெண்களில் ஏன் புத்திஜீவிகள் தோன்றவில்லை என்பதற்கு அழகிய விளக்கமுண்டு, சற்று பின்னர் வந்து சொல்கின்றேன்.

      Delete
    2. ரொம்ப குழப்பத்தில் இருந்தேன் இக்பால் செல்வன்! ருஷ்டி எப்போ ப்ளேபாய் பத்திரிக்கை ஆசிரியராக ஆனார் என்று!?. குழப்பத்தை தீர்த்ததற்கு நன்றி!

      Delete
    3. //பெண்களில் ஏன் புத்திஜீவிகள் தோன்றவில்லை என்பதற்கு அழகிய விளக்கமுண்டு//

      ஆண்கள் அடிமை படுத்துறாங்க என்பதை தவிர, ஏதாவது புதுசா சொல்லுங்க சகோ கேட்கிறோம்.. அத விட்டுபுட்டு இது ஆணாதிக்க சண்முகம், ஆத்திக வாதங்கள் பன்முகம் என்று ஆரம்பிசுராதிங்க.. அறிவியல சார்ந்து இருந்தால், இக்பாலின் பதிவிற்காக ஐ ஆம் வெய்ட்டிங்க்

      Delete
  2. ஓய் பாகவதரே,

    நீர் மண்டு பாகவதர்னு மறுபடியும் நிறுபிக்கிறீர் :-))

    ஆண்களுக்கு பெண்களின் அறிவுத்தேவைப்படவில்லை, அவன் அறிவே தேவையான அளவுக்கு இருக்குன்னு தெரியுது ,அதான் தன் "தேவையை' பூர்த்தி செய்யும் வகையில் பெண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்கிறான் :-))

    அதே போல பெண்களுக்கு இருக்கும் அறிவை வைத்து பொழைக்க முடியாதுனு அறிவும், திறனும் இருக்கும் ஆணைத்தேர்வு செய்கிறாள்,

    இப்படி செய்வதால் ஒருத்தரோட இல்லாமை இன்னொருவரால் பூர்த்தி செய்யப்படுகிறது complementing each other :-))

    தசவாதாரம் எடுத்து ஆண் கடவுள் மன்மலீலை எல்லாம் செய்யலாம், ஆனால் பெண்கடவுள் எத்தனை அவதாரம் எடுத்தாலும் பழைய ஒரே கணவனை தான் தேர்ந்தெடுக்கும் :-))

    இதான் உண்மையான ஆணாதிக்க சிந்தனை :-))

    ReplyDelete
    Replies
    1. \\அதே போல பெண்களுக்கு இருக்கும் அறிவை வைத்து பொழைக்க முடியாதுனு அறிவும், திறனும் இருக்கும் ஆணைத்தேர்வு செய்கிறாள்.\\ ஆண்களுக்கு மட்டும் தான் அறிவு போதுமான அளவுக்கு இருக்கு, பெண்களுக்கு அறிவு கம்மின்னு அநியாயத்துக்கும் சொல்றாரே, இதை தட்டிக் கேட்க அம்மணிகள் யாருமே வர மாட்டீங்கள!!

      Delete
  3. //
    அரிஸ்டாட்டில், பிளாட்டோ, இம்மானுவேல் கான்ட், கார்ல் மார்க்ஸ், சாக்ரடிஸ் என்று வரலாற்றில் தோன்றிய தத்துவ ஞானிகள் போல பெண்களில் யாரும் தோன்றவில்லை. [தலையில மசாலா இருந்தாத் தானே தோன்றுவதற்கு....... அப்படின்னு நான் சொல்லவில்லை, இவங்க சொல்றாங்க!!]
    இசைத் துறையில் பீத்தோவன், மொசார்ட் மாதிரி பெண்கள் யாரும் பேர் வாங்கினா மாதிரி தெரியலை.
    விஞ்ஞானத்தில் எடுத்துக் கொண்டால் கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாகிங் மாதிரி கோட்பாட்டு விஞ்ஞானிகள் சொல்லிக் கொள்ளும்படியா பெண்களில் யாருமே இல்லை.
    கணிதத்தில் ஆர்க்கிமிடிஸ், பாஸ்கல், லெபனீஸ், ஆய்லர், ஸ்ரீனிவாச ராமனுஜம் மாதிரி யாரையும் காணோம்.
    நம்மூரில் கூட கேவி. மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ரஹ்மான் மாதிரி ஒருத்தர் கூட பெண் இசையமைப்பாளர் இல்லையே? //
    இவர்கள் அனைவரும் அரிஞர்கள் திறமைசாலிகள் புத்திசாலிகள் இல்லை.
    புத்திசாலி என்பவர்கள்அடுத்தவருடைய அறிவையும் திறனையும் தனக்காக பயன்படுத்திக்கொள்பவர்கள். புத்திசாலி என்றால் சுயநலம் என்பதன் நாகரீகமான வடிவம் ஆகும்.

    ReplyDelete
    Replies
    1. \\இவர்கள் அனைவரும் அரிஞர்கள் திறமைசாலிகள் புத்திசாலிகள் இல்லை.
      புத்திசாலி என்பவர்கள்அடுத்தவருடைய அறிவையும் திறனையும் தனக்காக பயன்படுத்திக்கொள்பவர்கள். புத்திசாலி என்றால் சுயநலம் என்பதன் நாகரீகமான வடிவம் ஆகும்.\\ இதுக்குப் பேரு புத்திசாலித் தனம் இல்லை, குள்ளநரித் தனம்.

      ஆழ்ந்து சிந்திப்பவர்கள் மட்டுமே ஐன்ஸ்டீன், மொசார்ட், பிளாடோ மாதிரி ஆக முடியும், பெண்கள் மனது சஞ்சலம் அதிகம், அந்த குழம்பிய குட்டையில் இருந்து அதிசயம் ஒருபோதும் வராது.

      Delete
  4. மாப்ளே தாசு,
    ஆண்களுக்கு மூளை கம்மி என்பதற்கு எ.கா நீர்தான்.

    ஆண்களில் சில அறிவியலாளர்கள், தத்துவ வித்த்கர்கள் இருந்ததை ஆவணப் படுத்தி இருக்கிறோம்.

    பெண்களில் ஆண்களை விட குறைவான அறிவியலாளர்கள், தத்துவ வித்த்கர்கள் இருப்பதற்கு காலம் காலமாக நிலவி வந்த பல மத கட்டுப்பாடுகளே காரணம்.

    அதிகப் பெண்கள் படிப்பதே க்டந்த 50 வருடம்தானே!!

    குழந்தைத் திருமணம்,பலதார திருமணம் இந்து சமூகத்தில் இப்போதுதானே சட்டப்படி த்வறு ஆனது!!!

    ஆகவே இருவரையும் சமமாக வரலாற்றுப் பார்வையில் பார்ப்பது தவறு.
    நம்மைப் பொறுட்தவ்ரை அறிவு என்பது சூழலுக்கு ஏற்ப வாழும் திறன்.
    அது பெண்களுக்கே அதிகம்!!

    நம் நாட்டில் எப்படிப்பட்ட கணவனையும் சகித்து ,குழந்தைகளுக்காக வாழும் பெண்களே அதிகம்!!இதுவும் அறிவே!!

    அமெரிக்க பெண்ணையும் ,அமிஞ்சிக்கரை மாமாவையும் ஒப்பிட்டால் யாருக்கு அறிவு அதிகம்?

    ஆக்வே ஒப்பீடு தவறு.

    மத புராணங்கள் பெண்ணை தாழ்ந்த குலத்த்வரோடு ஒப்பிட்டாலும்,
    உயர் குலப் பெண்ணை ,பிற குலத்த‌வன் மணம் முடிக்க இன்றும் மாடு முட்டி மன்னாருகள் கோபப்ப்டுகிறார்.

    அறிவுள்ள‌ பெண்களிடமே அறிவுள்ள‌ குழந்தைகள் உருவாகும்.
    மெண்டலின் விதிகள் தெரியுமா? அடுத்து பதிவு வரும் படித்து அறியும்!!!
    மெண்டல் என்றால் அடிக்க வராதீர்! கிரிகரி மெண்டல் ஒரு அறிவியல் மேதை!

    எனினும் பெண்ணை வஞ்சப் புகழ்சியில் வாழ்த்தும் விதம் புரிந்து விட்டது!!

    பூரிக் கட்டையில் அடி வாங்கினால் திருந்துவீர்!!!.
    **

    அது கிடக்கட்டும் சிந்தனைச் சிற்பி அண்ணன் சல்மான் ருஷ்டி,அண்ணி பத்மா லட்சுமியின் மண்க்கோல புகைப்படம் அருமை!!

    பார்த்து படம் போடும் ,பின் லேடன் சிஷ்யன்கள் தலைக்கு விலை வைப்பார்கள்!!

    கண்ணியமான ஆடை என்றால் இதுதானோ!!

    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. \\பெண்களில் ஆண்களை விட குறைவான அறிவியலாளர்கள், தத்துவ வித்த்கர்கள் இருப்பதற்கு காலம் காலமாக நிலவி வந்த பல மத கட்டுப்பாடுகளே காரணம்.\\ கொஞ்ச கேப் கிடைச்சாலும் கடை விரிச்சிடுரீங்களே மாமு. எதற்கெடுத்தாலும் மதத்தைதான் காரணம் காட்டுவீங்களா? அதுசரி, ஏன் பெண் ஆணை அடைக்கியாழும் விதமா ஆரம்பத்தில் இருந்தே இல்லை? உடல் வலு கம்மி என்பீர்களா? அத தான் இல்லை. நெப்போலியன் ஒருத்தன் தானே, எப்படி லட்சக் கணக்கானவர்களை கட்டுப் படுத்தினான்? மன வலிமை அவங்களுக்கு கம்மி அவ்வளவுதான். மதம் அது இது எல்லாம் காரணம் என்பது டுபாக்கூரு.

      \\குழந்தைத் திருமணம்,பலதார திருமணம் இந்து சமூகத்தில் இப்போதுதானே சட்டப்படி த்வறு ஆனது!!!\\ இதெல்லாம் இந்தியாவில் தானே.

      \\மத புராணங்கள் பெண்ணை தாழ்ந்த குலத்த்வரோடு ஒப்பிட்டாலும்,
      உயர் குலப் பெண்ணை ,பிற குலத்த‌வன் மணம் முடிக்க இன்றும் மாடு முட்டி மன்னாருகள் கோபப்ப்டுகிறார்.\\ தலையில் உள்ள அறிவை வைத்து கணக்குப் பார்த்தால் அம்புட்டுதான் வரும் மாமு.

      \\மெண்டல் என்றால் அடிக்க வராதீர்! கிரிகரி மெண்டல் ஒரு அறிவியல் மேதை!\\ 12 கிளாஸ் நீங்க ஒருத்தர் மட்டும் தான் படிச்சிருப்பதா நினைப்பா. அந்த பட்டாணிச் செடிகளை வச்சிக்கிட்டு குறுக்கும் நெடுக்குமா கொடு போட்டுக்கிட்டு படிப்பன்களே அது தானே?

      \\கண்ணியமான ஆடை என்றால் இதுதானோ!! \\ சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி தன் கிட்ட இருப்பதை பண்டமாற்று பண்ணிட்டா மாமு!!


      Delete
  5. Women were the ones who gave birth and raised the men you were talking about! Majority of the neural connections happen in the first five years of the child's life. Nurture at this time is very important in child's life. keep in mind that the primary caregiver is the Mother!

    You forgot about Avvaiyar, Gorky(vedic scholar) and Mrs Thomas (Rocket Science)!

    ReplyDelete
    Replies
    1. Wonderful feedback, your views are well justified.

      Delete
  6. வணக்கம் மாப்ளே,
    பொங்கலுக்கு தின தீனி செரிக்கவில்லையோ!!!ம்ம்ம்ம்ம்

    செரிக்க வைக்கிறேன்!!

    1./அதுசரி, ஏன் பெண் ஆணை அடைக்கியாழும் விதமா ஆரம்பத்தில் இருந்தே இல்லை? உடல் வலு கம்மி என்பீர்களா?//

    நாகரிக மனிதன் சுமார் 20,000 வ‌ருடங்களுக்கு முன்பு நீர்நிலைகளின் அருகே ,ஒரே இடத்தில் வாழ்ந்து விவசாயம் செய்ய ஆரம்பித்தான்.அப்போதுதான் தனிச் சொத்து,குடுமபம் என நடைமுறைக்கு வந்தது.
    தாய் வழி சமுதாயங்களும் இருந்த்ன. பெண் தெய்வ வழிபாடு என்பது இதன் நீட்சியே!!

    பெண் தெய்வங்களுக்கு பதில் ஆண் தெய்வம் கொண்டு வந்ததே பெண்களின் மீதான முதல் அடக்குமுறை.

    பெண் எனபவர் ஆணின் சொத்தாக ஆக்கப்பட்டது உலக முழுதும் பெரும்பாலும் நடந்தது.

    பெண் என்பவள் தந்தை,சகோதரன்,கண்வன்,மகன் என ஆண்களை சார்ந்தே,ஆண்களுக்கு பணி செய்தே வாழக் கட்டாயப் படுத்தப் பட்டாள்.

    பெண் ஏன் அடிமையானாள் என்னும் பெரியாரின் புத்த‌கம் படியுங்கள்!


    http://tamilmennoolgal.wordpress.com/2011/08/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/
    இச்சிக்கல் குறித்த வரலாற்று அறிவியல் புரியும்!!!
    ***
    //அத தான் இல்லை. நெப்போலியன் ஒருத்தன் தானே, எப்படி லட்சக் கணக்கானவர்களை கட்டுப் படுத்தினான்? மன வலிமை அவங்களுக்கு கம்மி அவ்வளவுதான். மதம் அது இது எல்லாம் காரணம் என்பது டுபாக்கூரு.//
    ப்ரான்சில் வீராங்கனை ஜோன் ஆஃப் ஆர்க் கேள்விப் பட்டது இல்லையா!!.
    ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடிய அவளை சூனியக்காரி என கிறித்த்வ மத்வாதிகள் எரித்துக் கொன்றார்.

    ஜான்சி இராணி இலக்குமிபாய்,இந்திரா காந்தி,மேரி குயூரி,மதர் தெரசா போன்றோர் எல்லாம் உமக்கு தெரியாதா!!!

    போராடும் பெண்ணின் மீது வைக்கப்படும் முதல் அபாண்ட குற்றச்சாட்டு அவள் ஒரு விபச்சாரி என்பதே!!!ஒரு தலைவன் தன் வாரிசாக பெண்ணை அறிவித்தால் அவ்ள் படும் பாடு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!

    இது ஆண்களின் மேல் வராது!!

    ஒரு குடும்பத்தில் சம் உரிமையோடு வளர்க்கப்படும் ஆண்,பெண் இடையே அறிவில் வித்தியாசம் இருக்காது.

    பாருங்கள் நம்து 10,12 தேர்வுகளில் பெண்களே அதிகம் வெற்றி பெறுகிறார். இது மனப்பாடம் என்பீர் என்றாலும் உரிய வாய்ப்பு கிடைத்தால் பெண்,ஆண் வித்தியாசம் பணியில் வராது!!

    அன்னை இந்திரா காந்தி இருந்தால் இப்போது பாகிஸ்தான் வாலாட்டுமா?.உள்ள வந்து வீரனின் த்லையை வெட்டி எடுத்துக் கொண்டு போகிறான்.நம்ம மன்னு மோஹன சிங்கு திரு திருன்னு முழிக்கிறார்!!!

    யார் அறிவாளி?????

    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. \\பெண் எனபவர் ஆணின் சொத்தாக ஆக்கப்பட்டது உலக முழுதும் பெரும்பாலும் நடந்தது.\\ ஏன் ஆண்கள் அனைவரும் பெண்களின் சொத்தாக ஆக்க முடியவில்லை?

      \\பெண் என்பவள் தந்தை,சகோதரன்,கண்வன்,மகன் என ஆண்களை சார்ந்தே,ஆண்களுக்கு பணி செய்தே வாழக் கட்டாயப் படுத்தப் பட்டாள்.\\ ஏன் ரிவர்ஸ் நடக்க வில்லை.

      \\பெண் ஏன் அடிமையானாள் என்னும் பெரியாரின் புத்த‌கம் படியுங்கள்! \\ ஹெ.............ஹெ.............ஹே ..............



      \\பாருங்கள் நம்து 10,12 தேர்வுகளில் பெண்களே அதிகம் வெற்றி பெறுகிறார். இது மனப்பாடம் என்பீர் என்றாலும் உரிய வாய்ப்பு கிடைத்தால் பெண்,ஆண் வித்தியாசம் பணியில் வராது!!\\ மாமு நீங்க இவ்வளவு அப்பாவியாவா இருப்பீங்க? மெடிகல், எஞ்சினியரிங் நுழைவுத் தேர்வுகள் ஐ.ஐ.டி. JEE [தற்போது வேறு பெயர்] போன்றவற்றில் பெண்கல் சதவீதம் கொஞ்சம் பாருங்க.

      \\அன்னை இந்திரா காந்தி இருந்தால் இப்போது பாகிஸ்தான் வாலாட்டுமா?.உள்ள வந்து வீரனின் த்லையை வெட்டி எடுத்துக் கொண்டு போகிறான்.\\எத்தனையோ வரலாறு படிச்ச உங்களுக்கு இந்திய வரலாறு தெரியலை. அந்த சமயத்தில் தூங்கிகிட்டு இருந்திருப்பீங்க போல. பஞ்சாப், கஷ்மீர் பிரச்சினைகள் வராமலேயே தடுத்திருக்க முடியும், இந்தம்மா மட்டும் கொஞ்சம் அரசியல் லாபத்தை எதிர் பார்க்காம இருந்திருந்தா.

      \\நம்ம மன்னு மோஹன சிங்கு திரு திருன்னு முழிக்கிறார்!!!\\ அவர் யாரோட கைப்பொம்மை மாமு?

      Delete
  7. அருமையான சொல் ஆதிக்கம், நடை ! இன்றிலிருந்து தங்களை தொடர்கிறேன், தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  8. ஆஹா இங்கும் பஞ்சாயத்தா?? இருந்தாலும் சார்வாகன் அண்ணா சொல்வதிலும் சரி இருக்கு தல.. மற்ற படி உங்க ஜாலி பதிவு கல கல தான்..

    ReplyDelete