Sunday, January 20, 2013

முனிவரின் நான்கு விதமான புதிரான ஆசிர்வாதங்கள்


ஒருமுறை ஒரு அரசவைக்கு ஒரு முனிவர் வருகை புரிந்தார்.  அங்கே அவர் பலருக்கும் ஆசிர்வாதங்களை வழங்கலானார்.  அங்கிருந்த இளவரசனைப் பார்த்தார்,


"ராஜ புத்திர சிரஞ்சீவஹ்  [மன்னரின் மைந்தனே நீ சாகாமல் சிரஞ்சீவியாக வாழ்வாயாக]" என ஆசிர்வதித்தார்.

அடுத்து, அங்கே ஒரு தவசியின் மைந்தனைக் கண்டார்.

"ரிஷி புத்ர மா ஜீவ [தவசியின் மைந்தனே, உடனே நீ மாண்டுபோ]"  என்றார்.

அடுத்து ஒரு தூய பெருமாள் பக்தனைக் கண்டார்,

"ஜீவோ வா......  மரோ வா  [நீங்கள் வாழ்ந்தாலும் சரி, மாண்டாலும் சரி ]"   என ஆசிர்வதித்தார்.



அடுத்து ஒரு கசாப்பு கடைக்காரரைக் கண்டார்,

"மா ஜீவ... மா மர [நீ வாழாதே, சாகவும் வேண்டாம்]"


முனிவர் சொல்வதை மன்னரால் புரிந்துகொள்ள இயலவில்லை.  [என்றைக்கு அவங்க புரிஞ்சுக்கிற மாதிரி எளிதாக பேசியிருக்காங்க!!] அவர் சென்ற பின்னர் தனது மதி நிறைந்த அமைச்சர்களை அழைத்து முனிவரின் வார்த்தைகளை விளக்கும்படி கேட்டுக் கொண்டான்.  அவர்கள பின்வருமாறு விளக்கினர்.

அரசே, தங்கள் மகன் ஒரு ஊதாரி, செல்வாக்கு நிறைய இருப்பதனால் செய்யக் கூடாத செயல்கள் அத்தனையும் செய்து வந்துள்ளான் அவன் செத்தால் நரகம் தான்.  ஆகையால் சாகாமல் சிரஞ்சீவியாக இருக்கக் கடவது என்றார்.

அடுத்து தவசியின் மைந்தன், அவனது நற்செயல்களால் இறைவனை அடையும் பக்குவ நிலைக்கு வந்துவிட்டான், மேலும் வாழ்ந்து சம்சாரத்தில் சிக்கி அதிலிருந்து விலகி விடாமல் தற்போதே இந்த உடலை விட்டால் இறைவனை அவன் சேர்வது உறுதி, அதனால் நீ மாண்டு போ என்றார்.

தூய பக்தர், வாழும் போது பகவான் சேவையில் இருக்கிறார் மறைந்தால் இறைவன் இருப்பிடத்திற்க்கோ, அல்லது மண்ணுலகில் வேறெங்கு இறைவன் விரும்புகிறானோ அங்கே சென்று மீண்டும் இறைச் சேவையில் ஈடுபடப் போகிறார், ஆகையால் அவர் வாழ்வதும் மறைவதும் ஒன்றே.

கசாப்புக் கடைக்காரன் தினமும் எண்ணிலடங்க உயிர்களைக் கொன்று வருகிறான், தொடர்ந்து வாழ்ந்தால்  அவனுடைய பாவச் செயல்கள் மேலும் வளரும்.  ஒரு வேலை மாண்டால், இதுவரை செய்த பாவத்திற்கு கொடிய தண்டனை காத்திருக்கிறது, எனவே வாழவும் வேண்டாம், சாகவும் வேண்டாம் என்று ஆசிர்வதித்தார்.

இதைக் கேட்ட பின்னர் மன்னனுக்கு முனிவரின் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்  விளங்கியது, உங்களுக்கு?!!

மீண்டும் இன்னொரு இனிய பதிவில் சிந்திப்போம்!!




7 comments:


  1. மாப்ளே,
    அதுக்குள்ளே இன்னொரு பதிவா?

    இந்தமாதிரி முனிவர் வாழ்த்தினால் சும்மா இருப்பார்களா?
    1. /அவன் செத்தால் நரகம் தான். ஆகையால் சாகாமல் சிரஞ்சீவியாக இருக்கக் கடவது என்றார்./.
    சிரஞ்சீவியாக இரு என்றால் பாவிபயலே செத்தால் [தோலை மாத்தி மாத்தி கருக்கும் ]நரகம்தாண்டா உனக்கு என பொருள் ம்ம்ம்ம்ம்ம்ம்ம். நரகம் இந்துமதத்தில் இருக்கிறதா? இல்லை கர்மபல்னுக்கேற்ப மறுபிறவியா? தீர்ப்பை மாத்தி சொல்லு!!

    2.// அவனது நற்செயல்களால் இறைவனை அடையும் பக்குவ நிலைக்கு வந்துவிட்டான், மேலும் வாழ்ந்து சம்சாரத்தில் சிக்கி அதிலிருந்து விலகி விடாமல் தற்போதே இந்த உடலை விட்டால் இறைவனை அவன் சேர்வது உறுதி, அதனால் நீ மாண்டு போ என்றார். //
    அப்போ மத்வாதிகளைப் போட்டுத் தள்ளனும். சுவனத்திற்கு அனுப்பனும்.ம்ம்ம்ம்ம்ம் இதுதான் விடயமா??

    3./தூய பக்தர், வாழும் போது பகவான் சேவையில் இருக்கிறார் மறைந்தால் இறைவன் இருப்பிடத்திற்க்கோ, அல்லது மண்ணுலகில் வேறெங்கு இறைவன் விரும்புகிறானோ அங்கே சென்று மீண்டும் இறைச் சேவையில் ஈடுபடப் போகிறார், ஆகையால் அவர் வாழ்வதும் மறைவதும் ஒன்றே.//

    நீர் விவரமான ஆள் மாப்ளே. இதுதானே உமக்குப் பொருந்தும் விடயம் ஹி ஹி. தாசு தவசி ஆகி விட்டார்!!

    4./கசாப்புக் கடைக்காரன் தினமும் எண்ணிலடங்க உயிர்களைக் கொன்று வருகிறான், தொடர்ந்து வாழ்ந்தால் அவனுடைய பாவச் செயல்கள் மேலும் வளரும். ஒரு வேலை மாண்டால், இதுவரை செய்த பாவத்திற்கு கொடிய தண்டனை காத்திருக்கிறது, எனவே வாழவும் வேண்டாம், சாகவும் வேண்டாம் என்று ஆசிர்வதித்தார்.//

    ஹி ஹி இது எனக்குத்தானே சொன்னீர். கசாப்புக் கடைக்காரனாக மதவாதிகளை [பதிவுலகில்] போட்டுத் தள்ளுகிறோம். அவர்களுக்கும் சுவனம்.நமக்கும் நீர் சொன்ன கடமையை செய்கிறோம், பலன் இல்லாமல்!!

    மதவாதிகள் அதிகரிக்கும் போதெல்லாம் அங்கே தோன்றி வதம் செய்கிறேன்!!

    சம்பவாமி யுகே யுகே!!

    BG 4.8
    paritranaya sadhunam
    vinasaya ca duskrtam
    dharma-samsthapanarthaya
    sambhavami yuge yuge

    நன்றி!!

    ReplyDelete
  2. \\ நரகம் இந்துமதத்தில் இருக்கிறதா? இல்லை கர்மபல்னுக்கேற்ப மறுபிறவியா? தீர்ப்பை மாத்தி சொல்லு!!\\

    01 Satya-loka
    02 Tapa-loka
    03 Jana-loka
    04 Mahar-loka
    05 Svar-loka
    06 Bhuvar-loka
    07 Bhur-loka [இது தான் நாம இருப்பது, மேலே இருப்பது எல்லாம் சொர்க்கம், கீழே நரகம். இரண்டுமே நிரந்தரம் இல்லை, பவம், புண்ணிய கணக்கு தீர்ந்து போனா மீண்டும் பூமிக்கு வந்து பிறப்பெடுக்கணும்]
    08 Atala-loka
    09 Vitala-loka
    10 Sutala-loka
    11 Talatala-loka
    12 Mahatala-loka
    13 Rasatala-loka
    14 Patala-loka

    There are 14 Lokas (worlds; not to be confused with planets). Seven higher worlds (heavens) and seven lower ones (underworlds). The earth is considered the lowest of the seven higher worlds.

    The higher worlds are the seven Vyahrtis: Bhuu, Bhuvas, Svar, Mahas, Janas, Tapas, and Satya above.
    And seven Paatalas (lower worlds) are: Atala, Vitala, Sutala, Rasaataala, Talatala, Mahaatala and Paatala Loka.

    Satya-loka: Brahma's loka. Satya-loka planetary system is not eternal. Abode of Truth or of Brahma, where atman are released from the necessity of rebirth.
    Tapa-loka: Abode of tapas or of other deities. Ayohnija devadas live here.
    Jana-loka: Abode of the sons of God Brahma.
    Mahar-loka: The abode of great sages and enlightened beings like Markendeya and other rishies.
    Svar-loka: Region between the sun and polar star, the heaven of the god Indra. Indra, devatas, Rishies, Gandharvas and Apsaras live here: a heavenly paradise of pleasure, where all the 330 million Hindu gods (Deva) reside along with the king of gods, Indra.
    Bhuvar-loka (aka Pitri Loka): Sun, planets, stars. Space between earth and the sun, inhabited by semi-divine beings. The a real region, the atmosphere, the life-force.
    Bhur-loka: Man and animals live here. The Vishnu Purana says that the earth is merely one of thousands of billions of inhabited worlds like itself to be found in the universe.



    Different realms of Patala are ruled by different demons and Nagas; usually with the Nagas headed by Vasuki assigned to the lowest realm. Vayu Purana records each realm of Patala has cities in it.

    Atala-loka: Atala is ruled by Bala - a son of Maya - who possesses mystical powers. By one yawn, Bala created three types of women - svairiṇīs ("self-willed"), who like to marry men from their own group; kāmiṇīs ("lustful"), who marry men from any group, and the puḿścalīs ("whorish"), who keep changing their partners. When a man enters Atala, these women enchant him and serve him an intoxicating cannabis drink that induces sexual energy in the man. Then, these women enjoy sexual play with the traveller, who feels to be stronger than ten thousand elephants and forgets impending death.
    Vitala-loka: Vitala is ruled by the god Hara-Bhava - a form of Shiva, who dwells with attendant ganas including ghosts and goblins as the master of gold mines. The residents of this realm are adorned with gold from this region.
    Sutala-loka: Sutala is the kingdom of the pious demon king Bali.
    Talatala-loka: Talātala is the realm of the demon-architect Maya, who is well-versed in sorcery. Shiva, as Tripurantaka, destroyed the three cities of Maya but was later pleased with Maya and gave him this realm and promised to protect him.
    Mahatala-loka: Mahātala is the abode of many-hooded Nagas (serpents) - the sons of Kadru, headed by the Krodhavasha (Irascible) band of Kuhaka, Taksshaka, Kaliya and Sushena. They live here with their families in peace but always fear Garuda, the eagle-man.
    Rasatala-loka: Rasātala is the home of the demons - Danavas and Daityas, who are mighty but cruel. They are the eternal foes of Devas (the gods). They live in holes like serpents.
    Patala-loka: The lowest realm is called Patala or Nagaloka, the region of the Nagas, ruled by Vasuki. Here live several Nagas with many hoods. Each of their hood is decorated by a jewel, whose light illuminates this realm.

    ReplyDelete
  3. அதுக்குள்ளே இன்னொரு பதிவா?\\மக்கு மாமு, அது போட்டே ரெண்டு நாள் ஆவுது, நீங்க இப்பத்தான் பார்த்தீங்க, அது சரி போன பதிவில் உங்க கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கேன் பாருங்க. மேலும் கேள்விகள் இருந்தால் எழுப்பலாம்.

    ReplyDelete
  4. Bhagavad-gītā (8.16):

    ā-brahma-bhuvanāl lokāḥ
    punar āvartino 'rjuna
    mām upetya tu kaunteya
    punar janma na vidyate

    Beginning from Satyaloka, the topmost planet of the universe, situated just below the eternal Brahmaloka, as described above, all the planets are material. And one's situation in any of the many material planets is still subject to the laws of material nature, namely birth, death, old age and disease. But one can get complete liberation from all the above-mentioned material pangs when one enters into the eternal Brahmaloka sanātana atmosphere, the kingdom of God.

    There are innumerable universes beyond the one in which we are put, and all these material universes cover only an insignificant portion of the spiritual sky, which is described above as sanātana Brahmaloka. The Supreme Lord very kindly invites the intelligent human beings to return home, back to Godhead.

    That eternal land is full of transcendental enjoyment and full of beauty and bliss. This very fact is also corroborated in this verse of Śrīmad-Bhāgavatam, and the transcendental nature is described as amṛta. As described in the Vedas, utāmṛtatvasyeśānaḥ: the Supreme Lord is the Lord of immortality, or in other words, the Lord is immortal, and because He is the Lord of immortality He can award immortality to His devotees. In the Bhagavad-gītā (BG 8.16) the Lord also assures that whoever may go to His abode of immortality shall never return to this mortal land of threefold miseries. The Lord is not like the mundane lord. The mundane master or lord never enjoys equally with his subordinates, nor is a mundane lord immortal, nor can he award immortality to his subordinate. The Supreme Lord, who is the leader of all living entities, can award all the qualities of His personality unto His devotees, including immortality and spiritual bliss.


    ReplyDelete
  5. ராஜ புத்திர சிரஞ்சீவஹ்
    செத்தால் நரகம் தான். ஆகையால் சாகாமல் சிரஞ்சீவியாக இருக்கக் கடவது என்றார்
    தவசியின் மைந்தனே, உடனே நீ மாண்டுபோ-
    அவனது நற்செயல்களால் இறைவனை அடையும் பக்குவ நிலைக்கு வந்துவிட்டான், மேலும் வாழ்ந்து சம்சாரத்தில் சிக்கி அதிலிருந்து விலகி விடாமல் தற்போதே இந்த உடலை விட்டால் இறைவனை அவன் சேர்வது உறுதி, அதனால் நீ மாண்டு போ
    இதிலிருந்து ஒன்று புரிகின்றது அந்த முனிவன் பல பாவங்களை செய்தவன் என்று அதனால் தான் அவன் மாண்டு போகாமல் பல காலமாய் பிறருக்கு உபதேசம் செய்துகொண்டே திரிகிறான்

    ReplyDelete
  6. நல்ல நகைச்சுவைக் கதை.

    ReplyDelete