Saturday, January 5, 2013

பாலைவனத்தில் தண்ணீரைத் தேடுவதன் பொருள் என்ன? [ப.கீ. 1.19]



மஹாபாரதப் போர் துவங்கும் சமயம்.  போர் துவங்கும் முன்னர்  பாண்டவர்கள், கௌரவர்கள் இரண்டு பக்கமும் உள்ள தளபதிகள் தத்தமது  சங்குகளை ஒலித்தனர்.  ரிஷிகேஷராகிய ஸ்ரீகிருஷ்ணர் தனது பாஞ்ச ஜன்யத்தையும், அர்ஜுனன் தேவதத்தம் எனும் சங்கையும் ஒலித்தனர்.  மாமன்னர்  யுதிஷ்டிரர் [அனந்த விஜயம்], பீமன் [பௌன்ட்ரம்], நகுலன் [சுகோஷா], சகாதேவன் [மணி புஷ்பகம்] ஆகியோரும் தத்தமது சங்குகளை ஒலித்தனர்.  
வெவ்வேறான சங்குகளின் ஒருங்கிணைத்த ஒலி பெரும் முழக்கமாக இருந்தது.  அது விண்ணையும், மண்ணையும் அதிரச் செய்தது,  அவ்வொலியில் கௌரவர்களின் நெஞ்சம் நொறுங்கியது. பகவத் கீதை 1.19
கௌரவர்கள் தங்கள் சங்குகளை ஒலித்தபோது பெரும் முழக்கம் ஏற்ப்பட்டாலும், பாண்டவர்கள் இதயம் நொருங்கியதாக பகவத் கீதையில் குறிப்பிடப் படவில்லை.  ஆனால், பாண்டவர்களின் சங்கொலி கேட்ட கௌரவர்கள் இதயம் நொறுக்கியதாக ப.கீ.1.19 பதம் கூறுகிறது.  ஏனிந்த வேறுபாடு?!

 சென்னை ISKCON கோவிலில் கடந்த 30 டிசம்பர் 2012 அன்று பதிவேதாந்த சுவாமியின் சீடரான அமெரிக்காவைச் சார்ந்த ஊர்மிளா தேவி அம்மையார் பகவத் கீதை உபன்யாசத்தில் இதற்க்கு விளக்கமளித்தார்கள்.  பாண்டவர்கள் ஸ்ரீகிருஷ்ணரை முழுமையாக நம்பியிருந்தனர், கௌரவர்கள் அப்படியில்லை.  இதுதான் வித்தியாசம்.   நம் வாழ்வில் இது எப்படி பொருந்தும் என்று தொடர்ந்து உரையில் கூறினார்கள்.  உலக வாழ்க்கையில் எப்போது எந்த மாதிரியான ஆபத்து வரும் என்று சொல்ல முடியாது.   ஒரு பெண் வீட்டின் படியில் காலை வைக்கும் போது கால் பிசகி கீழே விழுந்தார், அதனால் மண்டையில் அடிபட்டு மூளை பாதிக்கப் பட்டது, அதன் பின்னர் அவரால் முன்புபோல ஒருபோதும் செயல்பட முடியவில்லை.  வாழ்நாள் முழுவதும் துன்பப் பட வேண்டியிருந்தது.  இதைப் போல ஒரு வினாடி நமது வாழ்வையே புரட்டிப் போட்டு விடக் கூடும்.  நாம் வெளியில் செல்லும்போது எந்நேரமும் விபத்தில் சிக்கிவிடலாம்.  சில நேரங்களில் நம் பிரியமான உறவினர்களை இழக்க நேரிடலாம்.  இது போன்ற துன்பங்கள், பேரிடர்கள்  கடந்த காலத்தில் ஏற்பட்டன, இனி வரும் காலங்களிலும் ஏற்படத்தான் போகின்றன.  அதை ஒருபோதும் தவிர்க்க இயலாது, ஆனால் ஸ்ரீகிருஷ்ணரிடம் தஞ்சம் புகுந்துவிட்டால், இப்பேரிடர்கள் அப்போதும் வரும், ஆனால் அவற்றால் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது.  

நாம் எல்லோரும் துன்பமற்ற வாழ்வையே விரும்புகிறோம், ஆனால் அது ஒருபோதும் நடப்பதில்லை.  மேற்சொன்ன துன்பங்கள் எதையும் நம்மில் யாரும் விரும்புவதில்லை, ஆனாலும் யாராலும் தப்பிக்கவும் முடியாது.  துன்பங்கள் நிறைந்த இடத்தில் சாத்தியமே இல்லாத துன்பமேயில்லாத நிலையை எதிர்ப்பார்க்கிறோம்.  இது வேடிக்கையானது.  இவ்வாறு நாம் எதிர்பார்ப்பதன் காரணமென்ன?





உதாரணத்திற்கு பாலைவனத்தில் பல்வேறு விலங்குகள் உள்ளன, அவை தண்ணீரை குடிப்பதே இல்லை.  தங்களுக்குத் தேவையான தண்ணீரை தாங்கள் உண்ணும் தாவரங்கள் அல்லது மற்ற விலங்குகளின் உடலில் இருந்தே பெறுகின்றன.   அவை நீர் குடிப்பதைப் பற்றி நினைப்பதே இல்லை.  அதே சமயம் நாம் பாலை வனத்திற்குப் போனால் அவ்வாறு இருப்போமா?  நீரை குடிக்க வேண்டுமென்று தேடுவோம்.  காரணமென்ன?  நாம் பாலை வனத்தைச் சார்ந்தவர்கள் அல்ல.  நாம் தண்ணீர் குடிக்கும் இடத்தைச் சார்ந்தவர்கள், பாலைவனத்திற்க்குச் சென்றிருக்கிறோம்.  அதனால் அங்கேயும் நீரைத் தேடுகிறோம் அது கிடைக்காவிட்டாலும்!!

அதைப் போலவே, இங்கே துன்பமில்லாத வாழ்க்கையைத் தேடுகிறோம், அப்படி யாரும் வாழ்ந்ததாகச் சரித்திரமே இல்லை என்பது தெரிந்திருதாலும்!!  இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நாம் துன்பம் என்பதே என்ன என்று தெரியாத இடத்தைச் சார்ந்தவர்கள் தவறிப் பொய் இங்கே விழுந்து அல்லாடிக் கொண்டிருக்கிறோம், இங்கிருந்து வெளியேறி நம் சொந்த வீட்டிற்க்குச் செல்ல வேண்டும், அது தான் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையாகும்.  இந்த பொன்னான வாய்ப்பு போனால் கிடைப்பது அரிது.

அது சரி ஸ்ரீ கிருஷ்ணரை நாம் நம்பியிருப்பது எப்படி?  அதன் பொருள் என்ன?  அது இந்த கலியுகத்தில் மிகவும் எளிது.  அவருடைய திருநாமங்களை நாவால் ஒலிக்கச் செய்து கொண்டிருந்தாலே போதும், வேறு எதுவும் தேவையே இல்லை!!


இறைவனின் பெயர்களுக்கும் இறைவனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.  பெயர்களைச் சொன்னாலே போதும் இறைவன் நம்முடன் இருக்கிறான்.  அந்த பெயர்களை தியானித்திருந்தாலே போதும் எந்த வித துன்பத்தையும் எதிர்கொள்ள முடியும். 


5 comments:

  1. கீதை வழியாக விளக்கம் சொல்லி அசத்திவிட்டீர்கள்.

    ReplyDelete

  2. Comment By சார்வாகன்
    http://aatralarasau.blogspot.in/2013/01/blog-post_5.html?showComment=1357483651894#c7479045540741571849


    பகவத் கீதை 1.19ல் பாண்டவர் சங்கு ஊத கவுரவர் மனம் கலங்கியது என்று சொல்லி இருக்கிறீர்கள்.அதுக்கு காரணம் பயமாம்,பாண்டவர் தைரிய்மாக இருக்கு ரொமான்ஸ் பாய் கிருஷ்னன் காரணமாம்

    கொஞ்சம் பின்னால் போய் 1.27 பார்த்தால் அருசுச்சுனன் மனம் கலங்குவான்,அதுக்கு காரணம் பாசமாம்.
    http://vedabase.net/bg/1/27/en

    Bhaktivedanta VedaBase: Bhagavad-gītā As It Is 1.27

    tān samīkṣya sa kaunteyaḥ

    sarvān bandhūn avasthitān

    kṛpayā parayāviṣṭo

    viṣīdann idam abravīt

    SYNONYMS

    tān — all of them; samīkṣya — after seeing; saḥ — he; kaunteyaḥ — the son of Kuntī; sarvān — all kinds of; bandhūn — relatives; avasthitān — situated; kṛpayā — by compassion; parayā — of a high grade; āviṣṭaḥ — overwhelmed; viṣīdan — while lamenting; idam — thus; abravīt — spoke.

    TRANSLATION

    When the son of Kuntī, Arjuna, saw all these different grades of friends and relatives, he became overwhelmed with compassion and spoke thus.


    வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப் படுகிறது ஹி ஹி


    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. மாமு, அதுக்குத்தான் கீதையை ஒரு குருவிடம் சரணடைந்து கற்க வேண்டும்னு சொல்றது. நீங்க தனியா குந்திகிட்டு படிச்சு ஒருக்காலமும் அது விளங்காது. அர்ஜுனனுக்கு இந்த மாதிரி ஒரு மன சஞ்சலம் வந்திராமல் போயிருந்தால் அவன் சண்டையிட மாட்டேன்னு சொல்லியிருக்க மாட்டான், கீதையை அவனுக்கு போதிக்க வேண்டியிருக்காது. அதனால் பகவானின் மாயையால் அவனுக்கு பாசம், பந்தம் எல்லாம் ஏற்ப்பட்டது, ஒரு நிமிடம் அதில் மூழ்கிய அவன் போரிட்ட மறுக்க, பகவான் கீதையை வழங்க அது மனித குலத்துக்கு என்றென்றும் வழி காட்டியாக நின்று கொண்டிருக்கிறது.

      \\தைரிய்மாக இருக்கு ரொமான்ஸ் பாய் கிருஷ்னன் காரணமாம்\\ இன்னைக்கு எத்தனையோ "ரொமான்ஸ் பாய்ஸ் " இருக்காங்க, ஐன்ஸ்டீனையே கிறங்கடித்த பகவத் கீதை மாதிரி ஒரு இலக்கியத்தை அவர்களால் தர முடியுமா?

      Delete
  3. வணக்கம் தாசு மாப்ளே,
    நம் கணிணி இணையப் பிரச்சினை செய்வதால் முன்போல் பின்னூட்டம் விவாதம் என இயங்க முடியவில்லை.ஆகவேதான் உங்கள் தளத்தில் பின்னூட்டம் இடவில்லை.ஆகவே கோபமோ,வருத்தமோ இல்லை. மாற்றுக் கருத்தாளர்களை கருத்து நம்க்கு தேவை.

    ஆகவே பிரச்சினை சரி செய்ததும் வழக்கம் போல் தொடர்கிறேன்.
    **
    இப்பதிவின் சாரத்தில் இருந்து விவாதம் விலகி பக்வத் கீதை பற்றி சென்று விட்டது.

    பழங்கால புத்தகங்களில் ,எழுதப் பட்ட சூழல் சார்ந்து சில/பல கருத்துகள் இருக்கும் என்பது நாம் அறிந்த உணரும் விடயம்.ஆகவே பொருந்தும் நல்ல விடயங்களை எந்த புத்தக்த்தில் இருந்தும் பின்பற்றலாம் என்பதே நம் கருத்து.

    ஒரு புத்த்கம் எழுதப் பட்ட போதே ,மதபுத்த்கம் ஆக்கப் படுவதற்காகவெ,உலக மக்கள் அனைவருக்கும்,எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப் பட்டு இருக்கும் என்பதை நாம் ஏற்பது இல்லை.

    அக்கால சிந்தனையாளர்கள் த்ங்களின் கருத்துகளை பதிவு செய்ததே மத புத்தகங்கள்!!


    அந்த வகையில் வேதங்களின் முக்கியத்துவத்தை எதிர்த்த ஒரு புரட்சிதான் உபநிஷத்துகள்&கீதை.
    வேதங்கள் சொல்லும் யாகம்,ப்லி போன்ற்வற்றை கிருஷ்னர் கீதையில் மறுக்கிறார்.
    கிருஷ்னனை ரொமான்ஸ் பாய் என்பது நம்க்கு இருக்கும் உரிமையில் ஹி ஹி.கிருஷ்னரிடம் உங்களுக்கு கீதை பிடித்தால் நம்க்கு ரொமான்ஸ் பிடிக்கிறது ஹி ஹி.நமக்கு பல இடங்களில் கீதை நாத்திகம் பேசுவது போல் தெரிகிறது ஹி ஹி
    http://www.hinduwebsite.com/divinelife/auro/auro_upanishads.asp

    வேதங்களின் மீது கீதை சில விமர்சனம்,மாற்றுக் கருத்துகளை வைக்கிறது.
    அது குறித்தும் எழுதுவோம்.

    டிஸ்கி: கணிணி பிரச்சினை காரணமாக பின்னூட்டம் த்டையின்றி இட முடியவில்லை

    நன்றி!

    ReplyDelete
  4. சரணாகதித் தத்துவம் சூப்பர்!

    ReplyDelete