Monday, January 28, 2013

சட்டத்தின் பார்வையில் ஒழுக்கமான கள்ளச் சாமியார்கள் லிஸ்ட் [காரணத்துடன்]

சென்ற பதிவில் பாலியல் ஒழுக்கம் என்பதைத் தவிர்த்துப் பார்த்தாலும் "ரஞ்சிக் கோட்டை வாலிபன்" ஆன்மீகவாதியாக இருக்கத் தகுதியற்றவர் என்பதைப் பார்த்தோம்.  பதிவின் இறுதியில் பொதுவாக ஆன்மீகவாதிகள் என்ற பெயரில் உலாத்திக் கொண்டிருக்கும் போலிகளை எப்படி கண்டுகொள்வது என்றும் சொல்லியிருந்தோம்.  சில நண்பர்கள், ரஞ்சிதானந்தா மாட்டிக் கொண்டார்  என்பதற்காக எல்லோரும் அவரைப் போட்டு நொங்குகிறோம், மாட்டாதவர்களை பற்றி சொல்லவில்லையே என்று ஆதங்கப் பட்டனர்.  அவர்கள் மனக்குறையைத் தீர்க்கவே இந்தப் பதிவு.  தனிப்பட்ட முறையில் நாமும் ஒரு ஆன்மீகப் பாதையில் செல்வதால் நாம் செல்லும் வழி தான் உயர்ந்தது மற்றவர்கள் எல்லோரும் போலி என்று நாம் திரித்து கூற  முயல்வதாக சில அன்பர்கள் நினைக்கலாம், ஆகையால் ஆத்திக அன்பர்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளத் தக்க சான்றுகள் மூலமாகவே நாம் போலிகளைத் தோலுரித்துக் காட்ட இருக்கிறோம்.

உதாரணத்துக்கு, ஒரு பெண்ணைப் பெற்றவர்கள் மாப்பிள்ளை தேடும்போது வருங்கால மருமகன் நாட்டின் சட்டத்தை மதித்து நடந்தால் மட்டும் போதும் என்பதோடு நில்லாமல் வேறு சில தகுதிகளையும் பார்ப்பார்கள்.  நாட்டின் சட்டத்தை மதித்தால் போதும் என்றால் புகைப் பிடித்தல், மது அருந்துவது கூட தற்போது சட்டப் படி தப்பில்லை என்று ஆகிவிட்டது.  ஒரு ஆணும் பெண்ணும் சம்மதத்தோடு உடல் உறவில் ஈடுபட்டால் அது சட்டப் படி குற்றம் ஆகாது என்று உச்ச நீதிமன்றமே சமீபத்திய தீர்ப்பொன்றில் கூறி விட்டது.  இதையெல்லாம் வைத்து மேற்சொன்ன பழக்கங்களைக் கொண்ட ஒரு பையனை  நாட்டின் சட்டப் படி நல்ல 'குடி'மகன் என்று தங்கள் பெண்ணுக்கு மணமுடிக்க சம்மதிப்பார்களா?  இல்லையே!!  காரணம், நாட்டின் சட்டம் ஒருபுறம் இருந்தாலும் தங்களுக்கென்று ஒரு அளவுகோல் வைத்துள்ளார்கள் அதை தங்கள் வருங்கால மருமகன் பூர்த்தி செய்பவனாக இருக்க வேண்டுமென்று எதிர் பார்க்கிறார்கள்.

அதே மாதிரி, நமக்கு ஆன்மீக வழிகாட்டியாய் இருப்பவர்கள் நாட்டின் சட்டப் படி எந்த தப்பும் செய்யாத ஒரு நல்ல குடிமகனாய்/மகளாய் இருந்தால் மட்டும் போதாது, ஆன்மீக ரீதியாகவும் தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.  அந்தத் தகுதிகள் என்னென்ன என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1.  ஆன்மீகவாதி தான்தோன்றியாக உருவாக இயலாது: இந்தியாவில் எந்த ஆன்மீகவாதியாக இருந்தாலும் சரி, அவர்கள் பகவத் கீதையை ஆதாரப் பூர்வமானது என்பதை  மறுக்க மாட்டார்கள்.  எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.  அவர்களில் பலர் கீதையை தினமும் போதிக்கிறார்கள், சிலர் பொழிப்புரையும் கூட எழுதியிருக்கிறார்கள்.   ஒரு ஆன்மீக இயக்கத்தின் தலைவர், உலகெங்கும் பிரச்சாரம் செய்பவர், லட்சக் கணக்கில் தொண்டர்களை உருவாக்குபவர் என்றால் அவர் குறைந்த பட்சம் பகவத் கீதையின் படியாவது ஒரு தகுதி பெற்ற ஆன்மீகவாதியாக இருக்க வேண்டும்.  அவ்வாறு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்ப்போமா?.

ஆன்மீகப் பாதையில் முதல் படி என்ன என்று கீதையின் கீழ்க்கண்ட பதம் கூறுகிறது.
  
tad viddhi pranipatena
pariprasnena sevaya
upadeksyanti te jnanam
jnaninas tattva-darsinah
                                                             [பகவத் கீதை 4.34]

இந்த அறிவை தன்னையுணர்ந்த ஒரு ஆன்மீக குருவை அணுகி , அவரைச் சரணடைந்து, சேவை செய்து, பணிவுடன் கேள்விகள் கேட்பதன் மூலம் அறிந்து கொள்ளவும்.  தன்னையுணர்ந்த ஆன்மாக்கள் இவ்வுண்மையை உனக்கு போதிக்கத் தக்கவர், ஏனெனில் அவர் உண்மையைக் கண்டவர். 

தன்னையுணர்ந்த ஒரு குருவிடம் சரணடைந்து அவரை வழிகாட்டியாக ஏற்பது தான் ஆன்மீகத்தின் அறிச்சுவடியாகும்.  நாம் இந்த முடிவை பகவத் கீதையின் படி எட்டியுள்ளோம்.  அப்படியானால், நமக்கு குருவாக இருப்பவரும் இதே மாதிரி நடப்பவராக இருந்திருக்க வேண்டும், அதாவது அவரும் ஒரு ஆன்மீக குருவிடம் இருந்து கற்றவராக இருக்க வேண்டும்.  இப்படியே குரு-சீடர் என்று சங்கிலியாக பின்னோக்கிச் சென்றால் அது பகவத் கீதையை முதலில் போதித்த ஸ்ரீ கிருஷ்ணரிடம் சென்று முடியும்.   இதைத்தான் பகவான்,  இன்னொரு பதத்தில் கூறுகிறார்.

evam parampara-praptam
imam rajarsayo viduh
sa kaleneha mahata
yogo nastah parantapa


தலை சிறந்த இவ்விஞ்ஞானம் இவ்வாறாக குரு -சீடர்கள் பரம்பரை சங்கிலி வழியாக வந்தடைகிறது, புனிதப் பண்புகளைப் பெற்ற அரசர்கள் அவ்வண்ணமே இதைப் பெற்றனர்.  காலப் போக்கில் சில சமயம் இச்சங்கிலி அறுந்து போய் இந்த அறிவு தொலைந்தது போல தோற்றம் உண்டாகிறது.

மேற்கண்ட பதங்களை வைத்துப் பார்க்கும்போது பகவத் கீதையை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளும் ஒரு ஆன்மீகவாதிக்கு குரு என்பவர் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு முன்னர் குரு -சீடர் பரம்பரையும் இருக்க வேண்டும்.  இந்த ஒரு சான்றே போதும் தற்போது ஆன்மீகவாதிகள், சாமியார்கள் என்று போலியாகத் திரிபவர்கள் அத்தனை பேரையும் தகுதி இழக்கச் செய்வதற்கு.  பெரும்பாலானவர்கள் தாங்களே ஞானம் பெற்றுவிட்டோம் என்பார்கள், அல்லது அவர்களுக்கு முன்னர் ஒன்று அல்லது இரண்டு தலைமுறைக்குள்  தொடர்பு முடிந்து போய்  யாரவது ஒருத்தர் தான்தோன்றியாக இருப்பார்.

2.  நான்தான் கடவுள் என்று சொல்லுபவன்/பிறர் இவனை கடவுள் சொல்வதை அனுமதிப்பவன் ஆன்மீகவாதியில்லை:  இதையடுத்து போலிகள் என்று பார்த்தால், தான் கடவுளின் அவதாரம் என்று சொல்பவர்கள் வருகிறார்கள்.  சிலர் நேரடியாகவே தான் கடவுள் என்று சொல்கிறார்கள், சிலர் அவ்வாறு பொது மேடைகளில் சொவதில்லை ஆனாலும் அவரது சீடர்கள் என்ற பீடைகள் சொல்லித் திரிகின்றன.  அந்த மாதிரி கடவுள்கள் சிலர் இண்ணமும் சமூகத்தில் உடம்புடனே திரிந்து கொண்டிருக்கின்றனர், சிலர் மண்டையைப் போட்ட பின்னர் ஊர் ருக்கு சிலைகளாக தீராத  தரித்திரமாக சமூகத்தைப் பீடித்திருக்கிறார்கள்.

யார் வேண்டுமானாலும் கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொள்ளலாம்,  ஆதாரம் என்ன?  இறைவன் எப்போது, எங்கே தோன்றுவான், அவன் என்னென்ன பணிகளைச் செய்வான் என்பதை ஸ்ரீமத் பாகவதம் முன்னரே கூறுகிறது.  அதன்படி, பூமியில் 5000 வருடங்களுக்கு முன்னர் துவாபர யுகத்தில்  ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டிய பின்னர் தான் வந்த வேலை முடிந்ததும் தனது லோகமான கோலோக விருந்தாவனத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடைய அடுத்த அவதாரம் புத்தர்.  அவருக்குப் பின்னர் கல்கி கலியுகத்தின் இறுதியில் தோன்றுவார்.  கலியுகம் 4,32,000 வருடங்கள், அதில் 5000 வருடங்கள் முடிந்துள்ளன, இன்னமும் மீதமுள்ள  4,27,000 வருடங்கள் முடிந்த பின்னரே கல்கி தோன்றுவார்.  ஆகையால், இதற்கிடையில் நான்தான் கடவுள் என்று யாரெல்லாம்  சொல்கிறார்களோ  அவர்கள் அனைவருமே போலிகள் தான்.

3.  கடவுளுக்கு வடிவம் கிடையாது, பிரம்மம் என்ற ஒன்று இருக்கு, அதற்க்கு எந்தப் பண்பும் கிடையாது, நாம் முக்தியடைந்தால் அந்த பிரம்மத்துடன் ஐக்கியமாகி, பிரம்மமும் நாமும் ஒன்றோடு ஒன்றாக ஆகிவிடுவோம்என்பவர்கள் போலிகள்:  

na tv evāhaḿ jātu nāsaḿ
na tvaḿ neme janādhipāḥ
Bhagavad-gītā 2.12

நானோ, நீயோ இங்கே கூடியுள்ள அரசர்களோ யாரும் இல்லாமல் இருந்த ஒரு காலம் இதுவரை இல்லை, எதிர்காலத்திலும் ஒருபோதும் நாம் இல்லாமல் போகப் போவதுமில்லை.

ஆங்கிலத்தில் I [நான்-I st Person], You [நீ-அர்ஜுனன் IInd Person], they [அவர்கள்-அரசர்கள் Third Person], என்று மூன்று நிலைகளிலும் கடந்த காலத்திலும் இனி வரும் காலத்திலும் நாம் இருப்போம், ஒருபோதும் இல்லாமல் போக மாட்டோம் என்று பகவான் கூறுகிறார்.  இதை படித்த பின்னர் கூட எந்த முட்டாளாவது கடவுளுடன் ஐக்கியமாய் போவோம் என்று போதிப்பானா?  அவ்வாறு போதிப்பவன் போலி.


4.  போகும் பக்தர்களுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருப்பவன் போலி:  


dehino 'smin yathā dehe
tathā dehāntara-prāptir
dhīras tatra na muhyati


இந்தப் பிறவியிலேயே, சிறுவயது, இளைஞன், வயது முதிர்ந்தவன் என ஆன்மா வெவ்வேறு உடல்களை மாற்றுவதைப் போல இறப்பிற்குப் பின்னால் வேறொரு உடலைப்  பெற்றுக் கொள்ளும், அறிவுத் தெளிவான ஒருவன் இம்மாற்றங்களைக் கண்டு குழம்பிப் போவதில்லை. 

இந்த பதத்தில், இந்த தேகம் நிலையற்றது, ஆடையைப் போன்றது, கிழிந்த ஆடையை விடுத்து வேறு நல்ல ஆடைகளை நாம் உடுத்துவது போல, ஆன்மா இந்த உடல் வசிக்கத் தகுதியற்றது என்னும்போது அதை விட்டு நீங்கி வேறு உடலில் நுழைகிறது என்கிறார்.  ஒரு ஆன்மீக வாதி என்பவன், இதை உணர்ந்து, நீங்கள் இந்த தேகமல்ல, ஆன்மா என்ற உண்மையை உரைப்பவராக இருக்க வேண்டுமேயன்றி,   அங்கே போகிறவர்களுக்கு கையை தூக்கு, காலைத் தூக்கு, நெற்றியில் விரலால் அமுக்கு என்று வைத்தியம் பார்ப்பவராக இருக்கக் கூடாது.  வைத்தியம் பார்ப்பது தவறல்ல, வைத்தியத்தைப் பார்க்க நிறைய மருத்துவ மனைகள் இருக்கின்றன.  ஆன்மீகவாதி ஆன்மாவைக் காப்பாற்றுபவராக இருக்க வேண்டும், அழிந்து போகும் உடலை அல்ல.

5. மேஜிக் வித்தைகளைச் செய்பவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல: வாயில் லிங்கம் எடுத்தல், காற்றில் கையசைத்து சாம்பல், வாட்ச், மோதிரம், தங்கச் செயின்களை எடுத்து பணக்காரர்களுக்கு/வி.ஐ.பி.க்களுக்கு  மட்டும் கொடுத்தல் போன்ற மேஜிக் வேலைகளைச் செய்பவன் ஆன்மீகவாதி அல்ல.  விலையுயர்ந்த தங்கச் செயினை கையை அசைத்து கொண்டுவரும் இவர்களால், விலை மலிவான ஒரு பூசணிக்காயை அவ்வாறு கொண்டு வர முடியுமா என்று கேட்கப் பட்ட கேள்விக்கு ஐம்பது வருடமாக இவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பி.சி.சொர்க்கார் என்னும் மேஜிக் வித்தைக்காரர் இந்த வேலைகளை இவர்களை விட நன்றாகச் செய்வார். அவர் இரயில் எஞ்சினையே மறைத்தாலும் தன்னை கடவுளின் அவதாரம் என்று ஒருபோதும் சொன்னதில்லை.  கடவுள் என்றால், கோவர்த்தன மலையையே இடது கை சுண்டு விரலால் தூக்குவார், இந்த பிரபஞ்சத்தையே படைப்பார்.  

மேற்கண்ட முறைகள் வாயிலாக, சட்டத்தின் பார்வையில் தவறு செய்தவர்களா இல்லையா என்று பாராமல், சாஸ்திரத்தின் பார்வையில் உருப்படாத போலிகள் லிஸ்ட் இங்கே தருகிறோம் அடைவுக்குள் காரணமும் தந்துள்ளோம்: 

மேஜிக் வித்தை செய்த புட்டபர்த்தி காரர்  [தன்னை கடவுள் என்று சொல்ல அனுமதித்தவர், மேஜிக் செய்தவர், குரு பரம்பரை இல்லை ]


தலையில் கர்சீப் கட்டிய ஷிர்டிக் காரன் [தன்னை கடவுள் என்று சொல்ல அனுமதித்தவர், குரு பரம்பரை இல்லை ]

திருவண்ணாமலை 'கு'மணன் [குமனாஷ்ரமம் புகழ்..]- [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு பரம்பரை இல்லை.  செத்த பின்னர் ஆஷ்ரம சொத்துக்கள் தம்பி மகனுக்கே போய்ச் சேர வேண்டும் என்று உயில் எழுதிய பற்றற்றவர். ]

வடலூர் காரர் [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு பரம்பரை இல்லை ]

செக்ஸ் பண்ணிகிட்டே கடவுள்கிட்ட போகச் சொன்ன சீஷோ [ஈனம் மானம் எதுவுமே இல்லாத மோசடிப் பேர்வழி ]

அமெரிக்காவில் ஒரு மீட்டிங்கில் பேசி அதை வச்சே காலத்தை ஒட்டிய தலப்பாக் கட்டு, அவருடைய ஹம்சா குரு  [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு உண்டு, ஆனால் அந்த குருவுக்கு வேறு யாரும் குரு இல்லை, அதாவது குரு பரம்பரை இல்லை ]

பாழுங் கலை "Art of Killing" தாடிக் காரன் [கையைத் தூக்கு காலைத் தூக்கு, மூக்கை அமுக்கு, மூச்சை இழு, விடு  அதுதான் ஆன்மிகம் என்றவர், எல்லோரும் கடவுள் என்னும் போலி, நச்சுப் பாம்பு தற்போது ரஞ்சிதானந்தாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.  இவரோட குரு அமேரிக்கா புண்ணிய பூமின்னு அங்கே போய் செத்து பின்னர் பிணம் 20 நாள் னாராம இருந்ததாக சான்றிதழ் பெற்றவர்.  பயோகிராபி எழுதியவர் ]

இலங்கையில் இருந்து வந்து திருச்சி விராமலையில் மடம் போட்டு
 பெண்களைக் கற்பழித்த நடிகர் செந்திலின் ஜெராக்ஸ் [பயங்கரமான கிரிமினல், பாலியல் ரீதியாக தண்டனை பெற்றவர் ]

ஷங்கர் ராமனைப் போட்டுத் தள்ளியதில் குற்றம் சாட்டப் பட்டுள்ள  காஞ்சிபுரத்தான் [பாலியல் ரீதியாக எழுத்தாளரால் குற்றம் சாட்டப் பட்டவர் ]

நான் பீடி குடித்தால் என் வாயில் வாசனை வராது, நீ குடித்தால் வாசனை வரும் அதனால் நான் தான் கடவுள் என்ற யாகாவா முனி
[கீழ்ப் பாக்கத்துக்கு போக வேண்டிய ஆள் , ஆனா  ஏன் வெளியிலேயே விட்டிருந்தாங்கன்னுதான் புரியலை, செத்துட்டாரு. ]

கமலஹாசனின் வசூல்ராஜா புகழ் கட்டிப் பிடி வைத்தியம் பண்ணும் கேரளாக் காரி  [குருவோ, குரு பரம்பரையோ இல்லாதவர், முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி காணாமல் போய்விடுவோம் என்று போதிகிறார்,  ரஞ்சிதானந்தாவை ஆதரிக்கிறார் ]

யாரும் கல்யாணம் பண்ணாதீங்கோ, புள்ளைகுட்டி பெத்துக்காதீங்கோ என்று சொல்லும் " பிரம்ம கிழவிகள்" இயக்கம் [குருவோ, குரு பரம்பரையோ இல்லாதவரகள், கொஞ்சநாள் முன்னாடி செத்த கிழவனை கடவுள் என்கிறார்கள், 500 கோடிக்கு மேல் கடவுள் கிட்ட ஆன்மாக்கள் ஸ்டாக் தீர்ந்து போயிடும் ஆகையால் யாரும் செக்ஸ் செய்யாதீர்கள், குழந்தை பெறாதீர்கள், ஆன்மா இல்லாத குழந்தையா பொறக்கும் என்று டுபாக்கூர் விட்டவர்கள். எப்போதோ உலக மக்கள் தொகை 500 கோடியைத் தாண்டிவிட்டது, குழந்தைகள் பிறக்கின்றன, ஆனாலும் இவர்கள் இயக்கத்தில் சேரும் ஆடுகள் மட்டும் குறையவில்லை.]  

நம்மை கதவைத் திறந்து ஆனந்தத்தை வரவழைக்கச் சொல்லிவிட்டு, அவன் கதவைப பூட்டிக் கொண்டு ரஞ்சிதானந்தம் பார்த்தவன்[குருவோ, குரு பரம்பரையோ இல்லாதவர், எல்லோரும் கடவுள் என்பவர்.  இவரது பக்தர்கள் இவரை கடவுள் என்று சொன்னாலும் நடவடிக்கை எடுக்காதவர்]

செவ்வாடைத் தொண்டர்களை கொண்ட கீழ்மருவத்தூர்க்காரன் [முழுக்க முழுக்க கற்பனையாக ஒரு கடவுளை உருவாக்கி,  ஆயிரம் கோடிகளில் சொத்து சேர்த்தவர், அதற்க்கு தனது பெண்டாட்டி பிள்ளை குட்டிகளை காவலுக்கு போட்டிருப்பவர் ]

நாலு லட்சம் வருஷத்துக்கப்புறம் வரவேண்டிய கல்கி இப்பவே ஆணும் பெண்ணுமா வந்துட்டோம் என்று சொல்லித் திரியும் புருஷன் பெண்டாட்டி பொறம்போக்குகள் .....[இவர்கள் கல்கி அவரதாரம் என்கிறார்கள்.  கல்கி ஒருத்தார் மட்டுமே அதுவும் ஆண்.  அப்படியானால்  எப்படி புருஷன், பெண்டாட்டி இருவரும் கல்கியாக இருக்க முடியும்? அதுவும் 4,27,000 வருடங்கள் கழிந்த பின்னரே வர முடியும், இப்போதே எப்படி வந்தார்கள்?]

முரளீதரன் [ரொம்ப மோசமானவர் இல்லை, ஆனால் தலப்பாக்கட்டு போன்றவர்களை மேற்கோள் காட்டுவதால் இவருக்கு விஷயம் தெரியவில்லை]

ககி சவம்  [அனுபவத்தை வைத்து புருடா விட்டுக் கொண்டு திரிபவர், குரு , குரு  பரம்பரை எதுவும் இல்லாதவர்]

 வேலூர் தங்கக் கோவில் காரர் [தான்தோன்றி சாமியார், குரு , குரு  பரம்பரை எதுவும் இல்லாதவர், தத்துவ ரீதியாக போலி, போலியோ போலி......]

ஈசா கிழவர் [மொக்கைச் சாமியார், எந்த அடிப்படையும் இல்லாதவர், வேணுமின்னா மரம் நடட்டும், வேறு எதற்கும் பிரயோசனமில்லாதவர்] 

கேரளாவின் ஐயோ..... அப்பா.......... [சாஸ்திரத்தில் சொல்லப் படாத வழிபாட்டு முறை]. 

Saturday, January 26, 2013

படுக்கையறையில் காமிரா வைக்காமல் கள்ளச் சாமியாரை கண்டுபிடிப்பது எப்படி?

கள்ளச் சாமியார்கள் மக்களை ஏய்த்து வருவது எப்போ ஆரம்பித்தது என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாத அளவுக்கு ரொம்ப காலமாக நடந்து வருகிறது, தற்போதும் நடக்கிறது, இனி வரும் காலங்களிலும் நடக்கும்.  இவர்களிடம் ஏமாறுபவர்கள் வெறும் அப்பாவிகளா என்று பார்த்தால் அதுவும் இல்லை.  அதிபுத்திசாலித்தனம் கொண்ட,  நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் பயின்றவர்களும், பெரிய பணக்காரர்களும் இவர்களிடம் எளிதில் ஏமாந்து கற்பையும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும், வாழ்க்கையையும் தொலைக்கிறார்கள். இவ்வளவு படித்த நீங்கள் எப்படி எமாந்தீர்கள் என்று கேட்டால், "எங்களை விடுங்கள், அமரிக்காவில் மக்கள் மனங்களை படிக்கத் தெரிந்த மனோதத்துவ நிபுணரே [சைக்காலஜிஸ்ட்] இந்த சாமியார் பேச்சைக் கேட்டு தான் சேர்த்து வைத்திருந்த ஒன்று முதல் இரண்டு கோடி ரூபாய் வரையிலான சொத்துக்களை இவருக்கு தானமாக வழங்கியிருக்கிறார், நாங்கள் எம்மாத்திரம்?" என்று அவரது சாமர்த்தியத்தை பறை சாற்றுகிறார்கள். வெறும் பேச்சை வைத்தே ஆயிரம் கோடிகளில் சொத்து சேர்க்கத் தெரிந்த இந்த மாதிரியான சாமியார்களிடம் இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனத்தை உருவாக்கி நடத்தும் சாமர்த்தியம் இருக்கிறது,  ஆனால் அவர்கள் பிராடு வேலை செய்யப் போய்விட்டது தான் துரதிர்ஷ்டவசமாகும். 


சமீபத்தில் பிரபலமான கள்ளச் சாமியார் தன்னை நடிகையோடு இருப்பதாக காட்டிய காட்சி உண்மையல்ல, கணினியால் சித்தரிக்கப் பட்டது என்று சாதிக்கிறார்.  அந்த காட்சி படமாக்கப் பட்ட நேரமும், தேதியும் ஒவ்வொரு காட்சியிலும் தோன்றுகிறது.  அதே சமயம் இவர் கலந்துகொள்ளும் ஒவ்வொரு பொது நிகழ்ச்சியும் ஊரறிய படமாக்கப் படுகிறது, அந்த நடிகையும் அவ்வப்போது விமானத்தில் பறப்பவர்.  வீடியோவில் காட்டப் படும் தேதி, நேரங்களில் ஏதாவது ஒன்றை எடுத்து அந்த நேரத்தில் நாங்கள் வேறு இடத்தில் இருந்தோம், அந்த காட்சியில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று காட்ட இவர்கள் இதுவரை ஏன் முயற்சிக்கவில்லை என்பது விந்தையாக இருக்கிறது.  ஏதோ நம்ம அதிர்ஷ்டம் ஒரு புண்ணியவதி  இவர் படுக்கையறையில் கேமராவை வைத்து நம்மைக் காப்பாற்றி விட்டார், கேமாரவில் பெண்ணுடன் சிக்கியதால், இவர் ஒருத்தர் மட்டும் போலி ஆன்மீக வாதி மற்றவர்கள் யோக்யர்கள் என்று அர்த்தமல்ல. "மாட்டாத வரை எல்லோரும் யோக்கியர்களே" என்ற தத்துவத்தின் அடிப்படையில் வெளியில் கொல்லை பேரு இன்னமும் சிக்காமல் உலாத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் பலர் கடைசி வரை எல்லா அயோக்கியத்தனமும் செய்து வாழ்ந்து, மாண்ட பின்னர் தலைமுறை தலைமுறைக்கும் கடவுளாக்கப் படுகின்றனர் என்பது தான் ஜீரணிக்க முடியாத உண்மை. இந்த மாதிரி படுக்கையறையில் வைக்கப் படும் கேமராக்களை நம்பாமல் போலி ஆன்மீகவாதிகளை அடையாளங்கண்டு நம்மை காத்துக் கொள்ள வழி இருக்கிறதா என்று பார்ப்பதே இந்தப் பதிவின் நோக்கம்.




பொதுவாக கள்ளச் சாமியார் என்றால் பெண்களுடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருப்பவர், அவ்வாறு அல்லாதவர் நல்ல சாமியார்  என்று நம்மில் பலரும் தவறாக நினைக்கிறோம்.  உண்மை அதுவல்ல.  பாலியல் ரீதியான ஒழுக்கம் என்பது ஆன்மீக வாதிக்கு உண்டான தகுதிகளில் ஒன்றுதானே தவிர அதுவே முழுத் தகுதியும் ஆகிவிடாது.   சொல்லப் போனால் திருமணம் செய்து குழந்தைகளோடு இருப்பவர்களும் நல்ல ஆன்மீக வாதிகளாக இருக்க முடியும்.  உண்மையில் தகுதியான சாமியாரால்  கள்ளத் தனம் செய்யவே முடியாது, எனவே கள்ளச் சாமியார் என்ற சொற்றொடரே முரணாகும். "கருணையான கொலைகாரன்", "நேர்மையான திருடன்" என்பது போல !!  நாம் இவர்களை போலி ஆன்மீகவாதிகள் எனலாம், இதன் பொருள் இறைவனை அடைய நமக்கு வழிகாட்ட தகுதியற்றவர்கள் என்பதாகும்.

முதலில் எல்லோருக்கும் தெரிந்த திருவண்ணாமலை ராஜசேகரனை எடுத்துக் கொள்வோம். பாலியல் ரீதியாக அல்லாமல், மற்ற விஷயங்களை வைத்து இவர் ஒரு நல்ல ஆன்மீகவாதிதானா என பார்ப்போம். பின்னர் இதையே மற்றவர்களுக்கு எவ்வாறு விரிவுபடுத்துவது என்றும் பார்ப்போம்.


1. இவருடைய குரு யார்?:  உலகெங்கிலும் லட்சக் கணக்கான சீடர்களுக்கு தான் குரு என்கிறார்.  முதலில் சீடனாகவேண்டும், குருவின் போதனையைப் பின்பற்றி பூரணத்துவம் பெற வேண்டும் அதற்க்கப்புறம் தான் குருவாக முடியும்.  இவர் முதலில் ஊரைச் சுற்றி எக்கச் சக்கமான சீடர்களை உண்டு பண்ணிவிட்டு அவர்களில் பலரை சந்நியாசம் என்ற நிலை வரை உயர்த்தியதாகச் சொல்லிவிட்டு, அதற்க்கப்புறம் தான் இவரே சீடராகியிருக்கிறார்?  இந்த கூத்து எங்கே நடக்கும்?  சமீபத்தில் தான் மதுரை ஆதீனத்தை தன்னுடைய குரு என்று சொல்லிக் கொண்டார்.   அப்படியானால் இத்தனை நாட்கள் இவருக்கு குருவாக இருந்தது யார், அவர் தற்போது இவருடைய குருவா இல்லையா?  அந்த மாதிரி குருவை மாற்றுவது ஏற்கத் தக்கதா?   தற்போது மதுரை ஆதீனத்தால் கலட்டி விடப் பட்டு பாதியாகிப் போன பின்னர் இவருடைய குரு யார்?  குருவே தேவை இல்லை என்று அர்த்தமா?  

இவர் 120 நாடுகளில் தனது இயக்கத்தை விரிவு படுத்தி லட்சக்கணக்கான தொண்டர் படையைச் சேர்த்ததோ,  நூற்றுக் கணக்கான கோடி சொத்து செர்த்ததோ, பள்ளியில் படிக்கும் போது தனது பையில் படத்தை வைத்து அழகு பார்த்த நடிகையையே பின்னொரு நாளில் தனக்கு  "பணிவிடை" செய்ய வைத்ததோ [காணொளி சுட்டி1] [காணொளி சுட்டி2], வெறுமனே டிப்ளமோ படித்த இவர் BITS பிலானியில் பயின்றவரை சிஷ்யை ஆக்கியதோ எதுவும் ஆச்சரியமாகத் தோன்றவில்லை.  தான் அள்ளி முடியுமளவுக்கு தலை நிறைய முடியை வளர்த்து வைத்துக் கொண்டு டஜன் கணக்கான வெளிநாட்டவர்களுக்கு மொட்டையடித்து அவர்கள் கையில் ஒரு தண்டத்தைக் கொடுத்து (மூங்கில் கம்பு)  நிற்க வைத்தாரே, [சுட்டி] அது தான் வியப்பாக இருக்கிறது!!  ஒருத்தர்  கூட, "ஏன் ஸ்வாமி, நீங்க மட்டும் பொம்பளைங்களை விட நீளமா முடியை வச்சிக்கிட்டு, எங்களையெல்லாம்  மொட்டை அடிக்கச் சொல்வது ஏன்?"  என்ற கேள்வியே கேட்டிருக்க மாட்டாரா?!   

2. பெண்கள் சந்நியாசம் ஏற்பது தகுமா?:  இவர் சந்நியாசம் வழங்குவதை ஆண்களோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை, பெண்களையும் சேர்த்துக் கொள்கிறார். [சுட்டி] அவர்களுக்கு மொட்டையடிப்பதில்லை என்பது மட்டுமே வேறுபாடு.  திருமணத்திற்கு முன்னர் பிரமச்சாரியம், திருமணமானதும் கிரகஸ்தன், ஐம்பது வயதில் மனைவியுடன் புனிதத் தளங்களுக்கு செல்லும் வானபிரஸ்தான், இறுதியாக எல்லாவற்றையும் துறந்த நிலையை அடைந்த சந்நியாசி போன்ற நான்கு நிலைகளில், முதல் மூன்றில் பெண்கள் இருப்பினும் நான்காவதான சந்நியாசம் என்பது ஆண்களுக்கு மட்டும்தான்.  இது தான் வேத கலாச்சாரம்.  பெண்கள் துறவு நிலைக்கு ஏற்றவர்கள் அல்ல, வாழ்வில் எந்த ஒரு காலகட்டத்திலும் அவர்கள் தங்கள் பெற்றோர்கள், கணவர், சகோதரர்கள் அல்லது தங்களது வயது வந்த மகன்களுடனோ மாத்திரமே இருக்க வேண்டும்.  தனியான வாழ்வு அவர்களுக்கு வேத கலாசாரம் தரவில்லை.  சந்நியாசம் அவர்களுக்கு இல்லை.   முக்கியமாக கலி யுகத்தில் ஆண்களாயினும் சந்நியாசம் என்பதே தவிர்க்கப் படவேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.  பருவடைந்த இளம்பெண் ஒரு போதும் திருமணம் முடிக்காமல் இருக்கலாது என்ற வேதங்களின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு  இவர் இளம்பெண்கள் கையில் கமண்டலம், தண்டத்தைக் கொடுத்து சந்நியாசினி என்று பெயரும் கொடுத்து அனுப்புகிறார்,  இந்த அட்டூழியம் எங்கே நடக்கும்? எந்த வகையில் இவர் வேத கலாசாரத்தைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார் என்று புரியவில்லை.




3. இவர் பற்று  இல்லாதவரா? உங்களுக்கு சொந்த பந்தங்கள் மேல் பற்று இல்லையா என்ற கேள்விக்கு இவர் சொல்கிறார், "எனக்குள் வாழ்க்கையைப் பற்றி ஏற்ப்பட்ட கருத்துக்களின் முதிர்ச்சியினால் ஆசாபாசங்கள் முழுக்க முழுக்க என்னிடமிருந்து உதிர்ந்து விட்டன.  அவ்வாறு ஆசாபாசங்கள் தானாகவே உதிர்ந்தத பின்னர் தான் நான் சந்நியாச வாழ்க்கையையே ஏற்றேன்".  [சுட்டி] இவர் தேனொழுகப் பேசுவது எல்லாம் மயிர் கூச்செறியச் செய்யும் வண்ணம் தான் இருக்கும் ஆனால் அத்தனையும் பேத்தல் என்பது கொஞ்சம் உற்று நோக்கினால் விளங்கும். உதாரணத்துக்கு   இவரது மடத்தில் அதிகப் படியான வருமானம் வரும் துறை,  சிலைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகும்.  இதை இவரது உடன்பிறந்த தம்பி கோபி என்பவருக்கும், அண்ணன்  செந்தில்குமார் என்பவருக்கும் தான் ஒப்படைத்திருக்கிறார்.  மேலும் பணம் கொழிக்கும் முக்கிய வேலைகள் அத்தனையும் இவர்கள் கைவசமே இருக்கக் கூடும். ஆக இவர் தலையில்  இருந்த முடியைக் கூட இழக்க மனமில்லை, அப்புறம் சொந்த பந்தம் எங்கே உதிர்வதற்கு!!

4.  சந்நியாசி வண்ண உடைகள் உடுத்தலாமா?  சந்நியாசம் ஏற்ற பின்னர் காவி உடை மட்டுமே உடுத்த வேண்டும்.  சங்கர மடத்திலோ, வைணவ சம்பிரதாயங்களிலோ  சந்நியாசிகள் எங்கும் வண்ண உடைகள் உடுத்த இயலாது.  அனால் இவரது படத்தை கூகிளில் ஒரு தமாசுக்கு தேடினால் இவர் அணியாத வண்ணமே இல்லை என்னும் அளவுக்கு எல்லா வண்ணத்திலும் உடை உடுத்துகிறார்.  இது எதில் சேர்த்தி என்றே தெரியவில்லை. 


5.  சாதுவுக்கு களங்கம் ஏற்படுமா?  இவர் பாலியல் குற்றச்சாட்டால் சிறைக்குச் சென்று விசாரணை முடிந்து வெளிய வந்த சமயம்.  தான் சிறைக்குச் சென்றதால் களங்கப் பட்டதாகவும் அதைப் போக்க தன்னைச் சுற்றி தீ வைத்து ஏதேதோ சடங்குகளைச் செய்து அவற்றை நிவர்த்தி செய்யப் போவதாகவும் சொல்லிக் கொண்டார்.  ஒருத்தர் உண்மையில் ஆன்மீகத்தில் பூரணத்துவம் அடைந்தவர் என்றால் அவரை யாராலும் களங்கப் படுத்த முடியாது.  சொல்லப் போனால் அவர் செல்லுமிடங்கள் எல்லாம், அவரது  பாதம் பட்டவுடன் தங்களது களங்கத்தை போக்கிக் கொள்ளும்.  மற்றவர்கள் புனித நதிகளில் நீராடும்போது அவர்கள் பாவங்களை நதிகள் ஏற்கும், அதே நதியில் ஒரு தூய ஆன்மீகவாதி இறங்கும் போது மற்றவர்களால் சேர்ந்த பாவங்கள் நீங்கி அந்த நதிகளுக்கே விமோசனம் கிடைக்கும்.  ஆக நான் ஜெயிலுக்குள் போனதால் களங்கமடைந்தேன் என்பதே பித்தலாட்டம், அதுக்கு முன்னாடியே களங்களாகத்தான் இருந்தார் என்பதுதான் நிஜம்.   போகாத களங்கத்தை  போக்க சாமான்ய மக்களுக்கு விநியோகிக்கப் படும் ரேஷன் கடை மண்ணெண்ணையை  வீணடித்தது மகா அயோக்கியத் தனம்.  [சுட்டி].



 6.  மேலே உள்ள தகவல் விக்கி பீடியாவில் இருந்து எடுத்தது.  இதையே இவரது தளங்களிலும் புத்தகங்களிலும் பார்க்கலாம்.  இவர் பிறந்த தேதி -ஜனவரி 1, 1978 என்று கொடுக்கப் பட்டுள்ளது,  ஆனால் இவரது பாஸ்போர்ட்டில் மார்ச் 13, 1977 என கொடுக்கப் பட்டுள்ளது.  எது உண்மை?  மேலும், இவர் ஞானமடைந்த தேதி ஜனவரி 1, 2000 என்கிறார்.  தமிழ்நாட்டில் பிறந்த இவருக்கு ஏன் எல்லாமே ஆங்கில நாட்காட்டியைப் பொறுத்தே நகர்கிறது என்பது மட்டும் விளங்கவில்லை   மேலே கடைசியில் உள்ள தகவல் இவரே பலமுறை தொலைக்காட்சிகளில் சொல்லியிருக்கிறார், "நான் கடவுள் என்று சொல்லவில்லை, நீங்கள் எல்லோரும் கடவுள் என்று சொல்ல வந்திருக்கிறேன்".  இது தான் இருப்பதிலேயே மிகப் பெரிய பித்தலாட்டம். அதெப்படி எல்லோரும் கடவுள் ஆக முடியும்?  மனுஷன் மனுஷன் தான், கடவுள் கடவுள் தான்.  மனுஷன் இப்போதும் வீடு பேரு அடைந்த பின்னரும் கூட இறைவனுக்கு சேவை செய்யும் நிலைதான், அதில் தான் அவனுடைய உண்மை நிலை, மாறாத நிலை.  [சுட்டி ]

7.  பத்திரிகையாளர்களின் சந்திப்பின் போது இவர் காறித் தூ.....  என்று எல்லோர் முன்னிலும் துப்பியிருக்கிறார், [சுட்டி 8:00 வது நிமிடத்தில்] இதை ஒரு சாது செய்வாரா என்பதை முடிவு செய்ய உங்களுக்கே விட்டு விடுகிறேன்.  இவர் வாயிலிருந்து சில சாபங்கள் வெளி வந்திருக்கின்றன:

"அழிக்கப் பட்ட சிவாலயங்கள் உங்கள் வம்சத்தை நாசமாக்கும்".  [சுட்டி] 
"120 நாடுகளில் உங்கள் சிலைகளை வைத்து செருப்பால் அடிப்பார்கள்"   [சுட்டி 8:00 வது நிமிடத்தில்]

இந்த வார்த்தையெல்லாம்  தான் சாது, ஜீவன் முக்தி [அப்படின்னா என்ன கருமமோ தெரியல] அடைந்தவர் என்று சொல்லிக் கொள்பவர் வாயிலிருந்து வரலாமா?  புராணங்களில் முனிவர்கள் சாபம் கொடுப்பார்கள் ஆனால் உண்மையில் அது வரம்.  அகலிகை "கல்லாய் போகக் கடவது" என்று சாபம் பெற்றது போலத் தோன்றும். ஆனால் இராமனின் பாதம் அவள் மீது பின்னால் படப் போவதற்கான வரம் அது.   தனக்கு கெடுதியே வந்தாலும் ஒரு சாது பதிலுக்கு கெடுதி செய்ய மாட்டார், நன்மையையே செய்வார்.  ஆனால், வம்சம் நாசமாகப் போகட்டும் செருப்பால் அடிப்போம் என்பதெல்லாம் அத்தகைய வகையைச் சார்ந்ததல்ல.  மூன்றாம் தர மனிதர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், சாதுக்கள் வாயில் இருந்து வராது.

8.  இவர் ஒரு கதை சொல்கிறார். [சுட்டி] ஒரு ஜென் மாஸ்டர் புகைப் பிடிக்காதே, குடிக்காதே  என்று எல்லோருக்கும் சொல்லிவிட்டு அவர் எப்போ பார்த்தாலும் புகை பிடிப்பாராம்.  இதைப் பார்த்த ஒருத்தர் என்ன மாஸ்டர் எங்களை "புகைப் பிடிக்காதே, குடிக்காதே" என்று சொல்லிவிட்டு நீங்க மட்டும் பார்க்கும் போதெல்லாம் புகைக்கிறீர்களே என்று கேட்டாராம். அதற்க்கு அவர், என்னோட லெவலே வேற, அதனால உன் லெவலுக்கு பொருந்தும் அறிவுரை எனக்குப் பொருந்த வேண்டியதில்லை, "Don't do what Masters do, do what they say" என்றாராம்!! .  இவர் வீடியோவில் நடிகையோடு மாட்டியபோது இதைச் சொல்லித் தப்பித்திருக்கலாம், ஏனோ விட்டுவிட்டார்!!  அது போகட்டும், உண்மையில் ஒரு சாதுவுக்கு இப்படிப் பட்ட நியமங்கள் எதையும் பின்பற்றத் தேவையில்லையா?  நிச்சயம் தேவை.  அவர்கள் தன்னை உணர்ந்த ஆன்மாக்கள் அவர்களுக்கு எந்தக் கட்டுப் பாடும் தேவையில்லை என்றாலும், அவர்கள் எதைப் போதிக்கிறார்களோ அதை பின்பற்றவும் செய்வார்கள் காரணம் அவர்களைப் பார்த்து மற்றவர்களும் பின்பற்ற வேண்டுமென்பதற்காக!!  

9.  இவரு அப்பப்போ சிவன் [சுட்டி], கிருஷ்ணன் வேஷம் போடுறாரு [சுட்டி].   அதற்க்கு என்ன அர்த்தம்னு இன்னமும் விளங்கவில்லை.  இவரும் அவர்களைப் போல படைத்தல், காத்தல் அழித்தல் செய்யத் தகுதியாவரா?  [வருஷத்துக்கு ஒரு தடவை சீக்ரெட்டா அம்மன் வேஷமும் போடுவாராம், அதைப் பார்க்க காசு கொஞ்சம் ஜாஸ்தியாம், அதற்காகத்தான் தலையை மொட்டையடிக்காம வச்சிக்கிட்டு திரியறாராம்!!].  எந்த தூய பக்தரும் நான் சிவன், நான் கிருஷ்ணன் என்று சொன்னதாகச் சரித்திரமே இல்லை.  எல்லோரும் நான் அவர்களின் திருவடி சேவகன் என்றே சொல்லியிருக்கிறார்கள் அதுவே உண்மையும் கூட. 

இது போல இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம்.  இவரைப் பற்றி வெளியிடப்பட்ட  நடிகையுடனான படம் பொய் என்றே நிரூபிக்கப் பட்டாலும், இவர் ஒரு நல்ல ஆன்மீகவாதி இல்லை என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.  

பொதுவாக போலி ஆன்மீக வாதிகளை எப்படி கண்டுபிடிப்பது?

  • நான் கடவுளேதான் என்று சொல்வான், அல்லது அவனது சீடர்கள் அவனை கடவுள் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

  • ஆன்மீக குருவே தேவை இல்லை, என்று இவர்கள் குருவாக இருந்து உங்களிடமிருந்து பணத்தை பிடுங்கிக் கொண்டிருப்பார்கள்.  அவர்களுக்கென்று ஆன்மீக குரு யாரும் இருக்க மாட்டார்கள், அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு முன்னர் ஒன்றிரண்டு தலைமுறைக்கு மேல் யாராவது ஒருத்தர் குரு இல்லாமல் தான்தோன்றியாக இருப்பான்.

  • வாயில் இருந்து லிங்கம் எடுப்பது, கையில் இருந்து திருநீறு வாட்ச், தங்க மோதிரம் தங்கச் சங்கிலி எடுத்தல் போன்ற வேலைகளைச் செய்வான்.  தங்கம் வி.ஐ.பி க்களுக்கு மட்டும் தான் கிடைக்கும், ஏழைகள் லிங்கம் எடுக்கும் மேஜிக் வித்தையை எல்லோருடனும் உட்கார்ந்து பார்க்கலாம். அவன் கொடுக்கும் வாட்ச் எங்கே எப்போது வாங்கியது என்பதையும் கண்டுபிடிக்கலாம். 

  •   மடத்துக்கு போகும் பக்தர்களுக்கு குரு வைத்தியம் பார்ப்பார், நோய்கள் பலவற்றை குணப் படுத்துவார்.  [வைத்தியம் பார்ப்பது தப்பில்லை, ஆனால் அது ஆன்மீக வாதியின் வேலையும் இல்லை.  வைத்தியம் மருத்துவர்தான் பார்க்கணும், அதற்க்கு மருத்துவ மனைக்குத்தான் செல்ல வேண்டும்.  ஆன்மீகவாதி, ஆன்மாவை உணரவும், இறைவனை உணரவும் வழி சொல்ல வேண்டும். ]

  • முக்தி அடைந்தால் நீங்க கடவுளோடு ஒன்னாயிடுவீங்க, அதற்க்கப்புறம் கடவுள் நீங்க என்ற பேதம் மறைந்து போயிடும் என்று போதிப்பவர்கள். 
  • கடவுளுக்கு உருவமே இல்லை என்பவர்கள்.   கண் இல்லாதவன் குருடன், காது இல்லாதவன் செவிடன், கால் இல்லாதவன் நொண்டி, தலை இல்லாதவன் முண்டம், இப்படி எது எதெல்லாம் இல்லைன்னு திட்டுகிறோமோ  அத்தனையும் ஒண்ணாச் சேர்த்து ஒரே வார்த்தையில் திட்டனுமா?   உருவம் இல்லாதவனேன்னு சொன்னாப் போதும், அதைத்தான் இவர்கள் செய்கிறார்கள்,

 எது போலி என்று சொல்லிவிட்டோம், இனி எது நல்லது என்பதையும் சொல்ல வேண்டும்.  நல்ல ஆன்மீக வாதியை கண்டுபிடிப்பது எப்படி?  அடுத்த பதிவில் பார்ப்போம்.


Tuesday, January 22, 2013

உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை உருவ உங்கள் டெபிட் கார்டு எண்ணே போதும்



பெங்களூருவில் உள்ள எங்கள் அலுவலகத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த உண்மைச் சம்பவம் இது.  இதன் நாயகன் பெயர் மஞ்சுநாத் [பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது].  எங்கள் அலுவகத்தில் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட  கம்பியூட்டர்களுக்குத்  தேவையான மென்பொருள், வன்பொருள், இணைய இணைப்பு எல்லாம்  மேலாண்மை செய்து எந்தப் பிரச்சினை வந்தாலும் சமாளிக்க வேண்டியது இவருடைய பொறுப்பு.  எனவே  கணினியைப் பற்றிய எல்லா விஷயமும் அத்துபடி.   இவருக்கு  ஷேர் மார்க்கெட்டிங்கில் ஈடுபாடு அதிகம்.  ஷேர் பரிமாற்றம், வங்கி கணக்கு பரிமாற்றம் எல்லாம் ஆன்லைனில் செய்வதால் இவருக்கு இணைய வழி பண பரிவர்த்தனைகளும்  அத்துபடி.

இந்த மாதிரி எல்லாம் நல்லா போய்கிட்டு இருந்த சமயத்தில இரண்டு வாரத்துக்கு முன்னாடி இவருக்கு ஒரு மெயில் வந்தது.  அதில், நாங்கள்  வருமான வரி அலுவலகத்தில [IT Department] இருந்து மெயில் அனுப்புகிறோம், நீங்கள் இந்த வருஷம் செலுத்திய வருமான வரியில் 3000 ரூபாய் உங்களுக்கு திரும்பத் தர வேண்டியிருக்கு, உங்க வங்கிக் கணக்கு அட்டையின் எண்ணை [Debit Card Number] எங்களுக்கு மெயிலில் அனுப்புங்க என்று அந்த மெயிலில் குறிப்பிடப் பட்டிருந்தது. அந்த மெயில் அனுப்புனர் [Sender] முகவரியும் ஏதோ  incometaxdept.com  என்பது போல சந்தேகமே வராத வகையில் இருந்தது,  அதில் கொடுக்கப் பட்டிருந்த ஒரு லிங்கைச் சொடுக்கினால் நாம் வழக்கமாக இணையத்தில் வருமான வரி தாக்கல் செய்யும் [IT Returns filing site] தளத்திற்கே இட்டுச் சென்றது.  ஆனால், தகவலை அங்கே பதியச் சொல்லவில்லை, இந்த மெயிலுக்கு Reply யாக அனுப்புங்கள் என்று கேட்டிருந்தார்கள்.

இங்கதான்   நம்மாளுக்கு புத்தி லேசாகத் தடுமாறியது.  இரண்டு விஷயத்தில் கோட்டை விட்டார். முதலில் இவர் வருமான வரி அத்தனையும் TDS முறையில் அலுவலகத்தில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தது, இவருக்கு தேவையான வருமான வரி விலக்குகள் போக செலுத்த வேண்டிய வருமான வரியை ஏற்கனவே அலுவலகமே வருமான வரித் துறைக்கு அனுப்பிவிட்டிருந்தது.  தற்போது அவருக்கு வருமான வரித் துறையில் இருந்து எந்த பணமும் வரவேண்டிய வாய்ப்பே இல்லை.  ஆனாலும் வருமான வரித் துறைக்காரன் எங்கோ கணக்குல தப்பு பண்ணியிருப்பான், வர்ற லக்ஷ்மியை வேண்டாம்னு சொல்லப் படாது என்று நண்பருக்கு மனதில் நப்பாசை வந்ததுவிட்டது.

அடுத்து முக்கியமான ஒரு விஷயத்தை அவர் கவனிக்கத் தவறினார். வருமான வரியை தாக்கல் செய்யும் படிவத்தில் நம்முடைய வங்கிக் கணக்கை கட்டாயம் தெரிவிக்க வேண்டும், அப்படியே அவர்கள் பணம் திரும்பத் தருவதாக இருந்தாலும், நேரிடையாக வங்கிக் கணக்கிற்க்கே அனுப்பி விடுவார்கள்.  இந்த விஷயமும் இவருக்கு பொறி தட்டவில்லை. ஒருவேளை, பத்து மில்லியன் டாலரை உங்க பேர்ல எழுதி வச்சிட்டு சவுத் ஆப்பிரிக்காவில் ஒரு தாத்தா செத்து போயிட்டாரு, அதை உங்களுக்கு அனுப்ப ஒரு ஆளை பணபெட்டியோட  விமானத்தில் அனுப்பனும், அவரோட வழிச் செலவுக்கு ஒரு மூணு லட்சம் ரூபாயை இந்த அக்கவுண்டுக்கு அனுப்புங்கன்னு மெயில் வந்திருந்தா, நம்மாளு         உ ஷாராயிருப்பாரு.  இங்க அப்படி எதுவும் வரவில்லை வெறும் மூவாயிரம் ரூபாய் தான், அதுவும் இந்திய வருமான வரித்துறையில் இருந்து, கேட்டது பணத்தை அல்ல வெறும் டெபிட் கார்டு எண்ணை மட்டும்தான்.  அதை வைத்துக் கொண்டு என்ன செய்துவிட முடியும்?!
இப்படி பல வழியிலும் புத்தி தடுமாறி தன்னுடைய Debit Card Number -ஐ மெயிலில் அனுப்பிவிட்டார்.  அப்புறம்தான் தலையில் இடி இறங்கியது. அடுத்த அரை மணி நேரத்தில் அவருடைய கணக்கில் இருந்து Rs. 50,000/- [ஐம்பதாயிரம் ரூபாய் தாங்க!!]  உருவப் பட்டிருந்தது.  உடனே அலறியடிச்சிகிட்டு நம்மாளு வங்கிக்கு தகவல் கொடுத்து தனது கணக்கை முடக்கச் சொன்னார்.   தலைமேல் துண்டை போட்டுக் கொண்டு புலம்பிக் கொண்டிருத்த ஆளை, எல்லோரும் ஆறுதல் சொல்லி சைபர் கிரைமுக்குத் தகவல் தெரிவித்து கம்பிளைன்ட் கொடுக்கச் சொன்னோம்.  அங்கே சென்ற பின்னர் தான் பணம் எப்படி உருவப் பட்டது என்ற திகைக்க வைக்கும் சங்கதி தெரிய வந்தது.


பணத்தை உருவியவர்கள் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பயன்படுத்திய சர்வர் அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ளது.  அதை உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் இயக்கலாமாம். நண்பரிடமிருந்து தகவலைப் பெற்றவுடன் தங்களது மென்பொருட்களைப் பயன்படுத்தி  நண்பருடைய டெபிட் கார்டின் பின் நம்பர் என்ன [அது வெறும் நான்கு இலக்கம்தானே]   என்பதை நொடியில் கண்டுபிடித்த அவர்கள் பணத்தை உருவ ஆரம்பித்தார்கள்.  ஒவ்வொரு முறையும் ரூ. 3700/- வீதம்  அரை மணி நேரத்தில் ஐம்பதாயிரத்தை   எடுத்திருக்கிறார்கள்.    அதென்ன கணக்கு ரூ. 3700/-?   ஒரு முன்னணி செல்பேசி நிறுவனத்தின்  ரீ-சார்ஜ் வவுச்சரின் அதிக பட்சத் தொகையாம் அது.  [ஒண்ணுக்கும் உதவாத ஒரு மக்கு நாயை, அதி புத்திசாலியாக தங்களது எல்லா விளம்பரங்களிலும் காட்டும் நிறுவனம் இது!!]  அவர்கள் எடுத்த பணம் அத்தனையும் இந்த வவுச்சர்களாக மாற்றப் பட்டு, அவை மும்பையில் உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் விற்கப் பட்டுவிட்டது.  கடைக்குள் சென்று விட்டால் எது திருடிய வவுச்சர், எது  நல்ல வவுச்சர் என்று தெரியாதாம்.  அவற்றை பலர் வாங்கி பேசியும் தீர்த்திருப்பார்களாம்.


இந்த நாய்க்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சம்பந்தம் இருப்பதாக நினைப்பது உங்கள் கற்பனை, அதற்க்கு எந்த வகையிலும் நான் பொறுப்பில்லை.

 சரி, தற்போது இழந்த பணத்துக்கு ஏதாவது வழியுண்டா?  அதைப் பிடிப்பது என்பது மலையைத் தோண்டி எலியைப் பிடிக்கும் வேலை.  மேலும் அதைச் செயல் படுத்தும் அளவுக்கு சாமானிய மக்களுக்கு 'பவர்' இல்லை. தற்போது நண்பர் இழந்திருப்பது மற்றவர்கள் இழந்ததைக் காட்டிலும் சிறிய தொகை.  ஐந்து லட்சம், பத்து லட்சம், பதினைந்து லட்சம் என்றெல்லாம் கோட்டை விட்டவர்களும் நிறைய இருக்கிறார்களாம்.  இதைக் கேட்ட நண்பர் ஒரு வழியாக மனதைத் தேற்றிக் கொண்டு சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்.

இதில் ஒரு முக்கியமான விஷயம்,   நண்பரின் அலுவலக இ-மெயில் முகவரி நைஜீரியாக் காரர்கள் கைக்கு எப்படிப் போனது?  வேறெப்படி கண்ட கண்ட தளங்களில் தொடர்புக்கு......... என்று சொல்லும் இடங்களில் எல்லாம் முகவரியைக் கொடுத்ததால்தான்.  எனவே மக்காஸ், உங்க டெபிட் கார்டு நம்பரை யாருக்கும் கொடுக்காதீங்க, இ-மெயில் முகவரியை  கண்ட கண்ட பயல்களுக்குத் தராதீங்க, உங்க ஆன்லைன் வங்கிக் கணக்கு பற்றி தகவல்  [முக்கியமா பாஸ் வேர்ட்] கேட்டு எந்த இ -மெயில் வந்தாலும் உடனே டெலீட் பண்ணிடுங்க, போனில் கேட்டாலும் சொல்லாதீங்க. ஏன்னா எந்த வங்கியும் தங்கள் வாடிக்கையாளர்களிடம் வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை மெயிலிலோ, போனிலோ ஒருபோதும் கேட்பதில்லை.

இது குறித்த அப்டேட்: இன்று [15-09-2012] SBI  தனது வாடிக்கையாளர்களுக்கு SMS  மூலம் பின்வரும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

"உங்கள் SBI  வங்கிக் கணக்கை ஆன்லைனில் இயக்கும்போது உங்களுடைய SBI கார்டு குறித்த தகவல்களைக் கேட்டு பாப் அப் [Pop Up] செய்தி ஏதேனும் தோன்றினால் தங்கள் கணினி மால்வேரால் பாதிக்கப் பட்டிருக்கலாம், ஒருபோதும் அத்தகைய தகவல்களைப் பகிர வேண்டாம்"

Beware of Fake Popups: In OnlineSBI, if you get a popup seeking your card details, your device could be malware infected, NEVER provide such information. 

Sender: TD-SBINB
Sent: 05:33:34pm
15-09-2012

இந்தப் பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்  தமிழ்மணத்தில் வாக்களிக்கலாமே!! அதற்க்கு  இங்கே  சொடுக்கவும்.  

Sunday, January 20, 2013

முனிவரின் நான்கு விதமான புதிரான ஆசிர்வாதங்கள்


ஒருமுறை ஒரு அரசவைக்கு ஒரு முனிவர் வருகை புரிந்தார்.  அங்கே அவர் பலருக்கும் ஆசிர்வாதங்களை வழங்கலானார்.  அங்கிருந்த இளவரசனைப் பார்த்தார்,


"ராஜ புத்திர சிரஞ்சீவஹ்  [மன்னரின் மைந்தனே நீ சாகாமல் சிரஞ்சீவியாக வாழ்வாயாக]" என ஆசிர்வதித்தார்.

அடுத்து, அங்கே ஒரு தவசியின் மைந்தனைக் கண்டார்.

"ரிஷி புத்ர மா ஜீவ [தவசியின் மைந்தனே, உடனே நீ மாண்டுபோ]"  என்றார்.

அடுத்து ஒரு தூய பெருமாள் பக்தனைக் கண்டார்,

"ஜீவோ வா......  மரோ வா  [நீங்கள் வாழ்ந்தாலும் சரி, மாண்டாலும் சரி ]"   என ஆசிர்வதித்தார்.



அடுத்து ஒரு கசாப்பு கடைக்காரரைக் கண்டார்,

"மா ஜீவ... மா மர [நீ வாழாதே, சாகவும் வேண்டாம்]"


முனிவர் சொல்வதை மன்னரால் புரிந்துகொள்ள இயலவில்லை.  [என்றைக்கு அவங்க புரிஞ்சுக்கிற மாதிரி எளிதாக பேசியிருக்காங்க!!] அவர் சென்ற பின்னர் தனது மதி நிறைந்த அமைச்சர்களை அழைத்து முனிவரின் வார்த்தைகளை விளக்கும்படி கேட்டுக் கொண்டான்.  அவர்கள பின்வருமாறு விளக்கினர்.

அரசே, தங்கள் மகன் ஒரு ஊதாரி, செல்வாக்கு நிறைய இருப்பதனால் செய்யக் கூடாத செயல்கள் அத்தனையும் செய்து வந்துள்ளான் அவன் செத்தால் நரகம் தான்.  ஆகையால் சாகாமல் சிரஞ்சீவியாக இருக்கக் கடவது என்றார்.

அடுத்து தவசியின் மைந்தன், அவனது நற்செயல்களால் இறைவனை அடையும் பக்குவ நிலைக்கு வந்துவிட்டான், மேலும் வாழ்ந்து சம்சாரத்தில் சிக்கி அதிலிருந்து விலகி விடாமல் தற்போதே இந்த உடலை விட்டால் இறைவனை அவன் சேர்வது உறுதி, அதனால் நீ மாண்டு போ என்றார்.

தூய பக்தர், வாழும் போது பகவான் சேவையில் இருக்கிறார் மறைந்தால் இறைவன் இருப்பிடத்திற்க்கோ, அல்லது மண்ணுலகில் வேறெங்கு இறைவன் விரும்புகிறானோ அங்கே சென்று மீண்டும் இறைச் சேவையில் ஈடுபடப் போகிறார், ஆகையால் அவர் வாழ்வதும் மறைவதும் ஒன்றே.

கசாப்புக் கடைக்காரன் தினமும் எண்ணிலடங்க உயிர்களைக் கொன்று வருகிறான், தொடர்ந்து வாழ்ந்தால்  அவனுடைய பாவச் செயல்கள் மேலும் வளரும்.  ஒரு வேலை மாண்டால், இதுவரை செய்த பாவத்திற்கு கொடிய தண்டனை காத்திருக்கிறது, எனவே வாழவும் வேண்டாம், சாகவும் வேண்டாம் என்று ஆசிர்வதித்தார்.

இதைக் கேட்ட பின்னர் மன்னனுக்கு முனிவரின் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்  விளங்கியது, உங்களுக்கு?!!

மீண்டும் இன்னொரு இனிய பதிவில் சிந்திப்போம்!!




Thursday, January 17, 2013

பிராமணன், செருப்பு தைக்கும் தொழிலாளி -கடவுளை அடைய முயன்ற கதை.

ஒருமுறை நாரதமுனி வைகுந்ததிற்க்கு நாரயணரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார், வழியில் வேதங்கள் அனைத்தையும் பயின்ற ஆச்சாரமான ஒரு அந்தணரைச் சந்தித்தார்.  


 நாரதரை வணங்கிய அந்தணர், "தாங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என அடியேன் அறிந்து கொள்ளலாமா?" என்று கேட்டார்.

அதற்க்கு, "நிச்சயமாக, நான் என் தலைவன் ஸ்ரீமன் நாராயணனைப் பார்க்கச் சென்று கொண்டிருக்கிறேன்!!" என பதிலுரைத்தார்.

"அப்படியா, மிக்க மகிழ்ச்சி!!  எனக்கு ஒரு உதவி தங்களிடமிருந்து வேண்டுமே?"

"தாரளமாக என்னவென்று சொல்லுங்கள், என்னால் இயன்றால் செய்கிறேன்!!"

"தாங்கள்  ஸ்ரீமன் நாராயணனைப் பார்க்கும் பொது, அடியேன் எப்போது வீடு பேரு அடைவேன் என்று கேட்டுச் சொல்கிறீர்களா?"

"நிச்சயமாக" என்று நாரதர் பதிலளித்துவிட்டு அங்கிருந்து பயணத்தை மேலும் தொடர்ந்தார்.  சற்று தொலைவு சென்ற பின்னர், ஒரு ஆலமரத்தடியில்  ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியைச் சந்தித்தார்.   நாரதர் எங்கு செல்கிறார் என்பதையறிந்த அவரும் அதே வேண்டுகோளை விடுக்க நாரதரும் சம்தித்து அங்கிருந்து வைகுந்தம் செல்கிறார்.



வைகுந்தத்தில் ஸ்ரீமன் நாராயணனைச் சந்தித்த நாரதர் முதலில் தனது அலுவல்கள் குறித்து பேசிவிட்டு இறுதியாக தான் அன்று சந்தித்த இருவரைப் பற்றி கூறி, அவர்கள் எப்போது வீடுபேறு அடைவார்கள் என வினவினார்.


 


சற்று யோசித்த பெருமாள், "அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி இப்பிறவி முடிந்ததும் பிறவிக் கடலை நீந்தியவராவர், அந்த அந்தணர் இப்போதைக்கு வீடு பேரு பெரும் சாத்தியம் இல்லை, இன்னும் பல பிறவிகள் காத்திருக்க வேண்டும்"   என்று இயம்பினார்.

இதைக் கேட்ட நாரதருக்கு அதிர்ச்சி கலந்த வியப்பு!!  பெருமாளை நோக்கி, "ஐயனே, வேதங்களை நன்கு கற்றறிந்த பண்டிதன், ஆச்சாரமாக வாழும் ஒருவனை விட ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி விரைவாக பிறவிக்கடல் தாண்டி வீடு பேரு அடைவது எப்படி என்று எனக்குப் புரியவில்லை, சற்றே ஏன் சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா?" என வினவினார்.

அதைக் கேட்டு புன்னகைத்த பெருமாள், ஒரு ஊசியை நாரதரிடம் கொடுத்து, "நீ நேராக சென்று அவர்களை சந்திப்பாயாக, அவர்கள் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் எனக் கேட்டால், இந்த ஊசியின் காது வழியாக ஒரு யானையை நுழைக்க முயன்று கொண்டிருந்தேன் என்று சொல், அதற்க்கு அவர்கள் எந்த மாதிரி பதில் தருகிறார்கள் என்று பார், உன் சந்தேகம் தீரும்" என அனுப்பி வைத்தார்.

நாரதரும் அவ்வாறே திரும்ப வந்து,  வழியில்  சந்தித்த அந்தணரை மீண்டும் கண்டார்.  அவரைக் கண்டதும் மகிழ்ந்த அந்தணர், "நாராயணரைச், சந்தித்தீர்களா?  அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?" என வினவினார்.

நாரதர் பெருமாள் சொன்னபடி, " ஊசியின் காது வழியாக ஒரு யானையை நுழைக்க முயன்று கொண்டிருந்தார்" என்றார்.

அதற்க்கு அந்தணர், " சுவாமி, தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள், ஆனாலும் இதை என்னால் நம்ப முடியவில்லை, ஊசியின் காதில் எப்படி யானை நுழையும்? " என்றார்.  புன்னகைத்த நாரதர், அடுத்து செருப்பு தைக்கும் தொழிலாளியைச் சந்தித்து அதையே சொன்னார்.

அதைக் கேட்டதும், "ஆஹா, என் இறைவன் எல்லாம் வல்லவன், அவனால் இது நிச்சயம் முடியும்" என்று துள்ளிக் குதித்தார்.

இதைப் பார்த்த நாரதருக்கோ பெருத்த ஆச்சரியம்.  "ஐயா, நான் சொல்வதை அப்படியே நம்புவதா?  எதை வைத்து யானையை ஊசியின் காதில் நுழைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?" என்று வினவினார்.


அதைக் கேட்ட அந்த தொழிலாளி, "ஐயா யானை என்ன பெரிய யானை, அதை விட பல மடங்கு பெரியதைக் கூட ஊசியின் காதை  விட சிறிய துளையிலும் என் இறைவனால் நுழைக்க முடியும்" என்றார்.

மேலும் வியந்துபோன நாரதர் "எப்படி?" என  வினவினார்.

கீழே குனிந்து அங்கே கொட்டிக் கிடந்த ஆயிரக்கணக்கான ஆலமரத்தின் பழங்களில் ஒன்றை எடுத்து அதிலிருந்த கடுகினும் சிறிய விதையைக் காண்பித்த அந்த தொழிலாளி "இதோ நான் தினமும் வந்து உட்காரும் இந்த இடத்திலுள்ள ஆலமரத்தைப் பாருங்கள், இவ்வளவு பெரிய மரத்தையே இவ்வளவு சிறிய விதையினுள் வைக்க முடிந்த இறைவனுக்கு, யானையை ஊசியின் காதில் நுழைப்பதென்ன பெரிய விஷயமா?"  என்று கேட்டார்.

இதைக் கேட்ட நாரதரின் சந்தேகம் தற்போது முற்றிலும் தீர்ந்தது!!

சமீபத்திய இடுக்கைகள்:

பயங்கர டேட்டா: மரக்கிளைகளில் தலைகீழாய் தொங்கும் பதிவர். 

பெண்களே புத்திசாலிகள்!!


Wednesday, January 16, 2013

ஆண்களை விட பெண்கள் தான் புத்திசாலிகள் !!

ஆணாதிக்கம் என்பதை ஆங்கிலத்தில் Male Chauvinism என்று சொல்வார்கள்.  அதாகப் பட்டது மனித இனத்தில் ஆண் தான் எல்லா விதத்திலும் மேம்பட்டவன் என்பது ஆணாதிக்க வாதிகளின் கொள்கை.   புத்திசாலித் தனத்திலும் ஆண்களே உயர்ந்தவர்கள் என்பதும் இதில் அடக்கம் என்று  சொல்லவே தேவையில்லை. அதற்க்கு அவர்கள் சில உதாரணங்களைக் கூறுவது உண்டு.

  • அரிஸ்டாட்டில், பிளாட்டோ, இம்மானுவேல் கான்ட், கார்ல் மார்க்ஸ், சாக்ரடிஸ் என்று வரலாற்றில் தோன்றிய தத்துவ ஞானிகள் போல பெண்களில் யாரும் தோன்றவில்லை.  [தலையில மசாலா இருந்தாத் தானே தோன்றுவதற்கு....... அப்படின்னு நான் சொல்லவில்லை, இவங்க சொல்றாங்க!!]
  • இசைத் துறையில் பீத்தோவன், மொசார்ட் மாதிரி பெண்கள் யாரும் பேர் வாங்கினா மாதிரி தெரியலை.
  • விஞ்ஞானத்தில் எடுத்துக் கொண்டால் கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாகிங்  மாதிரி கோட்பாட்டு விஞ்ஞானிகள் சொல்லிக் கொள்ளும்படியா பெண்களில் யாருமே இல்லை.
  • கணிதத்தில் ஆர்க்கிமிடிஸ், பாஸ்கல், லெபனீஸ், ஆய்லர், ஸ்ரீனிவாச ராமனுஜம் மாதிரி யாரையும் காணோம்.
  • நம்மூரில் கூட கேவி. மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ரஹ்மான் மாதிரி ஒருத்தர் கூட பெண் இசையமைப்பாளர் இல்லையே?  ஸ்ரீதர், பந்துலு, பாலசந்தர் மாதிரி ஒரு பெண் சினிமா டைரக்டர் ஆக வில்லையே?  ஸ்ரீபிரியா, சுஹாசினி மாதிரி இருக்கிறவங்க எடுக்கும் படத்தைப் பார்க்க காசுகுடுத்து ஆளை கூடிவந்து சேரில் கட்டிப் போட்டுவிட்டு படத்தை ஓட்ட வேண்டியிருக்கே?  
 இப்படியெல்லாம் பல இல்லாத பொல்லாத காரங்களைக் கூறி பெண்களை மட்டம் தட்டுவதில் ஆணாதிக்க வாதிகள் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.  ஆனாலும், ஆண்களை விட பெண்கள் தான் இறுதியில் புத்திசாலிகள் என்பதே நமது கணிப்பு.  எப்படி?


 உதாரணத்துக்கு நிறைய பரிசுப் பொருட்கள் பல வண்ணப் பெட்டிகளில் போடப்பட்டு பேக்கிங் செய்து வைக்கப் பட்டுள்ளன.

1. ஒரு பெட்டி பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் அழகான வண்ணத்தில் எழிலாகப் பேக்கிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் உள்ளே இருப்பது களிமண்.

2. இன்னொரு பெட்டி பார்க்க அவ்வளவு  நன்றாக இல்லை, ஆனால் உள்ளே விலையுயர்ந்த வைர மோதிரம் வைக்கப் பட்டுள்ளது.

உங்களுக்கு வேண்டியதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று வாய்ப்பளிக்கப் பட்டால்  நீங்கள் என்ன செய்வீர்கள்?  2 ஐத் தேர்ந்தெடுத்தால் நீங்கள் புத்திசாலி இல்லாவிட்டால் கேனை என்று அர்த்தம் என நான் சொல்லவே தேவையில்லை.





அந்த விதத்தில் பெண்கள் புத்திசாலிகள், ஆண்கள் கேனைகள்.  வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது, ஒரு பெண் வெளிப்புறத் தோற்றத்தை ஒருபோதும் பார்ப்பதில்லை, ஆணிடமுள்ள திறமையைத் தான் பார்க்கிறாள்.  அவன்  தார் ரோட்டில் மழை பெய்த நிறத்தில் இருந்தாலும் சரி, வழுக்கை மண்டையனாக இருந்தாலும் சரி அவை அவளைப் பொறுத்த வரை இரண்டாம் பட்சமே.  ஒரு நல்ல உத்தியோகத்தில் இருக்கிறனா, அல்லது வேறு திறமைகள் என்ற வைரம் இருந்தால் போதும் அவனால் கவரப் பட்டு விடுவாள்.


ஆனால் ஒரு ஆண் பெண்ணை பார்க்கும் போது முதலில் அவன் பார்ப்பது தோல் நிறத்தைத்தான், இரண்டாவது வசீகரமான தோற்றத்தைத்தான், அவள் தலையில் களிமண்ணே இருந்தாலும் இவனுக்கு கவலையில்லை, தேர்ந்தெடுத்து விடுவான்.  நிறைய கப்பல்கள் இந்த மாதிரி தோற்றத்தில் கவிழ்த்து கிடப்பதை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்!!

எனவே பேக்கேஜிங்கைப் பார்த்து களிமண்ணை வாங்கும் ஆணை விட, பேக்கேஜிங் எப்படி இருந்தாலும் சரி என்று உள்ளே இருக்கும் வைரத்தைப் பார்த்து தேர்வு செய்யும் பெண் புத்திசாலி தான்!! எப்பூடி..............!!

படித்து விட்டீர்களா?
முந்தைய பதிவு:  நண்பர் இராச நடராஜனுக்கு சமர்ப்பணம்
மரக்கிளைகளில் தலை கீழாக தொங்கும் பதிவர் பயோ டேட்டா.

Tuesday, January 15, 2013

பொங்கல் சிறப்பு போட்டி: பயோ டேட்டாவை வைத்து பதிவரைக் கண்டுபிடித்தல்

ஊர்களில் பொங்கலின் போது வெவ்வேறு விளையாட்டுப் போட்டிகளை சனங்களுக்கு வைப்பது வழக்கம்.  அதே மாதிரி நாமும் வைத்தால் தான் என்ன என்று ரூம் போட்டு யோசித்ததின் விளைவு தான் இந்த போட்டி.  இங்கே ஒரு பதிவரின் பயோ டேட்டா கொடுக்கப் பட்டிருக்கும்,  இடையில் உங்களை குழப்புவதற்க்கென்றே சம்பந்தமே இல்லாமல் சில படங்கள் கொடுக்கப் பட்டிருக்கும், குழம்பாமல் அவர் யாருன்னு கண்டுபிடிக்கணும் அது தான் போட்டி.  சரி இப்போ கேமை ஸ்டார்ட் பண்ணலாமா?  ரெடி..........  ஸ்டார்ட் மியூசிக்.........


பயோ டேட்டா 


பதிவரின் பெயர்:  அதைத்தான் நீங்க கண்டுபிடிக்கப் போறீங்க!!  ஒரு சின்ன Clue அவரு மரக்கிளைகளில் தலைகீழாய் தொங்கிகிட்டு இருப்பார்.

படமெல்லாம் சம்பந்தமே இல்லாம போடுவேன்னு சொல்லிட்டேன்........ ஞாபகம் வச்சுக்குங்க!!

தொழில்: 

மெயின்: பின்னூட்டங்களைப் போடுதல்
எப்பவாச்சும்:  பதிவுகளைப் போடுதல்.
பொழுது போக்கு: தமிழ் வாத்தியார். [இவருகிட்ட படிக்கிற பசங்க எல்லோரும் சாவர வரைக்கும் கல்வி என்பதை கலவி -அப்படின்னேதான் எழுதுவாங்க சுட்டுப் போட்டாலும் கல்வின்னு அவங்களாலே எழுதவே  முடியாது என்பதுதான் விசேஷம்.]

சமீப காலமாய் அசினை நினைச்சு பிசினை.....[எதுகை மோனையா சொன்னேன் !! சாரி ..... ] தூக்கத்தை தொலைச்சவர்!! 

தெரிந்த மொழிகள்: பன்மொழி வித்தகராகனும்னு தான் மரக்கிளைகளில் தலைகீழா நின்னு பார்த்தாரு, ஆனா பன்னு வித்தவரா கூட ஆக முடியலை.  தமிழ், இங்கிலீஷ் ரெண்டு மொழிதான் இவருக்கு கற்க முடிந்தது.  அதிலும் ஒரு சின்ன பிரச்சினை, இவருக்கு இங்கிலீஷையே தமிழில் பேசினாத்தான் விளங்கும்!!

எதைப் பத்தி எழுதுவாரு?:   இவரு போடும் பதிவுகளை விட, இவரோட பின்னூட்டத்துக்குத்தான் ஏகப்பட்ட மவுசு.  மூவாயிரம் பின்னூட்டத்துக்கு ஒரு பதிவு வீதம் போடுவாரு.  பின்னூட்டங்களில் ஃபுல் ஸ்டாப் எங்கேயும் வைக்க மாட்டாரு, அதற்குப் பதில் :-)) தான் போடுவாரு.  இதனாலேயே இவரு போற பிரவுசிங் சென்டரில் எல்லாம் : , - , ) இந்த மூணு கீயும் தேயோ தேயின்னு தேஞ்சு போயிருக்கும்.  இவரு குடுக்கும் காசு எல்லாம் அந்த கீகளை மாத்துவதற்க்கே சரியாப் போவுதுன்னு அவர்கள் தினமும் புலம்பிகிட்டே இருக்காங்கலாம்.

பின்னூட்டங்களில் அதிகம் தாக்குவது:  கவனப் பிரியன்.  அவரைத் தாக்கும் இவர் நாத்திகரும் அல்ல, சுடலை மாடனை மனதார வணங்குபவர். அப்படின்னா  ஏன் இன்னொரு இறை நம்பிக்கையாளரைத் தாக்க வேண்டும்? அதற்க்கு "ஏன்னா அவர் ஒரு மார்க்க பந்து, அந்த பந்தை எனக்குப் பிடிக்காது" என்பதே இவரது பதில்.

இவரது பின்னூட்டங்களின் விளைவு? :  

சில முன்னணி பதிவர்களில் ரியாக்ஷன்:

#1. "மவனே இந்தப் பக்கம் உன்னைப் பார்த்தேன், துணி  காயப் போடும் கேபிளில் உன்னை தலை கீழா தொங்கவிட்டு "கொத்து பரோட்டா" போட்டுவிடுவேன்.

#2. ஐயா ராசா, என்னோடு வீடு பக்கம் இனிமே திரும்பிடாதேப்பா, உன்னை கையெடுத்து கும்பிடறேன் போயிட்டு வாப்பா.

#3.  இந்தப் பக்கம் வந்தே, ரிலாக்ஸ் பிளீஸ் ன்னு சொல்லுவேன்னு நினைக்காதே, மவனே கொலாப்ஸ் ஆயிடுவே, உனக்கு சங்குதான் ஓடிப்போ.

இதெல்லாம் வெறும் சேம்பிள் தான், இன்னும் இது வளர்ந்துகிட்டே இருக்கு, மேலும் பல பதிவர்கள் இவருக்கு இதுபோல வரவேற்ப்பு கொடுப்பாங்கன்னு நம்புகிறோம்.

இதையெல்லாம் இவர் எப்படி சமாளிக்கிறார்?:   வயித்துக் கடுப்பு வந்தவன் என்ன பண்ணுவான்?  நேரா வீட்டு டாய்லெட்டுக்கு ஓடுவான், கதவை சாத்திகிட்டு கடுப்பை தீர்த்துகிட்டு வெளியே வருவான்.  இவரும் அதையேதான் பண்ணுவாரு.  நேரா அவரோட பிளாக்குக்கு ஓடி ஒரு பதிவை காட்டமா போட்டு கடுப்பைத் தீர்த்துக்குவார். 


இவர் பெற்றுள்ள அவார்டுகள்:

1. ரொம்ப நல்லவன்டா அவார்ட்:  இவரு பண்ணும் அட்டூழியம் தாங்க மாட்டாம "டபக்கு டுபுக்கு" வலைப்பூவில் இருந்து நாலஞ்சு முரட்டு பசங்க ஒருநாள் இவரைப் போட்டு நொங்கு நொங்கென்று நொங்க, இவர் கடைசி வரைக்கும் வலிக்காத மாதிரியே ஆக்டு குடுத்துகிட்டு இருந்தார்.  அவங்க எல்லோரும் கைநோக அடிச்சும் இவரு தாங்கியதால், எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான், இவன் "ரொம்ப நல்லவன்டா" அவார்டு கொடுத்து விட்டுப் போய் விட்டனர்.  அவங்க வலைப்பூவை மூனே நிமிஷத்தில் ஹேக் பண்ணிடுவேன்னு இவர் விட்ட சவால் தான் சென்ற ஆண்டின் மிகப் பெரிய காமடி என்று கருதப் படுகிறது.

2. தமிழ் இலக்கியத்துக்கான தமிழ் மாமா அவார்ட்:   காணமல் போன பல சங்க இலக்கிய நூல்களைத் தேடிப் பிடித்து திரட்டி தமிழ்த் தாத்தா என்று இவர் பெயர் வாங்க நினைத்து அதை வேறு யாரோ ஏற்கனவே வாங்கிவிட, அது போனால் போகட்டும் என்று அயராமல் பிளாட் ஃ பார்ம்களில் விற்கப் படும் சரோஜா தேவி புத்தகங்கள், முதல் புத்தகத்தில் இருந்து லேட்டஸ்டு வரை எல்லா பிளாட்ஃ பாமும் முப்பது ஆண்டுகள் சுற்றியலைந்து சேகரித்து வருங்கால தலைமுறைக்கு சேர்த்து வைத்திருப்பதால் இவருக்கு பிளாட்ஃ பார்ம் புத்தகங்கள் படிபோர் சங்கத்தில் இருந்து தமிழ் மாமா விருது வழங்கப் பட்டது.

3. எல்லா மறை நூல்களும் தெரிஞ்சவர் விருது [போட்டியின் இறுதிக் கட்டம் வரை சென்றவர்]:  இந்தியாவில் பார்ப்பனியர்களின் வேத மதம், இஸ்லாம், யூதம், கிருத்துவம் என எல்லாம் இவருக்குத் தெரிந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்ததால்  "எல்லாம் மறை நூல்களும் தெரிஞ்சவர்" விருது வழங்க இவரை அழைத்தனர், நேர்காணலின் போது முதல் கேள்வியாக "திருக்குறள் தெரியுமா?" என்று கேட்ட போது இவர் திருடன் மாதிரி முழிக்க அதற்குப் பதிலா மறை கலண்டவர் என்ற பட்டம் குடுத்து திருப்பி அனுப்பி விட்டனர்.



4. புள்ளி ராஜா விருது:   பதிவுகளில் புள்ளி விவரங்களை கண்ணா பின்னாவென்று அள்ளி வீசி விஜயகாந்தையே ஆட்டம் காண வைத்ததால் புள்ளி விவர ராஜா என்பதைச் சுருக்கமாக காட்டும் "புள்ளி ராஜா" விருதை புள்ளி ராஜாக்கள் கழகம் வழங்கியுள்ளது.   எழுத்தாளர்களுக்கு வழங்கப் படும் புலிட்சர் விருது கிடைக்காட்டியும் இந்த புள்ளி ராஜா விருதாவது கிடைச்சதேன்னு இவர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போயிட்டார்.

பிடித்த உணவுகள்:  ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா என எல்லா வித பழங்களும்.  









 தனித் திறமை:  கும்மிருட்டில் விட்டாலும், ஒலியை [sound] எழுப்பி அது பொருட்கள் மீது பட்டு வரும் எதிரொலியைக் கேட்டு ஆயிரம் அடி தூரம் வரை என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்கும் திறமை பெற்றவர்.  இதற்க்கு Echolocation என்று பெயர்.  "இதை எப்படி மனிதர்களால் செய்ய முடியும்?" என்று கேட்பவர்கள் தாண்டவம் படத்தைப் பார்க்கவும்.






இவரிடமுள்ள இன்னொரு சிறப்புத் தன்மை:  இவரது புன்னகை!!




இவரோட குடும்பப் படத்தை பார்ப்பதற்கும் கண்கொள்ளா காட்சியாத்தான் இருக்கும்!! 



சரி.  தற்போது அந்த பதிவர் யாரென்று கண்டுபிடித்து விட்டீர்களா?  ஆம் என்கிறீர்களா?  அப்படியானால் உங்களுக்கு பரிசு வேண்டுமா?  அதுதான் கிடையாது.  இவரைத் தெரியாதவங்க யாராச்சும் இருந்தாத்தான் பரிசு கொடுக்கப் படும்.  சொல்லப் போனா இவரைத் தெரியாது சொல்றவங்க  படத்தை எக்சிபிஷனில் தான் வைக்கணும்.  ஜாலியா பொங்கலைக் கொண்டாடுங்க, வரட்டுமா!!  ஹா.........ஹா.........ஹா.......