அன்புள்ள மக்கள்ஸ்,
இன்றைக்கு மைதாவைப் பத்தி ஒரு பதிவில் பார்த்தோம். [சுட்டி] நாமும் கிட்டத்தட்ட இதே விபரங்களோடு ஒரு பதிவும் போட்டிருக்கிறோம். நாட்டில சில நல்ல உள்ளங்கள் இருக்கு. அதுங்க என்ன பண்ணும்னா அப்படியே "குறு....குறுன்னு ........" கம்பியூட்டரையே வச்ச கண்ணு வாங்காம பாத்துகிட்டு இருக்கும். எதாச்சும் உடல் நலனுக்கு கெடுதல்னு பதிவு வந்தா, அதெல்லாம் ஒண்ணுமில்ல, நல்லதுதான், அமரிக்காவில் அப்படி, ஆப்பிரிக்காவில் இப்படின்னு போட்டு படிக்கிறவங்களை குழப்பிவிட்டு, சரி ஒண்ணுமில்லை போலிருக்குன்னு நினைக்கிற நிலைக்கு தள்ளி விட்டு விடுவார்கள். பதிவோட நோக்கத்தையும் கெடுத்த மாதிரி ஆச்சு, நாலு பேரு நாசமா போனாங்கலேன்னு மனசுக்குள்ள ஒரு குரூர சந்தோசம். அது போகட்டும், கழுதை. நாம இப்ப விஷயத்துக்கு வருவோம். இன்னைக்கு நாம் படிச்சதில் மைதா தயாராவது எப்படி என விளக்கியுள்ளார்கள். அதை இங்கே தருகிறோம். அதுசரி, மேட்டர் என்னன்னு நீங்க கேட்பீங்க!! [என்னது கேட்க மாட்டீங்களா?! அதானாலென்ன, கேட்டீங்கன்னே வையுங்களேன்!!] அதில்தான் நமக்கு தீராத சந்தேகம் ஒன்னு இருக்கு, கொஞ்சம் பொருங்க!!
------------------------------------------------------------------------------------
மைதா தயாரிப்பு முறை:
முதலில் கோதுமையை நன்றாக தீட்டுகிறார்கள். கோதுமையில் இருந்து தவிடும் நுண்ணுயிரிகளும் தீட்டுதலின் மூலம் நீக்கப்படுகின்றன. பின்னர் அதை மாவாக அரைக்கிறார்கள். அந்த மாவு நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். பின்னர் அந்த மாவில் பென்சாயில் பெராக்சைடு (BENZOYL PER OXIDE) எனும் வேதிப்பொருளை கலக்குகிறார்கள். இந்த வேதிப்பொருள் கோதுமை மாவில் உள்ள மஞ்சள் வண்ணத்தை நீக்கி தூய வெண்மையாக மாற்றுகிறது.
அப்படியே அரைச்சு விற்கப்படும் கோதுமை கிலோ 47 ரூபாய், ஆனால் அத்தனை கெமிக்கல்கள் [அது நல்லதோ கேட்டதோ] சேர்த்து, அரைத்தல் பிரித்தல் என என்னென்னமோ பிராசஸ் பண்ணி வரும் மைதா அதை விட விலை குறைவாய் கிலோ ரூ.36 -க்கே கிடைப்பதெப்படி? விளங்கலையே?
இன்றைக்கு மைதாவைப் பத்தி ஒரு பதிவில் பார்த்தோம். [சுட்டி] நாமும் கிட்டத்தட்ட இதே விபரங்களோடு ஒரு பதிவும் போட்டிருக்கிறோம். நாட்டில சில நல்ல உள்ளங்கள் இருக்கு. அதுங்க என்ன பண்ணும்னா அப்படியே "குறு....குறுன்னு ........" கம்பியூட்டரையே வச்ச கண்ணு வாங்காம பாத்துகிட்டு இருக்கும். எதாச்சும் உடல் நலனுக்கு கெடுதல்னு பதிவு வந்தா, அதெல்லாம் ஒண்ணுமில்ல, நல்லதுதான், அமரிக்காவில் அப்படி, ஆப்பிரிக்காவில் இப்படின்னு போட்டு படிக்கிறவங்களை குழப்பிவிட்டு, சரி ஒண்ணுமில்லை போலிருக்குன்னு நினைக்கிற நிலைக்கு தள்ளி விட்டு விடுவார்கள். பதிவோட நோக்கத்தையும் கெடுத்த மாதிரி ஆச்சு, நாலு பேரு நாசமா போனாங்கலேன்னு மனசுக்குள்ள ஒரு குரூர சந்தோசம். அது போகட்டும், கழுதை. நாம இப்ப விஷயத்துக்கு வருவோம். இன்னைக்கு நாம் படிச்சதில் மைதா தயாராவது எப்படி என விளக்கியுள்ளார்கள். அதை இங்கே தருகிறோம். அதுசரி, மேட்டர் என்னன்னு நீங்க கேட்பீங்க!! [என்னது கேட்க மாட்டீங்களா?! அதானாலென்ன, கேட்டீங்கன்னே வையுங்களேன்!!] அதில்தான் நமக்கு தீராத சந்தேகம் ஒன்னு இருக்கு, கொஞ்சம் பொருங்க!!
------------------------------------------------------------------------------------
மைதா தயாரிப்பு முறை:
முதலில் கோதுமையை நன்றாக தீட்டுகிறார்கள். கோதுமையில் இருந்து தவிடும் நுண்ணுயிரிகளும் தீட்டுதலின் மூலம் நீக்கப்படுகின்றன. பின்னர் அதை மாவாக அரைக்கிறார்கள். அந்த மாவு நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். பின்னர் அந்த மாவில் பென்சாயில் பெராக்சைடு (BENZOYL PER OXIDE) எனும் வேதிப்பொருளை கலக்குகிறார்கள். இந்த வேதிப்பொருள் கோதுமை மாவில் உள்ள மஞ்சள் வண்ணத்தை நீக்கி தூய வெண்மையாக மாற்றுகிறது.
இந்த வேதிப்பொருள் ஒரு நச்சாகும். தலைமுடியை கறுப்பாக
மாற்றும் சாயத்தில் சேர்க்கப்படும் வேதிப்பொருள் இது. இது மைதாவில் உள்ள
மாவுப்பொருளுடன் இணைந்து உருவாக்கும் நச்சுப்பொருள் சர்க்கரை வியாதிக்கு
காரணியாகிறது. மைதாவை மிருதுவாக மாற்றுவதற்கு அல்லோக்சான் எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது கலக்கப்பட்டவுடன் மைதா
வெகுமிருதுவாக மாறுகிறது.
சர்க்கரை வியாதிக்கு மருந்து தயாரிக்கும்
ஆலைகளில் உள்ள சோதனைச்சாலைகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் முதலில்
வெள்ளெலி, சிறுபன்றி, குரங்கு ஆகிய விலங்கினங்களிடம் சோதித்துப்
பார்க்கப்படுகின்றன. இந்த மிருகங்களுக்கு சர்க்கரை வியாதியை உண்டாக்க இந்த
அல்லோக்சான் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த அல்லோக்சான் சேர்க்கப்படும்
மைதாவை உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் உருவாகத்தானே செய்யும்.
இவை
தவிர மைதாவில் செயற்கை வண்ணங்கள், தாது எண்ணெய்கள், சுவையூட்டிகள்,
பதனப்பொருட்கள், வெள்ளை சீனி, சாக்கரின், அஜினோமோட்டோ ஆகிய பொருட்களும்
சேர்க்கப்படுகின்றன. இவை மைதாவை மேலும் அபாயகரமானதாக மாற்றுகின்றன. இவை
தவிர குளோரின் டை-ஆக்சைடு, பொட்டாசியம் புரோமைட், அம்மோனியம் கார்பனேட்,
சுண்ணாம்பு, சார்பிடன் மோனோ சாச்சுரேட் போன்றவைகளும் கலக்கப்படுகின்றன.
கோதுமை தீட்டப்படும் போதே 76 விழுக்காடு வைட்டமின்களும், தாது பொருட்களும்
அகற்றப்படுகின்றன. அத்துடன் 97விழுக்காடு நார்ச்சத்தும் களையப்படுகிறது.
களையப்பட்ட சத்துகளை மீண்டும் சேர்க்க செயற்கையாக உருவாக்கப்படும்
வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் கூட்டப்படுகின்றன. ஆனால் இவை இயற்கையாக
கிடைப்பவற்றுக்கு இணையானவை அல்ல.
----------------------------------------------------------------------------------------
சரி இப்போ நம்ம சந்தேகத்துக்கு வருவோம். [இதை தீர்த்துட்டா ஆயிரம் பொற்காசு தருவியான்னு கேட்டுடாதீங்க, ஆயிரம் பைசா வேணா தாரேன்!!]. மேலே உள்ள வரிகளில் இருந்து சில [விஜயகாந்த் மாதிரி] சில புள்ளி விவரம்!!
முதலில் கோதுமை அரைக்கப் படுகிறது- அரைக்க செலவு ஆகும்.
அதுக்கப்புறம் அதில் பென்சாயில் பெராக்சைடு கலக்கிறாங்க என்றால், அந்த கெமிக்கலை எவன் சும்மா தருவான், அதுக்கும் பணம் செலவாகும்.
மைதாவை மிருதுவாக மாற்றுவதற்கு அல்லோக்சான் எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது.- ஹி ....... ஹி ....... ஹி ....... உங்களுக்கே புரிஞ்சிருக்கும், அல்லோக்சான் நம்ம மாமனோ மச்சானோ ஃபேக்டரியில் தயார் பண்ணமாட்டன், அதை வாங்கித்தான் பயன்படுத்தணும். அதுக்கும் காசு செலவாகும்.
அது மட்டுமா,
செயற்கை வண்ணங்கள்,
தாது எண்ணெய்கள்,
சுவையூட்டிகள்,
பதனப்பொருட்கள்,
வெள்ளை சீனி,
சாக்கரின்,
அஜினோமோட்டோ
என மேலும் அரை டஜன் அயிட்டங்கள் சேர்க்கிறாங்கலாம். எம்புட்டு செலவாகுமோ!!
இத்தனையும் படித்த பின்னர் மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டும் எழுந்தது. கீழே உள்ள படத்தை பாருங்க.