Monday, April 8, 2013

IPL: [நம்மை] இளிச்சவா பசங்களாக்கும் லீக்.

அன்புள்ள மக்கள்ஸ்!!

ஏதோ ஒரு படத்தில் ஒரு வில்லன் சொல்லுவான், "கிரிக்கெட் ஆட்டத்தில் ஜெயிப்பவன், தோற்ப்பவன் ரெண்டு பேரையுமே எனக்குப் பிடிக்கும், ஆனா உட்கார்ந்துகிட்டு பார்க்கிறானே, அவனை மட்டும் எனக்கு பிடிக்கவே பிடிக்காது, ஏன்னா அவன் அத்தனை பேரும் சோம்பேறிங்க".

நாம் இப்போதெல்லாம் கிரிக்கெட் மேட்சுகளைப் பார்த்து நேரத்தை வீணடிப்பதில்லை.  ஆனாலும் கிரிக்கெட் என்றால் ஏதோ ஒரு ஈர்ப்பு மனதுக்குள் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஈர்ப்பு இந்தியா முழுவதும் மட்டுமல்லாது அண்டை நாடுகளான இலங்கை பங்களாதேஷ் பாகிஸ்தானில் உள்ளோரிடமும் புரையோடிப் போய்க் கிடைக்கிறது. ஆனால், ஜப்பான், சீனா, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில்  இதற்க்கு எந்த முக்கியத் துவமும் கொடுப்பதில்லை.  இந்த மாதிரி மக்கள் மனங்களில் குறிப்பிட்ட விஷயத்தின் மேல் நாட்டம் ஏற்ப்படுவது ஏன், அது இடத்துக்கு இடம் மாறுவது ஏன் என்று காரணம் கண்டுபிடிப்பது ரொம்பக் கஷ்டம், அதனால் அதை விட்டு விடுவோம்!!

வெள்ளைக்காரன் இங்கிலாந்தில் வருஷத்தில் இரண்டு மாதம் மட்டுமே வெயிலைப் பார்ப்பான் மற்ற மாதங்களில் வெறும் பனி பனி பனி........ தான்.  சூரியனைப் பார்த்து  நமஸ்காரமெல்லாம் பண்ணவே முடியாது.  அவங்களுக்கு சூரியன் தெரியும் போதெல்லாம்  சும்மனே வெயிலில் படுத்திருந்தாலே போதும் அதுவே சொர்க்கம் என்ற நிலை.  நாள் பூராவும் சும்மா இருக்க முடியுமா?  எதாச்சும் எங்கேஜ்மென்ட் வேணுமில்லையா!! அந்த சீதோஷ்ண நிலைக்கு அவன் கண்டுபுடிச்ச விளையாட்டு இந்த கிரிக்கெட்.  ஆனால் நம்மூரில் அப்படியா?  பகலில் வெளியில போனா மனுஷன் செத்தான் என்ற நாட்டில் நாள் முழுவதும் வெயிலில் நின்று ஆடும் ஆட்டம் சரிப்பட்டு வருமா?  வராது.  அதனால் 11 பேர் ஆடுறான், மிச்ச பேரெல்லாம் உட்கார்ந்துகிட்டு வேடிக்க தான் பார்க்கிறான், பந்து அப்படி போச்சு இப்படி போச்சு, வளைஞ்சு போச்சு, நெளிஞ்சு போச்சுன்னு ............. விவாதிச்சுகிட்டு இருக்கான்.  எனக்கு இப்போ மேலே வில்லன் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது!!

இந்தியாவில் கபில் தேவ் .......... கபில் தேவ் .......... அப்படின்னு ஒரு நல்ல மனுஷன்.  அவர் காலத்துல நிஜமாவே நாட்டுக்காக கிரிக்கெட் ஆடிகிட்டு இருந்தாங்க  1983 -ல் உலகக் கோப்பையை ஜெயிச்சாங்க. அதன் பின்னர் தான் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் விஷம் போல மக்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தது.  காதில் டிரான்சிஸ்டர் வைத்துக் கொண்டு   எந்நேரமும் நேரடி வர்ணனை கேட்டவர்கள் பின்னர் சேட்டிலைட் சேனல்களின் வருகையால், நேரடியாக பார்க்க ஆரம்பித்தனர்.  ஆனால் அந்த சமயத்தில் கபில்தேவ் & Co ரிட்டயர்ட் ஆகிப் போனது.  அவர்களில் பலருக்கும் ஒரு வீடோ அல்லது நிரந்தர வருமானமோ கூட இல்லாத நிலை.  ஆனாலும் அவர்கள் 1983 உலகக் கோப்பையில் ஈட்டிய வெற்றியின் பலனை அவர்களுக்குப் பின்னர் வந்தவர்கள் ருசி பார்க்க ஆரம்பித்து இன்றைக்கும் ஜெகஜோதியாகப் போய்க் கொண்டிருக்கிறது.

கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சில நூறு கோடிகளை  தங்கள் வாழ்நாளில் தேற்ற முடிகிறது,  கிரிக்கெட் வாரியம் சில ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக உள்ளது   ஆனாலும் இதற்க்கு விதை போட்டவர்கள் வறுமையிலேயே இருந்தனர், இதைப் பார்த்த கபில் தேவ் ICL என்ற அமைப்பை ஏற்ப்படுத்தி தன்னுடைய சகாக்களுக்கு உதவ நினைத்தார்.  அந்த யோசனையை லவட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்  ICL என்பது ICC யால் அங்கீகரிக்கப் பட்டது அல்ல, பொறம்போக்கு என்ற பிம்பத்தை மக்கள் மனதில் ஏற்ப்படுத்தி ICL -க்கு ஆப்பு வைத்து விட்டு, தானே IPL-ஐ உருவாக்கியது.  இதில் உண்மை என்னவென்றால் ICC என்பதே உலக அளவில் எந்த விளையாட்டு அமைப்பாலும் ஏற்கப் படாத ஒரு பொறம்போக்கு, அதில் BCCI என்பது இந்திய அளவில் ஒரு பொறம்போக்கு என்பதே!!  ஆனாலும் நம்மாளுங்க  11 கிரிக்கெட் ஆட்டக்காரனும் இராணுவ வீர்கள் மாதிரியும் அவங்க கையில் இருப்பது துப்பாக்கி என்றும் இது ஏதோ நம்ம நாட்டை பாகிஸ்தானிடம் இருந்து காப்பாற்ற ஏற்படுத்தப் பட்ட அமைப்பு என்றும் சந்திரமுகி ஜோதிகா மாதிரி கற்பனை செய்து வாழ ஆரம்பித்து விட்டனர்.  பாகிஸ்தானுடன் ஏதாவது ஒரு மேட்சில் ஜெயித்தால் அது பாகிஸ்தானையே போரில் ஜெயித்த மாதிரியும், இந்திய மண்ணில் இந்தியர்களுக்கு சாதகமான சூழ்நிலையில் உலகக் கோப்பையை ஜெயித்தாலோ, அல்லது வெறும் 20-20 மேட்சில் உலகக் கோப்பையை ஜெயித்தாலோ இந்தியா "ON TOP OF THE WORLD" என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்து கற்பனையில் அற்ப சுகத்தை காண ஆரம்பித்து விட்டனர்.

 IPL வந்த பின்னர், அதன் அணிகளைப் பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.  அவற்றுக்கு பெயரைத் தேர்ந்தெடுத்தில் தான் குள்ளநரித் தனம் செய்துள்ளனர்.  உதாரணத்துக்கு சென்னை அணியில் எத்தனை பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்?  ரெண்டோ மூனோதான்.  பாக்கி எல்லாம் வேற மாநிலம் அல்லது அவங்க நாட்டு அணிக்கு லாயக்கில்லை என்று விரட்டியடிக்கப் பட்ட வெளிநாட்டு கிழட்டு பசங்க.  ஆனாலும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அப்படின்னு பேரை வச்சதாலேயே தமிழ்க்காரன் எல்லோரும் உசிரை கையில் பிடிச்சுகிட்டு மேட்சை பார்க்கிறான்.   இந்த மாதிரி ஒவ்வொரு பகுதிக்கும் வலிய திணிக்கப் பட்ட ஒரு அணி.  ஆட்டக்காரன் கண்ணை மட்டும் விட்டுவிட்டு மத்த எல்லா இடத்தலும் ஏதாவது ஒரு விளம்பரம், ஆடுகளத்திலும்,  மைதானத்தைச் சுற்றியுள்ள பவுண்டரி ஒரு இடம் பாக்கி இல்லை.  இதில் எந்நேரமும் சிக்சர் சிக்ஸரா பார்வையாளர்கள் மேல பந்து பறந்துகிட்டே இருக்கணும்.  [அதுக்காக ரெண்டு ஸ்டம்பையும் சுத்தி ஒரு வட்டத்தைப் போட்டு அதுதான் பவுண்டரி என்று சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்க்கில்லை!!]. 

IPL  அணிகள் சிலவற்றின் ஒனர்களைப் பார்க்கணுமே......  அடேங்கப்பா கண்கொள்ளா காட்சிதான்.




நாட்டு நலனுக்காக தங்கள் உடல் பொருள் ஆவி எல்லாத்தையும் இழக்க தயாரா இருக்கிறவங்க தான் IPL அணிகளின் ஓனர்கள் என்பதை இப்போ புரிஞ்சிகிட்டு இருப்பீங்க அப்படின்னு நினைக்கிறேன்!!

 நாட்டுக்கே உழைச்சு ஓடா தேஞ்சுபோன பலர் இப்போ IPL அணிகளை எடுத்து மேலும் தேய காத்திருக்காங்க என்பது மேலே உள்ள படங்களைப் பார்த்தாலே தெரியுமே!!

வெள்ளைக்காரன் கிரிக்கெட் ஆடுறான், ஆனாலும் வெயில் சீசன் ரெண்டு மாசத்துல ஆடிட்டு அப்புறம் அதை மூட்டை கட்டி வச்சிட்டு வேற வேலையைப் பார்க்கப் போயிடறான்.   ஆனா நம்மாலும் அப்படியில்ல.  முன்பெல்லாம் ஒரு நாள் மேட்ச், ஐந்து நாள் மேட்ச் என அவ்வப்போதும் வரும், சில மாதங்களுக்கு ஒன்னும் இருக்காது.  அதை அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சு பார்த்தான்.  நம்மாளு அசரவில்லை எல்லாத்தையும் பார்க்க ஆரம்பிச்சான்.  APL, BPL, CPL........... இப்படியே போயி இன்னைக்கு IPL வரைக்கும் வந்திட்டானுங்க ZPL வரைக்குமே பார்க்க ரெடியா இருக்கானுங்க.  இந்திய அணியினர் நூறு மேட்ச்சில் பல்லு பகுடு உடைஞ்சாலும் சரி அடுத்த ஒரு மேட்சை பங்களாதேஷ் மாதிரி ஒருத்தன் கிட்ட ஜெயிச்சா போதும் உடனே நம்மாலு உச்சி முகந்து ஏத்துக்கறான்.  நீ போற இடத்தில் கில்மாவோட சுத்துனியா, சூதாட்டத்துல நாட்டை காட்டிக் குடுத்தியா...... ம்ஹும்   ........ நம்மாலு அசர்ர மாதிரியே தெரியலை.  அடுத்த ஏதோ  ஒரு PL வந்தா போதும், TV முன்னாடி உட்கார்ந்திடறான், கூட்டம் போட்டு விவாதிக்கிறான்.  இப்படி ஒரு இளிச்சவா கும்பல் உலகத்துல வேறெங்கேயும் கிடைக்காதுன்னு மற்ற நாட்டு அணியினர் எல்லா பயல்களும் இங்க வந்து கல்லா கட்ட ஆரம்பிச்சிட்டானுங்க.  சிலர் அவங்க சொந்த அணியில் இருந்து சீக்கிரமே ரிடையர் ஆகி IPL ஆட வந்திடறாங்க. வாழ்நாள் முழுவதும்  சொந்த நாட்டுக்கு ஆடியும் கிடைக்காத பணம், இங்க ஒரே சீசனில் கிடைக்குதே வேறென்ன வேணும்?!  நியாம்தான் தானே.

இவரு நல்லா ஆடுவாரு....[கிரிகெட்டை சொன்னேங்க!!]

இவங்களுக்கு கிரிக்கெட் அப்படின்னா உசிரு.........

அதுசரி இத்தனை ஆயிரம் கோடிகள் பணம் எங்கேயிருந்து வருகிறது?  வேற எங்கே, தொலைக் காட்சி விளம்பரங்களில் இருந்து தான்.  விளம்பரக்க்காரன் எப்போ பணம் கொடுப்பான்?  ஒரு நிகழ்ச்சி அதிகம் பேரால் பார்க்கப் பட்டால் மட்டும் தான் கொடுப்பான்.  உதாரணத்துக்கு பல தமிழ் தொலைக் காட்சி சீரியல்கள், நிகழ்சிகள் சில காலம் ஓடுகின்றன பின்னர் தூக்கப் படுகின்றன.  அதற்க்கு ஒரே காரணம் அவை மக்களால் பார்க்கப் படுகிறதா இல்லையா என்பது மட்டுமே.  மக்கள் பார்க்கா விட்டால் ஸ்பான்சர்ஷிப்  கிடைக்காது அந்நிகழ்ச்சி தூக்கப் படும்.  இங்கும் அதே கதை தான்.  நாம் இளிச்சவா பயல்கள் இவனுங்க நடத்தும் குதிரை ரேசை உட்கார்ந்து பார்க்கிறோம், அதனால் அவனுங்களுக்கு விளம்பரதாரர்களிடம் இருந்து ஆயிரம் கோடிகளில் பணம் கொட்டுகிறது.  அதில் ரேஸ் குதிரைகளுக்கு சில கோடிகளை வீசி எறிந்துவிட்டு மிச்சத்தை போர்டுக்காரன் லவட்டுகிறான்.  விளம்பரக்காரன் சும்மா குடுப்பானா?  அந்த விளம்பரம் மூலம், அவனுடைய குப்பை PRODUCT நம் தலையில் கட்டப் படும்.  நான் அப்படி எதுவும் வாங்கவேயில்லையே என நீங்கள் நினைக்கலாம் ஆனால் இன்னைக்கு நீங்க வாங்கும் ஒவ்வொன்னும் இந்த மாதிரி விளம்பரங்கள் மூலமே உங்களை வந்தடைந்தன, மேலும் அவற்றில் பல தேவையே இல்லாதவை என்பதையும்  மறக்க வேண்டாம்.  அந்தப் பணம் மற்ற விளையாட்டு மேம்பாட்டுக்கோ, மக்கள் நலத் திட்டங்களுக்கோ செலவிடப் படுகிறதா?   ஹி .............ஹி .............ஹி ..........  எனக்குத் தெரிஞ்சு இல்லீங்க.  இன்னைக்கும் இந்த குதிரை ரேசை பார்ப்பதை நிறுத்திவிட்டு நம் வேலையைப் பார்க்கப் போய் விட்டால் APL ........ லில் இருந்து ZPL வரிக்கும் எல்லா பயல்களும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு அவனவன் நாட்டுக்கு ஓடுவான், எந்த கிரிக்கெட் மேட்சும் TV இல வராது. ஊருக்கு ஊர் கில்மாவோட சுத்தும் கிரிக்கெட் ஆட்டக்காரனுங்க கோடியில் புரள முடியாது.  நம்ம ஹாக்கி வீரர்கள் மாதிரியே உலகக் கோப்பையை வென்றாலும் ரெண்டு மூணு லட்சங்களை மட்டுமே பெற முடியும்.

ஒரு நாள் நான் கடவுளை நினைச்சுகிட்டு இருந்தேன், வானத்தில இருந்து ஒரு ஒளி இறங்கி வந்து என் வயித்துக்குள்ள நுழைஞ்சது.  அப்படியே நான் கற்ப்பமாயிட்டேன்.  [டேய்....   ஜீசஸ் பொறந்தப்போ வானத்துல அதிசயம் தோன்றுச்சாம் அப்படி இப்போ எதாச்சும் தெரியாதுன்னு பாருடா......]





8 comments:

  1. கிரிக்கெட் விளையாட்டைக் கண்டுபிடித்தது அமெரிக்கனே...! இங்கிருந்து தான் கிரிக்கெட் இங்கிலாந்து சென்றது

    ReplyDelete
  2. நம்பள்கி,

    நம்மாளுங்க விளையாடும் கில்லி தாண்டல் விளையாட்டைத் தான் வெள்ளைக்காரன் கிரிக்கெட் அப்படின்னு மாத்திட்டதா பேச்சு அடிபடுதே !!

    ReplyDelete
  3. கில்லி தண்டுல நான் எக்ஸ்பெர்ட்? கிட்பிடி யில் கெட்டி.
    உண்மையில் கிரிக்கெட் கண்டுபடிதது நியூ யார்க்கில் தான்...

    ReplyDelete
  4. @ நம்பள்கி

    நீங்க காமடி கீமடி எதுவும் பண்ணலியே!!

    \\உண்மையில் கிரிக்கெட் கண்டுபடிதது நியூ யார்க்கில் தான்...\\
    நிஜம் என்றால் விரிவாக சொல்லுங்களேன்!!

    ReplyDelete
  5. வணக்கம் மாப்ளே நலமா?
    கேள்விகளுக்கு பதில் சொல்லத்தானே நாம இருக்கோம் ஹி ஹி
    1./ஏதோ ஒரு படத்தில் ஒரு வில்லன் சொல்லுவான், "கிரிக்கெட் ஆட்டத்தில் ஜெயிப்பவன், தோற்ப்பவன் ரெண்டு பேரையுமே எனக்குப் பிடிக்கும், ஆனா உட்கார்ந்துகிட்டு பார்க்கிறானே, அவனை மட்டும் எனக்கு பிடிக்கவே பிடிக்காது, ஏன்னா அவன் அத்தனை பேரும் சோம்பேறிங்க".//
    படம் வெற்றி விழா
    கமல்ஹாசன்,பிரபு பொ.ஆ 1989

    உங்களுக்காக அந்த திரைத் துளி.

    http://youtu.be/-_-WWeGit3o

    ஹி ஹி நமக்கும் பதிவு,எதிர் பதிவு போடனும்,இல்லை பின்னூட்டம் போடனும்,விவாதம் செய்யனும்!! இரண்டும் செய்யாமல் பதிவைப் படித்து நழுவினால் பிடிக்காது !! இது எப்பூடி????

    அதனால் உம்மையும் பிடிக்கும்!!!
    ***

    2.இத்துப் போன ஐ.பி.எல் போட்டிகள் கருப்பு பணத்தை ,வெள்ளையாக மாற்றும் மந்திர தந்திரம் ஆகும். சூ மந்திரக் காளி!!!

    **
    3.விஜய் மல்லையா,அம்பானி,இராஜபக்சே ஐபில் ம் போவார், திருப்பதியும் போவார், இரண்டு இடத்திலும் மாலை மரியாதை கிட்டும். எல்லாம் குபேரன் அருள் வேணும்!!!திருப்பதி சாமிக்கு குபேரன் கிட்டே வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியே மாளவில்லை. இவர்களின் தயவு இருந்தால்தான் சாமி பிழைக்கும் இல்லையேல் மஞ்சக் கடுதாசி கொடுக்க வேண்டும்!!
    **
    4.மாப்ளே நீங்க மத புத்த்கம் சார் வரலாறு தெரியனும் .கடவுள் அருளால் பிறந்த [கன்னி] மைந்தர்கள் பலர் உண்டு. உமக்கு தெரிந்தவர் இயேசு மட்டும்தானா??புத்தரில் இருந்து,பஞ்ச்[punch!!] பாண்டவர் ல் இருந்து கிரேக்க புராண ஹெர்குலஸ்[ ஹி ஹி அலெக் சாண்டரையும் சொல்ராங்க!!]
    பல் நாடுகளில்,பல மதங்களில் பலரையும் சொல்ராங்க!! இந்தாரும் சுட்டி!!
    http://en.wikipedia.org/wiki/Miraculous_births

    அடிக்கடி பதிவு போடும், போரடிக்குது!!

    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. மாமு, அந்தப் படம் எந்த வருஷம் வந்ததோ, சரியா ஞாபகம் வச்சு யூ-டியூப் லிங்கும் டக்குன்னு கண்டுபிச்ச உங்களுக்கு கம்பியூட்டர் மூளைதான்!!

      Delete
  6. நான்கு வருடம் ஆடுவதற்கான பணம், ஒரு IPL ஆடினால் கிடைத்து விடுவதாக தகவல்...

    1 டே மேட்ச் - 50 ஓவர் இருக்கும் போது (World cup) சுவாரஸ்யம்...

    பிறகு 20 : 20, இப்போது IPL - பலருக்கும் ஆர்வம் குறைந்து விட்டது என்பது உண்மை...

    ஆமாம்... இதை எல்லாம் பார்ப்பதற்கு நேரம் இருக்கா என்னா...? அதுவும் 14 மணி நேர மின்வெட்டு இருக்கும் போது...???

    அன்றைய டெஸ்ட் மேட்ச் போல் வராது...

    ReplyDelete
    Replies
    1. மின்சாரம் இருந்து மேட்ச் நடந்தால் பார்க்கத் தவறுவதில்லை தனபாலன் சார்!!

      Delete