Sunday, April 28, 2013

ஹார்ட் அட்டாக்: எப்ப வரும், எப்படி வரும்னு தெரியாது...........

வணக்கம் மக்கள்ஸ்!!

எங்கள் ஊரில் ஒரு பையன், வயது முப்பதுக்குள்தான் இருக்கும்.  திருமணமாகி ஒரு கைக்குழந்தை இருக்கிறது.  ஒருநாள் திடீரென மாரடைப்பு, அகால மரணம்.  இவனுக்கு மாரடைப்பு வருவதற்கு காரணம் இருக்கிறது.  எங்கள் ஊரில் வாரம் இரு முறை ஆடு கசாப்பு போடுவார்கள், புதன், ஞாயிறு.  இரண்டுநாளும் இவன் வாங்குவான், இவன் மட்டுமே அரைக்கிலோ உள்ளே தள்ளுவான்.  அது மட்டுமல்ல கோழியும் அவ்வப்போது முழுதாகத் தள்ளுவான்.  ஆனால், உடல் உழைப்பு அவ்வளவாகக் கிடையாது, துணிக்கடையில் உட்கார்ந்தபடியே கஷ்டமர்களுக்கு துணியை கட் பண்ணி விற்பது தான் இவரது வேலை.  சின்ன வயசில் செத்துட்டனே என்ற வருத்தம் இருந்தாலும் இவ்வளவு சின்ன வயதில் இவனுக்கு ஏன் மாரடைப்பு வந்தது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆக தவறான உணவுப் பழக்கம், தேவைக்கு மீறி கொழுப்பு வகைகளை உண்ணுதல் போதிய உடலுழைப்பு இல்லாமை -இவைதான் மாரடைப்பு இளவயதில் வருவதற்கான காரணம் என்று நானும் வெகு நாட்களாக நம்பியிருந்தேன்.  ஆனால் இந்த நினைப்பைத் தவறு என்று உணர்த்துகின்ற வகையில் சமீபத்திய சில நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.

சில வாரங்களுக்கு முன்னர் செய்தித் தாள்களில் படித்த ஒரு செய்தி வியப்பாக இருந்தது. 45 வயதை நெருங்கும் யோகா சொல்லித் தரும் மாஸ்டர் ஒருவருக்கு மாரடைப்பு.  இவர் யோகா கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாது தானும் தீவிரமாக பயிற்சி செய்பவர், அசைவம் உண்ணுவதில்லை, வெஜிடேரியன் உணவை பிராச்சாரமும் செய்பவர்.  இப்படிப் பட்ட ஒருத்தருக்கு மாரடைப்பா....??  இது எதைக் கொண்டும் புரிந்துகொள்ள முடியாத விந்தையாகப் பட்டது.

இந்த குழப்பத்தில் இருந்து மீழும் முன்னர் இதே மாதிரி ஒரு சம்பவம் ஓரிரு தினங்களுக்கு முன்னர் எங்கள் அலுவலக முன்னால் ஊழியர் ஒருவருக்கும் நடந்திருக்கிறது.  வயது முப்பதை நெருங்குகிறார்.  தனியார் மென்பொருள் நிறுவனத்தில்  நல்ல வருமானம், சுத்த சைவம், ஜிம் அது இதுன்னு போய் உடலை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கக் கூடிய பையன், திருமணத்திற்குப் பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள், சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது.  இது எதனால் நடந்திருக்கக் கூடும் என்று எங்களால் இன்னமும் யூகிக்கவே முடியவில்லை.

புவனேஷ்- எங்கள் அலுவலக முன்னாள் ஊழியர், சில தினங்களுக்கு முன்னர் அகால மரணமடைந்தார், காரணம் மாரடைப்பு.   இவரைப் பார்த்தால் மாரடைப்பு வந்து பொசுக்கென்று போயிடுவார் என்பது போலவா தெரிகிறது? 

எனவே, மென்பொருள் துறையில் வேலை பார்க்கும் கண்மணிகளே, ஹார்ட் அட்டாக் என்பது எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது, ஆனா வந்திட்டா ஒன்னும் பண்ண முடியாது.  நான் சைவம்தானே சாப்பிடறேன், நல்லா எக்சர்சைஸ் எல்லாம் பண்றேனே, எங்க வீட்டில் யாருக்கும் ஹார்ட் அட்டாக் வந்ததே இல்லையே..........  இதெல்லாம் மறந்திடுங்க. உங்கள் இதயம் நலமாக இருக்கிறதா என்பதை வருடத்திற்கு ஒரு முறை சோதனை செய்து கொள்வது நல்லது, உங்களில் 99.99% பேர் நலமுடன்தான் இருப்பீர்கள், இருப்பினும்  யாரவது ஒருத்தருக்கு பிரச்சினை இருந்தால் தவிர்க்கக் கூடிய நிலையிலேயே அதை சரி செய்து கொள்வது நல்லது.

மீண்டும் சந்திப்போம் வணக்கம் மக்கள்ஸ்!!

19 comments:

  1. ஜெயதேவ்,

    …என்னுடைய அம்மாவும் ஹார்ட் அட்டாக் வந்து இறந்தாங்க. அப்ப அவங்களுக்கு ஐம்பது வயது. அதுவும் திடீர்னு தான் நடந்தது.

    ReplyDelete
    Replies
    1. Oh.......... Sorry Pisasu........ My mother also passed away, but for different reason.

      Delete
  2. பல உதைபந்தாட்ட வீரர்கள் விளையாடும் போதே மாரடைப்பால் மரணமாகும் போதும், இவர்கள் அனைவரும் நாளாந்தம் மணிக்கணக்கில் பயிற்சி செய்கிறார்களே, வைத்தியரை உடன் வைத்து அவர்கள் ஆலோசனைப்படியே எதையுமே செய்கிறார்கள்! அப்படி இருந்தும் இந்த மாரடைப்பு எங்கே இருந்து எப்படி தாக்குகிறது, இதை என்னென்பது என புரியாது முழிப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. @ யோகன் பாரிஸ்(Johan-Paris)

      Long time........ no see........ what happened Johan?!! Thanks for coming, please visit often.

      Delete
  3. we also need good amoint of sleep. Lack of sleep is one of the causes.

    ReplyDelete
  4. வருத்தம்... இவருக்கா மாரடைப்பு... நம்பவே முடியவில்லை..

    ReplyDelete
  5. Well, there is something called CPR, which anybody around can do and bring back the heart to function again.. the earlier is better..

    http://en.wikipedia.org/wiki/Cardiopulmonary_resuscitation

    If you are surrounded by idiots, you die and meet the GOD sooner.

    ReplyDelete
  6. 40 வயதில் மாரடைப்பு வருவது இப்போதெல்லாம் சகஜாமாகிவிட்டது. எங்கள் தூரத்து உறவினர் ஒருவருக்குக் கூட எதிர்பாராமல் இப்படி நடந்து விட்டது. நீங்கள் சொல்வது போல் ஆண்டுகொரு முறையாவது பரிசோதனை செய்துகொள்வது நல்லது. புகை பிடிப்பவர்களுக்க் கேன்சர் வர வாய்ப்பு அதிகம் உண்டு என்று சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை. எச்சரிக்கையுடன் நடந்து கொள்வதி சிறந்தது.

    ReplyDelete
  7. ஆரோக்கிய தகவல்.
    //ஜிம் அது இதுன்னு போய் உடலை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கக் கூடிய பையன் ...சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்து விட்டார்//
    இதனால தான் நானும் எக்சர்சைஸ் எல்லாம் செய்வதில்லை.

    ReplyDelete
  8. @ வேகநரி

    ஆஹா, அருமையான யோசனை, அப்படியே இந்தப் பதிவும் பார்த்திடுங்க, உங்களுக்குன்னே போட்டது!!

    http://feedproxy.google.com/~r/blogspot/fLcHx/~3/0Asa-rF_z0A/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன். நல்ல சுவரசியமா இருந்தது :)

      Delete
  9. நம்பதான் முடியவில்லை எப்படி வரும் எப்பவரும் என்ற முன்னறிவு இல் லையென்றால் என்ன செய்வான் மனிதன்

    ReplyDelete
  10. நீங்கள் சொல்வதும் உண்மைதான் நண்பரே.

    ReplyDelete
  11. Heart disease- உண்மை

    Many healthcare professionals often assume that growing affluence leads to a richer diet, which increase cardiovascular disease. However, that it is not just diet but also the Western lifestyle of stress and corporate culture that can have as big an impact as poor eating at breakfast, lunch and dinner. The overall balance of mind and body offers some of the best medicine for cardio­vascular health around the world

    Scientists have a far better understanding of the causes of heart disease, and death rates have plummeted. “There has been nothing short of a cardiac revolution,” says Michael Lauer, director of the division of cardiovascu­lar sciences at the National Heart, Lung, and Blood Institute. “It’s one of the great triumphs of modern medical science.” But the precise manner in which our hearts can betray us has not yet been fully revealed


    Despite the growing list of powerful phar­maceuticals to treat high blood pressure and cholesterol problems, and the ubiquitous adverts proclaiming their success, the most effective treatment might not be found in a pill, but in a pair of running shoes and a salad

    Political initiatives have had a major impact on public health: creating smoke-free environments; lowering salt content in processed food and eliminating trans-fatty acids in food products; lowering the price of fruit and vegetables; and promot­ing childhood sports at schools, the workplace and during leisure time. Healthcare professionals, the scientific community at large and poli­cymakers should combine their efforts and take up the challenge of preventing premature deaths in cardiovascular disease.

    ReplyDelete
  12. மனிதன் எவ்வளவு முன்னேறினாலும் மரணம் அவனை முந்தி செல்கிறது

    ReplyDelete
  13. ஹாஸ்பிடல் பில்லைப் பார்த்தாலும் ஹார்ட் அட்டாக் வரும்...!

    ReplyDelete
  14. நம்மால் முடிந்த உடல்பயிற்சி...அளவுக்கு மிஞ்சாத உணவுப்பழக்கம் ...STRESS இல்லாத வாழ்க்கை...நல்ல தூக்கம்...நல்ல பழக்கவழக்கங்கள்.... ஆண்டுக்கொரு முறை பரிசோதனை ...இவை தான் நம் கையில்...

    ReplyDelete
  15. மனதிற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. என் மாமனார் ஆறு மாதங்களுக்கு முன் தான் ஹார்ட்- அட்டாக்கில் மறைந்து விட்டார். எங்களால் இன்னமும் நம்ப முடியாமல் வருத்திக்கொண்டிருக்கிறது. என் மாமனாருக்கு பி.பி, சுகர் என்று எதுவும் கிடையாது. எடை அதிகமானவரும் கிடையாது. சைவ குடும்பம்தான். இளைஞர் போல் சுறு சுறுப்பாக ஓடிகொண்டிருந்த என் மாமனாருக்கு வந்ததை அவராலேயே நம்ப முடியவில்லை. எதுவும் ஆகாது என்று கடைசி வரை தைரியமாக இருந்தார்.. மருத்துவமனையில் லட்சக்கணக்கில் செலவழித்து 10 நாட்கள் போராட்டத்திற்கு பிறது மறைந்து விட்டார். தைரியமும் தன்னம்பிக்கையும் நிறைந்த அந்த மனிதர் எப்படி இல்லாமல் போய்விட்டார் இன்று வரை புதிராக இருக்கிறது.

    //நம்மால் முடிந்த உடல்பயிற்சி...அளவுக்கு மிஞ்சாத உணவுப்பழக்கம் ...STRESS இல்லாத வாழ்க்கை...நல்ல தூக்கம்...நல்ல பழக்கவழக்கங்கள்.... ஆண்டுக்கொரு முறை பரிசோதனை ...இவை தான் நம் கையில்...//
    - ரெ வெரி சொல்லியிருப்பது சரிதான்.

    ReplyDelete