Monday, April 22, 2013

"என்னை திருமணம் செய்துகொள் என்று கட்டயபடுத்தவில்லை... அவள் ரொம்ப நல்லவ.........."

வணக்கம் மக்கள்ஸ்!!

நாமெல்லாம் கம்பியூட்டர், ஐ-பாட், டச் ஸ்கிரீன் செல்போன் அப்படின்னு மாடர்ன் ஆகிகிட்டோ வரோம், அந்த முன்னேற்றம் எல்ல விதத்திலும் பிரதிபலிக்கணும் இல்லையா?  குறிப்பா, இந்த கல்யாணம் பண்ணிக்கிறது, புள்ளைகுட்டி பெத்துகிறது இருக்கு இல்ல, அந்த மேட்டரில் முக்கியமா முன்னேற்றம் தேவை.  என்ன முன்னேற்றம் அது?  கல்யாணமே பண்ணிக்காம ஒரே வீட்டில் இருந்துகிட்டு கல்யாணம் பண்ணியவங்க செய்யும் அத்தனையும் செய்வது.  அதுதான் அந்த முன்னேற்றம்.  அய்யய்யோ.......  அது இடுப்பில் இலை கொடிகளை சுற்றிக் கொண்டு, சிக்கி முக்கி கல்லை ஒன்றோடு ஒன்று அடித்து நெருப்பு பற்ற வச்சுகிட்டு இருந்தவங்க செய்த வேலையாச்சே?  திரும்பவுமா?  ஆமாம். அதுதான் இப்போ ஃ பேஷன், சீக்கிரம் நாடே ஜொலிக்கப் போவுது.

தமிழ் சினிமாவுக்கு ஐம்பது வருஷமா கலைச்சேவை பண்ணி, ஆஸ்கார் வாங்காம ஓயாமாட்டேன்னு சொல்லி, அது செத்தாலும் வேலைக்காகாதுன்னு தெரிஞ்சதும், வெள்ளைக்கார பயலுவ நம்மூருக்கு வந்து அவார்டு வாங்கிட்டு போயி அவங்க நாட்டில் பெருமையா சொல்லிக்கிற மாதிரி செய்யப் போறேன் அப்படின்னு பிளேட்டை திருப்பி போட்டு சொல்லிக்கிட்டு திரியும் ஒருத்தர் தான் இதற்க்கு முன்னோடி.  அவரோட சொந்த வாழ்க்கையை ரொம்ப கிளற வேண்டாம், நறுமணம் கம...கம.......... என்று வரும்.  அவரு சமீபத்தில விட்ட ஒரு ஸ்டேட்மன்ட் ரொம்ப டச்சிங்கா இருக்கும்.  அது:

"இப்போ என் கூட இருக்காளே, அவ என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு ஒரு போதும் சொன்னதேயில்லை.  அதனால, அவ ரொம்ப நல்லவ!!"

திருமணம் என்ற வார்த்தையையே அருவருக்கத் தக்கது என்ற வகையில் இவர் மாற்றி வைத்திருக்கிறார் அத்தோடு நில்லாமல் அதைத் தொடர்ந்து பிரசாரமும் செய்துவருகிறார்.  எனக்கு ஒரு விஷயம் மட்டும் இன்னமும் விளங்கவேயில்லை.   ஒரு பெண்ணுடன் முறைப்படி திருமணம் செய்து வாழ்வதற்கும், லிவிங் டுகதர் செய்வதற்கும்  என்ன தான் வேறுபாடு?  "ஒரு பெண்ணோடு இணைந்து வாழ்தல் பிரச்சினை, அதை நான் தவிர்க்க விரும்புகிறேன்" என்றால் அது தனி விஷயம்.  ஆனால் நடப்பது அதுவும் இல்லை.  ஒரு பெண் மனைவி என்ற முறையில் ஆற்றும் சேவைகள் அத்தனையும் எனக்குத் தேவை, ஆனால் அதே சமயம் அவளைத் திருமணம் செய்து கொள்ளவும் முடியாது.   ஹி ........ஹி .......ஹி ........  கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.........ரொம்ப நல்லாத்தான் இருக்கு!! 

பின்வரும் ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.  ஒரு பெண் உங்கள் வீட்டில் உங்களுடன் வசிக்கிறார், வீட்டில்  உங்கள் பிள்ளைகளை [அவர்கள் அவருக்கு பிறக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம்] கவனித்துக் கொள்கிறார் , சமையல் செய்கிறார், அப்புறம் இரவில் இத்யாதி விஷயங்களுக்கு ஒத்துழைப்பு தருகிறார்.  இதெல்லாம் செய்யும் அந்த பெண்ணுக்கு , நீங்க என்ன முறை ஆகிறது?   அதுக்கு பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனாலும் டெக்னிக்கலி பார்த்தால் அவர் உங்கள் மனைவியாகத்தான் செயல்படுகிறார்.  என்னுடன்  இன்னார்  மேற்க்கண்ட முறையில் வாழ்கிறார் என்பதை பிறருக்குத் தெரியப் படுத்துகிறோம் அல்லவா?  அதற்க்கு பெயர் தான் திருமணம்.  ஒரு வேலை அப்படித் தெரியப் படுத்தா விட்டால், அந்தப் பெண்ணை வேறு யார் வேண்டுமானாலும் வந்து திருமணம் செய்து கொள்ள கேட்கலாம் அல்லது இவர் செய்தது போல என்னுடனும் லிவிங் டுகதர் பண்ணு என்றும் கேட்கலாம்.  இந்த மாதிரியெல்லாம் நடக்கக் கூடாது என்பதற்க்காத்தான் முன்னோர்களாகப் பார்த்து திருமணம் என்று வரையறுத்திருக்கிறார்கள்.


அந்த பெண்ணை பொருத்தவரை திருமணம் செய்தாலும் செய்யாவிட்டாலும், அவருடைய செயல்பாடு ஒரு மனைவியாகத்தான் இருக்கிறது.  ஆனால் திருமணம் செய்யாவிட்டால், இருவருக்குமிடையே பிணக்கு ஏற்ப்பட்டு பிரிய நேரிடும்போது அந்தப் பெண் ஜீவனாம்சம் என்று எதையும் கேட்க முடியாது.  அப்படியே போக வேண்டியாதுதான்.  "என்னை திருமணம் செய்துகொள் என்று கட்டயபடுத்தவில்லை... அவள் ரொம்ப நல்லவ.........."  இதன் அர்த்தம்  "அவளை நான் எப்போது வேண்டுமானாலும் எளிதாக கலட்டி விட்டு விடலாம் ஆகையால் அவ ரொம்ப நல்லவ........" என்பதுதானோ?  என்ன இழவோ போங்க...... 

எது எப்படியோ, மக்களே லிவிங் டுகதர் ஒரு விஷம்.  இப்போ ஒன்னும் தெரியாது, ஆனால் பரவிவிட்டால் பேராபத்து.   எல்லாம் பண்ணிட்டு கடைசியாக நம்ம கலாச்சாரம்தான் இருப்பதிலேயே சிறந்தது என்று தெரியவரும்.  சூடு பட்டுத்தான் இதை தெரிந்து கொள்ளணும்னு அவசியமில்லை.  இது பணக்காரனுக்கு ஒத்து வரலாம் நம்மைப் போன்ற சாமான்ய மனிதனுக்கு அது ஒத்துவராது.  இந்த விஷம் பரவும் முன்னர் எண்ணத்தில் இருந்தே இதை நீக்கி விடுவது நலம்.

24 comments:

  1. பாகவதரே,

    எதுக்கு இப்புடி பழம்பஞ்சாங்கமா இருக்கீர், மனுசனுக்கு வாச்சிருக்கு அனுபவிக்கிறார், பல்லு இருக்கு பட்டாணி துண்ணுறார் விடும்.

    அவருக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்கு, அவங்களும் "நல்லவ" சர்டிபிகேட் வாங்கனும்னு ஆசைப்படுறாரானு தெரிஞ்சா ,ஹி...ஹி நான் சர்டிபிகேட் கொடுக்க டிரை செய்வேன் :-))

    ReplyDelete
    Replies
    1. \\எதுக்கு இப்புடி பழம்பஞ்சாங்கமா இருக்கீர், மனுசனுக்கு வாச்சிருக்கு அனுபவிக்கிறார், பல்லு இருக்கு பட்டாணி துண்ணுறார் விடும்.\\ அவர் துன்னட்டும், அதைப் பார்த்து நாம் ஏமாந்துவிடக் கூடாது.

      \\அவருக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்கு, அவங்களும் "நல்லவ" சர்டிபிகேட் வாங்கனும்னு ஆசைப்படுறாரானு தெரிஞ்சா ,ஹி...ஹி நான் சர்டிபிகேட் கொடுக்க டிரை செய்வேன் :-))\\ அவர்களை இழிவுபடுத்த வேண்டாமே.ப்ளீஸ்........

      Delete
    2. மன்னிக்கவும் வவ்வால், உங்கள் பின்னூட்டத்தில் பீஜே வாடை அதாவது நாத்தம் அடிக்குது. உம்மிடம் இதை எதிர்பார்க்கவில்லை :(

      Delete
  2. அப்புறம் இந்த கதை தெரியுமோ, சிரிகிருஸ்ணாவுக்கு பதினாறாயிரம் கோபியர் நேர்ந்து விடபட்டாங்களாம், எல்லார் கூடவும் ஜலக்கிரிடை,ஜலபுல ஜங்க் எல்லாம் உண்டு ஆனால் கண்ணாலம் இல்லை, எல்லாம் லவிங் டுகெதர் தான்.

    ஒரு வேலை லோகநாயகரு கிருஸ்ண பக்தரோ என்னமோ.

    ஹி...ஹி நீரும் அதான் கிருஸ்ணா கிருஸ்ணானு சொல்லிக்கிட்டு இருக்கிறோ?

    ReplyDelete
    Replies
    1. இறைவன் கோவர்த்தன மலையை இடதுகை சுண்டு விரலால் ஏழு நாட்கள் தூக்கி நிறுத்த முடியும் அவரை நம்மோடு ஒப்பிடுவது முறையல்ல.

      Delete
    2. ஜெயதேவ்,

      …என்ன டபுள் ட்ரிபுள் மீனிங்ல எல்லாம் பேசுரிங்க.

      Delete
    3. இந்திரனுக்கு செய்ய வேண்டிய பூஜையை ஸ்ரீ கிருஷ்ணர் நிறுத்தி, கோவர்த்தன கிரிக்கு பூஜை செய்யச் சொல்கிறார். இதனால் கோபமடைந்த இந்திரன் மிகக் கடுமையான மழையை 7 நாட்களுக்கு பெய்யுமாறு செய்கிறான். அவர்களுக்கு பாதுகாப்பாக பகவான் கோவர்த்தன மலையை குடையாக பிடித்து நிற்கிறார் இது பாகவதத்தில் வரும் வரலாறு. உண்மை.


      படம்:


      http://www.scsmathlondon.org/2009/10/27/sri-annukut-mahotsava-%E2%80%94-giriraj-govardhan-puja%E2%80%9419-oct-2009/

      Delete
    4. ஜெயதேவ்,

      …இக்கதை படித்துள்ளேன்.

      …நீர் சொன்னது பதில், இடது கை சுண்டுவிரலால் கோவர்தனகிரியைத் தூக்கியர், பதினாறாயிரம் பெண்களை .....முடியாதா? என்பது போல் இருந்தது.

      Delete
    5. "கடவுள் செய்வதெல்லாம் நானும் செய்வேன் என்றால் அவரைப் போல கோவர்த்தன மலையை சுண்டு விரலால் உம்மால் தூக்க முடியுமா?" என்று கேட்கும் அர்த்தத்தில் சொன்னேன்.

      Delete
  3. // இது பணக்காரனுக்கு ஒத்து வரலாம் நம்மைப் போன்ற சாமான்ய மனிதனுக்கு அது ஒத்துவராது. இந்த விஷம் பரவும் முன்னர் எண்ணத்தில் இருந்தே இதை நீக்கி விடுவது நலம். //

    நல்ல நோக்கம்!

    ReplyDelete
  4. மேலை நாடுகளே இப்போது நம் பாரம்பரியத்தை புரிந்து மாறி வரும் வேளையில் இது போன்ற செயல்கள் நமக்கு இழுக்கு! அழுக்கான இந்த விசயத்தை நீக்க முயல வேண்டும்! நன்றி!

    ReplyDelete
  5. பணத்திற்கும் இதற்கு சம்பந்தமில்லை... அலை பாயும் மனம்... இந்த விஷம் சில இடங்களின் பரம்பரையாகவும் தொடர்கிறது...! தவறு யார் மேல்...?

    ReplyDelete
  6. எப்பாடு பட்டாவது களைந்தெறிய வேண்டிய கலாசார சீர்கேடு.
    பயமுறுத்தும் இந்த கலாசார சீரழிவு எப்படியோ நம் நாட்டில் நுழைந்து கிளை பரப்பி வருகிறது.
    நல்ல விழிப்புணர்வு பதிவு.

    ReplyDelete
  7. ஜெயதேவ்,

    …கமலை எல்லாம் சீரியஸாக எடுத்துகிறீங்க. சினிமாவிலே அந்தாளு அடிக்கிற லூட்டி தாங்காது.

    …//கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை//

    …தமிழனோட பார்வையில் இது தான் லிவிங் டூகெதர்.

    ReplyDelete
    Replies
    1. @குட்டிபிசாசு

      டி.என்.முரளிதரன் சமீபத்தில் உலக்கை நாயகர் 50 லட்சம் ஜெயிச்சது பத்தி பதிவு போட்டிருந்தார், அதன் விளைவுதான் இது.

      Delete
  8. அமெரிக்கா போன்ற நாடுகளில் இது சகஜம் காரணம் இங்கே உள்ள மக்கள் மிக சுயநலம் மிக்கவர்கள் அது மட்டுமல்லாமல் அவர்கள் ஒருத்தரோடும் எளிதில் ஒத்துப் போகமாட்டார்கள் நமது மக்களைபோல விட்டுகொடுத்து வாழும் பழக்கம் இல்லாதவர்கள் அதனால்தான் கல்யாணம் ஆகி பிடிக்கவில்லையென்றால் அதற்கு பெரும் விலை கொடுக்கவேண்டும் என்றுதான் இப்படி வாழ்கிறார்கள்.

    நமது கலாச்சாரத்தில் இது ஒரு விஷம்தான்... இது பாலில் கலந்த ஒரு துளி விஷம்தான். அந்த பாலை அருந்த வேண்டுமா இல்லையா என்பதை அருந்த நினைப்பவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்.

    அப்படிபட்ட விஷம் நம் கலாச்சாரத்தில் கலந்துவிட்டது....

    ReplyDelete
  9. நாம் நமது கலாச்சரம் கலாச்சரம் என்று எப்போதும் பெருமை பட்டுக்கொள்கிறோமே அந்த கலாச்சரம் இப்போது புத்தங்களிலும் நமது பேச்சுகளிலும் மட்டும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது நடைமுறையில் இருந்து விலகி போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது நம்மைஸச் சுடும் உண்மைதான்

    ReplyDelete
  10. கமலை மட்டும் நாம் அவர் நன்றாக அனுபவிக்கிறார்கள் என்று சொல்லுகிறோமே அப்ப கெளதமி நன்றாக அனுபவிக்கவில்லையா?
    அவர் என்ன படிக்காதவாரா என்ன? இல்லை கமல் அவரை அடிமைபடுத்தி வைத்துள்ளாரா என்ன?
    இந்த லீவிங்க் டுகதருக்கு ஆண்கலை மட்டுமே குறை சொல்லக் கூடாது அதில் இனைந்து வாழும் பெண்ககளையும்தான் குறை சொல்ல வேண்டும். இறுதியாக கமல் ஒன்றும் நம் தேசத்தை நல்வழிபடுத்தி செல்லும் தலைவர் அல்ல. அவர் ஒரு நடிகர் அவ்வளவுதான். அவர் அவருக்கு பிடித்த மாதிரி வாழ்கிறார். அது அவரது தனிப்பட்ட விஷயம் அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை

    ReplyDelete
    Replies
    1. @ Avargal Unmaigal

      \\இறுதியாக கமல் ஒன்றும் நம் தேசத்தை நல்வழிபடுத்தி செல்லும் தலைவர் அல்ல. அவர் ஒரு நடிகர் அவ்வளவுதான். அவர் அவருக்கு பிடித்த மாதிரி வாழ்கிறார். அது அவரது தனிப்பட்ட விஷயம் அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.\\

      அவர் தனிப்பட்ட முறையில் வாழ்வது நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ஆனால் அதை பொது மேடைகளில் ஊடகங்களில் பரப்புவதைத்தான் எதிர்க்கிறோம். நடிகர்கள் உடுக்கும் உடை வெகு விரைவாக ஃ பாஷன் ஆகி விடும். இவரோட ஊத்தைக் கொள்கைகளை போகுமிடமெல்லாம் பிளக்கிறார், பார்க்கும் மக்கள் மனதில் விரைவில் பரவும் . தெரிந்தே நஞ்சை வார்க்கிறார், அதுதான் கஷ்டமாக இருக்கிறது.

      Delete
  11. பணக்காரன் என்னங்க யாரு செய்தாலும் அவமானம் தான் அசிங்கம்தான் முழக்க நனைந்த பின் முக்காடு போட்டு அலையும் வர்கங்கள்

    ReplyDelete
  12. //ஆனால் திருமணம் செய்யாவிட்டால், இருவருக்குமிடையே பிணக்கு ஏற்ப்பட்டு பிரிய நேரிடும்போது அந்தப் பெண் ஜீவனாம்சம் என்று எதையும் கேட்க முடியாது. அப்படியே போக வேண்டியாதுதான்.//

    ஹிஹி இப்படியெல்லாம் நினைப்பு இருந்தால் ஆப்புதான். சுப்ரீம் கோர்ட் லிவிங் டுகெதரை சட்ட விரோதமானது அல்ல என அறிவித்துவிட்டது. அதே நேரம் Chanmuniya vs Kushwaha வழக்கில் (2010) Chanmuniya என்பவர் Kushwahaவுக்கு சட்டபூர்வமான மனைவியா என்பது பிரச்சனை இல்லை, இருவரும் இணைந்து வாழ்ந்துள்ளார்கள். ஆகவே, Domestic Violence (DV) Act 2005 ன் படி domestic relationship என்பது திருமணத்தை தாண்டியதாக இருப்பதினால் Kushwaha மூடிகிட்டு Chanmuniyaவுக்கு ஜீவனாம்சம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. தனது கணவனின் மறைவுக்கு பின்பு கணவரின் சகோதரர் ஆன குஷ்வாகாவுடன் இணைந்து குடும்பம் நடத்தியுள்ளார். ஆனால் குஷ்வாகா சில ஆண்டுக்கு பின்பு அப்பெண்னை கழட்டி விட்டுவிட்டு திருமணம் செய்யாத காரணத்தால் ஜீவனாம்சம் தர மறுத்துவிட்டார். ஆகவே இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. Domestic Violence (DV) Act 2005 ன் படி gdomestic abuse என்றால் economic abuseம் சேர்த்துதான் என நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. @நந்தவனத்தான்

      தகவலுக்கு நன்றி நந்தவனத்தான்!! இது மகிழ்ச்சியான செய்தி. அதே சமயம் முதல் மனைவி இருக்கும்போது இன்னொருத்தியுடன் வாழ்ந்தால் அவரோ அவருடைய குழந்தைகளோ வாரிசுகளாக இயலுமா? சட்டப் படி உரிமைகள் உண்டா?

      Delete
    2. //அதே சமயம் முதல் மனைவி இருக்கும்போது இன்னொருத்தியுடன் வாழ்ந்தால் அவரோ அவருடைய குழந்தைகளோ வாரிசுகளாக இயலுமா? சட்டப் படி உரிமைகள் உண்டா?//

      ……நந்தவனத்தான் கருப்புக் கோட்டு போட்டுகிட்டு வந்து, கடுப்பேத்துரான் யுவர் ஆனர்னு சொல்லப்போராரு.

      Delete
    3. @குட்டிபிசாசு
      :)
      @Jayadev Das
      நீங்க என்ன சட்டத்துல சந்தேகமெல்லாம் கேட்க ஆரம்பிச்சுட்டீங்க. எனக்கு வக்கீல் வண்டுமுருகன் ரேஞ்சுக்குதான் சட்டம் தெரியும்.

      எனக்கு தெரிந்தவரை இரண்டாவது மனைவி கட்டுவதே இந்து மத சிவில் சட்டப்படி குற்றம். ஆக அத்திருமணம் செல்லாது. அவர் உயில் எழுதாவிட்டலும் பிறந்த குழந்தைகள் மட்டும் சொத்தில் உரிமை கொண்டலாம். ஆனால் இரண்டாவது மனைவி தான் ஏமாற்றப்பட்டதாக நிரூபித்தால் மட்டுமே நிவாரணம் உண்டு. ஏற்கனவே திருமணமானவருடன் லிவிங் டுகெதராக வாழ்ந்தேன் என நிவாரணம் கேட்டால் அடுத்தவளின் வாழ்வை கெடுத்துவிட்டாய் என ஜட்ஜ் கடுப்புதான் ஆவார். ஆனால் லோகநாயகன்தான் விவாக ரத்து செய்துவிட்டாரே!

      Delete