Friday, April 26, 2013

பால்வினை நோய்கள் வராமல் தவிர்க்க மருந்து கட்டிப் பிடி வைத்தியமா?

வணக்கம் மக்கள்ஸ்!!

சமுதாய நன்மைக்காக இராத்திரி பகலா உழைக்கும் நம் நடிகர்கள், நாட்டில் எயிட்ஸ் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவும், அந்நோயால் பாதிக்கப் பட்டவர்கள் மருத்துவத்திற்கு நிதி திரட்டவும் தங்களால் முடிந்த முயற்சியைச் செய்கிறார்கள்.  அந்த மாதிரி ஒரு  நிகழ்ச்சிக்கு ரிச்சர்ட் கெரே அப்படின்னு ஒரு வெள்ளைக்கார நடிகரை பாலிவுட் நடிகை [பேரு ஷில்பா ஷெட்டி], அழைத்து வந்தார்.  விழா மேடைக்கு அந்தாள் கையைப் பிடிச்சு ஷில்பா அழைத்துச் சென்றார் ஓரிரு வார்த்தைகள் பேசியிருக்கலாலாம், உடனே ஷில்பவின் கையைப் பிடிச்சு லைட்டா ஒரு கிஸ் வச்சான், அந்தம்மா ஒன்னும் சொல்லலை புன்னகையோட இருந்தாங்க, பொது மேடைன்னு கூட பார்க்காம மெல்ல கட்டிப் பிடிச்சான், அதுக்கு புன்னகைதான் பூத்தாங்க அந்தம்மா.  அப்புறம் அவனுக்குள் இருந்த மிருகம் ஆவேசமா புறப்பட்டிருக்கும்னு நினைக்கிறேன்.  பிடிச்சு நாய் கவ்வுரா மாதிரி ஷில்பாவை ஒரு கவ்வு கவ்வுனான்.  இஷ்டத்துக்கும் கிஸ்ஸோ  கிஸ்தான்......  [ஐயா..... புண்ணியவான்களே, பல் இருக்கிறவன் பக்கோடா சாபிடுறான் உனக்கென்ன அப்படின்னு ஒரு தத்துவத்தை மட்டும் பொழிய ஆரம்பிச்சுடாதீங்க, காது புளிச்சு போச்சு இங்க அது மேட்டரே இல்லை, பிரச்சினை வேற........].எய்ட்ஸ் போன்ற பால் வினை நோய்கள் வரக்காரணம் என்ன?  கண்ட கண்டவங்க கூட தகாத உறவு வைப்பதால் தானே?  அது குறித்த விழிப்புணர்வு என்றால், "அடேய் கல்யாணம் என்ற பந்தத்திற்குள் மட்டும் பெண்ணோடு தொடர்பு வைத்திருங்கள் வெளியில் வேண்டாம்" என்று புத்திமதி சொல்வீர்களா, இல்லை அதே மேடையில் நாய் மாதிரி நடந்து கொள்வீர்களா? இதுவா விழிப்புணர்வு?இப்போ விஜய் தொலைக்காட்சியிலும் அதே மாதிரி ஒரு கேம் ஷோ, அதில் வெல்லும் பணம் கேன்சர் மற்றும் எயிட்ஸ் நோயாளிகளுக்கு உதவச் செல்லும்.   இங்கேயும் ரெண்டு பெண்களோட கட்டிப் பிடி வைத்தியம் + ஒரு கிஸ்.  அதில் தப்பர்த்தம் எதுவும் இல்லை, அன்பின் வெளிப்பாடு என்பதாக வைத்துக் கொள்வோம், அதே கட்டிப்பிடி வைத்தியம்+ கிஸ் இரண்டையும் ரெண்டு ஆண்களை அழைத்து செய்திருக்கலாம், அது ஏன் பெண்களுக்கு மட்டும்?  ஐயா உங்களுக்கு ஸ்ட்ராங்கா பல்லு இருக்கு, பக்கோடாவை சாப்பிடுங்க, ஆனா பப்ளிக்கா நாலு பேர் பார்க்கிற மாதிரி மொறுக்...... மொறுக்குன்னு சாப்பிடாதீங்க.  உங்க சொந்த வாழ்க்கையைப் பற்றி யாராவது ஏதாவது சொன்னால், "என் பெட் ரூமை ஏன் எட்டிப் பார்க்கிறீங்கன்னு" நீங்க கேள்வி கேட்க்கிறீங்க நியாயம் தான், ஆனா நீங்க உங்க பெட் ரூமுக்குள்ள என்ன பண்றீங்கன்னு மேடை போட்டு சொல்லாமல் தவிர்க்கலாமே?ஒரு பெண் ஒரு ஆணுடன் வசிக்கிறாள்,  வீட்டு வேலைகளை இருவரும் பங்கிடுகிறார்கள், இரவில் உடல் ரீதியாக உறவு........  இப்படி வாழ்நாள் முழுவதும் இருந்தா அது திருமண பந்தம் தான்......  திருமணம் செய்தாலும் செய்யாவிட்டாலும்.

இதே செயல்பாடுகளை அப்பப்போ ஆட்களை மாற்றி மாற்றி செய்து கொண்டிருந்தால் அதற்குப் பெயர் விபச்சாரம், சொன்னாலும் சொல்லாவிட்டாலும்.  இதற்க்கு நட்பு/Living together அப்படின்னு வேறெந்த பெயரில் சொன்னாலும் அது உண்மையல்ல.

நாங்கள் நட்பாக இருக்கிறோம் திருமணம் செய்யாமல் வாழ்கிறோம் என்பதெல்லாம் டுபாக்கூர். அப்படியெல்லாம் பார்த்தால் நாமக்கல் லாரி டிரைவர்கள் எல்லாம் வட இந்திய மாநிலங்களுக்கு லாரிகளை ஓட்டிச் செல்லும் பொது சாலை ஓரத்தில் பெண்களுடன் நட்பாகவும், இரண்டு மணிநேர Living Together  செய்தோம் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.  ஆனால் பால்வினை நோய்கள் வருவது அந்த மாதிரி செயல்களால் தான்.  பெண்ணைத் தொடுதல், கிஸ் பண்ணுதல் இத்யாதி....... இத்யாதியெல்லாம் அவளை மணமுடித்தவன் செய்யட்டும், மற்றவன் ஒதுங்கி இருப்பது தான் பால்வினை நோய்கள் வராமல் தவிர்க்கும்.  மனித மனம் ஒரு குரங்கு, அதன் கையில் வாழைப் பழத்தைக் கொடுத்து எட்டு மணி நேரம் வேடிக்கை பார் என்றால் அது சும்மா இருக்காது.  அதையெல்லாம் தூண்டுவதைப் போல பொதுவில் செய்யாமல் இருப்பதே பால் வினை நோய்களைத் தவிர்க்கும்.  அது நடந்தால் நீங்க எந்த நிதியும் திரட்ட வேண்டியதில்லை.

12 comments :

 1. நல்ல பதிவு. ஆனால் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்று நினைக்கும் கூட்டம் உங்களை தாக்க ஆரம்பிக்கும்.

  ReplyDelete
 2. இந்த நாய்களுக்கெல்லாம் 'திருமண பந்தம்' என்றால் என்னவென்று தெரியும் என்றா நினைக்கிறீர்கள்...? பரம்பரை வியாதியாகக் கூட இருக்கலாம்...!

  இந்தக் கொடுமையை பார்த்த ஒரு நல்ல மனம் வழக்கு தொடர்ந்து இருப்பதாக கேள்விப்பட்டேன்... வாழ்க அந்த நல்ல மனம்...

  ReplyDelete
 3. மன்னிக்கவும்... நாய் என்று சொல்லி விட்டேன்...

  நன்றி = நாய்

  அதனால் நாயை விட....________

  ReplyDelete
 4. மயவரத்தையும் மதுரையும் உலக மேப்பில் (வரைபடத்தில்) கொண்டு வருவேன் என்று சொன்னதை நிறைவேற்றாத இரண்டு அரசியல்வாதிகள்.

  ஆனால், எதுவும் சொல்லாமல் செய்யவேண்டியதை மட்டும் செய்து மக்கள் நாமக்கல்லை உலக மேப்பில் (வரைபடத்தில்) கொண்டு வந்துவிட்டார்கள். முன்பு சேலம்...! இப்போ நாமக்கல்..! இந்தியாவில் பால்வினை நோய்கள் அதிகமுள்ள முதல் மூன்று இடத்தில் ஒன்று...!தாஸ்...இந்தியாவில் உள்ளவர்களுக்கு "இந்த' நாமக்கல் புகழ் தெரியுமா?

  அது ஆண் குரங்கா அல்லது பெண் குரங்கா?

  ReplyDelete
 5. இதில் மெட்ரோ ப்ரியா வின் அபத்தங்கள் வேறு..மகனிடம் சொல்வாராம்,உன் அப்பாவைக் கூட்டிக் கொண்டு போ, நான் கமலுடன் இருந்து கொள்வேன் என்று..

  மகன் ஏன் அவரை(ளை) செருப்பால் அடித்து, நான் யாருக்குப் பிறந்தேன் என்று கேட்கவில்லை என்பது புரியவில்லை..!

  ReplyDelete
 6. பாகவதரே,

  // அதே கட்டிப்பிடி வைத்தியம்+ கிஸ் இரண்டையும் ரெண்டு ஆண்களை அழைத்து செய்திருக்கலாம், அது ஏன் பெண்களுக்கு மட்டும்? //

  நீர் இப்படி கேட்பதை பார்த்தால் ஏதோ பெண்களை பொதுவில் கட்டிப்பிடித்தது ஏன் என கவலைப்படுவதைப்போல இருந்தாலும், நம்மை கட்டிப்புடிக்கலையே லோகநாயகர்னு உம்ம மனசுல ஒரு ஏக்கம் இருப்பதாக தெரிகிறது,அடக்கர்மமே இப்படியெல்லாமா ஆசைப்படுவாங்க :-))

  எனக்கென்னமோ அவனா நீ காமெடி தான் நியாபகம் வருது :-))

  நீர் மட்டும் அடுத்தவர்கள் பற்றி யோகம் செய்வீர் எங்களுக்கு செய்ய தெரியாதோ?

  சரி சரி ஏன் கவலைப்பட்டு கண்ணைக்கசக்கிட்டு நிக்கிறீர், நேரா ஆழ்வார்பேட்டைக்கு போய் ஆசை தீரக்கட்டிப்புடிச்சுட்டு வாரும் :-))
  ---------

  நல்ல எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி தான் ,இல்லைனா இத்தனை பேரு மெனக்கெட்டு பதிவு போட்டுகிட்டு இருப்பாங்களா, இப்போ எல்லாருக்கும் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கும், குறிப்பா உமக்கு ஏற்பட்டு இருக்கும் :-))

  அது என்ன "பால்வினை நோய்" பால் வாங்கி காய்ச்சும் போது ஏதும் வினை ஏற்பட்டு வர நோயா? எனக்கு ஒரு டவுட்டு, காய்ச்சின பாலில் தயிர் ஊத்தினா புளிச்சு "ஒரு உயிரியல் வினை" ஏற்பட்டு எல்லாம் தயிராகிடும் அதுக்கு பேரும் பால் வினை நோயா?

  ReplyDelete
  Replies
  1. //நீர் மட்டும் அடுத்தவர்கள் பற்றி யோகம் செய்வீர் எங்களுக்கு செய்ய தெரியாதோ?//

   யூகம் செய்வீர்* என வாசிக்கவும்.

   Delete
  2. வவ்வால், இது எந்த சொந்தப் பிணைப்பும் இல்லாமல், இரு வேறு பாலர்களாக மட்டும் இருந்து உடலால் இணையும் 'வினை'யைச்(வினைதான் அது!) செய்வதால் அது பால் விணை நோய்.

   ஆண் பால் - பெண் பால் , திரியும் பால் இல்லை.!!!!!!

   Delete
 7. //நாங்கள் நட்பாக இருக்கிறோம் திருமணம் செய்யாமல் வாழ்கிறோம் என்பதெல்லாம் டுபாக்கூர். அப்படியெல்லாம் பார்த்தால் நாமக்கல் லாரி டிரைவர்கள் எல்லாம் வட இந்திய மாநிலங்களுக்கு லாரிகளை ஓட்டிச் செல்லும் பொது சாலை ஓரத்தில் பெண்களுடன் நட்பாகவும், இரண்டு மணிநேர Living Together செய்தோம் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். //- நச்சுன்னு ஒரு கொட்டு வச்சிருக்கிங்க.. சூப்பர்!

  ReplyDelete
 8. ஜெயதேவ் நல்ல பதிவு, எப்படிவேண்டுமானாலும் வாழலாம் அதற்கு நியாயப்படுத்துவோம் என்ற கூட்டத்திடம் பேசி பயனில்லை. பல பெண்களுடன் வசிக்கும் பிரபலங்கள் இதுபோன்ற காரியங்களை பொது இடத்தில் செய்துவிட்டு நியாயப்படுத்துவது மிகவும் கேவலமான செயல்.

  ReplyDelete
 9. இப்போ தான் நண்பர்கள் இந்த நிகழ்ச்சிபற்றி சொன்னார்கள். கமலஹாசனை கட்டிபுடிச்சு முத்தமிடுவது தான் தங்க ஆசை என்று இரு பெண்கள் கேட்க அவரும் கட்டிபுடிச்சு ஆசைய நிறவேற்றினாராம்.இந்த கண்றாவியை நான் பார்க்கல.

  ReplyDelete