Wednesday, April 24, 2013

இறந்தவர் உடலை தகனம் செய்யும் முன்னர் குளிப்பாட்டுவது எதற்கு?


மதுரை மாவட்டம், திருமங்கலம்
அருகே உள்ள தும்மக்குண்டை சேர்ந்தவர்
அசோகன் (வயது 45).
இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள்
உள்ளனர். அசோகன் தி.மு.க. கிளைச்
செயலாளராக இருந்து வருகிறார்.
கடந்த சில
நாட்களுக்கு முன்பு அசோகனுக்கு திடீர
மாரடைப்பு ஏற்பட்டது.
உடனே உறவினர்கள் அவரை மதுரையில்
உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்
சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால்
சிகிச்சை பலனின்றி அசோகன்
நேற்று மதியம் இறந்து விட்டதாக
அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள்
கூறினர்.
இதையடுத்து உறவினர்கள்
அவரது உடலை சொந்த
ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்கிற்
ஏற்பாடுகளை செய்தனர் அசோகனின் உடல்
ஊர்வலமாக
மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதில் உறவினர்கள், கட்சியினர்
கலந்து கொண்டு அவரது உடலுக்கு இறுதி
மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட
அவரது உடலை தகனம்
செய்வதற்கு முன்பு அசோகனின் உடல்
மீது தண்ணீர் ஊற்றப்பட்டது.
அப்போது அவரது உடல் அசைந்தது.
சிறிது நேரத்தில் அவர்
எழுந்து அமர்ந்தார். இதைப்பார்த்த
அவரது உறவினர்கள்
அங்கிருந்து அலறியடித்துக்
கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
ஆனாலும் அவரது மனைவி கணவர்
உயிரோடு தான் இருக்கிறார்
என்று மிகவும் சந்தோஷப்பட்டு ஆனந்த
கண்ணீர் வடித்தார். பின்னர் அவர்
அசோகனுக்கு பழச்சாறு கொடுத்தார்.
அதைக் குடித்த அவர் தான் நன்றாக
இருப்பதாக கூறினார்.
இதையடுத்து உறவினர்கள்
அசோகனை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
டாக்டர்களால் இறந்து விட்டவர்
என்று கூறப்பட்டவர்
உயிரோடு எழுந்து உட்கார்ந்த அதிசயம்
அப்பகுதியில்
ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள து.
கடந்த சில
நாட்களுக்கு முன்பு இதே போல்
டி.கல்லுப்பட்டி ,
மீனாட்சி புரத்தை சேர்ந்த நடராஜன்
மாரடைப்பால் இறந்து விட்டதாக
அதே தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள்
கூறினார்கள். ஆனால் அவருக்கும்
இறுதி சடங்குகள் செய்த போது, மீண்டும்
உயிர் பிழைத்தார்.
நன்றி:
என்ன ராக்கம்மா,மாமனுக்கு அஞ்சு ஆறு கஞ்சி கிஞ்சி உதுறது ?!?
 [Facebook]
 

7 comments:

  1. இறந்தவர் உடலை தகனம் செய்யும் முன்னர் குளிப்பாட்டுவது எதற்கு?

    enna sir solla varinga?

    ethvume unga pathil kanome..

    ReplyDelete
    Replies
    1. @ Mahesh

      ஒருவேளை உசிரோட இருந்தான்னா, தண்ணீர் ஊற்றும்போது எழுந்திரிச்சுவான் அப்படின்னு ஒரு எச்சரிக்கையா குளிப்பாட்டுவதை வச்சிருக்காங்கன்னு இந்த செய்தியில் இருந்து தெரிய வருது!! என்ன மகேஷ்!! இவ்வளவு பெரிய டியூப் லைட்டாவா இருப்பீங்க? ஐயோ..........ஐயோ............

      Delete
  2. நம்வங்க எல்லாம் யோசனையோடு வச்சி இருக்காங்க

    ReplyDelete
  3. வியப்பாகத்தான் இருக்கிறது... எப்படியோ... ...ம்...

    அசோகன், நடராஜன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. ஒருவேளை உசிரோட இருந்தான்னா, தண்ணீர் ஊற்றும்போது எழுந்திரிச்சுவான் அப்படின்னு ஒரு எச்சரிக்கையா குளிப்பாட்டுவதை வச்சிருக்காங்கன்னு இந்த செய்தியில் இருந்து தெரிய வருது!! ///

    தெரியும் சார்!...

    எதோ உங்கலோட மத்த பதிவுகல போல இந்த பதிவு இல்லாதது போல ஒரு ஃபீல்!


    இண்ணும் விளக்கமா இருக்கும்னு எதிர்பார்த்தேன்!

    வெர ஒண்ணும் இல்ல!




    என்ன மகேஷ்!! இவ்வளவு பெரிய டியூப் லைட்டாவா இருப்பீங்க? ஐயோ..........ஐயோ............///




    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ

    ReplyDelete
  5. இது தொடர்பாக இன்னும் விஷயங்கள் சொல்வீர்கள் என்று மகேஷ் எதிர் பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன்.
    பறை அடித்து ஒலி எழுப்புவதும் இதற்காகவே.பின்னர் அதுவே சடங்காகி விடுகிறது.

    ReplyDelete
  6. வியப்பாத்தான் இருக்கு ...!

    ReplyDelete