Tuesday, April 9, 2013

தமாஷாக சச்சின் வீழ்த்திய 52 விக்கட்டுகள்.

அன்புள்ள மக்கள்ஸ்!!

கிரிக்கெட் வியாபாரமானதிலும், சச்சின் வியாபாரியானதிலும் நமக்கு வருத்தம்தான்.  இருந்தாலும் நாமும் ஒரு காலத்தில் காலை முத்தால் மாலை வரை TV முன்னாடி உட்கார்ந்துகிட்டு இந்தியா ஜெயிக்கணும்னு உசிரை கையில் புடிச்சிகிட்டு மேட்ச் பார்த்தவன்தான் என்பதையும் இங்க ஒப்புக்கணும்!!இன்னைக்கு ஒரு காணொளி பார்த்தேன்.  சச்சின் எடுத்த விக்கட்டுகளில் 52-ன் தொகுப்பு.  இதில் பலமுறை, பிரையன் லாரா, இன்சாமாம் போல எதிரணி கேப்டன்களின் தலையையே சச்சின் உருட்டியிருக்கிறார்.  மேலும்  இக்கட்டான சூழ்நிலைகளில் நங்கூரம் பாய்ச்சியது போல ஸ்திரமாக நின்று கண்ணா பின்னா என்று விளாசித் தள்ளிக்கொண்டு இருந்தவர்கள் பலரை சச்சின் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார்.  பேட்டில் பட்டு கீழே விழுந்த பந்து, பேட்ஸ்மன்  எங்கே......எங்கே ...... என்று தேடிக்கொண்டிருக்க, அது அவருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அவரது  கால்களுக்கு நடுவே நுழைந்து எலி போல ஓடி விக்கெட்டை சாய்ப்பது வேடிக்கை.  பல முறை இறுதி ஓவர்களில் பேட்ஸ் மேன் பிட்சில் இறங்கிவந்து அடிக்க, அதை முன்கூட்டியே உணர்ந்து பந்தை வைடாகப் போட்டு விக்கெட்டை காலி செய்கிறார்.  அம்பயர் இரண்டு கைகளையும் அகல விரித்து wide  சிக்னல் காண்பித்துக் கொண்டிருக்க பேட்ஸ் மேன் ஸ்டம்பை விக்கட் கீப்பர் பதம் பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது.  பிரையன் லாராவின் கிளீன் போல்டாவது, ஸ்டம்படு ஆவது எல்லாம் கண்கொள்ளா காட்சி!!

சச்சின் உருட்டிய எதிரணித் தலைகள்!!

 Inzamam-ul-Haq-          7
B C Lara                          4
N Hussain                        1
A Ranatunga                   3
S R Waugh                      3
M E Waugh                     2
S P Fleming                     2
W J Cronje                      1
R T Ponting                    1
          
 1 66 
 2 19
 3 8
 4 4
 5 2

சுனில் கவாஸ்கர் சச்சின் தன்னிடம் கிரிக்கெட் pad ஐப் பரிசாகப் பெற்றதையும், அதற்க்கு நன்றி தெரிவித்து கார்ட் ஒன்றை கவாஸ்கருக்கு கொடுக்க சச்சின் அவர் வீட்டுக்குச் சென்றதையும் நினைவு கூர்கிறார்.  சச்சின் கையொப்பமிட்ட அந்த கார்டு இன்றைக்கு தன் மகன் ரோஹானின் அறையில் எங்கேயோ உள்ளது, ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை, இன்றைக்கு அது என் கையில் இருந்தால் எப்படி இருக்கும் என்று வியக்கிறார் சுனில் கவாஸ்கர் !!

நன்றி:   கிரிக்கெட் அரசன் டெண்டுல்கர் 6 comments :

 1. ஒரு வேலை பவுலராக தொடர்ந்திருந்தால் அதிலும் பல சாதனைகள் படைத்திருப்பார் போல... கவாஸ்கரின் பெருமிதம் அருமை...

  ReplyDelete
 2. வாசித்தேன்.. தேங்க் யூ!

  ReplyDelete
 3. பல மேட்ச்சுகளில் ஐந்தாவது வீச்சாளராக இருந்திருக்கிறார்,சில முறை ரிஸ்க்கான கடைசி ஓவர் வீசி வெற்றிதேடித் தந்திருக்கிறார்,
  இன்னமும் இளைஞர்களுக்கு வழி விடாமல் செய்வதை அவர் உணரவே இல்லை.
  எம்.பி.பதவி வாங்கிக் கொண்டு ராஜ்யசபா பக்கம் போனாரா என்று கூடத் தெரியவில்லை.

  ReplyDelete
 4. முரளிதரன் சொன்னது போல அந்த காலத்தில் சிறப்பாகத்தான் விளையாடினார்! இப்போது இளசுகளுக்கு வழி விட்டால் பரவாயில்லை! நன்றி!

  ReplyDelete