வணக்கம் மக்கள்ஸ்!!
எங்கள் ஊரில் ஒரு பையன், வயது முப்பதுக்குள்தான் இருக்கும். திருமணமாகி ஒரு கைக்குழந்தை இருக்கிறது. ஒருநாள் திடீரென மாரடைப்பு, அகால மரணம். இவனுக்கு மாரடைப்பு வருவதற்கு காரணம் இருக்கிறது. எங்கள் ஊரில் வாரம் இரு முறை ஆடு கசாப்பு போடுவார்கள், புதன், ஞாயிறு. இரண்டுநாளும் இவன் வாங்குவான், இவன் மட்டுமே அரைக்கிலோ உள்ளே தள்ளுவான். அது மட்டுமல்ல கோழியும் அவ்வப்போது முழுதாகத் தள்ளுவான். ஆனால், உடல் உழைப்பு அவ்வளவாகக் கிடையாது, துணிக்கடையில் உட்கார்ந்தபடியே கஷ்டமர்களுக்கு துணியை கட் பண்ணி விற்பது தான் இவரது வேலை. சின்ன வயசில் செத்துட்டனே என்ற வருத்தம் இருந்தாலும் இவ்வளவு சின்ன வயதில் இவனுக்கு ஏன் மாரடைப்பு வந்தது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.
ஆக தவறான உணவுப் பழக்கம், தேவைக்கு மீறி கொழுப்பு வகைகளை உண்ணுதல் போதிய உடலுழைப்பு இல்லாமை -இவைதான் மாரடைப்பு இளவயதில் வருவதற்கான காரணம் என்று நானும் வெகு நாட்களாக நம்பியிருந்தேன். ஆனால் இந்த நினைப்பைத் தவறு என்று உணர்த்துகின்ற வகையில் சமீபத்திய சில நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.
சில வாரங்களுக்கு முன்னர் செய்தித் தாள்களில் படித்த ஒரு செய்தி வியப்பாக இருந்தது. 45 வயதை நெருங்கும் யோகா சொல்லித் தரும் மாஸ்டர் ஒருவருக்கு மாரடைப்பு. இவர் யோகா கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாது தானும் தீவிரமாக பயிற்சி செய்பவர், அசைவம் உண்ணுவதில்லை, வெஜிடேரியன் உணவை பிராச்சாரமும் செய்பவர். இப்படிப் பட்ட ஒருத்தருக்கு மாரடைப்பா....?? இது எதைக் கொண்டும் புரிந்துகொள்ள முடியாத விந்தையாகப் பட்டது.
இந்த குழப்பத்தில் இருந்து மீழும் முன்னர் இதே மாதிரி ஒரு சம்பவம் ஓரிரு தினங்களுக்கு முன்னர் எங்கள் அலுவலக முன்னால் ஊழியர் ஒருவருக்கும் நடந்திருக்கிறது. வயது முப்பதை நெருங்குகிறார். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் நல்ல வருமானம், சுத்த சைவம், ஜிம் அது இதுன்னு போய் உடலை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கக் கூடிய பையன், திருமணத்திற்குப் பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள், சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது. இது எதனால் நடந்திருக்கக் கூடும் என்று எங்களால் இன்னமும் யூகிக்கவே முடியவில்லை.
எனவே, மென்பொருள் துறையில் வேலை பார்க்கும் கண்மணிகளே, ஹார்ட் அட்டாக் என்பது எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது, ஆனா வந்திட்டா ஒன்னும் பண்ண முடியாது. நான் சைவம்தானே சாப்பிடறேன், நல்லா எக்சர்சைஸ் எல்லாம் பண்றேனே, எங்க வீட்டில் யாருக்கும் ஹார்ட் அட்டாக் வந்ததே இல்லையே.......... இதெல்லாம் மறந்திடுங்க. உங்கள் இதயம் நலமாக இருக்கிறதா என்பதை வருடத்திற்கு ஒரு முறை சோதனை செய்து கொள்வது நல்லது, உங்களில் 99.99% பேர் நலமுடன்தான் இருப்பீர்கள், இருப்பினும் யாரவது ஒருத்தருக்கு பிரச்சினை இருந்தால் தவிர்க்கக் கூடிய நிலையிலேயே அதை சரி செய்து கொள்வது நல்லது.
மீண்டும் சந்திப்போம் வணக்கம் மக்கள்ஸ்!!

புவனேஷ்- எங்கள் அலுவலக முன்னாள் ஊழியர், சில தினங்களுக்கு முன்னர் அகால மரணமடைந்தார், காரணம் மாரடைப்பு. இவரைப் பார்த்தால் மாரடைப்பு வந்து பொசுக்கென்று போயிடுவார் என்பது போலவா தெரிகிறது? |