Thursday, January 17, 2013

பிராமணன், செருப்பு தைக்கும் தொழிலாளி -கடவுளை அடைய முயன்ற கதை.

ஒருமுறை நாரதமுனி வைகுந்ததிற்க்கு நாரயணரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார், வழியில் வேதங்கள் அனைத்தையும் பயின்ற ஆச்சாரமான ஒரு அந்தணரைச் சந்தித்தார்.  


 நாரதரை வணங்கிய அந்தணர், "தாங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என அடியேன் அறிந்து கொள்ளலாமா?" என்று கேட்டார்.

அதற்க்கு, "நிச்சயமாக, நான் என் தலைவன் ஸ்ரீமன் நாராயணனைப் பார்க்கச் சென்று கொண்டிருக்கிறேன்!!" என பதிலுரைத்தார்.

"அப்படியா, மிக்க மகிழ்ச்சி!!  எனக்கு ஒரு உதவி தங்களிடமிருந்து வேண்டுமே?"

"தாரளமாக என்னவென்று சொல்லுங்கள், என்னால் இயன்றால் செய்கிறேன்!!"

"தாங்கள்  ஸ்ரீமன் நாராயணனைப் பார்க்கும் பொது, அடியேன் எப்போது வீடு பேரு அடைவேன் என்று கேட்டுச் சொல்கிறீர்களா?"

"நிச்சயமாக" என்று நாரதர் பதிலளித்துவிட்டு அங்கிருந்து பயணத்தை மேலும் தொடர்ந்தார்.  சற்று தொலைவு சென்ற பின்னர், ஒரு ஆலமரத்தடியில்  ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியைச் சந்தித்தார்.   நாரதர் எங்கு செல்கிறார் என்பதையறிந்த அவரும் அதே வேண்டுகோளை விடுக்க நாரதரும் சம்தித்து அங்கிருந்து வைகுந்தம் செல்கிறார்.



வைகுந்தத்தில் ஸ்ரீமன் நாராயணனைச் சந்தித்த நாரதர் முதலில் தனது அலுவல்கள் குறித்து பேசிவிட்டு இறுதியாக தான் அன்று சந்தித்த இருவரைப் பற்றி கூறி, அவர்கள் எப்போது வீடுபேறு அடைவார்கள் என வினவினார்.


 


சற்று யோசித்த பெருமாள், "அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி இப்பிறவி முடிந்ததும் பிறவிக் கடலை நீந்தியவராவர், அந்த அந்தணர் இப்போதைக்கு வீடு பேரு பெரும் சாத்தியம் இல்லை, இன்னும் பல பிறவிகள் காத்திருக்க வேண்டும்"   என்று இயம்பினார்.

இதைக் கேட்ட நாரதருக்கு அதிர்ச்சி கலந்த வியப்பு!!  பெருமாளை நோக்கி, "ஐயனே, வேதங்களை நன்கு கற்றறிந்த பண்டிதன், ஆச்சாரமாக வாழும் ஒருவனை விட ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி விரைவாக பிறவிக்கடல் தாண்டி வீடு பேரு அடைவது எப்படி என்று எனக்குப் புரியவில்லை, சற்றே ஏன் சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா?" என வினவினார்.

அதைக் கேட்டு புன்னகைத்த பெருமாள், ஒரு ஊசியை நாரதரிடம் கொடுத்து, "நீ நேராக சென்று அவர்களை சந்திப்பாயாக, அவர்கள் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் எனக் கேட்டால், இந்த ஊசியின் காது வழியாக ஒரு யானையை நுழைக்க முயன்று கொண்டிருந்தேன் என்று சொல், அதற்க்கு அவர்கள் எந்த மாதிரி பதில் தருகிறார்கள் என்று பார், உன் சந்தேகம் தீரும்" என அனுப்பி வைத்தார்.

நாரதரும் அவ்வாறே திரும்ப வந்து,  வழியில்  சந்தித்த அந்தணரை மீண்டும் கண்டார்.  அவரைக் கண்டதும் மகிழ்ந்த அந்தணர், "நாராயணரைச், சந்தித்தீர்களா?  அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?" என வினவினார்.

நாரதர் பெருமாள் சொன்னபடி, " ஊசியின் காது வழியாக ஒரு யானையை நுழைக்க முயன்று கொண்டிருந்தார்" என்றார்.

அதற்க்கு அந்தணர், " சுவாமி, தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள், ஆனாலும் இதை என்னால் நம்ப முடியவில்லை, ஊசியின் காதில் எப்படி யானை நுழையும்? " என்றார்.  புன்னகைத்த நாரதர், அடுத்து செருப்பு தைக்கும் தொழிலாளியைச் சந்தித்து அதையே சொன்னார்.

அதைக் கேட்டதும், "ஆஹா, என் இறைவன் எல்லாம் வல்லவன், அவனால் இது நிச்சயம் முடியும்" என்று துள்ளிக் குதித்தார்.

இதைப் பார்த்த நாரதருக்கோ பெருத்த ஆச்சரியம்.  "ஐயா, நான் சொல்வதை அப்படியே நம்புவதா?  எதை வைத்து யானையை ஊசியின் காதில் நுழைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?" என்று வினவினார்.


அதைக் கேட்ட அந்த தொழிலாளி, "ஐயா யானை என்ன பெரிய யானை, அதை விட பல மடங்கு பெரியதைக் கூட ஊசியின் காதை  விட சிறிய துளையிலும் என் இறைவனால் நுழைக்க முடியும்" என்றார்.

மேலும் வியந்துபோன நாரதர் "எப்படி?" என  வினவினார்.

கீழே குனிந்து அங்கே கொட்டிக் கிடந்த ஆயிரக்கணக்கான ஆலமரத்தின் பழங்களில் ஒன்றை எடுத்து அதிலிருந்த கடுகினும் சிறிய விதையைக் காண்பித்த அந்த தொழிலாளி "இதோ நான் தினமும் வந்து உட்காரும் இந்த இடத்திலுள்ள ஆலமரத்தைப் பாருங்கள், இவ்வளவு பெரிய மரத்தையே இவ்வளவு சிறிய விதையினுள் வைக்க முடிந்த இறைவனுக்கு, யானையை ஊசியின் காதில் நுழைப்பதென்ன பெரிய விஷயமா?"  என்று கேட்டார்.

இதைக் கேட்ட நாரதரின் சந்தேகம் தற்போது முற்றிலும் தீர்ந்தது!!

சமீபத்திய இடுக்கைகள்:

பயங்கர டேட்டா: மரக்கிளைகளில் தலைகீழாய் தொங்கும் பதிவர். 

பெண்களே புத்திசாலிகள்!!


11 comments:

  1. ஆன்மீகக் கதைகளில் அசத்துகிறீர்கள் ஜெயதேவ். தொடருங்கள்

    ReplyDelete
  2. பிரமாதமான கதை. ஜெயதேவ்.. இது தான் உங்கள் தளம்.. இதை தொடருங்கள். சிறு சிறு மனஸ்தாபங்களை பதிவுகளாக்குவதை விட்டு விடுங்கள். வெறும் நேர விரயம்.

    ReplyDelete
  3. ஜெயதேவ்!அஞ்சாம் வகுப்பு கதை படிக்கத்தான் அவசரமா கூப்பிட்டீங்களாக்கும்:)

    ReplyDelete
    Replies
    1. @ ராஜ நடராஜன்

      கீழே லிங்க் இருந்ததே கவனிக்கலையா? நான் அதுக்குத்தான் கூப்பிட்டேன். சொல்லப் போனா, சென்ற பதிவின் இறுதியில் , பயங்கர டேட்டா பதிவு உங்களுக்கு சமர்ப்பனம்னு போட்டிருந்தேன்.

      http://jayadevdas.blogspot.com/2013/01/blog-post_15.html

      Delete
  4. மாப்ளே தாசு,

    இது சொந்தக் கதையா,மதபுத்தகத்தில் உள்ளதா என சொல்ல மாட்டீரா?

    எனினும் நாரதர் எண்ணெய் கிண்ணத்தை வைத்துக் கொண்டு உலகை நினைக்கும் போது கடவுளை[விஷ்னு] நினைக்க்வில்லை ,ஆனால் ஒரு ஏழை விவசாயி காலை,இரவு இருமுறை நினைக்கிறான் என அகத்தியர் படத்தில் வரும்.

    மகாபாரதத்தில் துரியோத்னன் வீட்டு விருந்தை விட விதுரனின் வீட்டில் உணவு அருந்துவதையே கிருஷ்னர் விரும்புவார்.

    இயேசு மத குருக்களின் பீற்றலான ஜெபத்தை விட,ஏழைகளில் எதார்த்த‌ ஜெபம் பெரிது என் கூறுவதும் புதிய ஏற்பாட்டில் உண்டு.

    மலையை பார்த்து பெயர்ந்து போ என நம்பிக்கை(இது முக்கியம் ஹி ஹி)யோடு சொன்னால் நடக்கும் எனவும் , பண்க்காரன் இறைவனின் அரசை அடைவது ஊசியின் காதில் ஒட்டகம்(???) நுழைவதை விட கடினம் என்றும் இயேசு சொல்கிறார்.

    எல்லாத்திலும் சுட்டு கதை எழுதினீரா,இல்லை மண்டபத்தில் கதாகாலாட்சேபத்தில் யாரோ சொன்ன கதையை அடித்து விடுகிறீரா!!

    தன்னை பிராமணன்,உயர் சாதி என்று சொல்லிக் கொள்பவனை சேர்க்கும் கடவுளும் ஒரு மோசடிக் காரன்.

    நாலு சாதியையும் நம்ம ரொமான்ஸ் பாய் கிருஷ்னாதான் படைத்தாராமே!!
    பேட் ஃபெல்லோ!!

    இப்படி பணகாரன்,உயர் சாதி ஆட்களை விட ஏழை,கீழ் சாதி ஆட்களை இறைவன் விரும்புவார் என்பது மோசடியே!!

    நன்றி!!

    ReplyDelete
  5. மாமு, இந்தக் கதை ISKCON ஸ்தாபக ஆச்சாரியர் ஸ்ரீல பிரபுபாதா அவர்கள் சொன்னது, சுட்டி:

    http://news.iskcon.com/node/942

    இந்த கதையில் வரும் பிராமணன் என்பவன் ஜாதியை விட கற்றறிந்தவன் என்பதே முக்கியமாகும். படித்திருந்தும் அது சொல்ல வரும் உண்மையை உணராதவன். ஏட்டுச் சுரைக்காய். அந்தத் தொழிலாளி படிக்காதவர், ஆனாலும் உணர வேண்டிய உண்மையை உணர்ந்தவர் என்று காட்டுவதே இந்தக் கதை.


    \\எனினும் நாரதர் எண்ணெய் கிண்ணத்தை வைத்துக் கொண்டு உலகை நினைக்கும் போது கடவுளை[விஷ்னு] நினைக்க்வில்லை ,ஆனால் ஒரு ஏழை விவசாயி காலை,இரவு இருமுறை நினைக்கிறான் என அகத்தியர் படத்தில் வரும்.\\ மாமு இதுக்குத்தான் சொல்றது படிக்க வேண்டிய விதத்தில் படிக்கவில்லை என்றால் ஆன்மிகம் புரியாது!! ஒருவேளை, காலை,இரவு இருமுறை இறைவனை நினைத்தாலே போதும் என்றால் கீதையில் man manah [9.34, 18.65] என்று சதா என்னையே நினைத்துக் கொண்டிரு என்று சொல்லும் பகவான் முரண் படுகிறாரா? இல்லை எப்போதும் என்னை நினித்துக் கொண்டு அதே சமயம் உன் கடமையான போரிடுதளைச் செய் என்கிறாரே, அது முரனா?


    Therefore, Arjuna, you should always think of Me in the form of Krsna and at the same time carry out your prescribed duty of fighting. [BG 8.7] சிந்திக்க மாட்டீர்களா??!!

    நாரதர் நீங்க நினைக்கும் சினிமா காமடியன் இல்லை, அவருக்கு எல்லாம் தெரியும் இருந்தாலும் இந்த மாதிரி கதைகளை நிகழ்த்துவது ஒரு முறை கூட இறைவன் பெயரைச் சொல்லாதவர்களை, ஒரு முறையாச்சும் சொல்லட்டுமே என ENCOURAGE செய்வதற்கே. !!


    \\நாலு சாதியையும் நம்ம ரொமான்ஸ் பாய் கிருஷ்னாதான் படைத்தாராமே!!\\ சாதி இல்லை பிரிவு. ஏன் உங்க உடம்புல கை கால் கூடத்தான் அவரு படைச்சார், காலு கேவலமா? கை உசத்தியா? காலுக்கு எதாச்சும் ஆனா செலவு செய்ய மாட்டீங்களா? பிரிவை சாதியாக்கியதும், பிராமணர்கள் தகுதியில்லாமல் பெயரளவில் மட்டுமே பிராமணர்களாக ஆகிப் போனது துரதிர்ஷ்டம்.


    \\இப்படி பணகாரன்,உயர் சாதி ஆட்களை விட ஏழை,கீழ் சாதி ஆட்களை இறைவன் விரும்புவார் என்பது மோசடியே!! \\ மகா பாரதத்தில் பகவன் ஹஸ்தினபுரத்தில் இருந்து துவாரகைக்கு கிளம்பும் பொது குந்தியிடம் வரம் கேட்கச் சொல்கிறார், அவள் கேட்டது என்ன தெரியுமா? திரௌபதி புடவை உருவப் பட்டது, மகன்கள் விஷம் வைக்கப் பட்டது, மெழுகு மாளிகளியில் எரிந்து துன்பத்தில் சிக்கியது, காட்டில் கஷ்டப்பட்டது எல்லாம் மீண்டும் வேண்டுமென்பாள், காரணம் அப்போதான் நாங்க உன்னை நினைப்போம் இப்போ சுகம் வந்துவிட்டது, உன்னை மறந்து விட வாய்ப்புகள் அதிகம் கஷ்டப் பட்டாலும் உன் நினைவு இருந்தா அதை விட சுகம் ஏது!! மாமு சிந்திங்க!!

    ReplyDelete

  6. மாமு, இந்தக் கதை ISKCON ஸ்தாபக ஆச்சாரியர் ஸ்ரீல பிரபுபாதா அவர்கள் சொன்னது, சுட்டி: [his own voice]

    http://www.youtube.com/watch?v=E1-59_yF_qE

    ReplyDelete

  7. இந்த கதையை ஒரு குழந்தைக்கு சொல்லி பார்த்து அக்குழந்தை சொல்லும் பதிலை வைத்து முடிவு செய்து சொல்லுங்கள்.

    எந்த ஒரு தகவலையும் முதலில் அறிவியலை கொண்டு சிந்திக்க வேண்டும்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. @Jeevanantham Paramasamy

      நான் முன்பே சொன்ன மாதிரி இந்தக் கதை ISKCON ஸ்தாபக ஆச்சாரியர் ஸ்ரீல பிரபுபாதா அவர்கள் சொன்னது, சுட்டி:
      http://news.iskcon.com/node/942

      [அவரது குரலிலேயே கேட்க:]
      http://www.youtube.com/watch?v=E1-59_yF_qE

      அவரை எங்க வழிகாட்டியா தேர்ந்தெடுக்க புத்தியை பயன் படுத்தியுள்ளோம், அது சரியான தேர்வு, அதுக்கு மேல அவர் சொல்வதை அவங்க இவங்க கிட்ட சொல்லி அவர் மேலே சந்தேகப் பட மாட்டோம். கதையில் logical/illogical எல்லாம் பார்க்க மாட்டோம், அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும் நண்பரே!!

      Trusting somebody blindly is not good, but trusting nobody is dangerous.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  8. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழையமாட்டார்கள் என எவர்களைக் குறித்து இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்?
    A) எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா – மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் – இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம். (7:40)

    ReplyDelete