Wednesday, May 7, 2014

"கொலாப்ஸ்" வருண்: நக்குற நாய்க்கு செக்கு என்ன, சிவலிங்கம் என்ன.........??

வணக்கம் மக்கள்ஸ்!!

இது ஒரு வம்பிழுக்கும் பதிவு, வேண்டாமென்பவர்கள் ஒரு ஸ்டேப் பேக் ஆகிக்கோங்க.  இந்தப் பதிவை படிக்க நீங்க கொஞ்சம் அதிகம் படித்திருக்க வேண்டும்.  எவ்வளவு தெரியுமா?  அது ரொம்ப ஜாஸ்தி!!  எட்டாம் கிளாஸ்!! அதில் வரும் அறிவியலும் கணிதமும் தெரிந்திருக்க வேண்டும்.  ஹி .......ஹி .......ஹி .......  [நம்ம கொலாப்ஸ் இதுக்கே  நாறிப் போய் கிடக்கிறார் என்பது தான் காமடி!!].

பதிவர்கள் வீண் சண்டை போடக்கூடாது என்று நமது நலன் விரும்பும் சில மூத்த பதிவர்களின் ஆதங்கம் நமக்கும் புரிகிறது.  ஆனாலும் ஒரு சிலவற்றை பாக்கி வைக்காமல் முடிக்க வேண்டும் என்று நீதி நூல்கள் கூறுகின்றது.  அவை, நெருப்பு, கடன், நோய், கொடிய எதிரி- இவற்றையெல்லாம் மிச்சம் வைக்காம காலி செய்துவிட வேண்டும், மிச்சம் வச்சா அது பின்னாடி நம்மையே காலி செய்துவிடும்.

அந்த வகையில் கொலாப்சின் உண்மையான ரூபத்தை தோலுரித்துக் காட்டுவதில் இறங்கிய நாம் அதை முடிக்காமல் நிறுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்,  ஆனால் இது தொடராது நிச்சயம் முற்றுப் புள்ளி வைப்போம் என்பதை மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறோம்!!

"கொலாப்ஸ் பிளீஸ்........!!" மாமா வருண் அவர்களுக்கு தமக்கே எல்லாம் தெரியும் மற்றவன் அத்தனை பேரும் மடையர்கள் என்ற எண்ணம் வெகு காலமாகவே இருந்து வருகிறது.  இதை நாட்டு வெடி வைத்து தகர்த்தெறிந்தவர் பதிவர் வவ்வால்.  அதை தொடர்ந்து செய்தும் வருகிறார்.  இதனால் பல வலைப்பூக்களில் கொலப்சின் டவுசர் கிழிக்கப்பட்டது.   வவ்வால் போடுவதில் தனது டவுசரை கிழிக்கும் பின்னூட்டங்களை தடுக்க தன்னுடைய தளத்திற்கு "கமண்டு மாடரேஷன்" வைத்தார், தனது கேனத்தனம் வெளிப்படுத்தும் வவ்வாலின் பின்னூட்டங்களை வெளியிடாமலேயே தவிர்த்தார்.  இப்படியே தினமும் டவுசர் கிழிந்ததால் ஏற்பட்ட அவமானத்தால் கூனி குறுகிப் போன "கொலாப்ஸ்" வருண் உள்ளுக்குள்ளயே புழுங்கி புழுங்கி மனோவியாதிக்கு ஆளாகிப்போனார். வவ்வாலை நேரடியாக எதிர்கொள்ள வழியில்லாமல் ஒரு கள்ள பெயரில் ஐ.டி . யை உருவாக்கி சொந்த பதிவிலேயே பின்னூட்டங்கள் போட்டுக் கொள்கிறார்.  அத்தோடு நில்லாமல் தனியாக வவ்வாலை தாக்குவதற்கென்றே ஒரு பிளாக்கையும் ஆரம்பித்து வைத்திருக்கிறார்.  சுட்டி.

படித்தவன் சூதும் வாதும் செய்யலாமா?  செய்தால் அவன் கதி .......  என்னவாகும் என்று நான் சொல்ல விரும்பவில்லை.

"எதற்கெடுத்தாலும் விக்கிபீடியாவைப் படித்து அதைப் புரிந்து கொள்ளாமலேயே சும்மா அடித்து விடுகிறவர்" என வவ்வாலை இவர் குற்றம் சுமத்துகிறார்.   வவ்வாலை "விக்கிநக்கி" என்ற ஒரு தரங்கெட்ட புது வார்த்தையைப் பயன்படுத்தி அழைக்கிறார்.  ஆனால் உண்மையில் யார் விக்கிநக்கி என்பதைத்தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.


கொலாப்ஸ் தன்னை விஞ்ஞானத்தில் எக்ஸ்பெர்ட் என்று சொல்லிக் கொள்கிறார்.   அப்பேற்பட்டவர்,

உயிர் வாழ எது முக்கியம்?  ஹைட்ரஜனா,  ஆக்சிஜனா இல்லை தங்கமா?

என்று கேள்வி கேட்டு பதிவு போட்டிருக்கிறார்.  இதை வச்சு ஒரு வாழ்க்கை தத்துவத்தை விளக்கப் போறாராமாம்.

"ஏன்யா முதலில் ஆக்சிஜன் இல்லாம உயிரினம் தோன்றியிருக்குமா?  வெறும் ஹைட்ரஜன் Gas ஐ மட்டும் வச்சிக்கிட்டு வாழ்ந்திட முடியுமா?  அதே மாதிரி ஒவ்வொரு தனிமத்துக்கும் ஒரு பயன்பாடு இருக்கிறதல்லவா?  எனவே, எந்த மடையனாச்சும் இப்படி ஒரு ஒப்பீடு செய்வானா?"  என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.  ஆனால்  இப்படி கேனத் தனமாக சிந்திப்பது தான் கொலாப்ஸ் வருணின் ஸ்பெஷலே!!  அதையும் படிச்சிட்டு ஆஹா....... என் அறிவுக்கண்ணை திறந்து உட்டுட்டீங்கன்னு சொல்லி பின்னூட்டம் போடும் மாங்கா மடையனுங்களும் இருக்கானுங்க என்பது தான் உச்சகட்ட காமடி.

சரி ஒரு கருத்தை விளக்குவதற்கு கற்பனை கதைகள் தேவை தான், அவை லாஜிக்குக்கு அப்பாற்பட்டவை என்றே எடுத்துக் கொள்வோம்.  ஆனால் அடுத்து எது பெரிசுன்னு தீர்ப்பை சொல்ல ஒரு அறிவியல் பாடம் எடுத்திருக்காரே, அதை ஒரு எட்டாம் கிளாஸ் பையனை கூப்பிட்டு காண்பித்தாலும் கைகொட்டி சிரிப்பான், காரி துப்புவான்.  சுட்டி.

சரி இதுக்கு அப்படி என்னதான் தீர்ப்பு என்ன சொல்ல வருகிறார்?  ஹைட்ரஜன் தான் இருப்பதிலேயே முக்கியமாம்.  காரணம்?  ரெண்டு ஹைட்ரஜன் சேர்ந்து Atomic Fusion ஆவதால் தான் சூரியனில் இருந்து வெளிச்சம் வருதாம். அதனால் தான்.  நமக்கு தூக்கிவாரிப் போட்டுடிச்சு.  என்னடா இது ஹைட்ரஜன் ஹீலியமா மாறுவதால் தானே சூரியன் போன்ற நட்சத்திரங்களில் வெளிச்சம் உருவாகுதுன்னு எட்டாம் கிளாசில் படிச்சோம்,  வெறும் ரெண்டு ஹைட்ரஜன் சேர்ந்தா எப்படி ஹீலியமா மாறும், எதை வச்சு இந்த எல்லாம் தெரிஞ்ச எல்லப்பன் இந்த அடி அடிக்கிறாருன்னு குழம்பிடுச்சு.

அவரு அதுக்கு போட்டிருந்த படத்தை பார்த்த அப்புறமா விளங்குச்சு. அதை  விக்கிபீடியாவில இருந்து எடுத்திருக்கார் !!  சரி எடுத்தாரு போட்டாரு, அங்கே சொல்லியிருப்பதை இவரு புரிஞ்சிகிட்டாரா என்றால் அங்கதான் இடிக்குது.   ஹைட்ரஜன் ஹீலியமாக மாறும் சுழற்சிக்குப் பெயர், proton–proton chain reaction.

The proton–proton chain reaction is one of several fusion reactions by which stars convert hydrogen to helium.

இதில் proton–proton என்ற வார்த்தையை படித்த இந்த மாங்கா ரெண்டு புரோட்டான் சேர்ந்து ஹீலியமா மாறுதுன்னு அதுவாவே அர்த்தம் பண்ணிகிச்சு, அப்படியே பதிவும் போட்டுடுச்சு. 
இந்த படத்தில் மொத்தம் ஆறு ஹைட்ரஜன் அணுக்கள் [சிவப்பு வண்ணம்] ஈடுபட்டுள்ளன, வினையின் முடிவில் அவற்றில் நான்கு ஹீலியம் அணு உருவாவதற்கு போக  இரண்டு ஹைட்ரஜன்அணுக்கள் மீதம் உள்ளது.   எல்லாம் தெரிஞ்ச எல்லப்பன் உண்மையில் ஒன்னு ரெண்டு எண்ணுவதிலேயே ஃ பெயில்!!  எதையும் யோசிப்பதில்லை, அல்லது பொறுமையாகப் படிப்பதும் இல்லை.  சும்மா அடித்து விடுவது.  இத்தனையும்  செய்துவிட்டு தான் எழுதுவதை படிக்க வரும் இளிச்சவா பயல்களை [Gullible] தான் எல்லாம் தெரிஞ்ச எல்லப்பன் என்று நம்ப வைப்பதில் கைதேர்ந்தவர் கொலாப்ஸ்!!விக்கிபீடியாவில் படிச்சிட்டு அந்த படத்தை அப்படியே எடுத்து பதிவில் போட்டுவிட்டு, அவன் சொல்லியிருப்பதை புரிந்துகொள்ளாமல் கேனத்தனமாக அர்த்தம் செய்துகொண்டு, தன்னுடைய முட்டாள் மண்டையில் பட்டதை எழுதும் மாமா கொலாப்ஸ் பிளீஸ்.......  வருண் தான் உண்மையிலேயே விக்கிநக்கி என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமானவர், அவரை விட பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது.

இந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு அடுத்தவர்களை விக்கிபீடியாவை மட்டும் படித்தவன் என்று ஏளனம் செய்வது சரியா? ஆனால், கொலாப்ஸ் வருண் அதையும் செய்வார், அதுமட்டுமல்ல தவறை ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார், தான் சொன்னது அத்தனையும் சரிதான்..... சரிதான்.........  என்று சப்பை கட்டும் கட்டுவார்.  அதுசரி, நக்குற நாய்க்கு செக்கு என்ன, சிவலிங்கம் என்ன.........?? எல்லாம் ஒன்னு தானே!!

5 comments :

 1. பாகவதரே,

  அதுக்குள்ள அடுத்த ரவுண்டா அவ்வ்!

  #//ஆனாலும் ஒரு சிலவற்றை பாக்கி வைக்காமல் முடிக்க வேண்டும் என்று நீதி நூல்கள் கூறுகின்றது. அவை, நெருப்பு, கடன், நோய், கொடிய எதிரி- இவற்றையெல்லாம் மிச்சம் வைக்காம காலி செய்துவிட வேண்டும், மிச்சம் வச்சா அது பின்னாடி நம்மையே காலி செய்துவிடும்//

  சாணக்கியப்பரம்பரையா நீர் ,சாணக்கியர் தான் காலில் குத்திய முட்செடி அல்லது தர்ப்பையினை வேரோடு பேர்த்து கொளுத்தி , இப்படி ஏதோ தத்துவம் சொன்னதா நினைவு!

  #//ஒரு கள்ள பெயரில் ஐ.டி . யை உருவாக்கி சொந்த பதிவிலேயே பின்னூட்டங்கள் போட்டுக் கொள்கிறார். அத்தோடு நில்லாமல் தனியாக வவ்வாலை தாக்குவதற்கென்றே ஒரு பிளாக்கையும் ஆரம்பித்து வைத்திருக்கிறார்//

  மாமா பத்தி ஒரு ரகசியம் இருக்கு கன்ஃபர்ம் செய்துக்கொண்டு சொல்லலாம்னு இருக்கேன், அது மட்டும் உண்மையாக இருக்குமானால் "அவர் ஒரு டேஞ்சரஸ் ஃபெல்லோ" என தாராளமாக சொல்லலாம்.

  பல ஐடில கமெண்ட் போடுற வேலை செய்றார்னு லேசாக்கண்டுப்பிடிச்சு இருக்கேன், பழையப்பதிவுகளை தேடிக்கிட்டு இருக்கேன் ,விரைவில் அம்பலமாக்குகிறேன்.

  #//விக்கிநக்கி" என்ற ஒரு தரங்கெட்ட புது வார்த்தையைப் பயன்படுத்தி அழைக்கிறார். ஆனால் உண்மையில் யார் விக்கிநக்கி என்பதைத்தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.//

  ஹி..ஹி விக்கி நக்கி என்ற சொல்க்கூட அவரு சொந்தமாக உருவாக்கினதில்லை, ஹைட்ரஜன் ஃபியுஷன் படம் விக்கியில் இருந்து எடுத்து பதிவு எழுதியதை குறிப்பிட்டு விக்கியில் நக்கி தானே பதிவு போட்டீர் என்ன பார்த்து விக்கிமேதைனு சொல்லுறது செம காமெடினு ஒரு பின்னூட்ட்ம் போட்டேன் ,வழக்கம் போல அதனை வெளியிடாமல் ,எனக்கே "விக்கி நக்கி" எனப்பேர் வைக்கப்பார்க்கிறார் அவ்வ்.

  திட்டக்கூட அடுத்தவனைப்பார்த்து தான் காப்பி அடிக்கிறார் :-))

  #//வருண் தான் உண்மையிலேயே விக்கிநக்கி என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமானவர், அவரை விட பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது. //

  நானும் இதனை வழிமொழிகிறேன்!

  அதுவும் அறைகுறையாக நக்கிப்பதிவு போடுவார் என்பதை கவனத்தில் கொள்ளணும் அவ்வ்!

  ReplyDelete
 2. ஜெயதேவ்! போதும் நிறுத்துங்க எல்லாத்தையும் நிறுத்துங்க!

  ReplyDelete
 3. ரெண்டு ஹைட்ரஜன் ஒரு ஆக்சிஜனுக்கே இத்தனை குத்து வெட்டு.. அதுக்கும் மேலயும் இருந்துட்டா? நெனக்கவே படு திகிலா இருக்கு. யார் யாரெல்லாம் பாயப் பிறாண்டப் போறாங்களோன்னு தெரியலியே.

  ReplyDelete
 4. இதோ இன்னுமொரு விஞ்ஞானப் பதிவு.

  http://timeforsomelove.blogspot.de/2011/11/blog-post.html

  ReplyDelete
 5. நல்ல பதிவுகளை சுயமாய் ஆக்கபூர்வமா எழுதும் jay, இந்த மாதிரி தேவயில்லாத விஷயங்களில் மாட்டி தனது சக்தியை இழக்க கூடாது. பாஸிடிவ் energy உள்ளவர் நீங்கள், இனிமேல் அருமையான சுவாரசிய பதிவுகளை எதிர் பார்க்கிறோம். வாழ்க வளமுடன்.

  ReplyDelete