Monday, May 5, 2014

கொலாப்ஸ் பிளீஸ்.........!! புலித்தோல் போர்த்திய பூனை!!

வணக்கம் மக்கள்ஸ்!!

இந்தப் பதிவில் நம்மை வம்பிக்கிழுத்த ஒருத்தருக்கு கணக்கு செட்டில் செய்யப் போகிறோம்.  வம்பு சண்டை வேண்டாம்பா என்பவர்களும், மென்மையான உள்ளம் கொண்டவர்களும் ஒரு ஸ்டெப் பேக் ஆகிக்கோங்க.....  டென்ஷனாகாதீங்க "ரிலாக்ஸ் பிளீஸ்............!!"

முதலில் பிரச்சினையின் பின்னணி என்ன என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.  [வரலாறு முக்கியம் அமைச்சரே!!]

"கொலாப்ஸ் பிளீஸ்............!!"  என்ற வலைப்பூ உங்களில்  தெரிந்திருக்கும்.  நாம் வலைப்பூ ஆரம்பிப்பதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பே அதற்கு வாசகராக இருந்துள்ளோம், பல பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டுள்ளோம்.  அதன் ஓனர் "கொலாப்ஸ்" அவரும் நம் கடைக்கு அவ்வப்போது வருவார்.


நாம் ஆத்தீகர், அவர் நாத்தீகர் [அப்படின்னு சொல்லிக்கிறார்!!].  எனவே நமக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள்  தவிர்க்க முடியாதவை.

ஆனாலும் பொதுவாகவே,

 • அவர்  கருத்துக்கள் அத்தனையும் வெளியிட்டிருக்கிறோம், ஒருபோதும் எதையும் நீக்கியதில்லை.
 • முடிந்தவரை நமது பதிலை, நிலைப்பாட்டை, அவை அவருக்கு ஏற்கத் தக்கதாக இல்லாவிடினும், சொல்லியே வந்திருக்கிறோம்.
 • அவரை எதிர்த்து ஒருபோதும் கடுஞ் சொற்களைப் பயன்படுத்தியதில்லை.

மொத்தத்தில் அவரது கருத்துகளை  நமது பதிவில் வெளியிட முழு சுதந்திரம் கொடுத்தே வந்துள்ளோம்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நாம்,

‘கூமுட்டை’யின் ‘கூரு’ கெட்ட எட்டு கேள்விகளுக்கு பதில்கள்...............

என்று  ஒரு பதிவை வெளியிட்டிருந்தோம்.  அதில் "கொலாப்ஸ்" பின்னூட்டமிட்டிருந்தார்.  நாமும் வழக்கம் போல பதிலும் தந்தோம்.  என்ன ஆயிற்றோ தெரியாது.  குடு.....குடுன்னு... அவரது கடைக்கு ஓடினார், நம்மை கன்னா........பின்னாவென்று கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டி ஒரு எதிர் பதிவைப் போட்டார்.  சுட்டி.

நல்லா கவனிக்கணும், இவர் இந்த மாதிரி வேலை செய்வது இது முதல்முறை அல்ல, மேலும் இவர் சண்டையிடுபவர்கள் எல்லோரும் வம்பிழுப்பவர்களும் அல்ல.  நமக்கு முன்னாடி வீடு திரும்பல் மோகன் குமாரிடம் சண்டைபோட்டு அவருடைய பதிவில் போட்டிருந்த பின்னூட்டங்கள் அத்தனையும் அழித்துவிட்டு "உன் கூட கா.........." என்று திட்டிவிட்டு ஓடி வந்திருக்கிறார்.  மோகன்குமார் யாரிடமும் வம்புசண்டைக்கு போகாதவர், அன்பானவர், புதியவர்களை ஆதரிப்பவர்.  ஏதோ நாம் தான் வம்பிழுக்கிறோம் சண்டை போட்டார், ஆனால் மோகன்குமார்?

நமக்குப் பின்னும் இவர் இன்னொருத்தரை நொந்து போக வைத்திருக்கிறார்.  அவரோ இன்னமும் வெள்ளந்தி, பதிவர் தமிழ் இளங்கோ. என்னதான் ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் பின்னூட்டமிட்டாலும் பொறுமையாகவே பதில் சொல்லுவார்.  அவரையே பொறுமையிழக்கச் செய்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!!  கொலாப்ஸ் பதிவிற்கு சுட்டி.  இந்தப் பதிவிற்கு மெண்டல், லூசு போன்ற வார்த்தைகளை தனது பதிவில் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்ப்படுத்திய பெருமை கொலப்சையே சாரும்.  தமிழ் இளங்கோவின் பதிவு சுட்டி.

பதிவர் தமிழ் இளங்கோ நொந்து போய் பதிவு போட்டதும் கொலாப்சுக்கு ரொம்ப சந்தோசம்.  அப்படி மகிழ்ச்சியா கொலாப்ஸ் போட்ட பதிவு சுட்டி.

ஒருவரது எழுத்துக்களை வைத்தும் அந்த நபரைப் பற்றி சில குணாதிசயங்களைப் புரிந்துகொள்ள முடியும்.  அன்பர் கொலப்சின் எழுத்துக்களைப் படிக்கும் போது அவர் வம்புசண்டைக்குப் போகக் கூடிய ஆள் இல்லை.  மென்மையானவர், ஆனால் வடிவேலு "நானும் ரவுடி தான்" என்பது போல, வம்பு சண்டைக்காரன் என்ற பிம்பத்தை வெளிப்படையாக உருவாக்க நினைக்கிறார்.  அது ஏன் என்பது மட்டும்  விளங்கவில்லை. ஒரு பூனை புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயமுறுத்த நினைக்கிறது, ஆனால் அதனால்  புலி போல கர்ஜிக்க முடியவில்லை, "மியாவ்..........மியாவ்.........." என்றே கத்தி காமடி செய்கிறது!!


இதையெல்லாம் வச்சிப் பார்க்கும் போது ஒன்னு மட்டும் தெளிவா புரியுது.  அன்பர் கொலப்சுக்கு இருப்பது ஒருவித மனோ வியாதி.  எங்கேயாச்சும் போய் தினமும் வம்பு சண்டை இழுக்க வேண்டும்.  அது யாராக இருந்தாலும் கவலையில்லை.  சாதுவா இருக்கிறவங்களை கீழ்த்தரமான வார்த்தைகளை பேச வைக்க வேண்டும்.  உடனே இவருக்கு ரொம்ப சந்தோசம்.  இதற்கு காரணம் பதிவர் வவ்வாலு சொன்னாரு, அமரிக்காவில் வேலை செய்யும் கொலாப்சை அவரது முதலாளி வெள்ளைக்கார துரை  போட்டு வறுத்தெடுக்கிறார் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை இங்கே பதிவுலகில் வந்து கொட்டுகிறார்".  எனக்கென்னவோ இது கூட சரியாத்தான் இருக்கும் போலத் தோணுது.

ஐயா, மனோ தத்துவ நிபுணர்களே இந்த வியாதிக்கு பேரு என்ன, அதுக்கு தீர்வு என்ன?  கண்டுபிடிச்சு இந்த கொலப்சை சரி பண்ணுங்கப்பா..........  தொல்லை தாங்க முடியவில்லை!!

14 comments :

 1. அட ராமா................. பூனையை வம்புச்சண்டை போடும் வகைன்னு சொன்னது, நம்ம ரஜ்ஜூவுக்கு (ராஜலக்‌ஷ்மி) வருத்தமா இருக்காம், ம்யாவ் ம்யாவ்.

  மத்தபடி நீங்க எழுதிய விவரங்கள் 'ஙே' .............. எப்போ நடந்தது இதெல்லாம்:(

  ReplyDelete
 2. @ துளசி கோபால்

  நம்மை திட்டி பதிவு போட்டது போன டிசம்பரில்.

  தமிழ் இளங்கோவிடம் லந்து பண்ணியது April 2014.

  [எல்லாம் பதிவு தேதிகளை வச்சு சொல்றேன்!!]

  மோகன் குமார் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நாள் போனில் இவர் வேலையைச் சொன்னார்.

  இப்போ ஒரு அறிவியல் தத்துவ பதிவு போட்டிருக்காரு படிச்சு பாருங்க மேடம்!!

  http://timeforsomelove.blogspot.in/2014/04/blog-post_28.html

  அதில் வவ்வால் பின்னூட்டங்களையும் கண்டிப்பாகப் படியுங்கள், சுவராஷ்யமாக இருக்கும்.

  அதற்க்கு நமது பதிவு:

  http://jayadevdas.blogspot.com/2014/05/blog-post.html

  ReplyDelete
 3. பாகவதரே,

  கொலாப்ஸ் மாமாவுக்கு பி.பீ ஏறி ஒரு நாள் உண்மையிலே கொலாப்ஸ் ஆகப்போறார் அவ்வ்!

  # அந்தாளே விக்கியில நக்கி எழுதிட்டு ஊருல இருக்கவன கொறை சொல்லிட்டு திரியுது, அதுவும் தப்பா வேற எழுதிட்டு அவ்வ்!

  # இத்தினிக்கும் எனது சிலப்பின்னூட்டங்களை வெளியிடலை, மொத்தமா டவுசர உருவினது தெரிஞ்சு போயிடும்னு , மறைச்சிடுச்சு.

  அந்தப்பதிவு வரிக்கு அபத்தக்களஞ்சியம்.

  ஹி...ஹி அந்த மாமா ஏன் கமெண்ட் மாடரேஷன் வச்சிருக்குனு கேட்டுப்பாரும், அதுக்கும் ஏன் கொடைச்சல் தான் காரணம், முன்ன போட்டப்போடு , இன்னும் பயம் தெளியலை ஆனால் ஊருக்குள்ள தான் தான் சண்டியருனு 'வடிவேலை' விட மகாகேவலமா பில்ட் அப் அவ்வ்!

  ReplyDelete
  Replies
  1. \\# இத்தினிக்கும் எனது சிலப்பின்னூட்டங்களை வெளியிடலை, மொத்தமா டவுசர உருவினது தெரிஞ்சு போயிடும்னு , மறைச்சிடுச்சு.\\

   அப்படியா சேதி.......!! வவ்ஸ் நீ ஒரு வேலை பண்ணு. அந்த பயிண்டெல்லாம் save பண்ணி வச்சிருந்தா இங்கே பேஸ்டு பண்ணு, நான் அது என்னென்ன உளறிகொட்டி வச்சிருக்குதுன்னு அடுத்து ஒரு பதிவு போடனும் அதுக்கு யூஸ்புல்லா இருக்கும்.

   Delete
 4. இவர் அடிக்கடி எல்லோரையும் வம்புக்கு இழுத்து கொண்டிருப்பார். நானும் அவர் கையில் சிக்கி இருக்கிறேன்! ஆனால் அந்த விஷயமே எனக்கு பிறகுதான் தெரிந்தது. இதையெல்லாம் கடந்து தான் இணையத்தில் உலா வர வேண்டியிருக்கிறது! நன்றி!

  ReplyDelete
 5. இவர் சீண்டாத ஆளில்லை என்று நினைக்கிறேன். வெளிப்படையாக பேசுபவன் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு திரிபவர். பழைய பதிவுகளில் பார்க்கவும். சில சமயம் இவரே அனானியாக கேள்வி கேட்டு பதில் சொல்லிக் கொள்வார். இவர் போடும் 10 பதிவுகளில் 9 பதிவுகள் அடுத்தவரை பற்றிய ஒப்பாரியாகவே தான் இருக்கும்.

  //யா, மனோ தத்துவ நிபுணர்களே இந்த வியாதிக்கு பேரு என்ன, அதுக்கு தீர்வு என்ன? //
  இவருக்கு மனவியாதி இல்லை. ஏதோ முத்திப்போன மூலவியாதி என்று நினைக்கிறேன். அதான் ஆத்த முடியாம இந்த கத்து கத்துரார். வாணியம்பாடி அப்துல்காதர் கிட்ட காட்ட சொல்லுங்க. இல்லாட்டி பச்சமொளகா லேகியத்தை பல்லுல படாம பத்து நாள் சாப்பிடச் சொல்லுங்க.

  ReplyDelete
 6. மாப்ளே,

  நீர் இன்னும் இதில் இருந்து வெளியே வரவில்லையா.

  ""பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்""".

  கருத்து வேறுபாடு இயல்புதான்.இதை விட்டு உருப்படியா எதாவது எழுதும்.

  நீர் அனானி என் குறிப்பிட்டது அவர் இல்லை,அவ்வளவுதான்!!

  சோதிடம் ஒரு விஞ்ஞானம் என ஒரு நகைச்சுவை பதிவு போடும்.

  நன்றி!!

  ReplyDelete
 7. @ சார்வாகன்

  மாமூல் மாமு,

  அங்க ஒரு நாதாரி எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் எல்லோரையும் நோகடிக்கிற மாதிரி வேலையை பண்ணிக்கிட்டு இருக்கான், தளிர் சுரேஷை கூட விட்டுவைக்கவில்லை. அவனைப் பார்த்து புத்திமதி சொல்ல மனமில்லை. அவன் பதிவில் வண்டி வண்டியா புளுகியிருக்கான் அதை தப்புன்னு சொல்ல உங்களுக்கு இஷ்டமில்லை, மாறாக அது சரிதான்னு வியாக்யானம் குடுத்துகிட்டு இருக்கீங்க. நேர்மையில மனுநீதி சோழன் உங்ககிட்ட தோத்தான் போங்க.

  ReplyDelete
 8. 1. ஆத்திகம் நல்லதல்ல... ஆனால் போலி நாத்திகம் ஆபத்தானது.

  2. …நாத்தீகம் நல்லதல்ல... ஆனால் போலி ஆன்மீகம் ஆபத்தானது.

  …இந்த இரண்டில் எது சரி?

  …என்னைப் பொறுத்தவரை ரெண்டுமே சரி.

  …ஆத்திகமும், நாத்திகமும் போலியாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. உண்மையான ஆத்திகவாதிகள் என்று யாரும் இல்லை. அதேபோல் உண்மையான நாத்திகவாதிகள் என்றும் யாரும் இல்லை.

  …இஸ்கான் கும்பல் ஆத்திகவாதிகள் கிடையாது...பெரியார் கும்பல் நாத்திகவாதிகள் கிடையாது. ரெண்டு கும்பலும் பிழைப்புவாதிகள். எங்கே வந்து சொல்லச்சொன்னாலும் இதைத்தான் சொல்வேன்.

  ReplyDelete
 9. @ ராவணன்

  \\…ஆத்திகமும், நாத்திகமும் போலியாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. உண்மையான ஆத்திகவாதிகள் என்று யாரும் இல்லை. அதேபோல் உண்மையான நாத்திகவாதிகள் என்றும் யாரும் இல்லை. \\ அரிய கண்டுபிடிப்பு ஏதாவது பரிசு நிச்சயம்.

  \\…இஸ்கான் கும்பல் ஆத்திகவாதிகள் கிடையாது...பெரியார் கும்பல் நாத்திகவாதிகள் கிடையாது. ரெண்டு கும்பலும் பிழைப்புவாதிகள். எங்கே வந்து சொல்லச்சொன்னாலும் இதைத்தான் சொல்வேன்.\\

  ராவணன் எல்லாம் தெரிஞ்சவர் இல்லை.
  ராவணன் பிறந்ததில் இருந்து தப்பே செய்யாதவர் இல்லை.
  ராவணன் போல அறிவாலியே இல்லை என்றோ, எல்லாம் அறிந்தவர்/தெரிந்தவர் என்றோ தைரியமாக அடித்து சத்தியம் செய்வதற்கில்லை.
  "இத்தனை நாளா முட்டாளா இருந்திருக்கோமேடா" என்று ராவணன் வாழ்வில் ஒரு முறை கூட நினைக்கவில்லை என்று சொல்வதற்கில்லை.
  ராவணன் சொல்வது ஒரு போதும் பொய்க்காது என்றும் சொல்வதற்கில்லை.

  மொத்தத்தில் ராவணன் எல்லோரையும் போல வெந்ததைத் தின்றுவிட்டு வாயில் வந்ததைப் பேசும் ஒரு சராசரி மனிதன். அவருக்கு கருத்துக்களைச் சொல்ல சுதந்திரம் இருக்கிறது, ஆயினும் மேற்கண்ட காரணங்களால் அவை உண்மையாக இருக்க வேண்டுமென்றோ அதை நாம் ஏற்றே தீர வேண்டுமென்றோ எந்த கட்டாயமுமில்லை.

  ReplyDelete
 10. இன்னுமும் பஞ்சயத்து முடியலயா? நீங்க செய்த வேலையால அவருக்கு ஸ்பிலிட் பெர்சனாலிட்டி வந்து அவருக்கு அவரே பதில் சொல்லிட்டு இருக்காரு. அன்னியன் மாதிரி ஒரு அனந்து.

  ReplyDelete
  Replies
  1. ஐயையோ ............ பிசாசு..... நீங்க சொன்னத முன்னாடி நான் சரியா புரிஞ்சுக்கல, இப்பத்தான் பாத்தேன்......... நன்னாரிப் பய இந்த வேலையை பண்ணியிருக்கானே................

   Delete
 11. @ குட்டிபிசாசு

  எட்டாம் கிளாஸ் புத்தகத்தில் இருக்கும் விஷயத்தை எல்லாம் தப்பு தப்பா போட்டு வவ்வால்கிட்ட எசகு பிசகா மாட்டிகிட்டு முழிக்குது.......!! என்னத்த சொல்ல!!

  ReplyDelete