Friday, May 2, 2014

உயிர் வாழ முக்கியம் எது ? நாட்டாமை கொலாப்ஸ் பிளீஸ்.............தீர்ப்பு!!

வணக்கம் மக்கள்ஸ்!!

கிராமங்களில் ஒரு கதை சொல்வார்கள்.  ஒரு பெண் எப்போதும் ஒரு கூடையை தலையில் சுமந்து செல்வாளாம்.  அதில் என்ன விசே ஷமாக இருக்கும்?  ஒரு விளக்குமாறும் ஒரு முறமும் இருக்கும்.  எதுக்கு இதெல்லாம்?  அவருக்கு வம்பு சண்டை போடுவதென்றால் ரொம்ப விருப்பம்.  சண்டை போடத் தேவையான "ஆயுதங்களை" எந்த நேரமும் அவருடைய கூடையிலே தயாராக வைத்திருப்பார்.   சண்டை போடாவிட்டால் தலையே வெடித்துவிடும்.  இதையறிந்து அவ்வூர் பெண்கள் அவரிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டனர்.  அந்நிலையில் ஒரு நாள் அவருக்கு யாரும் சண்டைபோட கிடைக்கவில்லை.   அன்றைக்கு யாரோ ஒரு அம்மா, ஊருக்கு புதியவர், தெரியாமல் அவரைப் பார்த்து, "ஏம்மா எப்போ பார்த்தாலும் அந்த கூடையை தலையிலேயே சுமந்துகிட்டு இருக்கீங்க, இறக்கி வச்சிட்டு கொஞ்ச நேரம் உட்காருங்களேன்?" என்று தெரியாமல் சொல்லிவிட்டார்களாம்.  "ஆஹா.....  வந்துதடி சண்டை, இறக்கடி கூடையை" என்று கூடையை இறக்கி வைத்துவிட்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, "என்னைப் பார்த்து கூடையை எதுக்கு சுமக்கிறாய்ன்னு நீ எப்படிடீ கேட்கலாம்?" என்று ஆரம்பித்து கூச்சல் போட்டு வீதியில் உருண்டு புரண்டு சண்டையை போட்ட பின்னர் தான் அன்றைக்கு தூக்கமே வந்ததாம்!!

இப்படி ஒரு பதிவர் இருந்தா எப்படி இருக்கும்?!!  அவர் தான் கொலாப்ஸ் பிளீஸ்........... என்ற வலைப்பூவின் ஓனர்,  எல்லோரையும் ரிலாக்ஸ் பிளீஸ்........ன்னு சொல்லிட்டு இவரு எப்ப பாத்தாலும் டெண்ஷானவே திரியறாரு.  சில தினங்களுக்கு முன்னாடி ஒரு பதிவு போட்டிருக்காரு.  அதுக்கு பதிவர் வவ்வால் வந்து வேண்டிய குடைச்சலை குடுத்திட்டு போயிருக்காரு, அதிலேயே ஆள் ஒரு வழியாயிட்டாரு.  ஏன்னா எழுதியது அவ்வளவு மரண மொக்கை அத்தனையும் உண்மைக்குப் புறம்பானவை.  சரி நம்ம பங்குக்கு எதாச்சும் பண்ணணுமில்லையா, அதான் இந்த பதிவு.

இவரு ஒரு படத்தை போட்டிருக்காரு.  சூரியனின் வெளிச்சம் உண்டாவது எப்படி என்பதுதான் இவரு விளக்கியிருக்காரு.  இதோ அந்த படம்.

இரண்டு ஹைட்ரஜன் அனுக்கள் சேந்து நியூக்ளியர் ஃப்யூஷன் ரியாக்சன்.

படத்துக்கு கீழே எழுதியிருப்பது நானில்லைங்க, அவரேதான்.  [சூரியனில் இருந்து ஒளி எவ்வாறு உருவாகிறது என்பதை இந்தப் படத்தை வச்சு இவரு விளக்குகிறாராம்!! ]  இரண்டு ஹைட்ரஜன்அணுக்கள் சேர்ந்து ரியாக்சன் நடக்குதாம்.  ஆனால் சரியாக கவனித்தால் இரண்டுக்கும் மேலே ஹைட்ரஜன்அணுக்கள் உள்ளன என்பது புரியும். சிவப்பு வண்ணத்தில் உள்ளவை ஹைட்ரஜன் அணுக்கள் என்றால் மொத்தம் ஆறு ஹைட்ரஜன் அணுக்கள் மேற்கண்ட வினையில் ஈடுபட்டுள்ளன.  ஆனால் இந்த முண்டம் ரெண்டு என்று சொல்கிறது.

சூரியனில் வெளிச்சம் உருவாவது ஹைட்ரஜன் அணுக்கள், ஹீலியம் அணுவாக மாறுவதால் தான் என்று எடுத்துக் கொண்டால்  கூட நான்கு ஹைட்ரஜன்அணுக்கள் சேர்ந்து ஒரு ஹீலியமாக மாறுகிறது என்று தான் பொருள்படும்.  எதை வச்சு இந்த முண்டம் ரெண்டுன்னு சொல்லுதுன்னுதான் புரியலை.

சரி அது போகட்டும், அடுத்து ஹைட்ரஜன் சொல்லிச்சாம்,

 " நாந்தான் ஹைட்ரஜன். என்னை அழித்துக்கொண்டுதான் நான் ஒளி உருவாக்குறேன்."

இங்க தான் கவனிக்கணும்.  ஹைட்ரஜன் எங்கே அழிந்தது?  ஹைட்ரஜன் அணுக்கருவில்  இருந்தது புரோட்டன் மட்டுமே, அவை ஹீலியத்தில் புரோட்டான்களாகவும், நியூட்ரான்களாகவும் அப்படியேதானே இருக்கின்றன, எங்கே அழிந்தன?

இது எப்படி இருக்குன்னா,

"மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை குடிக்காதீங்க"  என்றானாம் ஒருத்தன்.

"ஏன்?"

"அந்த தண்ணீரில் இருந்து மின்சாரம் எடுப்பதால் அந்தத் தண்ணீரில் இருந்த மினரல்ஸ் எல்லாம் போயிடுச்சு, அதனால் குடிக்காதீங்க"  என்றானாம்.

இவரு விடும் கதையும் அப்படித்தான் இருக்கு!!

அடுத்தது இவரு கருத்து கந்தசாமியாகும் முக்கிய பார்ட்.

உலகில் எது முக்கியம்?  ஹைட்ரஜனா, ஆக்சிஜனா அல்லது தங்கமா?

"சூரியனில் உண்டாகும் ஒளிக்கு காரணம் நான் எனவே நானே பெரியவன்"-ஹைட்ரஜன்.

"உயிர் வாழ பிராண வாயு நான் தானே முக்கியம், அதனால் நான்"-ஆக்சிஜன்.

"உங்க எல்லோரையும் விட அழகு நான் தான், மக்கள் எனக்குத்தான் முக்கியத்துவம் தர்றாங்க, எனவே நான் தானே முக்கியம்?"- இது தங்கம்.

சரி நாட்டமை கொலாப்ஸ் கொடுக்கும் தீர்ப்பு என்ன?

"ஒளி இல்லாட்டி மத்த இரண்டும் இருந்தும் பிரயோஜனம் இல்லை, எனவே ஹைட்ரஜனே பெரியவன்!!"

ஐயையோ ......... என்ன கீழே உருண்டு புரண்டு சிரிக்கிறீங்க?  அவரு இதோட நிறுத்தவில்லைங்க, இதை வச்சு இன்னொரு வாழ்க்கை தத்துவத்தையும் சொல்லியிருக்கார்!!  அது என்னன்னு சொல்லும் அளவுக்கு நமக்கு மசாலா இல்லீங்க.

ஆனா ஒன்னு,  இந்த சூரியனில் ஒளி எப்படி வந்துச்சு, அதுக்கு அடிப்படை ஹைட்ரஜன் தான் என்பதைக் கண்டுபிடிச்ச இந்த மாங்கா, ஆக்சிஜன், தங்கம் இதெல்லாம் எதிலிருந்து வந்துச்சுன்னு ஆராய்ச்சி பண்ணாம போயிடுச்சு, அப்படி யோசிச்சு இது பதிலை தேடியிருந்தா மேலே மூணு அணுக்களுக்கும் நடுவில சண்டையே வந்திருக்காதே!!

சரி, இந்த மொக்கை பதிவை படிச்சதுக்கு ஒரு பயனுள்ள தகவல்:

ஹைட்ரஜன் அணுக்கள் சேர்ந்து ஹீலியம் அணுவாக மாறுவதால் உண்டாகும் காமா கதிர் வடிவிலான ஆற்றல் ஒளியாக சூரியனின் மேற்ப்பரப்பை அடைய ஆகும் காலம் எவ்வளவு?

10,000 வருடங்கள் முதல் 1,70,000 வருடங்கள் வரை!!

சூரியனின் மேற்ப்பரப்பில் இருந்து நம்மை அடைய?

எட்டே நிமிடங்கள்!!

எனவே தற்போது நம்மீது விழும்சூரிய ஒளி குறைந்த பட்சம் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் உருவானது!!

இந்த வினாடியில் சூரியனை எடுத்து விட்டாலும் அடுத்த எட்டு நிமிடங்களுக்கு நம்மால் சூரியனைப் பார்க்க முடியும்!! 20 comments :

 1. மாப்ளே,
  உமக்கு அறிவோ, அறிவு!!
  ஒரு அறிவியல் அல்லது வரலாறு பதிவு எழுதும் போது மூல சுட்டிகள் இணைப்பு கொடுத்து சரிபார்க்கும் படி எழுதனும் என சொன்னால் காதில் வாங்கவே மாட்டீர்.
  சரி நீர் எடுத்த பதிவின் மூலச் சுட்டியின் விக்கி பாரும். புரோட்டா பத்தி எழுதுவது மாதிரி புரோட்டான் பற்றி எழுதாதீர்!!!
  http://en.wikipedia.org/wiki/Proton%E2%80%93proton_chain_reaction

  1.புரோட்டான் ,புரோட்டான் வினை என்பது தொடர் வினை(செயின் ரியாக்கசன்) என்பதை உம்ம நண்பர் (தொடக்கத்தில்)இரு ஹைட்ரஜன் என சொல்லி இருக்கிறார். நீர் புரோட்டா(னைor வை) எண்ணி மொத்தம் 6 என்கிறீர்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  இது அவ்வளவு சுளுவான விடயம் அல்ல, ஹைட்ரஜன் ,ஹீலியமாக மாற 4 வழி இருக்கிறதாம், இதுக்கு 1967ல் நோபல் பரிசு கொடுத்தார்கள்!!!
  ம்ம்ம்ம்
  கவுண்டமணி செந்தில் எல்லாம் தோ த்தாங்கய்யா!!!

  இதுதான் ஃபிஸ்ஸன் இதில் இருந்துதான் பளீர் என் வெளிச்சம் வரும் !!
  Watch this!!!
  http://www.youtube.com/watch?v=Xve8mF14mjI
  2.// ஹைட்ரஜன் எங்கே அழிந்தது? ஹைட்ரஜ அணுக்கருவில் இருந்தது புரோட்டன் மட்டுமே, அவை ஹீலியத்தில் புரோட்டான்களாகவும், நியூட்ரான்களாகவும் அப்படியேதானே இருக்கின்றன, எங்கே அழிந்தன?//
  ஹைட்ரஜன் ஹீலியமாக மாறியதை அப்படி சொன்னால் நீர் ஹைர்டஜன் அழிந்து விட்டது என விளங்கினால் என்ன செய்வது??
  படைத்தல், அழித்தல் என்பதே கிடையாது, மாற்றம் மட்டுமே,ஆனால் பகவான் செய்தார் என நம்புவீர்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
  அப்புறம் அட்சய திருதயைக்கு சோதிடம் பார்த்து எவ்வளவு தங்கம் வாங்குறீர்!!!!
  சிந்திக்க மாட்டீரா???


  நன்றி!!!!

  ReplyDelete
  Replies
  1. \\ஒரு அறிவியல் அல்லது வரலாறு பதிவு எழுதும் போது மூல சுட்டிகள் இணைப்பு கொடுத்து சரிபார்க்கும் படி எழுதனும் என சொன்னால் காதில் வாங்கவே மாட்டீர்.\\

   நீங்க என்ன வாயில் விரலை வைத்தால் கடிக்கக் கூடத் தெரியாத பாப்பாவா? படத்தை வச்சு விக்கீபீடியா போன உங்களுக்கு கொலாப்ஸ் பிளீஸ் தளம் தெரியாதா?

   \\புரோட்டான் ,புரோட்டான் வினை என்பது தொடர் வினை(செயின் ரியாக்கசன்) என்பதை உம்ம நண்பர் (தொடக்கத்தில்)இரு ஹைட்ரஜன் என சொல்லி இருக்கிறார்.\\

   அவரு பதிவு போடுவாரு, பின்னாடியே நீங்க அதை எப்படி புரிஞ்சிக்கனும்னு ஒரு கோனார் நோட்ஸ் போடுவீராக்கும். நல்லா குடுத்தீரைய்யா டீடெயிலு ................

   \\நீர் புரோட்டா(னைor வை) எண்ணி மொத்தம் 6 என்கிறீர்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   இது அவ்வளவு சுளுவான விடயம் அல்ல, ஹைட்ரஜன் ,ஹீலியமாக மாற 4 வழி இருக்கிறதாம், இதுக்கு 1967ல் நோபல் பரிசு கொடுத்தார்கள்!!!\\

   எத்தனை வழி இருந்தால் என்ன? இறுதியில் என்ன ஆயிற்று என்பது தானே கணக்கு? கடைசியா ஹீலியம் உருவாச்சு, அதுக்கு நாலு ஹைட்ரஜன் அணுக்கள் தேவை. அது சரி, அந்தாளு போட்ட படத்தில அந்த நாலு வழிகள் எங்கே? இதற்கு அவரது செம்பு தூக்கியாக இங்கே வந்திருக்கும் உமது பதில் என்ன?


   \\
   இதுதான் ஃபிஸ்ஸன் இதில் இருந்துதான் பளீர் என் வெளிச்சம் வரும் !!
   Watch this!!!
   http://www.youtube.com/watch?v=Xve8mF14mjI

   \\

   மாமு, மானங்கெட்ட மாமு, மதிகெட்ட மாமு, மக்கு மாமு அதுக்குப் பேரு ஃபிஸ்ஸன் இல்லை, ஃ பியூஷன். இந்த யோக்யதையில் இருந்துகிட்டு கொலப்சுக்கு செம்பு தூக்க வந்திட்டீரு .........

   உம்மிடம் கவுண்டமணி செந்தில் மாத்திரம் இல்லை, வடிவேலு, விவேக், சந்தானம் எல்லாம் சேர்ந்து தோ த்தாங்கய்யா!!!

   \\ஹைட்ரஜன் ஹீலியமாக மாறியதை அப்படி சொன்னால் நீர் ஹைர்டஜன் அழிந்து விட்டது என விளங்கினால் என்ன செய்வது??\\

   மாமு, நல்லா கண்ணை கழுவிட்டு பாரு "அழிந்து விட்டது" என்று நான் சொல்லவில்லை, அந்தாளு தான் எழுதியிருக்காரு. கழுதைன்னு எழுதினா குதிரைன்னு அர்த்தம் பண்ணிக்கனும்னு கோனார் நோட்ஸ் போட்டால் உலகத்தில் எதுவுமே தப்பேயில்லை. ஆனால் மாமு நண்பனுக்காக மொத்த ஈன மானத்தை நீங்கள் இழக்க முடிவு செய்திருப்பது வெட்கக் கேடு...............

   \\அப்புறம் அட்சய திருதயைக்கு சோதிடம் பார்த்து எவ்வளவு தங்கம் வாங்குறீர்!!!!
   \\

   போன அட்சய திரிதியைக்கு மஞ்சளும் [தங்கத்திற்குப் பதில்], உப்பும் [வெள்ளிக்குப் பதில்] வாங்கி வந்தேன். ஹி ............ஹி ............ஹி ............

   \\
   சிந்திக்க மாட்டீரா???\\ மூக்கு சிந்தவே மாட்டீரா??????????

   Delete
  2. மாப்ளே,
   அது ஃபியுசன்தான்(fusion),
   தவறாக சொல்லி விட்டேன். மன்னிக்கவும்.

   மீண்டும் சொல்கிறேன், இந்த விடயம் அவ்வளவு சுலபம் அல்ல, 6 ஹைடரஜன் சேர்ந்து 1 ஹீலியம் ஆகிறது,அல்லது 12 ஹைட்ரஜன் சேர்ந்து இரு ஹீலியம் அணுக்கள் கொண்ட ஒரு மூலக்கூறு உருவாகிறது என சொல்லி விட்டுப் போக முடியாது!!!
   http://www.astrophysicsspectator.com/topics/stars/FusionHydrogen.html
   ஹைட்ரஜன், ஹீலியமாக மாறும் வினையினை ஆய்வகத்தில் செய்ய முடியுமா எனவும் தேடினேன். அப்படி ஆய்வகத்தில் செய்ய முடிந்தால், ஆற்றல் அதிக செலவின்றி கிடைக்கும் வாய்ப்பு கிட்டும். இயற்கைக்கும் பாதுகாப்பு!!! அது இன்னும் முயற்சிக்கும் விடயமாகவே இருக்கிறது. இந்த செய்தி பாரும்.
   http://www.theguardian.com/science/2014/feb/12/nuclear-fusion-breakthrough-green-energy-source
   US researchers have achieved a world first in an ambitious experiment that aims to recreate the conditions at the heart of the sun and pave the way for nuclear fusion reactors.
   The scientists generated more energy from fusion reactions than they put into the nuclear fuel, in a small but crucial step along the road to harnessing fusion power. The ultimate goal – to produce more energy than the whole experiment consumes – remains a long way off, but the feat has nonetheless raised hopes that after decades of setbacks, firm progress is finally being made.
   ….
   The process is not straightforward. The lasers are fired into a gold capsule that holds a 2mm-wide spherical pellet. The fuel is coated on the inside of this plastic pellet in a layer as thin as a human hair.
   When the laser light enters the gold capsule, it makes the walls of the gold container emit x-rays, which heat the pellet and make it implode with extraordinary ferocity. The fuel, a mixture of hydrogen isotopes called tritium and deuterium, partially fuses under the intense conditions.
   The scientists have not generated more energy than the experiment uses in total.
   ஆகவே இயற்கையில் சூரியனின் நடக்கும் வினையை செயற்கையில் எளிதாக செய்ய முடியவில்லை
   **
   அப்புறம் ஒருவரை கிண்டல் செய்வதை விட, அறிவியல் விடயம் சார்ந்து மேலதிக த்கவல் தருவதே நன்று!!!
   (contd)

   Delete

  3. நான் உம் நண்பரின் பதிவுக்கு விளக்கம் அளிக்கவில்லை.
   இராமன் மது அருந்தினான் என இராமாயணத்தில் வந்தால், மது என்பது தேன் என்ப் பொருள் கொள்ள வேண்டும் என் சாமியார் சொன்னால் ஏற்பீர் அல்லவா?
   அதே போல் அழிதல் என்பது ஒன்று இன்னொன்றாக மாறுதல் என்பதையும் ஏற்க வேண்டும்.
   இராமன் வராகத்தை(பன்றி) வேட்டையாடினான் என்றால், வராகம் என்பது ஒருவகை மான் என விள்க்கம் அளித்து, வேட்டையாடினான் என்று மட்டும்தானே இருக்கிறது, தின்றானா என்வே ஆன்மீக வியாபாரிகள் கேட்கிறார்.

   http://creative.sulekha.com/was-sri-ram-a-drunkard_293716_blog
   Valmiki Ramayanam, Sundara Kanndam sarga36 contains the questions, Sita put to Hanuman, after he established his identity, about the welfare of Rama and Lakshmana. She asks Hanuman, "Without me, in my absence how does the lord bide his time? Is he living normally?"
   Hanuman says in detail that Rama is grief struck, always thinks of the devi, and is loaded with pain and disinterested in life. In sloka 41:
   na maamsam Raghavo bhunkte na chapi madhu sevate.......that means he neither eats nonvegetarian food nor does he drink honey.
   http://www.fullstory.co/5qhca1
   What all animals did Lord Rama and Laxmana hunt for survival/food during their exile?” – varaha – wild boar
   rishya – white footed antelope
   prisata – spotted deer
   maharurur – an unknown species of deer
   Black antelope
   red carp
   and blunt snouted porpoise
   Yes Rama said in the beginning that he won’t have meat in the jungle.. but after hearing some advise from Lakshamana and Sumantra, Rama realizes that he has to be practical and hunt for food to survive in the jungle.
   even earlier Lakshmana insists that they must live like Kshatriyas in the jungle and not like ordinary hermits,that’s the reason why they even carried weapons.
   even later on when Hanuman visits Sita in lanka he tells about Rama avoiding meat and liquor, but it’s evident that it was only because he got into depression by being separated from Sita for so long,
   as he even refused to even ward-off the mosquitoes and insects which were biting him in the jungle..
   - source: Valmiki Ramayana,ayodhya kanda cpt 52 & 56 ; aranya kanda chpt 73

   Thank you!!!

   Delete
  4. மாமு,

   இராமாயணம் குறித்து நீங்கள் எழுப்பிய கேள்விகள் குறித்து எனக்கு பதில் தெரியாது, முடிந்தால் தெரிந்தவர்களிடம் கேட்டு சொல்கிறேன்.

   Delete
  5. மாமு,

   ரெண்டு ஹைட்ரஜன் சேர்ந்து வெளிச்சம் வருதுன்னு அந்தாள் சொன்னது சரியா? இதற்குத்தான் நீங்கள் பதில் தரனும், சூரியனில் நடக்கும் நியூக்கிளியர் ரியாக்ஷனை இங்கே ஆராய்ச்சிக்கூடத்தில் "லாபகரமாக" செய்ய முடியவில்லை என்பது விவாதித்திலேயே இல்லை. எனவே இராமன் கதை, ஆய்வுக் கூடத்தில் நடந்த பிரச்சினை இதில்லெல்லாம் கவனத்தை திசை திருப்பிவிட்டு குட்டையை குழப்பி மீன் பிடிக்கும் வேலையை செய்யப் படாது.

   Delete
 2. பாகவதரே,

  அதான் அங்கேயா டவுசர உருவிட்டேன்ல ,பாவம் நான் அப்படி சொல்லலை ,இப்படி எடுத்துக்கணும் என மாத்தி பேசிட்டு இருக்கார், இதுல நீர் வேற வெந்த புண்ணில் கடப்பாரைய விட்டு ஆட்டினா தாங்குமா அவருக்கு அவ்வ்!

  ReplyDelete
 3. புரோட்டான் -புரோட்டான் செயின் ரியாக்‌ஷனில் சகோ.சார்வாகன் கூட சொதப்பிட்டாரே, 'கன்"பிஷ்ஷன்"' ஆகிட்டார் போல அவ்வ்!
  ------------

  பாகவதரே,

  அமெரிக்கன் சயின்டிஸ்ட் சொன்னதை "கணக்கா" துல்லியமா பார்த்தால் தப்புத்தான், என்னமோ அவசரத்துல சொல்லிட்டார்னு விடலாம்,ஆனால் மனுஷன் "ஒலக தத்துவம்"லாம் பேசுறது தான் சகிக்கலை அவ்வ்!

  புரோட்டான் -புரோட்டான் செயின் ரியாக்‌ஷன் என சொன்னாலும் , அதன் முதல் படியில் ,

  H1+H1 -> D2 + positron +energy

  தான் உருவாகுது ,அதாவது நிறை எண் இரண்டு கொண்ட , ஒரு நியுட்ரான் ,ஒரு புரோட்டான் கொண்ட டியூட்ரியம் என்ற ஹைட்ரஜன் ஐசோடோப் தான் உருவாகுது ,ஹீலியம் அல்ல.

  இங்கு ஒரு புரோட்டான் மட்டுமே கொண்ட ஒரு "ஹைட்ரஜன்" அணு "நியுட்ரானாக" டிரான்ஸ்முடேஷன் ஆகிறது ,இதனை குவார்க் டிரான்ஸ்பர்மேஷன் என்கிறார்கள்.

  பாசிட்ரான் என்ற நேர் அயனி துகள்(போசன் துகள் போல) "புரோட்டானில்" இருந்து பிரிந்து விடுவதால் , நியுட்ரல் நியுட்ரான் பிறக்கிறது என்கிறார்கள்.

  இந்த டிரிடியம் உடன் மீண்டும் ஒரு ஹைட்ரஜன் சேர்ந்து , டிரிடியம் அல்லது ஹீலியம்3 என்ற இடை நிலை தனிமம் உருவாகிறது.

  இந்த ஹீலியம்3 அல்லது டிரிடியம் அணுக்கள் இரண்டு ஃபியுஷன் ஆகி தான் "ஹீலியம் உருவாகிறது , கூடவே ரெண்டு ஹைட்ரஜன்1 உருவாகிறது.

  இந்தக்கண்டுப்பிடிப்புக்கு தான் நோபல் பரிசு வழங்கினார்கள்.

  கணக்குப்படி "ஆறு ஹைட்ரஜன்" அணுக்கள் இருந்தால் தான் ஃபியூஷன் வினையே நடக்கும், அதில் ரெண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ரிஜெனரேட் ஆகிவிடும்.

  எனவே ஒரு ஹீலியம் அணுவிற்கு நாலு ஹைட்ரஜன் என "செலவாகிறது".

  ஹீலியம் அணுவாக இல்லாமல் மூலக்கூறாக தான் நிலைத்திருக்கும் எனவே ரெண்டு ஹீலியம் அணுக்கள் ஒன்றாக ஒட்டிக்கொண்டு மூலக்கூறு 4HE2 உருவாக 12 ஹைட்ரஜன் அணுக்கள் ஃபியூஷன் நடக்கும் இடத்தில் இருக்கணும்.

  ஆனால் சயிண்டிஸ்ட் ஆஃப் அமெரிக்கா ரொம்ப சிம்பிளா ரெண்டு ஹைட்ரஜன் என்கிறார் ,அது அணு எண் கணக்கில் தான் சேரும் அப்போ நிறை எண் 4 ஆக எங்கே இருந்து நியுட்ரான் பிறக்குதாம். அண்ணாத்த்அ மட்டும் ரெண்டே ஹைட்ரஜன் போதும்னு நிறுவிட்டால் நோபல் பரிசு நிச்சயம் :-))

  இந்த அளவுக்கு நோண்டி நொங்கெடுக்கணுமானு தான் விட்டாச்சு ,ஆனாலும் அடங்காமல் "வாயாடிகிட்டு" இருக்காரு அவ்வ்!


  சூரிய ஒளி உருவாக ஹைட்ரஜன் ஐசோடோப் "டிரிடியம்" தான் ரொம்ப முக்கியம், ஒரே ஒரு புரோட்டன் கொண்ட ஹைட்ரஜனில் இருந்து நேரடியாக ஒளி உருவாகும் ஃபியூஷன் சூரியனில் நடக்கலை!!!


  பொதுவா சொன்னால் "ஹைட்ரஜன் ஐசோடோப்புகள்' தேவைனு தான் சொல்லலாம், நியுட்ரானே இல்லாத புரோட்டான் மட்டுமே காரணம்னு சொல்லிக்கவும் முடியாது , எப்பூடி?

  ReplyDelete
  Replies
  1. //ஒரே ஒரு புரோட்டன் கொண்ட ஹைட்ரஜனில் இருந்து நேரடியாக ஒளி உருவாகும் ஃபியூஷன் சூரியனில் நடக்கலை!!!//

   இதனை ,

   "ஒரே ஒரு புரோட்டன் கொண்ட ஹைட்ரஜனில் இருந்து "மட்டும் "நேரடியாக ஒளி உருவாகும் ஃபியூஷன் சூரியனில் நடக்கலை!!!

   என வாசிக்கவும், மட்டும் என்பது விட்டுப்போச்சு.

   Delete
  2. வவ்ஸ்,

   சார்வாகனைப் போல சோரம் போகாமல் நடுவு நிலை காத்தமைக்கு நன்றி.

   எல்லா field -பத்தியும் நீர் தெரிந்து வைத்திருப்பது வியக்க வைக்கிறது.

   \\அமெரிக்கன் சயின்டிஸ்ட்\\ இவருக்கு "கொலாப்ஸ்" என்று பொருத்தமான பெயர் இருக்கிறது, புதிதாகப் படிப்பவர்கள் ஏதோ நிஜமான சயின்டிஸ்ட் சொல்லிட்டான் போல என தவறாக நினைக்க வாய்ப்பிருக்கிறது!!


   \\பாசிட்ரான் என்ற நேர் அயனி துகள்(போசன் துகள் போல) "புரோட்டானில்" இருந்து பிரிந்து விடுவதால் , நியுட்ரல் நியுட்ரான் பிறக்கிறது என்கிறார்கள்.\\ பாசிட்ரான் என்பது ஷாக்சாத் எலக்டிரானே தான், மின்னூட்டம் மட்டும் +ve. இது anti-electron =positron. இது போஸான் அல்ல, Fermion ஆகும். அதாவது பௌலியின் தவிர்ப்புக் கொள்கையை பின்பற்றும். இதே மாதிரி anti proton- னும் இருக்கு அதனோடு பாசிட்ரான் சேர்ந்தால் anti ஹைட்ரஜன், அப்படியே anti material இப்படி சொல்லிகிட்டே போகலாம். ஆனாலும் நிஜத்தில் ஆய்வகத்தில் ஒரு anti ஹைட்ரஜன் உருவாக்கி அதை சில நானோ செகண்டுகள் காப்பற்றுவதற்கே படாத பாடு பட வேண்டியிருக்கும். ஒரு துகளும்/அணுவும் அதன் anti-யும் சந்தித்தால் டமால்....... அழிந்து ஆற்றலாக வெளிப்படும். பிரபஞ்சத்தில் துகள், அதன் anti துகள் எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும், ஆனால் anti துகள் அரிதாகவே உள்ளன, ஏன் என்பதற்கு இன்னமும் விளக்கம் இல்லை!!

   \\பொதுவா சொன்னால் "ஹைட்ரஜன் ஐசோடோப்புகள்' தேவைனு தான் சொல்லலாம், நியுட்ரானே இல்லாத புரோட்டான் மட்டுமே காரணம்னு சொல்லிக்கவும் முடியாது , எப்பூடி?\\

   சூரியனில் 1.6 கோடி செல்சியசில் Fusion நடக்கிறது. அதிக அளவிலான பருப்பொருள் இருந்தால் மட்டுமே அழுத்தத்தின் மூலம் இந்த வெப்ப நிலையை அடைய முடியும். ஒவ்வொரு வினாடியும் 40-70 கோடி டன் ஹைட்ரஜன் ஹீலியமாக மாற்றப் படுகிறது. எனவே இது சாதாரமாக நடக்கும் வினை அல்ல, வெறும் ரெண்டு அணுவை வச்சிக்கிட்டு நாக்கை வலிக்கவா முடியும்?

   Delete
  3. பாகவதரே,

   நாம எப்பொழுதும் நியாயத்தின் பக்கம் , அது நண்பரா, எதிரியா எனப்பார்த்தெல்லாம் அல்ல!

   # ஹி...ஹி எல்லாம் விக்கியில் இருக்காமே, அதை வச்சே நான் பொழப்பு ஓட்டிடுறேன், இப்போ மாமாவுக்கு குளு குளுனு இருக்கும் அவ்வ்!

   #//பாசிட்ரான் என்பது ஷாக்சாத் எலக்டிரானே தான், மின்னூட்டம் மட்டும் +ve. இது anti-electron =positron. இது போஸான் அல்ல, Fermion ஆகும். அதாவது பௌலியின் தவிர்ப்புக் கொள்கையை பின்பற்றும்.//

   ஃபெர்மியான் , w-போசான் என்றும் போட்டிருந்தது, அப்போ நினைவில் வந்ததை போட்டேன்.

   இந்த ஆண்டி மேட்டரை செர்ன் ஆய்வகத்தில் சில நிமிடங்கள் உருவாக்கி இருக்காங்க.

   அவற்றுக்கு நிலைப்பு தன்மையில்லாததல் உடனே அழிந்து விடுகின்றனவாம்.

   டான் பிரவுன் , ஆண்டி மேட்டரை மையமாக வச்சு "ஏஞ்சல்ஸ் &டெமான் என்ற நாவல் கூட எழுதியுள்ளார். செர்ன் ஆய்வகத்தில் இருந்து ஆண்டி மேட்டரை ஒரு கேனிஸ்டரில் கடத்தி வந்து வாட்டிகனில் வச்சு ,உலக அழிவுனு பயமுறுத்தி "கிருத்துவ மதப்பரப்பல்" செய்வதாக போகும்.

   #//சூரியனில் 1.6 கோடி செல்சியசில் Fusion நடக்கிறது. அதிக அளவிலான பருப்பொருள் இருந்தால் மட்டுமே அழுத்தத்தின் மூலம் இந்த வெப்ப நிலையை அடைய முடியும். ஒவ்வொரு வினாடியும் 40-70 கோடி டன் ஹைட்ரஜன் ஹீலியமாக மாற்றப் படுகிறது. எனவே இது சாதாரமாக நடக்கும் வினை அல்ல, வெறும் ரெண்டு அணுவை வச்சிக்கிட்டு நாக்கை வலிக்கவா முடியும்?//

   தொடர் வினை பெருமளவு நடக்க நிறைய ஹைட்ராஜன் அணுக்கள் தேவை தான்.

   குறைந்த பட்சம் ஒரு பேலன்ஸ்டு ஈக்குவேஷன் எழுத 6 அல்லது 12 ஹைட்ரஜன் என பயன்ப்படுத்தியாக வேண்டும் என்பதை சொன்னேன். நீரும் அதானே சொன்னீர்.

   # கொலாப்ஸ் தான் அனானியா?

   அவருக்கு ,மாமா, மோட்டார் மவுத் என்றெல்லாம் பல நாமகரணங்கள் இருக்கு :-))
   ----------

   Delete
 4. Replies
  1. ஓய் குட்டிப்பிசாசு,

   நீர் ஏன்ய்யா எல்லா இடத்திலும் மர்ம சிரிப்பு சிரிச்சு வைக்கிறீர் ,இப்போ பாரும் கொலாப்ஸ் மாமா உம்மேலும் காண்டாகி கடிச்சு வைக்குது ,எதுக்கும் சாக்கிரதையா இரும் ,பொறாண்டிறப்போவுது!!!

   Delete
  2. கருத்து சொல்லப் பயந்துதான் சிரிச்சி வச்சேன். இப்ப அதுவும் போச்சா.

   Delete
 5. Anonymous has left a new comment on your post "உயிர் வாழ முக்கியம் எது ? நாட்டாமை கொலாப்ஸ் பிளீ...":

  யோவ்! வவ்வாலு நீ என்ன பெரிய புடிங்கியா? உன்னை எல்லாம் எங்கிருந்து புடிச்சிட்டு வந்தாங்க?
  உன்னோட வேலையே பாக்க மாட்டாயா? இல்ல இதுதான் உன்னுடைய வேலைய? சில்லறைத் தனம் பண்ணிட்டு இதெல்லாம் ஒரு பொழாப்பா?

  Posted by Anonymous to ஜெயதேவ் at May 2, 2014 at 12:36 PM

  ReplyDelete
 6. Anonymous has left a new comment on your post "உயிர் வாழ முக்கியம் எது ? நாட்டாமை கொலாப்ஸ் பிளீ...":

  வவ்வால் ஐயா! நீரே ஞானி... மற்றவர் குறையை விட்டுத்தள்ளுங்கள்.
  உங்கள் தளத்தில் எழுத சரக்கு எதுவுமே இல்லையா? ஏன் மற்றவர் குண்டியை முகர்ந்து பார்க்கிறீர் முதலில் உங்கள் .........பாருங்க,
  பிறகு அடுத்தவர் ... (குறையை) பார்க்கலாம்.

  ReplyDelete
 7. Anonymous has left a new comment on your post "உயிர் வாழ முக்கியம் எது ? நாட்டமை கொலாப்ஸ் பிளீஸ...":

  டேய்! மாமா பயலே,
  அவன் என்ன எழுதின உனக்கு என்ன நீ மூடிட்டு உன் வேலையப் பாரு. நீ சரியான ஆண்பிள்ளையா இருந்தா அங்கே போய் உன் வீரத்தக் காட்டு.
  Posted by Anonymous to ஜெயதேவ் at May 2, 2014 at 9:39 AM

  ReplyDelete
 8. Anonymous has left a new comment on your post "உயிர் வாழ முக்கியம் எது ? நாட்டமை கொலாப்ஸ் பிளீஸ...":

  நீ திருப்பி என்ன திட்டுனாலும் உன்னையே திட்டுவது போல. அதனால என் மேல் கோபப்படுவதைப் விட்டுவிட்டுப் புத்தியுடன் நடந்து கொள்.

  நாம அடுத்தவர்களுடன் சண்டைப் போட பிறக்கவில்லை. நமக்கு வேலை என்னவோ அதை மட்டும் பார்ப்போம் சரியா!
  நான் சொல்லியது தவறென்றால் மன்னித்து விடு....
  இப்படிக்கு உன் மனசாட்சி!  Posted by Anonymous to ஜெயதேவ் at May 2, 2014 at 10:05 AM

  ReplyDelete
 9. உயர்திரு ஜெயதேவ் அவர்களுக்கு கனவான்கள் எப்போதும் நாகரீகமாகவே நடந்து கொள்வார்கள் கண்டிப்பாக நீங்கள் கனவானே. உங்களைத் தாக்கிப் பேசியதற்கு மிகவும் வருந்துகிறேன்.

  //உமக்கு மற்றவர் எதைச் செய்யக்கூடாது என நினைக்கிறீரோ அதை நீர் மற்றவருக்குச் செய்வதை நிறுத்தும்...............//
  கண்டிப்பாக இனி இடையுறு செய்ய மாட்டேன் மறுபடியும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்... மகனிடம் (வவ்வால்) ஒரு வார்த்தை சொல்லி விடுங்க.
  Posted by Anonymous to ஜெயதேவ் at May 2, 2014 at 9:36 PM

  ReplyDelete
 10. Note: அனானி பெயரில் உள்ள காமன்டுகள் அனைத்தும் கொலாப்சால் போடப் பட்டவையே!! முன்பு அவர் போடவில்லையோ என்ற சந்தேகம் இருந்தது, நீக்கினோம், தற்போது இல்லை சேர்த்துவிட்டோம்.........................

  ReplyDelete