Friday, September 14, 2012

உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை உருவ உங்கள் டெபிட் கார்டு எண்ணே போதும்



பெங்களூருவில் உள்ள எங்கள் அலுவலகத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த உண்மைச் சம்பவம் இது.  இதன் நாயகன் பெயர் மஞ்சுநாத் [பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது].  எங்கள் அலுவகத்தில் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட  கம்பியூட்டர்களுக்குத்  தேவையான மென்பொருள், வன்பொருள், இணைய இணைப்பு எல்லாம்  மேலாண்மை செய்து எந்தப் பிரச்சினை வந்தாலும் சமாளிக்க வேண்டியது இவருடைய பொறுப்பு.  எனவே  கணினியைப் பற்றிய எல்லா விஷயமும் அத்துபடி.   இவருக்கு  ஷேர் மார்க்கெட்டிங்கில் ஈடுபாடு அதிகம்.  ஷேர் பரிமாற்றம், வங்கி கணக்கு பரிமாற்றம் எல்லாம் ஆன்லைனில் செய்வதால் இவருக்கு இணைய வழி பண பரிவர்த்தனைகளும்  அத்துபடி.

இந்த மாதிரி எல்லாம் நல்லா போய்கிட்டு இருந்த சமயத்தில இரண்டு வாரத்துக்கு முன்னாடி இவருக்கு ஒரு மெயில் வந்தது.  அதில், நாங்கள்  வருமான வரி அலுவலகத்தில [IT Department] இருந்து மெயில் அனுப்புகிறோம், நீங்கள் இந்த வருஷம் செலுத்திய வருமான வரியில் 3000 ரூபாய் உங்களுக்கு திரும்பத் தர வேண்டியிருக்கு, உங்க வங்கிக் கணக்கு அட்டையின் எண்ணை [Debit Card Number] எங்களுக்கு மெயிலில் அனுப்புங்க என்று அந்த மெயிலில் குறிப்பிடப் பட்டிருந்தது. அந்த மெயில் அனுப்புனர் [Sender] முகவரியும் ஏதோ  incometaxdept.com  என்பது போல சந்தேகமே வராத வகையில் இருந்தது,  அதில் கொடுக்கப் பட்டிருந்த ஒரு லிங்கைச் சொடுக்கினால் நாம் வழக்கமாக இணையத்தில் வருமான வரி தாக்கல் செய்யும் [IT Returns filing site] தளத்திற்கே இட்டுச் சென்றது.  ஆனால், தகவலை அங்கே பதியச் சொல்லவில்லை, இந்த மெயிலுக்கு Reply யாக அனுப்புங்கள் என்று கேட்டிருந்தார்கள்.

இங்கதான்   நம்மாளுக்கு புத்தி லேசாகத் தடுமாறியது.  இரண்டு விஷயத்தில் கோட்டை விட்டார். முதலில் இவர் வருமான வரி அத்தனையும் TDS முறையில் அலுவலகத்தில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தது, இவருக்கு தேவையான வருமான வரி விலக்குகள் போக செலுத்த வேண்டிய வருமான வரியை ஏற்கனவே அலுவலகமே வருமான வரித் துறைக்கு அனுப்பிவிட்டிருந்தது.  தற்போது அவருக்கு வருமான வரித் துறையில் இருந்து எந்த பணமும் வரவேண்டிய வாய்ப்பே இல்லை.  ஆனாலும் வருமான வரித் துறைக்காரன் எங்கோ கணக்குல தப்பு பண்ணியிருப்பான், வர்ற லக்ஷ்மியை வேண்டாம்னு சொல்லப் படாது என்று நண்பருக்கு மனதில் நப்பாசை வந்ததுவிட்டது.

அடுத்து முக்கியமான ஒரு விஷயத்தை அவர் கவனிக்கத் தவறினார். வருமான வரியை தாக்கல் செய்யும் படிவத்தில் நம்முடைய வங்கிக் கணக்கை கட்டாயம் தெரிவிக்க வேண்டும், அப்படியே அவர்கள் பணம் திரும்பத் தருவதாக இருந்தாலும், நேரிடையாக வங்கிக் கணக்கிற்க்கே அனுப்பி விடுவார்கள்.  இந்த விஷயமும் இவருக்கு பொறி தட்டவில்லை. ஒருவேளை, பத்து மில்லியன் டாலரை உங்க பேர்ல எழுதி வச்சிட்டு சவுத் ஆப்பிரிக்காவில் ஒரு தாத்தா செத்து போயிட்டாரு, அதை உங்களுக்கு அனுப்ப ஒரு ஆளை பணபெட்டியோட  விமானத்தில் அனுப்பனும், அவரோட வழிச் செலவுக்கு ஒரு மூணு லட்சம் ரூபாயை இந்த அக்கவுண்டுக்கு அனுப்புங்கன்னு மெயில் வந்திருந்தா, நம்மாளு         உ ஷாராயிருப்பாரு.  இங்க அப்படி எதுவும் வரவில்லை வெறும் மூவாயிரம் ரூபாய் தான், அதுவும் இந்திய வருமான வரித்துறையில் இருந்து, கேட்டது பணத்தை அல்ல வெறும் டெபிட் கார்டு எண்ணை மட்டும்தான்.  அதை வைத்துக் கொண்டு என்ன செய்துவிட முடியும்?!

இப்படி பல வழியிலும் புத்தி தடுமாறி தன்னுடைய Debit Card Number -ஐ மெயிலில் அனுப்பிவிட்டார்.  அப்புறம்தான் தலையில் இடி இறங்கியது. அடுத்த அரை மணி நேரத்தில் அவருடைய கணக்கில் இருந்து Rs. 50,000/- [ஐம்பதாயிரம் ரூபாய் தாங்க!!]  உருவப் பட்டிருந்தது.  உடனே அலறியடிச்சிகிட்டு நம்மாளு வங்கிக்கு தகவல் கொடுத்து தனது கணக்கை முடக்கச் சொன்னார்.   தலைமேல் துண்டை போட்டுக் கொண்டு புலம்பிக் கொண்டிருத்த ஆளை, எல்லோரும் ஆறுதல் சொல்லி சைபர் கிரைமுக்குத் தகவல் தெரிவித்து கம்பிளைன்ட் கொடுக்கச் சொன்னோம்.  அங்கே சென்ற பின்னர் தான் பணம் எப்படி உருவப் பட்டது என்ற திகைக்க வைக்கும் சங்கதி தெரிய வந்தது.


Hacker.gif

பணத்தை உருவியவர்கள் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பயன்படுத்திய சர்வர் அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ளது.  அதை உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் இயக்கலாமாம். நண்பரிடமிருந்து தகவலைப் பெற்றவுடன் தங்களது மென்பொருட்களைப் பயன்படுத்தி  நண்பருடைய டெபிட் கார்டின் பின் நம்பர் என்ன [அது வெறும் நான்கு இலக்கம்தானே]   என்பதை நொடியில் கண்டுபிடித்த அவர்கள் பணத்தை உருவ ஆரம்பித்தார்கள்.  ஒவ்வொரு முறையும் ரூ. 3700/- வீதம்  அரை மணி நேரத்தில் ஐம்பதாயிரத்தை   எடுத்திருக்கிறார்கள்.    அதென்ன கணக்கு ரூ. 3700/-?   ஒரு முன்னணி செல்பேசி நிறுவனத்தின்  ரீ-சார்ஜ் வவுச்சரின் அதிக பட்சத் தொகையாம் அது.  [ஒண்ணுக்கும் உதவாத ஒரு மக்கு நாயை, அதி புத்திசாலியாக தங்களது எல்லா விளம்பரங்களிலும் காட்டும் நிறுவனம் இது!!]  அவர்கள் எடுத்த பணம் அத்தனையும் இந்த வவுச்சர்களாக மாற்றப் பட்டு, அவை மும்பையில் உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் விற்கப் பட்டுவிட்டது.  கடைக்குள் சென்று விட்டால் எது திருடிய வவுச்சர், எது  நல்ல வவுச்சர் என்று தெரியாதாம்.  அவற்றை பலர் வாங்கி பேசியும் தீர்த்திருப்பார்களாம்.


இந்த நாய்க்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சம்பந்தம் இருப்பதாக நினைப்பது உங்கள் கற்பனை, அதற்க்கு எந்த வகையிலும் நான் பொறுப்பில்லை.

 சரி, தற்போது இழந்த பணத்துக்கு ஏதாவது வழியுண்டா?  அதைப் பிடிப்பது என்பது மலையைத் தோண்டி எலியைப் பிடிக்கும் வேலை.  மேலும் அதைச் செயல் படுத்தும் அளவுக்கு சாமானிய மக்களுக்கு 'பவர்' இல்லை. தற்போது நண்பர் இழந்திருப்பது மற்றவர்கள் இழந்ததைக் காட்டிலும் சிறிய தொகை.  ஐந்து லட்சம், பத்து லட்சம், பதினைந்து லட்சம் என்றெல்லாம் கோட்டை விட்டவர்களும் நிறைய இருக்கிறார்களாம்.  இதைக் கேட்ட நண்பர் ஒரு வழியாக மனதைத் தேற்றிக் கொண்டு சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்.

இதில் ஒரு முக்கியமான விஷயம்,   நண்பரின் அலுவலக இ-மெயில் முகவரி நைஜீரியாக் காரர்கள் கைக்கு எப்படிப் போனது?  வேறெப்படி கண்ட கண்ட தளங்களில் தொடர்புக்கு......... என்று சொல்லும் இடங்களில் எல்லாம் முகவரியைக் கொடுத்ததால்தான்.  எனவே மக்காஸ், உங்க டெபிட் கார்டு நம்பரை யாருக்கும் கொடுக்காதீங்க, இ-மெயில் முகவரியை  கண்ட கண்ட பயல்களுக்குத் தராதீங்க, உங்க ஆன்லைன் வங்கிக் கணக்கு பற்றி தகவல்  [முக்கியமா பாஸ் வேர்ட்] கேட்டு எந்த இ -மெயில் வந்தாலும் உடனே டெலீட் பண்ணிடுங்க, போனில் கேட்டாலும் சொல்லாதீங்க. ஏன்னா எந்த வங்கியும் தங்கள் வாடிக்கையாளர்களிடம் வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை மெயிலிலோ, போனிலோ ஒருபோதும் கேட்பதில்லை.

இது குறித்த அப்டேட்: இன்று [15-09-2012] SBI  தனது வாடிக்கையாளர்களுக்கு SMS  மூலம் பின்வரும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

"உங்கள் SBI  வங்கிக் கணக்கை ஆன்லைனில் இயக்கும்போது உங்களுடைய SBI கார்டு குறித்த தகவல்களைக் கேட்டு பாப் அப் [Pop Up] செய்தி ஏதேனும் தோன்றினால் தங்கள் கணினி மால்வேரால் பாதிக்கப் பட்டிருக்கலாம், ஒருபோதும் அத்தகைய தகவல்களைப் பகிர வேண்டாம்"

Beware of Fake Popups: In OnlineSBI, if you get a popup seeking your card details, your device could be malware infected, NEVER provide such information. 

Sender: TD-SBINB
Sent: 05:33:34pm
15-09-2012

இந்தப் பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்  தமிழ்மணத்தில் வாக்களிக்கலாமே!! அதற்க்கு  இங்கே  சொடுக்கவும். 

40 comments:

  1. ஜனங்களை விழிக்க வைக்கும் நல்ல தகவல்.

    ReplyDelete
  2. அடிச்சும் கேப்பாங்க, சொல்லிடாதீங்க!

    ReplyDelete
    Replies
    1. @ நான் தான் சதா!

      அப்படியே ஆகட்டுமுங்கண்ணா.........!!

      Delete
  3. விழிப்புணர்வுப் பகிர்வு பயன் மிக்கது.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. @ இராஜராஜேஸ்வரி

      முதல் வருகைக்கு நன்றி மேடம். நீங்கள் நம்ம கடைக்கு வருகை தந்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது, நீங்கள் உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஒரு அவார்டு போல, மீண்டும் மீண்டும் வாங்க!!.

      Delete
  4. //வர்ற லக்ஷ்மியை வேண்டாம்னு சொல்லப் படாது என்று மனதில் நப்பாசை வந்ததுவிட்டது.
    //
    Piratchanaiye ithan.

    ReplyDelete
  5. ***உங்க வங்கிக் கணக்கு அட்டையின் எண்ணை [Debit Card Number] எங்களுக்கு மெயிலில் அனுப்புங்க என்று அந்த மெயிலில் குறிப்பிடப் பட்டிருந்தது. ****

    அதைப் பார்த்து டைப் அடிச்சு பொறுப்பா அவனுகளுக்கு அனுப்பினாங்களாக்கும்!!!! நாசமாப் போச்சு, போங்க! :)))

    ReplyDelete
  6. அந்த நைஜீரியாக் காரர்கள் யார் என்று கண்டுபிடித்தால் எனக்கு தகவல் தெரிவிக்கவும் அவர்களிடம் டிரய்னிங்க் எடுக்க என்னக்கும் ஆசையா இருக்கு...காரணம் இன்னும் ஏமாளிங்க அதிகமாக தமிழகத்தில் அதிகம் . அவர்கள் நன்றாக உழைத்து சம்பாத்தித்து ஏமாற காத்துகொண்டிருப்பது இன்னும் ஆச்சிரியமாக இருக்கிறது...


    யாராவது ஏமாறும் பதிவாளர்கள் இருந்தாலும் தகவல் தரவும்

    ReplyDelete
    Replies
    1. @ Avargal Unmaigal

      படித்தவகளுக்கு விழிப்புணர்வு அதிகமாக இருக்கும் என்று பலர் நினைப்பது தவறு என்பதை இது காட்டுகிறது. இதை அறியாமை என்பதை விட ஆசை கண்ணை மறைக்கிறது என்று சொல்லலாம். வருகைக்கு நன்றி நண்பரே.

      Delete
  7. Replies
    1. @ அ.குரு

      முதல் வருகைக்கு நன்றி நண்பரே. தங்கள் வலைப்பூவைப் பார்த்தேன். அவற்றை ஒரு அலசு அலசலாம் என இருக்கிறேன், பல ருசிகரமான அறிவியல் தகவல்களுடன் சிறப்பாக உள்ளது. தாங்கள் எந்தத் துறையில் ஆசிரியராக இருக்கிறீர்கள் என்று அறிய ஆவல்.

      Delete
  8. நன்கு படித்தவர்களே இப்படியாக ஏமாறுவது வருத்தத்தை அளிக்கிறது. உங்க விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி சகோ ஜெயதேவ்... இது போன்ற பயனுள்ள தகவல்களை உங்களிடமிருந்து பார்க்கிறேன்.. அப்பதான் அடிக்கடி உங்க ப்ளாக் வர முடியும்...

    இவ்வளவு நாள் வேஸ்ட் பண்ணிட்டீங்களோன்னு சொல்ல தோணுது.. அடிக்கடி எழுதுங்க!

    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. @ ஆமினா

      இறைவன் ஆசியிருந்தால் தாங்கள் விரும்பும் வகையில் மேலும் பல பதிவுகளை நான் வெளியிடுவேன், வருகைக்கு நன்றி அமீனா!!

      Delete
  9. அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்
    அடங்கிய அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. @Ramani

      நமது வலைப்பூவை முதல் முறையாகத் தாக்கியிருக்கும் பின்னூட்டப் புயலை வருக வருக என வரவேற்கிறோம், நிஜமான புயல் மீண்டும் வருக என்று யாரும் சொல்ல மாட்டார்கள், இந்தப் பின்னூட்டப் புயலை மீண்டும் மீண்டும் வருக என அழைக்கிறோம், நன்றி.

      Delete
  10. தலை சுற்றுகிறது. களவாணி பயல்கள் எப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள பார்த்தீர்களா?

    ReplyDelete
    Replies
    1. @Murugan Thillainayagam

      நல்லா தமாஷா பேசறீங்க சார், வருகைக்கு நன்றி!!

      Delete
  11. சுவாரசியமாகவும், வருமானவரித்துறைத் தகவல்களையும் தந்து, நண்பர் ஏமாந்ததை எழுதிய விதம் அருமை.,

    தொடர்ந்து நிறைய எழுதுங்க தாஸ்

    ReplyDelete
    Replies
    1. @ நிகழ்காலத்தில் சிவா
      குரு சொன்னதை நிச்சயம் கேட்பேன், வருகைக்கு நன்றி சிவா!!

      Delete
  12. எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க.. உக்காந்து யோசிப்பாங்களோ.. இருக்கும்...

    ReplyDelete
  13. @ bandhu

    இந்தக் கதையைக் கேட்ட எங்களுக்கு தலை சுத்த ஆரம்பித்து விட்டது, எத்தனை நாடுகளில் எவ்வளவு சாமர்த்தியமாக நெட்வொர்க் வைத்து புத்திசாலித் தனமாய் படித்தவனும் ஏமாறும் வண்ணம் திட்டம் தீட்டி அவர்கள் செயல்படுவதைப் பார்த்தால் ரூம் என்ன பெரிய பங்களாவையே போட்டு யோசித்திருப்பார்கள் என்று தான் தோன்றுகிறது. வருகைக்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  14. பயனுள்ள கட்டுரை! எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்!!

    (www.vizhiyappan.blogspot.com)

    ReplyDelete
  15. பயங்கரமா இருக்கே.......? நல்ல பதிவு தாசண்ணே........ கூகிள் ப்ளஸ்ல பகிர்ரேன்.......!

    ReplyDelete
    Replies
    1. பன்னிகுட்டி அண்ணே!! கடை திறந்தன்னைக்கு நான் சொல்லாமலேயே நீங்க கடைக்கு வந்தப்போ மனசுக்குள்ள எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா!! நீங்க சூப்பர் ஸ்டார் ஆயிட்டீங்க, அதனால அவர் மூணு நாலு வருஷத்துக்கு ஒரு படம் பண்ணுறா மாதிரி நீங்களும் மூணு நாலு மாசத்துக்கு ஒரு பதிவு போடுறீங்க!! என்ன மாதிரி ஆளுங்க கடைப் பக்கமும் அப்பப்போ வந்து என்கரேஜ் பண்ணலாமில்லியா!!

      Delete
    2. யோவ் ஏன்யா சூப்பர் ஸ்டாரு அது இதுன்னு கவுக்கிறீங்க? அன்னிக்கு ஃபாலோ பண்ண மறந்துட்டேன் அதான் வரமுடியல......!

      Delete
    3. \\கூகிள் ப்ளஸ்ல பகிர்ரேன்.......!\\ அப்போ இன்னும் ஒரு ஆயிரம் ஹிட்ஸ் கியாரண்டீ தானே!

      Delete
    4. என்னது ஆயிரம் ஹிட்சா? அங்க கரப்பான் பூச்சி தொந்தரவு ஜாஸ்தியோ?

      Delete
  16. மிக நல்ல பதிவு. நிச்சயம் என் ப்ளாகில் பதிவர் பக்கத்தில் இந்த பதிவை பகிர்கிறேன். சிறு கோரிக்கை. மிக குறுகிய காலத்தில் மிக அதிகம் பேரை சென்றடைந்து கொண்டிருக்கிறீர்கள். " நம்ம கடைக்கு நிறைய ஆட்கள் வரலை; ஆட்கள் அனுப்புங்க" போன்ற வரிகளை பின்னூட்டத்தில் தவிர்க்கவும். சைலன்ட்டாக படிப்பவர்கள் தான் மிக அதிகம். நீங்கள் பாட்டுக்கு எழுதி கொண்டிருங்கள் நிச்சயம் உங்களுக்கான உயரத்தை அடைவீர்கள் நான் அம்பது பதிவில் அடைந்த ரீச் நீங்கள் அதற்குள் அடைந்துள்ளீர்கள்

    இன்னொரு முறை நான் பெங்களூரு வரும்போது சந்திக்க முயல்வோம். சென்னை வந்தால் சொல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. @மோகன் குமார்

      நீங்க சொன்ன அத்தனையும் மனசுல ஏத்திகிட்டேன், அதன்படி நடக்கிறேன், தேவையற்ற பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன். பதிவுலகம் இயங்கும் முறை பற்றிய தெளிவு ஏற்ப்படுத்தியதற்கு மிக்க நன்றி மோகன்.

      Delete
    2. @மோகன் குமார்

      அடுத்த முறை பெங்களூரு வரும்போது கடிப்பாகத் தெரிவியுங்க, சந்திப்போம்!!

      Delete
  17. நல்ல தகவல் ... பேஸ்புக்கில் பதிந்துகொள்கிறேன் ...நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. @ R Sridhar

      வருகைக்கு நன்றி நண்பரே, as many as possible இந்தத் தகவல் போய்ச் சேர வேண்டும், நன்றி!!

      Delete
  18. நல்ல ஒரு விழிப்புணர்வு தகவல் . நன்றி

    ReplyDelete
    Replies
    1. @ Gnanam Sekar

      முதல் வருகைக்கு நன்றி நண்பரே!! தொடர்ந்து வாருங்கள்....!!

      Delete
  19. அறிவுறுத்தலுக்கு மிக்க நன்றி ஜெயதேவ் சார் ஜிபிளசில் பகிர்ந்துள்ளேன்.

    ReplyDelete
    Replies

    1. @ கலாகுமரன்
      வருகைக்கு மிக்க நன்றி சார் !!

      Delete
  20. அது என்னொமொ தெரியில்லை.அடுத்தவுங்க கதையை படிக்கும் போது ஏற்படும் ஆர்வமே தனிதான் போங்க. ஒரு விழிப்புனர்வு பதிவுக்கு வாழ்த்துகள் சார்.இதை டிவிட்டர்ல பதியுரேன்.

    ReplyDelete
    Replies
    1. @Arif .A

      அடுத்தவங்க தப்பில் இருந்து பாடம் கத்துகிறது நல்லதுதானுங்களே, எல்லா தப்பையும் நாமலே செய்து பார்த்தா நம்ம லைப் தாங்குமுங்களா!! வருகைக்கு நன்றி ஆரி ஃப்!!

      Delete
  21. @prenitha
    வருகைக்கு நன்றி மேடம், மற்ற போஸ்ட்களையும் படிங்க, மீண்டும் வருக!!

    ReplyDelete