Friday, April 25, 2014

தமிழகத்தில் 73% வாக்குப் பதிவு, சூட்சுமம் என்ன?

வணக்கம் மக்கள்ஸ்!!


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 73% வாக்குகள் பதிவாகியிருக்கிறது.  வழக்கமா 58% அல்லது 65% என்று தான் வாக்குகள் பதிவு ஆகும்.  தற்போது ஏன் இந்த மாற்றம்?  தேர்தலுக்கு முன்னர் பணம் யார் எடுத்துச் சென்றாலும் விரட்டி விரட்டி கண்டுபிடித்து பறிமுதல் செய்த தேர்தல் கமிஷன் கடைசி ரெண்டு நாள் எந்த கெடுபிடியும் காட்டவில்லையாம்!!  அந்த ரெண்டு நாட்களில் இரவு மின்வெட்டு வேறு.  போக வேண்டிய தொகை போய்ச் சேரவேண்டியவங்களுக்கு போயிடுச்சு, அவங்க வந்து தங்களது "ஜனநாயக" கடமையை ஆத்து ......... ஆத்து ......... என்று ஆற்றிவிட்டார்கள்.

நன்றி: தினமலர்
 ஓட்டு போடுறேன்னு காசு வாங்குபவர்கள் மாற்றி ஓட்டுப் போடுவதில்லை.  அதற்கு காரணம் அவர்கள் நேர்மையானவர்கள், மனசாட்சிக்குப் பயந்தவர்கள், அரசியவாதிங்க மாதிரி சொல்வது ஒன்று செய்வது வேறு என்று செயல்படத் தெரியாத அப்பிராணிகள் என்று இது நாள் வரை தப்புக் கணக்கு போட்டிருந்தேன்.  அதற்க்கு காரணமே வேறு என்று நண்பர் ஒருத்தர் சொல்கிறார்!!

முகநூலில் பார்த்தது:
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பணம் வாங்கியவர்கள் ஏன் வாக்களிப்பதில் ஏமாற்றுவதில்லை ? இதன் சைக்காலஜி சுவையானது . நேர்மைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை . ஒரு சிஸ்டத்தை குலைக்க யாரும் விரும்புவதில்லை . காசு வாங்கிவிட்டு மாற்றி வாக்களித்தால் , காசு கொடுப்பது என்ற சிஸ்டமே அழிந்து விடும் அல்லவா ? இந்த முறை அழிவதை எதிர்கட்சியும் விரும்புவதில்லை . அதிமுக எதிர்கட்சியாக இருந்தபோதும் அவர்கள் மொண்ணையாகவை எதிர்ப்பு தெரிவித்தனர் . இப்ப திமுகவும் ஃபார்மலாக எதிர்க்கும் .
 ++++++++++++++++++++++++++++++++


ஆஹா........  நம்மாளுங்களும் வெவரமாத்தான்யா இருக்கிறாய்ங்க!!  ஆனா, எல்லாமே திருமங்கலம்  ஆயிபோச்சே..............!!

பத்திரிகைகளில் பார்த்த வேடிக்கையான சில செய்திகள்:

தேர்தல் பிரச்சாரத்தின் போது, குஷ்பு ஒரு உண்மையை போட்டு உடைச்சிருக்காங்க.

"பித்தலாட்டத்தில் திமுகவை மிஞ்சிவிட்டது அதிமுக " என்று பேசியிருக்கிறார்.   இவர் என்னதான் சொல்ல வருகிறார்?  பித்தலாட்டம் செய்வதில் திமுக சாம்பியன்,  அப்பேர்பட்டவர்களையே அதிமுக மிஞ்சி விட்டது என்கிறாரா?  ஆக மொத்தத்தில் திமுக பித்தலாட்டம் செய்கிறது என்பது மட்டும் இவரது பேச்சில் இருந்து தெரிகிறது!!  

விஜயகாந்த் ஓட்டுப் போடத் தடுமாறியதாகவும் அவரது மனைவி உதவியதாகவும் செய்தி!!  ஓட்டுப் போடவே தடுமாற்றமா?  ஒன்னும் புரியலை.  எங்கேயோ இடிக்குதே..........


நல்ல வேலையா ஆள்காட்டி விரலில் மை வச்சாங்க, நடுவிரலில் வச்சிருந்தா மேலே இருக்கும் படம் எந்த மாதிரி வந்திருக்கும்?  நம்ம பொழப்பு நாறியிருக்கும் போலிருக்கே!!

ஓகே...... மக்கள்ஸ், இப்போ எனக்கு ஒரு டவுட்டு .....  இது ரொம்ப நாளைய டவுட்டு......

வலதுசாரி, இடதுசாரி என்று கட்சிகளைச் சொல்கிறார்களே, இதன் அர்த்தம் என்ன?  தெரிந்தால் சொல்லுங்களேன்!!

34 comments:

  1. பாகவதரே,

    //வலதுசாரி, இடதுசாரி என்று கட்சிகளைச் சொல்கிறார்களே, இதன் அர்த்தம் என்ன? தெரிந்தால் சொல்லுங்களேன்!!//

    வாழப்பழம் கொடுத்தாலும் உரிச்சு கொடுக்கலையேனு கேட்பீரே அவ்வ்!

    அந்தக்காலத்தில் பிரிட்டீஷ் பார்லிமெண்டில் , மன்னருக்கு முன்னர் ,ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் உறுப்பினர்கள் (நிலப்பிரபுக்கள்) வலப்பக்கமாக சபையில் உட்காருவார்கள், ஹவுஸ் ஆஃப் காமன் உறுப்பினர்கள்( சாமானியர்கள், தொழிளாளிகளின் பிரதிநிதிகள்) இடப்பக்கமா உட்கார வேண்டும்.

    அப்போலாம் கம்யூனிஸ்ட்டே கிடையாது, வெல்ட் ஆஃப் நேஷன்ஸ் என்ற பொருளாதார சித்தாந்த நூலை எழுதிய "ஆடம் ஸ்மித்" கூட ஒரு இங்கிலாந்து நிலப்பிரபு தான். அவருக்குலாம் அப்புறமாத்தான் "கார்ல் மாக்ஸ், ஏங்கல்ஸ் எல்லாம் பொதுவுடமை சித்தாந்தத்தினை உருவாக்கினது.

    அப்போ தொழிளாலர் சார்பான உறுப்பினர்கள் இடப்பக்கம் உட்கார்ந்துக்கிட்டு நிலப்பிரபுக்களுக்கு எதிரான கருத்துக்களை சொன்னதால் "இடது சாரிகள்- லெஃப்டிஸ்ட்" என சொன்னார்கள் என குறிப்பிடப்போய் பின்னர் கம்யூனிஸ்ட்கள் உருவான பின்னர் அவர்களுக்கும் இடது சாரிகள் என்றப்பெயர் நிலைத்துப்போய்விட்டது.

    பொதுவாக முதலாளித்துவ சிந்தனையாளர்கள் வலது சாரிகள், அதுக்கு எதிரானவர்கள் இடது சாரிகள்.

    மேலும் எப்பவுமே , வலச்சுற்று பாசிட்டிவ் என்பதாகவும், இடச்சுற்று நெகடிவ் என்பதாகவும்(கடிகாரம் போல) சொல்லப்படுவதால் எதிராக செயல்ப்படுவர்கள் எல்லாமே இடதுசாரினும் வச்சிக்கலாம்.
    --------------

    வாக்குப்பதிவு விவரம், தேர்தல் பற்றிலாம் நாமளே ஒருப்பதிவு போட போறோம் ,அங்கே பேசிக்கலாம்.
    ------------

    ReplyDelete
    Replies
    1. //வெல்ட் ஆஃப் நேஷன்ஸ்//

      வெல்த் ஆஃப் நேஷன்ஸ் என வாசிக்கவும்.

      Delete
    2. வலதுசாரி, இடதுசாரி என்பது ப்ரெஞ்சுப்புரட்சியின் போது என்று எங்கோ கேள்விப்பட்டேன்.

      Delete
    3. வலதுசாரி, இடதுசாரி என்பது ப்ரெஞ்சுப்புரட்சியின் போது தோன்றியது என்று எங்கோ கேள்விப்பட்டேன்.

      Delete
    4. தகவலுக்கு நன்றி.


      \\பொதுவாக முதலாளித்துவ சிந்தனையாளர்கள் வலது சாரிகள், அதுக்கு எதிரானவர்கள் இடது சாரிகள்.\\

      கம்யூனிஸ்ட்களிலேயே வலது கம்யூனிஸ்ட் , இடது கம்யூனிஸ்ட்என்கிறார்களே?

      Delete
  2. //பணம் வாங்கியவர்கள் ஏன் வாக்களிப்பதில் ஏமாற்றுவதில்லை ? இதன் சைக்காலஜி சுவையானது . நேர்மைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை . ஒரு சிஸ்டத்தை குலைக்க யாரும் விரும்புவதில்லை . காசு வாங்கிவிட்டு மாற்றி வாக்களித்தால் , காசு கொடுப்பது என்ற சிஸ்டமே அழிந்து விடும் அல்லவா ? இந்த முறை அழிவதை எதிர்கட்சியும் விரும்புவதில்லை . அதிமுக எதிர்கட்சியாக இருந்தபோதும் அவர்கள் மொண்ணையாகவை எதிர்ப்பு தெரிவித்தனர் . இப்ப திமுகவும் ஃபார்மலாக எதிர்க்கும் .//

    ரொம்ப புத்திசாலித்தனமாக யோசித்தால் இப்படித்தான் மொக்கையாக இருக்கும். அப்படிப்பார்த்தால் 2009ல் அதிக இடங்கள் பெற்ற திமுக 2011ல் ஜெயித்திருக்கும். பணக்கொடுப்பவன் தான் ஜெயிப்பான் என்றால் ஆட்சி மாற்றமே வந்திருக்காது. பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதென்பது ஒரு சில சதவிகிதம் மட்டுமே சாதகத்தை ஏற்படுத்தும். திருமங்கலம் பார்முலா இடைத்தேர்தலில் மட்டுமே கைகொடுக்கும்.

    பணம் கொடுப்பதற்கு எதிராக, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஒரு சில கருத்துகளை சொல்லிவைப்பது தேர்தலுக்கு முன் சொல்லிவைப்பது ஒரு முன் ஜாக்கிரதை. ஒருவேளை தோற்றுவிட்டால் உதவக்கூடும். முந்தைய தேர்தலுக்கு முன் வந்த நாளிதழ்களில் பார்த்தால் தெரியும், எல்லா எதிர்கட்சிகளும் இது தொடர்பாக புலம்பி இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. \\பணக்கொடுப்பவன் தான் ஜெயிப்பான் என்றால் ஆட்சி மாற்றமே வந்திருக்காது.\\

      சென்ற சட்டமன்றத் தேர்தலில் தில்லு முல்லு கலக கட்சியில் ஓட்டுக்கு கொடுத்த பணத்தை எல்லாம் கொடுக்காமல் கட்சிக்காரனுங்களே அமுக்கிட்டனுங்க, எலக்ஷன் கமிஷனும் கொடுக்க முடியாதபடி ஸ்குருவை டைட் பண்ணிடுச்சு.

      Delete
    2. //சென்ற சட்டமன்றத் தேர்தலில் தில்லு முல்லு கலக கட்சியில் ஓட்டுக்கு கொடுத்த பணத்தை எல்லாம் கொடுக்காமல் கட்சிக்காரனுங்களே அமுக்கிட்டனுங்க, எலக்ஷன் கமிஷனும் கொடுக்க முடியாதபடி ஸ்குருவை டைட் பண்ணிடுச்சு.//

      இதெல்லாம் தோற்றுவிட்டால் சொல்லப்படுவது. ஜெயித்துவிட்டால் வேறு மாதிரி பேசுவார்கள். 2011ல் தோற்றபோது, கருணாநிதி சொன்ன காரணம் "பார்ப்பன ஊடகங்களின் சூழ்ச்சி".

      2009லே திமுகவிற்கு தேல்வி ஏற்பட்டு இருக்கும். பல இடங்களில் திமுக 20000-30000 ஓட்டுக்கள் வித்யாசத்தில் ஜெயித்தது. காரணம், திமுகவிற்கு எதிரான ஓட்டுக்களை தேதிமுக பிரித்துவிட்டது.

      Delete
  3. //வலதுசாரி, இடதுசாரி என்று கட்சிகளைச் சொல்கிறார்களே, இதன் அர்த்தம் என்ன? தெரிந்தால் சொல்லுங்களேன்//

    ரொம்ப சிம்பிள். வலதுசாரி வலது கையால் கழுவார்கள். இடதுசாரி இடது கையால் கழுவுவார்கள். எதை, யாருக்கு என்று மட்டும் கேட்கவேண்டாம். ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. அரசியல்னாலே கழுவுவது தானே!!

      Delete
    2. மிதவாதி (நடுநிலை) என்றால் இரண்டு கையாலும் கவுழுவான்!

      Delete
  4. கு.பி,

    ஃபிரென்ச் புரட்சிக்குலாம் முன்னரே வலது,இடது உறுப்பினர்கள் இங்கிலாந்து சபையில் உருவாகிடுச்சு, வேண்டுமானால் பிரஞ்ச் புரட்சிக்கு பின்னர் , ஆட்சியாளர்களுக்கு எதிரான கொள்கை கொண்டவர்களுக்கு நிரந்தரமாக இடது சாரி எனப்பெயர் வந்திருக்கலாம்.

    இன்னும் சொல்லப்போனால் சோழர்கள் காலத்திலேயே படைப்பிரிவில் வலங்கை,இடங்கை என வகையுண்டு.

    வலங்கையினர் சத்ரிய வகை என்றும் நம்பிக்கையான ராஜ விசுவாசிகள் என கருதப்பட்டனர், இடங்கை படையினர் பொதுவான வீரர்களை கொண்டது, ராஜ விசுவாசம் கம்மி என சொல்வார்கள்.

    வலங்கைப்பிரிவினரில் ஒருவரை தான் படையணித்தலைவராக அல்லது பட்டம் , மானியம் எல்லாம் கொடுத்து கவுரவிப்பதும் வழக்கம்.

    இப்பவும் கிராமப்பகுதிகளில் இடங்கையான் தானே அதான் ஏமாத்துறான்னு சொல்லுவாங்க. தஞ்சை பகுதிகளில் இவ்வழக்குண்டு.

    ReplyDelete
  5. பாகவதரே,

    இடது என ஒன்னு இருந்தால் அதுலவும் பெர்செண்டேஜ் அடிப்படையில பிரிவு வராதா?

    முழுப்பொதுவுடை வேன்டும் என்பவர்கள் "இடது சாரி கம்யூனிஸ்ட்" முதலாளித்துவமும் ,பொதுவுடைமையும் கலந்து இருக்கலாம் என சொல்வது "வலது சாரி கம்யூனிசம்"

    ஃபிரான்ஸ் வலது சாரி கம்யூனிச நாடு, ரஷ்யா இடது சாரி கம்யூனிச நாடு.

    சீனாலாம் வலது சாரி கம்யூனிச நாடாகிடுச்சு, அங்கே தனியுடைமை முதலாளித்துவமும் உண்டு ,பொதுவுடமை அரசும் இருக்கு.

    இந்தியாவில்,

    கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா - தா.பா அணி வலதுசாரி,

    கம்யூனிஸ்ட் பார்டி ஆஃப் இந்தியா(மார்க்சிஸ்ட்) - பிரகாஷ் காரத் அணி இடது சாரி.

    ஏன் எனில் முன்னது சீன சப்போர்ட்டர்ஸ்,பின்னது ரஷ்ய சப்போர்ட்டர்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. ஹி...ஹி இஸ்லாம்ல கூட ஒரு வலது,இடது இருக்கு ,சகோ.சார்வாகன் விளக்குவாராக :-))

      Delete
    2. தகவலுக்கு நன்றி வவ்ஸ்..............

      Delete
    3. பாகவதரே,

      ஏதோ தெரிஞ்சத பகிர்கிறோம், எல்லாம் ஒரு பொதுவுடைமை கொள்கை தான் அவ்வ்.

      அப்புறம் சொல்ல மறந்துட்டேன் ,இந்தியாவில் யாராவது கம்யூனிசம் பேசும் போது ரொம்ப சாக்கரதையா வாய கொடுக்கனும்,

      ஒருத்தன் பொதுவுடமைனு மொட்டையா பேசுவான் ,

      இன்னொருத்தன் மார்க்சிய கம்யூனிசம்னு சொல்வான் ,

      அப்புறம் இன்னொருத்தன் மாவோயிச கம்யூனிசம்னு சொல்வான் ,
      சரி போகட்டும்னு அடுத்து போனால்,

      இன்னொருத்தன் மார்க்சீய லெனினிய என இழுப்பான் ,

      அதையும் தாண்டி போனால் அடுத்தவன் மாவோயிச-லெனினிய என புதுசா ஒரு ஜாயிண்ட் அடிப்பான் ,

      சரி இம்புட்டுத்தானானு போனால் விட மாட்டாங்க, மார்க்சீய மாவோயிசனு ஆரம்பிப்பான் ,கொஞ்சம் தலை சுத்தி ஜோடாக்குடிக்கலாம்னு போனால் ,

      அங்கே ஒருத்தன் மார்க்சிய லெனினிய ஏங்கல்ஸ்னு இழுப்பான் , அப்புறம் ஓடினான் ஓடினான் வால்கா நதிக்கரையின் ஓரத்துக்கே ஓடினான் என ஓட்டம் எடுத்தால் தான் உசுரு தப்பிக்க முடியும்,அம்புட்டு கம்யூனிச பிரிவுகள் நம்ம நாட்டுல இருக்கு, எனவே அதெல்லாம் எந்த சாரினு கேட்டு வைக்காதீர் , அவ்வ்!

      40 கம்யூனிஸ்ட்கள் இருந்தாலமொரு இடத்தில் கும்பலா நின்னால் அதுல 42 பிரிவுகள் இருக்கும், இதுல ஒருத்தன் இன்னொருத்தன பார்த்து போலி கம்யூனிஸ்ட் ,ஓட்டுப்பொறுக்கி கம்யூனிஸ்ட்னு திட்டிக்கிறதுல ஒன்னும் கொறைச்சல் இல்லை அவ்வ்.

      Delete
    4. இங்கே இந்துமதத்திலுள்ள உட்பிரிவுகளை விட கம்யூனிஸ பிரிவுகள் ஜாஸ்தியா இருக்கும் போலிருக்கே!!

      ஆனா எனக்கென்னவோ கம்யூனிஸ சித்தாந்தம் நடைமுறைக்கு ஒத்து வருமான்னு சந்தேகமா இருக்கு. முதலாளிகள் தொழிலாளிகளை வஞ்சிப்பது தவிர்க்கப் படத்தான் வேண்டும். ஆனாலும், திறமையுல்லாவன், திறமையற்றவன், உழைப்பவன், சோம்பேறி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற கொள்கை சமுதாய மேம்பாட்டுக்கு உதவுமா என்று தெரியவில்லை. என்னதான் உழைச்சாலும் கிடைப்பது ஒன்னேதான் என்றால் எவனும் முழுத் திறமையை/முழு உழைப்பை வெளிப்படுத்த மாட்டான், அது மொத்தத்தில் நல்லதற்கல்ல.

      Delete
    5. //திறமையுல்லாவன், திறமையற்றவன், உழைப்பவன், சோம்பேறி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற கொள்கை சமுதாய மேம்பாட்டுக்கு உதவுமா என்று தெரியவில்லை. என்னதான் உழைச்சாலும் கிடைப்பது ஒன்னேதான் என்றால் எவனும் முழுத் திறமையை/முழு உழைப்பை வெளிப்படுத்த மாட்டான், அது மொத்தத்தில் நல்லதற்கல்ல.//

      கட்சிக்காரங்களை விடும், உமக்கு அடிப்படையே இன்னும் புரியலைனே தோனுது, ,அதெல்லாம் விளக்கி சொல்ல நமக்கு தெம்பு இல்லை அவ்வ்!

      ஆனால் இந்தக்கட்சிக்காரங்கக்கிட்டே மட்டும் விளக்கம் கேட்டுறாதீர், உள்ளதும் போச்சுடானு கொழப்பிடுவாங்க ,அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் தலைவருங்க பேரு மட்டும் தான் அவ்வ்!

      Delete
  6. actually there is not % increase at all.. in last loksabha the % was 72.2 % .. almost the same this time too... 79% in 2004 elections.. !

    ReplyDelete
    Replies
    1. I didn't know that...............Thanks Yaar!!

      Delete
  7. விரட்டி விரட்டி பணம் கொடுத்தார்கள் என்பது உண்மை! இவர்கள் விரட்டி அடிக்கப்படுவார்களா என்பது 16ம் தேதிதான் தெரியும்! இந்த முறை நான் கொஞ்சம் மாற்றி யோசித்து இருக்கிறேன்! என்னுடைய ஸ்டூடண்ட்ஸ் நிறைய பேர் நோட்டாவுக்கு போட்டிருக்கிறார்கள்! இளைய தலைமுறை நோட்டாவை நாடி இருப்பதால் பழைய பெருச்சாளிகளுக்கே மீண்டும் வாய்ப்பு வரவும் வாய்ப்பு இருக்கிறது! பார்ப்போம்!

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்காவின் Times பத்திரிகையின் அட்டைப் படத்தில் கையாலாகாத பிரதமர் என்று படத்தோடு போட்டு உலக அரங்கில் மானத்தை வாங்கியதற்கே கொஞ்சம் கூட அசராதவர்களுக்கு நாம் போடும் அஞ்சு பத்து NOTA வாக்குகளைப் பார்த்த பின்னர் சூடு சொரணை வந்து விடுமா என்ன?

      Delete
  8. //நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 73% வாக்குகள் பதிவாகியிருக்கிறது. வழக்கமா 58% அல்லது 65% என்று தான் வாக்குகள் பதிவு ஆகும்.//

    2009 - 72.98%

    2014 - 72.83%

    ReplyDelete
    Replies
    1. \\தபால் வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட வேண்டியிருப்பதால் இது 74 சதவீதம் வரை உயரக்கூடும் என்று சொல்லப்படுகிறது.\\

      Dinamani............

      Delete
    2. 40 வருஷத்துக்கப்புறம் அதிகபட்ச வாக்குப் பதிவுன்னு எங்கேயோ படிச்சேனே......

      சரி அது போகட்டும், தபால் வாக்குகளையும் சேர்த்தால் 74 சதவிகிதமாக உயரும்னு சொல்றாங்களே??

      Delete
    3. //40 வருஷத்துக்கப்புறம் அதிகபட்ச வாக்குப் பதிவுன்னு எங்கேயோ படிச்சேனே....//

      அது தமிழகத்தில் அல்ல. வட மாநிலங்களில்

      //சரி அது போகட்டும், தபால் வாக்குகளையும் சேர்த்தால் 74 சதவிகிதமாக உயரும்னு சொல்றாங்களே??//
      தபால் ஓட்டு 50000 தான் இருக்கும். 1% சதவிகிதம் வராது.

      Delete
    4. தமிழகத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ஓட்டுப்பதிவு

      http://www.dinamalar.com/news_detail.asp?id=962682

      Delete
  9. பொதுவாக உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிக அளவில் வாக்குப் பதிவு இருக்கும். சட்டமன்றத் தேர்தலில் அதைவிட கொஞ்சம் குறைவாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் இவ்விரண்டயும் விடக் குறைவாக இருக்கும். வாக்குப் பதிவு அதிகமானதற்கான காரணங்களில் ஒன்று டபுள் என்ட்ரிக்களை நீக்கியது

    ReplyDelete
    Replies
    1. \\வாக்குப் பதிவு அதிகமானதற்கான காரணங்களில் ஒன்று டபுள் என்ட்ரிக்களை நீக்கியது.\\ ஆஹா ............ இப்படியும் ஒன்னு இருக்கா!!

      Delete
    2. பாகவதரே,


      நீரும் புழுகுறீர், கூடவே முரளியும் புழுகுறார் என்ன தான் கனெக்‌ஷன் அவ்வ்!

      # கடந்த பாராளும்னற தேர்தலை விட இப்பொழுது 0.82 %கூடுதல் வாக்கு பதிவாகி இருக்கு.

      ஆனால் 2011 இல் 4.6கோடி வாக்களர்கள்,

      இப்போ இப்போ 5.5 கோடி

      எனவே அப்போ 72.98% இப்போ 73.62 க்கு கூடுதல் வாக்காளர்களே ஓட்டுப்போட்டிருக்கனும்.

      என்னாத்த டபுள் என்றி நீக்கினாங்க அவ்வ்!

      Delete
    3. வவ்ஸ்,

      2009 ஓட்டு போட்டவர்கள் 3,03 கோடி
      2014 ஓட்டு போட்டவர்கள் 4,05 கோடி.
      கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் அதிகமாக வாக்களித்து இருக்கிறார்கள்.

      Delete
  10. கிராமங்களை விடவும் நகர பகுதிகளில் ஓட்டு பதிவு % குறைவு.

    ReplyDelete
  11. கிராமங்களை விடவும் நகர பகுதிகளில் ஓட்டு பதிவு % குறைவு.

    ReplyDelete
  12. வணக்கம் நண்பர்களே

    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    ReplyDelete