Wednesday, April 16, 2014

லாட்ஜில் "பலான தொழிலை" ஒழிக்க மொக்கை பதிவர்கள் செய்த முயற்சி .........

வணக்கம் மக்கள்ஸ்!!

தகுஸ்தான் நாடு முழுவதும் பலான தொழில் லாட்ஜ்களில் விமர்சையாக நடந்து வந்தது.  இதைத் தடுக்க அந்நாட்டு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.  அதைப் பார்த்து கொதித்தெழுந்த சில சமூக சிந்தனையுள்ள தமிழ்ப் பதிவர்கள் ஒன்று திரண்டு போராட திட்டம் தீட்டினார்கள்.
அந்தப் பதிவர்களும் அவர்களது வலைப்பூக்களும் பின்வருமாறு:

வலைப்பூ 1: "மிளகு இரசம் ஊற்றும் இடமே"
பதிவர்: பிதற்றல் அரசு [ஆங்கிலப் பெயர் Charcoal Wagon] 
இவரது வலைப்பூவின் பஞ்ச் டயலாக்: "மூக்கு சிந்தவே மாட்டீர்களா"
   இவர் தான் போராட்டக் குழுவின் தலைவர். 

வலைப்பூ 2: சீ .....போ..... கழுதை [Go Donkey-கோடாங்கி]
பதிவர்-மக்குபால் கள்வன் [Mac Paul Kelvin]
வசிப்பிடம்: Scarborough, Ontario, Canada.

இவர் தான் போராட்டக் குழுவின் துணைத் தலைவர், தளபதின்னு கூட சொல்லலாம்.  [சார்கோல்வாகன் மூஞ்சிக்கு இவரை விட்டா வேற எந்த இளிச்சவா பய கிடைப்பான்??!!  ஹி .....ஹி .....ஹி .....]

இவர்கள் இருவரும் சேர்ந்து போராட்டக் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வேளையில் களமிறங்கினார்.   தமிழ் மொழிப் புலமை, ஆர்வம், கடைசி வரை போராடும் குணம் இதெல்லாம் இருக்கும்படியான ஒரு ஆளைப் பிடிச்சு உறுப்பினரா போடணும்னு யோசிச்ச இவங்களுக்கு ஞாபகம் வந்தவர் திருவாளர் வௌவால்.

பதிவர் 3. வௌவால்.
இவரது வலைப்பூ:   "தலைகீழா தூக்கு மாட்டிகிட்டு சாவு" [ஐயையோ இது சாபமில்லைங்க, வலைப்பூ பேரே அதான்!!  ஹி .....ஹி .....ஹி .....]

வௌவால் அவர்களை போனில் தொடர்பு கொண்டார் சார்கோல்வாகன்.  "நண்பரே ஒரு உதவி வேண்டும், எங்கே இருக்கீங்க?" 

மறுமுனையில், " சார் நான் பாண்டிச்சேரி போய் சரக்கடிச்சிட்டு வரும் வழியில் ஒரு ஊர்ல மட்டையாகிப் போய் கிடக்கிறேன் சார்."  என்று ஹீனஸ்வரத்தில் பதில் வந்தது.

"ஏன் என்ன ஆச்சு?"

"ஒரு வாரமா திருக்குறளைப் படிச்சிட்டு, கள்ளுண்ணாமை தலைப்பில் ஒரு போஸ்டு ரெடி பண்ணினேன்.  ரொம்ப டயர்டாயிடுச்சு.  அதான் இங்கே வந்து கொஞ்சம் ஏத்திகிட்டு போகலாம்னு....  ஹி ....ஹி ....ஹி ...."

"அதுசரி, அடுத்த வாரம் தகுஸ்தான் போகணும், நீங்க பிஸியா?"

"அப்படியா, இப்பத்தான் திருக்குறளில் கொல்லாமை அதிகாரம் பத்தி எழுதி பதிவு ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்.  அது கொஞ்சம் முடிக்க முடியலை"

"ஏன் என்ன ஆச்சு?"

"ஒன்னுமில்ல, எழுதும் போது நாய் லெக் பீஸ் நாலாச்சும் இருக்கனும், அது தீர்ந்து போச்சு, நாய் புடிக்கிற ஆளுங்க லீவுல போயிட்டாங்களாம்.  நாய் பிரியாணி திரும்ப ரெடியாக ஒரு வாரம் ஆகும்ன்னு கடைக்காரன்  சொல்லிட்டான், அதான்!!"

நீ அடிக்கடி அவ் .......அவ் .... அப்படின்னு எதுக்கு கத்துறேன்னு இப்பத்தான்யா புரியுது என்று மனசுக்குள் நினைத்த சார்கோல்வாகன் தொடர்ந்தார். "அதுசரி, இன்னமும் வேற ஏதாவது வேலை பாக்கி இருக்கா?"

அதிகமா ஒண்ணுமில்லை, "பிறன்மனை நோக்காமை" பத்தி வள்ளுவர் சொல்வதை ஒரு போஸ்டா போடலாம்னு இருக்கேன்.  அதெல்லாம் காலைல மட்டும்தான் எழுத முடியும்."

"ஏன் அப்படி?"

"அப்பத்தான் எங்க ஏரியாவுக்கு தண்ணீர் லாரி வரும், தண்ணீர் பிடிக்க வர கிழவிங்க வருவாங்க, சேலை விலகும், அவங்க இடுப்பை பார்த்துகிட்டே எழுதுவேன்.  எழுத்து...... கழுதை.......  சீ ........கவிதை....கவிதை..... வந்து அருவியா கொட்டும்.   அதான்.  ஹி ........  ஹி ........  ஹி ........ "


 "தமிழ் கலாசாரத்தை திருவள்ளுவர் வழியில் நின்று காப்பாத்தும் ஒரே ஆள் நீதான்யா, நீ வந்தாத்தான் நம்ம போராட்டம் ஜெயிக்கும், வந்துடறீங்களா?"


"போராட்டத்துக்கு  நான் கண்டிப்பா வந்துடறேன் கவலைப் படாதீங்க, ஆனா ஒரு கண்டிஷன்" என்று நிறுத்தினார் வௌவால்.

"என்னது?"

"எனக்கு ஜால்ரா அடிக்க ஒரு ஆள் வேணும்?"

"ஐயையோ , என்னது என்னோட தொழிலையே மாத்துறீங்க......??!!  அதெல்லாம் என்னால முடியாது......"  பதை பதைக்கிறார் சார்கோல்வாகன்.

"ஒய்....கவலைப் படாதீரும்.........  அதெல்லாம் நான் பாத்துக்கறேன், ஆளை நானே கூட்டியாந்துடறேன், உமக்கு தகவல் மட்டும் சொன்னேன்.  சரி கண்டிப்பா வந்துடறேன்" என்ற உறுதிமொழியோடு போனை கட் செய்தார் வௌவால்.

இதையடுத்து வாய்ச் சண்டை போடுவதில் கில்லாடியான ஒரு பதிவரை யோசித்தார் சார்கோல்வாகன்.  அவருக்கு உடனடியாக ஞாபகம் வந்தவர் தான் நான்காவது போராளி!!

பதிவர் 4. பெயர்: கொலாப்ஸ் [மேனகா-சஞ்சய் காந்தியின் மகன் பெயரே தான் இவர் பெயர்]
வலைப்பூ:  கொலாப்ஸ் ப்ளீஸ்.......Collapse Please
வசிப்பிடம்: St Loius, Missourri, USA

சார்கோல்வாகன் கொலாப்ஸ்அவர்களைத் தொடர்பு கொள்கிறார்.  ரிங் டோன் கேட்டதும் யார்டா இந்த நேரத்தில என்று கொலாப்ஸ் பார்க்கிறார், சார்கோல்வாகன் என்று தெரிந்ததும் குஷியாகிறார்.  "ஹாய் மச்சான், என்ன மேட்டர் இந்த அர்த்த இராத்திரியில போனு?"

"சாரி, இங்க பகலுன்னா அங்க நைட்டுன்னு மறந்து போச்சு" என்று வருத்தம் தெரிவித்த மாமூல் மாமா விஷயத்தை தெரிவிக்கிறார், போராட்டத்திற்கு வர அவரும் சம்மதிக்கிறார்.

விபச்சாரத்தால் வரும் கெடுதியை உணர்த்த ஒரு டாக்டர் இருந்தால் பரவாயில்லையே என எண்ணிய சார்கோல்வாகன், அமரிக்காவில் தங்கியிருக்கும் Dr. பிரகாஷை [பதிவர் 5] அழைக்கிறார்.  அதற்க்கு, "நிம்பள் கூப்பிட்டான், நம்பள் வர்றான்" என்று மறுப்பே சொல்லாமல் உடனடியாக ஒப்புக் கொள்கிறார்.  தமிழைக் காப்பாற்ற இந்த மாதிரி தெளிவா தமிழ் பேசறவந்தான்யா வேணும் என மகிழ்கிறார் சார்கோல்வாகன்.

இந்த ஐந்து பேரும் நல்ல நாள் பார்த்து தகுஸ்தான் பயணமானார்கள்.  அங்கே விசாரித்து போராட்டத்தை ஆரம்பிக்க கனஜோராக "தொழில்" நடக்கும் பிரபலமான ஒரு லாட்ஜை தேர்ந்தெடுத்தனர்.

அதன் முன்னர் நின்று கொண்டு கோஷம் போட்டனர்.  லாட்ஜில் இருந்து கேசுகள் ஜன்னல் ஓரத்தில் நின்று என்னாடா இது என்று புரியாமல் திரு....திரு.. என விழித்த வண்ணம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

லாட்ஜில் தொழில் நடத்தும் அம்மா கொஞ்சம் விவரமானவர்.  போராட்டம் அவருக்கு புதிதல்ல.  அனைத்தையும் சமாளித்தவர்.  போராடுபவர்களின் வீக்னஸ் என்ன என்று நொடியில் கண்டுபிடித்து தீர்த்து போராட்டத்தை பிசுபிசுக்கச் செய்து விடுவார்.  உடனடியாக ஐந்து பதிவர்களையும் உள்ளே அழைத்தார்.   முதலில் Dr .பிரகாஷை அவரிடமுள்ள ஐட்டம் ஒருத்தியை அழைத்து பேச விட்டார்.  அவள், "நிம்பள் நம்பள்கிட்ட வர்றான், மஜா பண்றான், கம்முனு போறான்" என்று பேச ஆரம்பித்தாள்.  அவள் பேசுவது மற்ற நான்கு பேருக்கும் சுத்தமாகப் புரியவில்லை.   ஆனால் Dr .பிரகாஷுக்கு மட்டும் தெளிவாகப் புரிந்தது.  இவரும் அவருடன் பேச ஆரம்பித்தார், இருவருடைய பாஷையும் அச்சு அசலாக ஒன்றாக இருந்தது.  ஒரு விக்கட்டு டவுன்.


அடுத்து ஒரு அயிட்டத்தை கூப்பிட்டு வௌவாலை ஆள் எப்படிப் பட்டவர் என்று நோட்டமிடச் சொன்னார்.  அந்தப் பெண் பார்த்துவிட்டு,   "He is not ugly" என்றார்.  இது வௌவ்வாலின் காதில் விழுந்தது.  உடனே ஆள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தார்.   சார்கோல்வாகனும், மக்குபால் கள்வனும் ஒன்றும் புரியாமல் " என்ன ஆயிற்று?" என்று கேட்டனர்.

"அவ என்னை அழகான வாலிபன்னு சொல்லிட்டாய்யா!!"  என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

"அப்படி எப்ப சொன்னா?"

உங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதா?  ரெண்டு நெகடிவ் சேர்ந்தா பாசிடிவ் ஆகும்யா!!  not ஒரு நெகடிவ், ugly இன்னொரு நெகடிவ்.  not ugly என்றால் அழகான மன்மதராசான்னு தானே அர்த்தம்?!!  இதைக் கேட்ட இருவரும் திகைத்துப் போய் நிற்க மீண்டும் அந்த ஆயிட்டத்திடம் ஓடினார் வௌவ்வால்.

அவர் முன் சென்றதும் சற்று மூச்சிரைக்க நின்றார்.  இன்னொருத்தனையும் கவிழ்திடலாம் என்ற மகிழ்ச்சியில் அந்தப் பெண் கையை handshake செய்ய நீட்டினார், பதிலுக்கு வௌவ்வாலும் நீட்டினார்.  அப்போது அவர் கையைப் பார்த்த அந்தப் பெண் தலை சுற்றி மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.  இதைப் பார்த்த ஓனரம்மா அங்கே ஓடி வந்தார்.

"என்னய்யா ஆச்சு?" என்று அவர் கத்த, விஷயத்தை சொன்னார் பதிவர்.

"அப்படியா, எங்கே உம்ம கையை காட்டும்" என்று பார்த்தார்.  அவருக்கே தலை கிறுகிறுக்க ஆரம்பிக்க ஒரு வழியாய் சுதாரித்துக் கொண்டார்.

"யோவ், என்னைய்யா இது கையில ஒரு ரேகையைக் கூடக் காணோம்?  சுவடே தெரியாம அழிஞ்சு போயிருக்கே, இது எப்படிய்யா சாத்தியம்?"  என்று அவர் நடுங்கும் குரலில் கேட்கிறார்.

" நான் பிசின் ரசிகன்" என்று மேட்டரை புட்டு புட்டு வைக்கிறார் வௌவ்ஸ்.

இதைக் கேட்ட அந்தம்மா, "ஏய் இந்த பார்டிகிட்ட புதுசா வந்திருக்கும் பிசின் போட்டோ ஒன்னு கையில குடுத்து ஒரு ரூமுக்குள்ள தள்ளி கதவை, சாத்துங்கடி, மேட்டர் குளோஸ்" என்று அனுப்பி வைக்கிறார்.  இரண்டாவது விக்கெட் காலி.

பாக்கி மூணு பேரு.  அதில நம்ம "கொலாப்ஸ் ப்ளீஸ்........"  பார்ட்டி ரொம்பவும் சவுண்டு குடுக்க ஆரம்பித்தார்.  கண்ணா பின்னாவென்று திட்ட ஆரம்பித்தார்.  தலைவி பார்த்தார், இவரை வழக்கமான முறையில் டீல் பண்ண முடியாது என்பது மட்டும் புரிந்தது.  என்ன செய்யலாம் என்று யோசித்தார்.  பேசாமல் இருந்தால் ஆள் சைலண்டாகி விடுவாரோ என நினைத்தார்.  ஆனால் போகப் போக ஆள் இன்னும் மோசமாகவும் சப்தமாகவும் வசவுகளை அள்ளி வீச ஆரம்பித்தார்.  எதற்கும் அடங்குவது போலத் தெரியவில்லை. தற்போது தலைவிக்கு ஒரு ஐடியா பளிச்சிட்டது.  கொலப்ஸ் ப்ளீசைப் பார்த்து பதிலுக்கு கண்டமேனிக்குத் திட்ட ஆரம்பித்தார்.

"போடா லூசு, மெண்டல், காயிதே.........கஸ்மாலம்...... உன் டங்குவாரை அறுத்திடுவேன்டா........... போடா..........ஈனம் ....மானம் இல்லாதாவனே........" என்று வெளுத்துக் கட்ட ஆரம்பித்தார். இதைக் கேட்டு கொலாப்ஸ் பொங்குவார் என்று அனைவரும் எதிர்பார்க்க, அவர் முகத்திலோ கோபம் குறைய ஆரம்பித்தது.  ஒரு கட்டத்தில் சந்தோஷமும் தெரிய ஆரம்பித்தது.  அவர் மேலும் திட்டுவதைத் தொடர, இவர் லைட்டாக சிரிக்கவும் ஆரம்பித்தார்.

"இதான், இதான் எனக்கு வேணும்னேன்.  இது போதும் இன்னும் மூணு மாசத்தை இதை வச்சே ஓட்டிடுவேன்.  இப்போ நான் சந்தோஷமா போறேன், நீ என்ன வேணுமின்னாலும் நடத்திகிட்டு போங்க, வராட்டா........ஹி ...ஹி ...ஹி ..." என்று அடுத்த பிளைட் பிடிக்க ஓடினார் கொலாப்ஸ் பிளீஸ்..........  அடக் கன்றாவியே, இப்படியுமா ஒரு வியாதிஇருக்கும், இது மாதிரி எங்கேயுமே பார்த்ததேயில்லையே என்று  சார்கோல்வாகனும், மக்குபால் கள்வனும் திகைத்து நின்றனர்.

இப்போ இந்த ரெண்டு பேரையும் சரிக்கட்டினா போதும்!!  தலைவி இவர்களை கூப்பிட்டு தனியாகப் பேசினார்.  தன்னிடமுள்ள அயிட்டத்தில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளச் சொன்னார்.  ஆனால் மக்குபால் கள்வன் மறுத்தார்.  என்ன காரணம்?

"சகோதரியுடன் புணர்ந்தால் தப்பா ரைட்டான்னு ஒரு புது விஞ்ஞானி கேள்வி கேட்டிருக்காரு.   நான் அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கிட்டு இருக்கேன்" என்றார் மக்குபால்.  இதைக் கேட்ட லாட்ஜ் தலைவிக்கே கோபம் சுர் .....என்று ஏறியது.  "க்ர்ர்ர்ர்ர்............ தூ............."  என்று மக்குபால் கள்வன் மூஞ்சியிலேயே துப்பினார்.  "நீயெல்லாம் மனுஷனே இல்லாடா......." என்று திட்டித் தீர்த்தார்.

மாமூல் மாமு மட்டும் எதற்கும் அசைய வில்லை.  சரி, முடிவாக என்ன தான் வேண்டும்? எனக் கேட்டார்.

"நீங்கள் தகுஸ்தான் நாட்டின் வட மாநிலங்களில் இருந்து அயிட்டங்களை அழைத்து வந்து தொழில் செய்கிறீர்கள் அல்லவா?"  என்றார் சார்கோல்வாகன்.

"ஆமாம், அங்க தான் சூப்பர் பிகருங்க கிடைக்குது, அதிலென்ன தப்பு?" புரியாமல் கேட்டார் தலைவி.

"அது தான் தப்பே, அதை நிறுத்த வேண்டும்"

"யோவ், என்ன என்னோட பிழைப்பில் மண்ணை வாரிப் போடறீங்களா?" வெடித்தார் தலைவி.

"இல்லை"

"அப்போ வேறென்ன?"

"நீங்க தொழில் பண்ணுங்க, ஆனா உள்ளூர்  பெண்களையே வச்சு தொழில் பண்ணுங்க, அது போதும்"

"அட நாறப் பசங்களா, விபச்சாரம் தப்பு என்பது தானே உங்க கொள்கை, அப்புறம் என்ன உள்ளூரு, வெளியூரு வேண்டிக் கிடக்கு?  தப்புன்னா தப்புன்னு ஸ்டெடியா நிப்பீங்களா, அதை விட்டுட்டு உள்ளூர் காரியை வச்சு தொழில் பண்ணுன்னு சொல்லுவீங்களா?  தப்புன்னு வந்த பின்னாடி எந்த ஊர்க்காரியா இருந்தா உங்களுக்கென்ன?"  பொரிந்து தள்ளினார் தலைவி.

அதுக்கு விளக்கம் கொடுத்தார் சார்கோல்வாகன்.  "விபச்சாரம் தப்புதான், ஆனாலும் அதில் ஈடுபடுபவர்கள், மனிதர்கள் தானே, அவர்களுடைய மனித உரிமை நசுக்கப் படும்போது நாங்க ஓடிவந்து நிப்போம்.  உள்ளூர் காரப் பயலுவ இங்க வந்து மஜா பண்ணும் போது ஆயிட்டத்துகிட்ட பேசிகிட்டே மஜா பண்ணுவாங்க, ஆனா இப்போ உள்ளூர் பாஷை தெரியாதவ  தொழில் செய்யுறா, அவ தகுஸ்தான் நாட்டின் வடமொழியில் பேசுறா,  அது புரியாம இங்கே மஜா பண்ண வரும் உள்ளூர் காரன் தவிக்கிறான், அவன் மனித உரிமை நசுக்கப் படுது.  அதான் அதை  நிலைநாட்ட நாங்க வந்துட்டோம், விபச்சாரம் ஆகாது என்பது தான் எங்க கொள்கை, ஆனாலும் விபச்சாரம் நடக்கும் வரை மனித உரிமை பாதிக்கப் பாட்டால் அதைப் பார்த்து நாங்க பொறுத்துகிட்டு இருக்க மாட்டோம்.  மஜா பண்ணும் ஆயிட்டத்திடம் தாய்மொழியில் பேசுவது ஒருத்தனின் மனித உரிமை, அது பாதிக்கப் படுவதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.  அதனால ஒழுங்கா உள்ளூர் மொழி தெரிஞ்சவங்களை வச்சு தொழில் பண்ணுங்க.  "


இதைக் கேட்டதும் தலை சுற்றி மயக்கம் போட்டு விழுந்தார் லாட்ஜுக்கு சொந்தக் காரம்மா!!

6 comments :

 1. வணக்கம் மாப்ளே,
  ஹா ஹா ஹா உமக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் ஆகி விட்டது ம்ம்ம்ம்ம்ம்ம்

  நம்மையும் மதித்து ஒரு பதிவா!!!! அதில் நான் தலைவரா மிக்க மகிழ்ச்சி
  ஆன்மீகத்தை ,அறிவியலை விட இப்படியாவது எழுதும்!!!

  விபசாரம் அல்ல பாலியல் தொழில் என அழைக்கலாமே!!!!.

  இதன் காரணம் சமூக,பொருளாதார சிக்கல் மட்டுமே. ஆதிகாலம் முதல் இருந்து வருகிறது.இதனை உம்ம பகவான் நினைத்தாலும் ஒழிக்க முடியாது. நீர் பாட்டுக்கு பாலியல் தொழிலை கிண்டல் அடித்து பதிவு போடுகிறீர். உம்ம குரு பிரபுபாதா கிருஷ்ன பக்தை, பாலியல் தொழில் செய்தாலும் நேசிக்க சொல்கிறார். இங்கே படியும்!!!!
  http://www.brahmacarya.info/2011/04/devotee-prostitutes/
  They were all very eager to meet the Lord, and their beautiful faces were decorated with dazzling earrings((உம்ம குரு சைட் அடிகிறார் ஹி ஹி!!! குண்டு மணி குலுங்குதடி கண்ணம்மா காதிலே காதிலே எனப் பாடுவாரோ!!!)), which enhanced the beauty of their foreheads.
  PURPORT
  We may not hate even the prostitutes if they are devotees of the Lord. Even to date there are many prostitutes in great cities of India who are sincere devotees of the Lord.
  …. It is understood herewith that even in those days, about five thousand years ago, “””there were prostitutes in a city like Dvaraka, where Lord Krsna resided”” கிஷ்ன‌ன் ஊரிலும் பாலியல் தொழிலாழிகள் இருந்தனர். அவர் என்ன பதிவா எழுதினார் இதைப் பற்றி!!!). This means that prostitutes are necessary citizens for the proper upkeep of society(பாலியல் தொழிலாழிகள் மிக தேவையான குடிமக்கள் பிரபுபாதா!!!)

  அனைவருக்கும் குறைந்த பட்ச வாழ்வாதாரம் கிட்டினால் மட்டுமே பணம் வேண்டி செய்யப்படும் பாலியல் தொழில் மட்டுமே குறையும்.பெண்னை ஒரு நுகர்வுப்பொருளாக்கும் சிந்தனை இருக்கும் வரை பாலியல் நுகர்வு அதிகரிக்கவே செய்ய்யும்.


  நமது நாட்டு சட்டம் இதனை குற்றம் எனக் கருதுகிறதா என்பது குழப்பம் தரும் விடயம்

  t,m 2
  நன்றி!!!!

  ReplyDelete
 2. வர வர உங்களுடைய பதிவின் தரம் குறைந்துகொண்டே போகிறது.

  ReplyDelete
 3. இதுக்கு கூட யரோ 4 ஓட்டு குத்திருக்கானுங்க!!!

  என்ன தாசு, அந்த 4 ஓட்டு போட்டவங்களும் , நீங்களும் தகுஸ்தான் -ல போய் பண்ணிணத பதிவாவே போட்டீங்களா??

  ReplyDelete
 4. கருத்துள்ள புள்ளையா இருப்பீங்க போலிருக்கே. கொஞ்ச நேரம் சிரிக்க வைத்தீர்கள்.

  ReplyDelete
 5. நீங்க சினிமாவில் எழுதலாம் சகா. நல்ல கற்பனை வளம் இருக்கு. மிக மிக அருமை. சிரிக்க சிந்திக்க ( ச்சீ பழ்ய்க்க தோஷத்துல வந்துச்சாப்பா ) சிரிக்க மட்டும் வைத்தீர்கள். :) அது சரி இதை எல்லாம் பக்கத்துல குந்திகினு கூட்டிக் கொடுத்தாப்பா மாதிரி சொல்றீங்களே. உங்களை நான் பார்க்கவே இல்லியே நைனா. என்ன மாறுவேடத்தில் மாமா வேலைப் பார்த்தீங்களோ. டவுட்டு !!!

  ReplyDelete
  Replies
  1. உங்க போராட்டத்தை இரகசியமா நாம் ஆள் அனுப்பி படம் புடிச்சோமுங்க !! அதுமட்டுமில்ல நமது தகவல் நெட்வொர்க் கொஞ்சம் ஸ்ட்ராங்கு!!

   சகோதரியை புணரலாமா என்று யோசிப்பவனை விட மாமா வேலை பார்ப்பவன் எவ்வளவோ பெட்டர்.

   Delete