Tuesday, April 1, 2014

இதை எந்த மெய்ஞானி சொன்னார்? சொல்லுங்க ஜோதிஜி...........!!

வணக்கம் மக்கள்ஸ், 

திரு.ஜோதிஜி, திருப்பூர்  ஆன்மீகப்பற்றும் அடுத்தவர் சொத்தும்? என்ற பெயரில் தனது ஆன்மீகப் பயண தொடரின்  இறுதிக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்.   "ஆத்தீகம், நாத்தீகம் ஆகிய ரெண்டு டீமும் வேணாம், கிரவுண்டுக்கு வெளியே உட்கார்ந்து வேடிக்கை மட்டுமே பார்க்க முடியாதா?" என்று முன்னர் கேட்ட இவர் இதில் நாத்தீகம், நவீன அறிவியல், திருமூலர் அப்படின்னு எல்லா டீமுக்கும் விளையாடி கோல் போட்டிருக்கார், கட்டுரையை முழுசா படிச்சும் இவர் எந்த டீமுக்குத்தான்யா ஒரிஜினலா விளையாடுராருன்னு கண்டுபிடிக்க முடியலை!!

இவர் இக்கட்டுரையில் சொன்னது யாவும் பொதுவாக தி.க.வினர் இறை நம்பிக்கையாளர்களைப் பார்த்து வீசும்  குற்றச் சாட்டுகளே, புதிது ஏதும் இல்லை.


அறிவியலால் கிடைத்த சாதனங்களால் தான் 'வாழ்க்கை என்பது அழகானது' என்பதே  புரிந்தது என்கிறார்.  ஐயா, அறிவியல் சில வசதிகளைக் கொடுத்துள்ளது, ஆனால் அதற்கான விலையோ எக்கச் சக்கம்.  கண்ணை விற்று ஓவியம் வாங்குவது புத்திசாலித் தனமோ?  கேரளத்திலிருந்து   தமிழகம் வழியாக கர்நாடகம்  செல்லும் எரிவாயுக்  குழாய் நம்மை எப்பாடு படுத்தும், கர்நாடகத்தில் தூய்மையாக வரும்  காவிரி தமிழகம் வந்தததும் எப்படி சின்னா பின்னமாகிறது என்பது குறித்தெல்லாம் அவர் அலசி ஆராய்ந்து தள்ளியுள்ள ஜோதிஜி அவர்களே, அறிவியல் கண்டுபிடிப்புகள் சுற்றுப் புறச் சூழலை எந்த அளவுக்கு நாசப் படுத்தியிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா?

கணினி வந்த பின்னர் தான் நாம் எழுதுவது காக்கப் படுகிறதா?  எப்படி திருக்குறள், கம்பராமாயணம் எல்லாம் நமக்குக் கிடைத்தன?

பகுத்தறிவுவாதி என்று தங்களை சொல்லிக் கொண்டு திரியும் கூட்டத்தை வைத்து அவர்கள் சொன்னது தான் பகுத்தறிவு என்று யாராவது நினைத்தால் மன்னிக்கணும்.  இவர்கள் போல ஒன்னாம் நம்பர் மூடநம்பிக்கையாளர்கள் வேறு யாரும் இல்லை, பகுத்தறிவு என்ன சாதா அறிவு கூட இவர்களுக்கு குறைவு, கேள்வி கேட்காமல் ஓடும்  ஆட்டு மந்தைகள்,  போலிச் சாமியார்களுக்கு எப்படி அடிப்படை இல்லையே அதே போல இவர்கள் கொள்கைக்கும் அறிவியல் ரீதியாகவோ, தத்துவ ரீதியாகவோ எந்த அடிப்படையும் கிடையாது. பகுத்தறிவுக்கும் இந்த கூட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பகுத்தறிவு என்பதை  கெட்ட வார்த்தையாக்கிய பெருமை இந்த பகுத்தறியாவதிகளையே சாரும்.

ஒருவர் இறை நம்பியாளராக வேண்டுமா இல்லையா என்பது அவரவரது விருப்பம், யாரும் திணிக்க முடியாது.  கடவுள் உங்களை யூனிபார்ம்  போடச் சொல்லாவிட்டாலும், சடங்குகளைப் பின்பற்றச் சொல்லா விட்டாலும், எதாவது ஒரு அடையாளத்தை வைத்துக் கொள்வதும், சில சடங்குகளைப் பின் பற்றுவதும் யாராலும் தவிர்க்க இயலாது.


அடுத்து தன் கட்டுரையில் ஆங்காங்கே முத்து முத்தா தத்துவத்தையும் பொழிஞ்சிருக்காரு!!


"உலகத்தில் உள்ள அனைத்தும் மாயை. எதன் மேலும் ஆசை வைக்காதே" என்று தான் உலகில் உள்ள அனைத்து மதத் தத்துவமும் இறுதியாகச் சொல்கின்றது.

நம் கேள்வி:  இதற்க்கு ஆதாரம் என்ன?  எந்தெந்த மதங்களில் எங்கே இவை சொல்லப் பட்டுள்ளன?

"ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினையுண்டு" என்பதை மறந்து போய் விடுகின்றார்கள். இது விஞ்ஞான விதி மட்டுமல்ல. ஒவ்வொரு தனி மனிதர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த சூத்திரமும் கூட.  

 நம் கேள்வி: இந்த சூத்திரத்தை எழுதியது யார்?  ஆதாரம் என்ன?


"முடிவில்லாத முயற்சிக்கு ஒரு நாள் கூலி கிடைத்தே தீரும்" என்ற எண்ணம் உள்ளத்தில் உருவாகி இருக்க வேண்டும். 

இதைத்தான் இந்த உலகில் வாழ்ந்த சித்தர்களும், ஞானிகளும் நமக்கு உணர்த்தினார்கள். உடம்பை கோவிலாகக் கருதினார்கள். மனதை தெய்வமாக மாற்றினார்கள். தன்னை உணர்வதே ஆன்மீகம் என்றார்கள். உண்மை எது? பொய் எது? என்பதை அடையாளம் காட்டினார்கள். எந்த சித்தர் சொன்னார், எந்த ஞானி சொன்னார், எங்கே சொன்னார்? மனது தெய்வமா?  [மண்டையை பிச்சிக்க வைக்குதே!].  அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட உண்மை என்ன?  பொய் என்ன?


மேற்கண்ட தத்துவங்களைப் படித்ததும் ஏனோ எனக்கு நீயா ....... நானா.......  வில் பார்த்த காட்சி ஒன்று நினைவில் வந்தோடியது!!   நானும் அதில் வருவது மாதிரி, "எந்த மதத் தத்துவம் சொல்லிச்சு,  எந்த நூல் சொல்லிச்சு?" என்று திரும்பத் திரும்ப கேட்டாலும் ஜோதிஜியிடமிருந்து பதில் வருமா என்று தெரியவில்லை!!   இது பொதுவாக காணப் படுவதுதான்.  தத்துவமாகப் பொழிவார்கள், ஐயா இதை எங்கே படித்தீர்கள், சொன்னது யார்? என்று  கேட்டால் பதில்  கிடைக்காது. எல்லாம் அந்தரத்தில் காற்றிலேயே தொங்கிக் கொண்டிருக்கும், எதற்கும் அடிப்படையே இருக்காது.


9 comments :

 1. போச்சுடா மறுபடியும் மொதல்ல இருந்தா?

  பக்கதிலே அழகான தத்துவத்தை எழுதியிருக்கீங்கே ஜெய். இந்த வாரம் முழுக்க உங்களுடன் ஓடிப்புடுச்சு விளையாட முடிவு செய்துருக்கேன். இதற்கு விளக்கம் சொல்லுங்க. தினமும் ராத்திரி நேரம் தான் வருவேம். காத்திருங்க. உங்களை விடுறதா இல்லை. பேசித்தான் பார்ப்போமே?

  நாத்தீகம் நல்லதல்ல, ஆனால் போலி ஆன்மீகம் ஆபத்தானது.

  ReplyDelete
 2. உள்ளமது பெருங்கோவில் ஊண் உடம்பு ஆலயம் .................... இந்தப் பாடலைக்கூட நீங்க படிச்சது இல்லையோ?

  ReplyDelete
  Replies
  1. @ ஜோதிஜி திருப்பூர்

   நான் கேட்ட அத்தனை கேள்வியிலும் யோசிச்சு ஒரு கேள்விக்கு விடைன்னு ஏதோ ஒன்னை சொல்லியிருக்கீங்க, பரவாயில்லை!!


   \\ உள்ளமது பெருங்கோவில் ஊண் உடம்பு ஆலயம் .\\ கோவில், ஆலயம் ரெண்டும் ஒண்ணுதானே, உள்ளம் கோவிலா இல்லை ஊன் உடம்பு கோவிலா? அப்படியே வச்சுகிட்டாலும் உங்க பதிவில் நீங்கள் \\மனதை தெய்வமாக மாற்றினார்கள்.\\ என்றல்லவா சொல்லியுள்ளீர்கள்? இங்கே மனது கோவில் என்றீர்கள், அங்கே தெய்வமா? ஜோதிஜி...........!! consistency இல்லையே!!

   Delete
 3. வணக்கம் மாப்ளே,

  உம்மைத் திருத்தவே முடியாதா?

  ஆத்திகர் எல்லாம் ஒன்று என்பீர் , இஸ்கான் கொள்கைக்கு மாற்றான கொள்கை உடைய ஆத்திகரையும் சமயம் பார்த்து போட்டுத் தாக்கி விடுவீர் என்பதால் இப்பதிவின் சாரம் எனக்கு நன்கு புரிகிறது.

  அதாவது மாயாவாதம், ப்ரம்மம் கொள்கை இரண்டும் இஸ்க்கான் பிரபுபாதா தப்பு என்பதால் நீரும் தப்பு சொல்கிறீர்.
  http://prabhupadavani.org/main/Walks/MW066.html
  Prabhupada:The Mayavada is a very dangerous philosophy. It has made the whole world atheistic. Hare Krsna. Jaya. Mayavadam asac-chastram pracchanam bauddham ucyate. They cannot understand that this is a dangerous philosophy.

  அருமையான சிஷ்யன்!!!
  ***
  இந்த பதிவில் உள்ள ஒரே ஒரு நல்லகருத்து இதுதான்!!!

  //எதாவது ஒரு அடையாளத்தை வைத்துக் கொள்வதும், சில சடங்குகளைப் பின் பற்றுவதும் யாராலும் தவிர்க்க இயலாது.//

  100% ஒத்துக் கொள்கிறேன்.

  ***
  நீர் கேட்ட கேள்விகளின் பதில் உம்மைத் தவிர பலருக்கு தெரியும்.

  // "உலகத்தில் உள்ள அனைத்தும் மாயை. எதன் மேலும் ஆசை வைக்காதே" என்று தான் உலகில் உள்ள அனைத்து மதத் தத்துவமும் இறுதியாகச் சொல்கின்றது.//

  மாயாவாதம் என்பதும் இந்து மதத்தின் ஒரு அம்சமே, சங்கரரின் அத்வைதம் இதன பல சாரங்களைக் கொண்டுள்ளது.
  இந்த விக்கி படியும்.

  http://en.wikipedia.org/wiki/Advaita_Vedanta
  http://en.wikipedia.org/wiki/Brahman

  ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர். பவுத்தமும், மாயாவாதம் பற்றி நிறைய அலசுகிறது.
  பைபிளில் பிரசங்கி என்னும் ஒரு புத்த்கம் உண்டு. அதில் மாயாவாதம் சார் கருத்துகள் நிறைய உண்டு
  https://www.bible.com/ta/bible/339/ecc.1.%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D
  தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவுமாகிய பிரசங்கியின் வாக்கியங்கள்.
  2மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.
  3சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?

  *** அப்புறம் நம்ம வஹாபிகள் கூட உலகமே நாடகம், இங்கே தேர்வில் வெற்றி அடைந்தால் சுவனம் கிட்டும் என பல பதிவு போட்ட போது என்ன செய்து கொண்டு இருந்தீர்???
  ****
  //"ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினையுண்டு" என்பதை மறந்து போய் விடுகின்றார்கள். இது விஞ்ஞான விதி மட்டுமல்ல. ஒவ்வொரு தனி மனிதர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த சூத்திரமும் கூட. //
  ஐசக் நியுட்டன் அறிவியலில் கூறினால் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு உயிரும் ஒரு துளி என இரமண மகரிஷி கூறினார் என்பது தெரியாதா?நம் உடலில் வாழும் நுண்ணுயிர்களுக்கு நமது உடல் பிரபஞ்சம்,அதுபோல் பிரபஞ்சமே பரம்பொருளின் உடல்.
  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!!!!!!!!!

  ஆகவே பிறருக்கு எது செய்கிறாயோ அது,மறைமுகமாக உனக்கே வருகிறது. எனவே உன்னைப் போல் பிறரை நேசி என்பதும் நியுட்டனின் மூன்றாம் விதிதான்!!!

  ஆத்திகமும், நாத்திகமும் சகலமும் அறிய இயலா ப்ரம்மத்திற்குள் அடங்கி விடும்!!!

  இப்பதிவில் நீர் திராவிட நாத்திகன் போல் பேச, என்னை ஆத்திகன் போல் பேச வைத்து விட்டீரே.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. படைப்பு மாயை [Illusion] இல்லை, உண்மைதான் ஆனால், நிரந்தரமற்றது. Anyway in future we are going to deal with this subject in detail with more evidence. OK!!

   நீங்களே நம்பாத வஹாபிகளை இங்கே சாட்சிக்கு கூட்டிகிட்டு வந்திடீங்களா??!!! கோமாளித் தனத்தில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை!!

   Delete
 4. விட மாட்டீங்க போல.... ஹா... ஹா...

  ReplyDelete
 5. சார்வாகன் மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. \\சார்வாகன் மிக்க நன்றி.\\ அவரு இப்ப என்ன சொல்லிட்டாருன்னு நன்றி சொல்லிக்கிட்டு இருக்கீங்க? வாழ்க்கையில் அவரு உண்மை பேசி நான் பார்த்ததே மிகவும் சொற்பம். 99.99% கப்சா தான் விடுவாரு, இல்லாட்டி குட்டையை குழப்பி மீன் பிடிப்பாரு. அதையெல்லாம் உண்மைன்னு நம்பினா நீங்கதான் ஏமாளி.

   அதுசரி, படைப்பு மாயை என்று நீங்க நம்புறீங்களா? அதுவே மாயை ஆச்சே அப்புறம் எதுக்கு மாங்கு மாங்குன்னு அங்கே அது கேட்டு போச்சு, இங்கே இது குட்டிச் சுவரா போச்சுன்னு சொல்லி குய்யோ முறையோன்னு கூச்சல் போட்டுக்கிட்டு இருக்கணும், பேசாம அமைதியா இருந்திடலாமே? யோசிங்க ஜோதிஜி!!

   Delete