Saturday, June 1, 2013

தினமணியில் வந்த ஒரு அறிவியல் விளக்கம் சரிதானா?

அன்புள்ள மக்கள்ஸ்,

நேற்று தினமணியில் ஒரு கல்வி கட்டுரையைப் படித்தேன்.  [சுட்டி]



உங்கள் உள்ளங்கையை முகத்தின் முன்னால், அரை அடிக்கும் சற்று குறைவான தூரத்தில் வைத்துக் கொண்டு வாயை அகலத் திறந்து ஹா...... என   [டூத் பேஸ்ட் விளம்பரத்தில் வருவது போல!!]  காற்றை வெளியிட்டால் அது வெப்பமாக இருக்கும்.


அதே சமயம், வாயைக் குவித்து வேகமாக ஊதினால் நமது மூச்சுக் காற்று குளிர்ச்சியாக இருக்கிறதே ஏன்? அதற்கு என்ன காரணம் தெரியுமா?


இதே கேள்வியை +2 பயிலும் போதும் எங்கள் வகுப்பு மாணவன் கேட்டான்.   ஆனால் பதில் அப்போ கிடைக்க வில்லை.

தினமணி இதற்குத் தரும் விளக்கம்:

வாயை அகலத் திறந்து கையின் பின்புறத்தில் வெளி மூச்சை விட்டால் அது வெப்பமாக இருக்கும். உடம்பின் வெப்பத்தை நுரையீரலிலிருந்து எடுத்துக்கொண்டு வருவதால் வெளி மூச்சு வெப்பமாக இருக்கிறது.

வாயைக் குவித்து வேகமாக காற்றை ஊதுகிறோம். அது குளிர்ச்சியாக இருக்கிறது. எப்படி? கையை தொலைவாக வைத்துக்கொண்டு காற்றை வேகமாக ஊதும்போது நீங்கள் எதிர்பார்ப்பதுபோல அது வாயிலிருந்து வரும் மூச்சுக் காற்று அல்ல. அட அப்படியா? பின் எந்தக் காற்று அது. அக்கம் பக்கத்தில் உள்ள அறை வெப்பக் காற்றுதான் அது. நீங்கள் ஊதும் காற்று அறைக் காற்றை முட்டித் தள்ளி கையில் பட வைக்கிறது.

இந்த விளக்கம் சரிதானா?   கையை முகத்துக்கு அருகிலேயே வைத்துக் கொண்டு, மூச்சை உள்ளிழுத்து மேலே சொன்ன இரண்டு மாதிரியும் காற்றை மாற்றி மாற்றி ஊதிப் பாருங்கள், வெப்பமாகவும், குளிர்ச்சியாகவும் மாறி மாறி உணரமுடியும்!!  கையின் தொலைவும் காற்றும் மாறவில்லை, பின் எப்படி இந்த மாற்றம்?  மேலே தினமணி கட்டுரை சொல்லும் விளக்கம் சரிதானா?  உண்மை என்ன?

இதற்க்கான பதில் பின்வரும் கானொளியில் உள்ளது.  [23 ஆம் நிமிடத்தில் இருந்து].



அதிக அழுத்தப் பகுதியில் இருந்து, குறைவான அழுத்தப் பகுதிக்குச் செல்லும் போது காற்று விரிவடையும்.  அவ்வாறு விரிவடையும் காற்று குளிர்ச்சியடைகிறது.  டூத் பேஸ்ட் விளம்பரத்தில் காட்டுவது போல ஹா........ என காற்றை வெளியிடும் போது அதன் அழுத்தம் மாறுபடுவதில்லை, ஆகையால் வெப்பமாகவே உள்ளது.  ஆனால், வாயைக் குவித்து ஊதும் போது வாயில் காற்று அழுத்தத்திற்குட்படுகிறது, வெளியே குறைந்த அழுத்தப் பகுதிக்கு வரும் போது விரிவடைந்து குளிர்கிறது.  இதில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் பின்னூட்டத்தில் விவாதிக்கலாம்.

18 comments:

  1. yes you are absolutely correct.......

    ReplyDelete
  2. இப்படி 'ஊத' வைச்சிட்டீங்களே...!

    ReplyDelete
  3. எழுதினது தினமணி என்றால், அது எதை எழுதினாலும் அது உண்மையாகத் தான் இருக்கும்...!

    ReplyDelete
  4. உங்களின் பதில் தான் சரியானது. வாயில் இருந்து காற்று ஊதாமல் ஊ ன்னு வெச்சிருந்தா எப்படி காற்றை உணர்வது ? லாஜிக்கே இல்லையே வாழ்க தினமணி!

    ReplyDelete
  5. பாகவதரே,

    //டூத் பேஸ்ட் விளம்பரத்தில் காட்டுவது போல ஹா........ என காற்றை வெளியிடும் போது அதன் அழுத்தம் மாறுபடுவதில்லை, ஆகையால் வெப்பமாகவே உள்ளது. ஆனால், வாயைக் குவித்து ஊதும் போது வாயில் காற்று அழுத்தத்திற்குட்படுகிறது, வெளியே குறைந்த அழுத்தப் பகுதிக்கு வரும் போது விரிவடைந்து குளிர்கிறது. இதில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் பின்னூட்டத்தில் விவாதிக்கலாம்.//

    தினமணியில குழப்பி இருக்கான்ங்க, +2 பிசிக்ஸ் படிச்சாலே விளக்கம் கிடைக்கும்.

    சிறிய துளையின் வழியாக செலுத்தப்படும் வாயு விரிவடையும் போது குளிர்ச்சியடையும்னு கண்டுப்பிடிச்சது "ஜூல்- தாம்சன்" ஆவார்கள், இந்த விளைவுக்கு ஜீல் தாம்சன் விளைவு என்று பெயர்.

    தெர்மோ டயனமிக்ஸில் அடியபடிக் எக்ஸ்பான்சன் என்ற முறையிலும் இதனை விளக்கலாம்.

    புறச்சூழல் மாற்றம் இல்லாத நிலையில், அழுத்தம் குறைந்து, கன அளவு அதிகரித்தால் ஐடியல் வாயுவின் வெப்பநிலை குறையும்.

    உள் எரி எஞ்சினில் அழுத்தம் அதிகரித்து ,கன அளவு குறையும் போது வெப்ப நிலை குறைந்து எஞ்சினில் எரிப்பொருள் எரியும். முக்கியமா டீசல் என்சினுக்கு இது தேவை. ரிவர்சில் செய்தால் "ரெப்ரிஜரேட்டர்ர்"

    #
    அப்புறம் ஹானு ஊதினாலும் வெப்ப நிலை குறையவே செய்யும், ஆனால் வெப்பமாக உணரக்காரணம் மூச்சுக்காற்றில் உள்ள நீராவியின் "லேட்டன்ட் ஹீட்"

    சில பேரு மூக்கு கண்ணாடியில் "ஹானு" ஊதிட்டு துடைப்பாங்க, அப்போ நீராவி கண்ணாடியில் படியும் காரணம் மூச்சுக்காற்றில் உள்ள நீராவி குளிர்ந்து சுருங்கி படிவதே.

    உதட்டை குவித்து ஊதும் போது நிறைய குளிர்கிறது எனலாம்.


    ReplyDelete
    Replies
    1. @ வவ்வால்

      \\அப்புறம் ஹானு ஊதினாலும் வெப்ப நிலை குறையவே செய்யும், ஆனால் வெப்பமாக உணரக்காரணம் மூச்சுக்காற்றில் உள்ள நீராவியின் "லேட்டன்ட் ஹீட்"\\ எப்படி ஊதினாலும் இந்த "லேட்டன்ட் ஹீட்" factor இருக்குமே??!! அப்புறம் எப்படி வெப்பமாகவும் வெப்பம் இல்லாமலும் இருக்கு??!!


      \\உதட்டை குவித்து ஊதும் போது நிறைய குளிர்கிறது எனலாம்.\\ why?

      பல்வேறு இயற்பியல் சமாச்சாரங்கள் பற்றி தெளிவாக்கியதற்கு நன்றி........!!

      Delete
    2. பாகவதரே,

      எப்படியும் "லேட்டன்ட் ஹீட்" இருக்கும்,ஆனால் உதட்டை குவித்து ஊதும் போது "ஜீல் தாம்சன்' விளைவால் அதிகம் குளிர்வதால் வெப்பம் தெரியாது. "ஹா"னு ஊதும் போது "ஜூல் தாம்சன்" விளைவு இல்லை.

      மூச்சுக்காற்றில் எப்பொழுதும் நீராவி/ஈரப்பதம் இருக்கும், அது நம் உடல் வெப்ப நிலையிலேயே இருக்கும், குளிர் நாடுகளில் மூச்சு விட்டால் பனிப்புகை போல தெரிவதும் மூச்சில் உள்ள ஈரப்பதம் குளிர்வதால் வருவது என அறிவீர்கள்.

      இங்கே சமாச்சாரமே காற்றினை அழுத்தி சிறிய துளை போல வாயைக்குவித்து அனுப்புவதே ,இதுவே ஜீல் தாம்சன் விளைவு.நீர் சொன்ன விளக்கம் கிட்டத்தட்ட சரியானதே,ஆனால் ஏற்கனவே பேரு வச்சு விரிவா ஜீல் தாம்சன் சொன்னதை நான் சொல்லி இருக்கிறேன். மேலும் அழுத்தமும் வெப்பநிலையும் நேர்விகித தொடர்புள்ளவை அழுத்தம் குறைந்தால் வெப்பம் தானாகவே குறையும்.மேலும் கன அளவு(வெளிப்புறத்தில் கட்டுப்பாடு இல்லை) விரிவதால் அழுத்தம் குறைந்து வெப்பம் குறைகிறது.

      Delete
    3. @ வவ்வால்
      nOW IT IS CLEAR, THANKS.

      Delete
  6. திருத்தம்:

    //அழுத்தம் அதிகரித்து ,கன அளவு குறையும் போது வெப்ப நிலை குறைந்து //

    வெப்பநிலை உயர்ந்து என வர வேண்டும்.

    ReplyDelete
  7. நல்ல விளக்கம்... நன்றி!

    த.ம-5

    ReplyDelete
  8. வணக்கம் மாப்ளே , நலமா?
    நல்ல பதிவு. ஜூல் கெல்வின் (அல்லது ஜூல் தாம்சன்) விளைவு பற்றிக் கூறாமல் திணமனி சொதப்பியதை நன்கு ஆவணப் படுத்தினீர் நன்றி!
    ஜூல் கெல்வின் விளைவு என்றால் என்ன?
    http://en.wikipedia.org/wiki/Joule%E2%80%93Thomson_effect
    In thermodynamics, the Joule–Thomson effect or Joule–Kelvin effect or Kelvin–Joule effect or Joule–Thomson expansion describes the temperature change of a gas or liquid when it is forced through a valve or porous plug while kept insulated so that no heat is exchanged with the environment
    அதிக அழுத்தத்தில் ஒரு சிறு துளை வழியாக வாயு செலுத்தப்படும்போது அந்த சுற்றுப் புறத்தின் வெப்பநிலை குறைகிறது.
    இதில் சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சிகள் நிறைய உள்ளன. கல்லூரியில் [விடுதி!] என்ன மாப்ளே உன் ரூமை குளிரவைத்து விட்டாயா என்றால் பொருள் வேறு ஹி ஹி!!![ இது உமக்கு புரியாதது போலவே நடிக்கோனும் ஹி ஹி!!]
    ஜூல் கெல்வின் விளைவைப் பற்றி எப்படி [கன்னபின்னாவெனெ] சிந்திக்கிறோம் ஹி ஹி!!!
    **
    தினமணி ஏன் இப்படி சொதப்பியது என்பதையும் சிந்திப்போம்
    ஆத்திக சிரோமணிகள் வரலாறு,அறிவியல் ஆகியவற்றில் தங்களுக்கு ஒத்துவரும் விடயங்களை மட்டுமே எடுத்து இயம்புவார். தினமணி ஆத்திக நாளிதழ் என்பதால்,ஆண்டவனின் தனித்துவ படைப்பாம் மனித உடலின் மகத்துவம் பற்றி விளக்கவே இப்படி சொதப்பியது.
    உமக்கும் மனித உடலின் சூட்சுமம் சார்ந்த புனித வைத்திய முறைகள் மீது ஈடுபாடு உண்டே, ஹீலிங் பாஸ்கர் பத்தி கூட பதிவு இட்டீர் அல்லவா?,அவரின் மருத்துவ முறைகளை விலங்குகள் மீது பரிசோத்னை செய்ய மாட்டாரே!!!ஏன்?
    மனித உடல்,பிற விலங்கு உடல்களை விட சூட்சுமம் நிறைந்தது என்பது மருத்துவரீதியாக தவறான கருத்தே!!!
    http://simple.wikipedia.org/wiki/Human_body#The_human_body_and_other_animals
    Scientists think that the human body is very much like other animals. They see that some human behaviors are like animal behaviors. (Behaviors are the way an organism acts.) They know that 98% of the DNA in humans is the same as other primates.

    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. @ சார்வாகன்

      \\ஹீலிங் பாஸ்கர் பத்தி கூட பதிவு இட்டீர் அல்லவா?,அவரின் மருத்துவ முறைகளை விலங்குகள் மீது பரிசோத்னை செய்ய மாட்டாரே!!!ஏன்?\\ விலங்குகள் எதை, எப்படி, எப்போ, எவ்வளவு சாப்பிடனும்னு தெரிஞ்சு சரியா சாப்பிடுது மாமு, அதனால் எந்த பரிசோதனையும் தேவையில்லை. மனுஷன் இயற்க்கை கொடுத்த உணவை உரம் பூச்சிக் கொள்ளிகளைப் போட்டு விஷமாக்கி, தேவையில்லாதாதை, அளவுக்கு மீறி உண்கிறான், அவன்தான் திருந்தனும். ஹீலர் பாஸ்கர் சொன்னதில் பல ஏற்றுக் கொள்ளத் தக்க கருத்துக்களாக உள்ளன, அதை ஏற்ப்பதும் மறுப்பதும் அவரவர் இஷ்டம்.


      \\மனித உடல்,பிற விலங்கு உடல்களை விட சூட்சுமம் நிறைந்தது என்பது மருத்துவரீதியாக தவறான கருத்தே!!!\\ சூட்சுமம் நிறைந்ததா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் மனிதனைப் போல அவை உடை உடுத்தவில்லை, கம்பியூட்டர் கண்டுபிடிக்கவில்லை செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பவில்லை.

      Delete
  9. theory -யை (தத்துவம்?) மட்டும் பேசாமல் வாழ்க்கைக்கு எப்படி இது உபயோகப்படும் என்று நாம் சிந்திக்கவேண்டும். மருத்துவத்தில் anatomy படிக்குக்க்ம் போது...applied anatomy என்று ஒன்று உண்டு. அதில் கூறப்பட்டுள்ள விஷயம் எப்படி மருத்தவத்தில் உபயோகப் படுத்தனும் என்று அறிந்து கொள்ளவே...அதை கொடுத்திருப்பார்கள்.

    இந்த இடுகையில் இருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது...இனிமேல், சண்டை போட்டு கொதித்துக் கொண்டிருக்கும் ஆத்துக்காரிகளை வாயைக் குவித்து கணவர்கள் குளிரவைக்கலாம்...! இது தான் வாழ்கையின் தத்துவம்!

    பின்குறிப்பு:
    வாயைக் குவித்து ஊதவேண்டாம்...வாயைக் குவித்து என்ன செய்யணும் என்று நான் சொல்லாத தேவையில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கைத் தத்துவத்தை தெளிவாக்கியமைக்கு நன்றி நம்பள்கி...!!

      Delete
  10. நல்ல வினா நல்ல அறிவியல் விளக்கங்கள் ஐயங்கள் தெளியப் பெற்றேன்.

    ReplyDelete
  11. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_6.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete