அன்புள்ள மக்கள்ஸ்,
ஒரு எதிரி நாடு நம் இறையாண்மைக்கு ஊரு விளைவிக்கும்போது அதை எதிர்கொள்வது எப்படி என்பதற்கு உலகத்துக்கே நாம் ஒரு காட்டாகத் திகழ்கிறோம். அப்படி என்ன இராணுவத்தை அனுப்புவோமா? இரவோடு இரவா எதிரி நாட்டுக்குள் புகுந்து சமூக விரோதக் கும்பல்களின் கதையை முடிப்போமா? அல்லது இராஜ தந்திரமாக செயல் படுவோமா? இதெல்லாம் விவரமில்லாத அமரிக்கா மாதிரி நாடுகள் செய்வது. நாம அவர்களையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல ஒரு வேலை செய்வோம். என்ன அது? உங்க கூட கிரிக்கெட் ஆட மாட்டோம்னு கா..... விட்டிடுவோம் அவ்வளவுதான் அவன் வழிக்கு வந்தே தீருவான். இப்போ இப்படித்தான் பாகிஸ்தானை நாம் வழிக்கு கொண்டு வரப் பாத்துகிட்டு இருக்கோம். அப்புறம் இப்போ கூட இலங்கையில் தமிழர்கள் துயரை கிரிக்கெட்டை வச்சு தீர்த்திருக்கோம். என்ன அது? இலங்கை வீரர்களை சென்னையில் IPL கிரிக்கெட் மேட்ச் எதுவும் ஆடக் கூடாதுன்னு சொல்லிட்டோமுல்ல.....!! புரவென்ன இலங்கைத் தமிழர் பிரச்சினை இனி வரவே வராதுல்ல......... எப்பூடி....!! இப்போ சீனா மட்டும் கிரிக்கெட் ஆடினா அதனுடனான எல்லை பிரச்சினையும் ஈசியா தீர்த்திருப்போம், துரதிர்ஷ்டவசமா அந்த கருமாந்திரத்தை அவங்க ஆடுவதில்லை. என்ன பண்ணி தொலைக்கிறது....:((
ஒரு கலாத்தில் கிரிக்கெட் என்பது ஐந்து நாள் ஆடப் படும் டெஸ்ட் மேட்சுகளாக நடத்தப் பட்டன. அதையும் அஞ்சு நாள் சோறு தண்ணி இல்லாம உட்கார்ந்து கிட்டு காதில் டிரன்சிஸ்டரை வச்சுகிட்டு நம்மாளு கமண்டரி கேட்டு இந்தியாவை காப்பாத்தினான். இவை பெரும்பாலும் டிராவில்தான் முடியும் எப்பவாச்சும் தான் வெற்றி தோல்வி என ரிசல்ட் வரும், பரபப்பான ஆட்டம் என்பது அதனினும் அரிதாகவே இருக்கும்.
இந்த மாதிரி குறைகளைப் போக்கணும்னு அறிவாளிங்க ரூம் போட்டு யோசித்ததன் விளைவாக உருவானதுதான் ஒருநாள் மேட்ச். ஒவ்வொரு அணியும் 60 ஓவர்கள் விளையாடலாம், ஆட்டம் ஒரே நாளில் முடியும், தினமும் வெற்றியா தோல்வியா என முடிவு தெரியும் பரபப்பாகவும் இருக்கும். இப்படியெல்லாம் நப்பாசையுடன் ஆரம்பிக்கப் பட்டாலும் பெரும்பாலான நேரங்களில் பயலுவ 60 ஓவர்கள் தாக்குப் பிடிப்பதில்லை, எனவே அப்படியே 50 ஓவர்களாகக் குறைக்கப் பட்டது. இதை தொலைக்காட்சியில் பார்த்து நம்மாளு நாட்டைக் காப்பாத்தினான்.
இதிலும் சிக்கல். முதல் 40 ஓவர் டெஸ்ட் மேட்ச் மாதிரி இருக்கிறது அந்த கடைசி பத்து ஓவரில் தான் பரப்பாகவும், த்ரில் ஆகவும் இருக்கிறது. அதை மட்டும் தனியா எடுத்துப் போட்டுப் பார்த்தா எப்படி இருக்கும்? அதன் விளைவுதான் இப்போ 20-20. இதை இணையத்தில் உட்கார்ந்து பார்த்து தேசபக்தியை நம்மாளு காண்பிக்கிறான்.
அதிலும் மழை அது இது என வந்தால் பத்து ஓவர், 8 ஓவர் எனவும் குறைப்பதும் நடக்கிறது. [ஆட்டம் பார்க்க வந்த பயலுவ ஏமாந்து போகக்கூடாது என்ற நல்ல எண்ணமோன்னு தப்பா நினைக்கப் படாது, டிக்கட்டு காசை திருப்பத் தராமல் ஏமாற்ற இதுவும் ஒரு வழி. ஹி ..........ஹி ..........ஹி ..........]. அடுத்து டாசை ஜெயிக்கரவங்களே மேட்ச்சையும் ஜெயிச்சதா ஒரு ரூல் கொண்டு வந்தாலும் வரலாம், அதற்கும் நம்மால் காசு குடுத்து போய் உட்கார்ந்துகிட்டு பார்க்க ரெடியா இருக்கான், பொறவென்ன!!
இப்படி நம்ம தேச பக்திக்கு குந்தகம் விளைவிக்கும் விதமா எவனோ ரெண்டு மூணு பயலுங்க பணத்துக்கு ஆசைப் பட்டு சூதாட்டக் காரர்களின் சொல்லுபடி வேணுமின்னே மேட்ச் தோற்கிற மாதிரி ஆடி இருக்காங்க. நாம் எப்பேர்பட்டவங்க? எலக்ஷனுக்கு ஓட்டு போட காசே வாங்காத யோக்கியனுங்க,லஞ்சமே குடுக்காதவனுங்க, சத்தியம் நேர்மையில் அரிச்சந்திரனுங்களாச்சே, மேலும் நாட்டை ஆள்பவர்கள் எல்லாம் திருவாளர் பரிசுத்தம், மக்கள் சேவையைத் தவிர ஒண்ணுமே அறியாதவங்க, பெண்டாட்டி பிள்ளைக்கு சொத்தே சேர்க்காதவங்க, சுவிஸ் பேங்க் ஈரோடு பக்கமோ, தூத்துக்குடி பக்கமோ இருக்கும்னு நினைக்கிறவங்க, கையில் கரைன்னு படிஞ்சா அது அவங்க காருக்கு போடும் கிரீசாத்தான் இருக்கும். இப்படியெல்லாம் திரும்பிய பக்கமெல்லாம் யோக்கியனுன்களா இருக்கும் நாட்டில் இப்படி ஒரு கேவலம் நடந்தா சும்மா விடுவோமா?
பொங்கி எழுதிட்டோம், உடனே சென்னையில் ரெய்டு, புக்கிகள் கைது, விசாரணை, IPL கிரிக்கெட்டுக்கே தடை போடச்சொல்லி கோர்ட்டில் வழக்கு, இப்படி பரபரன்னு நடவடிக்கை எடுத்திடோமில்ல!! எல்லாத்துக்கும் மேல சூதாட்டம் பண்ணியவன் கதையை வச்சு கேரளாவில் ஒரு சினிமா ஆரம்பிபிச்சாச்சு. அட நாறப் பசங்களா காந்தி படத்தையே நாப்பது வருஷம் கழிச்சு தாண்டா எடுத்தாங்க, அதுவும் நீங்க இல்லை ஒரு வெள்ளைக்காரன் தான் எடுத்தான், மாட்டி நாலுநாள் கூட ஆகல அதுக்குள்ளே இவனுங்க கதையை படமாக்க ஆரம்பிச்சுட்டீங்களா? நீங்க எல்லாம் நல்லா வருவீங்கடா.
அதுசரி, இவனுங்க மாட்டியதால IPL பார்க்கப் போறவன் நிறுத்திட்டானா? நீலப் படத்தில் வந்த சாமியார் மடத்துக்கு போகாம விட்டோமா என்ன? அப்புறம் இதை மட்டும் ஏன் நிறுத்தனும்?
மேட்சுகள் சூதாட்டக் காரர்களால் தீர்மானிக்கப் படுது, நிசம்தான். அதனால என்ன, தொலைக் காட்சி அழுமூஞ்சி சீரியல் கூடத்தான் எவனோ கதை எழுதி டைரக்ட் பண்றான் பார்க்கவில்லையா? இதை மட்டும் ஏன் வுடனும்?
ஐயா, எங்களுக்கு கார்கிலில் பனி மலையில்துப்பாக்கி ஏந்தி காவல் காப்பவனோ, இல்லை உயிரையும் விடுபவனோ கலப்பையை சுமந்து உழைத்து அரிசி தரும் விவசாயியோ நாட்டுக்கு உழைப்பவனாக தெரியவில்லை கிரிக்கெட் மட்டையை கையில் வைத்திருப்பவன்தான் நாட்டைக் காப்பவன். அவன் மேட்சில் சூதாடினா என்ன, நடிகையோட கும்மாளம் போட்டா என்ன, எங்களை பண்ணி மூத்திரத்தை விட கேவலமானதை பாட்டிலில் போட்டு குடிக்கச் சொன்னா என்ன? அவன்தான் தேசத்தைக் காப்பவன். எங்களுக்கு கிரிக்கெட் போதும், அதுல தான் எங்க வீரத்தை கமிப்போம். அதுல எதாச்சும் தப்பு தண்டா நடந்தா கொதிச்சு போயிடுவோம், மத்தபடி நாடே கொள்ளை போனாலும் எருமை மட்டு மேல மலை பெஞ்சா மாதிரிதான் இருப்போம் அது தான் எங்களுக்கு தெரிஞ்ச தேச பக்தி.
வணக்கம் மக்கள்ஸ்!!

Very well written about cricket craziness.Keep it up brother.
ReplyDeleteசுத்தமாக பலருக்கும் (IPL உட்பட) கிரிக்கெட் என்றாலே வெறுத்துப் போச்சி...! இனி உண்மையான போட்டியை காண்பது அரிது என்றாகி விடும்...
ReplyDeleteகாரமாத்தான் கேட்டிருக்கிங்க.. திருந்துவாங்க..?
ReplyDeleteத.ம -3
ReplyDeleteஇது கூட ஐபிஎல் லுக்கு ஒரு விளம்பரமா இருக்குமோ.? எந்த Fixing ஆக இருந்தாலும் நம்மாளுங்க பாக்கத் தயாரா இருக்காங்க!
ReplyDelete