Thursday, May 2, 2013

பகுத்தறிவு வாதிகள் என சொல்லிக் கொள்ளும் பகுத்தறியாவாதிகள்

வணக்கம் மக்கள்ஸ்!!

சமீபத்தில் ஒரு நண்பர், தனிப்பட்ட முறையில் மிக நல்ல மனிதர், தனது கல்லூரிக் கால காதல் வாழ்க்கையைப் பற்றிய அவரது பேட்டியை ஒரு வார இதழில் வெளியானது குறித்து பதிவிட்டிருந்தார்.  காதலிச்சு திருமணம் செய்திருக்கிறார்.  வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். அதுக்கு மேல அது பத்தி நாம் ஒன்னும் சொல்லப் போவதில்லை.   அவர் அத்தோட நிறுத்தியிருக்கலாம், ஆனா தான் எப்படி மக்களின் மூட நம்பிக்கைகளை ஒழித்து அவங்க அறிவுக் கண்களை திறக்கிறேன் என்பதையும் அதனுடன் கலந்துவிட்டிருக்கிறார்.  அங்கதான் நமக்கு இடிக்குது.

அவர் சொல்ல வருவது, "என் திருமணதிற்கு நல்ல நாள், கெட்ட நாள் எதுவும் பார்க்கவில்லை, ஏனெனில் பகுத்தறிவுப் படி அப்படியொரு நாள் இல்லை".  ஆஹா..... அருமை........  விஞ்ஞான ரீதியா பார்த்தா இது சரிதான்.  நாம் இதையும் கேள்வி கேட்கப் போவதில்லை. அதையடுத்து ஒரு பாயிண்டைத் தூக்கி போடுகிறார்.  நான் பெரியார் பிறந்தநாளில் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன், அது நடக்க வில்லை, பின்னர் காத்திருந்து அண்ணா திருமண நாளில் மணமுடித்தேன்.  இங்க தான் இடிக்குது.  ஒரு தலைவர்  120 அல்லது 130 வருஷத்துக்கு முன்னாடி ஒருநாளில் பிறக்கிறார், ரைட்டு, அவர் பிறந்ததால் அந்த நாள் விஞ்ஞான ரீதியாக, பகுத்தறிவு ரீதியாக ஏதாவது ஒரு சிறப்புத் தன்மையைப் பெறுகிறதா?  அந்த நாளில் திருமணம் செய்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் கொள்கையில் வெற்றியடைவீர்கள் என்று அர்த்தமா?  தலைவர் பிறந்த நாளை மட்டும்தானா தேர்ந்தெடுக்க வேண்டும் பிறந்த நேரத்தையும் கண்டுபிடித்து அதே நேரத்தில் தாலி கட்டலாம்.  அதை ஏன் விட்டீர்கள்? 

ஒரு தலைவர் பிறந்த நாள் செப்டம்பர் 15 என்றால், அடுத்தடுத்த மாதங்களிலும் 15 தேதி வரும், அதற்க்கெல்லாம் சிறப்பு எதுவும் கிடையாதா?  அல்லது புதன் கிழமை பிறந்தார் என வைத்துக் கொள்வோம், ஒவ்வொரு புதன் கிழமைக்கும் ஏதாவது சிறப்பு இருக்காதா?  அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்றால், தலைவர் பிறந்த நாளில் இருந்து 365-தே கால் நாட்கள் இடைவெளியில் வரும் நாளுக்கு மட்டும் விஞ்ஞான ரீதியாக சிறப்பு வந்து விடுமா?

அதுசரி இன்னொரு தலைவர் பிறந்த நாளில் மணமுடித்தீர்கள், அந்த தலைவர் கொள்கை ரீதியாகவாவது உங்க தலைவரோடு ஒத்துப் போனவரா?  கடவுள் என்று எதுவும் இல்லை, அதை கற்பித்தவன் முட்டாள், வணங்குபவன் காட்டுமிராண்டி, இதுதானே ஐயா உங்க தலைவரோட கொள்கை? ஆனா, அண்ணாவோட திருத்தப் பட்ட கொள்கை என்ன?  "ஒன்றே குலம், [பரவாயில்லை தப்பில்லை விட்டுடடலாம்], ஒருவனே தேவன்!!" அதாவது   கடவுள் ஒருத்தன்-  இது தான் உங்க தலைவர் கொள்கையா?  எப்படிப் பார்த்தாலும் இடிக்குதே ஐயா?

இப்படி ஒருத்தர் என்றால், இன்னொருத்தர் இருக்காரு.  அவரோட பேரிலும் ஒரு மதி இருக்கு.  அவர் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி உங்க கண்ணை திறந்து விடுபவர்.

ஒருத்தர் கேட்கிறார்,

"பெரியாருக்கு சிலை வக்கிறீங்களே, இது பகுத்தறிவா?"

அதற்க்கு பதில் இப்படி தருகிறார்:

"வாழ்ந்து மறைந்த தலைவர் தானே அவர், ஆகையால் அவருக்கு சிலை வைக்கலாம், அதற்க்கு மாலை போடலாம், மரியாதை செய்யலாம், தப்பேயில்லை.".

எனக்கு இங்க என்ன புரியலைன்னா,  ஏன் மாலையோட மட்டும் நிறுத்தனும், தினமும் தேங்காய், பழம் வைத்து ஆரத்தி காட்டலாம், நல்லா பகுத்தறிவை பரப்புவதற்கு அருள் புரிக என்று வேண்டுதல்களை வைக்கலாம். என்ன தப்பு?  நீங்க போட்ட ரோஜாப்பூ மாலையை ஏற்றுக் கொண்டு அதை நுகர்ந்து பார்த்து, "ஆஹா அருமையான வாசனை" என்று சொல்லத் தெரிந்த சிலைக்கு, நீங்க வைக்கும் தேங்காய், பழங்களையும் ஏற்றுக் கொள்ளத் தெரியாதா?  [இதையும்  சிலர் செய்யக்கூடும், யார் கண்டது!!]   உங்க ஆசைகளையும் நிறைவேத்தி வைக்க முடியாதா?   சிலைகள் கல்லு, அதை வணங்குவது மூடநம்பிக்கை என்றால் எந்த சிலைக்கும் அது பொருந்தும் தானே?  அதென்ன கணக்கு, வாழ்ந்து மறைந்தவர் சிலைக்கு மட்டும் உசிர் வந்திடும் என்பது?  உங்க தலைவர் சிலை கல்லோ, உலோகமோ அல்லது சிமாண்டோ தானே?  அதெப்படி உங்க தலைவராக முடியும்?  அவ்வாறு நினைப்பது முட்டாள் தனம் என்பது தானே உங்க கொள்கை, திரும்ப நீங்களும் அதையே செய்கிறீர்களே, இது தான் பகுத்து அறிந்ததா?

பகுத்தறிவுவாதிகளே, நீங்க உங்க அறிவை என்னைக்கும் உபயோகப் படித்தியதாகத் தெரியவில்லை.  உங்க தலைவர் எனக்கு சிலையை வையுங்கடா என்றார், நீங்களும் பூம்........பூம்........ மாடு மாதிரி தலையாட்டி விட்டு செய்து வருகிறீர்கள் செம்மறி ஆடுகள் போல கேள்வியே கேட்காமல் பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நான் பகுத்தறிந்தவன், சுயமாக சிந்திக்கக் கூடியவன், விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து எனக்கு உண்மை என்று பட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன்.........  இப்படியெல்லாம் டமாரம் அடிக்கும் நீங்கள் உங்கள் மதியை எந்த அளவுக்கு சிந்திக்கப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்? நீங்கள் என்றைக்காவது உட்கார்ந்து சிந்தித்திருந்தால் இந்த மாதிரி பகுத்தறிவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் பகுத்தறிவு வாதிகள் இல்லை, பகுத்தறியா வாதிகள்.

வணக்கம் மக்கள்ஸ்.........!!




7 comments:

  1. பாகவதரே,

    கடைசில உம்ம பொழப்பு இப்படியாகிப்போசே :-))

    பெரியார் மட்டுமே பகுத்தறிவுக்கு ஏக போக உரிமையாளர் அல்ல, அவரை முன்னிருத்தும் பகுத்தறிவாளர்களும் இருக்காங்க, மற்றவர்களும் இருக்காங்க எனவே பெரியார் வழி வந்தோர் செய்வது எல்லாவற்றையும் பகுத்தறிவுவாதிகள் மீது தூக்கிப்போட தேவையில்லை.

    இப்போ பெருமால்/விஷ்ணு பேர சொல்லிக்கிட்டு ஏன் பல பிரிவுகள் இருக்கு, எல்லாம் பெருமால் தான்னு ஒற்றுமையாக இருக்க வேண்டியது தானே, மத்வாஸ், ஶ்ரீவைஷ்ணவம், கவுடியா, வைகாணாசம், வட கலை,தென்கலைனு ஏன்யா பல பிரிவுகள்?

    ஒருத்தர் சொல்றத இன்னொருத்தர் கேட்க மாட்டாங்க, கோயிலிலும் பலவகையான ஆகமம்,வழிப்பாடுனு அவங்க அவங்க தனித்தனியாக ஒரு முறை வச்சிருக்காங்க ஏன் அப்படி?

    விஷ்ணுவோட அவதாரம் தான் கிருஸ்ணானு சொல்றீங்க,ஆனால் விஷ்ணுவை விட்டுவிட்டு கிருஸ்ணா தான் சுப்ரீம் காட்னு கும்பிடுறிங்க, கிருஸ்ணா வெறும் அவதாரம் தானே ,மூலம் விஷ்ணு தானே ஏன் விஷ்ணுவை சுப்ரீம் காட்னு சொல்லுவதில்லை. இதுக்கே கிருஸ்ணா செத்து மீண்டும் விஷ்ணுவோட தான் ஐக்கியமாகிறாரணெனவே நடுவில் தோன்றி மறையும் அவதாரம் கிருஸ்ணா எப்படி சுப்ரீம் காட் ஆக முடியும்?

    உம்ம ஆன்மீக கொள்கையில் ஒரு தெளிவு இருக்கா, புரிதல் இருக்கா அதெல்லாம் பார்க்காம பகுத்தறிவை குறை சொல்ல எங்கேயிருந்து உமக்கு யோக்கியதை வருது?

    கடவுள் இருக்குனு சொல்வீங்க ஆனால் பல கடவுள் இருக்கு எது கடவுள்னு சரியாத்தெரியாது, சரி அதில ஒரு கடவுள் மட்டும் எடுத்துக்கிட்டு பார்த்தால் அதில பல பிரிவு,அவனவன் அவன் சொல்ற முறையில் தான் அந்த கடவுளை வழிப்படனும்னு நிக்கிறது ,முதலில் அதை சரி செய்துட்டு அப்புறமா பகுத்தறியாவாதிகள் யார்னு பேச வரலாம், வந்துட்டார் சொம்ப தூக்கிட்டு :-))

    ReplyDelete
    Replies

    1. @ வவ்வால்

      \\கடைசில உம்ம பொழப்பு இப்படியாகிப்போசே :-)) \\ பரவாயில்லை உம்ம பிழைப்பை விட நம்முடைய பிழைப்பு பெட்டராகவே இருக்கு.

      \\பெரியார் மட்டுமே பகுத்தறிவுக்கு ஏக போக உரிமையாளர் அல்ல, அவரை முன்னிருத்தும் பகுத்தறிவாளர்களும் இருக்காங்க, மற்றவர்களும் இருக்காங்க எனவே பெரியார் வழி வந்தோர் செய்வது எல்லாவற்றையும் பகுத்தறிவுவாதிகள் மீது தூக்கிப்போட தேவையில்லை.\\ கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவனை ஆங்கிலத்தில் Athiest என்பார்கள், சமஸ்க்ருதத்தில் நாஸ்திகன் என்பார்கள், தமிழில் இறை மறுப்பாளர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
      அதென்னது பகுத்தறிவு வாதி, என்று உம்மை நீரே கூறிக் கொள்வது? உம்ம முதுகில் நீரே தட்டிக் கொள்வதா? நீர் எதை பகுத்து அறிந்து பட்டம் வாங்கினீர்? கடவுள் இல்லை என்று இதுவரை நவீன விஞ்ஞானமும் முடிவுக்கு வராத பட்சத்தில் அந்தக் கொள்கையை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் ஒருத்தனை பகுத்தறிவுவாதி என்று ஒப்புக் கொள்ள முடியாது. பெரியார் கட்சியினர் இதுதான் எங்கள் கொள்கை என்று ஊரைச் சுற்றி பீற்றுவதால் அவற்றில் உள்ள ஓட்டைகள் வெளியில் தெரிகிறது. பகுத்தறிவு வாதிகள் என்ற பெயரை பரவலாகப் பயன்படுத்தியது பெரியார் கட்சியினரே. உம்மைப் போன்ற மொடா முழுங்கிகள் பீற்றுவதொடு சரி கொள்கையும் கிடையாது, ஒரு கருமாந்திரமும் கிடையாது, கடவுள் இல்லை என்று உளறத்தான் தெரியும், ஏன் இல்லை என்று எந்த காரண காரியமும் தெரியாது, அப்படி காரண காரியத்தோடு உமது கொள்கைகளை விளக்கி பதிவு போடும், உமது டவுசரும் கிழியும்.

      நீர் ஆன்மிகம் குறித்து சொன்ன அத்தனையும் ரஞ்சிதானந்தா மாதிரி ஒருத்தன் கிட்ட கேட்டுட்டு வந்து எழுதினா மாதிரி இருக்கு. அத்தனையும் பேத்தல்கள், அரைவேக்காட்டுத் தனம், வடிகட்டிய முட்டாள் தனம். இந்த லட்சணத்தில் உம்மோடு ஆன்மிகம், புராணம் அது இதுன்னு வாதிடுவது, எய்ட்ஸ் வந்த விபச்சாரியுடன் தாம்பத்தியம் வைப்பது போல. அதில் எனக்கு விருப்பம் இல்லை.

      \\வந்துட்டார் சொம்ப தூக்கிட்டு :-)) \\ உமது செம்பு நிறைய அடி வாங்கிய செம்பு, அதை வைத்துக் கொண்டு நீர் தீர்ப்பெல்லாம் சொல்ல முடியாது, அதை தூக்கிக் கொண்டு கொல்லைப் பக்கம் போகத்தான் லயக்குப் படும், பொத்திக் கொண்டு போகவும்.

      Delete
  2. மறுபடியும் சுட்டி இணைப்பு (வரலாம்) விளையாட்டா...? அட போங்கப்பா...! இந்த விளையாட்டிற்கு வரலே...

    ReplyDelete
  3. ஒரு தனி மனிதனின் (மதுமதி) திருமணத்தை விமர்சனம் செய்வது சரியல்ல! This is not in good taste...at all. அவரை மேற்கோள் காட்டி விமர்சனம் செய்தது சரியல்ல. நிற்க.

    அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்பவர்களை கிண்டல் செய்வது வேறு; அதே சமயம் "ஜெயதேவ் தாஸ்" என்ற பெயரை போட்டு அப்படி அம்மி மிதித்து அருந்ததியைப் பார்த்து, திருமணம் செய்தார் என்று சொல்லி கிண்டல் விமர்சனம் செய்வது வேறு!

    வேறு...என்று சொல்வதை விட நீங்கள் செய்தது தனி மனித தாக்குதல். இது தவறு...பொதுவாக தாக்குங்கள் ஒரு கொள்கையை. எவ்வளவு நேரம் ஆகும் உங்கள் திருமணம் செய்த முறையை..."ஜெயதேவ் தாஸ்" பேர் சொல்லி அவர் கிண்டல் அடிக்க! யோசியுங்கள்...!

    ReplyDelete
    Replies
    1. \\ஒரு தனி மனிதனின் (மதுமதி) திருமணத்தை விமர்சனம் செய்வது சரியல்ல!\\ தயவு செய்து நான் செய்யாத ஒன்றை ஒன்றை செய்வதாக திரித்துக் கூற வேண்டாம். அவரது திருமணம் குறித்து நான் எதுவும் சொல்லவில்லை என்று பதிவிலேயே சொல்லிவிட்டேன். நமது ஆட்சேபம் கொள்கையளவில் மட்டுமே.

      நல்ல நாள் கெட்ட நாள் என்று எதுவும் இல்லை என்று அறிவியல் ரீதியாக கண்டுபிடித்துள்ளீர்கள் அதே சமயம் தலைவர்கள் பிறந்த நாள் என்றால் என்ன அறிவியல் ரீதியாக விசேஷம் என்பதையும் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்ல முடியவில்லை என்றால், நீங்கள் ஸ்பெஷலாக மூளை படைத்த, பகுத்து ஆராயும் திறமை வாய்ந்த ஆகாயத்தில் இருந்து குதித்தவர்கள் இல்லை, நீங்கள் யாரையெல்லாம் மூடநம்பிக்கையாளர்கள் என்று சாடுகிரீர்களோ, அவர்களைப் போலவே நீங்களும் காரணமே இல்லாமல் செண்டிமெண்ட் ஆக எதையாவது நம்பிக் கொண்டிருக்கும் மற்றுமொரு சாதாரண மூட நம்பிக்கையாளர்கள் தான். நீங்கள் பகுத்தறிவு வாதிகள் பகுத்து ஆராயக் கூடியவர்கள் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. இதுதான் முடிவு.

      Delete
  4. பெரியார் என்பவர் இல்லையென்றால் இன்னும் பார்ப்பனன் சொல்லும் பொய்யையும், புரட்டையும் நம்பி முட்டாளாக இருந்திருப்போம்.
    பெண்கள் கல்வி இந்த அளவு வளர்ந்திருக்காது. அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களை சீக்கிரம் இறக்காமல் இருந்திருந்தால் தமிழகம் இன்னும் பல படிகள் முன்னேற்றமடைந்திருக்கும், அவர்களை பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள் மட்டுமல்ல நாமும் வணங்கலாம் தவறில்லை ஜெயதேவ்தாஸ்..!

    ReplyDelete
  5. @ வீடு சுரேஸ்குமார்

    இங்கே முக்கியமான விஷயத்தை நாம் எல்லோருமே கோட்டை விடுகிறோம். பெண்களுடன் கள்ளத் தொடர்பு என்பது சாதரணமாக ஆங்காங்கே நடக்கிறது. ஒரு பெண் சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் தப்பில்லை என்று கோர்ட்டே சொல்லிவிட்டது. ஆனாலும் நடிகையுடன் படுத்திருந்த சாமியாரை நாம் கல்லால் அடித்து விரட்டுகிறோம். ஆனால் சட்டபடி அவன் மீது தப்பேயில்லை. காரணம் என்ன? அவன் எடுத்துக் கொண்ட கொள்கை பிரம்மச்சாரியத்தை கடை பிடிக்க வேண்டும் என்பது, ஆனால், அதை அவனே பின்பற்றவில்லை ஆகையால் அவனை கல்லால் அடித்தார்கள். அதே மாதிரி நாத்தீகர்கள் கொள்கைப் படி சிலை வழிபாடு நல்ல நேரம் கெட்ட நேரம் இதெல்லாம் பகுத்தறிவுக்கு முரணானது இதைச் சொல்லிவிட்டு தன்னுடைய சிலையையே வைத்து அதற்க்கு மாலை போடச் செய்வது, தலைவர்களின் பிறந்த நாட்களுக்கு முக்கியத்துவம் இருப்பதாக சொல்வது, இதெல்லாம் ஒன்னாம் நம்பர் மூட நம்பிக்கைகள். இதை மூட நம்பிக்கை இல்லை என மறுக்க வேண்டுமானால், சிலை எப்படி அந்த தலைவராக முடியும், தலைவர் பிறந்த நாளில் என்ன முக்கியத்துவம் உள்ளது என அறிவியல் ரீதியாக அவர்கள் நிரூபிக்கட்டும்.

    யார் எந்த நாளில் எதைச் செய்தாலும், படம் சிலை எதை வணங்கினாலும் அது அவரவர் இஷ்டம். அதை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை கேள்வி எங்கே வருகிறதென்றால் கொள்கை என்று சொல்வது ஒன்று, ஆனால் செயல் வேறு, மூட நம்பிக்கை என்று எதை ஊரைச் சுற்றி வாதம் பிளக்கிரார்களோ, அதை அவர்களே செய்யும் பொது ஏன் இந்த முரண்பாடு என்று அதை மட்டும் தான் தான் நாம் கேட்கிறோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete