Thursday, February 28, 2013

புத்தகம், அலெக்ஸ் பாண்டியன், நண்பன்: 3 படங்களில் ஒரு ஒற்றுமை.

சினிமாவை நுணுக்கமாக கவனித்து அதிலுள்ள விசேஷங்களைப் பற்றி பதிவு போட்டு, அதன் மூலம் மக்கள் சேவையில் நம்மை அர்ப்பணித்துக் கொண்ட நாம் இன்றைக்கு அதே மாதிரி ஒரு முக்கிய விஷயத்தைப் பற்றி அலசி ஆராயப் போகிறோம்.  அது சமீப காலங்களில் வெளி வந்த  புத்தகம், அலெக்ஸ் பாண்டியன் மற்றும் நண்பன் ஆகிய மூன்று படங்களுக்குமிடையே ஒரு சம்பந்தம் இருக்கிறது, அது என்ன என்பது தான்.

சமீபத்தில் வெளிவந்த புத்தகம்  படத்தில் இருந்து ஒரு காட்சி. என்னது அப்படி ஒரு படம் வந்துச்சான்னு கேட்கிறீங்களா?  வேற வழியில்ல நம்புங்க, வந்துச்சு!!  அதில் நம்ம மார்கண்டேயணி நதியா கூட ஒரு காலத்தில் அதிகம் டூயட் பாடிக் கொண்டிருந்த முன்னாள் சாக்கலேட் பாய் சுரேஷ் அரசியல்வாதியாக ஒரு ஜெயிலில் இருந்து வெளிவருவது போல ஒரு காட்சி. 

அந்தக் கட்டிடத்தை உங்களால் எது என்று கண்டுபிடிக்க முடிகிறதா?  முடியவில்லையென்றால் அடுத்த ஐந்து  படங்களைப் பாருங்கள். 
 
இவை சமீபத்தில் வெளிவந்து கார்த்தியின் பெயரை மேலும் கெடுத்த அலெக்ஸ் பாண்டியன் என்ற படத்தில் இருந்து சில காட்சிகள்.  கார்த்தி சிறைக் காவல் அதிகாரி, அவரது பாசமிகு சித்தப்பூ அதே சிறையில் இருந்து வெளியே வரும் ஒரு குற்றவாளி!!   இதன் பெயர் மத்திய சிறைச்சாலை என்று படத்தில் காணப் படுகிறது.  இப்போதாவது இது எந்த இடம் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?   உங்களில் சிலருக்கு முடியலாம்.  

கைதிங்க இருக்கும் அறையில் இருந்து ஒரே ஒரு கேட் மட்டுமே இருக்கும் படி எந்த சிறையாவது அமைத்திருப்பார்களா?!!  நீங்கள் யூகித்தது சரிதான்.  உண்மையில் இது சிறையல்ல, மாணவர்கள் ஹாஸ்டல்.  சரியாகச் சொல்லப் போனால் இது சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் தங்கும் "விக்டோரியா ஹாஸ்டல்", திருவல்லிக் கேணியில் அமைந்துள்ளது.  

இதை மாணவர்கள் விடுதியாகவே டைரக்டர் ஷங்கர் தனது நண்பன் படத்தில் காட்டியிருக்கிறார்.  இதோ, பாருங்கள், புரியும்!! 

இந்த மூணு படத்திலும் சில காட்சிகள் இந்த விடுதியில்  படமாக்கியிருக்காங்க  இவை சமீபத்திய படங்கள்.  இதுதான் இந்த மூன்றுக்குமுள்ள ஒற்றுமை.  ஹி ........ஹி ........ஹி ........

அதுசரி, இந்த விடுதியைப் பத்தி ஒரு பதிவா போட வேண்டிய அவசியமென்ன?  பொறவென்னங்க ஒருத்தன் தான் தங்கியிருந்த விடுதியை படத்தில் அடிக்கடிப் பார்த்தா அதை தன நண்பர்களுக்குச் சொல்லி பெருமைப் பட்டுக்க ஆசைப் படமாட்டானா!!  அதான்.

 விடுதிக்கு நம்மைக் காண வரும் நண்பர்களில் சிலர் இதென்னது ஜெயில் மாதிரி இருக்கு என்று கேட்பதுண்டு.  அப்போது ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று விளங்கவில்லை.  ஏனெனில் நாம பார்த்த சினிமாக்களில் உள்ள சிறைகள் அப்படி இருந்ததில்லை.  அப்புறம் அந்தமான் போன பின்னர்தான் விளங்கியது.   நம்ம டைரக்டர்கள் கண்ணிலும் விக்டோரியா விடுதி  ஜெயிலாகவே தோன்றியிருப்பதில் வியப்பே இல்லை!!
என்னங்க இன்னைக்கு ஒரு மரண மொக்கை பதிவை படிச்ச திருப்தி உங்களுக்கு கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன், சரிதானே!!  அய்யய்யோ, உங்க முகம் எப்படியெல்லாமோ மாறுதே.............   நான் எஸ்கேப்..............!!

9 comments :

 1. அட இதான் மேட்டரா.. ஓகே தல

  ReplyDelete
 2. தலைப்பை பார்த்து வந்தா ??????????/!!!!!.

  பரவாலில்லை ஒரு புது விஷயத்தை சொல்லி இருக்கிங்க ..

  ReplyDelete
 3. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

  ReplyDelete
 4. புரிஞ்சிடிச்சி சார்! புரிஞ்சிடுச்சி

  ReplyDelete
 5. //அதுசரி, இந்த விடுதியைப் பத்தி ஒரு பதிவா போட வேண்டிய அவசியமென்ன? பொறவென்னங்க ஒருத்தன் தான் தங்கியிருந்த விடுதியை படத்தில் அடிக்கடிப் பார்த்தா அதை தன நண்பர்களுக்குச் சொல்லி பெருமைப் பட்டுக்க ஆசைப் படமாட்டானா!!// - ரொம்ப புல்லரிக்குது.... நாங்கள்ளாம் காலேஜ் படிச்சோமான்னே மறந்துட்டம்...!

  ReplyDelete
 6. ரிலாக்ஸ் ஆக வேண்டுமென்றால் இப்படியும் பதிவும் போடலாமா...?

  ReplyDelete
  Replies
  1. @ திண்டுக்கல் தனபாலன்

   மேல இருக்கும் படம் அத்தனையும் எடுத்து ஒன்னு சேர்ப்பதற்குள் [வழக்கம் போல] பாடாத பாடாகிவிட்டது!!

   Delete
 7. உஷா,

  ஏன் வகுப்பில் ஒருத்தன் திருவல்லிகேணியில் இருந்து சைக்கிலேயே வந்து செல்வான், [அவன் வீடு பார்த்தீபனின் மனைவி ரெடி படத்தில் காட்டப் படும் அக்ரஹாரம்!! ஹி .... ஹி .... ஹி ....]. ஒரு டஜன் பேர் பஸ்ஸில் வந்து செல்பவர்கள். அவங்களில் யாரும் இந்த ஹாஸ்டல் எங்களுடையது என்று சொல்லிக்க முடியுமா? முடியாது. அது தான் மேட்டரே!! ஹா....ஹா....ஹா....

  ReplyDelete