Monday, September 24, 2012

தன்னை வணங்காதவர்களை சாமி கண்ணைக் குத்திவிடுமா!

 இந்தப் பதிவிற்குச் செல்லும் முன் நாம் சில நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.  முதற்க்கண் Dr. பழனி கந்தசாமி ஐயா அவர்கள், [சாமியின் மன அலைகள்]. 

 Dr. பழனி கந்தசாமி Ph.D ஐயா அவர்கள்
[சாமியின் மன அலைகள்.] 

ஐயாவின் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? பதிவிற்கு நாம் எழுதிய பின்னூட்டத்தை, அது பதிவின் கருத்துக்கு சற்று மாறுபட்டதாக இருப்பினும்  ஆமோதிக்கிறேன் என்று பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டதோடு நில்லாமல் அதையே தனிப்பதிவாகவும் வெளியிட்டு நம்மை சிறப்பித்தார்கள். [சுட்டி] இந்தப் பதிவைப் படித்த நண்பர் மதுரைத் தமிழனும், [அவர்கள் உண்மைகள்]  தனது வலைப்பூவில் நமது பின்னூட்டத்தை தனிப்பதிவாக வெளியிட்டிருக்கிறார்.  [சுட்டி]



மேற்கண்ட இரண்டு நல்ல உள்ளங்களுக்கும் நமது நன்றியைச் சமர்ப்பிக்கிறோம்.  இவர்கள் இருவரும் கலக்கல் முன்னணிப் பதிவர்கள், ஒரு சாமானியனின் வார்த்தைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இவர்கள் பெருந்தன்மைக்கு ஒரு சல்யூட்!!

நிகழ் காலத்தில் சிவா
பதிவு போடுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்து எல்லா டெக்னிகல் சப்போர்ட்டும் மனமுவந்து வழங்கி வரும், நிகழ் காலத்தில் சிவா!! தங்களுக்கும் எனது நன்றிகள்!!


தற்போது பதிவிற்குச் செல்வோம்.  மேற்கண்ட பதிவுகளில் சில அன்பர்கள் சில கேள்விகளை  எழுப்பியுள்ளார்கள்.  அவற்றை இங்கு தருகிறோம்.

[கடவுளை] எதற்கு வணங்க வேண்டும்? வணங்காவிட்டால் சாமி கண்ணைக் குத்திவிடுமா!

பதில்: நிச்சயம் குத்தாது!! எப்படி?  அப்படிக் குத்துவதாக இருந்தால் முதலில் இந்தக் கேள்வியைக்  கேட்டவரை அது  குத்தியிருக்க வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை, அவர் பிளாக் படிக்கிறார், பின்னூட்டம் போடுகிறார், கண்கள் நன்றாகத்தான் இருக்கின்றன, எனவே சாமி கண்ணைக் குத்தாது என்பது உறுதியாகத் தெரிகிறது.  அப்படியானால் கடவுளை எதற்காக ஒருத்தர் வணங்கவேண்டும்?




இந்தக் கேள்விக்குப் பதில், இறைவனிடம் எந்த வகையில் நாம் தொடர்பு படுத்தப் பட்டிருக்கிறோம் என்பதில் இருக்கிறது.  அதைப் புரிந்து கொண்டால் இதையும் புரிந்துகொள்வோம். சரி, இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு தான் என்ன? வாழ்க்கையில் உள்ள கேள்விகள் அத்தனைக்கும் பதில் தரும் கண்ணனின் கீதையில் இதற்கும் பதில் உள்ளது.   


உலகமெனும் சிறையில் உள்ள உயிர்கள் அத்தனையும் என்றென்றும் எனது பகுதியான அங்கங்களே.  சிறை வாழ்க்கையில் இருப்பதால் மனம் உள்ளிட்ட ஆறு புலன்களோடு வாழ்க்கைப் போராட்டத்தில் அலைக்களிக்கப் படுகிறார்கள். பகவத் கீதை[15.7]

பகவத் கீதை[15.7] பதத்தில், தனக்கும்  ஜீவன்களுக்கும் உள்ள தொடர்பை ஸ்ரீகிருஷ்ணர் மமைவாம்சோ என்று கூறுகிறார்.  ஜீவன்கள் எக்காலமும் தன்னில் பகுதியான அங்கங்களே [Parts and parcels] என்கிறார். இதில் மமைவாம்சோ என்பதன் பொருள் என்ன? அவ்வளவு எளிதாக ஒரே வார்த்தையில் இதை விளக்குவது கடினம். இதை இரண்டு உதாரணங்கள் மூலம் புரிந்துகொள்ளலாம். 

உடல் உறுப்புகள் அனைத்தும் வயிற்றுக்காக உழைத்தால் மட்டுமே தங்கள் நலனைக் காத்துக் கொள்ள முடியும்.

1. நமது உடலில் வயிறு இருக்கிறது, கைகள், கால்கள், கண்கள் என பல உறுப்புகள் இருக்கின்றன.  மற்ற உறுப்புகள் அனைத்தும் வயிற்றுக்காக பாடுபட வேண்டும், உழைக்க வேண்டும்.  வயிற்றுக்கு சேவை செய்வதன் மூலம் உறுப்புகளுக்கும் போஷாக்கு போய்ச் சேருகிறது.   ஆக, தாங்கள் நலமுடன் இருக்க வேண்டுமானால் உறுப்புகள் வயிற்றுக்கு சேவை செய்ய வேண்டும்.  அவ்வாறு இல்லாமல் தன்னிச்சையாக தங்கள் உழைப்பால் வந்த உணவை தானே உண்ணலாம் என உறுப்புகள் செயல்பட்டால், அவற்றால் உண்ணவும் முடியாது, அவற்றுக்குரிய ஆற்றலும், போஷாக்கும் கிடைக்காது, சோர்வடைந்தும் போகும்.  சுவையான ரசகுல்லாவில் அரைமணி நேரம் வேண்டுமானாலும் கையை வைத்திருக்கலாம் ஆனால் அதை கைகள் சுவைக்க முடியாது, அதை எடுத்து வயிற்றுக்கு கொடுப்பதன் மூலமே தங்கள் நலனை அவை பேணிக் காத்துக் கொள்ள முடியும்.




2. அடுத்து, ஒரு பெரிய இயந்திரம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதில் பல பகுதிகள் இருக்கக் கூடும். அவை ஒவ்வொன்றும் அந்த இயந்திரத்தின் பகுதிகளாக இருந்து அவற்றின் பணியைச் செய்யும்போது தான் அவற்றுக்கு மதிப்பு.  அதிலிருந்து கலண்டு  வீதியில் விழுந்து கிடக்குமானால் எதற்கும் பிரயோஜனப் படாது, அதற்க்கு மதிப்பே இல்லை.  [மேலும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், நம் தலைமுடி தலையில் இருக்கும் வரை உலகிலேயே அதற்க்குண்டான மதிப்பை வேறு எதற்கும் கொடுக்க மாட்டோம், அதே சமயம் அது தலையில் இருந்து விழுந்துவிட்டால் அதைவிட கேவலமான ஒன்று வேறு எதுவுமே இருக்காது!!  எதுவும் அது இருக்குமிடத்தில் இருந்தால் தான் மதிப்பு, இடம் மாறினால் அதன் வேல்யூ போய்விடும்.]


எதுவும் இருக்குமிடத்தில் இருந்தால் தான் மதிப்பு!!

மேற்சொன்ன இரண்டு உதாரணங்களையும் சேர்த்தால்  நமக்கும் இறைவனுக்கும் உள்ள  தொடர்பை  புரிந்து கொள்ளலாம்.  அடிப்படையில் இறைவன் எஜமானன், நாம் அவருடைய சேவகர்கள், அதுதான் நம்முடைய உண்மையான நிரந்தரமான, மாற்றவே இயலாத  ஸ்வரூபம் [Constitutional position], எப்படி உடல் உறுப்புகள் வயிற்றுக்கு சேவை செய்வதன் மூலம் தாங்களும் தானாகவே திருப்தியடைகின்றனவோ, அதே மாதிரி நமக்கு மகிழ்ச்சி அந்த இறைவனுக்கு சேவை செய்வதில் மட்டுமே கிடைக்கும். இறைவனிடமிருந்து தனித்து வந்து விட்டால் நமக்கு மதிப்பே இல்லை.  இந்த இரண்டும் சேர்ந்த நிலைதான் ஆங்கிலத்தில்  [Parts and parcels] என்று கூறப்படும் மமைவாம்சோ என்ற உறவாகும். இறைவனுக்கும், ஜீவன்களுக்கும் ஆரம்பமும் முடிவும் கிடையாதாகையால், இந்த உறவுக்கும் ஆதியும் அந்தமும் இல்லை.  மேற்ச்சொன்ன உதாரணத்தில் ஒரு சிறிய திருத்தம், வயிற்றுக்கு உணவளிக்கவில்லை என்றால் உறுப்புகள் வயிறு இரண்டும் சேர்ந்து வாடும், ஆனால் இறைவனுக்கு சேவை சாதிக்கவில்லை என்றால் இழப்பு நமக்கு மட்டுமே. மேலும் முடி கீழே விழுந்த பின்னர் அதற்கும் நமக்குமுள்ள உறவு அந்து போகும், ஆனால் இறைவனுக்கும் நமக்குமுள்ள உறவு ஒருக்காலும் அந்து போகாது.  அது நிரந்தரம்.


பக்தன் பகவானுக்கு சேவகனா, இல்லை பகவான் பக்தனுக்கு சேவகனா?

இந்த மாதிரி, "எதற்காக அவனை நான் வணங்க வேண்டும்" என்ற கேள்விகள் அன்பர்கள் மனதில் ஏன் எழுகிறது?  இங்கே நாம் பார்த்தவரை, எஜமானன் எல்லா சுகத்தையும் அனுபவிப்பான் அதற்க்கு அடிமை கஷ்டப் படுவான்.   உழைப்பவன் வேலைக்காரன், நோகாமல்   நொங்கு சாப்பிடுபவன் முதலாளி. அவர்கள் இங்கு உள்ள இந்த மாதிரியான ஆண்டான், அடிமை உறவைப் பார்த்து பார்த்து, வெறுத்துப் போனதால்தான், இறைவனின் அதிகாரத்தையும் ஏற்க மறுக்கிறார்கள். அப்படியானால், இறைவனும் இங்குள்ளவர்களைப் போலவே அடுத்தவர் உழைப்பை பிழிந்து, அந்த ஜூஸில் சுகம் காண்பவனா?  இல்லவே இல்லை.  இங்கே சிலர் தங்கள் வேலைக்காரர்களை கொத்தடிமைகளாக வைத்திருப்பார்கள், சிலர் ஓரளவுக்கு வசதியாக வைத்திருப்பார்கள், அனால் தனக்கு நிகராக தன்னுடைய வேலைக்காரர்களை நடத்துபவர்கள் இருப்பார்களா?  ஆனால் இறைவன் அதற்கும் மேல், பக்தனுக்கு பங்களாவை கொடுத்து விட்டு அவன் வாட்ச் மேனாகக் காவல் இருப்பான்.  அர்ஜுனனுக்கு தேர்ச் சாரதியாக மகாபாரத யுத்தத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் இருந்ததே  இதற்கு சாட்சி.  எங்கே தேர் போகவேண்டும் என்று உத்தவுக்கேற்ப்ப தேரை ஓட்ட வேண்டும்.  எந்தப் பக்கம் போக வேண்டுமென்பதை  தேரில் உள்ள வீரன் சாரதியின் இடுப்புக்கு அருகே காலால் இடித்து சமிக்சை செய்ய வேண்டும். யோசித்துப் பாருங்கள் மகாபாரதப் போர் முழுவதும் அவன் இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணரை உதைத்திருக்கிறான். சண்டையின் நடுவே குதிரைகளுக்கு தண்ணீர் குடிக்க வைத்தல், அவற்றை குளிர்ந்த நீரால் கழுவுதல் போன்றவற்றையும் சாரதியே செய்ய வேண்டும்.  இது அத்தனையும் ஸ்ரீ கிருஷ்ணர் தனது பக்தனுக்காக ஏற்றுக் கொள்கிறார். இதில் யார் எஜமான், யார் வேலைக்காரன்?!!


இங்கு இன்னொரு முக்கியமான விஷயம்,  இறைவன் இந்த பிரபஞ்சத்தையே படைத்தவன், அவனுக்கு நாம் செலுத்தும் வணக்கமும், சாதிக்கும் சேவைகளும் அவனுக்கு பெரிய பொருட்டே அல்ல.  சொல்லப் போனால் இந்த தேகமே நம்முடையதல்ல, இங்குள்ள பொருட்கள் எதுவும் நம்முடையதல்ல.  ஏனெனில் நம் தேகத்தில் உள்ள வஸ்துக்கள் உட்பட அத்தனையும் நாம் பிறப்பதற்கு முன்னரும், நாம் செத்ததற்கு அப்புறமும் இருக்கவே செய்கின்றன, ஒரு தூசியைக் கூட எவரும் உருவாக்கவில்லை, எல்லாவற்றையும் பயன்படுத்துகிறோம் அவ்வளவே.   


http://www.dinodia.com/photos/VDA-102453.jpg
கங்கையில் இருந்து கையளவு நீரை எடுத்து கங்கைக்கே செலுத்துவதால் கங்கைக்கு என்ன லாபம்?  ஆயினும் அச்செயலால் வழிபடுபவரின் பக்தி மேம்படுகிறது!!
சூரியனை வழிபடும் போது காட்டப் படும் தீபத்தின் ஒளியை நம்பியா ஆதவன் இருக்கிறான்?!!
 
சூரியனுக்கு திருவிளக்கு காண்பித்து ஆரத்தி செய்வதைப் போலவும் கங்கையில் இருந்து ஒரு கை நீரை அள்ளி கங்கைக்கே அர்ப்பணித்து கங்கையை வணங்குவது போலவும் நாம் இறைவனுக்கு வணக்கத்தையும் சேவையையும் தருகிறோம்.  இறைவனுக்கு கொடுக்க நம்முடையது இவற்றில் எதுவும் இல்லை.  ஆகையால் இவற்றின் மூலம் உண்மையில் இறைவன் எதிர் பார்ப்பது தான் என்ன?  அன்பு.......அன்பு........அன்பு...........  ஒன்று மட்டுமே.  நாம் இறைவனிடமிருந்து முகத்தை வேறுபக்கம் திருப்பி கொண்டு விட்டோம், என்னைத் திரும்பிப் பார், என் மீது அன்பு செலுத்து என்று நம் அன்புக்காக இறைவன் ஏங்குகிறான்.  
உன் மனதில் எந்நேரமும் என்னையே நினைத்திரு, என் பக்தனாக ஆகு, உன் வந்தனங்களை எனக்கு சமர்ப்பி, என்னை வழிபடு, இங்ஙனம்  என் சிந்தனையிலேயே முற்றிலும் மூழ்கி இருக்கையில் நிச்சயம் என்னை வந்தடைவாய். ப.கீ-9.34

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTiPsI6nhzhv4_vM3BrxX9E8N5IC65PwpPhIuXu3ulYZwr4HcRpVzEn6X4XRJW5-Vx0cEQP1YI-oGg89RK1ANVZKD6kyr8XumbTZlFjXhtd_3ASp_0rmQ8e1LvKtGKySrEGpjMJb7q0UM/s1600/vrindavan_introduction_and_history.jpg


தன்னை வணங்காதவர்களை சாமி என்ன செய்யும்?  அது ஒன்றும் செய்யாது,  அவர்களுடைய கர்மங்களுக்கேற்ப்ப வாழ்வில் சுக துக்கமும், மீண்டும் மீண்டும் எல்லையில்லா பிறப்பும் இறப்பும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.  இறைவன் பிறப்பித்த விதிகளின் படி தீர்ப்புகள் வழங்கப் பட்டுக் கொண்டே இருக்கும், அந்த டிபார்ட்மெண்டே வேற அதில் இறைவன் தலையிடுவதே இல்லை!!  சரி அப்படியே இருந்து விடலாமா? வாடகை வீட்டை எத்தனை தடைவதான் மாற்றுவது, நமக்கென்று நிரந்தரமான சொந்த வீடு இருந்தால் தேவலைன்னுதானே எல்லோரும் அதிக பொருட் செலவில் அதை வாங்குகிறோம்?   அப்படியே வீட்டை மாற்றிக் கொண்டே இருந்தாலும் மனத் திருப்தி கிடைக்குமா? ஒரு மீனை தண்ணீரில் இருந்து தரையில் தூக்கிப் போட்டுவிட்டு, அதற்க்கு கார், பங்களா, செல்பேசி, ஐ-போன், தங்கம், வைரம், கோகோ கோலா என எதைக் கொடுத்தாலும் அது அவற்றில் திருப்தியடையாது.  இதெல்லாம் எதுவும் எனக்கு வேண்டாம் என்னை என்னுடைய இடமான தண்ணீரில் கொண்டுபோய் விடுங்கள் அது போதும் என்றுதான் சொல்லும். நமக்கும் அதே நிலைதான், வணங்காதவர்கள், வாழ்வில் எத்தனை சொத்து சேர்த்தாலும் மகிழ்ச்சி மாத்திரம் மிஸ் ஆகிறதே என்று கடைசி வரை தேடிக் கொண்டே இருப்பார்கள்.    மீன் தண்ணீரைத் தேடுவது போல, நாம் இறைவனின் அன்பைத் தேடுகிறோம், அது கிடைக்காதவரை எது கிடைத்தாலும் நமது துன்பத்தை, தவிப்பை அவை எதுவும் போக்காது.  

இந்தப் பதிவுக்கு ஓட்டுப் போட்டு என்னை ஊக்கப் படுத்த இங்கே சொடுக்கவும்.

47 comments:

  1. தன்னை வணங்காதவர்களை சாமி குத்துமோ குத்தாதோ ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் தன்னை வணங்காதவர்களை (ஆதரிக்காதவர்களை ) இந்த "மதவாதிகள்" வந்து குத்துதோ குத்தென்று குத்திவிடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

    ReplyDelete
    Replies
    1. @Avargal Unmaigal

      பிரச்சினை எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்கிறது, இருப்பினும் நாம் சரியான பாதையைக் கண்டுபிடித்து பயணித்து இலக்கை அடைய முயற்சிக்க வேண்டுமல்லாவா. கருத்துக்கு நன்றி மதுரை தமிழன்!!

      Delete
  2. நீங்க நினைப்பதுபோல் இது இறைவனுக்கும் தனி ஒரு மனிதனுக்கும் இடையே உள்ள பிரச்சினை இல்லை!

    இடையே பஞ்சாயத்துப் பண்ண நெறையப் பேரு வருவாங்க, பிரசங்கம் செய்வாங்க, எது சரினு சொல்லுவாங்க, இப்படியே போய்க்கிட்டே இருக்கும்.

    இறைவனை சமாளிப்பது, இறைவனுக்கு தன் நிலை புரிய வைப்பது ஆத்திகனுக்கும் ஏன் நாத்திகனுக்கும்கூட எளிதான ஒண்ணு. ஆனால் இந்த இடையிலே வர்ராங்களே.. அவங்களை உங்க பகவானே சமாளிக்க முடியாது! வேண்ணா பகவானிடம் கேட்டுப் பாருங்க! வருண் சொல்வது சரிதான் என்பார்! :)

    ReplyDelete
    Replies
    1. என்ன வருண், இன்னைக்கு உங்க பதிவுல ஏதோ கவிதை வாசித்திருக்கீங்க!! நீங்களும் எப்படி எப்படியோ டிரை பண்றீங்க, ஒரு பயலும் சண்டைக்கே வரமாட்டேங்கிரானே!!

      எங்களுக்கு வழிகாட்ட கீதை இருக்கு, அதன்படி நடந்தா எந்த பிரச்சினையும் வராது. மேலும் நாங்க வாழ்வுக்கு ஒரு நோக்கம் இருக்குதுன்னு நம்புறவங்க, இந்த சான்சை விட்டா திரும்ப மனுஷனா எப்ப பிறப்போமோ, இதையே கெட்டிய பிடிச்சு காரியம் சாதிக்கணும்னு நினைக்கிறோம். பிறக்கறதுக்கு முன்னாடியும் ஒன்னும் இல்ல, செத்ததுக்கப்புரமும் ஒன்னும் இல்ல, கடவுளும் இல்ல........ இப்படி எதுவும் இல்லன்னு சொல்ற ஆளுங்க, கொஞ்ச நாளில் மறையப் போகும் ஈசல் வாழ்க்கையை எப்படியெல்லாம் வாழனும்கிரதுக்காக எதுக்கு மண்டையைப் போட்டு உடச்சுக்கிரீங்கன்னுதான் தெரியலை.

      Delete
    2. எனக்கு சத்தியமா கவிதை எழுத எல்லாம் தெரியாது. ஆனால் உண்மையைத் தயங்காமல், பயப்படாமல் சொல்லத் தெரியும்.

      இங்கே பாருங்க அதனாலதானே உங்ககிட்ட வாங்கிக் கட்டிக்கிறேன்.

      எனக்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள பிரச்சினையில் இடையில் நீங்க வந்து நிக்கிறீங்க, பாருங்க! :))))

      Delete
    3. \\எனக்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள பிரச்சினையில் \\அப்ப கடவுள் இருக்காருன்னு நம்புறீங்க போலிருக்கே!

      Delete
    4. அப்படி நம்பினால் உங்களைமாரி நண்பர்களை சந்தோசப்படுத்த முடியுதே என்று நம்புவதுபோல் நடிப்பதுண்டு. அப்புறம் நடிப்பது தவறென்று மன்சாட்சி எனை அறைவதால் "இல்லை"னு சொல்லி அவர்களை நோகடிப்பதும் உண்டு! :)

      Delete
  3. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் இந்த விவாதம் இப்படித்தான் போகும். நான் எடத்தைக் காலி பண்ணுறேன், ஜெயவேல்! :)

    ReplyDelete
  4. ஜெயதேவ்,

    //வாழ்வில் எத்தனை சொத்து சேர்த்தாலும் மகிழ்ச்சி மாத்திரம் மிஸ் ஆகிறதே என்று கடைசி வரை தேடிக் கொண்டே இருப்பார்கள்.//

    எதற்காக அவனை நான் வணங்க வேண்டும்? இதற்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லையே. ஏதோ மிஸ் ஆகுதுனு சொன்னிங்க. அது என்னது? இறைவனை வணங்கினால் அது கிடைச்சிடுமா?

    சொத்து சேர்த்தால் நிம்மதி வந்துவிடுவதில்லை, அது அவரவர் மனநிலை பொருத்தது. அவனவன் கருமங்களுக்கேற்ப பலன் கிட்டும்னு சொல்லிட்டீங்க. அதில் கடவுள் தலையிடுவதில்லைனு வேற சொல்லிடீங்க. பிறகு எதற்கு இந்த வணங்குதல்.

    கடவுளை வணங்கவேண்டும் என்பார்கள். பிறகு இப்படித்தான் வணங்கவேண்டும் என்பார்கள். கடவுள் இருக்கிறது என்பார்கள் .பிறகு இப்படித்தான் இருக்கிறது என்பார்கள். "இப்படித்தான் செய்யவேண்டும்" என்பது தான் ஆன்மீகத்திற்கும் எனக்கும் ஏழாம்பொருத்தமாக்கிவிடுகிறது.

    கடைசியாக ஒன்று. நான் நினைத்ததை வருண் சொல்லிவிட்டார். அதை அப்படியே வழிமொழிகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. \\எதற்காக அவனை நான் வணங்க வேண்டும்? இதற்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லையே. ஏதோ மிஸ் ஆகுதுனு சொன்னிங்க. அது என்னது? இறைவனை வணங்கினால் அது கிடைச்சிடுமா?\\ வயிற்றுக்கு உணவு தராட்டி கை கால்களுக்கு என்னாகும்? அதுதான் நமக்கு நடந்துகிட்டு இருக்கு. வாழ்வில் பணம் சேர்ந்தால் நமக்கு மகிழ்ச்சி கிட்டும்னு நினைக்கிறோம், ஆனா, தொலைகாட்சி, கம்பியூட்டர், செல்போன் என எல்லாவற்றையும் எக்கச் சக்கமாகப் பார்த்த நிலையில் மக்கள் மனம் பக்தியை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறதே காரணம் என்ன? ஏன் தற்போது குமுதம், விகடன் உட்பட பக்தி புத்தகங்களாக போட்டுத் தள்ளுகிறார்கள்? நாம் எதற்காக ஏங்குகிறோமோ அது அவை எதிலும் இல்லை அதுதான் காரணம். சில சமயம் குழந்தை அழுதுகொண்டே இருக்கும், யார் யாரோ கையிலெடுப்பார்கள் அது அழுகையை நிறுத்தாது, அதன் தாய் கையிலெடுப்பாள், டக்கென்று அழுகையை நிறுத்திவிடும். நாம் நிஜத்தில் தேடுவது இறைவனின் அன்பதைத்தான், அது தெரியாமலேயே பெண், பொன், நிலம் என எத்தனையோ வகையில் நாம் சுகத்தை தேடுகிறோம், அவற்றில் எல்லாம் நாம் தேடுவது இல்லை என்று இன்னமும் தெரியாமலேயே தேடுகிறோம், இது புரியும் வரை எது கிடைத்தாலும் நமது துன்பத்திற்கு விடிவே இல்லை.

      Delete
    2. \\கடவுளை வணங்கவேண்டும் என்பார்கள். பிறகு இப்படித்தான் வணங்கவேண்டும் என்பார்கள். கடவுள் இருக்கிறது என்பார்கள் .பிறகு இப்படித்தான் இருக்கிறது என்பார்கள். "இப்படித்தான் செய்யவேண்டும்" என்பது தான் ஆன்மீகத்திற்கும் எனக்கும் ஏழாம்பொருத்தமாக்கிவிடுகிறது.\\ எதைச் செய்வதற்குமே ஒரு முறை [procedure] என்று இருக்கிறதல்லவா? சாப்பிடனும்னா கூட உணவை வாயில்தான் போடணும்னுதானே முறை இருக்கு? கண்ணிலோ, காதிலோ போட முடியுமா? எதுவுமே செய்யக்கூடாது, ஆனா ஆன்மீகமாகவும் இருக்கணும்னா எப்படி? இறைவன் என்றால் யார், நாம் யார், நமக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு என்ன, அந்தத் தொடர்பை மீளச் செய்வது [revive] எப்படி?இதற்கெல்லாம் ஒரு வரைமுறை இருக்கிறது. தங்கத்தை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுப்பது சுலபமா என்ன? வரைத்தை அதன் சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுப்பதைப் பற்றி படிக்கும் போது மூச்சே நின்று விடும் போல இருக்கிறதே? இதற்கே இப்படி என்றால், இறைவன் மட்டும் எதுவும் செய்யாமலேயே கிடைத்துவிடுவானா என்ன? அப்படியே இருந்தாலும், நாம் செய்ய இயலாது என்று கஷ்டமே எதுவுமே இல்லையே!!!

      Delete
    3. \\கடைசியாக ஒன்று. நான் நினைத்ததை வருண் சொல்லிவிட்டார். அதை அப்படியே வழிமொழிகிறேன்.\\ உங்க சுதந்திரத்தில ஆண்டவனே தலையிட மாட்டான், நான் மட்டும் எப்படி தலையிடுவேன்!!

      Delete
  5. நலமிலன் நன்னார்க்கு நன்னினர்க்கு நல்லன்
    சலமிலன் பெயர் சங்கரன்.
    சங்கரன்= விருப்பு பெறுப்பற்றவன்.

    //ஆனால் போலி ஆன்மீகம் ஆபத்தானது.//என்செய்வது இன்று அதுவே அதிகமாக உள்ளது.
    ஒதுங்கி விடுவது சிறந்ததில்லையா?

    ReplyDelete
  6. பெறுப்பற்றவன் அல்ல வெறுப்பற்றவன்-மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. @யோகன் பாரிஸ்(Johan-Paris)

      தங்களது முதல் வருகைக்கு நன்றி நண்பரே!!

      Delete
  7. அம்மாடி, எத்தனை பெரிய பதிவு. படிக்கறதுக்கு கொஞ்சம் டைம் வேணுமுங்க.

    அப்புறம் என்னை ரொம்பத் தூக்கிட்டீங்க. ரொம்பத் தூக்கினா டேஞ்ஜர் அதிகம். ஏன்னா அங்கிருந்து உளுந்தா ரொம்ப பலமான அடிபடும்.

    நீங்களும் ஒண்ணும் அப்படி சாதாரண பதிவர் இல்லைங்க. உங்கள் கருத்துகள் எல்லாம் மிக ஆழமானவையாக இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. //நீங்களும் ஒண்ணும் அப்படி சாதாரண பதிவர் இல்லைங்க. உங்கள் கருத்துகள் எல்லாம் மிக ஆழமானவையாக இருக்கின்றன.///

      கந்தசாமி அவர்கள் சொல்வது மிகச் சரியே

      Delete
    2. சார், நான் எங்க உங்களைத் தூக்கி வச்சேன், ஏற்கனவே நீங்க இருக்கிறது உயரத்துல தானே!! அதனால ஒன்னும் ஆகாது. தான் சொல்வதற்கு மாற்றுக் கருத்தை ஒருத்தர் முன்வைக்கும்போது, ஆமாம் நீ சொல்வது ரைட்டுதான் என்று சொல்லும் உங்க மனசு இருக்கே, அதில நீங்க உயர்ந்து நிக்கிறீங்க. தாங்கள் தொடர்ந்து நம்ம கடைக்கு வந்து ஆக்கப் பூர்வமான வழிகாட்டுதலைத் தந்து ஆதரிக்க வேண்டுகிறேன்!!

      Delete
  8. //வணங்காதவர்கள், வாழ்வில் எத்தனை சொத்து சேர்த்தாலும் மகிழ்ச்சி மாத்திரம் மிஸ் ஆகிறதே என்று கடைசி வரை தேடிக் கொண்டே இருப்பார்கள்.//

    நான் கடவுளை வணங்குவதில்லை. தினமும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் நண்பர் கடவுளுக்கு பூஜை பண்ணாத நாள் இல்லை. ஆனால் அவர் வாழ்க்கை தினம் ஒரு போராட்டமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கசாப்பு கடைக்காரன் கடையில நாலஞ்சு ஆடுகளை கட்டி வச்சு ஒன்னொன்னா வெட்டிகிட்டே இருப்பான். அதைப் பார்த்துகிட்டே இருந்தாலும், அங்கே கட்டிப் போடப் பட்டிருக்கும் மிச்ச ஆடுங்க கவலையே படாம அதுங்க முன்னாடி தொங்கிகிட்டு இருக்கும் இலையை சாப்பிட்டுகிட்டு இருக்கும். நம்முடைய நிலையம் அதே போலத்தான். ஆபத்தை உணராமல் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறோம். இந்த கணத்தில் மகிழ்ச்சியாக இருப்பது பெரிய விஷயமல்ல, அடுத்த கணம் நம் கழுத்தில் கத்தி விழப் போகிறது அது ஏன், அதற்க்கு தீர்வு என்ன என்பது தான் முக்கியம். நம்முடைய மனைவியையும் குழந்தைகளையும் விட்டுப் போக வேண்டுமென்று யாரும் ஆசைப் படமாட்டோம். ஆனால், மரணம் கட்டாயமாக நம்மை அவர்களிடமிருந்து பிரிக்கும். வாழும்போதே எப்போது எது நடக்குமென்றும் சொல்ல முடியாது. இங்க நம்முடைய நிலை பதம் பதம் யத் விபதாம் ந தேஷாம் ன்னு பாகவதம் [Bhag. 10.14.58 ] சொல்லுது, அதாவது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆபத்து நிறைந்த இடம்னு அர்த்தம். எல்லாம் நலமாக இருந்த ஜப்பான் மேல திடீர்னு அணுகுண்டு விழுந்தது. தமிழகத்தின் வங்கக் கரையோரம் திடீர்னு சுனாமி அடிச்சது. குஜராத்தில் திடீர்னு நில நடுக்கம் வந்தது. இதிலெல்லாம் ஆயிரமாயிரம் பேர் மாண்டார்கள், அவர்களைப் பிரிந்த குடும்பத்தினர் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று சொல்வார்களா? வீட்டை விட்டு வெளியே போனால் திரும்ப வருவோம் என்ற நிச்சயம் கிடையாது, நமக்கும் நம் குடுபத்தாருக்குமே கூட எப்போது எது நடக்குமென்ற நிச்சயம் கிடையாது, இதில் மகிழ்ச்சியாக இருப்பதா? அது ஆபத்தை உணராத அறியாமை. இப்படி நம்மைப் போட்டு வறுத்தெடுக்கும் இந்த தீராத சுழலில் இருந்து விடுபட வழியே கிடையாதா? அந்தத் தேடலுக்கு உகந்தது, நான் வாட்டி வதைக்கப் படுகிறேன் என்ற நிலைதான். அப்போத்தான் தீர்வை நோக்கி நகர முடியும், நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்ற நிலை கசாப்பு கடைக்காரன் ஆட்டிற்கு கட்டியுள்ள இலைகளைப் போல, உண்மையை கண்ணில் இருந்து மறைத்து விடும். அந்த வகையில் உங்கள் நண்பர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்றே நான் சொல்லுவேன்.

      Delete
  9. //கசாப்பு கடைக்காரன் கடையில நாலஞ்சு ஆடுகளை கட்டி வச்சு ஒன்னொன்னா வெட்டிகிட்டே இருப்பான். அதைப் பார்த்துகிட்டே இருந்தாலும்,..............//

    தயவு செய்து குழப்பாமல் தெளிவாக சொல்லுங்கள். கடவுளுடன் அன்போடு இருந்தால் துன்பம் வருமா வராதா?

    ReplyDelete
    Replies
    1. பிறவி எடுக்கும்வரை துன்பம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். யாராலும் தடுக்க முடியாது. பிறப்பு, நோய்வாய்ப் படுத்தல், மூப்பு, இறப்பு -இந்த தேகத்தில் கட்டுண்டு இருக்கும்வரை இவையே துன்பம் தருகின்றன. [janma-mrtyu-jara-vyadhi- duhkha-dosanudarsanam B.G-13.9], இறைவனின் இடத்துக்குச் சென்று விட்டால் மட்டுமே இவற்றில் இருந்து விடுதலை.

      abrahma-bhuvanal lokah
      punar avartino 'rjuna
      mam upetya tu kaunteya
      punar janma na vidyate

      ஈரேழு பதினாலு லோகத்தில் நீ எங்க போனாலும் பிறப்பு இறப்பும், அதனால் இருக்கும் துன்பங்களும் இருந்துகிட்டே தான் இருக்கும், என் வீட்டுக்கு திரும்பி வா பிறப்பு இறப்பிலிருந்து விடுபடுவாய்.- ப.கீ-8.16. இதை ஸ்ரீ கிருஷ்ணர் சொல்றார். துன்பத்தில் இருந்து விடுபடனும்னா பிறப்பு இறப்பிலிருந்து விடுபடணும், அதற்க்கு இறைவன் மேல் அன்பு செலுத்துவதில் பூரண நிலையை அடைய வேண்டும். ஆனாலும் பக்தர்கள் அதற்காக இறைவனிடம் அன்பு செலுத்துவதில்லை. எதையாவது எதிர் பார்த்து அன்பு செலுத்தினால் அது வியாபாரமாகிவிடும். நான் உன்மேல் அன்பு செலுத்துகிறேன், எத்தனை துன்பம் வந்தாலும் ஏற்றுக் கொள்கிறேன், மீளவே முடியாத நரகத்தில் போட்டாலும் எனக்குக் கவலையில்லை, உன் மேல் அன்பு செலுத்தும் நிலையில் இருந்து ஒருபோதும் விலகமாட்டேன். இது ஒரு பக்தனின் நிலை.

      Delete
    2. இறைவனின் மேல் அன்பு வந்த பிறகு எந்நேரமும் அவனை இதயத்தில் சுமந்து அவன் நினைவாகவே இருக்கும் பக்தனுக்கு இவ்வுலகின் துன்பங்கள் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை, அவர்கள் இறைவனிடம் போய் சுகபோகமாக இருக்க வேண்டும் என்றும் விரும்புவதில்லை, இறைவன் இச்சை என்னவோ அது தனது இச்சையும், இறைவன் விரும்பினால் அவர்கள் வைகுண்டமும் போவார்கள், நரகத்துக்குப் போய் இரு கஷ்டப் படு என்றாலும் அவர்கள் அதற்கும் தயார். தனிப்பட்ட முறையில் தங்களுக்கென்று எதுவும் தேவையில்லை, இறைவனை நேசித்தாலே போதும். அவர்கள் இறைவனிடம் கேட்பதெல்லாம் உன்னை என்றென்றும் மறவாத என்னத்தை தாருங்கள் என்பது மட்டுமே.

      Delete
    3. இதுதான் உண்மையான பக்தி.,
      நிகழ்காலத்தில இருக்கிறதுன்னும் சொல்லலாம்.

      இங்க என்ன பிரச்சினைன்னா பக்தின்னா என்னன்னு தெரியரது இல்ல...காசு செலவழிச்சா கடவுள் வரம் குடுத்துருவாருன்னுதான் நினைக்கிறாங்க

      Delete
  10. ஆழமான கருத்துக்களை,விரிவாகப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  11. ***இறைவனின் மேல் அன்பு வந்த பிறகு எந்நேரமும் அவனை இதயத்தில் சுமந்து அவன் நினைவாகவே இருக்கும் பக்தனுக்கு இவ்வுலகின் துன்பங்கள் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை***

    என்ன ஜெயவேல் நீங்க.. சும்மா ஏட்டு சுரைக்காய் மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கீங்க. ப்ராக்டிகல் எதுனு பாருங்க. உண்மை என்னனு பாருங்க.

    நீங்க சொல்வதுபோல உள்ள பக்தர்கள் எல்லாம் அரிதிலும் அரிது. ஆத்திகர்களில் 99% அந்த வகையைச் சார்ந்தவரல்ல!

    நம்ம மணிரத்ணம் அண்ணன் ஏன் தற்கொலை பண்ணி செத்தாரு? அவருக்கு துன்பங்கள் பொருட்டாக தோனியதால்தான். அவரால் துன்பங்களை சமாளிக்க முடியவில்லை! ஆமாம் அவரு கடவுள் நம்பிக்கை உள்ளவர்தான். உங்க "இனம்"தான்.

    இப்படி கோடி உதாரணம் சொல்ல்லாம்!

    துன்பங்கள் பொருட்டா தெரியாமல் இருந்தால் அவன் மனுஷனே இல்லை!

    அதற்கு தீர்வு இறைவனை வழிபடுதல் என்றுனு சும்மா நீங்க சொல்ல வேண்டியதுதான். வழிபடுவதால் துன்பமெல்லாம் எங்கும் போகப் போவதில்லை! அங்கேயேதான் இருக்கும்!என்ன மறைஞ்சிருச்சுனு நம்மள நாமே ஏமாத்திக்கலாம். எவ்வளவு நிமிடங்கள் ஏமாத்த முடியும்?? எவ்வளவு நாட்கள்? மறுபடியும் வந்து நிக்கும்!

    ReplyDelete
    Replies
    1. @வருண்

      \\என்ன ஜெயவேல் நீங்க.. சும்மா ஏட்டு சுரைக்காய் மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கீங்க. ப்ராக்டிகல் எதுனு பாருங்க. உண்மை என்னனு பாருங்க.\\ இது ஏட்டுச் சுரைக்காய் அல்ல, 100% பிராக்டிகல். நீங்கள் ஏட்டுச் சுரைக்கைகலையே பார்த்துவிட்டு இதையும் அப்படியே நினைக்கிறீர்கள். சில வருடங்களில் கிழவியாகி அழியப் போகும் ஒரு பொண்ணு பின்னால சுத்துற பையன் அவளையே எந்நேரமும் நினைச்சு உருகுவது சாத்தியம் என்றால், அதையே என்றும் நிலைத்திருக்கும், நமக்கு நிரந்தரமான உறவைக் கொண்டுள்ள அழகான இறைவன் மேல் திருப்புவது கடினமா என்ன? முறைப் படி முயன்றால் எதுவும் சாத்தியமே. முயன்றால் இந்த ஜென்மத்தில் இல்லாவிட்டாலும் விரைவில் வெற்றியைத் தொடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

      \\நீங்க சொல்வதுபோல உள்ள பக்தர்கள் எல்லாம் அரிதிலும் அரிது. ஆத்திகர்களில் 99% அந்த வகையைச் சார்ந்தவரல்ல!\\ நாம் இருப்பது ஜீரோ தான் என்பது எனக்கும் தெரியும், ஆனாலும் இப்போதாவது புத்தி வந்து ஆரம்பிக்கிரேனே, அதைநினைத்து சந்தோஷப் பட வேண்டியதுதான்.

      \\துன்பங்கள் பொருட்டா தெரியாமல் இருந்தால் அவன் மனுஷனே இல்லை! \\ அந்த நிலையை அடைந்தால் தான் அதைப் புரிந்து கொள்ள முடியும் வருண்.

      \\அதற்கு தீர்வு இறைவனை வழிபடுதல் என்றுனு சும்மா நீங்க சொல்ல வேண்டியதுதான். வழிபடுவதால் துன்பமெல்லாம் எங்கும் போகப் போவதில்லை! அங்கேயேதான் இருக்கும்!என்ன மறைஞ்சிருச்சுனு நம்மள நாமே ஏமாத்திக்கலாம். எவ்வளவு நிமிடங்கள் ஏமாத்த முடியும்?? எவ்வளவு நாட்கள்? மறுபடியும் வந்து நிக்கும்!\\ துன்பங்கள் தான் இறைவனிடம் என்னை ஓடவைக்கும். இதெல்லாம் பிராக்டிகலா பார்த்திட்டு தான் எது பெஸ்டுன்னு வந்திருக்கோம் வருன்!!

      Delete
    2. ஜெயதேவ்,

      நீங்க சொல்ல வருவது என்னவென்றால், கடவுளிடம் பக்தி செலுத்தினால் துன்பம் அணுகாதுனு சொல்லுரிங்க. என்னைக் கேட்டால் கடவுளிடம் பக்தி என்பது ஒரு போதை போல துன்பம் வந்தாலும் வலி தெரியாமல் இருக்கும். அவ்வளவுதான். உலக துன்பத்திலிருந்து யாரும் தப்பிக்க இயலாது.

      Delete
    3. குட்டிப்பிசாசு, நீங்கள் சொல்வது உண்மைக்கு அருகில்னு நினைக்கிறேன். போதை இல்லை. போதை அறிவை மழுக்கி துன்பத்தை அறியாமல் இருக்க வைக்கும். ஆன்மிகம் அறிவை தெளிவாக்கி துன்பதின் முழு பாதிப்பை புரிய வைத்து அதன் மூலம் வலியை போக்கும்! ஜெயதேவும் அதையே சொல்கிறார் என நினைக்கிறேன்.

      Delete
  12. படித்தேன், புரிந்தேன், ரசித்தேன்.

    ReplyDelete
  13. விளக்கமான உதாரணங்களுக்கு நன்றி...

    என்னைப் பொறுத்தவரை :

    (1) கடவுள் = கண்ணாடி (முகம் பார்க்கும்) அல்லது

    (2) உண்மையான ஆன்மீகம் : தன்னை பிறரிடம் காண்பதே...

    ReplyDelete
  14. நல்ல விளக்கமான அறிவுரை

    ReplyDelete
    Replies
    1. @Arif .A

      கருத்துக்கு நன்றி ஆரிஃப்.

      Delete
  15. நண்பரே....

    அருமையான தெளிவான பதிவு. மிகவும் ரசித்தேன் இதுவரை உங்கள் பதிவில் அதிகம் அறிவியல் பதிவுகளை படித்துகொண்டு இருந்த எனக்கு, தயக்கத்துடன் தான் நீங்கள் பதிவிட்ட அன்று வந்தேன். (எல்லா நேரமும் அறிவியல் எனக்கு கொஞ்சம் அலர்ஜி வேறு ஒன்றும் இல்லை). உங்கள் எழுத்து நடையில் நல்ல தேர்ச்சி. வாழ்த்துக்கள் தொடருங்கள்.

    நன்றி

    ReplyDelete
  16. துன்பம், மகிழ்ச்சி எல்லாம் நம் மனதிலே தான் உள்ளது யாரும் யாரிடமும் தேட வேண்டியதில்லை. மனிதன் பிற உயிர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் மனிதனே மனிதனை மதிப்பதில்லை. முற் பிறவி மறுபிறவி எல்லாம் மனிதன் வாழ்வின் பயத்தின் காரணமாகவே எற்படுத்திக் கொண்டவை. கடவுளை வணங்காதவன் அடுத்த ஜென்மத்தில் கழுதையா போய்விடுவானென்றால் அதற்காக இந்த ஜென்மத்தில் எதை கடவுளுக்கு காணிக்கையாக்கவேண்டும் என கேட்பான் ? எந்த மயக்க மருந்தும் வேண்டாம் ஆபரேசன பன்னுங்க என சொன்ன தைரிய சாலிகளும் இருந்திருக்காங்க. போலி வேசத்தோடு இருக்கும் ஆன்மீக வாதியைவிடவும் பாசத்தோடு இருக்கும் நாத்திகன் தாழ்ந்தவன் அல்ல.

    ReplyDelete
  17. வலைப்பதிவர்னா புதுசா வர்றங்களை உற்சாகப்படுத்தனும் :) .,

    இதத்தான் நான் செஞ்சேன் :)

    ReplyDelete
  18. கடவுளை பற்றி மற்றவர்கள்
    சொல்வதை கேட்டது போதும்

    மாறிக்கொண்டிருக்கும் வடிவங்களின் மீது
    கணத்திற்கு கணம் மாறிகொண்டிருக்கும்
    மனதை கொண்டு கடவுளை
    வெளியே தேடியது போதும்.

    மனதை உங்கள்
    உள்ளே திருப்புங்கள்

    மனதில் எண்ணங்கள் எங்கிருந்து
    உதயம் ஆகிறது என்பதை
    உணர முயற்சி செய்யுங்கள்.

    அங்கு சென்றால்தான்
    இறைவனை அடைய
    உணர முடியும்.

    வாதங்களாலும், விவாதங்களாலும்
    வாழ்நாள்தான் வீணாகும்.

    பசி என்ற உணர்ச்சியை
    அவரவர்தான் உணரமுடியும்
    அதுஉணவால் அடங்கிவிடும்

    அதுபோல் இறைவனை
    அடையவேண்டும்
    என்ற பசி ஏற்பட்டால்தான்
    அதற்க்கான உணவை
    தேடி பெற்று
    அதை போக்க முடியும்.

    கடவுள் இருப்பவன் என்பவனுக்கும்
    கடவுள் இல்லை என்று மறுப்பவனுக்கும்
    அதை சொல்பவர்களுக்கு உடலை ,உணவை,
    உயிரை தருபவன் அந்த இறைவனே

    ஏனென்றால் பிணங்கள் வாதாடமுடியாது.

    ReplyDelete
    Replies
    1. @ Pattabi Raman

      அழகான கவிதைக்கும், முதல் வருகைக்கும் நன்றி சார்!!

      Delete
    2. கடவுள் இல்லை
      என்பவர்களோடு வாதாடி
      நாம் அவர்களை
      கடவுளை ஏற்றுக்கொள்ளவைப்பது
      என்பது வீண் வேலை

      என் மனம் கடவுள்; இருப்பதாக நம்புகிறது
      உன் மனம் கடவுள் இல்லை என்று நம்புகிறது
      அவ்வளவுதான்

      மாறிக்கொண்டே இருக்கும்
      மனம் சொல்லும் எதையும்
      நாம் நம்பமுடியாது

      மனதை இல்லாமல் செய்யுங்கள்

      பார்க்கும் எல்லாம் அவனன்றி
      வேறு எதுவும் இல்லை
      என்று தெரியும் புரியும்.

      மனதே இல்லாமல் செய்வது எப்படி?

      ரமணர் சொல்லியபடி செய்யுங்கள்

      குளத்தில் குதிக்காமல் நீச்சல்
      கற்றுக்கொள்ளவே முடியாது

      வாதத்தில் ஜெயித்தால்
      அகந்தை வரும்
      அது பெற்ற வெற்றி
      அனைத்தையும் அழித்துவிடும்

      வாதத்தில் தோற்றால்
      மன அழுத்தம் வரும்
      அது நம்மை
      செயல்படாமல் செய்துவிடும்.

      Delete
    3. @Pattabi Raman

      BG 18.68, BG 18.69 பதங்களில் இந்த அறிவை பக்தர்களுக்கு எடுத்துச் சொல்லும் ஒருவனே எனக்கு மிகவும் நெருக்கமானவன், அவனைப் போல எனக்கு பிரியமானவன் வேறு யாரும் என்றும் இருக்க முடியாது என பகவான் சொல்கிறார். பகவானும் அவரது பக்தர்களும், இங்குள்ள ஜீவன்கள் கஷ்டத்தில் இருந்து மீண்டு வீடு சேரவேண்டும் என்றே பாடுபடுகிறார்கள். நாமும் அவர்களுக்கு நம்மால் முடிந்த வழியில் சேவை செய்வோமே!! கருத்துக்கு நன்றி.

      Delete
    4. உங்கள் முயற்சிகள்
      வெற்றியை தரட்டும்.

      உங்கள் நம்பிக்கைகள்
      வலுப்பெறட்டும்.


      சேவை செய்யுங்கள்
      பலனை எதிர்பாராமல்

      பலனை எதிர்பார்த்தால்
      ஏமாற்றமே மிஞ்சும்

      ஏமாற்றம் நம் மன
      உறுதியை குலைத்துவிடும்

      கடமையை செய்யாமல்
      சேவை செய்தும் பயனில்லை

      கடவுளை எதற்க்காக
      நினைக்க வேண்டும்?

      அவன்தான் உங்கள் நெஞ்சத்தில்
      ஏற்கெனவே இருக்கின்றானே?

      அன்றாட கடமைகளை
      செயல்களை தான்தான்
      செய்கின்றோம் என்ற
      அகந்தையில்லாமல்
      ஆற்றி வந்தாலே போதும்
      அவன் உங்களிடம் வெளிப்படுவான்.

      இலக்கை அறிந்து கொண்டபின்
      மென்மேலும் நூல்களை
      கற்பதால் யாது பயன்?

      கற்க கற்க குழப்பமும்,
      தெளிவின்மையும்தான்
      அதிகமாகும்.

      இறைவனை அறிய
      எண்ணற்ற வழிகள்
      பாதைகள்.
      ஒன்றுக்கொன்று
      முரணானவை

      அவைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்த பின்
      முடிவை அடையும்வரை
      முயல்வதுதான் வெற்றிக்கு வழி.

      நம் வழியில் நாம் வெற்றி
      பெற்றதை மற்றவர்கள் கண்டால்
      தானும் அவ்வழியில் சென்று
      வெற்றியைஅடைய மக்கள்
      அவ்வழியில் செல்ல முயலுவர்

      காய் இயற்கையாகவே கனிந்தால்தான்
      இனிக்கும்
      அதை செயற்கையாக கனிய வைத்தால்
      அது புளிக்கும்.

      இறைஞானமும் அப்படிதான்.


      Delete
    5. @Pattabi Raman

      அன்புடையீர் தங்கள் நம்பிக்கை என்னவென்று எனக்குத் தெரியாது, என்னைப் பொறுத்த வரை பகவத் கீதையை உண்மையில் இறைவன் கொடுத்தது என நம்புகிறேன்.

      \\கடவுளை எதற்க்காக
      நினைக்க வேண்டும்?

      அவன்தான் உங்கள் நெஞ்சத்தில்
      ஏற்கெனவே இருக்கின்றானே? \\

      மன் மனா பவ மத பக்தோ

      மத்யாஜி மாம் நமஸ்குரு

      மாம் ஏவைஸ்யசி யுக்த்வைவம்

      ஆத்மாநாம் மத பராயணஹ [பகவத் கீதை-9.34]

      மன் மனா பவ மத பக்தோ

      மத்யாஜி மாம் நமஸ்குரு
      மாம் ஏவைஸ்யசி சத்யம் தே
      பிரதிஜானே பிரியோ அசி மே [பகவத் கீதை-18.65]

      இந்த இரண்டு பதங்களிலும் "மன் மனா " என்ற வார்த்தைகளில், இடையறாது என்னை நினைத்திரு என்று இறைவன் சொல்வதால் அவன் கட்டளையை ஏற்று அவனை எந்நேரமும் நினைத்திருக்க முயற்சி செய்கிறோம்!! ஆரம்பத்தில் இது கஷ்டம்தான் பத்தி வந்து விட்டால், நாமே நினைத்தாலும் இறைவனைத் தவிர வேறு எதைப் பற்றியும் நினைக்க மாட்டோம்.

      \\அன்றாட கடமைகளை
      செயல்களை தான்தான்
      செய்கின்றோம் என்ற
      அகந்தையில்லாமல்
      ஆற்றி வந்தாலே போதும்
      அவன் உங்களிடம் வெளிப்படுவான். \\

      தஸ்மாத் சர்வே ஷு காலே ஷு
      மாம் அனுஷ்மர யுத்திய சா
      மை அற்பித மனோ புத்திஹி
      மாம் எவைஸ்யசி அசம்சய ஹ [பகவத் கீதை-8.7]

      எனவே அர்ஜுனா நீ எந்நேரமும் என்னையே நினைத்திரு, அதே சமயம் உனது கடமையான போரிடுதளையும் செய்வாயாக.உனது செயல்கள் எனக்கு அர்ப்பணம் செய்யப்பட்டு, உன் மனம் புத்தி என் மேல் செலுத்தப் படுவதால் சந்தேகமின்றி என்னை வந்தடைவாய்.

      \\இலக்கை அறிந்து கொண்டபின்
      மென்மேலும் நூல்களை
      கற்பதால் யாது பயன்?

      கற்க கற்க குழப்பமும்,
      தெளிவின்மையும்தான்
      அதிகமாகும். \\ பகவத் கீதையைத் தவிர வேறு நூல்களை நான் படிப்பதில்லை ஐயா.

      \\இறைவனை அறிய
      எண்ணற்ற வழிகள்
      பாதைகள்.
      ஒன்றுக்கொன்று
      முரணானவை\\ குழப்பம் வேண்டாம் பகவத் கீதை ஒன்றே போதும்.


      \\காய் இயற்கையாகவே கனிந்தால்தான்
      இனிக்கும்
      அதை செயற்கையாக கனிய வைத்தால்
      அது புளிக்கும்.

      இறைஞானமும் அப்படிதான்.\\

      இறைவனைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆவல் மனதில் எழுவதே நமது மனம் கனிந்தற்கான ஆதாரம். மேலும் மனிதப் பிறவி எளிதில் கிடைப்பதல்ல. கோடான கோடான வாய்ப்புகளில் ஒன்று தான் இது, இதைத் தவற விடாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பிறவியில் மட்டும்தான் இறைவனைப் பற்றி அறிய முடியும். காலம் தாமதியாமல் உடனே இறைவன் வழியில் நடக்க ஆரம்பிக்க வேண்டும். ஐந்து வயதே போதும் பக்தி செய்ய என பிரகலாதன் கூறுகிறார், ஏனெனில் பிறந்த அடுத்த கணத்தில் இருந்தே நமக்கு சாகும் வயதாகி விட்டது என்று பொருளாம்!!

      Delete
    6. சாவைப்பற்றி ஏன் நினைக்கிறீர்கள் ?
      சாவு இந்த உடலுக்குத்தான்என்று
      பகவான் கண்ணன் கீதையில்
      நன்றாக விளக்கி விட்டான்

      நான் ஆத்மா என்ற எண்ணம் வரும்வரைக்கும்
      நான் இந்த உடல் என்ற எண்ணம் போகின்றவரைக்கும்
      இந்த பிறப்பும் இறப்பும் நம்மை துன்பத்தில்
      ஆழ்த்திக்கொண்டுதான் இருக்கும்

      என்னுடைய கருத்தை கீதையை கொண்டு
      தெளிவாக விளக்கியுள்ளீர்கள்
      நன்றி.

      இறைவனை எளிதாக அடையும் வழிபற்றி நான் ஒரு பதிவில் என் கருத்தை பதிவு செய்துள்ளேன்
      என்னுடைய ramarasam http://tamilbloggersunit.blogspot.in/2012/10/blog-post_16.html வலைப்பதிவை உங்களுக்கு நேரம் இருப்பின் காண வேண்டுகிறேன்
      நன்றி.

      Delete
  19. பதிவர் தன் கருத்துக்களில் நிலையாக நிற்கிறார் போலும்.

    முன்செய்த கருமவினைகளை ஒருவன் அனுபவிப்பான்; இறைவன் தலையிட மாட்டார் என்பதை இந்துமதம் ஏற்றுக்கொள்ளும். ஏனென்றால் கருமவினை என்பது இம்மதத்தத்துவங்களில் இன்றியமையொன்று. பிறமதங்கள் ஏற்கவில்லை. கருமவினைகளையும் கட்டுப்படுத்துபவன் என்பதால் நாம் அவனை எல்லா வல்ல இறைவன் என்கிறோம்.

    கடவுள் நம்பிக்கையில்லாதவருக்கு மகிழ்ச்சியில்லை என்கிறார். நாத்திகரொருவர் தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றவுடன். அவர்கள் உண்மை மகிழ்ச்சியடைய மாட்டார்கள் என்கிறார்.

    மகிழ்ச்சியெனபது மனநிலை. எவருக்குமே சாத்தியம். அவர்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையமையும்போது. ஆன்மிகத்தால் வரும் மகிழ்ச்சியே போலி. இல்லாதவொன்றை இருப்பதாக நினைத்து தான் மகிழ்ச்சியடைந்துவிட்டதாக கற்பனை.

    எல்லாரும் நன்றாக வாழலாம் என்பதே இறைவன் விருப்பமென்றால், அவனுக்கு நாத்திகன்-ஆத்திகன் என்ற வேறுபாடே கிடையாது. பிறர் வாழ்வை அழித்துத் தன் வாழ்வைப் பெறுக்கக்கூடாது. தன் உழைப்பில் வாழ்ந்து அது தரும் மகிழ்ச்சியைப் பெற்றால் போதும். இதைத்தான் இறைவன் எதிர்ப்பார்க்கிறான் என்றூ சொல்லலாம். கணபதி ஹோமம் நடத்து, குர்பானி கொடு; ரோசாரியைப்புரட்டு என்றெல்லாம் இறைவன் சொன்னதாகச் செய்வது, அல்லது அவனுக்கு அவை விருப்பம் நம்மைக்கவனிப்பான் என்பதெல்லாம் மனிதனின் மனோ விஹாரங்கள் !

    ReplyDelete
    Replies
    1. \\முன்செய்த கருமவினைகளை ஒருவன் அனுபவிப்பான்; இறைவன் தலையிட மாட்டார் என்பதை இந்துமதம் ஏற்றுக்கொள்ளும்.\\ இது பொதுவான விதி. தன்னை 100% சரணடைந்தவர்களின் பாவங்கள் அத்தனையும் நீக்கிவிடுவதாதாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதை 18.66 யில் கூறுகிறார்.

      சர்வ தர்மான் பரித்யஜ்ய
      மாம் ஏகம் சரணம் வ்ரஜ
      அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ
      மோக்ஷயிஷ்யாமி மா சுசஹ

      ஹிந்து முஸ்லீம் கிரிஸ்தவன் என்ற எல்லா கன்றாவிகளையும் ஒழித்துவிட்டு என்னைச் சரணடைவாயாக உன் பாவங்களைப் பற்றி கவலைப் பட வேண்டாம், அவை அனைத்தையும் நான் நீக்குகிறேன்.

      \\ஏனென்றால் கருமவினை என்பது இம்மதத்தத்துவங்களில் இன்றியமையொன்று. பிறமதங்கள் ஏற்கவில்லை. கருமவினைகளையும் கட்டுப்படுத்துபவன் என்பதால் நாம் அவனை எல்லா வல்ல இறைவன் என்கிறோம்.\\ எல்லாம் வல்லவன் என்பதன் பொருள் எல்லாமும் அவனுக்கு சாத்தியம் என்பதால், கர்மவினைகளைப் கட்டுப் படுத்துவது அவன் வைத்த வேலைக்கார பயல்களே பார்த்துக் கொள்வார்கள்.

      \\கடவுள் நம்பிக்கையில்லாதவருக்கு மகிழ்ச்சியில்லை என்கிறார். நாத்திகரொருவர் தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றவுடன். அவர்கள் உண்மை மகிழ்ச்சியடைய மாட்டார்கள் என்கிறார்.மகிழ்ச்சியெனபது மனநிலை. எவருக்குமே சாத்தியம். அவர்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையமையும்போது. ஆன்மிகத்தால் வரும் மகிழ்ச்சியே போலி. இல்லாதவொன்றை இருப்பதாக நினைத்து தான் மகிழ்ச்சியடைந்துவிட்டதாக கற்பனை.\\ மகிழ்ச்சி என்பது இது தான் என்று ஆளாளுக்கு எதையாவது நினைத்துக் கொள்ளலாம், உண்மையில் எது என்று பலருக்கும் தெரியாது. அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு பணம், பெண்கள், சொத்து சுகம் என்று நாம் ஆசைப் படும் அத்தனையும் இருக்கிறது. இருந்தாலும் இந்தியாவில் இருந்து செல்லும் ஆன்மீகவாதிகள் அத்தனை பேரும் [ஒருஜினலோ போலியோ]அங்கே ஆயிரக் கணக்கில் சிஷ்யர்களை சேர்த்து கொடிகட்டி வாழ முடிந்தது எப்படி? அவங்ககிட்ட இருக்கும் அத்தனையிலும் அவங்க திருப்தியடையல என்றுதானே அர்த்தம்? இதுக்கு மேல வேற என்னதான் பூமியில இருந்து கொடுத்து திருப்தியடைய வைக்க முடியும்? எனவே அந்த மிஸ்ஸிங் ஒன்னு தான் இறைவன் மேல் அன்புகொள்ளல், அது வரும் வரைக்கும் வேற எதுவும் நமக்கு திருப்தியளிக்காது.

      \\எல்லாரும் நன்றாக வாழலாம் என்பதே இறைவன் விருப்பமென்றால், அவனுக்கு நாத்திகன்-ஆத்திகன் என்ற வேறுபாடே கிடையாது. பிறர் வாழ்வை அழித்துத் தன் வாழ்வைப் பெறுக்கக்கூடாது. தன் உழைப்பில் வாழ்ந்து அது தரும் மகிழ்ச்சியைப் பெற்றால் போதும். இதைத்தான் இறைவன் எதிர்ப்பார்க்கிறான் என்றூ சொல்லலாம். கணபதி ஹோமம் நடத்து, குர்பானி கொடு; ரோசாரியைப்புரட்டு என்றெல்லாம் இறைவன் சொன்னதாகச் செய்வது, அல்லது அவனுக்கு அவை விருப்பம் நம்மைக்கவனிப்பான் என்பதெல்லாம் மனிதனின் மனோ விஹாரங்கள் !\\ படைப்பு என்ற ஒன்று இருந்தால், படைத்தவன் ஒருவன் இருப்பன், அதற்க்கு ஒரு நோக்கமும் இருக்கும். உலகைப் படைத்த இறைவன் நம்மை சும்மா விட்டுவிடவில்லை, நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தகவல்களையும் கொடுத்துல்லான். நீங்கள் ஒரு எந்திரம் வாங்கினால் அதனுடன் ஒரு தகவல் புத்தகமும் வருமே அதுபோல. இது காலம், தேசம், சூழல் என பலவகையில் கிடைக்கிறது. நாமாக கற்பனை செய்தால் நம்முடைய கரை படிந்த மனதுக்கு சரியான பாதை தெரியாது. எனவே முன்னோர்கள், மகான்கள் காட்டிய வழியில் நடப்பதே சாலச் சிறந்தது. இங்கே வாழ்வது வாழ்க்கையே அல்ல!! ஏனெனில் மரணம் வந்து உங்களை உங்கள் பிரியமான உறவுகளிடமிருந்து கதறக் கதற பிரிக்கும். [ஒன்னு நீங்க அல்லது அவங்க யார் போனாலும் கதறல்தான்]. இருக்கும் போது நோய் வந்து தாக்கும், அப்புறம் முதுமை என்பது இருப்பதிலேயே கொடுமையான, மருந்தே இல்லாத நோய். இதை ஒன்னொன்னா அனுபவிக்கும்போது தான் தெரியும். வாழும்போதும் சுனாமி வரும், புயல் வரும், பக்கத்து வீட்டுக் காரன் தொல்லை பண்ணுவான், சில சமயம் நம் மனசே நம்மை இம்சை பண்ணும். சாவரதுன்னு முடிவாயிடிச்சு, இந்த பிரச்சினைக்கெல்லாம் ஒரு தீர்வோட செத்தா என்ன? யோசிச்சுப் பாருங்க கீதை படிங்க. வாழ்க்கையை வெற்றியாக்கிகோங்க.

      Delete
    2. \\கணபதி ஹோமம் நடத்து, குர்பானி கொடு; ரோசாரியைப்புரட்டு என்றெல்லாம் இறைவன் சொன்னதாகச் செய்வது, அல்லது அவனுக்கு அவை விருப்பம் நம்மைக்கவனிப்பான் என்பதெல்லாம் மனிதனின் மனோ விஹாரங்கள் !\\ இதையெல்லாம் யாரோ செய்யச் சொல்றாங்களோ தெரியவில்லை, கலி யுகத்தில் நீங்கள் பகவானின் நாமங்களைச் சொல்லிவந்தாலே போதும், தியானம் செய்தல், யாகம் செய்தல், கோவில்களுக்குச் செல்லுதல் என அத்தனையும் இதில் அடங்கும்.

      kaler dosha-nidhe rajann

      asti hy eko mahan gunah

      kirtanad eva krishnasya

      mukta-sangah param vrajet

      ஸ்ரீமத் பாகவதம் 12.3.51

      சுகமுனி பரீஷித்து மகாராஜாவுக்குச் சொல்கிறார்: வேந்தே, இந்தக் கலியுகத்தில் கடல் அளவுக்கு தீய பண்புகள் மலிந்து போயிருந்தாலும் மற்ற யுகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பும் உள்ளது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் பெயர்களை உரக்கப் பாடிவந்தாலே போதும் வாழ்வின் லட்சியம் நிறைவேறும், வீடு பேரு கிட்டும்.

      Delete
  20. @ passerby

    முதல் வருகைக்கும் தங்கள் கருத்தை நேர்த்தியாக வைத்தமைக்கும் நன்றி நண்பரே............

    ReplyDelete