ஸ்பேஸ் ஷட்டில் [Space Shuttle] அறிமுகம்
சர்வதேச
விண்வெளி மையத்திற்கு [ISS-International Space Station] ஆட்கள், கருவிகள்
மற்றும் பொருட்கள் கொண்டு செல்லுதல், விண்வெளியில் நிலை நிறுத்தப்
பட்டிருக்கும் ஹப்பிள் டெலஸ்கோப்பை [Hubble Telescope] பழுது பார்க்க
ஆட்களை அனுப்புதல், மனிதன் ஏவிய ஆயிரக் கணக்கான செயற்கைக் கோள்களில்
[Satellites] ஏதாவது செயலிழந்து போனால் யார் தலைமேலும் விழாமல் மீட்டு
வருதல் போல பல நோக்கங்களுக்காக திரும்பத் திரும்ப உபயோக்கியப் படும்
வகையில் வடிவமைக்கப் பட்ட விண்வெளி ஓடமே ஸ்பேஸ் ஷட்டில் [Space Shuttle]
ஆகும்.
எவுதளத்திற்க்குக் கொண்டுவரப்படும் ஷட்டில் [Shuttle]. முன்னால் தெரிவது ஆர்பிடர், இதில்தான் ஆட்கள், கருவிகள், உணவு மற்றும் பொருட்கள் இருக்கும், விண்வெளிக்குச் சென்று இது மட்டுமே பூமிக்குத் திரும்பும். அதன் பின்னால் இருபுறமும் வெள்ளை நிறத்தில் உள்ளவை திட எரிபொருள் பூஸ்டர்கள், இவைதான் ஆர்பிட்டரை மேலே 400 கி.மீ உயரத்திற்கு கொண்டு போய் மணிக்கு 28,000 கி,மீ. வேகத்தில் செலுத்தத் தேவையான 71% உந்துதலைத் தருகிறது, இரண்டு நிமிடத்தில் நாற்பதைந்து கி.மீ. உயரத்தை அடைந்த பின்னர் இவை எரிந்து முடிந்து கடலில் பாரசூட்டுடன் விழும் பின்னர் மீட்கப் படும். ஆரஞ்சு நிறத்தில் உள்ளது திரவ எரிபொருள் டேன்க், இதில் ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் திரவநிலையில் வைக்கப் பட்டிருக்கும், இவை ஆர்பிடரில் உள்ள மூன்று எஞ்சின்களுக்கு சப்ளை ஆகும். அங்கு இரண்டும் சேர்ந்து வினைபுரிந்து நீராவியாக மாறி அதீத வெப்பத்துடன் வெளியேறும்போது ஏற்ப்படும் உந்துதலால் ஷட்டில் மேலே செல்லும், மொத்த உந்துதலில் 29% .இதிலிருந்து கிடைக்கிறது. எட்டு நிமிடத்தில் இதன் வேலை முடிந்ததும் தனியாகக் கலண்டு புவியின் வாயு மண்டலத்தில் நுழைந்து காற்றின் உராய்வால் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிவிடும். இந்த டேங்கைத் தவிர மற்ற அனைத்தையும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். இவை அத்தனையும் சேர்த்து மொத்த எடை இரண்டாயிரம் டன்கள் |
பைக், கார், பஸ், ரயில், கப்பல், விமானம் என மனிதனால் வடிவமைக்கப்
பட்டதிலேயே எல்லாவற்றையும் விட தொழிநுட்பத்தில் மிகவும் சிறந்ததும்,
பல்லாயிரம் மடங்கு சிக்கலானதுமான போக்குவரத்து வாகனம் இதுவாகும்!! ஆறு
நாட்கள் முதல் இரண்டு வாரங்கள் வரை விண்வெளியில் இருந்துவிட்டு
பத்திரமாக பூமிக்குத் திரும்பும் இந்த ஓடம் ஒவ்வொன்றும் நூறு முறைக்கும்
மேல் திரும்பத் திரும்ப பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டவை. 1981
ஆண்டிலிருந்து இதுவரை 135 முறை விண்வெளிக்கு ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்ற
இவ்வகை ஓடங்கள், இரண்டு முறை விபத்துக்குள்ளானது, அதில் ஒன்று [கொலம்பியா,
2003] பயண முடிவில் தரை இறங்குவதற்கு சற்று
முன்னரும், மற்றொன்று [சேலஞ்சர், 1983] புறப்படும்
போதும் வெடித்துச் சிதறின. கொலம்பியா விபத்தில் தான் இந்திய
வம்சாவளி விண்வெளி
வீராங்கனை கல்பனா சாவ்லா உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இதில் ஆர்பிட்டரை பூமிக்கு மேலே 400 கி.மீ உயரத்தில் கொண்டு போய் மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் அதன் பாதையில் செலுத்தத் தேவையான 71% உந்துதலைத் தரும் திட எரிபொருள் பூஸ்டர்கள் SRB. இவற்றை இன்னமும் கொஞ்சம் பருமனாக இருந்தால் தேவலையே என என்ஜினீயர்கள் விரும்பினார்கள். ஆனால் அது முடியவில்லை. என்ன காரணம்?
இதில் ஆர்பிட்டரை பூமிக்கு மேலே 400 கி.மீ உயரத்தில் கொண்டு போய் மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் அதன் பாதையில் செலுத்தத் தேவையான 71% உந்துதலைத் தரும் திட எரிபொருள் பூஸ்டர்கள் SRB. இவற்றை இன்னமும் கொஞ்சம் பருமனாக இருந்தால் தேவலையே என என்ஜினீயர்கள் விரும்பினார்கள். ஆனால் அது முடியவில்லை. என்ன காரணம்?
கடமை முடிந்ததும், கடலில் விழும் SRB |
கடலில் இருந்து மீட்கப் பட்டு கரைக்கு கொண்டுவரப்படும் SRB |
இவை
அமெரிக்காவில் யூட்டா [Utah ] என்னுமிடத்தில் அமைந்துள்ள தியோகோல்
[Thiokol] என்னும் நிறுவனத்தால் தயாரிக்கப் படுகிறது. அங்கிருந்து வரும்
ரயில் பாதை ஒரு மலையின் பாறைகளைக் குடைந்து உருவாக்கப் பட்ட சுரங்கப்
பாதையில் நுழைந்து வரவேண்டும். அந்த ரயில் பாதையின் அகலம் 4 அடி 8.5
இன்ச்கள். சுரங்கப் பாதை இதை விடச் சற்று அகலமாக இருக்கும் அவ்வளவுதான்.
எனவே இஷ்டத்துக்கும் இதை பருமனாக்க முடியாது.
பகுதிகளாக இரயிலில் வந்த SRBயின் பாகங்கள் ஏவுதளத்திற்கு அனுப்பவதற்கு முன்னர் இணைக்கப் படுகின்றன. |
அதுசரி, ரயில் பாதையின் அகலம் 4 அடி 8.5 இன்ச் என்றால் என்னைய்யா கணக்கு?
இது என்ன நம்பர் எதிலும் சேராத மாதிரி இருக்கே? அமெரிக்காவில் ரயில்
பாதையை அமைத்தவர்கள் இங்கிலாந்தில் இருந்து வந்து குடியேறியவர்கள், ஆகையால்
அங்கே எப்படி அமைத்தார்களோ அதையே இங்கும் பின் பற்றுகிறார்கள்.
அப்போ, இங்கிலாந்தில் ஏன் அந்த அகலத்தை ரயில் பாதைக்குத் தேர்ந்தெடுத்தார்கள்? அங்கே
ரயில் பாதையை வடிவமைத்தவர்கள், அதற்க்கு முன்னர் இருந்த டிராம் வண்டிகளை
செய்துவந்தவர்கள், அவர்களிடமிருந்த கருவிகள், தட்டு முட்டுச் சாமான்களை
வைத்து அந்த வண்டியின் சக்கரங்களுக்கிடையே என்ன தூரமோ அதே அகலத்தில் தான்
பாதையை அமைக்க முடியும்
இங்கிலாந்தின் பாரம்பரிய டிராம் வண்டி. |
அதுசரி, அந்த சாரட்டு வண்டி சக்கரங்களுக்கிடையே இருக்கும் தூரத்தை எதை வச்சு முடிவு பண்ணினாங்க? இங்கிலாந்தில் நெடுந்தூர மண் சாலைகளில் உள்ள சக்கர வழித்தடங்கள் [ruts ] அப்படி இருந்தன, அந்த இடைவெளியை மாற்றினால் சக்கரம் உடைந்து போகும், ஆகையால் அந்த இடைவெளியிலேயே சக்கரங்களை வடிவமைத்தனர்.
ஆஹா........... அப்ப அந்த மண் சாலைகள் ஏன் அந்த மாதிரி அமைக்கப் பட்டது?
ஐரோப்பாவை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட ரோமாபுரிப் பேரரசு மன்னர்கள்,
அவர்களின் தளபதிகள், போர் வீரர்கள் எல்லோரும் தங்கள் வண்டியில் இரண்டு
குதிரைகளைப் பூட்டி ஒட்டினார்கள், அவர்கள் அக்குதிரைகளின் பின்புற
அகலத்துக்குச் சமமான இடைவெளி விட்டு சக்கரங்களை அமைத்தார்கள், ஐரோப்பா
முழுவதும் சாலைத் தடங்கள் இந்த அகலத்திலே அமைந்தது, எனவே எல்லோரும் தங்கள்
வாகனகளுக்கும் இதே இடைவெளி விட்டு சக்கரங்களை அமைக்க வேண்டி வந்தது.
அப்போ,
உலகிலேயே அட்வான்சான ஒரு போக்குவரத்து முறையை முடிவு செய்தது இரண்டாயிரம்
வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த குதிரைங்க ரெண்டோட பின் புறத்து சைசுதானா?
என்ன கொடுமை சார் இது?
இந்தப் பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு சொடுக்கவும், நன்றி!!
சரி, குதிரை நம்ம ஊர்ல இல்லை. காளை மாடு இருந்துச்சுனு வச்சுக்கோங்க. ஏன் நம்மாளுக ஓட்டீன மாட்டுவண்டில உள்ள மாடுகளுக்கு இடையில் உள்ள இடைவெளி பத்தி சொல்லாமல், குதிரைகளை பத்தி சொல்லி, இதையும் வெள்ளைக்கரந்தான் கண்டுபிடிச்சான், நமக்கு புத்தி இல்லைனு சொல்றாப்பிலே சொல்றீங்கனு, நான் குதற்கம் பேசலாம்னு வந்தேன் :)
ReplyDeleteநம்மாளு அதுக்கும் என்ன சொல்லுவானுக தெரியுமா? மாட்டை வச்சு நம்ம கண்டுபிடிச்சதை, வெள்ளைக்காரன் குதிரைக்கு அப்ளை பண்ணிட்டு, நமக்கு க்ரிடிட் கொடுக்காம விட்டுவிட்டான் னு! :)
கிரிகெட்டை நம்ம கிட்டி புல்லு விளையாட்டை வச்சுதான் கண்டு புடிச்சின்னு சொன்னவங்களாச்சே!!
Delete***இவை அமெரிக்காவில் உடா [Utah ] ***
ReplyDeleteஅந்த மாநிலத்தை "யூட்டா"னுதான் உச்சரிக்கனும்ங்க, தல! :-)))
யூட்டா.....மாத்திட்டேன் வருண். [இது மாதிரி ஏதாவது தப்பா போட்ட அப்பப்போ வந்து கரெக்ட் பண்ணிடுங்க வருண்!!]
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete***Interests நாத்தீகர்களுக்கும், போலி ஆன்மீகவாதிகளுக்கும் ஆப்பு வைத்தல்.***
ReplyDeleteநீங்க என்ன ப்ரஃபைலயே என்னோட வம்பு இழுக்குறீங்க? :-))))))
என் அலுவலகத்தில் என்னோட ஃபிரீக்குவன்சிக்கு மேட்ச் ஆகும், மிக நெருக்கமான நண்பர் ஒரு பக்கா நாத்தீகர் தான். இங்கேயும் என்னவே தெரியலை நீங்க, சார்வாகன் என்று என்னோட அன்பாகப் பழகுபவர்கள் நாத்தீகர்களாகவே இருக்கிறார்கள். எப்படின்னுதான் புரியலே!!
Deleteநானும் இந்த நாட்டுக்கு வந்த புதிதில் "ஊட்டா" னுதான் சொல்லுவேன். அப்புறம் இங்கே உள்ளவாதான் (அமெரிக்கர்கள்) சொன்னா அதை "யூட்டா" னுதாண்டா சொல்லனும் "அம்பி"னு! :-))
ReplyDeleteஉங்க ஊரில் (பெங்களூரில்) "ஊட்டா"னா சாப்பாடு னு அர்த்தம் இல்லை?
ஏன்றீ ஊட்டா மாடுத்தீரா? :)))
உண்மைதான் வருண்!!
Delete|| அப்போ, உலகிலேயே அட்வான்சான ஒரு போக்குவரத்து முறையை முடிவு செய்தது இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த குதிரைங்க ரெண்டோட பின் புறத்து சைசுதானா? என்ன கொடுமை சார் இது?||
ReplyDeleteஇல்லை..இது இரண்டு குதிரைகளைப் பூட்டப் பயன்படுத்திய நுகத்தடி(குதிரைகளின் கழுத்தை இணைக்கும் முன்புற குறுக்குச் சட்டம்)யின் அகலத்தைப் பொறுத்தது. இதை இன்னும் அகலமாகச் செய்து இரண்டு குதிரைகளை இரண்டு முனையில் பொறுத்தினால், வண்டியின் சக்கரங்களுக்கான குறுக்கு அச்சையும் இன்னும் அகலமாகச் செய்திருக்க முடியும்.
ஆனால் வண்டியின் வேகம் மட்டுப் படும். அந்தக் காலத்தில் ஒரு ஆப்டிமம் நிலைக்காக இந்த அகலத்தைப் பயன்படுத்தியிருக்கலாம்.
@அறிவன்
Deleteமுதல் வருகைக்கு நன்றி நண்பரே. பின்னூட்டங்களை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறது தங்கள் பின்னூட்டங்கள்!! முழுவதும் படித்து சொல்ல வேண்டியதை 'நச்' என்று சொல்கிறீர்கள். தங்கள் வருகை மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து வருகை தாருங்கள்!!
நல்ல பதிவு சகோ,
ReplyDeleteபதிவராகி விட்டிக்ரள?? சொல்லவே இல்லை!! வாழ்த்துக்கள் !
அருமையாக விவரம் திரட்டி எளிய விதத்தில் அளித்ததற்கு பாராட்டுகள்.
சில மேம்படுத்தல் ஆலோசனை!!
1.பதிவில் பெரும்பாலும் அனைத்து எழுத்துக்களும் ஒரே ஃபான்ட்டில் வருமாறு பார்த்து கொள்ளுங்கள்.
2. ஜஸ்டிஃபை என்ப்படும் நேராக்குவதையும் செய்தால் பதிவு பார்க்க நன்றாக் இருக்கும்.இது ப்ளாக்கரின் உண்டு.வேர்ட் பிரசில் இல்லை!!
3.அறிவியல்,வரலாறு பதிவுகளில் மட்டும் மேலதிக தகவல்களுக்கு சுட்டி கொடுங்கள்[
பதிவு இடுதல் கடினமே.தொடக்கம் நீங்கள் என்னை விட எவ்வளவோ பரவாயில்லை .நமக்கு முதலில் தட்டுத் தடுமாறி ப்ளாக்கரை அறிவதே முதல் பணி .வாழ்க வளர்க
நன்றி
@ சார்வாகன்
Deleteதங்களுக்குத் தெரியாதா?!! அன்று இக்பால் செல்வன் தளத்தில், நான் பொதுத் தளமாக இருப்பதால் தங்களுடன் வாதிடுகிறேன் இதுவே உங்கள் தளமாக இருந்தால் விவாதமே செய்ய மாட்டேன் என்று எழுதியிருந்தீர்களே, ஆகையால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைத்தேன்!! இக்பால் செல்வன் நான் முதல் பதிவு போட்ட சில நிமிடங்களிலேயே நான் தெரிவிக்காமலேயே வந்து பின்னூட்டமிட்டிருந்தார். எனவே தங்களுக்குத் தெரியும், ஆனால் தவிர்க்கிறீர்கள் என நினைத்தேன்!!
தாங்கள் சொன்ன படி Justify செய்துவிட்டேன், தலைப்பைத் தவிர பதிவு முழுவதும் ஒரே எழுத்துருக்கள் அளவு தான் பயன் படுத்தியிருக்கிறேன், கேள்விகளை மட்டும் தடிமனாக்கி [Bold] இருக்கிறேன், அவ்வளவுதான். படங்களின் கீழே எழுத்துருக்கள் சற்று சிறியதாக இருக்கும், அது default எழுத்துரு ஆகும், நான் மாற்றவில்லை.
இந்த பதிவின் கதையை நூற்றுக் கணக்கான இணைய தளங்கள் தருகின்றன, அப்படி தேடிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரே ஒரு தளம் மட்டும் இதற்க்கு எதிரான கருத்தைத் தெரிவித்திருந்தார்கள். படித்தேன் புரியவில்லை, வாசகர்கள் யாராவது படித்து சொல்லுவார்கள் என லிங்கு மட்டும் கொடுத்துவிட்டேன்!!
ஜெயதேவ்,
ReplyDeleteமுதல்முறையாக உங்கள் பதிவை வாசித்தேன். சிறப்பான கட்டுரை. நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
//நாத்தீகம் நல்லதல்ல, ஆனால் போலி ஆன்மீகம் ஆபத்தானது.//
ஆபத்தானது மட்டுமல்ல. மகா ஆபத்தானது. நீங்கள் போட்டிருக்கும் கடவுள் படத்தையும், பெயரையும் பார்த்து நீங்களும் ஒரு போலி ஆன்மீகவாதி என நினைத்து உங்கள் பதிவைப் படிக்காமல் விட்டுவிட்டேன். இனிமேல் தொடர்ந்துவந்து படிக்கிறேன். வாழ்த்துக்கள்.
@ குட்டிபிசாசு
Deleteதங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே!! தங்கள் வருகைக்கு நன்றி, தொடர்ந்து ஆதரிக்க இருப்பதற்கும் நன்றி!!
Superbly written post, with interesting information. Thanks.
ReplyDelete@Pattu Raj
ReplyDeleteThanks for coming and encouraging me Raj, pl visit again!!
இரு சக்கரத்திற்கு இடைப்பட்ட தொலைவை நிர்ணயத்த ஹார்ஸ் பேக்.. வருண் சொன்னமாதிரி ஏன் மாட்டு பேக் ஆக இருக்கக்கூடாது. ஆமா சதுரங்கத்தையே செஸ் -ஆ மாத்துனவங்களாச்சே வெளிநாட்டுக்காரங்க.
ReplyDelete