மணமகன்களை விற்கும் கடை ஒன்று புதிதாகத் திறக்கப் பட்டது. பெண்கள் அந்தக் கடைக்குப் போய் அங்கே உள்ளவர்களில் தனக்குப் பிடித்த மணமகனை தேர்வு செய்து வாங்கிக் கொள்ளலாம்.
அந்தக் கடையில் மொத்தம் ஆறு தளங்கள், ஒவ்வொரு தளமாக மேலே செல்லச் செல்ல அந்தந்தத் தளத்தில் கிடைக்கும் மணமகன்களின் நற்க்குணங்களும் அதிகரித்துக் கொண்டே செல்லும், ஆனால் ஒன்னு, மேலே போயிட்டா கடையை விட்டு வெளியே வரலாமே தவிர கீழே வரப்படாது, இது தான் கண்டிஷன்.
அந்தக் கடையில் மொத்தம் ஆறு தளங்கள், ஒவ்வொரு தளமாக மேலே செல்லச் செல்ல அந்தந்தத் தளத்தில் கிடைக்கும் மணமகன்களின் நற்க்குணங்களும் அதிகரித்துக் கொண்டே செல்லும், ஆனால் ஒன்னு, மேலே போயிட்டா கடையை விட்டு வெளியே வரலாமே தவிர கீழே வரப்படாது, இது தான் கண்டிஷன்.
தனக்கேத்த மணமகனைத் தேட [வாங்க] இந்தக் கடைக்கு ஒரு பெண் போகிறாள்.
முதல் தளம் இந்த அறிவிப்போடு வரவேற்கிறது:
Floor 1- வேலைக்குச் செல்லும் மணமகன்கள் இங்கே உள்ளார்கள்.
இதைப் படிச்சதும் "ம் ... இத்தனை நாளா ஒரு வெட்டிப் பயலோடு சுத்திகிட்டு இருந்தோம், அதைக் காட்டிலிலும் இது பரவாயில்லைதான்", -ன்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு, "இருந்தாலும் அடுத்த ஃபுளோர்ல இதை விட பெட்டரா என்ன இருக்குன்னு போயி பார்ப்போமே" ன்னு இரண்டாவது தளத்துக்கு போகிறாள்.
Floor 2 – வேலைக்குச் செல்லும் வாலிபர்கள், இவர்களுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம் அவர்களை அன்போடு கவனித்துக் கொள்பவர்கள்.
"ஆஹா..... சூப்பர், இவனுங்களும் ஒ.கே தான். அதுசரி மூணாவது ஃபுளோருக்கும் போய்ப் பார்ப்போமே........."
Floor 3 – "இவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள் குழந்தைகளையும் அன்போடு கவனித்துக் கொள்வார்கள், மேலும் ஹிருத்திக் ரோஷன், சல்மான்கான் மாதிரி லுக்காகவும் இருப்பார்கள்"
“ம்ம்ம்ம்ம்ம்........ ரொம்ப டெம்ப்டிங்கா இருக்கே......... பரவாயில்லை, அடுத்த ஃபுளோரையும் பாத்திடுவோம்.”
Floor 4 – இவங்க வேலைக்கும் போவாங்க குழந்தைகளையும் பார்த்துக்குவாங்க, சினிமா ஸ்டார் மாதிரி குட் லூகிங், வீட்டு வேலையிலும் உதவியா இருப்பாங்க.
“வாவ்..... இதைவிடவும் பெட்டரா அடுத்த ஃபுளோர்ல என்ன இருக்குன்னும் பார்த்திடுவோமே" அப்படின்னு லிப்ட்ல அடுத்த தளத்துக்கு போகிறாள்.
Floor 5 – இங்கே வேலைக்குச் செல்லும், குழந்தைகளை கவனித்துக் கொள்ளும், அழகான, வீட்டு வேலையிலும் உதவியாய் இருக்கும், கொஞ்சம் ரொமான்ஸ் அதிகமான ஆடவர்கள் கிடைப்பார்கள்.
“ஆ...... கடவுளே, என்னால தாங்க முடியல, அடுத்த தளத்துல இன்னும் என்ன இருக்குதோ தெரியலையே" என்று ஆறாவது ஃபுளோருக்குச் செல்கிறாள்.
Floor 6 – "வாங்கம்மா வாங்க......நீங்கதான் இந்த தளத்தோட 345,67,89,012 -வது விசிட்டர்........... இங்க மணமகன்கள் யாரும் இல்லை, ஒரு பெண் எதிலுமே திருப்தியடையமாட்டாள் என்பதற்கான நிரூபணம் தான் இது, கடைக்கு வந்ததற்கு நன்றி, போயிட்டு வாங்கன்னு ஒரு எலக்ட்ரானிக் போர்ட் காமிச்சதாம்!!
திருந்துங்கையா........... திருந்துங்க............ நன்றி: வெங்காயம் பிளாக் ஸ்பாட். |
கேட்ட கதையாக இருந்தாலும் கதை நல்ல கதை. பெண்களின் மனப் பாங்கைக் காட்டும் கதை.
ReplyDeleteஇந்தப் பதிவையே உங்க Feedback -ஐ வச்சு தான் போட்டிருக்கேன் சார்!!
Deleteநன்றி, தாஸ்.
Deleteஇந்த பதிவில் நீங்கள் போட்ட போட்டோவை பார்த்ததும் திருப்தி அடைந்த பெண்கள் கூட திருப்தி அடையாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம் இந்த மாதிரி அழகான போட்டோவை போட்டு ஆண்களின் மனதை ஏங்க வைத்தற்கும் பெண்கள் மனதை மேலும் திருப்த்தி அடையாமல் இருக்க செய்தற்கும் எனது கண்டணங்கள் நண்பரே
ReplyDelete@Avargal Unmaigal
Deleteவாவ்.... பொண்ணு படங்கள் பிடிச்சிருக்கா.............!! ஆண்டவன் படச்சான்...........அத கூகுலாண்டவன் குடுத்தான், நாம போட்டோம்..... அவ்வளவுதான்!!
நீங்க 18+ னு தலைப்பில் இட்டால், அது சூடானாலும் முகப்பில் தமிழ்மணத்தில் தெரியாது. 18 வை தலைப்பில் தவிருங்க, ஜெயவேல் :)
ReplyDeleteஎதிர் பார்த்து வந்து எமாந்துட்டா என்ன பண்றது வருண், ஏற்கனவே எசகு பிசகான தலைப்பா போச்சே...... கருவிகிட்டே போக மாட்டாங்களா?
Deleteஏமாற்றமடைந்தால் அது அவங்க "புத்திக்கூர்மை", தலையெழுத்துனு போக வேண்டியதுதான். நீங்க என்ன செய்வீங்க, அதுக்கு? நீங்க சத்தியமா இல்லைனு சொன்னாலும், சும்மா சொல்றீங்கனு நெனச்சுக்கிட்டு வந்துடுவாங்க :)))
Deleteமத்த பதிவுகளை விட இது தான் ஓஹோன்னு ஓடுது !! ஹி.....ஹி.....ஹி.....
Delete***மத்த பதிவுகளை விட இது தான் ஓஹோன்னு ஓடுது !! ஹி.....ஹி.....ஹி.....***
ReplyDeleteபதிவுலக மாக்களைப் பத்தி "பதிவராக" இப்போத்தான் கற்க ஆரம்பிச்சு இருக்கீங்க!!! :)))
***இங்க மணமகன்கள் யாரும் இல்லை, ஒரு பெண் எதிலுமே திருப்தியடையமாட்டாள் என்பதற்கான நிரூபணம் தான் இது***
ReplyDeleteபெண்ணியவாதிகளும் உங்க ஆத்துக்காரம்மாவும் உங்களை சட்னி யாக்கப் போறா!!! ரொம்ப தைரியம்தான் உங்களுக்கு! :)
திருந்துங்கையா........... திருந்துங்க....
ReplyDeleteதலைப்பப் பார்த்து வர்றங்களுக்காகவே கடைசியா இதுவா :))
வலைப்பதிவர் என்ற தகுதியை அடைஞ்சிட்டீங்க தாஸ் :)))))
சிரிப்புக்கிடையில் ஒரு எளிய,பெண்கள் பற்றிய கருத்தாக்கத்தை முன்வைத்திருக்கிறீர்கள்..
ReplyDeleteஆனால் இந்தக் குணமே, சாதாரண மக்களின் குடும்ப வாழ்க்கையில் சம்சார(மனைவி அல்ல) சாகரம் ஒழுங்காகப் போய்க் கொண்டிருப்பதற்குக் காரணம்.இல்லாவிட்டால் ஆண்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எடுக்கும் பல முடிவுகளில் குடும்பம் திசை தெரியாது நின்றுவிடும்..
எனக்கு இந்தப் பதிவில் பிடித்தது கடைசி கேலிப்படமும் அதன் செய்தியும்..
பதிவுலகிலேயே பாருங்கள்..ஒரு பெண் பெயரைப் போட்டுக் கொண்டு பதிவு எழுத ஆரம்பித்தால்,கண்ணாடியை ஏற்றிப் போட்டுக் கொண்டு முன் வரிசைக்கு வந்து 30 கருத்தை, மானே, தேனே,பொன்மானே'ன்னு போட்டுக்கச் சொல்லி, குடி இருக்கிறார்கள்..இத்தனைக்கும் சில பெண்கள் எழுதுவதில் ஏதாவது பொருளோ, சமூக அக்கறையோ இருக்கும் என்கிறீர்கள்?..படிக்கவே தாவு தீர்ந்து விடும் பதிவுகளுக்கே இந்த நிலைமை..?!!
இது ஆதி காலத்திலிருந்து மனித ஜீன்களில் வரும் விதயம்..ஒண்ணும் பண்ண முடியாது. ! :))
@அறிவன்
Delete\\எனக்கு இந்தப் பதிவில் பிடித்தது கடைசி கேலிப்படமும் அதன் செய்தியும்.\\ மிக்க நன்றி சார். ஆனால், தலைப்பைப் பார்த்து வருபவர்களை இது நக்கல் செய்வது போல இருக்கும் என நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு மெயிலில் வந்த ஜோக்கை தமிழ்ப் படுத்தும் போது இந்த தலைப்பு மனதில் பட்டது. ஆனால், எசகு பிசகாக இருப்பதால் வருபவர்கள் ஏமாறக் கூடாது என்பதற்காக [சத்தியமா 18+ இல்லை!!] என்று போட்டேன். அப்புறம்தான் வருண் சொன்னார், நீங்கள் இல்லை என்று சொன்னாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள், ஏதோ இருக்கும் என்று வந்துவிடுவார்கள் என்று. அறிவியல் பதிவுகளை சிலர் மட்டுமே வாசித்தார்கள், இந்தப் பதிவை நூற்றுக் கணக்கில் வாசித்துள்ளார்கள்!! வருகைக்கு நன்றி நண்பரே.
உண்மையை போட் டு உடைச்சிடீங்க போங்க
ReplyDeleteஎன்ன சார் இன்னும் ஈமெயில் மூலம் படிக்கும் வசதியை ஏற்படுத்தவில்லையா?சீக்கிரம் செய்க
ReplyDelete