Sunday, September 16, 2012

பிரபல பதிவரைக் கவிழ்க்க நான் ஊட்டிக்குப் போனேன்.

தற்போது தமிழ்ப் பதிவுலகில் அசூர வேகத்தில் வளர்ந்து வரும் ஒரு முன்னணிப் பதிவரைக் கவிழ்க்க என்னடா செய்யலாம் என்று யோசித்ததில் எனக்கு ஒரு ஐடியா பளிச்சிட்டது. அவர் பதிவு போடும் ஸ்டைலிலேயே நாமும் போடலாம்.  இது தான் என் திட்டம்.  நான் இருக்கும் ஊரில் உள்ள சாப்பாட்டுக் கடைகளைப் பத்தி எழுதி யாராச்சும் அங்க சாப்பிடப் போனா, சாப்பிட்டு பாத்திட்டு என்னை உதைக்க வந்திடுவாங்க.  அதை விட்டா, வாழ்க்கையில நொந்து நூடுல்சா போனவங்ககிட்ட போயி உட்கார்ந்துகிட்டு அவங்க சொந்தக் கதை சோகக் கதையை கேட்டு, ஒரு அழுகாச்சி காவியம் படைச்சு அத பதிவா போடலாம். ஆனா அதுல ஒரு பிரச்சினை, நமக்கு இந்த சோகம்னாலே தாங்க முடியாது, நொடிஞ்சு போனவங்க கதையை உட்கார்ந்துகிட்டு கேட்கிறதுக்கு எல்லாம் நம்மாள ஆவாது, அதுக்கும் மேல படிக்கிறவங்கள அழ விடறது சுத்தமா பிடிக்காது.  எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பாத்தா ஒன்னே ஒன்னு மட்டும் தான் மிஞ்சியது.  அது பல இடங்களுக்கு டூர் போயிட்டு அங்க படம் பிடிச்சு பதிவா போடுறது!!  ஆஹா........ இது சூப்பர்.  எங்க போகலாம்னு யோசிச்சப்போ முதலில் மனதுக்குத் தோன்றிய இடம் ஊட்டி, நான் அங்கு போனதும் இல்லை.  நிறைய சினிமாக்களில் பார்த்து இங்கெல்லாம் ஒருநாள் நாம் போய்ப் பார்க்கமாட்டோமா என ஏங்கிய இடம் அது, அங்கேயே போகலாம் என முடிவு செய்தேன். குடும்பத்தோட போயிட்டு வரலாம்னு, கடந்த ஜூலை மாதம் பஸ்ஸில் டிக்கட் புக் பண்ணி ஊட்டிக்குப் போய் மூன்று நாட்கள் சுற்றிப் பார்த்துவிட்டு நிறைய படங்களையும் எடுத்துக் கொண்டு திரும்பினோம்.

போயிட்டு வந்ததுக்கப்புறம் ஒரு தயக்கம்.  ஊட்டிக்கு போகாதவங்க யாராச்சும் இருப்பாங்களா, நிறைய சினிமாவிலும் பார்த்திருப்பாங்க.  இந்தப் படத்தையெல்லாம் போட்டா யாரு பார்ப்பாங்க, அப்படி என்ன நாம எடுத்த படங்களில் இருக்கு என்றெல்லாம் எண்ணியபடி அதை பதிவில் ஏற்றத் தயங்கிக் கொண்டே இருந்தேன். அந்தத் தயக்கத்தையும் அந்த முன்னணிப் பதிவரே நீக்கிட்டாரு!!  எங்க ஊருக்கு அவரு இப்போ வந்திட்டு இங்கே எடுத்த புகைப் படங்களைப் பதிவா போட்டிருந்தார், அதைப் பார்த்த பின்னர் நாம எடுத்த படங்களை நிச்சயம் பதிவாகப் போடலாம், தப்பே இல்லை என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது.  அதன் விளைவுதான் இந்தப் பதிவு!!

ஊட்டி ஏரியின் படகுத் துறை, இது ஊட்டியில் சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்று.
ஊட்டி ஏரியை ஒட்டி ஓடும் குழந்தைகளுக்கான Toy Train.

ஊட்டி ஏரியின் முன்புறம் உள்ள அழகிய பூந்தோட்டம்.
படத்தில் கீழே தெரியும் மூன்று கட்டிடங்களுக்கு சற்று முன்பாக அருகே வரிசையாக கருப்பு நிற தார்பாலின் போலத் தெரிகிறதல்லாவா?  அங்கே ஸ்ட்ரா பெர்ரி விளைவிக்கிறார்களாம்.

 ஊட்டி, குன்னூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள் என திரும்பிய பக்கமெல்லாம்  இதைப் போல ஒரே மாதிரியான தேயிலைத் தோட்டங்களே உள்ளன. இந்த டீத்தோட்டம் ஹிந்தி நடிகை மும்தாஜின் கணவருக்குச் சொந்தமாம், இந்த ஒரே இடத்தில் 2500 ஏக்கர் டீத் தோட்டம் அவர்களுக்கு உள்ளதாம்.  ஊட்டியில் உற்பத்தியாகும் தேயிலையின் உயர்ந்த ரகம் அத்தனையும் வெளிநாடுகளுக்கே எற்றுமதியாகிறதாம் நமக்குக் கிடைப்பதெல்லாம் கடைசியில் மிஞ்சும் குப்பை மட்டுமே.  அது சரி, இதன் நடுவில் உயரமான மரங்கள் எதற்கு நிற்கின்றன?  அவை, மண் அரிப்பைத் தடுப்பதற்காம், அவை இல்லா விட்டால் No தேயிலைத் தோட்டம்!!

போன இடத்தில நம்ம நண்பர் கிடைச்சார்!!

ஊட்டி தாவரவியல் பூங்கா Botanical Garden நுழைவாயில்.

ஊட்டி தாவரவியல் பூங்கா-கண்ணாடி அறையில் பூச்செடிகள்.

ஊட்டி தாவரவியல் பூங்கா வெளி மைதானம்

ஊட்டி தாவரவியல் பூங்கா- கடைசி பகுதி, இந்தப் படத்தோடு முதல் நாள் முடிகிறது.
இரண்டாம் நாள் முதுமலைக்குப் பயணமானோம்.  போகும் வழியில் உள்ள கோல்ப் மைதானம், இங்கே விளையாட மூன்று மாதத்திற்கான கட்டணம் நாற்பதாயிரம் ரூபாயாம்!!

ஊட்டியில் திரும்பிய இடமெல்லாம் இருக்கும் நீலகிரி மரக்காடுகள்.  ரோஜா படத்தில் அரவிந்தசாமியை தீவிர வாதிகள் காஷ்மீரில் கடத்தி வரும் காட்சியை இந்த மாதிரி காடுகளில் தான் எடுத்தார்களாம், ஐஸ் எபக்ட் வரவேண்டும் என்பதற்காக தரையில் நொறுக்கப் பட்ட தெர்மோகோல் [தொலைக் காட்சிபெட்டி, ஃப்ரிட்ஜ் வாங்கும்போது அடிபடாமல் இருக்க வைக்கப் படும் வெள்ளை நிற பேக்கிங் மெடீரியல்] போட்டு நிரப்பி எடுத்தார்களாம்!!

ஹிந்துஸ்தான் ஃபோட்டோ பிலிம்ஸ் நிறுவனம், காதல் கோட்டை படத்தில் மணிவண்ணன் நடத்திய டெலிபோன் பூத் இதன் முன்னர்தான் அமைக்கப் பட்டிருந்ததாம்.  இந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள தபால் பெட்டியில் தான் அஜீத்துக்கு அனுப்பும் கடிதத்தை தேவயானி  போடுவாராம்!!

உருளைக் கிழங்கு செடி இதுதானாம்!!  பின்புலத்தில் அழகிய சர்ச்!!

இது காமராஜர் அணை, ரோஜா படத்தில் இறுதியில் தீவிரவாதிகள் அரவிந்தசாமியை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லை இதுதானாம்.  [அவ்வளவு கூமுட்டையாகவா நாம் இருந்தோம்  என்று தோன்றியது!!]

பைன் மரக் காடுகள், இவற்றின் கட்டைகளில் இருந்து தான் கிரிக்கெட் மட்டைகள் தயாரிக்கப் படுகின்றனவாம், ஆனால் நாற்பது ஆண்டுகள் ஆன மரங்களில் இருந்து மட்டுமே தயாரிக்க முடியுமாம்.  பம்பாய் படத்தில், "குச்சி குச்சி ராக்கம்மா...", பையா படத்தில் "அடடா........அடடா..........அடை மழைடா" பாடல்கள் இதற்க்கு அருகில் எடுக்கப் பட்டவை.

அண்ணாமலை படத்தின், "வந்தேண்டா பால் காரன்...", நாட்டாமை படத்தின் "கொட்டை பாக்கும்......" பாடல்கள் படமாக்கப் பட்ட மலைப் பகுதி.  எல்லா மொழிகளிலும் நிறைய படங்கள் இங்கு எடுக்கப் பட்டுள்ளன.  இந்த மலை முழுவதும் இரண்டு இன்ச் நீளமான புற்களால் கார்பெட் மாதிரி மூடப் பட்டிருக்கிறது, வேறெந்த மரங்களோ, உயரமான  செடிகளோ கிடையாது. மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கும் சிறிய செடிகள் மட்டும்  நிறைய உள்ளன. 

முதுமலை போகும் வழியில் சாலையோரத்தில் பார்த்த யானை'கள்'.

யானை'கள்'!!- முன்னர் பார்த்த படத்தில் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் யானை இந்தப் படத்தில்.......!!.
முதுமலை விலங்குகள் சரணாலயம், டிக்கட் கொடுக்குமிடத்தில் அம்மா குழந்தையோட உட்கார்ந்திருக்காங்க......

முதுமலை விலங்குகள் சரணாலயம்- மான் கூட்டம்.

முதுமலை விலங்குகள் சரணாலயம்- தோகையுடன் மயில்.

முதுமலை விலங்குகள் சரணாலயம்- யானை.

இதில் காட்டுப் பன்றிகள் ஓடுவதைக் கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப் படும்!!
தங்கிய இடம்:
Heaven Holiday Resorts, Near Ooty Lake, Ooty, The Nilgiris-643001.
Ph: 0423-2447020, 2447030.
heavenresort.ooty@gmail.com
Website: www.heavenholidayresorts.com

இந்த இடம் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது, தனியான காட்டேஜ்கள், சிறிய but  சவுகரியமான அறைகள், அழகிய படுக்கைகள் வெந்நீர் வசதி, வேண்டுமானால் நாமே  சமைத்து உண்ணும் வசதி, அழகிய பர்னிச்சர்கள் என எல்லா சவுகரியமும் இருந்தது. சீசன் சமயத்தில் வாடகை நாள் ஒன்றுக்கு 2500 ரூபாய் வரை எகிருமாம், சீசன் அல்லாத சமயங்களில் ஆயிரத்துக்குள் அமுக்கலாம் என்கிறார்கள்.   டூர் முடிந்து அங்கிருந்து கிளம்ப மனசே இல்லாமல் புறப்பட்டோம்.  [ஊட்டி பேருந்து நிலையத்தைச் சுற்றி ஐநூறு ரூபாய்க்கே ரூம்கள் கிடைக்கும் என்கிறார்கள், வசதி அதற்குத் தகுந்தார்ப் போலத்தான் இருக்கும்!! தொடர்புக்கு மகாலட்சுமி டிராவல்ஸ்: 99525 21962, 98422 43650, 94898 60515].


ஊட்டியைச் சுற்றிப் பார்க்க தனியாக வாகனம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, நிறைய பேகேஜ் வேன்கள் உள்ளன.  கட்டண விபரம்:  ஊட்டி உள்ளூர் பார்க்க, தொட்டபெட்டா, குன்னூர் சுற்றிப் பார்க்க ரூ.130/-,  இதற்கு ஒரு நாள் தேவை, அடுத்து முதுமலை சென்று வர ரூ. 180/-.  முதுமலை உள்ளே Zoo எதுவும் இல்லை, நீங்கள் ஒரு வாகனத்தில் உள்ளே அழைத்துச் செல்லப் படுவீர்கள் மிருகங்கள் தற்செயலாகத்  தென்பட்டால் தான் உண்டு.  சிங்கம் புலி எனப் பார்க்கலாம் என நினைத்துப் போனால் ஏமாற்றமே மிஞ்சும்.  நாங்கள் போகும் போதே ஒரு பாட்டியம்மா , "வாங்குற காசுக்கு உள்ள என்னடா இருக்குது?  இப்படியெல்லாம் ஏமாத்தி காசு புடுங்கறீங்களேடா " -ன்னு கரித்துக் கொண்டே போவதைப் பார்த்தோம்.  உள்ளே போன பின்னர் தான் அது உண்மைதான் என்று தெரிய வந்தது.  அங்கு நிஜமாவே புலிகள் இருக்குமா என்று இன்னமும் சந்தேகமாகவே இறுகிறது!  தற்போது நீதிமன்றத்தின் உத்தரவுப் படி அந்த அனுமதியும் நிறுத்தப் பட்டிருப்பதாகத் தகவல்.

ஊட்டியில் நிறைய சாக்கலேட் வகைகள் கிடைக்கின்றன, எல்லாம் வீட்டில் தயாரிக்கப் படுபவை என்று விளம்பரப் படுத்தி விற்கிறார்கள்.  ஊட்டி பஸ் நிலையம் அருகேயுள்ள  ஊட்டி மார்க்கெட் என்ற இடத்திற்க்குச் சென்றால்  ஊட்டியில் விளையும் விதம் விதமான பழங்கள் கிடைக்கின்றன முக்கியமாக பிளம்ஸ் இங்கு பிரசித்தம்.  பார்க்க கொள்ளையாய் இருக்கும் காய்கறிகள் கிடைக்கின்றன.  சென்னையில் அதிக விலைக்கு விற்கப் படும் பிராகோலி போன்ற காய்கறிகள் விலை இங்கு மிகக் குறைவு.  ஒரு மாதத்திற்க்குத் தேவையானதை வாங்கி வந்து வீட்டில் சமைத்து ஊட்டி நினைவிலேயே உண்டு கழித்தோம்!!

பயணத்தின் போது:  பேருந்துகளில் ஊட்டிக்குச் செல்வதாக இருந்தால் மலைப் பாதையை நெருங்குவதற்கு குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக மிகக் குறைவான உணவை உண்டு முடித்திருப்பது நலம்.  அதே போல ஊட்டியில் இருந்து புறப்படும்போதும் உண்ணாமல், மலைப் பாதையைக் கடந்த பின்னர் வழியில் உணவு உண்ணுவது நலம்.  இல்லாவிட்டால் வாந்தி கியாரண்டி, எங்கள் பேருந்தில் ஓரிருவரைத் தவிர மற்ற அத்தனை பேரும் வாந்தி எடுத்துவிட்டார்கள், ஏனெனில் அது வோல்வோ ஏ .சி. பஸ்.  ஓட்டுனர் அதற்காகவே சிறப்பு பிளாஸ்டிக் பைகளை வைத்துக் கொண்டு எல்லோருக்கும் தந்து கொண்டிருக்கிறார்.  [ஆனால் அவர் மட்டும் அசாராம gun மாதிரி இருக்காரு, அதான் எப்படின்னே புரியலை.] ஜன்னல் திறந்திருக்கும் பேருந்துகளில் இந்தப் பிரச்சினை சற்று குறைவு.  நீங்கள் மலை ரயிலில் ஊட்டி வரை செல்வதானால் எந்தப் பிரச்சினையும் இல்லை. 

பின் குறிப்பு:  ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை!!  நான் என்னதான் செய்தாலும் அந்த அசூர வளர்ச்சிப் பதிவரின் வளர்ச்சியை எந்த வகையிலும் அது பாதிக்கப் போவதில்லை!!

இந்த பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கே சொடுக்கவும்!!


28 comments:

  1. :))

    விரைவில் பிரபல பதிவராக வாழ்த்துகள் !!

    ReplyDelete
    Replies
    1. பிரபலம், பிராபலம் ரெண்டுக்கும் ஒரே எழுத்துதான் மோகன் வித்தியாசம். ஆனாலும், தங்கத்தை நெருப்பில் போட்டு உருக்கி, சுத்தியலால் டமால் டமால்...ன்னு அடிச்சு அதற்க்கப்புரம்தானே அழகான நகையாவுது! நெருப்பு, இடிபாட்டுக்கெல்லாம் பயந்தா வேலைக்காதே! வரலாற்றில் சிறிய இடமானாலும் அதைப் பிடிக்க எல்லா விதமான எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டித்தான் இருக்கு. வருகைக்கு நன்றி மோகன்.

      Delete
    2. நேத்து முழுசா படிக்கலை. இன்னிக்கு தான் படிச்சேன். நல்லாருக்கு. கொஞ்சம் என்னோட கட்டுரை படிக்கிற மாதிரி
      இருந்தது :)

      உங்க ஊருக்கு வந்தார்னு சொல்லிருக்கீங்க? நீங்க டில்லியா என்ன? ஒன்னும் சொல்றதே இல்லை. பாத்திருப்பேன் இல்லை?

      ஊட்டி பல முறை சென்றுள்ளேன். ஒரு பதிவு கூட ஊட்டி பற்றி எழுதியதில்லை உங்கள் பதிவு படிச்சோன எழுதுவேனான்னு டவுட்டா இருக்கு

      படங்கள் குறிப்பா ரொம்ப தெளிவா அழகா இருக்கு

      இந்த பதிவு(ம்) என்னை தாக்கி/ கிண்டல் செய்து எழுதிய பதிவுன்னு சில நண்பர்கள் நினைச்சுக்கிட்டு என்னிடம் பேசினாங்க. அவங்களிடம் தாஸ் எனது நண்பர். கிண்டல் செய்து அவர் அதை எழுதலை என்றேன் அப்படி தானே தாஸ்? :))

      Delete
    3. \\நல்லாருக்கு. \\ ரொம்ப நன்றி மோகன்.

      \\கொஞ்சம் என்னோட கட்டுரை படிக்கிற மாதிரி இருந்தது :)\\ இறுதியில் மூன்று பத்திகள் எழுதும் போது தங்கள் சாயலில் வந்துவிட்டது. அப்புறம் தினமும் உங்க எழுத்துக்களைப் படிக்கிறவன் வேற எப்படி எழுதுவேன்!!

      \\உங்க ஊருக்கு வந்தார்னு சொல்லிருக்கீங்க? நீங்க டில்லியா என்ன? ஒன்னும் சொல்றதே இல்லை. பாத்திருப்பேன் இல்லை?\\ நான் போட்ட நாலு பதிவுகளில் அதிகம் படிக்கப் பட்ட பதிவை நீங்க இன்னும் படிக்கவே இல்லை!! படிங்க அதில் என் ஊர் பேரை எழுதியிருக்கேன். [ஓட்டு போட லிங்க் இரண்டு பதிவுகளின் கடைசியில் கொடுத்திருக்கேன் அப்படியே ஓட்டும் போட்டுடுங்க.!!]

      http://jayadevdas.blogspot.in/2012/09/blog-post_14.html

      \\ஊட்டி பல முறை சென்றுள்ளேன். ஒரு பதிவு கூட ஊட்டி பற்றி எழுதியதில்லை உங்கள் பதிவு படிச்சோன எழுதுவேனான்னு டவுட்டா இருக்கு.\\ இடங்கள் பார்க்க ஒரே மாதிரியா இருந்தாலும் அங்குள்ள யானை, மான், குரங்குகள் வித்தியாசமா இருக்கலாம், நீங்களும் போடுங்க!! என்ன நஷ்டமாப் போவுது! மேலும் என் வாசகர் வட்டம் சின்னது, நீங்க போட்டா அதிகம் பேரை ரீச் ஆகும்.

      \\படங்கள் குறிப்பா ரொம்ப தெளிவா அழகா இருக்கு.\\ ரொம்ப நன்றி மோகன்.

      \\இந்த பதிவு(ம்) என்னை தாக்கி/ கிண்டல் செய்து எழுதிய பதிவுன்னு சில நண்பர்கள் நினைச்சுக்கிட்டு என்னிடம் பேசினாங்க. அவங்களிடம் தாஸ் எனது நண்பர். கிண்டல் செய்து அவர் அதை எழுதலை என்றேன் அப்படி தானே தாஸ்? :))\\ நீங்க யாரையாச்சும் கவிழ்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தால்தானே அது உங்களைக் கிண்டல் செய்வதாக இருக்கும்!! மேலும், பதிவின் கடைசியில் எவ்வாறு முடித்துள்ளேன் என்பதைப் பார்த்திருப்பீர்கள் அப்புறம் என்ன சந்தேகம்?!!

      Delete
  2. இந்தாங்க பிடிங்க "பிரபல பதிவர்" பட்டம் :)

    ReplyDelete
    Replies
    1. @ புதுகை.அப்துல்லா

      நீங்க வந்து பின்னூட்டமிட்டதே பெரிய பட்டம் மாதிரி சார், ரொம்ப சந்தோஷமா இருக்கு, வேற பட்டமெல்லாம் எனக்கு முக்கியமில்லை. நன்றி சார்!!.

      Delete
  3. ஓஹோ அப்போ நீங்களும் அந்த போட்டியில் இருக்கீங்களா ....?

    ReplyDelete
    Replies
    1. @ அஞ்சா சிங்கம்

      என்னப்பு ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்குறீங்க!! Thanks for your first visit!!

      Delete
  4. //பின் குறிப்பு: ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை!! நான் என்னதான் செய்தாலும் அந்த அசூர வளர்ச்சிப் பதிவரின் வளர்ச்சியை எந்த வகையிலும் அது பாதிக்கப் போவதில்லை!!
    //
    உங்க நேர்மையை நான் பாராட்டுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. @ IlayaDhasan


      "But, உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" -அப்படின்னு சொல்ல வரீங்க!! ரைட்டு!!

      Delete
  5. படங்கள் அருமை!

    ReplyDelete
    Replies
    1. @ Robin

      இதைத்தான் நண்பரே யாராச்சும் சொல்ல மாட்டாங்களான்னு ஏங்கினேன், ரொம்ப நன்றி, நம்ம கடைக்கு தொடர்ந்து வாங்க!!

      Delete
  6. படங்கள் அருமை!பிரபல பதிவர் ஆயிட்டீங்க!

    ReplyDelete
    Replies
    1. @குட்டன்
      ஆஹா , நேத்து உங்க கடைக்கு வந்தப்போ சூடா அல்வா குடுத்தீங்களே............ இன்னமும் இனிக்குது!! ஏன் கடை அல்வா வேணுமின்னா,
      பெண்கள் எப்போது முழு திருப்தியடைகிறார்கள்?
      http://jayadevdas.blogspot.in/2012/09/18.html

      பாருங்க !!

      Delete
  7. அருமையான படங்கள். ஊட்டியில் கிடைத்த உங்கள் நண்பர் அழகு. அவர் அட்ரஸ் குடுங்க அடுத்தமுறை செல்லும் போது சந்திக்கிறேன். அப்புறம், உங்க கைடு சினிமா ரசிகர் போல..., இடத்தின் பேர விட படத்தின் பேர நல்லா ஞாபகமா சொல்லியிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. @முத்து குமரன்

      இந்த படங்களை என் கேமராவில் தான் எடுத்தேன், சொல்லப் போனால் முதுமலை பகுதி யானை, மான்கள் எல்லாம் நகர்ந்து கொண்டிருக்கும் வண்டியிலிருந்து எடுக்கப் பட்டவை. நாங்கள் தங்கிய இடத்தின் விபரங்களை பதிவில் கொடுத்துள்ளேன். நம் மக்கள் சுதந்திரப் போராட்ட வீரர் இங்கே வந்திட்டு போனார் அப்படின்னா, அடப் போய்யா என்று சொல்லிவிடுவார்கள், எதைச் சொன்னால் வாயைப் பிளப்பார்கள் என்று அந்த கைடும் சொல்கிறார். In fact, எல்லா கைடுகலுமே இப்படித்தான் இருப்பார்கள்!! முதல் வருகைக்கு நன்றி முத்து குமரன்!!

      Delete
  8. இடுகையின் கன்டென்டுக்காகவே வாசிக்கப்பட்டிருக்கும்..தேவையற்ற தலைப்பு என்று தோன்றுகிறது!

    எச்பிஎஃப் ஆலைக்கு இடதுபுறம் டூபாண்ட்'டுக்குச் செல்லும் சாலையில் ஓரிரு கிமீ.நடந்தால் வலதுபுறம் இருந்த பரந்து விரியும் அந்த அற்புதமான கோல்ஃப்லிங்க்ஸ் இன்னும் இருக்கிறதா?

    இருந்தால் நீங்கள் அதை மிஸ் பண்ணி விட்டீர்கள்..

    சாரிங் கிராஸ் பகுதியை கவர் செய்திருக்கலாம்.(ஆனால் இப்போது நெரிசலுடன் காயலாங்கடை போலிருக்கும் என்று நினைக்கிறேன்)

    ReplyDelete
  9. @அறிவன்

    ஓரிரு பதிவுகளை மட்டுமே போட்டுள்ள நிலையில் வாசகர்களை இழுக்க என்ன செய்வது என்று தெரியாமல் வைக்கப் பட்ட தலைப்பு. வெறும் ஊட்டி சுற்றுலா என்றால் படிக்க வரமாட்டார்கள் என்று இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன், கூடவே பதிவுலகச் சண்டைகுறித்து என்னை முகம் சுளிக்க வைக்கும் கருத்தையும் இணைத்து விட்டேன்!!

    \\எச்பிஎஃப் ஆலைக்கு இடதுபுறம் டூபாண்ட்'டுக்குச் செல்லும் சாலையில் ஓரிரு கிமீ.நடந்தால் வலதுபுறம் இருந்த பரந்து விரியும் அந்த அற்புதமான கோல்ஃப்லிங்க்ஸ் இன்னும் இருக்கிறதா?

    இருந்தால் நீங்கள் அதை மிஸ் பண்ணி விட்டீர்கள்..\\ கோல்ப் மைதானத்தைச் சொல்கிறீர்களா? அதன் படத்தைப் போட்டுள்ளேன். ஊட்டியில் எதுவும் எங்களுக்குத் தெரியாமல் அங்கே போய் இறங்கினோம். அங்கே சுற்றுலா வண்டிகளை வைத்து நடத்துபவர்கள் எங்கெல்லாம் அழைத்துச் சென்றார்களோ அதையெல்லாம் பார்த்தோம், எங்கள் சாய்ஸ் இதில் எதுவும் இல்லை.

    ReplyDelete
  10. படங்கள் மிக அருமை. ஊட்டி சென்ற போது பார்த்தவைகளை மீண்டும் ஞாபகத்துக்கு கொண்டு வந்தது. வெகு விரைவில் பிரபல பதிவராக வாழ்த்துக்கள்.

    S பழனிச்சாமி

    ReplyDelete
    Replies
    1. @rasippu

      பெயருக்கேத்த மாதிரி ரசிக்கும் தன்மை உங்ககிட்ட நிறைய இருக்கு!! முதல் வருகைக்கு நன்றி!!

      Delete
  11. ஆங் பிரபல பதிவரே........ நீங்களும் ஒரு பதிவர் சந்திப்பு நடத்துங்க.......

    ReplyDelete
    Replies
    1. இவங்க ஒருத்தர ஒருத்தர் கால வாருவது தான் பேஜாரா இருக்கு பன்னிகுட்டி அண்ணே !!

      Delete
  12. படங்களும், பகிர்வும் மிக அருமை .. ! உங்களின் எழுத்து திறன் வியக்க வைக்கின்றது.. பல பதிவுகள் எழுதுங்கள் சகோ..

    வெகு விரைவில் பிரபல / பிராப்ல பதிவராக மாற வாழ்த்துக்கள் !!! ஹிஹி !!!

    :)

    ReplyDelete
    Replies
    1. \\வெகு விரைவில் பிரபல / பிராப்ல பதிவராக மாற வாழ்த்துக்கள் !\\ பிரபல பதிவர்கள் என்னென்ன தகிடு தத்தமெல்லாம் பண்றாங்கன்னு பார்த்தாச்சு சகோ, அந்த மாதிரி ஆசையெல்லாம் நமக்கில்லை. நமக்குத் தெரிந்ததை எழுதுவோம், உங்களை மாதிரி நண்பர்கள் வந்து படிக்கட்டும், நீங்க நல்லாயிருக்குன்னு சொல்றீங்களே அதுவே போதும், வேறெதுவும் வேண்டாம்!!

      Delete
  13. ரொம்ப லேட்டா படிச்சேன், ஆனா லேடஸ்டா இருந்தது உங்க பதிவு, ரொம்ப நாளா ஊட்டிக்கு போவனும்னு ஆசை ஆனா புது இடம் பயமா இருந்துச்சு நீங்க அதை ஓட்டிடிங்க, நிச்சயமா ஒரு தடவை ஊட்டிக்கு குடும்பத்தோட போவனும்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. @kappalkaaran

      நான் பதிவு போட்டதன் நோக்கம் தங்கள் வரவால் வெற்றியடைந்துள்ளது. நாங்களும் பயந்து பயந்து தான் சென்றோம். உண்மையில் பயப்பட ஒன்றுமில்லை என்பதை அங்கு சென்ற பின்னர் தான் தெரிந்து கொண்டோம். நிச்சயம் சென்று வாருங்கள், என்னதான் திரைப் படங்களில் பார்த்திருந்தாலும் நேரில் பார்ப்பது தனி தான்............!!

      Delete
  14. படங்கள் அருமை! பிரபல பதிவராக வாழ்த்துக்கள்.

    ReplyDelete