Wednesday, May 7, 2014

தமிழ் படங்களில் காப்பியா......எவன் சொன்னான்?

வணக்கம் மக்கள்ஸ்!!

தமிழ் சினிமாக்கள் சிலவற்றின் கதைகள் ஆங்கிலப் படங்களைப் பார்த்து காப்பியடிக்கப் படுகின்றன என்ற தவறான குற்றச் சாட்டு அப்பாவி சினிமாக்காரர்கள் மீது சில பொறாமை பிடித்தவர்களால் இணையத்தில் பரப்பப் பட்டு வருகிறது.  பதிவுலகில் பெயரும் புகழும் சம்பாதித்து அதை வைத்தே நூறு கோடி பணம் சேர்க்கலாம் என்ற பேராசை பிடித்த பதிவர்கள் செய்யும் பித்தலாட்டம் அது.  ஆனால் அது உண்மையல்ல. 

 

உதாரணத்துக்கு சமீபத்தில் வந்த "தெய்வத் திரு(ட்டு)மகள்" என்ற படம்  ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை I am Sam என்ற ஆங்கிலப் படத்தைப் போலவே இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக அது காப்பி என்ற அபாண்டமான பழியைச் சுமத்தி இருக்கிறார்கள்.  அவர்களுக்கெல்லாம் ஒரு உண்மையை தெளிவு படுத்த விரும்புகிறேன், அந்த படம் காப்பியெல்லாம் இல்லை.  எப்படி தெரியுமா?  கீழே உள்ள இரண்டு படங்களைப் பாருங்கள்.


ஆங்கிலப் படத்தில் கதாநாயகன் குழந்தைக்கு பலூன் வாங்கப் போகும் காட்சியில் எல்லா பலூன்களும் ஒரே நிறத்தில் இருக்கின்றன, இடது புறமாக இருந்து வலது புறமாக சாலையைக் கடக்கின்றார்கள்.  குழந்தை கதாயகனின் கையைப் பற்றிக் கொண்டு நடக்கிறது.
அதே தமிழ் படத்தில், பல வண்ண பலூன்கள், வலது புறமாக இருந்து இடது புறமாக சாலையைக் கடக்கின்றார்கள்.  குழந்தை தனியாக முன்னால் நடக்கிறது.
இது மாதிரியெல்லாம் உத்து உத்து பார்த்தால் I am Sam படத்துக்கும், தமிழில் வந்த படத்துக்கும் ஆறு வித்தியாசமாச்சும் நிச்சயம் கண்டு பிடிச்சிடலாம்.  சாமர்த்தியசாளிகளால் அது சாத்தியம்வே!!  மூணு மணி நேரப் படத்துக்கு ஆறு வித்தியாசம் போதாதா?  அப்புறம் எப்படி காப்பியடிச்சான்னு விவரமில்லாம சொல்றீங்க?

சிலர் இதோட மட்டுமல்ல பல படங்களுக்கும் இதே குற்றச் சாட்டை வைக்கின்றனர்.  அவை அனைத்துமே தவறு.

இந்திரன் சந்திரன் Moon Over Parador படத்தோட காப்பியம்.  அட மக்குங்களா, அந்த படத்தில மீசையை ஒட்டுவான், இதில மேசையை ஷேவ் பண்ணுவான், போதாதா?  ரெண்டும் வேற வேறப்பா!!





ராஜபார்வை கிளைமேக்ஸ் பார்த்தால் The Graduate படத்தோட கிளைமேக்ஸ் மாதிரியே இருக்காம்.  அட குருட்டு பசங்களா, ஆங்கிலப் படத்தில் அவனுக்கு கண்ணு தெரியுது, தமிழ் படத்தில் தள்ளிகிட்டு போறவனுக்கு கண்ணு தெரியாது, ரெண்டும் ஒன்னு தான்னு சொல்லாதீங்கப்பு!!






அதே மாதிரி எனக்குள் ஒருவன் Reincarnation of Peter Proud மாதிரியே தான்  தோணும்,அது  வெறும் மனப் பிராந்தி.  தெளிவா இருங்க, ரெண்டும் வேற!!






என்னய்யா இது ரெண்டும் ஒரே மாதிரி இருக்கேன்னு நீங்க வம்புக்கு வருவீங்க.  அதுக்கும் நாங்க ரெடியா பதில் வச்சிருக்கோம்.  உதாரணத்துக்கு, ரெண்டு பேர் லவ் பண்ற மாதிரி படமெடுத்தா அது, "ஏக் துஜே கே லியே"  மாதிரியே இருக்குன்னு சொல்வீங்களா?  அப்போ லவ் பண்ற மாதிரி யாருமே இனி படமே எடுக்கவே முடியாதே!!  அப்படின்னு கிடிக்கி பிடியா போடுவோம், உங்க பதில் என்ன ?  [ஆஹா........ மாட்டிகிட்டீங்களா.......... மாட்டிகிட்டீங்களா..........!!].

அப்போ என்னவெல்லாம் செய்தால் ஒரு படம் இன்னொரு படத்தில் இருந்து காப்பியடிச்சதுன்னு சொல்லலாம்?  ஒரிஜினல் கதை தான் என்று  எப்படிச் சொல்வது?


எந்த கட்டத்தில் ஒரு படம் இன்னொரு படத்தின் காப்பி என்று சொல்ல முடியும்?

இது யார் வழுக்கைத் தலையன், யார் இல்லை என்று சொல்வது போல கஷ்டமான கேள்வி.  என்ன வழுக்கைத் தலையனா, அதுக்கு இங்க என்ன சம்பந்தம்ன்னு புரியவில்லை தானே!!  பொறுங்கள் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்!!   ஒருத்தனுக்கு தலையில் ஒரு முடி கூட இல்லை என வைத்துக் கொள்வோம்.  அவனை வழுக்கைத் தலையன் என்போம்.  அவன் தலையில் ஒரே ஒரு முடி இருபதாகக் வைத்துக் கொள்ளுங்கள்.  இப்போ அவன் வழுக்கைத் தலையன்  இல்லை என்போமா?  கிடையாது!!  சரி இன்னொரு முடியை சேர்ப்போம். அவன் தலையில் ரெண்டு முடி உள்ளன. இப்போ?  ஹி .......ஹி ....... இப்பவும் அவர் வழுக்கைத் தலையன் தான்.  இப்படியே அவர் தலையில் முடிகளை அதிகரித்துக் கொண்டே செல்வதாக வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போ கேள்வி: எந்த ஒரு முடியை அவர் தலையில் சேர்க்கும்போது அவரை வழுக்கைத் தலையர் இல்லை என்போம்?  [இதையே ரிவர்சிலும் சொல்லலாம்.  தலை முழுக்க முடி உள்ளவனிடம் இருந்து ஒவ்வொரு முடியாக நீங்க வேண்டும்.  எந்த ஒரு ஒரு குறிப்பிட்ட முடியில் அதை நீக்கும் பொது அவர் வழுக்கை என்ற பெயர் பெறுவார்?  இது ஏதோ ஒரு லஜிக்காம், எனக்கும் முழுசா தெரியலை]

அப்படி இருக்கு இந்த காப்பியடிச்ச கதை!!  காப்பி என்றால் இருவர் காதலிக்கும் காட்சியைக் கூட இன்னொரு முறை எடுக்க முடியாது.  அப்படியே ஒரு படத்தில் இருந்து ஒன்னொன்னா சேர்த்துகிட்டே போனா எப்போ அது காப்பின்னு சொல்லலாம்?  எதுவரை காப்பி இல்லை?
 
சரி இப்போ சில தமிழ் படங்கள் கதை உருவாவது எப்படி என்று பார்த்தால், இது பற்றி செய்தி  தாட்கள் மூலம் நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.  வடிவேலு, "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ" என்று சொன்னது போல இதற்கென்று ஏதாவது நட்சத்திர ஹோட்டல்களில் ரூம் போட்டு சம்பந்தப் பட்டவர்கள் கதையைப் பற்றி விவாதிப்பார்கள்.  "ஸ்டோரி டிஸ்க ஷன்" என்று இதற்குப் பெயர். அந்த ரூமில் அப்படி என்னதான் நடக்கும்?  ஆங்கிலப் பட வீடியோ கேசட்டுகள் [தற்போது சி.டிக்கள்] எடுத்து வந்திருப்பார்கள், அவற்றில் நாலஞ்சு படத்தைப் பார்த்து அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று பிச்சு போட்டு, நம்ம கலாச்சாரத்துக்கு [அப்படின்னு ஒன்னு முன்ன இருந்தது, இப்போ சீரழிஞ்சு போச்சுங்கிறது வேற விஷயம்!!] ஏற்ற மாதிரி அங்கங்க கொஞ்சம் டிங்கரிங் பண்ணுவார்கள்.  அதாவது ஆங்கிலப் படத்தில் கதாநாயகி, நாயகன் மற்றும் வில்லன் இருவருடனும் கசாமுசா செய்வதாக இருக்கும்.  இங்கே நாயகனுடன் மட்டும் தான் அது நடக்கும், வில்லனைப் பார்த்ததும், "நீங்க ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப் பட்டிருந்தா பரவாயில்லை, ஒரு தாயைப் பார்த்து ஆசைப் படலாமா?" என்பது போல மாற்றி விட வேண்டும், அவ்வளவு தான் கதை ரெடி.

 இதையெல்லாம் காப்பி என்று சொல்வது தவறு.  இதற்கு வேறு பெயர் இருக்கிறது.

உடல் ஊனமுற்றவர்கள்-மாற்றுத் திறனாளிகள்
விபச்சாரம் செய்வோர்-பாலியல் தொழிலாளிகள்
இலவசம்-விலையில்லா பொருள்
இரண்டு இனத்துமல்லாதவர்கள்-திருநங்கைகள்
புட்டுகிட்டான்-வைகுண்டப் பதவியை அடைந்தார்.

இப்படியெல்லாம் கண்டுபிடிச்ச நாம் காப்பியடிப்பதை மட்டும் சும்மா விடுவோமா?

காப்பியடித்தல் - இன்ஸ்பிரே ஷன்.

எங்க ஆளுங்களுக்கு வருவது இன்ஸ்பிரே ஷன் !!   God Father படத்தை காப்பியடிக்கவில்லை, இன்ஸ்பிரே ஷன்ஆகி Xerox செய்தார் அம்புட்டுதேன்!!

தொடர்புடைய பதிவுகள்:

சினிமா கதைகள்- எங்கேயிருந்து உருவப் பட்டன? -லிஸ்ட்.

கமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதமா ?

 கமல்ஹாஸன்: நிகழ மறுத்த அற்புதமா? புதிய தகவல்கள் – வீடியோக்களுடன்

தமிழ் சினிமாவில் ‘அதிபுத்திசாலிகள்’ : எ காப்பி ஸ்டோரி

43 comments:

  1. ஒன்றா இரண்டா காப்பியடித்ததை வரிசைப் படுத்த, சொல்லிக் கொண்டிருந்தால் அது அனுமார் வால் போல போகும்.

    ReplyDelete
  2. எதுவுமே காப்பியில்லைன்னு ஒருத்தர் பதிவு போட்டிருக்கார், தேடிப் பாருங்க!!!

    ReplyDelete
  3. ஹா..ஹா..மொட்டையாச் சொன்னா எப்படி? அவருக்கு லின்க் கொடுக்கணும், பாகவதரே..
    http://sengovi.blogspot.com/2014/05/blog-post_6.html

    ReplyDelete
  4. //சில படைப்பாளிகள்(?) ஏதாவது ஒரு வேற்றுமொழிப்படத்தை அப்படியே சீன் பை சீன் அல்லது 50%க்கும் அதிகமான காட்சிகளை அப்படியே ரீமேக் செய்துவிடுகிறார்கள். அந்த படங்களை காப்பி என்று சொல்வதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை தான். //

    இதுவும் அங்கே சொன்னது தான். எனவே இந்தப் பதிவில் எமக்கு பெரிய ஆட்சேபணை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. அதுசரி இந்த 50% க்கும் மேலே என்பது என்ன இன்டர்நே ஷனல் standard-ங்களா? இல்லை நீங்களே உருவாக்கினதா? ஒரு படத்தை செங்கோவி சொல்லிட்டார், 50% க்கும் கீழே தான் காப்பி என்றால் விட்டு விடுவார்களா?

      அப்படியே ஒரு படம் காப்பின்னு சொல்லிட்டா, அதுல ஒன்னு ரெண்டு சீனை மாத்தி 49.95% பண்ணிட்டா விட்டுடுவாங்களா?

      மணிரத்னம் திடீர்னு பார்த்தா இராமாயணம், மகாபாரதம் இதெல்லாம் கூட விட்டு வைக்காம கதையை உருவும் ஆளாச்சே!! எத்தனை CD பார்த்தாரோ, எந்த சீனை எங்கேயிருந்து உருவினாரோ எனக்கு தெரியுமுங்களா? அதுசரி அது காட் ஃபாதர் காப்பியில்லைன்னு எதை வச்சு சொல்றீங்க? இவரு வேட்டி கட்டியிருந்தார், அவனுங்க கோட் சூட் போட்டிருந்தானுங்க என்றா?

      Delete
    2. இது தான் 50% க்கும் கீழே தான் காபி என்ற கணக்கை யார் போட்டுச் சொல்வது, ஆளாளுக்கு அதுவே மாறுபடுமே?!!

      எனக்கென்னவோ நரசுஸ் காபி விளம்பரத்தில் காபி 52% சிக்கரி 48% ஞாபகம்தான் வருது!!

      Delete
    3. ராமாயணம், மகாபாரதத்தில் இருந்தும் எடுப்பதற்குப் பெயர் காப்பியா? நல்லா இருக்குங்க உங்க டெஃபனிசன்!

      50% என்பது என் அரிய கண்டுபிடிப்பு தான்!

      Delete
    4. செங்கோவி,

      காபிரைட் செய்யப் பட்ட படங்களில் இருந்து கதையை உருவினால் அதற்குப் பெயர் இன்ஸ்பிரேஷன், காபிரைட் செய்யப்படாத இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் இருந்து எடுத்தால் "சொந்தக் கதை" என்பீர்களா?

      அதுக்கு என்ன பேர் வைக்கனும்கிறது, நொண்டியை மாற்று திறனாளி என்றும் இலவசத்தை விலை இல்லா பொருள் என்றும் சொல்வது போலத்தான். மொத்தத்தில் அவன் சிந்திச்ச கதை இல்லை அது தான் மேட்டர், பேரு நீங்க எதை வேண்டுமானாலும் வச்சிக்கிட்டு போங்க.

      \\50% என்பது என் அரிய கண்டுபிடிப்பு தான்!\\

      ஹி .......... ஹி ...........ஹி ........... செல்லாது.......செல்லாது.......... செங்கோவி சொன்னார்னு சொல்லி 50% காப்பியடிச்சா விட்டுடுவானா என்ன? சுளுக்கெடுத்துடுவான். தமிழ்காரன் ஈயடிச்சான் காப்பியடிப்பதை வெள்ளைக்காரன் ஏன் கண்டுகொள்வதில்லை என்றால் அது அவர்களுக்கு WORTH இல்லை, பிச்சைக்கார பயலுக போய் ஒழியட்டும் என்று விட்டுவிடுகிறார்கள், பல சமயங்களில் அது அவர்களுக்கு தெரியாமலேயே கூட போகலாம்.

      அதைப் பயன்படுத்தி இங்கே நாங்க தான் பெரிய புடுங்கிங்க என்று சொல்லிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு இரத்தினங்களும் உலக்கை நாய்கனுங்களும் சுத்திகிட்டு இருக்கானுவ.

      Delete
  5. ரோஜா படம் எப்படி sun flower-ன் காப்பி என்று விளக்கினால், நாம் மகிழ்வோம்!

    ReplyDelete
    Replies
    1. அதுசரி நாயகன் காட் ஃபாதர் காப்பியில்லைன்னு எதை வச்சு சொல்றீங்க? இவரு வேட்டி கட்டியிருந்தார், அவனுங்க கோட் சூட் போட்டிருந்தானுங்க என்றா?

      Delete
    2. நீங்க ரோஜா பற்றி விளக்கியதும் என் அடுத்த கேள்வி, நாயகன் எப்படி காட் ஃபாதர் என்பது தான்!!

      எனக்கென்னமோ நீங்க Sun Flower & God father இரண்டுமே பார்த்திருக்க மாட்டீங்கன்னு தோணுது. படத்தின் தீம், கதை, கேரக்டர்கள், திரைக்கதை அமைப்பு என வரிசையாக இரு படத்தையும் ஒப்பிட்டு ஒரு பதிவு போடுங்கள் பார்ப்போம். சும்மா வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசாமல், நான்கு படத்தையும் பார்த்து ஒப்பிட்டு விளக்குங்கள்.

      Delete
    3. \\நாயகன் எப்படி காட் ஃபாதர் என்பது தான்!!\\ ஒரு ஆங்கிலப் படத்தில் புதிதாக திருமணமான ஜோடி சுவிட்சர்லாந்துக்கு [ஐஸா கொட்டிக் கிடக்கும்!!] ஹனிமூன் போறாங்க, அங்கே கதாநாயகியை வில்லனுங்க கடத்திகிட்டு போறாங்க, ஹீரோ போராடி மீட்கிறான்.

      இந்தியாவில் பொம்பளை கடத்தப் பட்டால் என்னவாகும்? ஹி .......ஹி .......ஹி ....... 15 நாட்களில் அவள் கந்தலாகி நைந்து போய்விடுவாள், அதை எவனாச்சும் பார்ப்பானா? அதனால் ஆம்பிளைன்னு மாத்தினான், அதே ஐஸ் காஷ்மீர், அப்படியே தீவிரவாத மசாலா, படம் ரெடி.

      இதை இன்ஸ்பிரேஷன் ன்னு சொல்லிக்கலாம், ஆனால் மணி என்ன பண்ணிச்சு என்பது தான் முக்கியம். அது காப்பிதான் அடிச்சது.

      Delete
    4. God Father : செங்கோவி, நீங்க சினிமா திரைக்கதை பத்தி ஏதோ மேல்படிப்பு படிச்சிட்டு ஆராய்ச்சி எல்லாம் பண்ணி டாக்குட்டரு பட்டம் வாங்கிட்டு வந்து பதிவு போட்டுக்கிட்டு இருக்கீங்க. திரைக்கதை அப்படின்னா என்னன்னு இன்னும் எனக்குத் தெரியாது. அதை ஒப்புக் கொள்வதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை. ஒரு சாமான்யனாக நான் சொல்வது இது தான் இந்தப் படத்தைப் பார்த்தால் அந்தப் படத்தில் உள்ளது போலவே காட்சிகள் உள்ளன. இவனுங்க ஒரு படத்திலிருந்து மொத்தமா உருவுவதில்லை. அங்கங்கே கொஞ்சம் கொஞ்சமா உருவுறானுங்க இந்தியாவுக்கு ஏத்த மாதிரி ஆம்பிளை பொம்பளைன்னு மாத்துறானுங்க, கற்ப்பு தாலி செண்டிமெண்டுன்னு நுழைக்கிறானுங்க படம் பண்ணுறானுங்க. அவ்வளவுதான் எனக்குத் தெரியும். அதுக்கு நீங்க வேற வேற பேரு வச்சு சொல்லிக்கிட்டு இருக்கீங்க, அதுதான் வித்தியாசம். விபச்சாரியை பாலியல் தொழிலாளி என்று பெயர் மாற்றம் செய்துவிட்டால் அவள் என்ன கலெக்டர் உத்தியோகம் பார்க்கப் போறாளா என்ன? அதே dirty வேலையைத்தான் செய்யப் போகிறாள், வக்கிரமான பேரை மாத்தியாச்சுன்னு அற்ப சந்தோஷம் மட்டுமே மிஞ்சும், வேறு எந்த மாற்றமும் அவள் வாழ்க்கையில் ஏற்படப் போவதில்லை. இங்க நீங்க இன்ஸ்பிரேஷன், தழுவல் லொட்டு லொசுக்குன்னு என்ன பேர் வேண்டுமானாலும் வச்சுக்கோங்க, அது அத்தனையும் விளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் கட்டிவிட்டது மாதிரிதான். அவன் செஞ்ச வேலையை அது மாற்றப் போவதில்லை.

      Delete
    5. ரைட்டு..பிரமாதம்!

      Delete
  6. ஆனா ஒரு விஷயம்யா, இந்த இளிச்சவாயன் மிஷ்கின் நந்தலா காப்பி தான் அடிச்சேன்னு இளிச்சவா தனமா ஒத்துகிட்டாரு. நீர் மட்டும் கூட இருந்திருந்தால் இல்லைன்னு ஆணித்தரமா நிரூபிச்சிருப்பாரு!!

    உம்மோட பதிவை படிச்சா நாம் இதுவரைக்கும் காப்பியா அடிச்சோம் என்ற சந்தேகம் உலக நயாகனுக்கே வந்திடும்!!

    ReplyDelete
    Replies
    1. நந்தலாலா காப்பி இல்லை தான். ஏன் ஒத்துக்கிட்டாருன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். (ஹி..ஹி..சும்மா தமாசு!)

      Delete
  7. சுவாரஸ்யமான விவரங்கள். கிட்டத்தட்ட எல்லாப் படங்களுமே காபிதான் என்று சொல்லுமளவுக்கு 1935 லிருந்தே இந்த வைபவத்தைச் செய்திருக்கிறார்கள்! என் பங்குக்கு நானும் ஒன்று (நிறைய சொல்ல முடியும் என்றாலும்) பழைய பட உதாரணம் ஒன்று
    அன்பே வா = கம் செப்டம்பர்!

    ReplyDelete
    Replies
    1. தொழிற்நுட்பம் முன்னேறாத காலத்தில் எதை எதையோ செய்து கஷ்டப்பட்டு படம் எடுத்தனர். அதையாவது ஒப்புக்கொள்ளலாம். ஆனால் இன்று...

      Delete
  8. ஸீன் பை ஸீன் காபி அடிப்பதற்கு 'ப்ரூவ்ட் சப்ஜெக்ட்' என்று பெயராம். ஆங்கிலம் என்றில்லை, இந்தியாவின் பிற மொழிகளிருந்து காபி அடிக்கும்போதும் இப்படிச் செய்யக் காரணம் அந்த ஒரிஜினல் படம் போலவே இதுவும் வெற்றி பெற வேண்டும் என்ற காரணம்தானாம். 'தமிழ் சினிமாவின் கதை' என்ற புத்தகத்தில் அறந்தை நாராயணன் சொல்லியிருக்கிறார். (செவ்வாய்க் கிழமைதான் எங்கள் ப்ளாக்கில் இந்தப் புத்தகம் படித்ததின் பகிர்வை வெளியிட்டோம்)

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு காப்பிரைட் வாங்கிட்டு காப்பி அடிக்கணும். கதாசிரியன் தலையில் மிளகாய் அரைக்கக்கூடாது.

      Delete
  9. அதானே... எல்லாத்துக்கும் பதில் (தானே...?) ரெடியா வச்சிருக்கும் போது, குற்றச்சாட்டு வைக்கலாமா...? ரூம் போட்டு யோசித்தீர்களோ...? ஹிஹி...

    ReplyDelete
  10. pizza and villa are inspired from movie 1408

    ReplyDelete
    Replies
    1. பீட்ஸா படம் 'சைலண்ட் ஹவுஸ்' இன் காப்பி, படத்துல டார்ச் லைட் மட்டும் வச்சு லைட்டிங் செய்தாப்போல காட்சி அப்படியே இருக்கும்.

      கதையில் ஒரே மாற்றம் "வைரம்,காதல்' என்பது தான்.

      Delete
    2. silent house traier

      http://youtu.be/VD88EFBFuos

      Delete
    3. வேற்றுமொழி ஹாரர் வகைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு பிஸ்ஸா, வில்லா போன்ற படங்கள் மொக்கையாக இருக்கும். தமிழில் ஒரு புதிய முயற்சியாக வேண்டுமானால் வரவேற்கலாம்.

      Delete
  11. பாகவதரே,

    இப்போத்தான் கொலாப்ஸ் மாமா விவகாரமே சூடாகிட்டு இருக்கு அதுக்குள்ல செங்கோவி பக்கம் தாவிட்டீர் ,அவரு பாவம்யா "காமெடி" பதிவர் , இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் அவ்வ்!

    # கோகநாயகர் காப்பி அடிச்ச படத்தை கணக்கு பன்றதவை விட காப்பி அடிக்காத படத்தை கணக்கு செய்யலாம் ,ஈசியா இருக்கும் :-))

    கடைசியா எடுத்த விசுவரூபம் படம் "டிரெயிட்டர்" படத்தோட அட்டக்காப்பி நடுவ கொஞ்சம் "அவாள் பாணி" காமெடிப்போட்டுக்கிட்டார் அவ்ளோ தான்.

    உத்தம வில்லன் வந்தா 'ஒரு ஆராய்ச்சி' இருக்கு படம் வரட்டும்,போஸ்டர் கூட கேரள "தெய்யம் கூத்து" கலையின் ஒப்பனை,அதுவும் ஒருத்தர் எடுத்த போட்டோவ சுட்டு அவ்வ்!

    ReplyDelete
    Replies
    1. என்னைப் புரிஞ்சு வச்சிருக்கிறதுக்கு நன்றி வவ்வால்.....அவ்வ்!

      Delete
    2. செங்கோவி,

      காமெடிப்பதிவர் என சொன்னது ,நீங்க நகைச்சுவையா எழுதுறவர், சண்டைக்குலாம் வரமாட்டார்னு சொல்ல ,பாகவதர் ஒரு சண்டைக்கோழி ,உம்மை காக்கவே அப்படி சொன்னேன், வேண்டும்னா ஒருக்கா "சண்டைப்போட்டு" பாருங்க ,நாங்களாம் கை தட்டி ,விசில் அடிக்க ரெடி :-)

      -------

      திரைக்கதை பத்திய பதிவெல்லாம் பார்த்தேன் , கவிதை எழுதுவது எப்படினு புக்கு படிச்சு கவிதை எழுத முடியாது என நினைப்பவன் நான் ,எனவே சும்மா வேடிக்கை பார்க்கிறேன், ஒருக்காலத்தில் திரைக்கதை பத்திய புக்கெல்லாம் கூட படிச்சு பார்த்திருக்கேன் , எல்லாம் சுய முன்னேற்ற நூல்கள் போல தான் படிக்க நல்லா இருக்கும் அவ்ளோ தான்!

      எடிட்டர் லெனின் , நடிகர் ராஜேஷ் கூட சில உலக சினிமா நூல்கள் எழுதியிருக்காங்க படிச்சு பாருங்க.

      Delete
    3. \\
      கவிதை எழுதுவது எப்படினு புக்கு படிச்சு கவிதை எழுத முடியாது என நினைப்பவன் நான்\\

      \\எல்லாம் சுய முன்னேற்ற நூல்கள் போல தான் படிக்க நல்லா இருக்கும் அவ்ளோ தான்!\\

      வவ்ஸ்.........நீ எங்கியபோயிட்டேய்யா.........!! மேட்டர் சுளுவா புரியுது!!

      Delete
  12. \\ இப்போத்தான் கொலாப்ஸ் மாமா விவகாரமே சூடாகிட்டு இருக்கு\\ அப்படியா!! எங்கே இந்த கதை நடக்குது? லிங்க் இருந்த குடு, போய்ப் பார்க்கிறேன். எனகென்னன்னா, அமுதவன் சார், குட்டி பிசாசு மாதிரி இருக்கிறவங்க கொஞ்சம் சங்கடப் படறாங்க, அதனால கொஞ்சம் பல்லை கடிச்சிகிட்டு இருக்கேன். அந்த நாதாரி என்ன பண்ண போறன்கிறதை வச்சுத்தான் அடுத்து என்ன செய்யணும்னு இருக்கு.

    \\அவரு பாவம்யா "காமெடி" பதிவர் , இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் அவ்வ்!\\

    சீனுக்கு சீனு ஈயடிச்சான் காப்பியடிச்சு வச்சிருக்கானுவ, அது மாதிரி ஆயிரத்தெட்டு வீடியோ ஆதாரம் இருக்கு. ஆனா அவரோட பதிவைப் பாரு, அக்கிரமத்துக்கும் எழுதி வச்சிருக்காரு. எதுவுமே காப்பியில்லையாம்,அப்படி சொல்றவன் மடையனாம். படம் எடுத்தவனே ஒத்துகிட்டான், இவரு இல்லைன்னு அவனுங்க வக்கீலாயி வாதாடிகிட்டு இருக்காரு.

    ReplyDelete
  13. \\# கோகநாயகர் காப்பி அடிச்ச படத்தை கணக்கு பன்றதவை விட காப்பி அடிக்காத படத்தை கணக்கு செய்யலாம் ,ஈசியா இருக்கும் :-))\\

    ஹா........ஹா........ஹா........ஹா........ஹா........ஹா........ Super point!!

    ReplyDelete
    Replies
    1. பாகவதரே,

      மாமா தொடர் எழுதுறாராம்,2 பார்ட் போட்டிருக்கு,மொத்தமா எழுதட்டும் பார்த்துட்டு வச்சிப்போம் கச்சேரியனு இருக்கேன்.

      #//எனகென்னன்னா, அமுதவன் சார், குட்டி பிசாசு மாதிரி இருக்கிறவங்க கொஞ்சம் சங்கடப் படறாங்க, அதனால கொஞ்சம் பல்லை கடிச்சிகிட்டு இருக்கேன். //

      இது போல யாராவது சங்கடப்படுவாங்கனு தான் ,நானும் இன்னும் ரியாக்ட் செய்யாம இருக்கேன்.

      ------------
      # செங்கோவி "லோகத்தின்" விசிறியா இருப்பார் போல , அப்புறம் என்ன செய்ய அவ்வ்!

      #ராஜப்பார்வை படம் "பட்டர் ஃபிளைஸ் ஆர் ஃப்ரீ" என்ற படத்தின் காப்பி ,கிளைமாக்ஸ் மட்டும் நீர் சொன்னப்படம்.

      இந்தியன் படம் "சிவாஜி ,ஜெமினி, லோகம் எல்லாம் நடிச்ச நாம் பிறந்த மண்ணின் அட்ட காப்பி ,இயக்கம் சங்கர், அப்பா ,பையனா லோகமே நடிச்சிக்கிட்டது அவ்வ்!

      இப்படி நிறய சொல்லலாம்,

      லோகநாயகரின் எல்லாப்படத்தின் மூலமும் ஓரளவு அலசி வச்சிருக்கேன் ,அதெல்லாம் சொன்னா சண்டைக்கு தான் வருவாங்க அவ்வ்!

      Delete
    2. //லோகநாயகரின் எல்லாப்படத்தின் மூலமும் ஓரளவு அலசி வச்சிருக்கேன் ,அதெல்லாம் சொன்னா சண்டைக்கு தான் வருவாங்க அவ்வ்!//

      விருமாண்டி படத்தின் க்ளைமேக்ஸ் சண்டை ஸ்பார்டகஸ் படத்திலிருந்து உருவப்பட்டது.

      இப்படி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். உலகநாயகனின் படத்தில் காப்பியடிக்கப்பட்ட எல்லா காட்சிகளையும் கண்டுபிடிப்பது எளிதல்ல. அவரு எவ்வளவு படங்களைப் பார்த்து இன்ஸ்பயர்(?) ஆகி ஒரு படம் எடுத்தாரோ?

      Delete
  14. \\silent house traier\\ இது எந்தப் படம்?

    ReplyDelete
  15. ஜெயதேவ்,

    பதிவர்களை தாக்கி ஒரு தனிப்பதிவிடுவதை செய்பவர் செய்யட்டும். அது அவருடைய முழுநேரவேலை. அதை யாரும் சீண்டுவதுமில்லை, பதிலிடுவதுமில்லை. இதற்கு பதில் சொல்வதைவிட கோழிக்கு இறகு பிடுங்கலாம்.

    நீங்கள் ஒரு ஆன்மீகப் பதிவு ஒன்று போடுங்கள், வந்து கலாய்க்கிறோம். :)

    ReplyDelete
  16. நமக்கு சினிமா அறிவு கம்மி! சுவாரஸ்யமான விவாதங்களை ரசித்தேன்! நன்றி!

    ReplyDelete
  17. பரவாயில்லையே. டக்கென்று 'டாபிக் மாற்றிக்கொண்டு' போய்விடுவதற்கு நிறைய விஷயங்கள் கைவசம் வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே. சினிமாக்காரர்களும் உங்களை அப்படியெல்லாம் கைவிட்டுவிடத் தயாரில்லை. என்ன ஒன்று, பதில் சொல்வதற்காகவே நிறையப் படங்கள் பார்க்கவேண்டியதிருக்கும். அத்தனை நேரம் உங்களுக்கு இருக்கிறதா என்ன?

    ReplyDelete
    Replies
    1. @ Amudhavan

      சார் நீங்க ஒரு படத்துக்கு கதை-திரைக்கதை -வசனம் எழுதியிருக்கீங்க. எது காபி?- எது இன்ஸ்பிரே ஷன் ஆவறது? இது ரெண்டுக்கும் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? எதை வச்சு ஒரு கதையை லவட்டிட்டான்னு சொல்றது? முடிஞ்சா ஒரு பதிவா கூட போடுங்க!!

      Delete
  18. திரைப்படத்துறையைச் சேர்ந்த நண்பர்களுடன் நல்ல நட்புடனும், நல்ல தொடர்புகளுடனும் இருக்கிறேன். அதனால் ஓரளவுக்கு மட்டும்தான் திரைப்படத்துறைப் பற்றிப் பேச இயலும். எல்லா சமயங்களிலும் எல்லாவற்றையும் சொல்லிவிடமுடியாதல்லவா?

    நீங்கள் பாட்டுக்கு உங்கள் பாணியில் வெடிகளைக் கொளுத்திப் போட்டுக்கொண்டே இருங்கள். உங்களை யாரும் தடுக்கப்போவதில்லை.

    ReplyDelete
  19. //இது யார் வழுக்கைத் தலையன், யார் இல்லை என்று சொல்வது போல கஷ்டமான கேள்வி. என்ன வழுக்கைத் தலையனா, அதுக்கு இங்க என்ன சம்பந்தம்ன்னு புரியவில்லை தானே!! பொறுங்கள் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்!! ஒருத்தனுக்கு தலையில் ஒரு முடி கூட இல்லை என வைத்துக் கொள்வோம். அவனை வழுக்கைத் தலையன் என்போம். அவன் தலையில் ஒரே ஒரு முடி இருபதாகக் வைத்துக் கொள்ளுங்கள். இப்போ அவன் வழுக்கைத் தலையன் இல்லை என்போமா? //
    செம உதாரணம்

    ReplyDelete
  20. காப்பி சுவையாக இருந்தது.

    ReplyDelete
  21. ஒரு வழியாக சச்சரவு ஏற்படுத்தாத ஒரு பதிவை வெளியிட்டு அப்பாடா என்று சொல்ல வைத்துவிட்டீர்கள். பலே பலே. மழை ஓய்ந்து விட்டது போல் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விதமா டீல் பண்ண வேண்டியிருக்கு காரிகன், ரொம்ப நாள் பொறுமையாத்தான் இருந்தேன், ஆனா அது ஒர்க் அவுட் ஆகவில்லை, அப்புறமா ரூட்ட மாத்த வேண்டியாதாச்சு!!

      Delete