Thursday, May 23, 2013

இந்த கேள்விகளுக்கு யாரவது பதில் சொல்லுங்களேன்!!

கேள்விகளைக் கேட்டிருப்பவர்: களவாணி பய
என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் (part-1)

1.நாய சுடுற மாதிரி நடு ரோட்டுல சுடனும்ன்னு சொல்லுறாங்களே...எந்த நாய நடு ரோட்டுல சுட்டுருக்காங்க...??

2.காமசூத்ரா தமிழ் பிட்டுப்படமா இல்ல மலையாள பிட்டுப்படமா ..?

3.மலையாளிகளின் ஓணத்துக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. கேரளாவில்பொங்கலுக்கு விடுமுறை விட்டார்களா..?

4.தெலுங்கு வருட பிறப்புக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. ஆந்திரத்தில் தமிழ் புத்தாண்டுக்குவிடுமுறை விட்டார்களா..?

5.புல் டைமா இருந்த Facebook இப்ப பார்ட் டைமா ஆயிடுச்சி உருப்புட்ருவனோ....?

6.பெண்களின் அலைபேசியில் Missed Callகள் இருக்குமா ,இருக்காதா ?

7.அழகான பெண்களின் அப்பன்களெல்லாம் முரட்டுத்தனமாய் இருப்பது எங்க ஏரியாவுல மட்டுந்தானா..??

8. இந்த அன்ட்ராய்ட்போனை கண்டுபுடிச்சவன்ட ஓரே கேள்வி தான் கேக்கனும்-நாய்க்கு பேருவெச்சிங்களே,திங்க சோறுவெச்சிங்களாடா..?  [
கருமம் எந்த நேரம் பார்த்தாலும் பெட்ல இருக்குற பேசண்டுக்கு க்ளுகோஸ் எத்துற மாதிரி இந்த போனுக்கு சார்ஜ் போட வேண்டி இருக்கு ...:((]

9.ஆப்பிள் என்பது இங்கிலீஷ் பெயர் என்றால் அதற்கு ஏன் இன்னும் தமிழ் பெயர் வைக்கவில்லை..?

10.தக்காளி..எவ்ளவோ டெக்னாலஜி முன்னேறியும் ATM 'ல அஞ்சு ரூபா,பத்து ரூபா வர்றா மாதிரி கொண்டுவர மாட்டேங்குறாங்களே அது ஏன் ..??
 
என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் (part-2)

1.வேலைசெய்ற மாதிரியே சீரியஸா மூஞ்ச வச்சிருந்தாலும்,என்ன Facebook ?னு கேக்குறானுக எப்டிதான்டா கண்டுபிடிக்கிறீங்க ராஸ்கல்ஸ்?!

2.பொண்ணுங்க அன்பானவங்க ன்னா, குழந்தைங்க எல்லாம், ஏன் “மிஸ் அடிப்பாங்க, திட்டுவாங்க” ன்னு பயப்படுறாங்க..?

3.Vote ID CARD- புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராயவது அழகாய் இருப்பாரா ..?

4.பொண்ணுங்க கிட்ட பேசும்போது , கண்ணை பார்த்து தான் பேசணுமாமே .? அப்புறம் எதுக்கு ஃபுல் மேக்கப்..? கண் மை மட்டும் போதாதா..?

5.தன்காதலை புனிதம் என்று சொல்லும் எந்த அண்ணனும் தங்கை காதலை அப்படி நம்புவதில்லை ஏன்?

6.வெளிய பொண்ண பாத்தா பொறிக்கினு சொல்றாங்க,,வீட்ல போய் பாத்தா மாபிளைன்னு சொல்றாங்க அது ஏன் ..?( கிரேசி வேர்ல்ட்..)

7.இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள்" என்று எட்டடி உயரச் சுவற்றில் எழுதியிருக்கிறார்கள். சுவற்றில் ஏறியெல்லாமா சிறுநீர் கழிக்கிறார்கள் ?

8.எப்போ பேஷன் டிவி வச்சாலும் அதுல வர பொண்ணுங்க நடந்துகிட்டே இருக்காங்க அதுனாலதான் அவங்க எப்பவும் ஒல்லியாவே இருக்காங்களோ...??

9.திருமணத்தில் தாலி கட்டும்போது மருமகனை நினைத்து பெண்ணின் பெற்றோர்கள் அழுவது ஏன்....??

10.எல்லா public toiletலயும் I LOVE YOU ன்னு எழுதிவச்சுருக்கானுக! டேய் நீங்க லவ் பண்ணுரது காதலியவா? கக்கூசயா?
என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் (part-3)

1.மால்களில் பார்க்கக்கூடிய பெண்கள் எல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கும் போது தட்டுப்படுவார்களா?

2.நண்பர்களுடன் சாப்பிட்டு முடிச்ச பின்னாடி, பில் தரும்பொழுது அழைப்பு வர மாதிரி செல்போன எங்கைய்யா வாங்குறீங்க?

3.இருபதாயிரத்துக்கு துணி எடுத்தாலும்,20 ரூபா கூட பெறாத கட்டை பைக்கு கடைக்காரன் கூட மல்லுகட்டுற பழக்கத்தை நம்ம தாய்மாருங்க விட மாட்டாங்களா?

4.வேட்பாளர்கள் வீடு வீடாக வந்து வோட்டு கேட்கும்போது, தேர்தல் கமிஷன் ஏன் வீடு வீடாக வந்து வோட்டு வாங்கி செல்லகூடாது..?

5.மொபைலில் மிஸ்டு கால் பகுதியை பெண்கள் பகுதி என்றும், டயல்டு காலை ஆண்கள் பகுதி என்றும் இன்னும் ஏன் மாற்ற வில்லை ..?

6.பைக்குக்கு பின்னாடி dad's gift , sister's gift போடுற பசங்க, மாமனார் கிஃப்ட்ன்னு மட்டும் எழுத வெட்கப்படுவது ஏன்..?

7.கையில் தோசை கரண்டி வைத்திருக்கும் போதே "தோசை எப்புடியுருக்குங்க" என்பது குடும்ப வன்முறையின் கீழே வராதா ..?

8. (a + b)2 = a2 + 2ab + b2... தக்காளி, என்னிக்கு இந்த கணக்கு எனக்கு வாழ்க்கைல எப்படி உதவப்போகுது..?

9.கஞ்சா கடத்தும்போது புடிச்சா அதுக்கு மதிப்பு போடுறாங்களே அதுலென்ன MRP போட்டுருக்குமா?

10. 500-வதாக எடுத்துப் போட்ட சேலையை விடுத்தும் வேறொன்றை தேடிய பெண்ணை எதிர் கொள்ளும் சேல்ஸ்மேனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு இன்னும் ஏன் தரவில்லை ..?
 

26 comments:

  1. /////////
    .பைக்குக்கு பின்னாடி dad's gift , sister's gift போடுற பசங்க, மாமனார் கிஃப்ட்ன்னு மட்டும் எழுத வெட்கப்படுவது ஏன்..?
    /////////
    அப்படிபார்த்தா மொத்த வண்டியிலும் போடவேண்டியிருக்கும் அதான் போடுறது இல்லை...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சௌந்தர்!!! அப்பப்போ கடைப் பக்கம் வாங்க!!

      Delete
  2. தூங்கிறவனை எழுப்பி விடலாம் ,,,தூங்கிறமாதிரி நடிக்கிற 'களவாணிப் பயலை 'எப்படி எழுப்புறது ?அவனை நீங்க முதல் கேள்வியிலே சொன்னமாதிரி செய்ஞ்சுட வேண்டியது தான் !அதுதான் சரியானப் பதிலாப் படுது !

    ReplyDelete
    Replies
    1. @ Bagawanjee KA

      You have got a good sense of humour!! Thanks for your first visit sir!!

      Delete
  3. ஜெயதேவ் அது எப்படி எல்லா கேள்வியுமே பதில் இல்லாத கேள்வியா கேட்டிருக்கீங்க? நாங்களும் ரூம் போட்டு யோசிப்போம்ல.

    ReplyDelete
  4. கேள்வி கேட்டே பெயர் வாங்கும் சங்கத்தில் நீங்கதான் தலைவர் போல! அருமையான கேள்விகள்தான்! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. @ கும்மாச்சி
      @ s suresh

      அய்யய்யோ இந்த அளவுக்கு நமக்கு மூளை இல்லீங்க இது Facebook -ல் களவாணிப் பய என்பவருடைய கேள்விகள். வருகைக்கு நன்றி.

      http://www.facebook.com/ganeshsai86?hc_location=timeline

      Delete
  5. குடும்ப வன்முறையா ? லோக்பால் பில்ல இத சேர்த்திட்டாங்களா ?
    இந்த மாதிரி கேள்வி கேட்கும் உரிமை எந்த நாட்டில் இருக்கு ?

    ReplyDelete
  6. காமசூத்ரா - ஹிந்தி படம்
    தமிழ்படமாயிருந்தா “காமசூத்திரம்”- ன்னு இருக்கும். தெலுங்குல “காமசூத்திரமுலு” - ன்னு இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. @ Ponchandar

      லாஜிக்கா தின்க் பண்றீங்க, சூப்பர்!!

      Delete
  7. பாகவதரே,

    கோடை லீவுல பேரப்புள்ளிங்க வூட்டுக்கு வந்திருக்கா, மொக்கை எல்லாம் அவங்க கூட பேசி தேத்துனாப்போல இருக்கு :-))

    நாங்களும் இது போல நெறிய மொக்கை போட்டு வச்சிருக்கோம்,அதுலாம் சொன்னோம் டரியல் ஆகிப்பூடூவீர்.

    # வெள்ளைக்காரன் காலத்தில நாய்த்தொல்லை அதிகமானால் சுட்டுத்தான் கட்டுப்படுத்துவாங்க அதான் அப்படி சொல்லுறது பழக்கத்தில் வந்திருச்சு. அதே போல டிராபிக்கே இல்லாம காலியா ரோடு இருந்தாலும் , இந்தியர்கள் நடு ரோட்டில் நடந்து போகக்கூடாது, ரோட்டு ஓரமாத்தான் போகணும்.

    இப்போ கூட மூளைக்காய்ச்சல் ஊருல பரவுச்சுனா, கண்ணில் தென்ப்படும் பன்னியை எல்லாம் சுட சொல்லி கலெக்டர் உத்தரவுப்போடுவார்,எதுக்கும் பெருமாலை வராக அவதாரம் எடுத்து வரும் போது சாக்கிரதையா வரச்சொல்லும் ,நடு ரோட்டில ஓட விட்டு சுட்டுறப்போறாங்க :-))

    ReplyDelete
    Replies
    1. @ வவ்வால்

      \\கோடை லீவுல பேரப்புள்ளிங்க வூட்டுக்கு வந்திருக்கா, மொக்கை எல்லாம் அவங்க கூட பேசி தேத்துனாப்போல இருக்கு :-))\\ உங்க பேரப் புள்ளைங்களை என் வீட்டுக்கு அனுப்பப் போவதாகச் சொல்லவேயில்லையே!! அனுப்புங்க என் குழந்தைகளோடு விளையாடட்டும்!!

      \\இப்போ கூட மூளைக்காய்ச்சல் ஊருல பரவுச்சுனா, கண்ணில் தென்ப்படும் பன்னியை எல்லாம் சுட சொல்லி கலெக்டர் உத்தரவுப்போடுவார்\\ மூளைக் காய்ச்சல், பன்றியை கடித்த கொசு மனிதனைக் கடிப்பதால் வருவது. கொசுவை ஒழிக்க வக்கில்லை, அதனால பன்னியை கொல்லுவீங்க. ஆஹா......... அறிவாளிங்கையா நீங்க....நல்லா வருவீங்க!!

      Delete
  8. ஓணத்துக்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் தான் லீவு, பொங்கலுக்கும் கேரளத்தின் சில மாவட்டங்களில் லீவுண்டு. நாயை சுட்டுக் கொல்லும் வழக்கம் முன்பிருந்தது. கேள்விகள் எல்லாம் அத்தனை அப்பாடக்கரில்லை சிம்பிள் தான். யோசிச்சாலே பதில் கிடைக்கும்.

    ReplyDelete
  9. தாஸ் இது இந்தப் பதிவுக்கான பின்னூட்டம் இல்லை. வினவில் சென்ற வருடம் ஒரு பதிவின் பின்னூட்டத்தில் நீங்கள் கலந்துகொண்டு 'கலக்கிய' விஷயங்களை இப்போதுதான் படித்து முடித்தேன்.
    ஒரு பதிவுக்கு இத்தனைப் பின்னூட்டங்களா? எழுநூற்றுச் சொச்சம் பின்னூட்டங்கள் பெற்ற ஒரு பதிவு தமிழில் இது ஒன்றாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன். அங்கு என் கருத்தைப் பதித்துவிட்டுத்தான் வருகிறேன். அதையே இங்கும் பதிகிறேன்.
    'ஆரம்பத்தில் மிக சீரியஸாகச் சென்ற பின்னூட்டங்கள் கடைசியில் ஒருவரை ஒருவர் சாடிக்கொள்வதாகவும், சபித்துக்கொள்வதாகவும் மாறியது கொஞ்சம் இடறல்தான்.
    ஆனால் ஒன்று,
    எம்மாதிரியான அஸ்திரங்கள் தம்மை நோக்கி வீசப்பட்டபோதும், எத்தனைப்பேர் நேரடியாகவும் மறைந்திருந்தும் தாக்கியபோதும் தனியொரு ஆளாக நின்று அத்தனையையும் சமாளித்து அவ்வளவு பேருக்கும் உரிய முறையில் பதிலடிகள் தந்து கடைசிவரை வீரியம் குறையாமல் விவாதித்த ஜெயதேவ் தாஸின் திறமை வியக்க வைக்கிறது. அவருக்கு ஆதரவு தெரிவிக்க ஆன்மிக அன்பர்கள் யாருமே இல்லையா, அல்லது ஆன்மிக அன்பர்கள் யாருமே வினவு படிப்பதில்லையா என்ற சந்தேகம்தான் வந்திருக்கிறது.
    ஜெயதேவ் தாஸின் வாதங்களுடன் ஒத்துப்போகிறேனோ இல்லையோ அது வேறு விஷயம். ஆனால் இத்தகு விவாதிக்கும் திறன் சாதாரணமானது இல்லை என்பதை மட்டும் சந்தோஷத்துடன் பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அமுதவன் சார். உங்க பதிலை முன்னரே பார்த்தேன்!! வினவு தளத்தில் முதலில் நல்லா பேசுவது போல பேசுவாங்க போகப் போக வடிவேலு காமடியில் வருமே முன் பக்கம் சலவை சட்டை அப்படியே கொஞ்ச நேரம் பேசி விட்டு பின் புறம் திரும்பினால் கந்தலான சட்டையாக இருக்கும், உலர ஆரம்பிப்பானுங்க. அந்த மாதிரி கிறுக்குப் பசங்க. நானும் வாங்கடா நீங்களா நானா பார்த்துடுவோம்னுபண்ணியவேலை தான் அது !!

      Delete
  10. //கருமம் எந்த நேரம் பார்த்தாலும் பெட்ல இருக்குற பேசண்டுக்கு க்ளுகோஸ் எத்துற மாதிரி இந்த போனுக்கு சார்ஜ் போட வேண்டி இருக்கு ...:(//
    நல்ல உவமை ஜெயதேவ்.சார்.
    ஒரே நாள்ல ஏராளமா போட்டுட்டீங்க.

    ReplyDelete
  11. சூப்பர் கேள்விகள். :))

    ReplyDelete
  12. //வேட்பாளர்கள் வீடு வீடாக வந்து வோட்டு கேட்கும்போது, தேர்தல் கமிஷன் ஏன் வீடு வீடாக வந்து வோட்டு வாங்கி செல்லகூடாது..?//- இது நல்ல யோசனையா இருக்கே..!
    எல்லா கேள்விகளும் பதில்- சிரிப்புத்தான்! கலக்கலான நகைச்சுவை கேள்விகள்!
    த.ம-7

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ 6 ஒட்டுதானே இருக்கு, ஏழாவதா உஷா போட்ட ஓட்டு காணோமே, யோவ் யார் அடிச்சிருந்தாலும் திரும்ப குடுத்துடுங்கைய்யா...............

      Delete
    2. Actually 7th is mine. She must have miscounted! LOL

      Delete
  13. இந்தக் கேள்வியை எல்லாம் படித்ததும்
    அடடா... இவருக்கு “நவீன நக்கீரர்“ என்ற
    பட்டம் கொடுக்கலாம் என்று நினைத்தேன்.
    ஆனால்... படித்தில் பிடித்தது...என்றதும்...விட்டாச்சி!

    இருந்தாலும் தேடிப்பிடித்து எங்களுக்கும் கொடுத்த
    பதில் தெரியாத... அல்லது யோசிக்கத்துாண்டும்
    கேள்விகளுக்கு மிக்க நன்றி.
    த.ம.8

    ReplyDelete
  14. ஹி ஹி எப்புடியெல்லாம் யோசிக்கிறாங்க

    ReplyDelete