அன்புள்ள மக்கள்ஸ்,
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட சிலர் மாட்டியிருக்காங்க, மேலும் பலர் இதில் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்கள். அப்புறம், மெ[பொ]ய்யப்பன் கைது, ரெய்டு, விசாரணை என்று செய்தித் தாட்கள் முதல் பக்கம் முழுவதும் இதே செய்திகள் பரபரப்பாக வந்து கொண்டிருக்கின்றன. இதே வேகத்தை நாட்டில் நடந்த மத்த ஊழல்களுக்கும் காட்டியிருந்தா நாம் இந்நேரம் ஜப்பானையும் சீனாவையும் தோற்க்கடிச்சு எங்கேயோ போயிருப்போம். ம்ம்.... அதை நினைச்சா ஏக்கம் தான் வருது. அதுசரி, இது இப்படி பூதாகரமாக கிளம்பியிருப்பதன் பின்னணி என்னவாக இருக்கக் கூடும், என்று நாம் யோசித்தோம். நமக்குத் தோன்றியதை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.
கவனத்தை திசை திருப்பி காரியம் சாதித்தல் அப்படின்னு ஒரு கான்சப்ட் இருக்கு. அதாவது, ஒருவருடைய கவனத்தை ஒண்ணுமில்லாத விஷயத்தில் திருப்பிவிட்டு விட்டு பெரிய மேட்டரை லவட்டுதல். உதாரணத்துக்கு நம் வீட்டில் திரியும் பல்லிகள் . இவற்றை பூனை துரத்தினால் தங்களது வாலை கட் பண்ணி போட்டுவிட்டு அப்பால் போய்விடும், அந்த வால் அங்கேயே துடித்துக் கொண்டு கிடக்கும். துரத்தும் பூனை என்னடா அது என்று முன்னங்காலால் சீண்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் பல்லி எஸ்கேப் ஆகி பாதுகாப்பான இடத்துக்குப் போய் விடும். கவனத்தை திசை திருப்புவதில் இது ஒரு விதமானடெக்னிக் என்றாலும் தன் உயிரைக் காத்துக் கொள்ள தன் உடல் உறுப்பையே இழக்கும் பல்லியை குறை சொல்ல முடியாது.

இதே விஷயத்தை மனிதனும் செய்வான், ஆனால் அது மற்றவர்களிடமிருந்து எதையாவது அடிக்க!!. வங்கிகளில் இது நடக்கும். சில லட்சங்கள் பணத்தை தனது கணக்கில் இருந்து எடுத்துக்கொண்டு வெளியே வருபவர் முன்னர், சில நூறு ரூபாய்களை கீழே போட்டுவிட்டு, "சார் பணம் கீழே கிடக்கிறது பாருங்கள்" என்பார்கள். அந்த கூமுட்டை தான் கொண்டு வந்த லட்சங்களை காரில் வைத்து விட்டு இந்த நூறுகளைப் பொறுக்கப் போவார், அந்த சமயத்தில் லட்சங்கள் காணாமல் போயிருக்கும்.
தனி மனித அளவில் இது என்றால், தேசிய அளவில் வேறு மாதிரி நடக்கும். ஒரு அரசு ஊழல் போன்ற கடும் பிரச்சனைகளை சந்தித்து மக்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்ப்பட்டிருக்கும் தருணத்தில், அவர்கள் கவனத்தை வேறுபக்கம் திருப்பி விட்டு முக்கிய பிரச்சனைகளை மறக்கடிக்கச் செய்யும் செயல் இது. வாட்டர் கேட் என்ற ஊழலில் சிக்கிய அமரிக்க அரசு மக்களின் கவனத்தை திசை திருப்ப அப்பாவி வியட்நாம் மீது படையெடுத்து அவர்களை பல இன்னல்களுக்குல்லாக்கியது. ஆனால், வியட்நாம் எதிர்த்து போரிட்டு அமரிக்காவை மண்ணை கவ்வச் செய்தது, மேலும் அமரிக்க மக்களை அவ்வாறு ஏமாற்றவும் முடியவில்லை, அவர்களில் பெரும்பாலானோர் இது தவறு என்று வெளிப்படையாகவே போராடி அந்நாட்டின் அதிபரை கீழே இறக்கினர். அந்த மாதிரி புத்திசாலி மக்கள் எல்லா நாடுகளிலும் இருப்பார்களா?
இங்கே கிரிக்கெட் ஆட்டக்காரன் மோசம் பண்ணிட்டான் என்று அரசியவாதி சொன்னால், அது "ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை" என்ற கதையாகத்தான் இருக்கும். நாட்டில் ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல் என்று திரும்பிய பக்கமெல்லாம் ஊழல். பேப்பரைத் திறந்தால் சுத்தி சுத்தி இதே மேட்டர். ஆளுங் கட்சியின் செம்பு ரொம்ப அடி வாங்கிகிட்டே இருக்கு. தாங்க முடியல. மக்கள் கவனத்தை வேறு பக்கம் திருப்பி விட வழி தான் என்ன? கிரிக்கெட் மேட்ச் நடத்தலாம். அது ஒன்னு தான் இந்தியாவின் உயிர் மூச்சு. ஆனா அது ஏற்கனவே ஊருபட்டது நடந்து கிட்டு இருக்கு. சரி இன்னொரு வழி, இந்த சூதாட்டத்தை கிளறி விட்டு விடலாம். இப்போ பாருங்க, நாலஞ்சு நாளா எவனாச்சும் நிலக்கரி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் அப்படின்னு பேசுறானா? மறந்திட்டான் இல்ல?

கொஞ்சம்.....இருங்க...... இதனால் கிரிக்கெட் மயக்கத்தில் இருந்து மக்கள் வெளியே வந்திட்டா? பொன் முட்டையிடும் வாத்தை வயிற்றைக் கிழித்து கொன்ற கதையாகி விடுமே? ஆனால், அது தான் நடக்காது. தலையில் இடியே விழுந்து செத்தாலும் நம்மாளு கிரிக்கெட் மேட்ச் நடக்கும் பொது TV பெட்டியை விட்டு நகர மாட்டான். இப்போ கூட பாருங்க, நாடே இத்தனை அல்லோகலப் படும் பொது, நேத்திக்கு நடந்த MI, RR மேட்சில் கூட்டம் குறைஞ்சுதா என்ன?
செய்தித் தாட்களுக்கும் தொலைக் காட்சிகளுக்கும்நல்ல தீனி, பரபரப்பு. அப்புறம் கொஞ்ச நாளில் நீங்களும் மறந்திடுவீங்க, இந்த சூதாடிகளும் எஸ்கேப். மேட்டர் புஸ் வானம் தான். சாமியார் மேட்டரில் இருந்து, லட்சம் கோடிகளில் நடந்த ஊழல் வரைக்கும் இதே கதை தான். இதிலே மட்டும் ஏதோ பெரிசா கிழிக்கப் போறானுங்கன்னு எதிர் பார்த்தால் ஏமாளி நாம் தான்.
ஆனா ஒண்ணுங்க. சீட்டாட்டம், கேரம் போர்டு, கிரிக்கெட்டு.......... இது மூனுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியலைங்க!!
இன்னொரு மொக்கைப் பதிவில் சிந்திப்போம்........வணக்கம் மக்கள்ஸ்......!!