Friday, February 15, 2013

டார்வினின் கறுப்புப் பெட்டிமேலே நீங்கள் படத்தில் காண்பது ஒரு மோட்டார்.  இது ஒரு மின்சார மோட்டரைப் போன்றது. இதில்,

Propeller- உந்தித் தள்ள உதவும் துடுப்பு   [படத்தில் Filament] 
Universal Joint-      இது Propeller-ஐ, மோட்டருடன் இணைக்க L வடிவ இணைப்பு,
Rotor-சுழலும் பகுதி
Stator -இது Rotor சுழல உதவும் நிலையான பகுதி
Drive Shaft with Bushings- சுழலும் பகுதியைத் தாங்கி நிற்கும் அச்சாணி, அடி விழாமல் பாதுகாக்கும் புஷ் அமைப்புடன்.

என அத்தனையும் உண்டு.
இதன் சுழற்சி வேகம் கொஞ்சம் ஜாஸ்தி!!  அதாவது ஒரு நிமிடத்திற்கு ஒரு லட்சம் தடவை வரை சுழல வல்லது!!  அவ்வளவு வேகமாகச் சுழன்றாலும் ஒரு முழு சுற்றில் கால் பகுதி முடிவதற்குள் இது சுழலுவதை நிறுத்த முடியும், பின்னர் எதிர்புறம் அதே வேகத்தில் உடனடியாகச் சுழலவும் முடியும்.  இதன் மூலம் மோட்டார் இணைக்கப் பட்டுள்ள பொருள் செல்லும் திசையை மற்ற முடியும்.  இந்த மோட்டார் H + அயனிகளை  [ஒரு ஹைட்ரஜன் அணுக்கரு அதாவது புரோட்டான்கள்!!]  எரிபொருளாகப் பயன்படுத்தி இயங்குகிறது. இதன் செயல்திறன் [Efficiency] 99% -க்கும் மேல், 100% -க்கும் அருகில்!!


இந்த மோட்டார்களின் சைஸ் தான் கொஞ்சம் சிறியது!!  நமது தலைமுடியின் தடிமனுக்குள் [Diameter] 80 லட்சம் மோட்டார்களை அடக்கிவிட முடியும்!!  அடடே அப்படினா நேனோ டெக்னாலஜி [Nano Technology] மாதிரி இருக்கேன்னு  உங்களுக்கு பொறி  தடுகிறதா!!   நீங்கள்   நினைத்தது   சரிதான்!!

அதுசரி இந்த மோட்டார்கள் எங்கே பயன்படுத்தப் படுகின்றன?   ஆரம்பத்தில் கல்லும் மண்ணுமாக இருந்த பூமியில் எளிய வடிவமைப்பைக் கொண்ட பாட்டீரியாக்கள் முதலில் தோன்றின என்று பரிணாம வாதிகள் சொல்கிறார்களே, அவற்றின் உடலில் தான் இவை காணப் படுகின்றன!! உண்மையில்  அவற்றின் உடலமைப்பு எளிதல்ல என்பதற்கு இது ஒன்றே மிகச் சிறந்த உதாரணம்.  பாக்டீரியாக்கள் நீந்திச் செல்ல இம்மோட்டர்கள் உதவுகின்றன.

கடைசியாக உள்ள படத்தில் நூலிழை போல உள்ள Flagellum பாக்டீரியா நீந்திச் செல்ல உதவுகிறது.  சில பாக்டீரியாக்களுக்கு இது ஒன்று மட்டுமே இருக்கும், ஆனால் பல Flagellum களைக் கொண்ட பாக்டீரியாக்களும் உண்டு.  இவற்றை ஒருங்கிணைந்து செயல்பட வைத்து  பாக்டீரியாக்கள் தங்கள் இயக்கத்துக்கு பயன்படுத்துகின்றன. 


இந்த மோட்டார் உருவாக மொத்தம் 40 வகை புரோட்டீன்கள் தேவைப்படும், அவற்றில் ஒன்று குறைந்தாலும் இந்த மோட்டார் இயங்காது, பாக்டீரியா நகராது, அவ்வாறு நகராமல் அதனால் உயிர் வாழ முடியாது.  எனவே இவை அத்தனையும் ஒரே சமயத்தில் தேவை என்பதால், பரிணாமம் நடந்திருக்க வாய்ப்பில்லை, ஒரே சமயத்தில் இது உருவானது என்று மைக்கேல் பேஹே [Michael Behe] என்ற உயிரியல் விஞ்ஞானி வாதிடுகிறார்.  மேலும் குறைக்க இயலாத சிக்கலான அமைப்பு [Irreducible Complexity] என்ற சொற்றொடரையும் இவர் அறிமுகப் படுத்தியுள்ளார்.  இதற்க்கு உதாரணமாக ஒரு எலிப்பொறியை இவர் காட்டுகிறார்.

ஒரு எலிப்பொறி அதன் பணியைச் செய்ய மேலே உள்ள படத்தில் உள்ள ஐந்து பாகங்களும் இருந்தால் மட்டுமே முடியும், அதில் ஒன்று இல்லையென்றாலும் அது பயன்படாது.  இதற்குப் பெயர்  மேலும் குறைக்க இயலாத சிக்கலான அமைப்பு [Irreducible Complexity.  மேலே சொன்ன மோட்டார் அதுபோல ஒரு அமைப்பு என்கிறார்.  இதற்க்கு எதிவாதம் செய்பவர்கள், ஏன் முடியாது வெறும் கட்டையை பேப்பர் வெயிட்டாகப் பயன்படுத்தலாம், அதன் ஸ்ப்ரிங் சேர்ந்தால் கிளிப் போல பிடித்துக் கொள்ள பயன்படுத்தலாம் என்று அதை மறுக்கிறார்கள்.  மேலே சொன்ன மோட்டரைப் போலவே அச்சு அசலாக விஷத்தைச்  செலுத்தும் சிரிஞ்சு போன்ற ஒரு அமைப்பை சில பாக்டீரியங்கள் பெற்றுள்ளதைக் கட்டி, இதோ பாருங்கள் இது மேலே சொன்ன மோட்டாரில் உள்ளதைப் போல வெறும் 20 புரதங்ககள் மட்டுமே உள்ளன, ஆனாலும் அதற்கும் ஒரு பயன் உள்ளதே என்று ஆதாரம் காட்டுகின்றனர்.  இதை கீழே உள்ள கானொளியில் பார்க்கலாம்.அட ஒரு சிரின்ஞ்சா கூடத்தான் இருக்கட்டுமே தானா எப்படிய்யா வரும்!!  எப்படியோ, எதை நம்புவது, எதை விடுவது என்பதே நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.


Irreducible Complexity பற்றிய மைக்கேல் பேஹே அவர்களின் டார்வினின் கறுப்புப் பெட்டி என்ற புத்தகம் மிகவும் புகழ் பெற்றது, அதைத் பதிவிறக்கிப் படிக்க இங்கே சொடுக்கவும்.

4 comments :

 1. மாப்ளே தாசு,
  நலமா? ஒரு வாரமா ஆளைக் காணோம்!!.

  அப்புறம் இந்த விடயம் எல்லாம் நாமே எழுதிவிட்டோம்!!
  http://aatralarasau.blogspot.com/2012/01/intelligent-design-5.html

  இதற்கான தீர்வும் சொல்லி விட்டோம்!!

  http://aatralarasau.blogspot.com/2012/01/1_25.html

  http://www.youtube.com/watch?v=ieKDLtrBXs0

  Thank you!!

  ReplyDelete
 2. இப்போதுதான் படிக்கிறேன்..! thank u!

  ReplyDelete
 3. அதைப் படித்து எங்களைப் போன்றவர்கள் புரிந்து கொள்வது எளிதல்ல என்றே நினைக்கிறேன். நீங்கள் எளிமையாக்கித் தந்திருக்கிறீர்கள். நன்றி.
  நீங்கள்,வவ்வால்,சார்வாகன்,வருண் விவாதங்கள் சுவாரசியமாக இருக்கிறது. பல்வேறு கோணங்களில் அலசுகிறீர்கள்.
  உசுப்பேற்றுவதற்காக சொல்லவில்லை. உண்மையாகத் தான் சொல்கிறேன். இன்னும் சொல்லப் போனால் உங்களுக்குள் உள்ள கருத்து மாறுபாடுகள் பல்வேறு விஷயங்களை வெளிக்கொணர்கிறது.

  ReplyDelete
  Replies
  1. \\உசுப்பேற்றுவதற்காக சொல்லவில்லை. \\ அங்க சார்கோல் மாமுவை கலாய்க்க சொன்னது!! தமாசுக்கு............ ஹ......ஹா..........ஹா...........

   Delete