Saturday, June 6, 2015

இரண்டு கொள்ளையர்கள், ஒரு அப்பாவி கதை.

ஒரு சலவைத் தொழிலாளி விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். 






அதை கண்கானித்துக் கொண்டிருந்த தக்ஷிணாமூர்த்தி என்ற ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று


“இந்த கல்லை எனக்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன், எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான்.

 உடனே சலவைத் தொழிலாளி   “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான்.

அதற்க்கு  தக்ஷிணாமூர்த்தி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் “ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம்” என்றான்.

சலவைத் தொழிலாளி “ அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.

தக்ஷிணாமூர்த்தி  எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்.

அதற்குள் அங்கு வந்த இன்னொரு பெண் வைர வியாபாரி கோமளவல்லி அந்த சலவைத் தொழிலாளியிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டாள் .

இதை சற்றும் எதிர்பாராத தக்ஷிணாமூர்த்தி  அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே ! நன்றாக ஏமாந்துவிட்டாய்” என்றான்.

அதைகேட்ட சலவைத் தொழிலாளி பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன் , மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்” என்றவாறே தனது கழுதையை அழைத்துக் கொண்டு நடக்கலானான்.

பின்குறிப்பு:  இது அரசியல் பதிவு அல்ல.  

8 comments:

  1. பின்குறிப்பில் “இது அரசியல் பதிவு அல்ல” என்று நீங்கள் குறிப்பிட்டாலும், கலைஞர் மு.கருணாநிதிக்கு அவருடைய பெற்றோர்கள் வைத்த பெயர் தட்சிணாமூர்த்தி (உங்கள் கதையிலும் இந்த பெயர் வருகிறது) என்பது எனது நினைவுக்கு வருகிறது.
    த.ம.2

    ReplyDelete
  2. அய்யா தி. தமிழ் இளங்கோ 'தட்சிணாமூர்த்தியை'ப் பற்றிச் சொல்லிவிட்டார். அதனால் 'கோமளவல்லி'யும் விளங்கி விட்டது ஆனால் இந்த வைரம், கழுதை மற்றும் சலவைத் தொழிலாளி...? கொஞ்சம் விளக்கியிருக்கலாமோ..?

    புதுமையாய் இருந்தது.

    God Bless You

    ReplyDelete
  3. புரிகிறது புரிகிறது..

    வைரம் வாக்கு, அழுக்கு மூட்டை சலவைத் தொழிலாளி வாக்காளரோ..? வைரத்தின் அருமை தெரியாத சலவைத்தொழிலாளியின் வாழ்க்கை மாறுவது கடினம்தான்

    தலைப்பு தெளிவாய் இருக்கிறது. நல்ல கதை.

    ReplyDelete
  4. நீங்களும் "கதை" சொல்ல ஆரம்பித்து விட்டீர்கள்... ரைட்டு...!

    ReplyDelete
  5. நேரடியா கேட்க மாட்டங்கன்னு தான், காதுல பூவை மைல் கணக்குல சுத்துதாவோ................

    ReplyDelete
  6. நல்லதொரு கருத்தை அரசியல் பிண்ணனியில் கொண்டு போனது அருமை நண்பரே... இன்னும் எத்தனை காலம்தான் வைரமாகவோ.. சலவைத் தொழிலாளியாகவோ இருப்பது..
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  7. கருத்திட்டு வாக்களித்த அன்புள்ளங்களுக்கு நன்றி!!

    தமிழ் இளங்கோ, வெட்டிப் பேச்சு இருவரும் கதையில் ஒழிந்திருந்த கருத்தை கண்டுபிடித்து விட்டீர்கள், மகிழ்ச்சி!!

    ReplyDelete
  8. அன்பு வலைப்பூ நண்பரே!
    நல்வணக்கம்!
    இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
    தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

    முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
    அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
    "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
    உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
    ஆம்!
    கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
    http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
    சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
    தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
    மற்றும்!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    TM5

    ReplyDelete