ஹெல்மெட் பிசினஸ் டல்லடிக்குது, விற்பனை அவ்வளவா இல்லை. என்ன செய்யலாம்னு
ஹெல்மெட் கம்பனிக்காரன் யோசிக்கிறான். அவனுக்கு ஒரு ஐடியா வருது. நேரா
போய் கவனிக்க வேண்டியவங்களை கவனிக்கிறான், ஹெல்மெட் சேல்ஸ் ஆவதற்கு கொஞ்சம்
உதவும் படி கேட்டுக் கொள்கிறான்.
கள்ளச்
சாராயம் குடிச்சா செத்துப் போறாங்களே, அதனால சாகா வரம் தரக்கூடிய டாஸ்மாக்
சாராயத்தை குடிக்க வச்ச மக்கள் நலனுக்காகவே செயல்படும் அரசு, வண்டி
ஒட்டிகிட்டு போய் சாவட்டும்னு விட்டுடுவாங்களா என்ன?
டூ வீலர் ஓட்டுறவனும், பின்னாடி உட்கார்ந்துகிட்டு போறவனும், பெண்களோ 7 கிளாஸ் மேல்
படிப்பவனாகவோ இருந்தாலும் ஆளுக்கொரு ஹெல்மெட் போடணும்னு சட்டம் போடுது.
சென்னையில
30 லட்சம் ரெண்டு சக்கர வாகனம் ஓடுதாம். [சத்தியமா சைக்கிளைஎல்லாம்
சேர்க்கலீங்க!!]. 60 லட்சம் ஹெல்மெட் வித்து தீர்க்கும். 500 ரூபாய்
வித்த ஹெல்மெட் 1500 ரூபாய் ஆக்கினாலும், நைட்டு பன்னிரண்டு மணி வரைக்கும்
ஹெல்மெட் கடையில கூட்டம் அலை மோதுது, கடைக்காரன் பணத்தை அள்ளுறான். ஏன்னா போடாட்டி அடுத்த நாள் பைக் வண்டியில ஆபீஸ் கூட போக முடியாதே!!
இப்போதைக்கு
அஞ்சு லட்சம் ஹெல்மெட் வித்திருக்காம், இன்னும் இருக்கிற பயலுக எப்ப
வாங்குவானுங்களோ தெரியல. இப்போதைக்கு போடாதவங்களை முட்டு சந்துக்கு முட்டு சந்து நின்னுகிட்டு விரட்டி விரட்டி பிடிப்பாங்க. ஒருவழியா இன்னும் ரெண்டு மாசத்துல எல்லா
பயலுங்களும் ஒன்னுக்கு ரெண்டா ஹெல்மெட் வாங்கிருவானுங்க. அப்புறம் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆனா கணக்கா கதை ஆகும், கேள்வி கேட்க நாதியிருக்காது.
ஹெல்மெட்
கம்பனிக்காரன், கடைக்காரன் ஓரளவுக்கு பணத்தை தேத்தியிருப்பான். சரி
போதும்னு சிக்னல் குடுப்பான். சனங்க ஹெல்மெட்டால ரொம்ப சிரமப்
படுறாங்கன்னு மக்கள் நலனுக்கே போராடும் அரசாங்கத்துக்கு திரும்பவும் தோணும். சரி, சரி,
இனிமே போடத் தெவையில்லைம்பாங்க.
அப்போ ஒன்னுக்கு ரெண்டா வாங்கின ஹெல்மெட்டு? அதை வீட்டுக்கு வெளியே கட்டி தொங்க விடுங்க, காக்க முட்டை போடும்!!
அப்படியே மழையில நனைஞ்சு, வெயிலில காய்ஞ்சு அது மக்கி துருப்பிடிச்சு
ஒன்னுத்துக்கும் லாயக்கில்லாம போகும். அப்படியே ரெண்டு வருஷம் போனதுக்கு
பின்னாடி................
ஹெல்மெட் சேல்ஸ் படுத்திருக்கும், ஹெல்மெட் கம்பனி காரன் கவனிக்க வேண்டியவங்களை கவனிப்பான்............. அப்புறம் .............?? அப்படியே பதிவோட முதல் வரிக்கு போங்க...........!!
இந்த நாடகம்தானே அடிக்கடி நடந்துகிட்டு இருக்கு :)
ReplyDeleteஎங்க ரொம்ப நாளா காணோம்?
ReplyDeleteசென்னையை மட்டும் கணக்கில எடுத்தா எப்படி? மத்த ஊரையெல்லாம் சேர்த்தா எத்தனை ஹெல்மட் வித்திருக்கும்?
எங்க ஊர்ல டிராபிக் ஜாமே ஆயிப்போச்சு.
நகைச்சுவையாகவே சொன்னாலும் நயம்படவே சொன்னீர்கள். சரியாக பள்ளி, கல்லூரி தொடங்கும் சமயம் பார்த்துதான் இந்த ஹெல்மெட் டெக்னிக்கை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். ஊரே அல்லாடும் இந்த நேரத்தில் தட்சிணாமூர்த்தியும், கோமளவல்லியும் இதுபற்றி வாயே திறக்கவில்லை.
ReplyDeleteத.ம.3
ம்... இந்த முறை எத்தனை மாதங்கள் என்று பார்ப்போம்...
ReplyDeleteகலக்கல். எதார்த்தமும் இதுவே.
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் . கணக்கு போட்டு பாத்தா தலைய சுத்துது.
ReplyDeleteஇந்த முறை இது கோர்ட் உத்தரவால்தானே அமுல்படுத்த பட்டிருக்கு? அதுனால முன்பு மாதிரி அவ்வளவு சுலபமா மாத்திட முடியாது. திரும்ப கோர்ட் தலையிட்டாதான் உண்டு.
ReplyDeleteஉண்மையை சொல்லும் பதிவு!
ReplyDeleteஆமாம் பாஸ் ...
ReplyDelete