இந்த 2015 பிப்ரவரியில் 4 ஞாயிறு 4 திங்கள் 4 செவ்வாய் 4புதன் 4 வியாழன் 4 வெள்ளி 4 சனிக் கிழமைகள் வருதாம்.! இது 823 வருடங்களுக்கு ஒரு முறை தான் வருதாம்.! இதை சீனாவில் பணப்பை வருடம் என்பார்களாம்..
இந்த செய்தியை 5 க்ரூப்புகளில் 11 நிமிடங்களுக்குள் நாம் பங்கிட்டு கொண்டால் 4 நாட்களுக்குள் நமக்கு பணம் கொட்டுமாம்.. இப்படி ஒரு அபத்தமான செய்தி வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது..
நம்ம ஆட்களும் அதை வைரல் ஃபீவராக பரப்பிக் கொண்டு வருகிறார்கள்.! அட அப்பாவிகளா.! இந்த பிப்ரவரி 1ம் தேதி ஞாயிறு, 28ம் தேதி சனிக் கிழமை.. இது மாதிரி வர எதுக்குப்பா 823 வருஷம் காத்திருக்கணும்..! வெறும் 6 வருடம் போதுமே.!
2009 & 2003 ஆம் ஆண்டு காலண்டரை பார்க்கவும்..! முகனூல் காலத்திலும்
மூட நம்பிக்கைகளை வலைத்தளங்களில் இது போல பரப்புவது நாம் தான்.. இனியாவது
இது போல ஆதாரமில்லாத செய்திகளைப் பரப்ப வேண்டாமே.
#கோடி_பெரியார்_வேணும்_போல
#கோடி_பெரியார்_வேணும்_போல
நம்ம நண்பரிடம் சொல்ல வேண்டும்... http://killergee.blogspot.com/2015/02/weds.html
ReplyDeleteநண்பரே மேற்கண்ட தகவல்கள் தங்களது பதிவில்தான் கண்டேன் எனக்கு இந்த மா3 நம்பிக்கைகள் சுத்தமாக கிடையாது மேலும் புதுமையான தகவல்களாக இருக்கிறதே என்பதால் ஒரு கொசுறு செய்தியாக பதிவோடு புகைப்படத்தையும் போட்டேன்.
Deleteமற்றபடி மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவன் நான்
நானே வளர்ப்பதற்க்கு தண்ணீர் ஊற்ற மாட்டேன் வேண்டுமானால் வெண்ணீர் ஊற்றுவேன்.
இந்த தகவல் எனக்கு முதலிலேயே தெரிந்திருந்தால் நலமாயிருந்திருக்கும்.
நன்றி.
தமிழ் மணம் 3
லீப் வருடங்கள் தவிர எல்லா வருடங்களிலும் பிப்ரவரியில் 28 நாட்கள் தானே. வாரத்திற்கு ஏழு நாட்கள் என்ற கணக்கில் லீப் வருடம் இல்லாத எல்லா வருடங்களிலுமே பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு கிழமையும் 4 தானே?
ReplyDelete@ bandhu
Deleteஅதானே!! தலைவலிக்கு மருந்து சாப்பிட்டா 3 நாளில் சரியாயிடும், சாப்பிடாட்டி 72 மணி நேரத்துக்கு மேலதான் சரியாகும்னு சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்வது போல நானும் ஏமாந்துட்டேன் போலிருக்கே!!
அட, ஆமாங்க.
Deleteமூடத்தனத்திற்கு ஓர் எல்லையே இல்லாமல் போய்விட்டது!
ReplyDeleteநாள் கணக்கு, வருடக்கணக்கெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொண்டால் எதற்காகப் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம்? சம்பந்தப்பட்ட அறிவாளிகளிடம் அதைக் கொஞ்சம் கேட்டுச் சொல்லக்கூடாதா?
ReplyDelete