Sunday, January 25, 2015

தயாநிதி சாப்பிட்ட ஒரே ஒரு பழம்

ஒரு ஊரில் தயாநிதி என்று ஒரு புத்தி கூர்மையுள்ள ஆள் இருந்தான்.  அவன் உண்மையைத்தான் எப்போதும் பேசுவான், ஆனால் அதற்குள் இருக்கும் சூட்சுமம் வெளியில் தெரியவே தெரியாது!!  அப்பேற்பட்ட சாமர்த்தியசாலி.

அவன் ஒரு  நாள் தன் நண்பர்களிடமிருந்து எப்படியாவது பணம் வசூல் செய்து விட வேண்டும் என்று முடிவு செய்தான்.  பணம் சும்மா கொடுப்பார்களா, காரணம் வேண்டுமே.  அதற்காக ஒரு பிட்டை போட்டான். 

"என்னிடம் சாப்பிடக் கூட பணமே இல்லை.  அதனால் இன்றைக்கு நான் ஒரே ஒரு பழம் தான் சாப்பிட்டேன்.  எனக்கு இன்றைக்கு வயிறு சரியில்லை, டாக்டரிடம் போக வேண்டும்.  பணம் கொடுத்து உதவி செய்யுங்கள்" என்றான்.

அவனுடைய நண்பர்கள் ஏமாளிகள்.  ஏதேதோ பண்ணி 440 ரூபாய் தேத்தி கொடுத்து போய் உடனடியாக மருத்துவரிடம் செல்லச் சொன்னார்கள்.

அவன் சென்ற பின்னர் அவனுடைய பக்கத்து வீட்டுக் காரர் அங்கே வந்தார்.  அவரிடம் நண்பர்கள் நடந்த விஷயத்தை சொல்ல அவர் ஷாக்காகி போனார்.

"அவன் உங்களையெல்லாம் முட்டாளாக்கிட்டான்பா......"  என்றார்.

"என்ன சொல்றீங்க, அவன் இன்றைக்கு சாப்பிடக்கூட பணம் இல்லையாமே, ஒரே ஒரு பழம் தான் சாப்பிட்டானாமே?" என்று நண்பர்கள் வினவினார்கள்.

ஆமாப்பா, ஆமாம்.  அவன் ஒரே ஒரு பழம் தான் சாப்பிட்டான்.  ஆனா, அது வாழைப் பழமோ மாம்பழமோ அல்ல, பலா பழம்.  முழு  பழம்.  மொத்த பழத்தையும் வெட்டி அவனே சாப்பிட்டான்.  டேய்........டேய்.......  எனக்கு ஒன்னாச்சும் குடுடான்னு கேட்டேன், முடியாதுன்னு எல்லாத்தையும் அவனே சாப்பிட்டுட்டு கடைசியா மொத்தம் 343 சுளைகள் அதில் இருந்துச்சுன்னு எண்ணி கணக்கு மட்டும் சொல்லிட்டு கெக்கே...........பிக்கேன்னு சிரிச்சி கிட்டே ஓடிட்டான்.இப்போ இங்கே வந்து உங்ககிட்ட 440 ரூபாய் ஆட்டயப் போட்டிருக்கான்.   அவன் விட்ட பீலாவை உண்மைன்னு நம்பி ஏமாந்துட்டீங்களேப்பா...................??!!

16 comments :

 1. ஒரே பலாப் பழத்தில் 323 சுளைகள் மாதிரி கதையா? என்னவோ பொ மாதவா! நேக்கு ஒன்னும் புரியலை!

  ReplyDelete
  Replies
  1. @நம்பள்கி

   என்ன நம்பள்கி, இந்தியாவிலிருந்து வெளியாகும் எல்லா தமிழ், ஆங்கில செய்தித் தாள்களும் இணையத்தில் கிடைக்குது, பார்க்கிறதில்லையா? இன்டர்நெட்டை திறந்து வச்சிக்கிட்டு இராத்திரி பகல்லா வெறும் கில்மா படத்தையே பாத்துகிட்டு இருந்தா வேற எதுவும் புரியாது. அப்பப்போ நாட்டு நடப்பைஅப்டேட் பண்ணிக்குங்க!!

   Delete
  2. மாமூ!
   நான் கில்மா படம் எல்லாம் பார்ப்பது இல்லை! பார்க்கவும் மாட்டேன்; நானே ஒரு கர்த்தா; அப்புறம் நான் எதுக்கு அதைப்போய்!

   நான் கல்லலூரியில் படிக்கும் போதே எனக்கு கில்மா படம் எடுக்கும் அறிவு மற்றும் நுணுக்கம் இருந்தது!

   இந்த விஷயத்தில்...நான்..
   நிறை குடம் தளும்பலில்!

   Delete
 2. முழு பழத்தையும் சாப்பிட்டதால் தண்ணீ காட்டிய நேரம் போய், ,இப்போ தண்ணீர் குடிக்க வேண்டிய நேரம் வந்திருச்சு போலிருக்கே !
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. @Bagawanjee KA

   வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி பகவான்ஜி!!

   Delete
 3. நீங்க முகநூலில் போட்ட ஒரு சிறிய பகுதியை வைத்து அப்படியே பதிவாக மாற்றி விட்டீங்க. சபாஷ்

  ReplyDelete
  Replies
  1. தொழில் ரகசியத்தை இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே!! 440 ரூபாய் குறித்து நான் அங்கே எழுதவில்லையே, கவனித்தீர்களா?

   Delete
 4. ஸூப்பர் நையாண்டி நண்பரே மிகவும் ரசித்தேன் வாழ்த்துகள்
  தமிழ் மணம் 6

  ReplyDelete
 5. Replies
  1. @துளசி கோபால்

   தங்களை நம்ம கடைப் பக்கம் பார்த்தே வெகு நாட்களாயிற்றே, தொடர்ந்து வாருங்கள் மேடம்!!

   Delete
 6. நல்ல உருவகக் கதை. இம்மாதிரி 'அந்தப் பக்கத்திலும்' நிறைய வினோதமான சம்பவங்கள் நடைபெறுகின்றன. தடிமாடு மாதிரி வளர்ந்துகிடக்கும் ஒரு முப்பத்திரண்டு வயது இளைஞர்(?) திடீரென்று ஒரு மாநில முதல்வரால் வளர்ப்பு மகனாக சுவீகரிக்கப்படுகிறார். அந்த வளர்ப்பு மகனுக்கு தமிழகத்தின் மிக செல்வாக்கான குடும்பத்திலிருந்து பெண் எடுக்கப்படுகிறது. அந்தத் திருமணத்துக்கு முதல்நாள் மைசூர் தசரா பாணியில் ஊர்வலம் நடைபெறுகிறது. அந்த ஊர்வலத்தில் மாநில முதல்வரரே நடந்துபோகிறார். அதற்குப் பின் இருபத்தொன்பதொ முப்பதோ அனாமதேயக் கம்பெனிகள் ஆரம்பிக்கப்படுகின்றன. அந்தக் கம்பெனிகள் பலவற்றுக்கு இந்த வாலிபரே இயக்குநராக அல்லது பார்ட்னராக நியமிக்கப்படுகிறார்.
  அதன்பிறகு வழக்கு.
  அதில் யாரும் எதிர்பார்க்காத தீர்ப்பு.
  அந்தத் தீர்ப்பிலிருந்து உடல்நலக் காரணம் காட்டி முதல்வர் ஜாமீன் கேட்கிறார். அந்த முதல்வரை மட்டுமல்லாமல் குண்டுக்கட்டாக இருக்கும் எல்லாரையும் விடுவிக்கிறது உ. நீ.மன்றம்.
  இம்மாதிரி நம்மைச் சுற்றிலும் நிறைய கதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஒவ்வொரு உருவகக் கதை போடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. @Amudhavan

   ஐயையோ, நான் ஏதோ எங்க பாட்டி சொன்ன கதையை இங்கே தமாஷா போட்டேன். நீங்க சொல்லும் அரசியல், வெட்டு குத்து, கேசு எதுவும் எனக்குத் தெரியாது சார்.

   Delete
 7. இப்ப எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், அவர் சாப்பிட்டது ஒரு பழந்தானே! உள்ள இருக்கிற சுளையெல்லாம் கணக்குல வராது. திராவிடத்தை அழிக்கிற தீய சக்திகள் பொய் சொல்லுது.

  ReplyDelete
 8. முழுப் பலாப் பழம் சாப்பிட்டா என்ன ஆகும்? வயித்து வலை வந்துடுச்சி . ஏன்னா கொஞ்சம் லேட் .நாலு பேருக்கு குடுத்து சாப்பிட்டிருந்தா இன்னைக்கு வயித்து வலி வந்திருக்குமா? பாட்டி நல்லாத்தான் கதை சொல்லி இருக்காங்க

  ReplyDelete